Saturday, October 01, 2005

நியூஸி மாநாடு.

மக்களே,

நேற்றைய வலைஞர்களின் மாநாடு மிகவும் சிறப்பா நடந்துச்சு.மாநாட்டுக்கு வந்த மகாஜனங்கள் எல்லாம் ஊரைச் சுத்திப்பாக்கறேன்னு போய், இந்த ஊரோட அழகுலே மயங்கி ரொம்பநேரம் மெய்மறந்து நின்னு/பார்த்து மாநாட்டுக்கு தாமதமாவந்து சேர்ந்தாங்க.

எப்படிப் பார்த்தாலும் நம்முடைய தேசியகுணமான 'காலம் தவறுதலைக் கடைப்பிடிச்சு நாமெல்லாம்அசல் இந்தியர்கள்னு நிரூபிக்க வேணுமா இல்லையா?:-))))))

அவுங்களையும் சொல்லி என்னங்க பண்ணறது. ரெண்டே நாளுலே இங்கே இருக்கற அழகையெல்லாம் அள்ளிப் பருக முடியுமோ?


வலைப்பதிவாளர்களும், வாசகர்களும்னு கூட்டம் களைக்கட்டியே இருந்துச்சு. மனிதர்கள் மட்டுமில்லாமமிருகங்களும் கலந்துக்கிட்ட முதல் வலை மாநாடு இதுவாத்தான் இருக்கணும்.


'எல்லாத்தைப் பத்தியும் பேசுனோம்' இப்படி சொன்னா நல்லாவா இருக்கு?
'சூரியனின் கீழே இருக்கும் எல்லாவிதமான விஷயங்களைப் பற்றியும் விவாதித்தோம்'இது எப்படி இருக்கு?


இங்கே பதிவுகளிலே குஷ்பு விஷயம் நார்நாராக் கிழிஞ்சிக்கிட்டு இருக்கறப்ப, மாநாட்டுலேபங்குபெற்ற ச்சின்னஞ்சிறுவன் (வயசு வெறும் ஒம்போதரைதான்!) அப்படியே எளிதா இது சம்பந்தமாஒண்ணு சொன்னார்.
ரெண்டு பூனைங்களை 'மேட்' செய்யவச்சுட்டா, குட்டி போடும்னு சொல்லி எங்க வாயை ஒரேடியாபிளக்கவச்சுட்டார். இப்பெல்லாம் வயசுவித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் எல்லாமும் தெரியுது.மாநாட்டுலே மிருகங்கள் சார்பா கலந்துக்கிட்ட ஒருத்தரைவச்சுத்தான் இந்தப் பேச்சே வந்துச்சு.அவர் சொன்னதுமுற்றிலும் சரின்னு அந்த பார்வையாளர் ச்சும்மாத் தலையை மட்டும் ஆட்டிஅவர்கருத்தை ஒத்துக்கிட்டார்.


செவிக்குமட்டுமில்லாம கொஞ்சம் வயித்துக்கும் உணவு கிடைச்சது. எல்லாத்தையும் விவரமாச் சொல்லிதாணுவோட வயித்தெரிச்சலைக் கிளப்பணுமான்னு யோசனையா இருக்கு:-)


விருந்துலே கடைசி ஐட்டமா வந்த 'ஐஸ்க்ரீமை மட்டும்' மிருகங்களின் பிரதிநிதி எடுத்துக்கிட்டார்.வெற்றிகரமாக நடந்த இந்த மாநாடு, இரவு 11.30க்கு முடிவடைந்தது.


பெண்களுக்கு 33 சதமானம் னு சொல்ற கணக்குலே இல்லாம மாநாட்டுலே பெண்களின் பங்கு சரியா50% இருந்தது குறிப்பிடத்தக்கது.இவர்களிலே ஒருவர், பின்னூட்டம் கொடுக்க முடியலை, ப்ளொக்கர் கணக்கு இல்லைன்னு சொல்லி வருத்தப்பட்டார்.அப்ப நீங்கதான் அந்த 'அன்னானி'யான்னு கேட்டு வச்சேன். பாவம் பதறிட்டார். பின்னூட்டத்துக்காகமட்டும்கூடநீங்க ஒரு ப்ளொக்கர் கணக்குத் துவங்கலாம். 'நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்புல்லே'ன்ற பொன்மொழியைச்சொல்லி அவுங்களை ஊக்குவிச்சு என் கடமையைச் செவ்வனே செஞ்சு முடிச்சேன்:-)


இளைய பார்வையாளருக்கு எங்கள் 'வாக்குவாதங்கள்'எல்லாம் ஒரு தாலாட்டுப்போலப் பரம சுகமா இருந்ததுன்னுபடத்தைப் பார்த்தாவே புரிஞ்சிடும்.


மாநாட்டை நல்லபடியாக நடத்திக் கொடுத்த அனைவருக்கும், வராமலிருந்து( நல்லவேளை) வாழ்த்தியவர்களுக்கும்நன்றி கூறிக்கொண்டு என் சிற்றுரையை முடிக்கின்றேன்.







நன்றி வணக்கம்.

கிறைஸ்ட்சர்ச், நியூஸிலாந்து.
1/10/2005

13 comments:

said...

யார் யார் கலந்துண்டீங்க... சுரேஷும் நீங்களுமா (50-50)!? சாப்பாடு மேட்டர் விரிவா சொல்லாம என்ன மாநாடு கவரேஜ் பண்ணறீங்க...

எந்த படத்தைப் பார்க்க சொல்றீங்க... ஒண்ணும் காணோம்.

எப்படியோ கூடிப்பேசி சந்தோஷமா இருந்தா சரி.

said...

அன்பு,

நானும் சுரேஷும் நாலுநாலுபேராத் தெரியறோமா?:-))

மொத்தம் 11 பேர் வந்தாங்க. அதுலே 3 பேர் ஊரையெல்லாம் சுத்துனதுலே களைச்சுப் போய்ட்டாங்க.
அதனலே மாநாட்டுலே கலந்துக்கலை(-:

படம் மொதல்லே வரலை. அதுக்குன்னு ஒரு பதிவு தனியாப் போட்டேன்.
இப்ப எல்லாம் இதுலேயே வருதே பார்க்கலையா?

said...

இன்றைய தினமலரில் (01.10.05) வலைப்பதிவுகள் பகுதியில் உங்கள் தளத்தைப் பற்றியும் ஒரு வருடம் நிறைவடைந்ததைப் பற்றியும் செய்தி வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

said...

நன்றிசுரேஷ் கண்ணன்.

நம்ம குழலி சொன்னபிறகுதான் எனக்கு விவரம் தெரிய வந்தது.

அப்புறம் நானும் போய்ப் பார்த்தேன்.

said...

"படம் எல்லாம் இதுலேயே வருதே பார்க்கலையா?"-- படமா, சும்மா கதை விடாதீங்க. பூனக்குட்டிக்கு கூட கண்ணு மட்ட்ம்தான் தெரியுது. திருப்பதியார் படம் மட்டும் தெளிவா இருக்கு.

கவரேஜ் பத்தாது. இன்னும் வேணும்...

said...

துளசிக்கு சாப்பிடும்போதுகூட என்னை நெனைச்சே புரையேறியிருக்கும் போல! அந்த நால்வர் அணியில் துளசி யாராயிருக்கும்னு ஒரு முடிவு பண்ணியிருக்கேன். தயவுசெய்து படம் போட்டதுடன் நின்றுவிடாமல் பாகங்களை, sorry , பெயர்களைக் குறிக்கவும்.
இன்று பக்கத்திலிருக்கும் கோவையில் வ.ப. கூட்டம் நடக்கிறது. போகமுடியலையேன்னு சோகத்திலே இருக்கிறேன். அதையும் நாளை பதிவில் தான் பார்த்துக்கணும்.

said...

I agree with Jayshree. I can only identify the cat.

said...

துளசியக் காணலை. சரி, துளசி யாருன்னு சொல்லிட்டுப்போறேன்.

முதல் படத்தில கறுப்பு ஸ்வெட்டரோட நிக்கிறதுதான் துளசி. கடைசிப்படத்தில பரிமாறுறாங்களே!

கடைசிப்படத்தில, அவங்களைப்பரிதாபமாப்பார்க்கிறது 'பெனாத்தல் சுரேஷ்'னு அனுமானிக்கிறேன்.

-மதி

said...

ஜெயஸ்ரீ, தருமி, தாணு, தேன் துளி

மாநாட்டுக்கு வந்திருந்த மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவர்கள் பெயர் மற்றும் விவரங்களைத் தரவில்லைன்னு
சொன்னாக் கொஞ்சம் 'கெத்தா' இருக்காது?

அந்தப் பதினாறு அடியின் எட்டடித்தாய் மகளிர் அணியிலே 'ப்ளூ ஸ்வெட்ஷர்ட்' போட்டிருக்கறவங்க.
மகனர் அணியிலே இடமிருந்து வலம் கோபால், சுரேஷ், அப்புறம் நிற்பவர் இந்த மாநாட்டுக்காகவே இந்தியா
விலிருந்து வந்திருக்கும்( ஒரு மாசத்துக்கு முன்னேயே வந்துட்டாரு) வாசகர்.

மதி,

அவர் பினாத்தல் இல்லே. 'மெளனம்' சுரேஷ். பதிவுக்கேத்தமாதிரி மெளனமாத்தான் இருந்தார்.( அவரை எங்கே
பேச விட்டோம்?:-))))

மக்களே கறுப்புப் பூனைதான் நம்ம 'கப்பு' அந்தக் கறுப்பு ஸ்வெட்டர் நாந்தான். நம்ம கேமெரா காலைவாரிடுச்சு.
( அடுத்த 'ட்ரிப்'க்கு கோபால் கிட்டே கேக்கவேண்டியது கிரீடம் இல்லே. கேமெரா. சரியா?)

தருமி,

ஜனங்களை இருட்டடிப்பு செஞ்சுட்டு 'சாமி' மட்டும் எப்படி வெளிச்சத்துலே ஜொலிக்கிறார் பார்த்தீங்களா?:-)

said...

கறுப்பு பூனை(கள்?) பாதுகாப்பில் மாநாடு இனிதே நடந்தேறியதுன்னு ஒரு டைட்டில் கொடுப்பீங்களா... கொபச வா இருந்துகிட்டு என்ன போங்க நீங்க...

said...

அட, ஆமாம் முகமூடி.

நான் கொபசெ ன்றவிஷயமே மறந்துபோச்சே(-:

ஆமா, நான் எந்தக் கட்சிக்கு கொபசெ?

said...

மாநாட்டுல கலந்துகிட்டு, வீடு வந்து சேர்ரதுக்குள்ள பதிவ போட்டு ஒரு கலக்கு கலக்கினதுக்கு ரொம்ப நன்றி துளசி.

said...

சுரேஷூ,

மாநாட்டுலே கலந்துக்கிட்டதுக்கு நன்றி. அப்புறம் கலந்துக்கிட்ட மற்றவர்களைப் பார்த்தால்(!) மிகவும் கேட்டதாகச் சொல்லுங்க.