Wednesday, October 19, 2005

நியூஸிலாந்து பகுதி 19

மவோரி கதைகள் # 4

கதைக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு மகிழ்ச்சியான விஷயம். ஊழல் குறைந்த நாடுகளோட லிஸ்ட்டுலே
நியூஸிக்கு ரெண்டாவது இடம் கிடைச்சிருக்காம். அட!

சரி. இனி கதை...


பெண்ணை உருவாக்கியது யார்?

ஒவ்வொரு மதமும் ஒண்ணொண்ணு சொல்லுதில்லே? இவுங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமா?
பெண்ணை உருவாக்குனது ஒரு கூட்டு முயற்சின்றாங்க. ஆங்..அது தெரியாதா? ஒரு ஆணும், ஒரு பொண்ணும்
தானே தயாரிப்பாளர்கள்?

'ஹினே ஆஹு ஓநீ' தான் முதல் பெண்.

காடுகளின் கடவுளான டனே, கொஞ்சம் களிமண்ணை எடுத்து பெண்ணொட உருவத்தைச் செஞ்சார். அவரோட அண்ணன்
தம்பிங்க, அக்காதங்கைங்க எல்லாம் தேவலோகத்துலே போய் நல்லாத் தேடிப்பார்த்து, மத்த அவயவங்களைக் கொண்டு
வந்தாங்க.

கண்ணுலே இருக்கற வெள்ளைப் பகுதிக்கு, அந்தப் பக்கம் மிதந்து போய்க்கிட்டு இருந்த மேகத்துலே கொஞ்சம் எடுத்துக்
கிட்டாங்க. காத்துக்குக் கடவுளான டஃபிரிமடேஆ, அந்த உருவத்தோட நுரையீரலுக்கு மூச்சுக்காத்தைக் கொடுத்தார்.
அப்புறம் இன்னொரு கடவுள், அங்கிருந்த பறவைகளோட சிறகைக் கொஞ்சம் பிய்ச்செடுத்து தலைமுடியை உண்டாக்கினார்.
சண்டைக்கான கடவுள் டுமடாவெங்கா உடம்புலே இருக்கற தசைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி எங்கெங்கே எதையெதை
வைக்கணுமோ அங்கங்கே அதையதை வச்சார்.

அமைதிக்கும் சமாதானத்துக்கும் உண்டான கடவுள் ரோங்கா, வயிற்று பாகத்தைக் கொடுத்தார். கடைசியிலே
எல்லாக் கடவுள்களுக்கும் மேலான சுப்ரீம் கடவுளான லொ ஆத்மா, இரத்தம் கொடுத்தார். இப்ப முழுப்
பெண்ணுருவமும் ரெடி.

கடைசியா டனே உயிரை அவளுடைய மூச்சுலே கலந்தார். அடுத்த நொடியிலே 'அச்சூ' ஹினே ஆஹு ஓநீ தும்முனா.
அதுதான் உயிர் வந்ததுக்கு மொதல் அடையாளம்.

இப்படித்தான் உலகின் முதல் பொண்ணு உருவாகியிருக்கா.

எப்படி சுப்ரீம் கடவுள் உட்பட எல்லாக்கடவுள்களும் சேர்ந்து நம்மை உண்டாக்கியிருக்காங்க பார்த்தீங்களா?
பெண்ணை 'சக்தி'ன்னு சொல்றோமே, அதுலே என்ன அதிசயம்?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

13 comments:

said...

test.

just oru payamthaan

said...

டி ராஜ்,

வேற ஒரு பதிவு இப்ப விறுவிறுப்பா இருக்கே. பார்க்கலையா?

பாண்டியன்,

மவோரிங்களுக்கு தும்மல் நல்ல சகுனம்:-)

said...

டி ராஜ்,

நம்ம 'காசி'யின் பதிவுதான்.

said...

//'ஹினே ஆஹு ஓநீ' தான் முதல் பெண்//

//..அவரோட அண்ணன்
தம்பிங்க, அக்காதங்கைங்க எல்லாம் தேவலோகத்துலே போய்...//

????? contradicting!!!

ennathaan veelai enRaalum thuLasithaLam izukkuthu! ;O)

said...

ஷ்ரேயா,
பிழை பிடிக்கறதே தொழிலா?:-)

அது கடவுள் டானேயுட அண்ணந்தங்கைங்க. இப்ப ஜஸ்ட் களிமண் உருவம்தான் செஞ்சுருக்கு. இனிமேத்தான் மற்ற பகுதிகள்,உயிர் எல்லாம் வரணும். சரியா?
கிளாஸ்லே கவனமே இல்லை. திஸ் இஸ் டூ பேட்.

said...

'ஹினே ஆஹு ஓநீ' தான் முதல் Humanபெண்.. ok teacher??? ;o)

see u later in the week!!

said...

// இப்ப ஜஸ்ட் களிமண் உருவம்தான் செஞ்சுருக்கு. இனிமேத்தான் மற்ற பகுதிகள்,உயிர் எல்லாம் வரணும். சரியா?
கிளாஸ்லே கவனமே இல்லை. திஸ் இஸ் டூ பேட். //

நானும் ஷ்ரேயா மாதிரிதான் நெனைச்சேன். அப்புறம் அவங்கள்லாம் கடவுளுன்னு சொல்லுவீங்கன்னு நெனைச்சேன். அதையே நீங்களும் சொல்லீட்டீங்க.

அது சரி? பெண்ணைச் செஞ்சிட்டு ஆணைச் செஞ்சாங்களா? இல்லை ஆணைச் செஞ்சிட்டு பெண்ணைச் செஞ்சாங்களா? (கேள்வியப் பாரு. பெரிய பாஞ்சாலின்னு நெனப்பு)

said...

கதைக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு மகிழ்ச்சியான விஷயம். ஊழல் குறைந்த நாடுகளோட லிஸ்ட்டுலேநியூஸிக்கு ரெண்டாவது இடம் கிடைச்சிருக்காம். அட!

கூடிய சீக்கிரம் நாங்களும் அந்த லிஸ்ட் ல முதல்ல வருவோம்ல.. :)

ஒரு கூட்டு முயற்சின்றாங்க.
இப்போ க்ளோனிங் அது இது னு என்னென்னமோ வந்தாச்சுங்க அக்கோவ்...

பெண்ணை உருவாக்கியது யார்.. சுவாரசியமான தகவல்... இவங்க சொல்றது நியுசி பெண்ணா ..இல்ல உலகத்துலயே முதல் பெண்ணா??
அப்போ ஏவாள் யாரு?
கொழப்புறாங்கப்பாஆஆஆ..

said...

ராகவன்,
இவுங்க கதைக் குறிப்புகளிலே ஆணைப் பத்தி நோ பேச் நோ மூச்.

said...

வீ ஏம்,

நியூஸின்னு அப்ப பேரு இல்லையே. அதோட ஒவ்வொரு மனுஷ இனமும் தாங்கள்தான் உலகத்துலே இருக்கற ஒரே மனிதர்னு நினைச்சுக்கிட்டு இருந்திருக்குமே!

அதனாலே அவுங்க இனத்திலே முதல் பெண் அப்படின்னு நினைக்கிறேன்.

அதுசரி. என்னுடைய ஐடி கொடுத்தேனே. ஏன் இன்னும் மெயில் போடலை?

said...

Will send soon !
BTW, new posting in aratai arangam.
http:\\arataiarangam.blogspot.com

said...

இவங்க கதையிலே ஆண் பத்தி நோ பேச்சு// சத்தம் போட்டு சொல்லாதீங்க, ஆணாதிக்க க்ரூப் பெட்டியைக் கட்டிட்டு அங்கே வந்திடப் போறாங்க!

said...

தாணு,
அந்த ஆணாதிக்கக்ரூப்பை சொத்துபத்து எல்லாத்தையும் வித்துட்டுக் காசை எடுத்துக்கிட்டு வரச் சொல்லுங்க. இப்பெல்லாம் முதல் ரெண்டு வருசத்துக்கு 'டோல்' கொடுக்கரதில்லை(-: