Sunday, November 06, 2005

விருச்சிகப் பிள்ளையார்.




















பிள்ளையார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்திருக்கார். அதுவும் சாதாரணப்பிள்ளையார் இல்லை. விருச்சிகப் பிள்ளையார். அதென்ன ஸ்பெஷல்? இருக்கு. சொல்றேன்.


ஒரு அஞ்சாறு மாசக் குழந்தை தரையிலே உக்கார்ந்திருக்கும்போது கவனிச்சிருக்கீங்களா? ரெண்டு பாதமும்ஒண்ணையொண்ணு தொடறமாதிரி எதிரும் புதிருமா இருக்கும். பெரியவங்களான பின்னே இப்படி உக்கார்றதுபயங்கரக் கஷ்டம். அதே வயசுக் குழந்தை சைஸுலேயும் போஸ்லேயும். இதுக்கு எதாவது பேர் இருக்கும் யோகாஸனத்துலே,இல்லே?.....???? ஆஸனம்.( ஐய்யோ, உக்கார்ந்து பார்த்தா தொடையெல்லாம் வலி(-: முழங்கால் முட்டிகூடத் தரையைத் தொடமாட்டேங்குதே)



கைகள் மட்டும் நாலு. சாமி இல்லையா? ரெண்டு கைகளிலும் மோதகம் போல ஒரு உருண்டை.மற்ற ரெண்டுகைகளிலே வழக்கம்போல சில பொருட்கள். கண்ணுங்க ரெண்டுன்னாலும் சாதாரணமா இல்லாம நெத்தியை நோக்கிப் போறமாதிரி வெர்ட்டிக்கலா இருக்கு! கொஞ்சம் மிரட்டற பார்வைதான்!


இப்பத் தும்பிக்கை. இதுவும் வலம்புரிதான். விசேஷமும் இதுலேதான் இருக்கு. அச்சு அசலா ஒரு தேள் வலப்பக்கம்வாலைச் சுருட்டிக்கிட்டு தும்பிக்கையா இருக்கு. அதோட கால்கை எல்லாம் அப்படியே முகத்திலே ரெண்டு கன்னத்துலேயும்படர்ந்திருக்கு.



பின்னெழிலும் ஜோர்தான். பஞ்சக்கச்சம் செருகியிருக்கரதும், பூணூல் தோள் வழியாச் சரிஞ்சு முதுகுலே படர்ந்துவர்றதும், கட்டியிருக்கும் வேஷ்டியின் டிஸைனும் கூட அட்டகாசம்.( ச்சீனாக்காரன் கில்லாடிப்பா!)



இங்கே ஒரு கடையில் கிடைச்சதுன்னு மகள் வாங்கிவந்தாள், எனக்குத் தீபாவளிப் பரிசாக. ச்சீனாக்காரகள் செஞ்சது.ஹேண்ட்மேட்னு எழுதியிருக்கு. பாக்கறதுக்குக்(!) கற்சிலை. ஆனா நல்ல டெர்ரக்கோட்டா நிறம் உள்புறத்துலே.
கொஞ்சம் வித்தியாசமான பிள்ளையார்தான். பேர் வச்சதுமட்டும்தான் நான். பேர் வைக்கறதுலே நான் பெரிய ஆள்னு கோபால்எப்பவும் சொல்வார். இல்லையா பின்னே?


இங்கே எங்க ஊர்லே கடற்கரையிலே நான் 'கண்டு பிடிச்ச' பிள்ளையாருக்கு பேர் என்ன தெரியுமா?


பேவாட்ச் (BAYWATCH)பிள்ளையார்.


ரெண்டுவாரமா தீபாவளி, ரமலான்னு பண்டிகைக் காலமாப் போயிருச்சு.
இப்பப் பாருங்க நம்ம சரித்திரவகுப்பு அப்படியே நிக்குதுல்லே?

விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு, நாளைமுதல் வகுப்புக்கு ஒழுங்கா வந்துசேருங்க எல்லாரும்.

26 comments:

said...

அழகா இருக்கார் பிள்ளையார்.

குழந்தைகள் உட்காரும் விதம் குறித்து நானும் பலமுறை வியந்தது உண்டு.. ஏறத்தாழ நான்கு வயதிற்குப் பிறகு தேவாங்கு (அதற்கு நான் வைத்த பெயர்) ஸ்டைலில் உட்கார்வது முடியாமல் போய் விடுகிறது:-(

என்னதான் சொல்லுங்க, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். நீங்க பிள்ளையாரைப்பத்தி சொன்னது அவனுக்கு எவ்வளவு பிடிச்சிப்போயி, Road Construction - Safety பத்தி உங்களுக்கும் சொல்லணும்னு ஆசைப்படறான் பாருங்க!

said...

அதானே?

சுரேஷ்,

அந்த வெள்ளைக்காரன் சொல்றதோட மட்டுமில்லாம இந்தியாவுக்கு இங்கேயிருந்து ரோடே போட்டுக் குடுத்தரக்கூடாதா?

கிளம்பி பொடிநடையாவந்து சேர்ந்துரலாம்லெ:-)))))

said...

டீச்சர்,
" நாளைமுதல் வகுப்புக்கு ஒழுங்கா வந்துசேருங்க எல்லாரும்."
- நான் ரெட்ட ரெடி; இந்த ராமநாதர்தான் கூப்பிட்டாக் கூட வரமாட்டேங்கிறா(ன்)ர்.

said...

சபாஷ் தருமி. சதம் போட்டாலும் இப்படித்தான் தவறாம வகுப்புக்கு வரணுமுன்னு ராமநாத(ர்)ன்கிட்டே இன்னும் சொல்லலியா?

said...

துளசி: இப்படி உட்கார சொல்வது கராத்தேயில் முதல் பாடம். அதேபோல உடற்பயிற்சி வகுப்பிலும். அப்படியே பாதங்களை சற்றே தூக்கி 5 நிமிடம் அமர்ந்தால், அது soleus போன்ற தசைகளுக்கும், Hamstring தசைகளுகும் நல்ல பயிற்சி. இதுக்குத்தான் நியுஜெர்சிக்கு வாங்கன்னு சொல்றது. தயார் பண்ணிடுவேன்ல. பிள்ளையார் ரொம்ப அழகு.

said...

உள்ளேன் ஐயி... சே, சரியா வரலியே..

ப்ரெஸண்ட் மிஸ்.. ஒகே??

said...

நானும் ஊர் சுத்தற வேலையெல்லாம் முடிச்சுட்டு க்ளாஸூக்கு ரெடி டீச்சர்.

said...

பத்மா,

பொழுதன்னிக்கும் கைகால்லே 'க்ராம்ப்' புடிச்சுக்கிட்டுக் கிடக்கறப்ப எப்படி நியூஜெர்ஸிக்கு
வர்றது?

குத்துக்கால் போட்டுக்கூட உக்கார முடியறதுல்லே(-:

said...

ராமநாதன், தாணு

வந்துட்டீங்களா? இப்படி நடுவிலே வந்து உக்காருங்க. இப்படி இவ்வளோ பெரிய வகுப்பறையிலே ஒரு
நாலஞ்சுபேருக்குத்தான் க்ளாஸ் எடுக்கணுமுன்னா டீச்சருக்குப் பயமா இருக்காதா?

தாணு,

டானியலோட பியானோ எக்ஸாம் நல்லாப் போனதா?

said...

டீச்சர் டீச்சர் ஒரு புது அட்மிஷன்!
பீஸ் மட்டுந்தான!டொனேஷன் ஏதாச்சும் உண்டா?

said...

வாங்க சித்த(ர்)ன்.

இலவச வகுப்புதான். டொனேஷன் எல்லாம் வேணாம்.ஆனா ரெகுலர் அட்டெண்டன்ஸ் கொடுத்துரணும். ப்ராக்ஸி கிடையாது.( அஞ்சாறு ஆளுகள்லே கண்டுபிடிச்சுற மாட்டேனா?)

said...

நான் ரிப்பீட் கேஸ்!

உள்ளேன்ன்ன்ன் அம்மாஆஆ!

ஷ்ரேயாவைக்காணல மிஸ்.

-மதி

said...

வாங்க மதி.

ஷ்ரேயா ரெண்டு கிழமை லீவு வேணுமுன்னு கேட்டுக்கிட்டு இப்ப ரெண்டு மாசமாச்சு(-:

ஆப்செண்ட்?

said...

துளசி,
மாவோரி வணக்கத்துக்கு பின்னூட்டம் கொடுக்க முடியலையே ஏன்? சித்தன் மாதிரி தீவிரவாதிகள் உங்க வகுப்புக்கு வந்திட்டதாலே ஏதோ தில்லுமுல்லு ஆகியிருக்கு! கொஞ்சம் கவனிங்க

said...

நானும் உள்ளேன். எனக்கும் பிரசண்ட்டு போடனும்.

நல்ல அழகான சிற்பம். இதெல்லாம் இங்க கிடைக்கலை. எனக்கு ஒரு ஆசை. பெருசா ரெண்டு மூனு அடியில ஒரு சிற்பம் வாங்கி வீட்டு ஹால்ல வைக்கனுமுன்னு. முருகன் சிலையாவோ அம்மன் சிலையாவோ இருந்தா ரொம்ப சந்தோசம். ஒரு நண்பர் வெல்லூரில இருந்து ஏற்பாடு செஞ்சி நல்ல முருகன் சிலையை வாங்கித் தர்ரேன்னு சொல்லீருக்காரு. பார்க்கலாம் எப்பக் கிடைக்குதுன்னு.

மைசூருல தட்டுறாங்க. ஆனால் எல்லாம் புள்ளையாரும் சாமுண்டியுமா! பதினாறு கையோட மூனு அடிச் சாமுண்டி ஏழாயிரத்துச் சொச்சம். என்கிட்ட ஏற்கனவே ஒரு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கருமாரியம்மனும் வெங்கலத்துல செஞ்ச மீனாட்சி அம்மனும் (சின்ன சைஸ்) இருக்குறதால முருகன் சிலைதான் வேணும். சிவலிங்கம் நந்தியோட மாக்கல்லில் இருக்கு.

said...

என்னையும் உங்க வகுப்புல சேத்துக்கோங்க...எனக்கும் சரித்திரம்னா ரொம்பப் பிடிக்கும்....Please...Please...Please

said...

சரித்திரத்துக்கு இவ்வளவு 'மவுஸ்' இருக்குன்னு இப்பத்தான் புரியுது. நான் படிச்ச(!) காலத்துலே சரித்திரப்பாடம்தான் பிடிக்காம இருந்துச்சு.

எல்லாப் பொற்காலத்துக்கும் ஒரே பதில்தான்,கோபுரம் 'வெட்டினார்' குளங்கள் 'கட்டினார்':-))))

சாலையில் மரங்கள் நட்டார்....

குமரன் வாங்க. வந்து உக்காருங்க, அதே பிள்ளையார் மாதிரி:-)

said...

தாணு,

'அங்கே' பின்னூட்டப்பெட்டி வேலை செய்யுது. டெஸ்ட் போட்டாச்சு.

said...

ராகவன்,

சென்னையிலே பேப்பர்மாஷியிலே ரொம்ப அழகான சிற்பங்கள் எல்லாம் வருதே. பார்க்க அச்சு அசல் கற்சிலைதான். நானும் ஒரு புள்ளையார் இப்படி வாங்கிவந்தேன்.

கனமும் இருக்காது. வரவேற்பு அறையில் வைக்கலாம்.

நான் நம்ம ஃபோயர்க்கு ரெண்டுபக்கமும் மாடம் வச்சு அதுலே ரெண்டு புள்ளையார் வச்சிருக்கேன்.

உங்க மெயில் ஐடி அனுப்புங்க. படம் வரும்!

said...

துளசி
இது நல்ல திட்டமா இருக்கே. மெயில் ஐடி தந்தா படமா? பணம் தந்தாவேனா யோசிக்கலாம்:) எங்க பாயரில இரண்டு பெரிய யானை. இப்போ யோசிச்சா ஏன் வாங்கினோம்னு இருக்கு. வேற வீட்டுக்கு போனா என்ன செய்யறது?
இது என்ன கிளாஸ்? நானும் பிரசண்ட்(past இல்ல)

said...

பத்மா,

ரெண்டு பெரிய யானையா? படம் போடுங்க ப்ளீஸ்.

வேற வீட்டுக்குப் போனா யானையைக் கூட்டிக்கிட்டு போகமுடியாதா என்ன?

இந்தக் கிளாஸ் நியூஸி ஹிஸ்டரி க்ளாஸ்தான். உங்களுக்கும் பிரசெண்ட் போட்டாச்சு:-)

said...

// உங்க மெயில் ஐடி அனுப்புங்க. படம் வரும்! //

ஆகா இதோ இதோ rgopalsamy at yahoo dot com

சரி. அந்த பேப்பர் சிலைங்க எங்க வாங்குனீங்க?

said...

சூப்பர் பேருவச்சீங்கஅழகா இருக்கார்.

said...

பிள்ளையார் வித்தியாசமாக இருக்கிறார். - அழகு - முன்னழகை விட பின்னழகு நன்றாக இருக்கிறது. பஞ்ச கச்சம் - முப்புரி நூல் - உட்கார்ந்த்திருக்கும் அழகு. அருமை அருமை - செய்தது சீனாக்காரன் என்றால் நம்ப முடிய வில்லை. மாக்கல் போஅல் இருக்கிறது. முன்னழகு - தேளினால் தும்பிக்கை - ம்ம்ம்ம் - வணங்குகிறேன் பிள்ளையாரை

said...

டான்ஸ் ஆடுற யானை - மேல இருக்கற 5 மர யானை - இதெல்லாம் 400 லே சேந்ததா - இல்ல தனிக்கணக்கா

said...

வாங்க சீனா.

சீனாக்காரன் செஞ்சான்னு நம்ப முடியலையா? :-)))))

புள்ளையாரே ஒரு அழகுதான்.

துளசிதளத்தின் 6 யானைகள் கணக்கில் இல்லை:-)))))