Wednesday, November 09, 2005

நியூஸிலாந்து பகுதி 23


மவோரி கதைகள் # 8


ஆந்தைக்கண்ணு Poupou Pukana


நீங்க எப்பவாவது பொவ்பொவ் பார்த்திருக்கீங்களா? இது என்னவா? இங்கே மவோரிங்க செதுக்கற மரச் சிற்பங்கள்.இதுலே இவுங்க கண்ணுக்கான இடத்துலே, மொறைச்சுப் பாக்கற பெரிய பெரிய வட்டக்கண்ணுங்களைப் பாவாசிப்பியாலே செஞ்சு பதிச்சு வச்சிருப்பாங்க.


ஆந்தை மிகவும் அறிவுள்ள பறவைன்றது இவுங்க நம்பிக்கை. இவுங்க மட்டுமா, உலகத்துலே பல இடங்களிலும்அறிவுள்ள ஆந்தை(Wise Owl)ன்ற நம்பிக்கை பரவலா இருக்குதுல்லே!


சமாதானத்துக்கான கடவுள் ரோங்கோ மக்கள் கல்வி கற்பதற்காக ஒரு வீடு/ஹால் கட்டினாராம்.( மவோரி இனத்தின்முதல் பள்ளிக்கூடம்) இது ரொம்பப் புனிதமான இடம். அங்கே எல்லாம் நல்லபடியாக நடக்கணுமுன்னு ஒருஆந்தையைப் பிடிச்சு, கட்டிடத்துக்கு அடியிலே குழிச்சு மூடிட்டாராம். அதோட கண்ணுதான் இப்படி முழிச்சுப் பார்த்துக்கிட்டுஎப்பவும் கவனமா இருக்காம்.


மவோரிப் பாட்டுகள் பாடும் போதும் ஹாக்கா செய்யும்போதும் கண்களை அகலமாவிரிச்சு உருட்டி உருட்டிப்பாக்கறதும் இந்த ஆந்தையை நினைச்சுத்தானாம்.


இந்த ஹாக்கான்னு சொல்றது ஒரு விதமான நடனம். கூடவே கண்ணை உருட்டி எதிராளிக்கு அறைகூவல்விடுவாங்க. இதை நீங்க நியூஸிலாந்து விளையாட்டுவீரர்கள் பங்கேற்குற ரக்பி விளையாட்டுகள் ஆரம்பிக்கறப்பப்பார்த்திருப்பீங்களே.


இன்னிக்கு ஒரு தமிழ் நண்பரைச் சந்தித்தேன். அப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது மவோரிகளைப்பத்தி எழுதறதைச் சொன்னேன்.
அப்ப அவர் சொன்னது இந்த மவோரி என்ற பேர் 'மரவுரியுடையோர்'ன்றதுலே இருந்து மரூவி இருக்கலாமுன்னு. கூடவேஇந்தியாவுலெ இருந்து அந்தக் காலத்துலே வந்திருப்பாங்க. ராமாயணகாலத்துலே மரவுரி அணிஞ்சமாதிரி இவுங்களூம்மரவுரி தரிச்சதாலே மவோரின்னு ஆயிடுச்சுன்னு.


இது உண்மையின்னு சொல்ல முடியாது. ஆனால் கேக்கறதுக்கு சுவாரசியமா இருக்குல்லே?


நம்ம ஜனங்களுக்கு இப்படி விளக்கம் சொல்றதுக்குச் சொல்லித்தரணுமா என்ன? இப்படித்தான் அந்த நாளிலேஃபிஜியிலே COUP நடந்துச்சுல்லே. நடத்துனவர் பேர் ரம்பூக்கா. அதையும் நம் மக்கள் இவரோட பேர் 'ராம் நாம் கா பூக்கா'(ராமனின் பெயரின் மேல் கொண்ட அதீதப் பசி)ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க:-))))

ஹே ராம்.......

********************************************************************

13 comments:

said...

பள்ளிக்கூடத்திலே க்யாமத் சே க்யாமத் என்கிற ஹிந்திப் படப் பெயரை சிங்களத்திலே காம(கா as the "Caa" in Cabbage) அஸ்சே லொக்கு மஸ்சா (சாப்பாட்டுக்குள்ளே பெரிய ஈ) என்போம்!! அது மாதிரித்கான் இருக்கு பெயர் விளக்கமெல்லாம்!! ;O)

ஆந்தைக்கண்ணுக்கும் Bird of Paradiseக்கும் என்ன சம்பந்தம்???

such a nice feeling.. posting the first comment :O)

said...

ஆஹா... வாங்க வாங்க.

அது ஒண்ணுமில்லை. இந்தக் குளுர் மட்டும் இல்லேன்னாஇந்த ஊரு ஒரு ஸ்வர்க்கம்னு சிம்பாலிக்கா சொல்லிக்கறதுக்குத்தான்.:-)))))

said...

அடடா!!!

"பாவாசிப்பி"ன்றது என்ன???

said...

//இந்த மவோரி என்ற பேர் 'மரவுரியுடையோர்'ன்றதுலே இருந்து மரூவி இருக்கலாமுன்னு.//

தோணுது பாருங்க. அது ஜனங்க. இத்தன நாள் கிளாஸ் எடுத்தீங்க. இந்த மாதிரி மேட்டரெல்ல முதல்ல சொல்லிருக்கணும். சிலபஸ் ரிவிவ்யூ தேவைன்னு நினைக்கிறேன்.

அப்பாடா, கஷ்டப்பட்டு சீக்கிரம் எழுந்து 545க்கு நான் டாண்னு ஆஜர். ஆனா பாருங்க இந்த தருமி அவங்க ஊர்ல மணி 815 ஆச்சு. இன்னும் தூங்கிட்டு இருக்காரு!

said...

Paua shell - Abalone

ஷ்ரேயா இது ஒருவகைச் சிப்பி.
நல்ல அழகான கலர்களில் இருக்கும். நகை செய்ய உபயோகிக்கிறார்கள். இந்த பாவா சிப்பியில் இருந்து கிடைக்கும் முத்து பயங்கர விலை.

said...

வாங்க ராமநாதன்.
இந்தக் கோழி/கோளியெல்லாம் கேக்காத தூரத்துலே இருக்காரோ என்னமோ?

said...

நம்ம ஊருகாரங்க காரணப் பேரு வந்த காரணத்தை சொல்றதில கெட்டிகாரங்க

said...

காரணப் பேரோ இடுகுறிப் பேரோ, நம்மளைச் சார்ந்து ஒரு பேராக்கினதும் பாசம் வருது இல்லையா?

துளசி, நியூஸியில் பூகம்பம்னு தினமலரில் ஒரு ஓரத்தில் போட்டிருந்தது, உண்மையா?

said...

உதயகுமார்,

//நம்ம ஊருகாரங்க காரணப் பேரு வந்த காரணத்தை சொல்றதில கெட்டிகாரங்க //

இல்லையா பின்னே?

said...

தாணு,

அது ஒண்ணுமில்லே. நாந்தான் 'டான்ஸ் ப்ராக்டீஸ்' செஞ்சுக்கிட்டு இருந்தேன்.
அதையா தினமலர்லே பூகம்பம்னு போட்டுட்டான்?

said...

only 2 hours and a brand new template!!! Mathy at work I'm guessing!!! ;O)

பாவாசிப்பி - minunggalaapassai wiRaththulee irukkumee athaanee?

said...

ஷ்ரேயா,
அதேதான்.

said...

Human beings, who are almost unique in having the ability to learn from the experience of others, are also remarkable for their apparent disinclination to do so.
Douglas Adams- Posters.