ஒரு கஷ்டமும் இல்லை. வந்தவிவரம் தெரிஞ்சது. உடனே போய்ப் பார்க்கமுடியாமஇருந்துச்சு. கோபால் வேற ஊருலெ இல்லை. அவுங்க திரும்பி போறப்ப பார்த்துக்கலாமுன்னுஇருந்துட்டேன். கோபால் இங்கே வர்ற நாளுதான் அவுங்களும் திரும்பிப்போறாங்க.
ஏர்போர்ட்டுலே போறதுக்கு முன்னாலே வந்து பாக்கறேன்னு போன் போட்டுச் சொன்னேன். கோபாலைப்பிக்பண்ண போனப்ப விஷயத்தைச் சொன்னேன், இன்னும் மூணு மணி நேரம் இருக்குன்னு. வீட்டுக்கு வந்து குளிச்சு சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்ப போன் வந்துச்சு, அவுங்க ஏர்போர்ட்டுக்குக்கிளம்பியாச்சுன்னு. நாங்களும் கிளம்பிப் போனோம்.
அங்கேயே பார்த்துட்டு ஏறக்குறைய ஒருமணி நேரம் கதை அளந்துட்டு, மகளுக்காக ஆட்டோகிராஃப் வாங்கிக்கிட்டுவந்தோம். மகளும் தமிழ்ப்படமுன்னாலே இவரோட படங்களை மட்டுமே பார்ப்பாள். மைக்கேல் மதன காமராஜன் எல்லாம்ஒரு நூறு ஓட்டம் ஓடியிருக்கு நம்ம வீட்டுலே.
பழகறதுக்கு இனிமையான மனிதர். நல்லா ஜோக்கடிக்கிறார். அவரோட வெளிநாட்டு அனுபவங்களிலே சிலதைச்சிரிக்கச்சிரிக்கச் சொன்னார். இயல்பா இருந்தார்.
கமல் ஒரு நல்ல நடிகர் என்றதுலே யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. (ஸ்ரீ)காந்து, அப்பேர்ப்பட்ட நல்லகலைஞனைக் காத்திருந்து பார்த்தது தப்பே இல்லை.
கடவுளைக்கூட தர்மதரிசனத்துலே கால்கடுக்கக் க்யூவிலே நின்னுபார்க்கறவங்களுக்குப் புண்ணியம் கூடுதலாமே?
இதுபோல இன்னும் பலவிஷயங்கள் இருக்கு. யாராவது எழுதுனா, 'பாட்டுக்குப் பாட்டு'னு எடுத்துவிடறேன். சரியா?இல்லாட்டி, ரொம்பத் தற்பெருமை மாதிரி இருக்குமுல்லெ?
சொல்ல மறந்துட்டேனே, எங்க வீட்டுலே இருந்து இங்கத்து இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் ஒரு 10 நிமிஷ ட்ரைவ்தான்.
இதை நேத்தே பதிஞ்சிருக்கலாம். ஆனா நம்ம ஸ்ரீகாந்தோட சந்தோஷத்தைக் கெடுக்கவேணாமுன்னுதான்........
இன்னிக்குக் கெடுத்தாப் பரவாயில்லையான்னு யாருப்பா அங்கே சவுண்டு வுடறது?:-)))))
( ஸ்ரீகாந்த், தப்பா நினைச்சுக்காதீங்க இந்தப் பதிவு போட்டதுக்கு)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Thursday, November 17, 2005
ஒரு கஷ்டமும் இல்லை.
Posted by துளசி கோபால் at 11/17/2005 09:20:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
துளசியக்கா...உங்களை எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே? மினசோட்டாவுக்கு வந்துருக்கீங்களா?
உங்க பின்னாடி Cartல உக்காந்திருக்கறது பையனா பொம்மையா?
ஏங்க குமரன்,
இவ்வளோ பெரிய கலைஞர் இருக்கார். அவரைப்பார்க்காம அது என்ன பின்னாலே இருக்கறது பொம்மையான்னு ஒரு கேள்வி? :-)))
அது ஒரு ச்சின்னப்புள்ளெ கார்ட்டைத் தள்ளிக்கிட்டு வருது.
மினசோட்டாவுக்கு இனிமேத்தான் வரணும், உங்க வீட்டுக்கு.
கமல நான் முதலும்கடைசியுமா இவ்ளோ கிட்டக்க பார்த்தது கோவை பக்கத்தில இருக்கற ஈச்சனாரிகோயில்ல. சிவாஜி வீட்டு கல்யாணம் ஒன்றுக்கு வந்திருந்தார். சிவப்புன்ன வெள்ளக்காரன் கணக்கால இருந்தாருமனுசன். ஆனா, அவர்கிட்ட பேசல.. மாறா என் தலைவரிடம் ரெண்டு வார்த்தை பேசினேன்.. (கேட்டேன்.. அப்பா பேசினாரு) அது போதும் எனக்கு!
நிச்சயமா எங்க மினசோட்டா வீட்டுக்கு வாங்க. இப்போ அப்பப்ப நம் வலையுலக வீட்டுக்கும் வந்துட்டுப் போங்க... என்ன சொல்றீங்க...
நானும் எஸ் வீ சேகரோட டெல்லி எர்போர்ட்டுல எடுத்த போட்டாவை போடலாம்னு இருக்கேன்.
குமரன்,
ஒரு வீடா இரூந்தா பரவாயில்லை . இப்படி பதினோரு வீடுன்னா எங்கே முடியரது?:-))) அப்படியும் வந்துக்கிட்டுத்தான் இருக்கேன்.
உதயகுமார்,
ஃபோட்டோவையெல்லாம் எடுத்து விடுங்க. எல்லாம் ஒரு ஃபன் தானே?
பதிவு கமால் ஹை. எங்க ஆசானுக்கு எல்லாமே ஆஸான்.
//கடவுளைக்கூட தர்மதரிசனத்துலே கால்கடுக்கக் க்யூவிலே நின்னுபார்க்கறவங்களுக்குப் புண்ணியம் கூடுதலாமே?//
ஜென்ம சாபல்யம் ப்ராப்திரஸ்து.
//இல்லாட்டி, ரொம்பத் தற்பெருமை மாதிரி இருக்குமுல்லெ?//
வடபுலம் தாழ தென்புலம் சமன்பெறவந்த வலையுலகின் அகத்தியருக்கு இல்லாத உரிமையா ?
(தமிழரின் தனிக்குணம் தனிநபர் துதிபாடல் என்று யாருப்பா அங்கே சவுண்டு வுடறது?:-)))))
என் சின்னவயசில் ஜெமினியுடன் கொடைக்கானலில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது.காமராவை வைத்துக்கொண்டு தடுமாறுவதைக் கண்டு அவரே exposure செட் செய்து, focusம் செய்து தன் உதவியாளரை வைத்து எடுத்துக் கொடுத்தார்.
டி ராஜ்,
ச்சும்மா நம்ம வீட்டுக்கு ஹாலிடே வந்துட்டுப் போனாருன்னு சொன்னா ஒரு கெத்தா இருக்குமுல்லெ?
வேற ஒரு வேலையா வந்திருந்தார்.
மணியன்,
அந்தப் படத்தை 'ஸ்கேன்' செஞ்சு போடுங்களேன்.
அந்தக் காலத்துலே ச்சும்மாச் சொல்லக்கூடாது,'ஜெமினி' காதல்மன்னன் என்று சொன்னாப்லேயே அழகா இருந்தாரே.
அதுவும், கமலோட அப்பா:-)))))
ஐயா கமலு கமலு கமலு...பக்கத்துல டீச்சர். டீச்சர் டீச்சர் கமல் கிட்ட வாங்குன ஆட்டோகிராப் காட்டுங்க டீச்சர்.
கமலு நடிச்சு நெறைய படம் பாத்திருக்கேன் டீச்சர். கடைசியா விருமாண்டி பாத்தேன் டீச்சர். நல்லா நடிச்சிருந்தாரு டீச்சர். அடுத்து எதுவும் நடிக்கிறாரா டீச்சர்?
டீச்சர், ஒங்க மேல மதிப்பு வெச்சுதான் கமல் நியூசிலாந்துக்கு வந்தாராமே. பக்கத்து பெஞ்ச் பையன் சொல்றான் டீச்சர். நெஜமா டீச்சர்?
இப்பிடி சின்ன வயசா இருக்காரு?., எப்ப எடுத்தது இது?., அப்புறம்... நம்ம குமரன் சார் வீட்டுக்கு நீங்க போகும் போது என்னையும் கொஞ்சம் கூட்டிட்டுப் போங்க.
சில நல்ல பசங்களும் ஸ்கூலுக்கு வந்தப்புறம் வாலா ஆயிடறதும் உண்டு.
உதாரணம்... ராகவன்:-)
மரம்,
இது போன வருஷம் எடுத்தது.
மேக்கப்பு இல்லாம இருக்கறதாலெ இளமையாத் தெரியறாரு போல:-)
இந்த ஸ்ரீகாந்த் விஷயம் என்னங்க, புரியலையே!!
Post a Comment