Wednesday, November 23, 2005

நியூஸிலாந்து பகுதி 29

சரித்திரம்ன்னு சொல்றது சுவாரசியமான விஷயம்தான்னு இருந்தாலும் அது நடந்த வருசங்களை ஞாபகம் வச்சுக்கறதுஒரு சல்லியம்தான். இல்லே?அப்ப, இப்பன்னு சொன்னாலும் எப்பன்னு ஆளுங்களுக்கு சம்சயம் வருமுல்லே?சரி. இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்காம பாடத்துக்குப் போலாம்.


ஐரோப்பியர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது இங்கே, அந்தக் காலக்கட்டத்துலே . பிரிட்டிஷ் ராஜாங்கம் நினைச்சது, 'இப்படியே வுட்டுட்டா நல்லா இருக்காது. பொழுதன்னைக்கும் இந்த மவோரிகளோட சண்டையும், சமாதானமுமாஇருந்துக்கிட்டு இருக்க ஏலாது. நம்ம ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு அவுங்களையும் இதுலே சேர்த்துக்கலாமு'ன்னுதிட்டம் போட்டாங்க. இதுக்கிடையிலே அங்கே இங்கிலாந்துலே இந்த புது நாட்டைப் பத்தி எதிர்பார்ப்பு கூடிக்கிட்டேபோகுது. ஏராளமா நிலபுலன் இருக்கு. சல்லிசா வாங்கிறலாம். அவ்வளோ குளுருகூட இல்லையாம். கூட்டம்கூடஇல்லையாம். அங்கேபோனா இன்னும் வசதியா இருக்கலாமுன்னு மக்கள் கிட்டே ஏகப்பட்டக் கனவு.


1833லே ஜேம்ஸ் பஸ்பை( James Busby)ன்றவரை பிரிட்டிஷ் ரெஸிடண்ட் ஆஃப் நியூஸிலாண்ட் பதவி கொடுத்துஇங்கே அனுப்புனாங்க. இந்தப் பதவி அம்பாஸிடர் மாதிரியாம். தூதரா இங்கே வந்தவர், ஏற்கெனவே வெள்ளைக்காரங்களோடநட்பாயிருந்த மவொரி குழுத்தலைவர்களைச் சந்திச்சுப் பேசுனார். 'என்னாத்துக்கு இப்படி நீங்க உங்க ஜனங்களுக்குள்ளேயேகுழுவாப் பிரிஞ்சுக்கிட்டு சண்டைபோட்டுச் சாவறீங்க? ஒத்துமையா இருக்கறதுதான் நல்லது. நாங்க இருக்கோம் உங்களைப்பாதுகாக்க. எங்க ராஜா/ராணிங்க உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராம பார்த்துக்க சொல்லி என்னை அனுப்பியிருக்காங்க.உங்க புள்ளைகுட்டியெல்லாம் நல்லா வாழ்க்கையிலே முன்னேறி நாகரிகமா இருக்கணுமுன்னா எங்களோட சேர்ந்துக்குங்க.நாமெல்லாம் ஒண்ணா இந்த நாட்டை மேம்படுத்தி வளமா இருக்கலாம். உங்க உயிருக்கும் உடமைக்கும் நாங்க காரண்ட்டி'ன்னுசொல்லி ஒருமாதிரி அவுங்களும் சம்மதிச்சாங்க.


ஆனாலும் சிலருக்கு இது சரியாப்படலை. ஆனா குழுத்தலைவர் சொன்னாஅனுசரிக்கணுமே!


சில மவொரித் 'தலை'ங்க சேர்ந்து மொதல்லே ஒரு கொடியை உருவாக்குனாங்க. செயிண்ட் ஜார்ஜ் சிலுவையும் கூடவேநாலு எட்டுமுனை நட்சத்திரங்களும் போட்டு ஒரு கொடி! இந்த ஜேம்ஸ் பஸ்பை தனியாத்தான் தன் குடும்பத்தோடு இருந்தார்.படைவீரர்களோ, காவலாளிங்களோ இவர்கூட இல்லை. இவர்வீட்டை ஒருசமயம் சிலபேர் கொள்ளையடிச்சப்பக்கூடஉதவி செய்ய யாரும் இல்லையாம்! அப்பப்பார்த்து இங்கே ரோந்துவந்துக்கிட்டு இருந்த இங்கிலாந்துக் கடற்படைக் கப்பல் மூலம்சில உதவி கிடைச்சதாம்.


ஃபிரெஞ்சுக்காரங்களுக்கும் இந்த நாடுமேலே ஒரு நாட்டம் இருந்துச்சுல்லே. அவுங்க என்ன செஞ்சாங்கன்னா, பிஷப் பொம்பெலியர்( Pompallier) மூலமா தகவல் சேகரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவுங்க நாட்டுக் கடற்படைக் கப்பலும்அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருந்துச்சு. Baron Charles de Thierry ன்ற ஃபிரெஞ்சுக்காரர், இங்கே 'ஹோகியங்ஆ' லே40,000 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுருக்கேன். நாந்தான் இந்த நாட்டுக்கு அதிபதின்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.இது நடந்தது 1837. ஃபிரெஞ்சு அரசாங்கம் இவரை ஆதரிச்சு ஒண்ணும் செய்யலை.


ஆனாலும், 'பஸ்பை' என்னசெஞ்சாருன்னா, உடனே வடக்குப் பக்கம் இருந்த 34 குழுத்தலைவர்களோடு 'வைட்டாங்கி'ன்ற ஊர்லே ஒரு கூட்டம்போட்டார். அங்கேதான், இந்த நியூஸி ஒரு சுதந்திர நாடு. இதை, மத்தவங்ககிட்டே இருந்து காப்பாத்தணும். அதுக்காகபிரிட்டிஷ் ராஜாங்கம்கிட்டே பாதுகாப்பு கேக்கணும்னு முடிவு ஆச்சு. அதான் இவரு ஏற்கெனவே அவுங்ககிட்டேப் பேசிப் பேசிஅவுங்க மனசை இளக்கியிருந்தாரே. அவுங்களும் சம்மதம் சொல்லியிருந்தவுங்கதானே?


இதுக்கு நடுவுலே எட்வர்ட் வேக்ஃபீல்ட்ன்றவர், ஒரு ஐடியாக் கொடுத்தார். 'இங்கே மவொரிங்ககிட்டே இருந்துநிலம் வாங்கலாம். அதை இங்கிலாந்துலே இருக்கறவங்களுக்கு கூடதல் விலைக்கு விக்கலாம். வர்ற லாபத்துலேஅங்கே இருந்து இங்கேவந்து வேலை செய்ய விருப்பம் இருக்கறவங்களுக்கு கப்பல் டிக்கெட் வாங்கி இலவசமாத்தரலாம். அவுங்களும் இலவச டிக்கெட்டுக்குப் பதில் உபகாரமா சிலவருஷம் நமக்காக உழைக்கணும்'ன்னார்.இதுகூட ஒருமாதிரிக் கொத்தடிமைதானே? ஆனா இது நல்லாவே வொர்க்கவுட் ஆச்சு.


இதுலே ஒரு வேடிக்கை என்னன்னா, இந்த எட்வர்ட் வேக்ஃபீல்ட்க்கு இந்த ஐடியா எப்ப வந்துச்சுத் தெரியுமா?ஜெயிலிலே இருந்தப்ப! ஒரு பணக்கார தொழிலதிபரோட பொண்ணான 'எல்லன் டர்னர்'ன்ற பள்ளிக்கூடம்போற
மாணவியோட ஊரைவிட்டு ஓடிப்போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவர். மைனர் பொண்ணு. அதனாலே குற்றம் சாட்டப்பட்டுமூணு வருசம் தண்டனை, நியூகேட் ஜெயில் வாசம் . அங்கெல்லாம் ஜெயில்லே களி இருந்திருக்குமா? தெரியலையே:-)


நியூஸிலாண்ட் கம்பெனின்னு ஒண்ணு ஆரம்பிச்சாச்சு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியா நியூஸி ஆகப்போகுதுன்றசெய்தி கசிஞ்சதும், தன்னுடைய சகோதரனை 'டோரி'ன்ற கப்பலிலே அனுப்பினார். ஆர்தர் வேக்ஃபீல்ட்தான் கப்பலின்கேப்டன். கூடவே நிலத்தை அளக்கறது சில சர்வேயருங்க, இன்னும் நிலம் வாங்க சில ஆட்கள்.


மகாராணி விக்டோரியா, தன்னுடைய கடற்படையிலிருந்து வில்லியம் ஹாப்ஸன் என்ற நேவல் கேப்டனை இங்கேஅனுப்புனாங்க. மவோரிங்க தலைவர்கள்கிட்டே எப்படியாவது பேசி, தங்களுடைய ஆளுகைக்குள்ளே வர சம்மதம்வாங்கிரணுமுன்ற உத்தரவோடு ஹாப்ஸன் ஜனவரி 29, 1840க்கு இங்கே பே ஆப் ஐலண்ட் வந்து சேர்ந்தார்.


ஒருவாரம் கழிச்சு ஃபிப்ரவரி 5, வைட்டாங்கி என்ற ஊர்லே மவோரி பெருந்தலைகளைச் சந்திச்சார். ஏற்கெனவே'வைட்டாங்கி நேச உடன்படிக்கை ( Treaty of Waitangi)'ன்ற பேர்லே எழுதிக் கொண்டுவந்திருந்த தஸ்தாவேஜ் பத்திரங்களைக் காமிச்சார். 'அந்தந்த மவொரி கிராமத்தைச் சேர்ந்த இடங்களையும் சொத்துபத்துக்களையும் மவோரிங்கவச்சுக்கலாம். பாக்கி இருக்கற நிலங்களை மகாராணி வாங்கிக்கலாம். மேலும் மவோரி மக்களுக்கு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்குடிமக்களாகிற தனியுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவுங்க பாதுகாப்பை இனி மகாராணியம்மாவே பார்த்துக்குவாங்க.' இதுதான்முக்கியமா எழுதப்பட்டிருந்தது.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

5 comments:

said...

இந்திய வரலாற்றைக்கூட இந்தளவு ஆழ்ந்து படித்ததில்லை. எங்களுக்கு ஒரு துளசி டீச்சர் இல்லையே :(

said...

ஏங்க மணியன்,

இது ரொம்பக்குட்டியூண்டு நாடு. இதோட வரலாறுகூடப் பார்த்தீங்கன்னா ஒரு 350 வருசம் வருமா?
இதை நம்ம நாட்டுச் சரித்திரத்தோட ஒப்பிடமுடியுமா?

அதுவுமில்லாம, நம்ம நாட்டுலே, ச்சின்னவயசுலே சின்ன வகுப்புலே படிச்ச சரித்திரப்பாடத்துலே
விளக்கம் ரொம்ப இல்லீங்களே. எல்லா ராஜாங்களும் மரம் நட்டார், குளம் வெட்டினார், பொற்காலம்
இப்படியேல்ல இருந்துச்சு.

இங்கே இப்பத்தானே நாலு மில்லியன் ஜனம் ஆகியிருக்கு.

இங்கே எல்லாத்தையும் விலாவரியா எழுதிவச்சுட்டதாலே, இப்பக் கதையளக்க
எனக்குச் சுலபமாப் போச்சு:-)

said...

டீச்சர் இப்பதான் கிளாசுக்கு வந்தேன் டீச்சர். கோவிச்சுக்காதீங்க டீச்சர். வீட்டுல ரொம்ப வேலை டீச்சர். அதான் லேட்டா வந்தேன் டீச்சர். நீங்க நல்லா எழுதீருக்கீங்க டீச்சர். அடுத்த வாரத்துல இருந்து ஒழுங்கா வர்ரேன் டீச்சர்.

said...

ராகவன்,

இந்த வாரம் உங்களுக்கு ஒரு 'ஸ்பெஷல் பர்மிஷன்' கொடுத்திருக்கறதா ஒரு லெட்டர் உங்க 'நோட்புக்'லே வச்சிருந்தேனே அதைப் பார்க்கலையா?

அதானே, பாடப் புத்தகம் நோட்புக்கையெல்லாம் திறந்து பார்த்தாலும்......:-)

said...

// இந்த வாரம் உங்களுக்கு ஒரு 'ஸ்பெஷல் பர்மிஷன்' கொடுத்திருக்கறதா ஒரு லெட்டர் உங்க 'நோட்புக்'லே வச்சிருந்தேனே அதைப் பார்க்கலையா?

அதானே, பாடப் புத்தகம் நோட்புக்கையெல்லாம் திறந்து பார்த்தாலும்......:-) //
ஹி ஹி ஆமாம் டீச்சர். நீங்க சொன்னதுக்கு அப்புறந்தான் நோட்புக்கைத் திறந்தேன்.