Monday, November 07, 2005

நியூஸிலாந்து பகுதி 21



மவோரி கதைகள் # 6


சில பழக்க வழக்கங்கள்.


நாம கைகூப்பி வணக்கம் சொல்றது, வெள்ளைகாரங்க கைகுலுக்கி ஹலோ, ஹை ன்னு சொல்றது போலமவோரிங்க வணக்கம் சொல்றதுக்கு வேற ஒரு ஸ்டைல் இருக்கு. அதுதான் மூக்கோட மூக்கை தொடறது.மூக்கோட நுனிங்க உரசிக்கிறது. அதேசமயம் ரெண்டு பேரோட நெத்தியும் லேசாத் தொடும்.


இதன் பேரு ஹொங்கி. இதுக்கு என்ன அர்த்தமுன்னா இப்படிச் சொல்லலாம்.


உன் மூக்கும் என் மூக்கும் தொட்டுக்கிட்டு இருக்கறப்ப நம்ம ரெண்டு பேரோட மூச்சுக்காத்தும் ஒண்ணாக் கலந்துருது.


உன் நெத்தியும் என் நெத்தியும் ஒண்ணையொண்ணு தொடும்போது நம்ம ரெண்டு பேரோட எண்ணங்களையும்,உணர்வுகளையும் பகிர்ந்துக்கறோம்.


இப்படி இவுங்க மூணுமுறை செய்வாங்க. முதல்தடவை வாழ்த்துச் சொல்றதுக்கு,. ரெண்டாம்தடவை அவுங்க முன்னோர்களைநினைச்சு அவுங்களை மரியாதை செய்யறதுக்கு. மூணாவது தடவை இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும்கவுரவிக்கறதுக்கு.


Te Wero டெ வீரோ அறைகூவல்


உலகத்திலே பல நாடுகளிலே இருக்கற அதிமுக்கிய மனிதர்கள் சிலசமயங்களிலே மற்ற நாடுகளுக்கு விஜயம்செய்றாங்க இல்லையா. அப்படி இங்கே வர்ற வி.ஐ.பி.ங்களை இந்த மாராயி இல்லேன்னா வேற எதாவது ஸ்பெஷல்இடத்துக்குக் கூட்டிட்டுப்போய் காமிப்பங்க. இது மாதிரி சமயங்களில் வந்தவுங்கள வரவேற்க நிறைய நிகழ்ச்சிகள்ஏற்பாடு செய்திருப்பாங்க. எல்லாம் ஒருவிதம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கறதாகவே இருக்கும்.


அதுலே முதலாவதா வர்றது டெ விரோ


விஸிட்டர்கள் எல்லாரும் ஒரு இடத்துலே நிற்கணும். அப்ப ஒரு மவோரி வீரர் பழைய பண்பாட்டின்படி உடைஅணிஞ்சுக்கிட்டுக் கையிலே விரோ (ஈட்டி) மாதிரி ஒரு தடியோடு முன்னுக்கு வருவார். இது எதுக்குன்னா, வந்திருக்கறதுநண்பனா அல்லது பகைவனான்னு பழைய வழக்கப்படித் தெரிஞ்சுக்கறதுக்கு. வந்திருக்கற விஸிட்டர்களோடஸ்டேட்டஸைப் பொறுத்து சிலசமயம் மூணு வீரர்கள் வரை வரலாம்.


பயங்கரமா சத்தம் போட்டுக்கிட்டு, முகத்தைக் கடுமையா வச்சுக்கிட்டு, கையிலே இருக்கற தடியை சுழட்டிக்கிட்டுகண்ணை உருட்டி விழிச்சுக்கிட்டு அவுங்க வி.ஐ.பி முன்னாலெ வருவாங்க. இது ஒருவிதமான எச்சரிக்கை.'நீங்க தீய எண்ணத்தோட இங்கே வந்திருந்தா எங்களைக் காப்பாத்திக்க எங்களுக்குத் தெரியும். நாங்க வீரர்கள்'னுசொல்றது.


இப்படிச் செஞ்சுக்கிட்டே முன்னேவந்து ஒரு செதுக்கிய ' டாகி' மர அம்பு( ச்சின்னதுதான்.) தரையிலே குனிஞ்சு வைப்பாங்க.இது மர அம்பாத்தான் இருக்கணுமுன்னில்லே. ஒரு செடியோட ச்சின்னக் கிளையாகவும் இருக்கலாம். ஒரு கொத்துஇலையாவும் இருக்கலாம்.


இதை வந்திருக்கற விஸிட்டர்களிலே ஒரு ஆண் ( பொண்ணுக்கு இதை எடுக்கற உரிமை இல்லை) அதைக் குனிஞ்சுஎடுத்துக்கணும். வந்திருக்கவுங்க அமைதியை விரும்பி வந்தவுங்கன்னு அர்த்தம். எடுக்காம நின்னா சண்டைக்குவந்திருக்காங்கன்னு அர்த்தம்.


இந்த டெ விரோ எப்படி ஏற்பட்டுச்சுன்னா அதுக்கும் ஒரு கதை இருக்கு.


ஆகாயத்தந்தைக்கும், பூமித்தாய்க்கும் பிறந்த மகன்தான் சண்டைக்கான கடவுள் டுமடாவெங்கா. இவர்தான் போர் வீரர்களைக்காப்பாத்துறவர். இவரைச் சுருக்கமா ( செல்லமா) டு ன்னு சொல்றது. இவருக்கு கூடப்பிறந்த தம்பி, தங்கைகள் எல்லாம்இருக்காங்க. ஒரு சமயம், இவுங்க அப்பா அம்மாவான ஆகாயமும் பூமியும் பிரிஞ்சுடறாங்க. அப்ப இவரோட தம்பிடஹிரிமடெஆ க்கு இது பிடிக்கலை. அவருக்கு அப்பாவும் அம்மாவும் சேர்ந்தே இருக்கணுமுன்னு விருப்பம்.ஆனா டு வுக்கு இது பெரிய விஷயமாப் படலை. அண்ணன் தம்பிக்குள் இதன் காரணமா மனக்கசப்பு வந்து சண்டைஉண்டாயிருது. காத்து, மழை, புயல் எல்லாம் துணைக்கு வர, தம்பி டஹிரிமடெஆ அண்ணன் டு வோட சண்டை போடறார். மத்த தம்பிங்க பிரிஞ்சுபோய் ரெண்டு பேர் பக்கமும் சேர்ந்துக்கறாங்க. டு மாத்திரமே பலசாலின்றதாலே அவர்மட்டும்ஜெயிக்கிறார். மத்த எல்லாத்தம்பிங்களும் சண்டையிலே கொல்லப்பட்டாங்க.


ஆரம்பத்துல டு சண்டையைத் துவக்குனதாலேதான் இப்பவும் இந்த உலகத்துலே ஜனங்க சணடை போட்டுக்கறதுக்கு காரணம்ன்னு இந்த மவோரி மக்கள் நம்புறாங்க.


மவோரியிலே எப்படி வரவேற்கணுமுன்னு தெரிஞ்சுக்கறதுக்குப் படம் போட்டிருக்குப் பாருங்க. இன்னிக்கு சேர்ந்த புது அட்மிஷன்பைய(ர்)ன் சித்தனுக்கு அதே மாதிரி வரவேற்பு கொடுங்க, பார்க்கலாம்:-)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

27 comments:

said...

ஆரம்பத்திலே ரோட்டொரொ(Rotorua) கீஸர், அதாங்க அந்த நீராவி ஊத்து, பாத்துட்டு, பக்கத்தில இருந்த மியூசியம் உள்ள நுழைஞ்சு பாத்திட்டு இருந்தப்ப, ரொம்ப நேரம் ஆயி சாய்ந்தரம் ஆயிடுச்சு, கேட்டெல்லாம் பூட்டிட்டாங்க, நாங்க தெரியாதனமா உள்ளேயே தங்கிட்டோம், அப்ப வந்த டுரிஸ்ட் குருப்புக்கு (ஈவினிங் கல்சுரல் புரகிராம் பார்க்க வ்ந்தவுங்க) இதே மாதிரி தான் மவோரி ஆளுங்க மூணூ பெரு ஊ ஆ ன்னு சத்தம் போட்டுக்கிட்டு மூக்கோட மூக்கு உரசி, அந்த வேல் கம்பு குத்துன சீனு எங்களுக்கு ஒரே வேடிக்கை போங்க, துளசி, நீங்க சொல்லி தான் இப்ப புரியது என்ன கதைன்னு!

said...

ஹொனலூலு பொலினீஷியன் கல்ச்சுரல் செண்டரில் இந்த 'டெ விரோ'வைப் பார்த்திருக்கேன்.

Whale Rider படத்திலும்..

துள்சி டீச்சர்: ஒரு வேண்டுகோள். பெயர்களைச் சொல்லும்போது அடைப்புக்குள் ஆங்கிலத்திலும் கொடுங்களேன்.

-மதி

said...

டீச்சர்,
இன்னைக்கி attendance மட்டும்தான். பாருங்க..இந்த ராம்ஸ் இன்னைக்கி டிமிக்கி..

said...

உதயகுமார்,

நீங்க இங்கெயா இருக்கீங்க? இல்லே டூர் வந்துட்டுப் போனீங்களா?

அடடா, கிறைஸ்ட்சர்ச் வந்திருந்தீங்களா?

said...

தருமி,

ராம்ஸ்க்கு இன்னோரு முக்கியவேலை இருக்கு.
அதாலே ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்திருக்கேன்:-)

said...

சரிங்க மதி. இங்கிலிபீஸுலேயும் போட்டுடறேன்.

எனக்குப் பீட்டர் வுடத்தெரியாதா?:-)))

said...

நாங்க போன வருஷம் டூர் வந்தப்ப பார்த்த கதை இது. தெக்குத்தீவு, வடக்குத்தீவு இரண்டையும், கேம்பர் வேன்ல ஒரு 15 நாளு சுத்திப் பாத்த அனுபவம் சுகமானது. கிறைஸ்ட் சர்ச்ல தான் எங்களோட லேண்டிங் பாயின்ட்டே, ஏர்போர்ட் பக்கத்தில பிர்ட் வேன் எடுத்துட்டு சுத்தினோம். குயின்ஸ்லேன்ட், மில்ஃபோர்ட் சொன்ட்ஸ், வெஸ்ட் கோஸ்ட் , ஆர்தர் பாஸ் எல்லாம் சுத்தினோம். லார்ட்ஸ் ஆப் த ரிங்ஸ் படம் புடிச்ச இடங்கள தேடி கண்டு புடிச்சு போயி பார்த்த்ட்டு வந்தோம்.

said...

என்னங்க உதயகுமார்,

ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்லே?

வலைப்பதிவாளர் மீட்டிங் போட்டுருக்கலாமே?:-)))

மில்ஃபர்ட் சவுண்ட்ஸ் பத்திக்கூட ஒரு தனிப்பதிவு போடணுமுன்னு இருக்கேன்.

எப்படி ஒரு ஏகாந்தமான இடம் இல்லே?

LOTR இடம் பாத்ததைச் சொல்லிட்டீங்கல்லே. பலருக்குக் காதுலே புகை வரும்:-)))

said...

Hi periyamma,
21 vathu pathivu varaiku vanthitingela.... nan 10 koda innum vasikala.

said...
This comment has been removed by a blog administrator.
said...

மாணவியை காணோமே என்று கவலைப்பட்டு நீங்க அனுப்பிய ஆள் வீட்டுக்கு வரல்லையே? ;O)

said...

டி ராஜ்,

தேவர் மகன்லேயா? ஞாபகம் இல்லையே(-:

போன ஜென்மத்துலே மவோரியா இருந்திருப்பாங்களோ?

இன்னைக்குக் கமலுக்கு ஹேப்பி பர்த்டேயாமே.

நல்லா இருக்கட்டும்

said...

சிநேகிதி,

சரித்திர வகுப்புலே 21 பகுதியெல்லாம் ஜுஜுபி... ஒண்ணுமேயில்லை.

இன்னும் ஒரு முப்பதாவது வரும்.

மெதுவாப் படிச்சாப் போதும். உங்களுக்குத் தனியா பரீட்சை வைப்பேன்:-)

உங்ககூட கம்பெனிக்கு மழை இருக்காங்க பாருங்க.

said...

என்னங்க ஷ்ரேயா,

நீங்க வகுப்புலே இல்லாதது எனக்கே கொஞ்சம் போரடிதான்.

இன்னும் ரெண்டுகிழமை முடியலையா?

இப்படிக்கு மாணவியை மிஸ் செய்யும் மிஸ்

said...

டீச்சர்,
நீங்க ரொம்பத்தான் partiality காமிக்கிறீங்க.
முந்தி ஷ்ரேயா வரலைன்னா -speical permission. இப்போ ராம்ஸ் வரலைன்னா speical permission அப்டீங்கிறீங்க...!!??

said...

இதென்னது. ஒங்க வகுப்புக்கு நம்மளையெல்லாம் முந்தி வெள்ளக்காரங்க வந்துருக்காங்க. அடேங்கப்பா! புகழ் ரொம்பவே பரவியிருக்கு.

said...

டீச்சர்,
இந்த கோழி சொல்லும் குண்டுபெருமாளை கொஞ்சம் கவனிங்க!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரவன் நான் உங்களுக்கு தெரியுந்தானே!

said...

தாணுவுக்கு என்ன குழப்பம். இந்தப் பெட்டி வேலை செய்யலைன்னு சொல்றாங்க.

ஆகவே இது ஒரு டெஸ்ட்.

said...

//இன்னிக்கு சேர்ந்த புது அட்மிஷன்பைய(ர்)ன் சித்தனுக்கு அதே மாதிரி வரவேற்பு கொடுங்க, பார்க்கலாம்:-)//

சித்தன் - ready? touch your forehead & nose to the screen.. I have touched my screen.. :O)

வரவேற்பு கொடுத்தாச்சு.. ok teacher?

said...

ஷ்ரேயா,

ஃபார்முக்கு வந்துட்டீங்க போல.

வெரிகுட்.

said...

ராமநாதன்,

அங்கே என்ன கோழி வாத்துன்னுட்டு? அது என்ன குண்டு? டெல்லியிலே போட்டதா?

காரையெல்லாம் வெளியிலே பார்க் செஞ்சுட்டு வரணும். அப்புறம் 'மோர்க்குழம்பு' சாப்ட்டாக் கையை நல்லாக் கழுவறதில்லையா? இங்கே குழம்புவாசனை வருது:-))))

said...

பாருங்க டீச்சர், இந்த ராம்ஸ் என்னை 'குண்டு பெருமாள்' அப்டிங்கிறார்; இதுக்குத்தான் போட்டோ போடக்கூடாதுன்னு நினச்சேன்.

said...

// அங்கே என்ன கோழி வாத்துன்னுட்டு? அது என்ன குண்டு? டெல்லியிலே போட்டதா? //

டெல்லீல போட்டது மண்டு. அதுனாலதான் போட்டிருக்கு குண்டு.

said...

ராகவன்,
அந்த மண்டு போட்ட குண்டுவாலே 70 பேருக்கு சோகம் நடந்துருச்சே(-:

said...

டீச்சரக்கா,
கோழியா? கோளியா? அதுல வந்த குழப்பம் இது.

மோர்க்குழம்பு வீக்கெண்ட் மெகா ப்ராஜெக்டா ஆகியிருக்கு. :)

said...

ராமநாதன்,

கண்டிப்பா 'கோழி' இல்லே:-)))

மோர்க்குழம்புலே கோழியெல்லாம் போடமாட்டாங்க:-))))

said...

இதோட பின்னூட்டம் முந்தின பதிவுலே போட்டுட்டேன். சித்தன் ஷ்ரேயாவோட அன்புமழையில் நனைஞ்சுட்டு நிஜ மழை பார்க்க சென்னை போயிருக்கார். வந்தப்புறம்தான் மூக்கு நிலைமை தெரியும்