நியூஸிலாந்து பகுதி 22
மவோரி கதைகள் # 7
வைஆட்டா WAIATA
இது என்ன புதுசாங்கறீங்களா? இதுக்கு அர்த்தம் பாட்டு.இவுங்க வாழ்வுலே நிகழ்ந்த பலநிகழ்ச்சிகளை அப்படியே பாட்டாப் பாடுறது இவுங்க வழக்கம். சில பாட்டுங்க, இவுங்கஜனங்களுக்குள்ளே வேற வேற க்ரூப்புக்கு நடந்த சண்டைங்களையும், சிலது மத்த புகழ்பெற்ற நிகழ்ச்சிகளையும், சிலதுகாதல் சம்பவங்களையும், தாலாட்டு போன்ற பாட்டுக்களையும், சிலது இறந்துபோன முன்னோர்களையும்ன்னு பலவிதமா இருக்கு.
அதேபோல சில இடங்களோட பேர்களும், வானத்திலே இருக்கற சில நட்சத்திரங்கள் பேரையும் அடையாளங்களையும்,சிலது குடும்பப் பெயர்களையும், அந்தக் குடும்பத்துலே வழிவழியா வந்தவங்க பெயர்களையும் கொண்டும் பாடிவச்சிருக்காங்க.
இந்தப் பாட்டுக்களைவச்சே ஜனங்களை வாழ்த்தயும் செய்யலாம், பழிக்கவும் செய்யலாமாம். பாட்டுங்களை இயற்றிப்பாடறதுக்குக் காரணமே தேவையில்லை. எதை வேணுமானாலும் பாடலாம்.
ஒரு மனுஷன் மீன் பிடிக்கப்போனப்ப அவனோட தூண்டில் தண்ணியிலே விழுந்து காணாமப் போயிருது. அதுக்கும்ஒரு பாட்டு வந்துருச்சு. அதே மாதிரி, ஒரு பொண்ணு சாப்புட்ட அற்புதமான விருந்து சாப்பாட்டைப் பத்தியும் பாட்டுலேபாடி வச்சுருக்காங்க.
இவ்வளவு என்னத்துக்கு? ஒரு மவோரி கிராமத்துலே ஒரு பன்றி இருந்துச்சாம். அந்தக் காலக் கட்டத்துலே இங்கேபன்றி இனமே இல்லையாம். வெள்ளைக்காரகள்தான் முதல்முதலா பன்றிங்களை இங்கே கொண்டுவந்து, இங்கே இருக்கறபொருட்களுக்குப் பண்டமாற்று செய்தாங்க. அப்படிக் கிடைச்ச ஒரு பன்றியை அந்த கிராமமே அதிசயமா நினைச்சுக்காப்பாத்தி வந்திருக்காங்க. அது ஒரு நாள் செத்துப்போச்சு. அதோட அருமை பெருமைகளையும் ஒரு பாட்டாப் புனைந்துபாடி வச்சிருக்காங்க.
எங்கும் பாட்டு, எதிலும் பாட்டு, எதற்கும் பாட்டு.
( எனக்கு என்னமோ தேவையில்லாம நம்ம கொல்லங்குடி கருப்பாயி ஞாபகம் வருதே!)
மேலே இருக்கற படம் 'டயமண்ட் ஹார்பர்'
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Tuesday, November 08, 2005
நியூஸிலாந்து பகுதி 22
Posted by துளசி கோபால் at 11/08/2005 02:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
"கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்த நாடு"ன்னு நம்ம ஊர்ல சொல்லறமாதிரி இது பாட்டு பாடி பாட்டு பாடி வளர்ந்த நாடு போல.
உதயகுமார்,
இவுங்க மொழிக்கு எழுத்துருவம் கிடையாது. வாழ்க்கையிலே நடந்தது எல்லாத்தையும் பாட்டாவே பாடி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோயிருக்காங்க.
அப்படி போடுங்க!
துளசி, நம் தமிழகத்து வாய்மொழிப் பாடல்களைப் (நாட்டுப்புறப்பாடல்கள்)
போல் நியூஸிலாந்திலுமா? விவரங்களைப் படிக்கும் போது எங்கிருந்தாலும் மக்கள் மனம் ஒன்றே என்று தோன்றுகிறது.
அவங்கள நினச்சா கொஞ்சம் பாவமாயிருக்கு...
மாதங்கி நீங்க சொல்றது 100% சரி.
ரத்தம் ஒரே நிறம்தான்!
தருமி,
எதுக்குப் பாவம்?
பாட்டுப் பாடுனதுக்கா?
ஏற்றம் இரைக்கும்போதே வலி, களைப்பு தெரியாமல் இருக்க பாட்டுப்பாடி உழைத்த பழம்பெருமை வாய்ந்தது நம் தமிழினம்.
//மேலே இருக்கற படம் 'டயமண்ட் ஹார்பர்'//
பேர் வர any particular காரணம்?? :o)
sorry abt the thanglish teacher..
ஆமாம் மூர்த்தித்தம்பி.
அப்பவும் புகழ் பெற்ற விஷயங்களையே பாட்டாக்கிப் பாடற வழக்கம் இருந்துச்சுல்லே?
ஷ்ரேயா,
அங்கேதான் எனக்கு வைர நெக்லேஸ் வாங்குனோம்னு சொன்னா நம்புவீங்களா?:-)
//அங்கேதான் எனக்கு வைர நெக்லேஸ் வாங்குனோம்னு சொன்னா நம்புவீங்களா?:-) //
asku pusku!! :o)
நீங்க ஏதாச்சும் பாட்டு கட்டியிருப்பீங்களே, அட்லீஸ்ட் வீட்லே உள்ளவங்களை படுத்தி வைக்கவாவது?!!!
seen this yet?
தாணு,
உங்களை 'இங்கே வீட்டுலே இருக்கறவங்க' போற்றணுமா வேணாமா?
வைரமுத்துவுக்குப் போட்டியாப் பாட்டு எழுதணுமா நான்?:-)))
Post a Comment