வந்தாச்சு வளமான நாட்டுக்கு. காலு குத்தியாச்சு. நாலு காசு பார்த்துரணும். அதான் வேற யாரும் வரமுன்னேயேவந்து இடம்புடிச்சுட்டொம்லே. இப்படி திருப்தியா மனஷனாலே இருந்துறமுடியுதா?
மதம் புடிச்சிருக்கு மனுஷங்களுக்கு. தன்கூடவே தன்னுடைய மதத்தைக் கொண்டுபோறது ரொம்ப இயல்பா நடக்குதுன்னாலும்,வேற எந்த மதத்தைப் பத்தியும் ஒண்ணுமே தெரியாத ஜனங்களுக்கு தன்னுடைய மதத்தைப் பத்திச் சொல்லி அதுலே அவுங்களைச்சேர்த்துவிட்டுறமுன்னு தீர்மானிச்சுக்கிட்டு, சாமுவேல் மார்ஸ்டன் இங்கே வந்து சேர்ந்தார். ஸ்கூல் வாத்தியார்.கொஞ்சம் தச்சுவேலை தெரிஞ்சவர். இதுமட்டுமில்லே, கயிறு திரிக்கக்கூடியவர். இது போதாதா?
1814லே முதல் மிஷனரியா வந்தவர்தான் இந்த சாமுவேல் மார்ஸ்டன். கிறிஸ்துவைப் பத்தியும், கிறிஸ்த்துவத்தைப்பத்தியும் இந்த மவொரி மக்களுக்குச் சொல்லணுமுன்னு Anglican church இவரை இங்கே அனுப்புச்சு. ஆனால்யாரும் இவுங்க சொன்னதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டமாதிரி தெரியலை! இதுக்கப்புறம் 'ரோமன் கத்தோலிகச் திருச்சபையிலிருந்து ஒரு பிஷப், பேரு பொம்பெலியர்( Pompallier) இன்னும் சில மிஷனரிங்களோட வந்தார். அவுங்களுக்கும் இதே கதிதான்.
சில மிஷனரிங்க என்ன செஞ்சாங்கன்னா, 'நாங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேக்கறவங்களுக்கு ஒரு துப்பாக்கிகொடுப்போம்'ன்னு சொல்லிச் சிலபேரை 'பேச்சு' கேக்க வச்சாங்களாம்.
இந்தமாதிரி ஒரு 11 வருஷம் போச்சு. மிஷனரிங்க வர்றதும் போறதுமா இருந்துருக்காங்க. ஹென்றி வில்லியம், வில்லியம் கொலென்ஸொ( Henri William, William Colenso)ன்னு ரெண்டு பேர் இப்படிப் பிரசாரம் செய்யவந்தவுங்க,வேற வழி கண்டிபிடிக்கணுமுன்னு யோசிச்சிருக்காங்க. பைபிளைப் பத்தியும், ஜெபங்களைப்பத்தியும் இங்கிலீஷ்லே சொல்லறதை விட்டுட்டு, மவொரியிலே சொன்னா நல்லதுன்னு தீர்மானிச்சு,அப்படியே மொழிபெயர்த்துச் சொல்லஆரம்பிச்சவுடன் சில பேரு ஆர்வமாக் கேக்க வந்தாங்களாம். ஆஹா... இது நல்ல வழியாச்சேன்னு சந்தோஷப்பட்ட வில்லியம் கொலென்ஸோ, ஒரு ச்சின்ன அச்சடிக்கிற மெஷினை வச்சு, ஜெபங்களை மவொரியிலே அச்சடிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கார். மவொரி மொழிக்கு எழுத்துரு இல்லைன்றதாலே, ஆங்கில எழுத்தையே உபயோகிச்சாங்க.
ஒரு மிஷன் ஸ்டேஷன்னு சொல்றதுலே என்னென்ன இருந்துச்சாம்?மத போதகரும் அவர் குடும்பமும் இருக்க ஒரு வீடு, ஜெபம் செஞ்சு சாமிகும்பிடறதுக்கு ஒரு ச்சாபல்(Chapel)ஒரு வகுப்பறை, ஒரு தூங்கறதுக்கான இடம். இது முக்கியமா 'ஆசிரியர் பயிற்சி' எடுக்க விரும்புறவங்க தங்கிக்கறதுக்கு.உள்ளூர் ஆளுங்களை டீச்சராக்கிட்டா நல்லதாச்சே. அவுங்க மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்களே!
எழுதறதும் அதை படிக்கறதும் பார்த்த மவொரிங்களுக்கு அது ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ச்சின்ன அச்சாபீஸ் இப்பெல்லாம்எந்நேரமும் பைபிளை அச்சடிச்சுக்கிட்டு இருக்கு. பயங்கர டிமாண்ட் ஆயிருச்சு. கொஞ்சம் கொஞ்சமா மவோரிங்ககிறிஸ்த்துவத்தைத் தழுவுனாங்க. இப்ப மிஷனரிங்களுக்கும் பொறுப்புக் கூடிப்போச்சு. ஞாயித்துக்கிழமை ஓய்வு நாள்,ஒரு ஆணுக்கு ஒரு மனைவி, முக்கியமா நரமாமிசம் தின்னுறதை விட்டுரணும். இந்த போதனையைத்தான் மெதுவாஆரம்பிச்சாங்க. அதுலே வெற்றியும் கிடைச்சுது. இல்லேன்னா, இவுங்களையே சாப்பிட்டிருக்க மாட்டாங்களா?
ஒரு குழு, இன்னொரு குழுவோட போட்ட சண்டைகளிலே இந்தத் துப்பாக்கியாலே செத்தவுங்க அநேகம். இது போதாதுன்னுவெள்ளைக்காரங்க கொண்டுவந்த வியாதிகளாலே செத்தவுங்க இன்னும் கூடுதல். அம்மை, இன்ஃப்ளூயன்ஸா, சளின்னுவந்த வியாதிகளாலே ஆயிரக்கணக்கானவுங்க இறந்திருக்காங்க. அதுக்கு முன்னாலே மவொரி ஜனங்க வியாதி,வெக்கை இல்லாம ஆரோக்கியமாத்தான் இருந்திருக்காங்க. ஆனா முப்பத்தஞ்சு, நாப்பது வயசுக்குமேலே ஆயுசு இல்லை! அல்பாயுசு.
இந்த மவோரிகளுடைய வாழ்க்கையை என்னென்னைக்குமா மாத்தியது இந்த வெள்ளைக்காரங்களும் அவுங்க கொண்டுவந்தசாமான்களும்தானாம். இரும்பு, இன்னும் மத்த உலோகத்தாலான சாமான்கள், பாத்திரபண்டங்கள்,புத்தகங்கள், கடிகாரங்கள்,காம்பஸ், இது எல்லாத்துக்கும் மேலா காசு. ஆமாம், நாணயங்களையும் அறிமுகப்படுத்தி வச்சிருக்காங்க.
வாழ்க்கைமுறையே மாறிடுச்சுல்லெ!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Tuesday, November 22, 2005
நியூஸிலாந்து பகுதி 28
Posted by துளசி கோபால் at 11/22/2005 01:57:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//இல்லாம ஆரோக்கியமாத்தான் இருந்திருக்காங்க. ஆனா முப்பத்தஞ்சு, நாப்பது வயசுக்குமேலே ஆயுசு இல்லை!// :)))
இன்னிக்கு நான் பர்ஸ்ட்...
மிஷனரியால கிருத்துவ மதத்தை பரப்பினதுல பிரிட்டீஸ்க்காரங்கள விட ஸ்பேனிஷ்காரங்களோட பங்கு தான் ஜாஸ்தி, அதெப்படி அங்க வரை அவங்க வரல்லை?
வெளிகண்ட நாதா,
டீச்சர் போர்டுல எழுதிப்போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க போலிருக்கு. இன்னிக்கு க்ளாஸ் அவ்ளோதான். நான் கிளம்பறேன். நீங்க?
:)))
நானும் ஜூட் :-)
அடடாடாடாடா.......
ஒரு நாளு 'நாட்டுநடப்பு' என்னன்னு தெரிஞ்சுக்கப் போனா வகுப்புலே இந்த கலாட்டாவா?
நல்லால்லே:-)
ஏதோ, நம்ம வகுப்பு 'மாணவன்' நட்சத்திரமாயாச்சுன்னு பேச்சுவருதே, அது என்னன்னு பார்க்கலாமுன்னு போயிருந்தேன்.
போனவாரம் முழுக்க க்ளாஸுக்கு மட்டம் அடிச்ச ராமநாதன் இன்னிக்கு முதல்லே வந்தாச்சு!
உதயகுமார்,
இங்கே ஸ்பானிஷ் ஆளுங்க வரலை. ஆனா ஐரீஷ்காரங்களும், டச்சு ஆட்களும் அப்புறமா நிறைய வந்திருக்காங்க.
துளசி பதிவுக்கு பின்னூட்டம் போடாமல் ஒரு வாரமே ஓடிப் போயிடுச்சு. இங்கேயும் சர்வர் ப்ராப்ளம்தான்
தாணு,
ஒருநாள் தமிழ்மணம் மட்டும் வரலை. மத்ததெல்லாம் வந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு.
சித்தன் வீட்டுக் கிரஹப்பிரவேசம் நல்லா நடந்ததா?
எங்கே புது வீடு? உங்க ஊருலெயா?
Post a Comment