அடடா.... கண்ணைப்பார்த்தீங்களா? எவ்வளோ குறுகுறுன்னு இருக்கு. ச்செல்லம்போல பார்க்குதே. எப்படிங்க இதுங்களைக்கொல்றதுக்கு மனசு வரும்?
ஹூம்.... மனசுவந்ததே.... என்னத்தச் சொல்ல?
மனுஷனைப் போல ஒரு சுயநலமி இந்த பூலோகத்துலே கிடையவே கிடையாது. மத்த எந்த மிருகமோ, பறவையோ,புழுப்பூச்சியோ எதாவது மனுஷனை விளையாட்டுக்காகவோ, பொழுது போக்காவோ கொன்னதாக் கேள்விப்பட்டுருக்கோமா?
ஆமாமாம். மனுஷன் தோலு எதுக்கு லாயக்கு? அப்படியே பிரயோஜனமான உடம்பு பாரு.....ஒன்னுத்துக்கும் ஒதவாததுதானே?
1790க்கு அப்புறம் சிட்னி, ஹோபர்ட், பிரிட்டன், வட அமெரிக்கான்னு பல இடங்களிலே இருந்தும் இங்கே வந்து தெற்குத்தீவோடதென்கோடிக்குப் போய் கூடியிருக்காங்க ஜனங்க.
எதுக்காம்?
எல்லாம் 'ஸீல்' மிருகங்களைக் கொன்னு, தோலை உரிச்சுக்கிட்டுப் போறதுக்கு. பாவம். ஒரோரு சீஸனுக்கும்சுமார் 14000, கொஞ்சநஞ்சமில்லை பதிநாலாயிரம் மிருகங்களைக் கொன்னுருக்காங்க. அந்தத் தோலையெல்லாம்ச்சீனா, அமெரிக்கா, இங்கிலாந்துன்னு அனுப்பியிருக்காங்க. தலைக்க்குத் தொப்பி செய்யறதுக்கு. அடக் கடவுளே!
இது ஒருவருஷம் ரெண்டுவருஷமில்லை, சுமார் 20 வருஷம் இப்படி நடந்துருக்கு. இதனாலே 'ஸீல்'களோடஎண்ணிக்கை ரொம்பவே பாதிக்கப்பட்டுச்சு. 1810லே இந்தத் தொப்பிங்க அதாங்க 'ஸீல் தோல் தொப்பி'ங்க ஃபேஷன்மாறிடுச்சாம். தப்பிச்சதுங்க இந்த மிருகங்கள். இல்லேன்னா இப்ப நாம, இப்படி ஒரு மிருகம் அந்தக் காலத்துலேஇருந்துச்சுன்னு யாராவது சொன்னாலும் நம்பியிருக்கமாட்டோம்லெ.
கஷ்டகாலம் இந்த 'சீல்'களுக்கு மட்டுமில்லே, திமிங்கிலங்களுக்கும்தான். இப்படித் திமிங்கில வேட்டைக்கு வர்றஆளுங்க இங்கே நியூஸிக்கும் ஒரு விஸிட் அடிக்கறது எதுக்குன்னா, சாப்பாட்டுச் சாமான்கள், குடிக்கத் தண்ணீர்,கடல்வேட்டைக்கு மாத்து ஆட்களை எடுக்கன்னு. ஒரே குழு எத்தனைநாள்தான் குளுருலே கடல்லே கஷ்டப்படும்?
அப்ப இந்த வேட்டைக்காரங்களோட சில மவோரி ஆட்களும் போகத் துவங்கினாங்களாம். அவுங்களோட நாட்டமெல்லாம்ஸ்பெர்ம் வேல்ஸ்(Cachalot - Sperm Whales)தானாம். 1820க்கு அப்புறம் இங்கேயே ஸ்டேஷன்கள் அமைச்சுக்கிட்டு(ச்சின்னக்கிராமம்மாதிரி )தங்கிக்கிட்டு ஸ்ட்ராங்காக் கட்டுன ச்சின்னச்சின்னப் படகுகளிலே போய் இந்த வேட்டையைத்தொடர்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க.
மே மாசம் முதல் அக்டோபர்வரை உள்ள காலங்களிலே பெண் திமிங்கிலங்கள் குட்டியை ஈன்றெடுக்க கொஞ்சம்கரையோரமா வருமாம். அப்ப இந்த ஆளுங்க அந்தக் குட்டிகளைக் கொன்னுருவாங்களாம்.( அய்யோ, அப்பத்தான் பொறந்தபிஞ்சுங்க. அடப்பாவிகளா...) இறந்த குட்டியைவிட்டுப் பிரிய மனமில்லாம அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கறஅம்மாங்களையும் சுலபமாக் கொன்னுரலாமாம். இந்தக் கொழுப்பை வச்சு ஐரோப்பாலெ விளக்கெரிப்பாங்களாம்.இந்தத்திமிங்கிலத்தின் குடலுக்குள்ளெ ஆம்பெர்க்ரிஸ்( Ambergris)ன்னு மெழுகுபோல ஒண்ணு இருக்குமாம். இதைவச்சு வாசனை திரவியம் தயாரிப்பாங்களாம்.( இதுதான் ஒண்ணும் புரியலை. குடலே நாத்தம், அதுலெ இருந்து வாசனையா?)திமிங்கில எலும்புங்களை வச்சு, குடைகம்பி,பெண்களோட உள்ளாடைகளுக்கு கம்பின்னு ஜமாய்ச்சிருக்காங்க.
சீஸன் முடிஞ்சதும் ச்சும்மா இருக்கற நேரங்களிலே ச்சின்னச்சின்னதா பயிர்பச்சைன்னு விளைச்சல் பண்ணிக்கிட்டுக்காலம் கடத்தியிருக்காங்க. இந்தமாதிரிக் கணக்குவழக்கில்லாமத் திமிங்கிலங்களைக் கொன்னு குவிச்சு, திமிங்கலங்களின்எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சு போச்சு. அதுங்களும் கரையோரமா வர்றதை நிப்பாட்டிக்கிச்சுங்க. அப்படியே கொஞ்சம்கொஞ்சமா இந்த வேலிங் ஸ்டேஷன்களும் ஒழிஞ்சுபோச்சாம்.
இது இப்படி இருக்கக்கொள்ள,1815லெ இருந்து இங்கத்து ஃப்ளாக்ஸ் (Flax)செடிங்களைக் கொண்டு போறதுக்குன்னு கப்பலுங்கவர ஆரம்பிச்சதாம். நியூஸிலாந்து ஃப்ளாக்ஸ் நல்ல தரமானதா இருந்ததாலே பயங்கர வருமானமாம். இதை வச்சுகயிறு திரிச்சுக்கிட்டு இருந்தாங்களாம்.
மவோரிப் பெண்கள் இந்த ஃப்ளாக்ஸ் வச்சு நல்லா முடைவாங்கதானே. அவுங்களை வச்சே இந்த ஃப்ளாக்ஸ் ஓலைகளைசுத்தப்படுத்திக்கிட்டு இருந்தாங்களாம். கடல் சிப்பிங்களை வச்சு இந்த ஓலைகளைச் சுரண்டி, மிருதுவான பகுதிங்களைஎடுக்கணுமாம். அந்தக் காலத்துலெ ஏது கத்தியெல்லாம்? இப்படிக் கையாலெ சுரண்டிச்சுரண்டி நார் பிரிக்க நெடுநேரமாகுமுல்லே.அதனாலே, குறிச்ச நேரத்துக்கு கப்பலை நிறைக்கமுடியாமக் கஷ்டமாயிருச்சாம். அவ்வளொ ஆர்டர்களாம்! சப்ளைசெய்ய முடியாம இந்த வியாபாரம் படுத்துருச்சாம். எல்லாம் ஒரு 16 வருஷம் நடந்துருக்கு. அதுக்கப்புறம் இந்தவியாபாரிகள் ஃபிலிப்பைன்ஸ்லே இருந்து ஃப்ளாக்ஸ் வாங்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இத்தோட போச்சா? இல்லையே!
பிரிட்டிஷ் கடற்படைக்கு சீரான கனத்துலே, வளைவு நெளிவு இல்லாத நீண்ட மரத்தடி வேணுமாம். எதுக்காம்?கொடிமரம், பாய்மரக்கப்பல்லே பாய்கட்டன்னு பல வேலைகளுக்கு இந்த நியூஸியிலே இருக்கற மரங்களானகவுரி ( Kauri), கஹிகடீயா( Kahikatea) வெல்லாம் ரொம்ப உத்தமமாம். இதுக்கு முன்னாலே எப்படிக் கப்பல் கட்டிக்கிட்டு இருந்தாங்களாம்? ஒரு நாட்டைச் சுரண்டறதுக்கு வெள்ளைக்காரங்களுக்குச் சொல்லியாத் தரணும்? கில்லாடிங்களாச்சே!
இங்கே ஹோகியாங்கா( Hokianga)ன்ற இடத்துலே( இது ஒரு ச்சின்னத்துறைமுகம்)யும், தேம்ஸ் ( பேர்ப் பஞ்சம்தான்)என்ற இடத்துலேயும்மரம் வெட்டுற மில்லுங்களைக் கட்டிக்கிட்டாங்க. அப்பத்தானே வெட்டுன மரங்களைச் சுலபமா தண்ணிலே மிதக்கவுட்டேமில்வரை கொண்டுவரலாம்.
எல்லா வியாபாரிகளுக்கும் சாப்பாடும், குடிதண்ணீரும் தேவை தானே? அதனாலே மவோரிங்ககிட்டே பண்டமாற்றுமுறையிலே கொஞ்சம் கொடுக்கல்வாங்கல் நடந்துக்கிட்டு இருந்தது. வெள்ளைக்காரங்களை 'பாகியா (Pakeha)'ன்னு சொல்லஆரம்பிச்சாங்க. பண்டமாற்றுலே முக்கிய இடம் உருளைக்கிழங்குக்கும் பன்றிகளுக்கும்தான்.அதுக்கடுத்தபடி டிமாண்ட்பாய்களுக்கும், மவொரி கார்விங் செதுக்குச் சிற்பங்களுக்கும், பாடம்பண்ணமாதிரி இருந்த சுருங்கிப்போன மனுஷத்தலைகளுக்கும்! (ஐய்யய்யோ) இது பாகியாங்களுக்கு. மவோரிங்களுக்குத் தேவை, ஆணிகள்,கோடாரி, துப்பாக்கி,குளுருக்குப் போத்திக்கக் கம்பளிப் போர்வைங்க.
இதுலேகூடப்பாருங்க, துப்பாக்கி ரொம்பத் தேவையாம். ஏன்னா, துப்பாக்கி வச்சிருக்கற மவொரிக் குழுவுக்கு மதிப்பு ஜாஸ்தியாம்.ஹொங்கி ஹிகா ( Honki Hika a Ngapuhi Tribe Chief)தான் முதல்முதலா துப்பாக்கிவச்சு சண்டைபோட்ட தலைவராம்.உடனே மத்த குழுக்கள் எல்லாம், 'இனி துப்பாக்கி இல்லாட்டா பொழைக்கறதே கஷ்டம்'ன்ற நிலைக்கு வந்துட்டாங்களாம்.
ஒரு துப்பாக்கிக்கு என்ன விலையாம்? 25 சாக்கு உருளைக்கிழங்கு!
இந்த ஹொங்கி ஹிகா 1820லே தாமஸ் கெண்டல்( Thomas Kendall) ஒரு மிஷனரிகூட இங்கிலாந்து போயிருக்கார்.அங்கே போய் மவொரி டிக்ஷ்ணரி உருவாக்க உதவியா இருந்தாராம். ஆங்கிலேயர்களுக்கு இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சாம்.அநேகவிதமான பரிசுப்பொருட்களைக் கொடுத்தாங்களாம். திரும்பிவர்றதுக்கு முன்னாலே அதையெல்லாம் அங்கேயே வித்துட்டு,அங்கிருந்து 300 துப்பாக்கிகளை வாங்கிக்கிட்டு வந்தாராம். அதைவச்சு, அவரோட பழைய எதிரிகளையெல்லாம்தேம்ஸ்-வைக்காட்டோ பகுதியிலே கொன்னுதீர்த்தாராம். கொல்றதே வேலையாப் போச்சு போலெ.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Friday, November 18, 2005
நியூஸிலாந்து பகுதி 27
Posted by துளசி கோபால் at 11/18/2005 02:27:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இதே மாதிரி தான் இந்த ஊர் பக்கம், beaver ங்கிற உடும்பு மாதிரி இருந்த மிருகத்தை வேட்டையாடி 'Fur trade'ன்னு பெரிய வர்த்தகம் பண்ணியிருக்காங்க இந்த பிரிட்டீஸ்காரங்க. (இந்த FURங்கிறது, வெள்ளகார சீமாட்டிங்க போட்டுகிறா அழகான கவுன்லருந்து, தொப்பி வரைக்கும் போட்டுகிற சாமான்) வட அமெரிக்கா கண்டுபிடிச்ச ஆரம்பத்தில இந்த யாவரம் பண்ண தான் அவங்கே வந்ததே, நம்ம ஊருக்கு கிழக்கிந்தய கம்பெனி மாதிரி, இந்த ஊருக்கு BAY கம்பனி, அதாவது Hudson Bay வழியா வந்து போனதால இந்த பேரு.
அடடா! என்ன வருத்தமா இருக்கு.........எல்லாப் பயகளும் அடுத்த நாடுகளுக்குப் போயி நல்லா கொள்ளையடிச்சிருக்கானுகன்னு தெரியுது.......
டீச்சர், என்னோட பிரண்டு கிட்ட பாம்புத் தோல் பர்ஸ் இருக்கு டீச்சர். எனக்கு அந்த சீல் தோல்ல கெடைக்குமா டீச்சர்? (ஐயோ...அடிக்காதீங்க டீச்சர். அடிக்காதீங்க. முதுகுத் தோல் உரியுது டீச்சர்.)
உதயகுமார்,
இப்படி யாவாரம் பண்ணறேன்னு வந்துதானே எல்லா நாட்டையும் புடிச்சிருக்காங்க.
கில்லாடிங்கப்பா!
ராகவன்,
மனுசத்தோல் பர்ஸ் நல்லா இருக்குமா? ஒன்னு செஞ்சுபார்த்துரலாமா உரியற தோலை வச்சு? :-)
// மனுசத்தோல் பர்ஸ் நல்லா இருக்குமா? ஒன்னு செஞ்சுபார்த்துரலாமா உரியற தோலை வச்சு? :-) //
டீச்சர் மனுசத் தோல் எதுக்குமாகாதுன்னு நீங்கதான சொன்னீங்க. மறந்துட்டீங்களா!
இப்படி யாவாரம் பண்ணறேன்னு வந்துதானே எல்லா நாட்டையும் புடிச்சிருக்காங்க."// -
- அந்தக் கோபத்திலதாங்க இப்படி எழுதினேன். ஆனா வேற யாருக்கும் இந்தக் கோபம் இல்லைங்கிற மாதிரிதான் தெரியுது!
Post a Comment