Tuesday, November 29, 2005

இதைக் கொஞ்சம் கவனியுங்களேன்.

ஸ்ட்ரெஸ் ரொம்ப ஆகுற காலமாம். இன்னும் ஒரு சில வாரம்தான் இருக்காம். பண்டிகை நல்லபடியாநடக்கணும். வாங்கறதெல்லாம் வாங்கிறணும். என்ன பரிசுப் பொருள் கொடுக்கணும் இப்படியெல்லாம் மனசைப்போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்கறவங்களுக்குன்னே இந்த உதவிக் குறிப்புகள்.



நேருக்கு நேர்.
***************
தைரியமா ட்ராகனைப் பார்க்கணும்:-))))) ????
ஒரு நண்பர்கிட்டேயோ, ஒரு கவுன்சிலர்கிட்டேயோ இதைப் பத்திப் பேசலாம். நாமே நினைச்சுக் குழப்பிக்கறதைவிட அவுங்களை விட்டுக் குழப்பச் சொன்னா எதாவது ஒரு நல்ல முடிவு வேற ஒருகண்ணொட்டத்திலே கிடைக்கலாம். மனசுக்குள்ளெயே போட்டுக் கொதிக்கிறப்ப உங்க அட்ரினலீன்ரொம்பச் சுரந்து நீங்களும் கொதிக்க ஆரம்பிச்சுருவீங்க.


காஃபி & டீக்கு 'ச்சீ போ' சொல்லலாம்:-)
****************************************
காஃபிலே இருக்கற கேஃபைன் நம்ம உடம்புலே முழுசும் ஓடி முடிக்க அஞ்சுமணி நேரம் ஆகுமாம்.காலையிலே மொதக் கப்பு காஃபி 6 மணிக்குக் குடிச்சுட்டு நாளை ஆரம்பிக்கிறிங்க. கடைசிக் கப்புராத்திரி 11 மணிக்குன்னு வச்சிக்கிட்டா கேஃபைன் உங்க உடம்புலே இருந்து ஒழியவே ஒழியாது.டீ, காஃபிலே மட்டுமில்லாம இது சாக்கலேட், குளிர்பானங்கள் இவைகளிலேயும் இருக்கறதாலேஅது இங்க ரத்த அழுத்தத்தைக் கூட்டிவிட்டுருமாம். அப்புறம் என்ன? 'தீ மிதிச்ச குரங்கு'தான்.இது உங்க அட்ரினலீன் தேவையான அளவுலே சுரக்கறதியும் பாதுக்குமாம்(-:


அதுக்காக காஃபியை விட்டுற முடியுதா? அளவோட ஒன்னு, ரெண்டோட நிறுத்திக்கணும்.


நட, ஓடு......ராத்தூக்கம்
***********************
குழப்பம் கூடக்கூட மன அழுத்தம் கூடிப்போய் ராத்தூக்கம் போயிரும். இப்ப என்னா செய்யலாம்?உடற்பயிற்சி. நடங்க நடங்க. தினமும் நடங்க. முடிஞ்சா ஓடுனாலும் தப்புல்லே. உடற்பயிற்சியைவிடாமச் செஞ்சா கொஞ்சம் தப்பிச்சுரலாம்.


சரியான சாப்பாடு
*******************
கவலையா இருக்கேன்னு சாப்பிடாம இருந்துராதீங்க. ரத்தத்துலே சக்கரை அளவு 'டக்'ன்னு குறைஞ்சுபோய்அதனாலே பல சிக்கல்கள் வந்துரும். மன அழுத்தமா இருக்கறப்ப இந்த ப்ளட் க்ளுக்கோஸ் ஏறி இறங்கி இன்னும்மோசமாப்போகும். இதை ஈடுகட்டறென்னுட்டு, ஹை எனர்ஜி ஜங்க் ஃபுட் சாப்பிட்டீங்கன்னா கதை கந்தலாயிரும்.பழங்கள், காய்கறிகள்,காட்டேஜ் ச்சீஸ், தயிர், ஹை ஃபைபர் தானியங்களாலே ஆனா சிரியல்ன்னு சாப்பிடுங்க.


குடி...... பார்த்துக் குடி
**********************
உற்சாக பானமுன்னு நினைச்சுக்கிட்டு நீங்க குடிக்கிற ஆல்கஹால் குடிவகைகள் உண்மைக்குமே உற்சாகம் தராது.இன்னும் நரம்புத்தளர்ச்சியைக் கிளப்பி விட்டுரும். அதாலே கவனமா 'அளவோடொ' குடிக்கணும். புரிஞ்சதா?


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.....
******************************************

( மறந்த பாட்டை நினைவுபடுத்திய டிபிஆர்ஜோவுக்கு நன்றி)வளர்ந்த மனுஷனுக்கு எட்டுமணி நேர உறக்கம் அவசியம், ஆனா சிலருக்குத்தான் ஏழுமணி நேர உறக்கம் கிடைக்குது.நல்ல தூக்கம்தான் நம்ம உடம்பை ரீ சார்ஜ் செய்யற பேட்டரி. ராத்திரியிலே வயிறு முட்டச் சாப்பாடு, கூடவே குடின்னுஇருந்தா தூக்கம் போயே போச்! ராத்திரி சூடா ஒரு டம்ளர் பால் குடிச்சா, அதுலே இருக்கற அமினோ ஆசிட் மூளையை(!)சாந்தப்படுத்தி தூக்கம் வரவைக்கும். மறந்துராதீங்க.



அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ்.....
*********************************
செஞ்சுரலாமே. அதுலே என்ன கஷ்டம்? ஒரு யோகா, ஒரு டய் சி( tai chi)ன்னு எதாவது செய்யக் கத்துக்குங்க.( நாம் இந்தியர்கள் என்ற படியாலே இந்த யோகா எல்லாம் அத்துபடின்னு இங்கே நினைச்சுக்கிட்டு இருக்காங்க!)நாம அப்படியே ரிலாக்ஸ் செய்யறப்ப நம்ம உடம்பு கார்ட்டிஸால்(cortisol ) அதிகமா சுரக்கறதை நிறுத்திருமாம்.அதனாலே நம்ம இம்யூன் சிஸ்டம் நல்லா வேலை செஞ்சு தொற்று வராமப் பார்த்துக்குமாம். மனசே மட்டுமில்லை,உடம்பும் ரிலாக்ஸ் ப்ளீஸ்!


மசாஜ்...மஜா தான்.
*********************


நல்ல அருமையான வாசனை எண்ணெயை எடுத்துக்கிட்டு அப்படியே உடம்புலே தடவிக்கிட்டு மணமா ஒரு மசாஜ்செஞ்சுக்கிட்டீங்கன்னா அப்படியே அடங்கிரும் மனசு, உடம்பு எல்லாம். தசைகளிலெ இருக்கற முடிச்சை எல்லாம்இது 'அவுத்துருமாமே'! நமக்காகவே கொஞ்சம் நேரம் ஒதுக்கிக்கிட்டு இதையெல்லாம் செஞ்சோமுன்னா புதிய நம்மை நாமே காணலாம்.


கண்டகண்ட பார்லர்களிலே நடக்கற 'வேற' மாதிரி மசாஜ்க்குப் போயிடாதீங்க. அதுலே டென்ஷந்தான் ஜாஸ்தியாயிருமாம்.ஜாக்கிரதை. சனியனை என்னாத்துக்கு விலை கொடுத்து வாங்குவானேன்?


ஆமா, இதெல்லாம் இப்ப எதுக்குச் சொல்றேன்னு புரியுதா? கிறிஸ்மஸ் பண்டிகை வருதுல்லையா, அதனாலேஜனங்களுக்கு ரொம்ப மன அழுத்தம் வந்து கஷ்டம் ஆயிருதாம். இதுலே இருந்து நம்மைக் 'காப்பாத்திக்க'Susan Erasmus ன்றவங்க கொடுத்த குறிப்புங்கதான் இதெல்லாம்!


இங்கே பண்டிகைக்குப் புதுத்துணி போடற வழக்கமெல்லாம் இல்லை. 'சீர் செனத்தி'ன்னும் கொடுக்கவேணாம்.


இவுங்களுக்கே இப்படின்னா, சென்னை சில்க்ஸ், குமரன், தங்கமாளிகை, கஜானான்னு ஊர் முழுக்கக் கடைகள்இருக்கற நம்ம ஆட்களுக்கு எப்படி இருக்கும்?


இந்த மசாஜ்,கிசாஜ் எல்லாம் கோபாலுக்குச் செஞ்சுரணும். மனுஷன் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேணாம்? என்னமோ அம்பதாயிரம் கலருலே புடவை வந்துருக்காமே?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

8 comments:

said...

கோபால் அங்கிள் - இங்கே ஓடியாந்திருங்க! :O)

said...

\\என்னமோ அம்பதாயிரம் கலருலே புடவை வந்துருக்காமே?\\

ean ungaluku theriyatha?? Jothika en kalyanthuku entha colour pudavai kadurathu endu kedukondu varuvave neenga parkalaya?

neenga sona ellam visayumum nalla visayangal ana follow panrathuthan kastam.

\\அதுக்காக காஃபியை விட்டுற முடியுதா? அளவோட ஒன்னு, ரெண்டோட நிறுத்திக்கணும்.\\
hmm 2 or 3 oda நிறுத்திக்கணும்:-)

said...

Why have u changed your background? I Liked the Kitten better than "photobucket"!! ;O)

said...

டீச்சர், நீங்க சொல்றதெல்லாம் உண்மதான்.

அப்புறம் அந்த அம்பதாயிரம் கலர் சேலையை ஆரெம்கேவில பாத்தேன். நல்லாருந்தது. ஆனா அதோட வெலையக் கேட்டா டீச்சர் சாருக்கு டென்ஷன் எகிறிருமே!

said...

ராகவன்,

இந்த வயசுலே போய் அந்தப் புடவையெல்லாம் வேணுமா?

ச்சும்மா தலைவருக்கு ப்ளட் ப்ரெஷர் ஏறுதான்னு பார்க்கத்தான்:-))))

said...

என்ன டீச்சர் இப்படிச் சொல்லீட்டீங்க.....அந்தப் புடவைய நீங்க கட்டுனா....அந்தப் புடவைக்கே ஒரு மதிப்பு வந்துராதா?

said...

மறந்த பாட்டை நினைவுபடுத்திய டிபிஆர்ஜோவுக்கு நன்றி)//

ஹா, ஹா.என் பேரை பதிவில உபயோகிச்ச முதல் ஆள் நீங்கதான். அதுக்கு முதல் தாங்க்ஸ்.

அப்புறம் 'Susan Erasmus' சொன்ன குறிப்பாயிருந்தாலும் இடை இடையில உங்க கமென்ட்சையும் (அதாங்க சூப்பர்) சேத்து ஒரு 'ஃபுல்' (தப்பா நினைச்சிக்காதீங்க 'அந்த' 'ஃபுல்' இல்ல) மீல்ஸ் சாப்டா மாதிரியிருக்கு.
உங்க குறிப்புகள் அத்தனையும் என்ன மாதிரி டென்ஷன் ஜாப்ல இருக்கறவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.

அப்புறம் அந்த 50000 கலர் புடவையெல்லாம் ஜோதிகா மாதிரி கறுப்பு பணம் இருக்கறவங்களுக்கு. நாம வேணா தொட்டு பாத்துக்கலாம்.

said...

டிபிஆர் ஜோசஃப்,

நன்றி. ஆமா, இப்பெல்லாம் பணம் கறுப்புக் கலருலே அச்சடிச்சுவருதா? :-)))

நீங்க பேங்க் ஆளு. உங்களுக்குத் தெரியாததா? :-)