Sunday, January 03, 2010

பயbபிராந்தியால் விஸ்கி விஸ்கி அழுதா எப்படி?

'சொய்ங்'ன்னு 'தோசையின் ஓசை'யும் , 'ட்ரிங் ட்ரிங்'ன்னு தொலைபேசியின் ஒலியும் ஒரே சமயத்தில். எதை முதலில் கவனிக்கணுமுன்னு ஒரு .0001 விநாடி 'யோசிச்சு (ஃபயர் எஞ்ஜினுக்கு மாடி ஏறிவர முடியுமோ?) சட்டுவத்தை ஒரு கையிலும் கார்டுலெஸ்ஸை மறுகையிலுமா பிரச்சனையைத் தீர்த்தேன்.

நானூறு பதிவைக் காணோ(மா)ம்!!! குரல் தழுதழுத்து ஒரே அழுவாச்சிக் காவியமாப் போச்சு. யார் திருடிட்டாங்க? என்னடா பதிவுக்கு வந்த சோதனை? எல்லாம் இருக்கும் கவலைப்படாதீங்க. தோ...போய் பார்க்கிறேன். சமீபத்துலேகூட ரெண்டு மூணுபேர்களோட தளத்தைத் திருடிட்டாங்கன்னு சேதிவந்து லபோதிபோன்னு அடிச்சுக்கிட்டு அதுக்கு முன்னெச்சரிக்கையா என்ன செய்யலாமுன்னு கேட்டு, 'பேக்கப்' வச்சுக்கோ. செட்டிங்ஸ்க்குப் போய் ப்ளாகை இறக்கிவச்சுக்கோ ன்னு சொன்னதைக் கடைப்பிடிக்க அங்கே ஓடி, (அடுப்பிலிருந்து) 'இறக்க முடியாம' அவஸ்தைப் பட்டதெல்லாம் மூளையில் ஓடி மறைஞ்சது.

கரையண்டா.....கரையாதே கேட்டோ....பொம்மனாட்டிகள் கரஞ்சால் எனக்காகாது கேட்டோ........ (ஐயோ...இது ஒன்னு, வேளைகெட்ட வேளையில்)

"இதுவரை எழுதுனதெல்லாம் 'ஸேவ்' பண்ணி வச்சுருக்கீங்கல்லே? "

"இருக்குன்னு நினைக்கிறேன்"(போச்சுரா?) அடுத்துவந்ததுதான் எனக்கு ஒரே ஷாக். "என்னமாவது ஆட்டும். நான் போய் கொஞ்சநேரம் படுத்துக்கப்போறேன்"

ஹாஆஆஆஆ ஹௌ cகுட் யூ??????

இதுக்குள்ளே நம்மாளு பதறிப்போய், வைரஸா இருக்கும் நியூ இயருக்கு வைரஸ் விட்டுருப்பானுங்க. (பட்டாசா என்ன, பண்டிகைக்கு விட?) உன்னது என்னாச்சோ......உள்ளே ஓடறார்.

"அங்கே என்னோடதைத் தொடாதீங்க...." அலறல்

"நான் உன்னதை என்னோடதில் பார்க்கிறேன்"

'பார்த்தா......? என்ன தெரியுமாம்? என்னோட விசாரம்!

தோசையை அவசரவசரமாத் தொட்டுக்கக்கூட இல்லாமப் பிச்சு வாயிலே போட்டுக்கிட்டு கணினிக்கு ஓடுனேன். ஸோ & ஸோவின் பக்கத்தைத் திறந்தால் எல்லாமே சமர்த்தா லோடு ஆகுது. ஆர்க்கைவ்ஸ் விவரம் வாரக் கணக்கு. அது அனுமார் வால்போல நீளமாக் கிடக்கு. இதுலே எந்த 400 ஐக் காணோம்?

ராண்டமா அங்கங்கே க்ளிக்குனா வந்துக்கிட்டுத்தான் இருக்கு. கண்டேன் சீதையை'' மாதிரி ரெண்டே சொற்களில் 'எல்லாமே இருக்கு' ன்னு அழுவாச்சியை ஃபோனில் கூப்பிட்டுச் சொன்னேன்'

"இல்லேப்பா. நானூறு பதிவுகள் காணாமப்போயிருக்கு. 889 லே இப்போ 489தான் இருக்குன்னு சொல்லுது"

அடுத்த ஷாக் எனக்கு. என்ன எண்ணூத்தி............ எம்பத்தி........................ஒம்போதா.....................................?

சரி. அழுகையை நிறுத்துங்க. ஒவ்வொன்னாச் செக் பண்ணலாம். 889ன்னு எப்படித் தெரியும்?

"டாஷ் போர்டுலே வருதே"

"ஓக்கே. இப்ப அந்த டேஷ் போர்ட் பக்கத்தைத் திறந்துவையுங்க. இப்போ என்ன சொல்லுது?

"489. அதான் 'அப்போருந்து' சொல்றேனே 400ஐக் காணோமுன்னு....."

"எடிட் போஸ்ட்லே போய் ஆரம்பகாலத்து போஸ்ட் பேர் என்ன இருக்கு பாருங்க. ஸ்ரீ கோதா ஆஃப் ஸ்ரீவில்லிபுத்தூர்...(இங்கிலிபீஸு) இருக்கா?"

"இருக்கு."

கடைசியாப் போட்டது 'சென்னையில் பசுமை தேடி' இருக்கா?

"இருக்கே! நடுவிலேதான் நானூறைக் காணோம்!"

"சரி, அழுகையை நிறுத்திட்டு, நான் சொல்லச் சொல்ல, இருக்கான்னு சொல்லுங்கோ"

"இருக்கா?"

" இருக்கு"

சின்னப்பசங்க விளையாட்டில் ரைட்டா ரைட்டு ன்னு விளையாடுவோம். தப்பா இருந்தா அது கொய்ட்டு! ரைட்டுக்கு எதிர்ப்பதம்!

அது எந்த நானூறு................ தலையைப் பிச்சுக்கிட்டுத் தேடினேன். சிலதில் தலைப்புக்கு முன்னால் 183, 190, 243 ன்னு நம்பர்ஸ். அதை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணி இருந்துருந்தா இந்தத் தொந்திரவே இருக்காது. மறுபடி க்ளிக்கிக் கிளிக்கித் தேடிக்கிட்டே இருக்கேன்.

" எடிட் போஸ்ட்லே வரிவரியா பதிவின் (சரியாச் சொன்னா இடுகை.ஆனா பழக்கதோஷம்) தலைப்பு, அடுத்த காலத்தில் தேதி வருதுல்லே. அதைக் கீழே இருந்துக் பார்த்துக்கிட்டே வாங்க. தேதிகளுக்கிடையில் நீண்ட கேப் வருதா? "

" அதெல்லாம் இல்லை. நானூறைக் காணோம்."

"போச்சுடா...... ஷ்யூராத் தெரியுமா? 889? "

"ஆமாம். நேத்துக்கூடப் பார்த்தேன். 889தான். அதுலேதான் நானூறைக் காணோம். அதைத்தானே அப்போலே இருந்து சொல்றேன் பெருமாளே காப்பாத்து....."

ஒரு க கை நா இன்னொரு க கை நாவுக்குப் புரியவைப்பதில் உள்ள சிரமத்தை எழுதுனா அது அந்த ஆர்க்கைவ்ஸாட்டம், ராவணன் தர்பாரில் அனுமார் வால்...........

"முதல்லே இந்த ஆர்கைவ்ஸ் வாரப்பட்டியலை மாத்துங்கோ. மாசப்பட்டியலா வச்சா, அட்லீஸ்ட் பார்க்க ஈஸியா இருக்கும். "

"அப்படித்தான் இருந்தது. நாந்தான் வாரமாக்கினேன்" (என்னே ஒரு பெருமிதம்!!!!!)

திரும்பத் திரும்ப மண்டையில் ஓடுது அந்த 889. அட! ஆமாம். எப்படி?
நெசமாவா?

"அது 889தான். ஐநூறு கூட வந்ததே ."

பிடிகிடைச்சமாதிரி இருக்கு எனக்கு.

"அப்போ அந்த ஐநூறாவது பதிவுன்னு எழுதுனீங்களா?

"இல்லேப்பா. எல்லோரும்தான் ஐநூறு ஆயிரமுன்னு போடறா. நான் பேசாம இருந்துட்டேன்"

"இப்போ மாசாமாசம் எத்தனை பதிவு போடறீங்க? ஏழெட்டு? "

"நோ நோ. பத்துப் பதினைஞ்சு"

" அப்ப அந்த ஐநூறு வந்தப்பக் குறிப்பிடவே இல்லையா? "

"அதெப்படி அது ஒரு அச்சீவ்மெண்ட் ஆச்சே. கடசியில் ஒரு வரி எழுதி இருப்பேன். "
(அப்படிப் போட்டது நானில்லையோ!!!)

"அது என்ன பதிவு? எப்போன்னு ஞாபகம் இருக்கா? "

"பேர் ஞாபகம் இல்லை. ஆனா போன வருசம் ஆரம்பத்திலே"

ஆஆஆப்ப்டுடுத்து

ஜனவரின்னே வச்சுக்கிட்டாலும் இன்னிக்குத் தேதிக்கு ஒரு வருசம் .அப்ப 389 பதிவு இந்த வருசத்துலே எழுதி இருக்கணும். தினத்துக்கு ஒன்னு! அப்படியும் மிச்சம் வரும்.

லாஜிக்காலே ..... அடிக்கணும்.

"தினமுமா பதிவு போட்டீங்க? "

"அதெப்படி முடியும்? வேற வேலை இல்லையா?"

"போகட்டும். பதிவெழுத ஆரம்பிச்சுச் சரியா 45 மாசம் ஆகுது. மாசம் பத்துன்னாலும் 450. ஆர்வக்கோளாறில் கூடுதலா 39 . நடுவிலே உடம்பு சரியில்லை, ஊருக்குப் போயிருக்கேன்னு எத்தனை இடைவெளிகள்! அப்ப ப்ளொக்கர் சொல்லும் 489தான் சரி. "

"ஒருவேளை கண்ணாடியை மாத்தணுமோ? எல்லாம் என்னவோ ரெண்ட்ரெண்டாத் தெரியறது! பயந்துட்டேன். என்னவேணா ஆகட்டும். நான்போய் படுத்துக்கப்போறேன்."

என்னது ரெண்டு ரெண்டா? அப்ப அந்த நாலு மட்டும் ரெண்டு நாலாத் தெரியாம, ரெண்டாலே பெருக்கிக்கிட்டுத் தெரியுதா................. அட ராமா. நாலுக்குப் பக்கத்துலே தெரிஞ்சுருந்தா என்னா கதி! 4489..................நாலாயிரம் பதிவைக் காணோமுன்னு ............ பிரபந்தமா என்ன? .பெருமாளே நீ என்னக் காப்பாத்திட்டே.!!!

"ஒன்னும் காணாமப்போகலை. எல்லாம் அப்படியே இருக்கு. பயப் பிராந்தியிலே விஸ்கி விஸ்கி அழாம போய் தாச்சுக்குங்கோ. "

47 comments:

said...

:)

said...

ஹைய்யொ ஹைய்யொ. தொலைக்கற மாதிரி தொலைக்காமலயெ அழுதவங்களை இப்பத்தான் பார்க்கிறேன்.
இப்படியெல்லாம் ஒரு நண்பி இருந்து அழுகாச்சி காண்பித்தா,
கைக்கு வந்த தோசை வாய்க்குப் போகாமத் தடுத்த பாவம் அவங்களுக்குப் போகாதோ:))
ஹ்ம்ம். 484 பதிவு 848 பதிவாத் தெரிஞ்சுதுன்னா அவங்களுக்குக் கண்ணாடி மாத்தணும்பா.
வெள்ளெழுத்தும் கிட்டப் பார்வையும் கலந்
துடுச்சோ!!
வருஷ ஆரம்பத்திலியே வந்த சோதனை என்ன,.. அதை துளசி மகிமை போக்கின மாயமென்ன. கொடுத்துவச்சவங்க உங்க தோழி:))
பின்னூட்ட நாயகி இப்பப் பதிவு காக்கும் நாயகியான அற்புதமே அற்புதம்.
நன்றிம்மா.
பதிவுலக நண்பர்களே நேறு நடந்த விசுக்கின டிராமா கதாநாயகி அடியேன் தான்.

said...

தாயே..!

எழுத்துப் பிச்சை கேட்கிறேன்.. கொஞ்சூண்டு இங்கிட்டு பாஸ் பண்ணி விடுங்க..!

நானும் கொஞ்சம் பொழைச்சுக்குறேன்..!

said...

"பயbபிராந்தியால் விஸ்கி விஸ்கி அழுதா எப்படி?"//

தலைப்பு படிச்சே சிரிப்பு தாங்கலை :))

said...

//இருக்குன்னு நினைக்கிறேன்"(போச்சுரா?) அடுத்துவந்ததுதான் எனக்கு ஒரே ஷாக். "என்னமாவது ஆட்டும். நான் போய் கொஞ்சநேரம் படுத்துக்கப்போறேன்"//

படுத்துக்கப் போறேன்னு சொன்னதுமே நினைச்சேன் வல்லிதான்னு, வந்து சமத்தா ஒத்துக்கிட்டாங்களே?? :)))))))))

said...

//கடைசியாப் போட்டது 'சென்னையில் பசுமை தேடி' இருக்கா?, ஆர்க்கைவ்ஸ் விவரம் வாரக் கணக்கு//

இந்த இரண்டையும் படிச்ச உடனே வல்லியம்மா ஞாபகம் வந்துச்சி , பின்னூட்டம் பார்த்தா அவங்களே ஒத்துகிட்டாங்க

நல்ல அருமையா உதவி பண்ணி இருக்கீங்க

-LK

said...

அன்பின் துளசி

உடுக்கை இழந்தவள் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

புரூஃவ் பண்ணிட்டீங்க

பாவம் வல்லிம்மா - பரவால்ல - காப்பாத்திட்டீங்க

நல்வாழ்த்துகள் இருவருக்கும்

நகைச்சுவை நல்வாழ்த்துகள்

said...

வாங்க சென்ஷி.

சிரிப்பானுக்கு நன்றியா பதில் சிரிப்பான்:-)

said...

வாங்க வல்லி.

வருஷப்பிறப்பின் ஆரம்பமே தூள்!!!

காணாமப்போனது கிடைக்கும் என்று ராசிபலனில் போட்டுருக்குமே:-))))

said...

வாங்க உண்மைத் தமிழன்.

அச்சச்சோ........ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க போல!

வகுப்பு எடுக்கணுமுன்னு சொன்னது இப்போ இதுக்குன்னு மாத்திக்கலாமா?

கிருஷ்ணர் கதைகளை அப்புறம் பார்த்தால் ஆச்சு:-)

said...

வாங்க மயில்.

உள்ளேயும் படிச்சுட்டு இன்னும் கொஞ்சம் சிரிச்சுட்டும் வாங்க.

said...

வாங்க கீதா.

ஆஹா.... இந்த 'படுத்துக்கப்போறேன்' என்பது வாலாயமான டயலாகா?

தெரியாமப்போச்சே!!!

said...

வாங்க எல் கே.

கிசுகிசுவில் பெயர் எழுதும் வழக்கமில்லையேன்னு விட்டுட்டேன்:-))))

கடைசி வரியில், 'விஸ்கி விஸ்கி அழாதே நாச்சியாரே, போய் தாச்சுக்கோ ' ன்னு முடிக்கலாமான்னு ஒரு யோசனை இருந்தது!

said...

வாங்க சீனா.

க கை நாவுக்கு க கை நா உதவலேன்னா எப்படி? :-))))

said...

//இதுலே எந்த 400 ஐக் காணோம்?//

அக நானூறா அல்லது புற நானூறா ?

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஆஹா....தூள்!!!!
எனக்குத் தோணாமல் போச்சே!

வேற ஒரு சமயத்துக்கு எடுத்து வச்சுக்கிட்டேன்:-)

நன்றியோ நன்றி!

said...

ஹா ஹா ஹா
முடியலை என்னால..
எங்கேயோ போய்ட்டீங்க டீச்சர் :)

said...

//அப்ப ப்ளொக்கர் சொல்லும் 489தான் சரி. "//

அப்ப நிஜமாவே ஐநூறு இல்லியா

said...

//கடைசி வரியில், 'விஸ்கி விஸ்கி அழாதே நாச்சியாரே, போய் தாச்சுக்கோ ' ன்னு முடிக்கலாமான்னு ஒரு யோசனை இருந்தது!//

பாவம் வல்லிம்மா, இப்படியா கலாய்க்கறது :)

said...

:))

said...

டீச்சர், நல்லவேளை... பாதியிலேயே இடுகைகளோட பேரச்சொன்னீங்களோ... காவியத்தலைவி ..வல்லிம்மாதான்னு கண்டுபிடிச்சோமோ..இல்லைன்னா கடைசிவரை சிண்டைபிச்சிக்கிட்டு இருந்திருப்போம்.

said...

:-) தலைப்பு புன்முறுவலை தந்தது

Srini

said...

:)) தலைப்பை பார்த்து அடிச்சு பிடிச்சு வந்தேன். நல்லா கிளப்பினீங்க பீதியை

said...

வாங்க ரிஷான்.

எங்கியும் போகலை. சி.செ.க்குத்தான் வந்துருக்கேன்:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

வருசப்பிறப்பன்னிக்கு வயித்தைக் கலக்க வச்சுட்டாங்கப்பா!!!!

மைல்கல் போட மறக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்:-))))

said...

வாங்க ஜெட்லி.

சிரி சிரி சிரி...

நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கிசுகிசு எழுதும்வேலை 'பிரபல' பத்திரிக்கையில் கிடைக்கும்போல இருக்கு. அதுக்குத்தான்....

said...

வாங்க ஸ்ரீ.

பதிவும் அதே 'முறுகலை' தந்ததா? :-)))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

என்ன ஆளைக் காணோம்? 'கடை'யில் பிஸியா?
'அட! சொல்லவேயில்லை'யில் பாருங்க.

said...

பதிவும் அதே முறுவலை தந்தது :)

- ஸ்ரீனி

said...

எப்படியோ எல்லாருக்கும் ஒரு நகைச்சுவை விருந்து கொடுக்க நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்.

பதிவு எழுதி சிரிக்க வைக்கிறவங்க உண்டு.
பதிவுக்கே காரணமாகறவங்களும் உண்டுன்னு இதனால சகலப் பட்டவங்களுக்கும் தெரிவிக்கிறேன்.
துளசி! இதை ஆயிரத்தைன்னூறு கதைகள் ல சேர்க்காம இப்பவே சொல்லி
என்னை மீண்டும் மீண்டும் சிரிக்க வச்சதுக்கு நன்னி. ஆறு தடவை படிச்சிட்டேன்.
சௌகார் பட்டம் நிரந்தரமா ஒட்டிக்கும் போல இருக்கு:))

said...

நியூ இயர் பார்ட்டி ஓவரா போயிடுத்தா டீச்சர்! ஒரே பிராந்தியும் விஸ்கியுமா விளையாடுது.

பாவம் தோசைக்கு வந்த சோதனை.

said...

நல்ல நகைச்சுவைதான்.

said...

{வாலாயமான டயலாகா? }

வாலாயம்???

said...

:)))))))

கடைசியில கிடைச்சுதே :)))


பதிவு முழுக்க ஹாஸ்யம்... அதுவும் தலைப்பு :))))))

said...

சூப்பர் தலைப்பு :)))

said...

வல்லி,

எல்லோரும் இப்ப 1500 சொல்லிப் பயமுறுத்துனா எப்படி?????

said...

//
எழுத்துப் பிச்சை கேட்கிறேன்.. கொஞ்சூண்டு இங்கிட்டு பாஸ் பண்ணி விடுங்க..!

நானும் கொஞ்சம் பொழைச்சுக்குறேன்..!
//

Ditto Ditto.

said...

வாங்க சிந்து.

பார்ட்டின்னா மேற்படி சமாச்சாரங்கள் இல்லாமலா?

தமிழக அரசு இன்னும் தீவிரமாம். புதுவருசப் பார்ட்டியில் உற்சாகம் குறைஞ்சுருமோன்னு பயந்து ஏகப்பட்ட ஸ்டாக் குவிச்சுவச்சுக்குன்னு தினசரியில் பார்த்தேன். டாஸ்மாக் களைகட்டி இருக்கும்!

said...

வாங்க துபாய்ராஜா.

புதுவருஷ அஜால்குஜால்தான்:-))))

said...

வாங்க அறிவன்.

பழமைபேசியிடம் கேக்கணும்:-)

வாலாயம் = வழக்கம்

said...

வாங்க நான் ஆதவன்.

அதெல்லாம் தேடிக் கண்டுபுடிச்சுருவொம்லே காணாமப் போகாமக் கண்முன்னால் இருந்தாலுமே:-))))

said...

வாங்க கவிநயா.

தலைப்பு மட்டுமா????????

said...

வாங்க ப்ரியா.

பிச்சைக்காரர்களை ஊக்கு விக்க லாமான்னு தெரியலையேப்பா:-)))))

said...

என்ன ஆச்சுப்பா அன்னிக்கு:)
ஏதோ கெட்ட கனவு கண்ட குழந்தை மாதிரி :(
அநியாயத்துக்குச் சிரிச்சேன் மறுபடி.:))))))
நன்றி துளசி.

said...

அன்னிக்கு சுகர் லெவல் குறைஞ்சு பித்தம் ஏறியிருக்கும்:))))

said...

அச்சச்சோ... நிஜமா நான் உங்களோட இந்தப் பதிவை இப்பத்தான் பாக்கறேன் டீச்சர். எதேச்சையா இப்ப எனக்குத் தோணின வார்த்தைகள் உங்களுக்கு சில வருஷம் முன்னாலேயே தோணியிருக்குன்றதுல எனக்கு பெருமை + சந்தோஷம். என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான்.