Friday, January 29, 2010

கோபியர் கொஞ்சிய கோபால கிருஷ்ணா (குஜராத் பயணத்தொடர் 11)

இதென்ன வாழைத்தண்டை இப்படி அடுக்கி வச்சுருக்காங்க? ஓடிப்போய் பார்த்தேன். ஆஹா.... இது கல்வாழைத்தண்டு! பக்கத்துலே ஒரு தட்டு நிறைய கல்ரவா லட்டு. அப்புறம் ஓடோடு இருக்கும் புளியம்பழம், நிலக்கடலைன்னு வியாபாரம். வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கும் கோபிச்சந்தனம்ன்னு சொல்லும் வெள்ளை நிற மண் இங்கேதான் கிடைக்குதாம். திரு மண்!! நம்ம பக்கம் விக்கும் நாமக்கட்டி பளிச்சுன்னு வெள்ளையா இருக்குல்லே? இங்கே இது ஆஃப் ஒயிட்டா இருக்கு. ஊருக்குப் பெயரே கோபி! கோபி தாலாப் (இங்கே வ எல்லாம் ப)

கதை? இருக்கு:-))))

மதுராவிலிருந்து கண்ணன் புறப்பட்டு த்வாரகா நகரை புனர்நிர்மாணித்து (இது அவருடைய முன்னோர்கள் ஆண்ட நாடாம்) அரசாட்சி செய்ய வந்துட்டார். கோகுலத்தில் கண்ணன் பிரிவைத் தாங்காத ஜீவன்கள் கூடவே வந்துட்டாங்க. ஜீவன்னு சொன்னது இந்த மாடுகளையும் சேர்த்துத்தான். அதான் இங்கே இந்தப்பகுதி முழுசும் ஊரே எனக்குத்தான்னு ரைட் ராயலா இடம்புடிச்சு அங்கங்கே ஒய்யாரமாப் படுத்துக்கிட்டு இருக்குதுங்க. அன்னநடை நடக்கறதும் ஆள் வர்றாங்களே ஒதுங்கிப்போகலாமுன்னு இல்லாம உரசிக்கிட்டு வர்றதும் அதிகம். பயணத்தில் வந்த கோபிகைகள் அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்து அதில் குளிக்க இறங்கிட்டாங்க. ஜலக்ரீடைதான் போங்க. அந்த இடம் கோபி gகாட்ன்னு பெயரோடு இருக்கு. எதிரெதிரா பெரிசும் சின்னதுமாப் படித்துறைகள்.

ரொம்பச் சின்ன ஊர்தான். இன்னும் சொன்னால் ரெண்டு மூணு தெருக்கள்தான் இருக்கும். ஆனால் எங்கே பார்த்தாலும் கோபிகாஜி மந்திர், திருப்பதி பாலாஜி மந்திர், ஸ்ரீ கோபி-க்ருஷ்ணா மந்திர்ன்னு ஏகப்பட்ட பெயர்களில் வீட்டுவீட்டுக்கு கோவில்களா இருக்கு! பெண்கள் ச்சும்மா அங்கே ஒரு தட்டு வச்சுக்கிட்டு உக்காந்துருக்காங்க. அன்னாடம் கைசெலவுக்காச்சு!

கோபிகைகள் கட்டிவச்ச 'ஒரிஜனல்' கோயிலுன்னு வேற ஒரு வீட்டிலே(?) எழுதிவச்சுருக்கு. 'இதுதான் இங்கே இருப்பதிலேயே பழைய கோவில். 5000 வருசப் பழசு. இங்கே அசல் கோபிச்சந்தன், கோபி தாலாப் தலப்புராணம் எல்லாம் கிடைக்கும். கோபிகைகளுக்கு காணும் பொருள் எல்லாம் கண்ணனேன்னு இருந்துருக்கும்!

இது இப்படி இருக்க ஊர் மக்களுக்குக் காணும் பொருள் யாவும் கோபியரேன்னு இருப்பதை நிரூபிக்கும் விதமா அங்கங்கே மைல்கற்களாப் பதிச்சுவச்சு அதுக்கெல்லாம் புடவை கட்டி வச்சுருக்காங்க!

பூமியின் இந்தப் பகுதியில் மட்டுமே கிடைக்கும் மண் என்பதற்குச் சான்றா அங்கங்கே சாலை ஓரத்தில் மண்ணைத்தோண்டி வெளியே எடுத்துப்போட்டு வச்சுருக்கு. இன்னும் பலர் தோண்டும் தொழில் பிஸியா இருந்தாங்க. ஒரேதாத் தோண்டிட்டு, தார் ரோடு பிடிமானம் இல்லாம விழப்போகுதோன்னு எனக்கு காப்ரா!

பள்ளிக்கூடப் பிள்ளைகளை சுற்றுலாவுக்குக் கொண்டு போறோமுன்னு த்வாரகாவிலும் சரி, இங்கேயும் சரி ஏகப்பட்ட கூட்டம். எல்லாப் பிள்ளைகளும் இந்துக்கள் என்றால் ஒருவிதத்தில் சரி. ஒருவேளை வேற்று மதப்பிள்ளைகள் படிக்கிறாங்கன்னா அவுங்களையும் கூட்டிவருவாங்களா? அவுங்க பெற்றோர் இப்படிக் கோவில் பார்க்க அனுப்புவாங்களா? அவுங்க இந்த சுற்றுலாவில் பங்கேற்காம இருந்தால் ..... வகுப்புத் தோழர்களுடன் ஜாலியாப் போகும் பயண வாய்ப்பு இழந்துருவாங்கதானே? பள்ளிச்சுற்றுலான்னா கோவில்களை விட்டுட்டுப் பொதுவான இடங்களுக்குக் கொண்டு போகக்கூடாதா? இப்படி ஆயிரம் கேள்வி எனக்கு. சுற்றுலாவுக்கு வந்துருந்த ஒரு பள்ளிக்கூட டீச்சரைப் பார்த்தேன். கேடா மாவட்டப் பள்ளிக்கூடமாம். அவர் பெயர் கிரி ப்ரஜாபதி. ஆங்கிலத்தில் எந்தப்பள்ளி, என்ன பெயர்ன்னு கேட்டதுக்கே கொஞ்சம் பயந்துட்டார். திருதிருன்னு முழிச்சதும் போகட்டுமுன்னு விட்டுட்டேன்.
கோபிகைகள் குளத்தின் படித்துறையில் கோபியரும் கோபன்களும்.

'ஓஹா' துறைமுகத்தை நோக்கிப் போகும் சாலையில் போறோம். வழியெங்கும் டாடாக்காரர்களின் ரசாயனத் தொழிற்சாலைகள். துறைமுகத்தை அடுத்து இந்தியக் கடற்படையின் பிரிவு ஒன்னு. பாகிஸ்தான் பக்கத்துலே இருக்குன்னு ரொம்பவே அலர்ட்டா இயங்குமாம். இந்தப் பக்கம் நீண்ட பாலத்தைக் கடந்தால் கழிமுகமா இருக்கும் பகுதியில் ஒரு மீனவர் குப்பம்(??) மீன்பிடிப் படகுகள் ஏராளமா நிக்குது.
பேட் த்வார்காவுக்குப் போகும் படகுத்துறைக்குப் போகும்போதே பதினொன்னே முக்கால். டிக்கெட்டு எங்கே வாங்கறதுன்னும் தெரியலை. அதுக்கான விவரமும் இல்லை. அடிச்சுப்பிடிச்சு ஓடி அங்கே தயாரா இருந்த படகில் ஏறி உக்கார்ந்தாச்சு. ஆனால் அது கிளம்பும் வழியைத்தான் காணோம். கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டம் சேர்ந்துக்கிட்டு இருக்கு. கீதா சொன்னதுபோல பாலோ தயிரோ மோரோ ஒன்னுமே இதுவரை கண்ணுலேயே தெம்படலை:( ஆபத்துக் கால உதவிக்கான லைஃப் ஜாக்கெட்டைப் பத்திரமாப் பைகளில் நிரப்பி வாயை இறுக்கக் கட்டி வச்சுருந்தாங்க. நேரம் ஆகஆக படகில், உக்காரும் இடமாவும் அந்தப் பொதி மாறிப்போச்சு.

நம்ம படகை ஒட்டி வேறொரு படகு வந்து நின்னு, '200 ரூ. கொடு. கோவில் மூடறதுக்குள்ளேக் கொண்டுபோய் விடுறேன்'னு வலைவீசிப் பார்த்தாங்க. நம்ம படகுலே இருந்து யாருமே நகரலை. நகராதது நம்ம படகும்தான். இதுக்குள்ளே இளைஞர்கூட்டம் ஒன்னு வந்து அடைஞ்சது. அதோ பாகிஸ்தான் இதோ பாகிஸ்தான்னு இருட்டுவீட்டில் அம்புவிடுவதும், எங்கே நிஜமாவே பாகிஸ்தான் தெரியுதோன்னு கழுத்துவலிக்க நம்மவர் திரும்பிப் பார்ப்பதுமாக் கொஞ்சம் நேரம் போச்சு. இப்பத் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. நாம் போகப்போகுமிடம் இதோ இந்தப் பக்கம் கண்ணுக்கு நேராத் தெரியுது பாருங்க. வெறும் அஞ்சே கிலோமீட்டர்தான்! அங்கிருந்து திரும்பிவரும் யாத்ரீகர்களின் படகைக் குடையாய்ச் சூழ்ந்திருக்கும் ஸீகல்ஸ். அவுங்களைக் கொண்டுவந்து இங்கே இந்தப் பக்கம் விட்டுட்டு இங்கே இருந்து அங்கே போகும் படகுக்குக் குடைபிடிச்சுக் கூடவே துணையாகப் போகுதுகள். நல்லதொரு சேவை!

படகுக்குள் இறங்கி கலர்க்கலரா பொரி வித்துக்கிட்டு இருக்காங்க சிலபேர். இதுக்குமா கவர்ச்சி வேணும்? தேவையில்லாத வர்ணம் கடைசியில் பார்த்தால் அதெல்லாம் கடல்பறவைகளுக்காம்! அதுங்க வயிறு கெட்டால் பரவாயில்லை:(
ஒருவழியா நம்ம படகு புறப்பட்டதும், ஏற்கெனவே பழக்கிவச்சதுமாதிரி பறவைக்கூட்டம் குடை பிடிப்பதும், மக்கள்ஸ் பொரியை வீசுவதும், அதுகள் சிலவற்றை அப்படியே ஆகாயத்தில் தாவிப்பிடிப்பதும், படகின் தரையிலும் தண்ணிரிலுமாக பொரிகள் சிதறி விழுந்து வீணாவதுமாக அஞ்சுகிலோ மீட்டர் பயணம், இருவது நிமிஷம்.
அக்கரை சேர்ந்து ஏழெட்டு நிமிசம் நடந்து, கோவில்கடைகளை எல்லாம் கடந்து கோவில் வாசலருகில் போனால் கோவிலை மூடிக்கிட்டு இருக்காங்க. இனி மாலை நாலுமணிக்குத்தான் திறப்பாங்களாம்.

மூணரைமணி நேரம் கையில் இருக்கு. தீவைச் சுத்திப்பார்க்கலாமா? ஆட்டோ கிடைக்குமா? தேடியதும் கண்ணில் பட்டது நாலைஞ்சு சக்கடா நிற்கும் ஸ்டேண்ட். ஆஹா.... சக்கடாப் பயண ஆசை இப்படி வாய்க்குதா!!!வாடகைக்கு வருமான்னால் இன்னும் எட்டுப்பேரைக் கொண்டுவரணுமாம். நான் எங்கே போவேன்? முழிச்சு நிக்கும்போது கடைசியில் நின்ன ஒன்னு கிளம்புது. நாலைஞ்சுபேர் அதுலே ஏறி உக்காந்துக்கிட்டு இருக்காங்க. கோபால் ஓடிப்போய் விசாரிச்சார். வாங்கன்னாங்களாம். .
மேலே இருக்கும் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சுக்கலைன்னா, நொடிக்கு நொடி ஏறி இறங்கும் பள்ளத்தினால் தூக்கி வீசப்படவேண்டியதுதான்! அப்படியும் வண்டி பள்ளத்தில் விழுந்து எந்திரிக்கும்போதும் வளைவின் போதும் நாம் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே அந்தரத்தில் ஊசலாடுகிறோம். உக்காரும் இடத்தை ஏதோ உணர்வினால் தேடவேண்டி இருக்கு. தொங்கல்தான் போங்க! கண்ணுக்கெட்டிய தூரம் முழுசும் ஒரே பொட்டல் காடு.

என்ன ஏது எங்கேன்னெல்லாம் தெரிஞ்சுக்காம நாங்களும் அதுலே ஏறிப்போய்க்கிட்டே இருக்கோம்.

பயணம் தொடரும்.........:-)

16 comments:

said...

\\என்ன ஏது எங்கேன்னெல்லாம் தெரிஞ்சுக்காம நாங்களும் அதுலே ஏறிப்போய்க்கிட்டே இருக்கோம்\.//

அதுலே தானே இருக்கு திரில்லே.. :)

said...

அருமை அருமை.... படங்கல் தொகுப்பு செய்திகள் அனைத்துமே

said...

வாங்க கயலு.

த்ரில்லா? அப்படியா சொல்றீங்க!!!

ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்ன்னு எங்கூர்லே ஒரு புதுமொழி இருக்கு.

குழந்தைகளுக்கு இதைத்தான் முதல்லே சொல்லிக் கொடுக்கணுமாம்.

எனிதிங் குட் ஹேப்பன்!

said...

வாங்க ஞான்ஸ்.

வருகைக்கு ரொம்ப நன்றி.

எங்கே, ஆளையே காணோம்?

said...

போட்டோவுலயும் கோபால் சார் கஷ்டப்படறா மாதிரிதான் போடணுமா!!!

செய்தித் தொகுப்பு நல்லாயிருக்கு

said...

மேலே இருக்கும் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சுக்கலைன்னா, நொடிக்கு நொடி ஏறி இறங்கும் பள்ளத்தினால் தூக்கி வீசப்படவேண்டியதுதான்! அப்படியும் வண்டி பள்ளத்தில் விழுந்து எந்திரிக்கும்போதும் வளைவின் போதும் நாம் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே அந்தரத்தில் ஊசலாடுகிறோம். உக்காரும் இடத்தை ஏதோ உணர்வினால் தேடவேண்டி இருக்கு'' soopper Thulasi.:)

said...

//படகின் தரையிலும் தண்ணிரிலுமாக பொரிகள் சிதறி விழுந்து வீணாவதுமாக அஞ்சுகிலோ மீட்டர் பயணம், //
veenagathu .. thananila vilarathu veenagathu thannila irukara jeevarasigal sapidum

said...

\\என்ன ஏது எங்கேன்னெல்லாம் தெரிஞ்சுக்காம நாங்களும் அதுலே ஏறிப்போய்க்கிட்டே இருக்கோம்.\\

ஆகா...டீச்சர் ஓகே தானே!!?

சீக்கிரம் விபரம் எழுதுங்க ;)

said...

அடுக்கி வைத்த வாழைத்தண்டு :)

"காணும் பொருள் யாவும் கோபியரேன்னு இருப்பதை நிரூபிக்கும் விதமா அங்கங்கே மைல்கற்களாப் பதிச்சுவச்சு அதுக்கெல்லாம் புடவை கட்டி வச்சுருக்காங்க!"

கண்டு களித்தேன்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கஷ்டமா? போச்சுடா.... ரெண்டு கையாலேயும் கம்பியைப் பிடிங்கன்னா, ஒருகையில் ப்ளாக்பெர்ரியில் ஈமெயில் பார்த்துக்கிட்டு இருக்கார்.

said...

வாங்க வல்லி.

மூணு இஞ்சு உலோகப்பட்டியில் உக்காரணும். கரணம் தப்பினால்.......
(ம)ரணம்:-)

said...

வாங்க எல் கே.

ஓ.... அப்படிப்போறீங்களா? ஆனாலும் நனைஞ்சு நொதநொதன்னு போயிறாதா?

கபாலி குளத்து மீன்களா அங்கே???

said...

வாங்க கோபி.

பதில் எழுத இப்போ ரொம்ப டிலே ஆகுது. அடுத்த பகுதி வந்துருக்குமே!

said...

வாங்க மாதேவி.

நானும் ரசித்தேன். சின்னப் பொண்களா அங்கே நிக்குதுங்க:-)))))

said...

நாமக்கட்டி மூலப் பொருள் என்னவாக இருக்கும் என்பது பற்றி நினைப்பதுண்டு, உங்கள் பதிவில் விடை கிடைச்சிருக்கு !

நன்றி !

said...

வாங்க கோவியாரே.

நாமகட்டியில் என்ன குழப்பம்? அதான் சுலபமாக் கண்டு பிடிச்சுறலாமே அந்தப் பெயரை வச்சு.

'திரு மண்'