Monday, February 01, 2010

சிங்கத்துக்கு சிரிச்ச முகம்:-) (குஜராத் பயணத்தொடர் 12)

"என்ன, ஒரு அஞ்சாயிரம் வருசத்துக்கு மேலே இருக்கும்."

" நெசமாவாச் சொல்றீங்க? பார்த்தா அப்படித் தெரியலையே."

" திறந்தவெளியிலே மொட்டைக் காடாத்தான் இருந்துச்சு. அப்புறம் எங்க சனங்க எல்லாம் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக் கட்டுனோம். இப்போ நீங்க பார்க்கறது எனக்குத் தெரிஞ்சே மூணாவது முறையா புதுப்பிச்சுக் கட்டுனதுதான்."

சக்கடாக்காரருக்கு, கோபால் கொஞ்சம் காசு கொடுத்ததைக் கவனிச்சுட்டு, 'ஏன் கொடுத்தீங்க? திருப்பி வாங்கிக்கிடுங்க. மொதல்லேயே எல்லாருக்குமா சேர்த்து நான் கொடுத்தாச்சு'ன்னு சொன்னார் ப்ரமுக்.
அலைகளே இல்லாத குளம்போன்ற கடற்பரப்பு. கரையை ஒட்டுன இடம். விஸ்தாரமான முன்மண்டபத்தோடு கூடிய கருவறை. சிரிக்கும் சிங்கங்கள். அதுலே ஒன்னுக்கு, வாயெல்லாம் பல்லு:-)
யாதவ குலத்தில் ஒரு பிரிவினருக்கான கோவிலாம். இதுவரை மூன்று புதுப்பிச்சுட்டாங்க. இப்போ இருப்பது மெயிண்டன்ஸ் ஃப்ரீன்னு ஏற்பாடாம். கோபுரத்தில் அழுக்குப் படிஞ்சும் உப்புக்காற்றில் வண்ணம் எல்லாம் கரையுதேன்னும் சின்னச்சின்ன வண்ண டைல்ஸ் பதிச்சுருக்காங்க. இதுலேயும் கலை அழகோடு போர்ஸெலீன் பொம்மைகளும் சித்திரங்களுமா வச்சு அருமையா இருக்கு. ஒரு மழைவந்து போனால் எல்லாம் பளிச்!

தேவி மாதா இங்கே குடிகொண்டு அஞ்சாயிரம் வருசத்துக்கு மேலே ஆச்சு. த்வாரகைக்குக் கண்ணன் வருமுன்பே இந்தக் கோவில் இருந்துருக்குன்னாங்க.

யானைத்தலையும் சிங்கத்தலையுமா அலங்கரிச்ச முன்மண்டபத்தின் ஒரு மூலையில் ஏழெட்டுப்பேர் உக்காந்து கணக்குவழக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. பக்கத்துப் பதினெட்டுப்பட்டி ஜனங்களும் வந்துபோய்க்கிட்டே இருப்பாங்க. குலதெய்வம் என்றபடியால் போக்குவரத்து இருந்துக்கிட்டே இருக்குமாம். சுத்திவரக் காம்பவுண்டு கட்டி, வளாகத்தில் தென்னைகளின் வரிசை, பூச்செடிகள் இப்படி வச்சுப் பராமரிக்கிறாங்க. பின் கேட்டைத் திறந்துவிட்டு, போய் பாருங்கன்னார். இருபது எட்டுலே கடல். இந்த இடம் கொஞ்சம் மேடா இருக்கு. எதுக்கும் கரை அரிக்காம இருக்க நிறைய ஆலமரக்கன்னுகள் வச்சு அதெல்லாம் விழுதுவிடத்தொடங்கி இருக்கு. ரெண்டு குடும்பத்துக்கு அங்கே இடம் கொடுத்துருக்கு. வந்து போகும் ஆட்களுக்குச் சமையல் சாப்பாடு, பராமரிப்புன்னு அவுங்களுக்கு வேலை இருந்துக்கிட்டே இருக்கு. கெட்டில் நிறையச் சுடச்சுட டீ தயாரிச்சு எடுத்துக்கிட்டு வந்து தந்தாங்க. குடிக்கும் கப்புகள் மட்டும் லேசாக் குழிவான சாஸர்கள் போல இருக்கு. சமையல் கொஞ்சம் லேட் ஆகுமாம். அதுவரை பசியாற ......
இங்கே ரெண்டுநாள் தங்கிப்போகணுமுன்னா சொல்லுங்க. ஏற்பாடுகள் இருக்குன்னார் நம்மை இங்கே கொண்டுவந்த ப்ரமுக். வளாகத்தில் ஒரு பக்கம் வரிசையா சில அறைகளும், அதையொட்டி இருக்கும் வெராந்தாவில் கயிற்றுக் கட்டில்களுமா அருமைதான். மொட்டைமாடிக்குப் போனால் ஓஹா துறைமுகமும், நாம் வந்த அக்கரையும் தெரியுது. ஒரு சோலார் பேனல் வச்சு விளக்குக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்க. ஆனால் இப்போக் கொஞ்சநாளா பவர் லைன் போட்டு, கரண்ட் வருதாம்.
நல்ல அமைதியான இடம். உக்காந்து யோசிக்கலாம். கொன்னு குழிச்சு மூடுனாக்கூட யாருக்கும் தெரியப் போறதில்லை. என்ன செய்யறதுன்னு தெரியாமச் சுத்திச்சுத்தி வந்தோம். தென்னைகள் வரிசையை ஒட்டி சிமெண்ட் இருக்கைகள் வரிசை.

சமையலறையில் ஏழெட்டு கேஸ் ஸிலிண்டர்கள் இருக்கு. ஆனாலும் விறகு அடுப்பில் ரொட்டி சுடும் வேலை. உங்களுக்காக கோதுமை ரொட்டி செய்யச் சொல்லி இருக்கேன்னாங்க. இப்போ செஞ்சுக்கிட்டு இருப்பது சோளரொட்டி. பரவாயில்லை இதுவே போதும் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுப் பார்க்கிறேன்னு சொன்னேன். ஒரு ரொட்டிக்குள்ள மாவை எடுத்துத் தண்ணீர்விட்டுப் பிசைஞ்சு அதைக் கையாலேயே தட்டித்தட்டி ரொட்டி செஞ்சு தவாவில் போடறாங்க. இப்படி ஒவ்வொரு ரொட்டிக்கும் தனித்தனியாப் பிசைஞ்சு ஒருத்தர் தர, இன்னொருத்தர் அதைச் சுட்டு அடுக்கறாங்க.

சிரிச்சமுகத்தோடு ராம்புவும் லீரியும் பரபரன்னு ரொட்டி சுடுவதைக் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தேன். காய்கறிகளை நறுக்கி வச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். கிராமத்து ஆட்கள். ஹிந்தி புரியுது, ஆனால் பேசவரலை. தேவையும் இல்லையாம். தேசியமொழின்னு ஒரு கூட்டம்தான் சொல்லிக்கிட்டுத் திரியுது.
முக்கிய விருந்தினருக்குச் சமைலறைக்கருகில் சாப்பாடு பரிமாறினாங்க. ரெண்டு வகைக் காய்களும் கீரையும் சேர்த்து ஒரு பொரியல், தக்காளிச் சட்டினி, வதக்கிய முழுப் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயத்துண்டுகள், குடிக்க மோர். நாங்க சாப்பிட்டு முடிச்சதும் கோவிலில் இருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் வெராந்தாவில் பந்தி போட்டுட்டாங்க. செல்விருந்து ஓம்பி வரும்விருந்து பார்க்கும் பண்பு. இங்கேயும் தாடிக்காரர் வந்துட்டுப் போயிருந்துருப்பாரோ!
கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்கன்னு உபச்சாரம் வேற! நமக்கோ...எப்படி ... இங்கே இருந்து போக வண்டி கிடைக்குமான்ற கவலை. அதெல்லாம் கவலையில்லை. போயிறலாமுன்னு பதில். சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு மறுபடியும் எல்லோரும் கூடி, கிராமத்து விஷயம் ஏதோ பேசறாங்க. நம்ம கவலை நமக்கு.
கண்ணனே நம்ம கவலையைத் தீர்க்கச் சக்சக்ன்னு சக்கடாவை அனுப்பிட்டான். நாலைஞ்சுபேர் வந்திறங்கி திமுதிமுன்னு கோவிலுக்குள் வந்தாங்க. அந்த வண்டியில் திரும்பி போயிடலாமேன்னு விசாரிச்சால்... இது அந்த நாலைஞ்சுபேர் ஏற்கெனவே வாடகைக்கு எடுத்துக்கிட்டதாம். ஆனால் நமக்கு விருப்பமுன்னா அவுங்களே நம்மைக் கோவிலில் கொண்டு விட்டுருவாங்களாம். 'எனி ப்ராப்லம்? நோ...ப்ராப்லம் ஸால்வ்டு:-)'

"இன்னும் பெரிய கோவில் திறக்க ரெண்டு மணி நேரம் இருக்கு. நாங்க இன்னும் சில பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்குப் போறோம் வர்றீங்களா? இல்லேன்னா கோவிலில் கொண்டு விட்டுட்டுப் போறோம்."

சட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தோம். ஜாம்நகர் கம்பாலியா தாலுகா நீதிமன்றத்து பப்ளிக் ப்ராஸிக்யூட்டரும், அவர் நண்பர்களான வழக்கறிஞர்களும் வார இறுதிக்குப் பொழுதுபோக்கா இருக்கட்டுமேன்னு பெட் த்வாரகா கோவில்களுக்கு ஒரு விஸிட் அடிக்கிறாங்களாம். அதுவுஞ்சரித்தான். வாரம் முழுசும் பொய்க்கேஸுகளுக்கு வாதாடிய பாவம் போகவேணாமா?
இந்த 'பெட் பெட்'டுன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பொருள்ன்னு கேட்டேன். குஜராத்தி மொழியில் Bet ன்னால் தீவு. குஜராத்திச் சொல்லித்தரவான்னு ஆரம்பிச்சாங்க. பேசுனா நல்லாப் புரியும் (பெட்டைத் தவிர) திருப்பிப்பேச வராது. ஆனால் இவுங்க குஜராத்தியில் எழுதுனதைப் படிப்பாங்கன்னு என் பக்கம் கையைக் காட்டுனார் கோபால். தத்தித்தத்தின்னு சொன்னேன்:-)
இப்போப் போகும் கோவிலில் நவ்க்ரஹ் இருக்காம். அங்கே இருக்கும் பண்டிட் மத்ராஸிதானாம்.

அட! என்ன பெயர்?

காலியா.

பயணம் தொடரும்.........:-)

22 comments:

said...

சிங்கத்துக்கு சிரிச்ச முகம்.முதல் படத்தைப் பார்த்தா சாரை சொல்றீங்களோ?
அட கடேசி படத்துல நம்ம டீச்சருக்கும் சிரிச்ச முகம் தான்

said...

சிரிச்சா சிங்கமும் அழகுன்னு சொல்ல வரீங்களா:)

எல்லாம் 5000,மூவாயிரம்னு சொல்றாங்க. பார்த்தால் செங்கல்
கட்டடமா இருக்கேன்னு நானும் யோசிக்கறது உண்டு.!
இப்படியா ஊர்சுத்தனீங்க ,துளசி!!கடவுளே முதுகு என்ன ஆகியிருக்கும்!!
இதில மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு காட்டுவழி போறவளே
கன்னியம்மான்னு பாடாத குறையா முகமெல்லாம் சிரிப்பு:))
கையெடுத்துக் கும்புடறேன் உங்க தைரியத்தை!!!
சாப்பாட்டுத் தட்டும் மெனுவும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யம் யம்.

said...

அந்த வண்டியில உக்கார்ந்துகிட்டு எப்பூடி போனிங்க மேடம். டிராக்டர்ல அரை மணிநேரம் உக்காந்தேலே நெஞ்சுவலி வந்திருது!

said...

தட்டுல பாதி ரொட்டி தான் இருக்கு ...

said...

"அப் தேரா கா ஹோகா காலியா" :))

அருமைங்க.

said...

சிரித்துக்கொண்டே லிப் ஸ்டிக் கூடத்தான் போட்டிருக்கு சிங்கம்.

said...

;)))

டீச்சர் நீங்க உட்கார்ந்து இடத்துக்கு கீழே OKன்னு போட்டுயிருக்கு...கோபால் சார் இடத்துல STOP ;)))

said...

You are really courageous in travel in that vehicle that too with a bright smile. Way to go!

said...

வண்ணக் கோபுரம்,
தென்னைகளின் அமைதியான
அழகு வரிசை இதமாக வருடுகிறது.

சிரமமான கட..கட..சக்கடா வண்டிச் சவாரி அருமையான போட்டோ.

said...

வாங்க கண்மணி.

ஹாலிடேஸ் சமயமும் மூஞ்சைத் தூக்கி வச்சுக்க முடியுதா? :-))))

said...

வாங்க வல்லி.

சிங்கத்தின் சிரிப்பு உங்களுக்குத் தெரியாததா? ஹாஹா!

உண்மையா அது காட்டுவழிதான் அதுவும் கள்ளிக்காட்டு வழி!

நல்லவேலை காசுமாலை போட்டுக்கிட்டுப் போகலை:-)

said...

வாங்க ஆடுமாடு.

இந்த வண்டி மட்டும்தான் அங்கே இருக்கு. இல்லைன்னா நடைதான். நமக்கு வழியும் தெரியாதே!

said...

வாங்க ஸ்டார்ஜன்.

ஒரு ரொட்டியே போதுமுன்னு ஆளுக்குப் பாதி எடுத்துக்கிட்டோம்.

புது உணவு. எதாவது அபகடம் பற்றியால்......ட்ரிப் கோவிந்தா!

said...

வாங்க விதூஷ்.

பெருசுக்குத்தான் சிரிப்பாணி பொங்குது. சின்னது பாவமா உக்கார்ந்துருக்கே:-)

said...

வாங்க கோபி.

எல்லாம் ஓக்கே. ஸ்டாப்ன்னு கத்தாதேன்னு பொருள்:-)))

said...

வாங்க சந்தியா.

வேற வழியில்லேன்னா வீரம் தானாக வராதா? :-)))))

said...

வாங்க மாதேவி.

நல்ல ரோடா இருந்துருந்தால் ஒருவேளை சக்கடாப் பயணம் இன்னும் நல்லா இருந்துருக்குமோ!!!

கிடைச்சவரை லாபம்.

said...

இந்த வண்டியில் அதுவும் ஓரத்தில் உக்காந்து கொண்டு. ரொம்ப கஷ்டம் டீச்சர். ரோடு வேற மோசம்,குலுக்கலுல் கீழ விழுந்துட்டா என்ன ஆகின்றது. பார்த்து ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்க.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நானும் ஒரு புது வாக்கு சொல்லவா?

முதுங்கன்று(ம்) பயமறியாது!!!!

கடவுள் அருளால் ஆபத்து ஒன்னும் இல்லாம முடிஞ்சது.

said...

டீச்சர்.. சக்கடா வண்டிப்பயணம் நல்லா எஞ்சாய் பண்ணிருப்பீங்க போலிருக்கு.:-))).

பயணங்களில்தான் இதுபோல் புது அனுபவங்கள் கிடைக்கும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அனுபவங்களின் தொகுப்புதானே வாழ்க்கை!

said...

ஹாஹா... நல்ல ரசித்து பயணித்து இருக்கீங்க போல [ch]சகடாவுல!

மற்ற பகுதிகளையும் நேரமெடுத்து படிக்கணும்....