Friday, February 19, 2010

ஆமை வேகத்தில் ஓ(ட்)டி வருவேன் (குஜராத் பயணத்தொடர் 26)

தக்தேஷ்வர், ஊருக்கு நடுவிலே உயரமான குன்று ஒன்றில் உக்கார்ந்துருக்கார். 1893 லே கட்டி இருக்காங்க. முழுக்கமுழுக்கப் பளிங்குக் கற்கள். அப்படியே ஜொலிக்குது. அருமையான வேலைப்பாடுகள். முக்கியமாச் சொல்லவேண்டியது கோவிலின் வெளி முற்றத்தில் ரெண்டடி உயரச் சுத்துச்சுவரைச்சுத்தி இருக்கைகள் போட்டுவச்சுருக்காங்க. எல்லாமே கோவிலுக்கு முதுகைக் காமிச்சுக்கிட்டு ஊரைப் பார்க்கும் விதமா! குன்றுக்கு முக்கால் உயரம்வரை வண்டியிலே போயிடலாம். மேலே அருமையான பார்க்கிங் வசதி. அங்கிருந்து படியேறணும். எல்லாமே படு சுத்தமாப் பராமரிக்கப்படுது.



இங்கேயும் லிங்க ரூப சிவனும் சேஷனும் கருவறையில். பின்சுவரில் பார்வதி சிவனைப் பார்த்தபடி. ஒரு கண் வச்சுக்கிட்டே இருக்காள். வெளியே நந்தியும் ஆமையும். இந்த ஆமை எதுக்குன்னு எப்பவும் வரும் எண்ணம் இப்பவும் வந்துச்சு. கோவில் பண்டிட் பூசைகளை முடிச்சுட்டு, என்னை 'வா'ன்னு கையால் கூப்பிட்டு வெள்ளைமலர்களைக் கொடுத்தார். ஆமையைப் பற்றிக் கேட்டேன்.
ஒருகாலைத் தூக்கி .......தவம் செய்யும் .........என்ன ப்ரார்த்தனையோ?

அது பார்வதியின் வாகனமாம். வீட்டுக்கு முன்னால் போர்ட்டிகோவில் (பார்க்கிங் ஏரியா?) சிவனின் நந்தி. அதுக்கு முன்னால் தன் வண்டியை நிறுத்தி வச்சுருக்காளாம். பக்தர்கள் குறை தீர்க்க ஆமையில் ஏறி 'ஓடி'வந்தால் ஆச்சு!!!! "என்னம்மா, இன்னும் அருள் பாலிக்கலையா'ன்னா, 'அதான் வந்துக்கிட்டே இருக்கொம்லெ....என்ன அவசரம்?'

ஊருக்குள்ளெ ஒரு ரவுண்டு வந்தோம். ஸ்வாமி நாராயணன் கோவில் கண்ணைப் பறிக்குது. இது அக்ஷர்த்வார். டெல்லியில் இருப்பதுபோலவே அட்டகாசமான தோட்டங்கள் உள்ள பெரிய வளாகம். அடுக்கி நிக்கவச்ச அலங்காரத்தூண்கள். உள்புறக் கூரைகளைக் கழுத்துவலியைப் பொருட்படுத்தாமல் பார்த்துக்கிட்டே இருக்கலாம். ஹப்பா..... எத்தனையெத்தனை டிஸைன்கள். ஒவ்வொன்னும் ஒரு விதம். சந்நிதிகளின் வெலிப்புறச் சுவர்களில் எல்லாம் சிற்பவேலைப்பாடு. கண்ணுலே ஒத்திக்கலாம்போல இருக்கு. புலித்தோல் உடுத்திய சிவனும், 'நீங்க வெறும் புலித்தோல், ஆனா நான் வெள்ளைப் புலித்தோல் இடுப்பிலே அழகுக்காகக் கட்டி இருக்கேன் பாருங்கன்னு சொல்லும் பார்வதியும், புள்ளையாருமா ஒரு குடும்பம் சந்நிதியில் இருக்கு. கார்த்திக் மிஸ்ஸிங். அங்கேயும் நாமிருவர், நமக்கெதுக்கு இருவர்ன்னு இருக்காங்க போல! வெல்டன். சாமிவந்து சொல்லியும் கூட்டம் குறையக்காணோம்:(

கருவறை மூடி இருக்கு. பூஜை நேரத்துக்கு இன்னும் அரைமணியாகுமாம்.
முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களைக் கொண்டே கோவில் கட்டுவதும், பராமரிப்பும் நடக்குதாம். இப்போதிருக்கும் தலைமை சன்னியாசி இதுவரை 55 கோவில்களை உலகெங்கும் கட்டி இருக்காராம். பொதுவா இப்படிப்பட்ட வேலைப்பாடுகளைக் கொண்ட கோவில்களைக் கட்ட முந்தி ஒரு காலத்தில் முப்பது வருசமாகுமாம். இப்போ அஞ்சே வருசத்தில் கட்டி முடிச்சுடறாங்களாம்.

நான் போகணுமுன்னு நினைச்ச ஸ்வாமி நாராயணன் கோவில் இது இல்லை. அது இங்கேதான் இந்தப் பக்கத்துலே இருக்குன்னு வலையில் பார்த்து வச்சுருந்தேன். அதைப் பற்றி விசாரிக்கத்தான் இங்கே நுழைஞ்சோம். கதடா(Gadhada) ன்னு ஒரு சின்ன ஊர். ஸ்வாமிநாராயண் இயக்கத்தை ஆரம்பிச்சுவச்ச நீல்கண்ட் என்னும் சகஜானந்த் ஸ்வாமி இந்த ஊரில் 27 வருசம் தங்கி இருந்துருக்கார். இங்கேதான் இவருடைய இறப்பும் நடந்துருக்கு. அவருடைய பூர்வாசிரமப்பெயர் கன்ஷ்யாம் பாண்டே. உ.பி.காரர். சன்னியாசம் வாங்குனதும் நீல்கண்ட் ஆனார். பிறந்த வருசம் 1781. தன்னுடைய 49வது வயசுலே(1830) வைகுண்டம் ஏகிட்டார். இவர்தான் ஏழுவயசு சிறுவனா இருந்த சமயம், ஒரு இரவில் கொட்டும் மழையில் வீட்டைத் துறந்து வெளியேறுன சம்பவத்தையெல்லாம் டெல்லி அக்ஷர்தாம் கோவிலில் ஒரு குறும்படம் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இதைப்பற்றி சில வருசங்களுக்கு முன்பே எழுதுன நினைவு.

முடிஞ்சாப் பாருங்களேன்.


இவர் மறைவுக்கு ஒரு வருசம் இருக்கும்போது, 1829 லே கட்டப்பட்ட கோவில்தான் இங்கே கதடாவிலே இருக்கு. ஸ்வாமிநாராயண் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் புண்ணிய பூமி. இங்கே பவ்நகரில் இருந்து நம்ம திட்டத்தின்படிப் போகவேண்டியது வடக்கு நோக்கி. இந்தக் கோவிலுக்குப் போகலாமுன்னா....ஒன்னரை மணிநேரம் மேற்கே போகணும். 90 கிலோமீட்டர் தூரம். போகவர, கோவில் பார்க்கன்னு ஒரு 4 மணி நேரமாவது ஒதுக்குனால்தான் முடியும் என்ற நிலமை. பரவாயில்லை இன்னொருமுறை ஆகட்டும்(??!!)னு இங்கேயே ஒரு கால்மணி நேரம் 'தியானம்' செஞ்சுட்டுக் கிளம்பினோம். பூஜை பார்த்துட்டுப் போகலாமான்னதுக்கு , 'எதுக்கு? இந்தப் பக்கம் தனியா உக்காரவா?'ன்னார் கோபால்.

இந்தக் கோவில்களில் பிடிக்காத ஒரே விஷயம், பெண்களுக்கு இரண்டாமிடம் தருவது. முன்வரிசை, முன்பகுதியில் ஆண்கள் மட்டுமே போகலாம். தடுப்பு ஒன்னு போட்டு அதுக்கு இந்தப் பக்கம்வரைதான் பெண்கள் போகலாம். மாய்ஞ்சுமாய்ஞ்சு பூஜைக்கான பிரசாதங்கள் வேலைகள்ன்னு செய்யும் பெண்களுக்கு உண்மையாப் பார்த்தா முதலிடம் கொடுக்கணும். அட்லீஸ்ட் சம உரிமையாவது கொடுக்கனும். பேசாம நான் ஒரு இயக்கம் ஆரம்பிச்சு நம்ம ஆசிரமத்துலே ஆண்களுக்குச் சம உரிமை கொடுக்கலாமுன்னு இருக்கேன். பூஜைக்கான ஏற்பாடுகள், விளக்குகளைப் பாலீஷ் போடுவது,பிரசாதம் தயாரிப்பது, பூமாலை கட்டுவதுன்னு எல்லாத்துக்கும் ஆண்களுக்கே முன்னுரிமை. ச்சும்மா உக்கார்ந்து சாமி கும்பிடும் கஷ்டமான வேலையைப் பெண்களுக்குக் கொடுத்துடப் போறேன், ஆமா!

கடைவீதி வழியாப்போகும்போது கரும்பு விற்பனையும், பட்டங்களுக்கான நூல் விற்பனையும் ஜரூரா நடக்குது. சீஸனல் ஸேல்! கரும்பெல்லாம் வெளிறிய இளம்பச்சை நிறத்தில். வேற வகை போல இருக்கு. நகரைவிட்டு வெளிவந்து நெடுஞ்சாலையில் கலந்தோம். ரெண்டுபக்கமும் பருத்தி. அறுவடைக்குத் தயாரா வெடிச்சுக்கிடக்கு. ஒரு இருவது நிமிஷம் வந்துருப்போம். எங்கே பார்த்தாலும் வெள்ளை நிலம். இது என்னடா நியூஸிக்கு வந்துட்டோமோ? பயங்கர பனிமழை பெய்ஞ்சுருக்கே!!! அப்படி இருக்கச் சான்ஸ் இல்லையே...... நமக்கு அங்கே இப்போ சம்மராச்சே.......
ஒரு பக்கம் சின்னதா வெள்ளைக்குன்றுகள். வண்டியை அங்கே ஓரங்கட்டி, மலையில் இருந்து ஒரு கல் எடுத்துத் துடைச்சுட்டு லேசா வாயில் வச்சுப் பார்த்த கோபால், உப்புக் கல்லு'ன்னார். அட! தூத்துக்குடிக்குப் போனப்ப மிஸ் பண்ணிட்ட இடம்! எந்த மாதிரி அமைப்புன்னு தெரியலை. பாத்தி கட்டிவிடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். இங்கே என்னடான்னா...... அதுபாட்டுக்கு 'விளைஞ்சு' கிடக்கு. தெருவோரம் தேங்கி நிற்கும் சின்னக் குழியில்கூடப் பூத்துக்கிடக்கு உப்போ உப்பூ. ஒரு இடத்துலே உப்பு மலையைக் குளிப்பாட்டிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். அச்சச்சோ..... குளிச்சால் கரைஞ்சுடாதா? சிலபல மலைகள் எல்லாம் 'டாடா' க்ரூப்பைச் சேர்ந்ததாம். (அரைமணிநேரப் பயணம் முழுசும் உப்பூ. படங்கள் வேண்டுமென்றால் உப்போ உப்பூவில் பார்க்கலாம்.)

ஸ்வாமிநாராயண் கோவில் படங்கள் இங்கே ஆல்பத்தில் இருக்கு.

பயணம் தொடரும்....:-)

28 comments:

said...

வெளிர்பச்சைக் கரும்பு வித்தியாசம்.

//பேசாம நான் ஒரு இயக்கம் ஆரம்பிச்சு நம்ம ஆசிரமத்துலே ஆண்களுக்குச் சம உரிமை கொடுக்கலாமுன்னு இருக்கேன். //

:))!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நம்ம ஆஸ்ரமத்துலே உங்களுக்கு லைஃப்டைம் மெம்பர்ஷிப் போட்டுட்டேன்:-))))

said...

கரும்பு கலரே ஒரு மாதிரி இருக்கே! இந்த மாதிரி கரும்பெல்லாம் நம் ஊரில் ஆலை கரும்பு என்பார்கள்.

said...

ஆண்களுக்கு எதுக்கு வேலை. அதான் வீட்டுல செய்யுறமே அப்புறம் ஏன் கோவிலையும். வீட்டுல டாபாய்க்கும் பெண்களுக்குத்தான் வெளியில வேலை தர்றேம். ஏமத்த முடியாது பாருங்க. ஆனா இரண்டாம் வரிசை எல்லாம் கொஞ்ச ஓவர். நம்ம மோடி அங்கிளுக்கு ஒரு மொனுப் போடலாம். நல்ல படங்கள் நன்றி.

said...

வாங்க குமார்.

ஆலைக் கரும்புன்னாலும் கரும்பு கரும்புதானே? நம்ம பக்கங்களில் இதே ஆலைக் கரும்பு ஒல்லியா லைட் ரெட்டால்லே இருக்கு!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நம்ம ஆஸ்ரமத்தில் ஆண்கள் வேலை செய்யவேணாம். அதெல்லாம் சேவை லிஸ்டில் வருதாக்கும்:-)

said...

ஆஹா:))! நன்றி!

said...

டீச்சர்,

அருமையான பயணப் பதிவுகள். அந்த இடங்களுக்குச் செல்வோருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். புகைப் படங்களில் பழங்கால குகைகளில் செராமிக் டைல்ஸ்களைப் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது. அதன் தொன்மைத் தன்மையுடன் இயற்கையாக தரிசிப்பதே மகிழ்வாக இருக்கும். அமெரிக்காவிலும் 2 மைல் ஆழ குகைகள் இருக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அதன் இயற்கை மாறாமல் பாதுகாக்கிறார்கள்.

பல வருடங்கள் முன்பு தஞ்சைக் கோவிலின் ஓவியங்களுக்கு பெயின்ட் அடித்துக் கெடுத்தார்கள். என்ன செய்வது? எதையும் பாதுகாக்கத் தெரியாத அல்லது அலட்சிய மனப்பான்மை.

கிட்டத்தட்ட இதைப் போலவே தான் நியூ ஜெர்சி ஸ்வாமி நாராயன் கோவிலும் இருக்கும்.

said...

The temple is simply superb. Any criteria to join the Ashram? Registration starts soon I guess? :P

said...

டீச்சர் படங்கள் அதிகமா இருக்கே பதிவுல? லிமிட்டேசன் கூடிருச்சா இல்ல பழைய பதிவுகள்ல இருந்து படத்தை தூக்கிட்டீங்களா? :))

said...

பிரதம சிஷ்யை 'பதவி' ராமலக்ஷ்மிக்கு!

said...

ரைட்டு நடக்கட்டும்

said...

வாங்க அமரபாரதி.

அருமை தெரியாதவங்ககிட்டே மாட்டிக்கிட்டு முழிக்குது அருமையான சமாச்சாரங்கள் எல்லாம்:(

திருநீர்மலைக் கோவிலில் உள்ள கற்றூண்களின் சிற்பத்துக்கு பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க. போதுமுன்னு ஆகிருச்சு.

எங்க நியூஸியில் ஒன்னுமில்லாத அற்ப விஷயம்கூட சரித்திர நிகழ்வுன்னு பராமரிப்பு செஞ்சு வச்சுருப்பதைப் பார்க்கும்போது இங்கே நம்மாட்கள் பன்ணும் அட்டூழியம் நினைவுக்கு வந்துரும்.

said...

வாங்க சந்தியா.

பதிவு ஆரம்பிச்சாச்சு. ராமலக்ஷ்மிக்கு அடுத்த பதவி உங்களுக்கு!

said...

வாங்க நான் ஆதவன்.

படங்களுக்குக் கூடுதல் இடம் கிடைச்சுருச்சு.

அஞ்சு டாலர் கட்டுனேன். 20 GB கொடுத்தாங்க. ஒருவருசத்துக்கு வச்சுக்கலாம்.

said...

வாங்க ராஜன்.

நடந்துதானே ஆகணும்!

தொடர்ந்து வாங்க.

said...

தன் வண்டியை நிறுத்தி வச்சுருக்காளாம். பக்தர்கள் குறை தீர்க்க ஆமையில் ஏறி 'ஓடி'வந்தால் ஆச்சு!!!! "என்னம்மா, இன்னும் அருள் பாலிக்கலையா'ன்னா, 'அதான் வந்துக்கிட்டே இருக்கொம்லெ....என்ன அவசரம்//

ம்ம். ஏத்தம்தான்:)
படமெல்லாம் அட்டகாசமா இருக்கு.கரும்பு ஜூஸ் எப்படி இருந்தது?

said...

டீச்சர் நிறைய விஷய்ங்கள் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் ..

எங்களுக்கு ரொம்ப உபயோகம்

said...

ஸ்வாமி நாராயணன் கோவில் சிற்ப வேலைப்பாடுகள் ரொம்ப நுணுக்கம்.

said...

"தடுப்பு ஒன்னு போட்டு அதுக்கு இந்தப் பக்கம்வரைதான் பெண்கள் போகலாம். .." கோவில்களில் இவ்வாறு செய்வது எவ்வளவு அநீதியான செயல். கோபம்தான் வருகிறது.

said...

டீச்சர்.. இந்தப்பக்கங்களிலெல்லாம் வெளிறிய கரும்பு தான் கிடைக்கும். பொங்கல் சமயம் நம்ம பக்கத்திலிருந்து 'கறு'ம்பு வந்தால்தான் உண்டு. போன வருஷம் பொங்கல் சமயம் லாரி ஸ்ட்ரைக்கினால் இதை வெச்சு சமாளிக்க வேண்டியதாப்போச்சு.

said...

வாங்க வல்லி.

'ஆமையில் ஏறி ஓடோடி வருவேன்'ன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ!!

கரும்பு ஜூஸெல்லாம் குடிக்கலை. பார்த்தடு சரி.

said...

வாங்க ஸ்டார்ஜன்.

இப்பத்தான் 'ஏன் எழுதறோம்?'ன்னு யோசிச்சு (இன்னொருத்தரின் இடுகை) யாருக்காவது எப்பவாவது பயனாகும்னு எழுதறேன்னு பதில் சொன்னேன்.

இப்ப உங்க பின்னூட்ஸ் அதையே சொல்லுது!

நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

இந்தக் கோவில்களில் எல்லாம் பராமரிப்பு முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால்தானாம்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

இவுங்களை , இந்த சந்நியாசிகள் உட்பட அனைவரையும் பெத்தவங்க பெண்கள்தானே?

இப்படி ஒரு சட்டம். அதை அவுங்க இயக்கம் சேர்ந்த பெண்கள் யாருமே எதிர்க்கலை என்பது வியப்பா இருக்கு.

போகட்டும். நம்ம ஆஸ்ரமத்துக்கு வந்துருங்க. உங்களுக்கு ஆண்கள் பிரிவுலே பதவி காத்துருக்கு:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

28 வருசமா 'கரும்பு'ன்னு காகிதத்தில் எழுதிவச்சுப் பொங்கல் கும்பிட்டோம். அதுக்கு வெளிறியது கிடைச்சாலும் பரவாயில்லைதானே? :-)))))

Anonymous said...

//பேசாம நான் ஒரு இயக்கம் ஆரம்பிச்சு நம்ம ஆசிரமத்துலே ஆண்களுக்குச் சம உரிமை கொடுக்கலாமுன்னு இருக்கேன். //

டீச்சர் உத்யோகத்தைவிட ஆசிரமத்துலதான் காசு பாக்கலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா!!!!
நானும் துண்டைப்போட்டு இடம் பிடிச்சுக்கறேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

வெளிநாட்டுவாசிகளுக்கான கோட்டாவில் உங்களுக்கு இடம் அலாட்டட்:-)