கையில் மட்டும் ஒரு முத்திரை மோதிரம் இருந்தால் , தேரை விட்டு இறங்குனதும் ஸ்டைலாக் காமிச்சுருக்கலாம். அரச விருந்தினர்களுக்குரிய மரியாதை கிடைச்சிருக்கும். (அரச அரச அரச.... அரசுன்னு யாரும் தப்பாப் படிக்கக்கூடாது, ஆமாம். அது வேறு இடம்! ) இப்பத் தேருக்கு என்ன செய்ய? நோ ப்ராப்ளம். அதான் காரு இருக்கே!
"யாரங்கே..... இவர்களை விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் செல்." ஓடிவந்த ஏவலாட்களுடன் அரண்மனை உள்முற்றத்தையொட்டிய வெராந்தாவில் நடந்து போகிறோம். பின்புற வாசக் கதவைக் கடந்து பிரமாண்டமான புல்வெளி. அதன் ஒரு பக்கத்தில் இருக்கு அரச விருந்தினர் விடுதி. . அச்சச்சோ..... இது என்ன சர்வண்ட்ஸ் க்வாட்டர்ஸா?
'இதானே வேணாங்கறது இந்த போர்டைப் பாரு'ன்னார் கோபால். ராயல் காட்டேஜ்! கதவைத் திறந்தால் வரவேற்பறை. ஒரு பக்கச் சுவரில் இன்னொரு கதவு. அறை எண் 108. இதுதான் நமக்கு. போகட்டும் நூற்றியெட்டு என்பது ஒரு புனிதமான எண் அப்படின்னு பெரியவங்க சொல்லக் கேள்வி. பவர்ஃபுல் நம்பராமே!!!!
மணி ஏற்கெனவே ஒம்போதரை. எதாவது தின்னுட்டுப் படுக்கையில் விழலாமுன்னா...... சாப்பிட , டைனிங் ஹால் போகணுமுன்றார் இவர். டைனிங் ஹாலில் ஈ காக்கா இல்லே. பாத்திரங்களைக் கழுவிக் கமர்த்திச் சமையலறையைப் பூட்டியாச்சா? என்ன விஷயமுன்னு கேட்டால் ராயல் கார்டனில் நீலம் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. எல்லோரும் அங்கே சாப்பிடறாங்க. உங்களுக்கு வேணுமுன்னா, இங்கே பரிமாறவான்னார்.' நீ என்னை பார், நான் உன்னைப் பார்க்கிறேன்னு தனியா உக்காந்து முழுங்குனா நல்லாவா இருக்கும்?' ச்சலோ, ராயல் கார்டனுக்கு! மற்ற அரச விருந்தினரோடு அமர்ந்து உணவு உண்ணலாம்:-)
தென்னைமரத்துக்கெல்லாம் லைட் போட்டு வச்சுருக்கு. சாதாரண ரூஃப் கார்டன் போலதான் இருக்கு. அங்கங்கே மேசைகள் போட்டு வச்சுருக்காங்க. தோட்டத்தின் ஒரு புறம் நீளமா ஒரு கட்டடத்தில் சமையலறை. தேவைக்கும் அதிகமான பணிவு காமிக்கும் பணியாளர்கள். மெனுவைக் கொண்டுவந்து ரொம்ப பவ்யமா நீட்டுனாங்க. எல்லாம் நம்ம அறையில் பார்த்த அதேதான். இவர்வேற பகலுணவில் கொஞ்சம் பலமா ஒரு பிடி பிடிச்சுட்டாதால் அவ்வளவாப் பசி இல்லையாம். நிலம்பாக் ஸ்பெஷல் ராயல் பீட்ஸா சொன்னோம். ராஜா குடிமக்களோடு ஒட்டாததைப்போல் இதுவும் டாப்பிங்ஸ், பேஸ்ஸொடு ஒட்டாமத் தனியா இருந்துச்சு. பேரு, பெத்த பேரு..... தாக நீளு லேது ன்னு ..........
எல்லா நாளும் போலவே பொழுது விடிஞ்சது. சீக்கிரம் குளிச்சுத் தயாராகி ராயல் காட்டேஜைச் சுத்திப் பார்த்தோம். அய்ய..... ஏழெட்டுப் படங்களும், அலங்காரப்பொருட்களுமா ..... என்ன ராயலோ! (ராயல் ராயலுன்னு Bபோர். (இனிமே எல்லாத்துக்கும் ராயல் ராயல்ன்னு நீங்களே சேர்த்து வாசிச்சுக்குங்கோ.)
முன்னமொரு காலத்துலே, 1260வது வருசத்திலே ராஜஸ்தான் மார்வார் பகுதியிலே சூர்யவம்சத்தைச் சேர்ந்த கோஹில் ராஜபுத்திரர்களுக்குள் அரசு உரிமைகளில் ஒரு நெருக்கடி. தனியாப் பிரிஞ்சு வந்து குஜராத் கடற்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கேயே புது ராஜ்ஜியம் நடத்திக்கிட்டு இருந்தாங்க. அறுநூறு வருசக் காலக்கட்டங்களில் மூணு வெவ்வேற இடங்கள் தலைநகரா இருந்துருக்கு. கடைசியா இருந்த தலைநகரம் சிரோஹி. இங்கேயும் கடானி, கெய்க்வாட் சிற்றரசர்களால் போர்கள் வர ஆரம்பிச்சது. அப்போ இருந்த அரசர் பவ்சிங்ஜி கோஹில். தலைநகரைப் பலப்படுத்த வழி இல்லைன்னு புதுசா ஒரு இடத்தில் தலைநகரை 1823 இல் நிர்மாணிச்சார். இதுக்கு அவர் பெயரையே வச்சு பவ்நகர்ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. நாட்டுக்கு சுதந்திரம் 1947 இல் வந்தப்ப இவுங்க பரம்பரையில் அரசரா இருந்தவர்தான் க்ருஷ்ணகுமார் சின்ஹ்ஜி (கோஹில்).
அப்போ சர்தார் வல்லப் பாய் படேல், சின்னச்சின்ன சமஸ்தானங்களா நாட்டில் ஆண்டுக்கிட்டு இருந்த சிற்றரசர்களையெல்லாம் இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்துக்கச் சொன்னார். அப்போ நாட்டிலே 565 சமஸ்தானங்கள் இருந்துருக்கு. 'ராஜ்ஜியம் போயிருதேன்னு கவலைப்படாதீங்க. உங்களுக்கு இந்திய அரசாங்கம் மான்யம் வழங்குமு'ன்னு சொன்னதை நம்பி, 'இந்தா என்னோடதை இந்திய நாட்டோடு இணைக்கத் தயார்'ன்னு வரிசையில் மொத ஆளா.... இல்லை முதல் அரசரா வந்து நின்னவர் இந்த பவ்நகர் ராஜா க்ருஷ்ணகுமார்தான்.
இந்த நடவடிக்கையை அரசு கவனத்தில் வச்சுக்கிட்டு இருந்துருக்கும்போல. சென்னை மாகாணத்துக்கு கவர்னரா இவரை நியமிச்சது இந்திய அரசு. இவர்தான் சென்னையின் முதல் இந்திய கவர்னர். 1948 முதல் 1952 வரை பதவியில் இருந்தார். நல்ல மனுஷர் போல. 1965 வது வருசம் தன்னுடைய 52 வது வயசுலேயே சீக்கிரமா 'மேலே' போயிட்டார்.
இந்திய அரசாங்கம், சமஸ்தானங்களுக்கு மானியம் தரோமுன்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்ததை 1971 வருசம் நிறுத்திருச்சு. அப்படி ஒன்னும் பெருசா எல்லா சமஸ்தானத்துக்கும் கொடுக்கலையாம். ஒரு சில சமஸ்தானங்களுக்கு வருசம் அஞ்சாயிரம் ரூபாய்தான் கிடைச்சுக்கிட்டு இருந்ததாம். ஒட்டுமொத்தமா ஒன்னுமே கொடுக்காம நிறுத்துனதும் ராஜவம்சம் என்ன செய்யறதுன்னு வழிவகை தெரியாம திகைச்சு நின்னுருக்கும் போல. உள்ளூர் ராஜா, வேலை கேட்டு வரிசையில் நிக்க முடியுமா? கைவசம் இருக்கும் அரண்மனைகளை பழுதுபார்த்துப் பராமரிக்கவும் காசு வேண்டி இருக்கே! எல்லாம் இப்போ வெறும் பெருங்காயப் பாண்டம். அப்போதான் இந்த யோசனை வந்துருக்கு போல. அரண்மனையை காட்சிக்கு வைக்கலாமுன்னு. எல்லாருக்கும் அரண்மனைக்குள்ளே எப்படித்தான் இருக்குமுன்னு பார்க்க ஒரு ஆசை மனசுக்குள்ளே இருக்கும்தானே? குறைஞ்சபட்சம், அரசன் நம்மை எப்படியெல்லாம் கசக்கிப்பிழிஞ்சு வரிகள் வாங்கி ஆடம்பரமா இருந்துருக்கான்னு பார்த்து வயிறெரிஞ்சு திட்டணுமுன்னாலும் உள்ளே போய் பார்த்துவந்தால்தானே நல்லபடி திட்டவும் முடியும்?
இப்படித்தான் ஒரு கட்டணம் கட்டிட்டு நாமெல்லாம் பல அரண்மனைகளைப் பார்த்துக்கிட்டு வர்றோம். அப்படியும் வரும் காசு பத்தலையே என்ன செய்யலாமுன்னு 'உக்காந்து' யோசிச்சப்ப..... பேசாம அரண்மனை அறைகளை ஹொட்டேல் மாதிரி வாடகைக்கு விடலாம். ஜனங்க ஒரு நாள் அரசராத் தன்னை நினைச்சுக்கிட்டுக் கட்டாயம் பெரிய தொகை கொடுத்துத் தங்கவும் வரும்னு ஐடியா வந்துருக்கு. நம்ம மாதிரி ஏழைபாழை ஒரே ஒருநாள் தங்கிட்டு வந்துரும். பணம் கொழுத்தவங்க பலநாள் தங்கலாம். வெளிநாட்டு மக்கள் அவுங்க ஊர்க் காசு இந்திய ரூபாய்களைவிடப் பலமடங்கு பலம் வாய்ந்ததா இருக்கறதாலே மகாராஜா வாழ்க்கையையும் வாழ்ந்துதான் பார்த்துருவோமேன்னு வந்துட்டுப் போறதுதான். போதாக்குறைக்கு இந்திய சினிமாக்கள் இதுவரை படத்தில் வராத புது லொகேஷன், புது மாளிகைன்னு காமிக்க இந்த அரண்மனைகளில் படப்பிடிப்பு நடத்திக்கிட்டு அதுக்குண்டான தொகையைக் கொடுக்குது. இப்படியாக அரசகுடும்பம் வருமானத்துக்கு வழி தேடிக்கிட்டாங்க. ராஜா தானே உக்காந்துக்கிட்டு, என் அரண்மனையில் தங்க வர்றீயான்னு கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா? அதுக்குன்னு ஏஜெண்டுகளை வச்சுட்டாங்க. அப்படி ஒருஏஜெண்டுதான் 'காசை எண்ணி வச்சாத்தான் தங்க விடுவேன்'னு நம்மாண்டை ஃபோனில் சொன்னது.
இந்த ராஜா, ராணின்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது. நம்ம நியூசியில் எனக்கொரு அண்ணன் அண்ணி கிடைச்சாங்கன்னு சொல்லி இருக்கேன் முந்தி ஒரு சில பதிவுகளில். அவுங்க குஜராத்திகள். அவுங்க வீட்டுலே Zee Tv, அப்புறம் இன்னபிற ஹிந்தித் தொலைக்காட்சி காமிக்கும் என்னென்னவோ சேனல்கள் போட்டுருக்காங்க. அண்ணி (ஹிந்தியில் Bபாபி) 'நான் இந்தியாவில் போய் கொஞ்சநாள் இருக்கப்போறேன்'னதும் ,'ஆஹா..... மஹாராணி மாதிரி இருக்கப்போறே. உன் பாடு ஜாலிதான்'ன்னு சொன்னாங்க. எல்லாம் டிவி சீரியல் பார்த்து அந்த நகைநட்டு, அட்டகாசமான துணிமணிகள், வீடுகள், அலங்காரப்பொருட்கள், ஆடம்பரங்கள் எல்லாம் 'நெசமுன்னு' நம்புன அப்பாவி பாபி.
நியூஸியில் வேலைக்கு உதவியாளர்கள் வச்சுக் கட்டுபடி ஆகாது. அதனால் கக்கூஸ் கழுவறதுமுதல், கடைகண்ணிக்குப் போய்வர்றதுவரை மொத்த வீட்டு வேலைகளையும் நாங்களேதான் செஞ்சுக்குவோம். நாம் மட்டுமில்லை, நிறையக் காசு வச்சுருக்கும் தனவான்களுமே எல்லாம் 'தாமாய் தாமாய்' தான். க்ரிகெட் வீரர்கள், எங்க நகர மேயர், பார்லிமெண்ட் அங்கத்தினர் இப்படி பலர் சூப்பர்மார்கெட்டுலே சாமான்கள் வாங்கி வரிசையில் நின்னு 'பில்லுக்குக் காசு கொடுத்துட்டுப் போறதை' நானே பலமுறை பார்த்துருக்கேன்.
உழைக்கும் கழுதை எங்கே போனாலும் உழைக்கும் என்ற புதுமொழியின்படி (எல்லாம் நானே யோசிச்சு உருவாக்குன புதுமொழியாக்கும்,ஆமா) இங்கே வந்தும் வீட்டுவேலைகள் ஒன்னும் எனக்குக் குறைஞ்சபாடில்லை. இந்த அழகிலே, அரண்மனையில் ஒரு 12 மணிநேரம் தங்குனப்ப அந்த பாபியைத்தான் நினைச்சுக்கிட்டேன்:-)
ஒரு நாள் தங்கறோமுன்னா 24 மணிநேரம் அங்கேயே பழியாக் கிடக்க முடியுதா? நமக்கு இரவில் தங்க ஒரு இடம் என்ற அளவுக்குத்தான். ஒரு அரைநாள் அரசவாழ்வுன்னு வச்சுக்கலாம்:-) இன்னிக்கும் நிறைய இடங்களை முடிஞ்சவரை பார்த்தே ஆகணும். சீக்கிரம் கிளம்பினால்தான் ரொம்ப இருட்டுக்கு முன்னே அடுத்துத் தங்கப்போற ஊருக்குப் போய்ச்சேரமுடியும். நேத்து மைஇருட்டுலே விரட்டிக்கிட்டு வந்த அனுபவமே போதும்போதுமுன்னு ஆகிக்கிடக்கு.
ராயல் டைனிங் ரூமில் போய் ராயல் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டுச் சீக்கிரம் சீக்கிரமுன்னு கிளம்பவே மணி பத்து ஆயிருச்சு.
வழக்கம்போல் படங்கள் ஆல்பத்தில். எல்லாமே அரண்மனை சமாச்சாரம் என்றதால் தலைப்பெல்லாம் கொடுக்க மெனெக்கெடலை.
பயணம் தொடரும்....................:-)
Thursday, February 18, 2010
அரண்மனை வாசம் (குஜராத் பயணத்தொடர் 25 )
Posted by துளசி கோபால் at 2/18/2010 08:02:00 AM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
ஆகா டீச்சர் கொஞ்ச நாள் பணி காரணமாய் இங்க வரவில்லை. அதுக்குள்ள நிறைய பாங்கங்கள் போட்டுவிட்டீர்கள். இன்னிக்கு எல்லாம் சேர்த்து படித்து விட்டேன்.
ஆமா வேடன் ஜரா தான் வாலி என்றும், போன ஜன்மத்தில் இவரு மறைந்து அம்பு விட்டதும்,இதுக்கும் கணக்கு டேலியாகி விட்டது என்பதை ஏன் சொல்லவில்லை. நல்ல தங்கள் நடையில் அருமையான கட்டுரை. சீக்கிரம் மகாபாரத்தை உங்கள் நடையில் சொல்லுங்கள். நாங்கள் படிக்கின்றேம். நன்றி.
இது ராயல் பதிவா இருக்கே! :)
புதுசு புதுசா பழமொழி சொல்றீங்க டீச்சர். அய்யோ ஸாரி புதுமொழி :)
ingayum ippa vlaikaari vachilam kattupadi agathu
\\\\☀நான் ஆதவன்☀ said...
இது ராயல் பதிவா இருக்கே! :)
புதுசு புதுசா பழமொழி சொல்றீங்க டீச்சர். அய்யோ ஸாரி புதுமொழி :)//
ரிப்பீட்டேய்..
(வகுப்பறையில் ரிப்பீட்டேய் எல்லாம் போடலாமில்ல)
//எல்லாம் டிவி சீரியல் பார்த்து அந்த நகைநட்டு, அட்டகாசமான துணிமணிகள், வீடுகள், அலங்காரப்பொருட்கள், ஆடம்பரங்கள் எல்லாம் 'நெசமுன்னு' நம்புன அப்பாவி பாபி.//
நல்ல வேளை.. பாபிக்கு தமிழ் நஹி மாலும். இல்லைன்னா, தமிழில் வந்த சீரியல்களைப்பாத்துட்டு, நீங்க செந்தமிழில் ஏன் பேசல்லைன்னு கேட்டாலும் கேப்பாங்க :-)))))
இப்போதைக்கு சென்னை செந்தமிழ் கத்துக்கிட்டீங்களா.......
25 பகுதிக்கு வாழ்த்துக்கள் டீச்சர் ;))
Chennaiyilaye idhai vida better-a restaurants irukke!!!! Garden-il light potta adhu royal gardena???? Enna royalo?
வாங்க பித்தனின் வாக்கு.
'முன் ஜென்ம வாசனை' மறந்து போச்சுப்பா!
நல்லவேளை ஆபத்சஹாயனா வந்தீங்க!
வாங்க நான் ஆதவன்.
எல்லாம் தானா வர்றதுதான்:-))))
வாங்க எல் கே.
வீட்டுவேலைக்கு மட்டுமில்லை,எந்த வேலைக்கும் ஆள் கிடைக்கறதில்லையாம்.
ஒரு ரூபாய் அரிசி கிடைக்கும்போது எதுக்கு வேலை செய்யணுமுன்னு இருக்காமே!!!!
வாங்க கயலு.
பரிட்சையில் மட்டும் காப்பி அடிக்கக்கூடாது.அம்புட்டுதான்:-)
வாம்மா அமைதிச்சாரல்.
அதென்னா....நாக்கு மேலே பல்லெப்போட்டு இம்மாம்பெரிய கேளுவி கேட்டுட்டே?
அய்ய..... கேக்றெனில்லெ?
தமுளு நல்லா வாய்லெ வருது
வாங்க கோபி.
வரவர எதுக்குத்தான் வாழ்த்தறதுன்னு இல்லை?
பரிட்சைக்கு இந்த 25 லேயும் கேள்வி வரும்,ஆமா:-)
//ஒரு ரூபாய் அரிசி கிடைக்கும்போது எதுக்கு வேலை செய்யணுமுன்னு இருக்காமே!!!//
en manaivi garpagama irunthapa veruna thuni tuvaiak visarichapa 2000 kettanga.
கோபிநாத் said...
25 பகுதிக்கு வாழ்த்துக்கள் டீச்சர் ;)//
:)))))))))))
எல் கே,
ஒருவேளை தினம் பட்டுப்பொடவையாத் துவைக்கணுமோ!!!!!
சென்னையில் நம்ம வீட்டில் பெருக்கித் துடைக்க 3000 கேட்டாங்க.
வாங்க கயலு.
பாவம். சின்னப்பையர். பரிட்சைக்கு இதெல்லாம் வராதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்துருப்பார்:-))))
//ஒருவேளை தினம் பட்டுப்பொடவையாத் துவைக்கணுமோ!//
athu ungalai mathiri aranmanai vasigal veetla ennai mathiri kudisaivasinga veetla illa :D
எல் கே.
அரைநாள் அரண்மனை வாசத்துக்கே இவ்வளோ பவரா? ஆஹா.....:-)
நல்ல அழகான் ராயல் வாசம் நல்லாவே இருக்கு. அரண்மனைகள் எல்லாம் சூப்பர் அக்கா.
வாங்க விஜி.
இன்னிக்காச்சும் அரண்மனை பார்க்க அடுப்படியைவிட்டு வெளியே வந்தீங்களே!!!!
அதுக்கே ஒரு 'ராயல்' நன்றி:-)
ராயல்அரண்மனை வாசம் படங்கள் விபரங்கள் நன்று.
வாங்க மாதேவி.
கூடவே வரும் ஆளைக்காணோமேன்னு இருந்தேன்.
வருகைக்கு நன்றி!
Post a Comment