Wednesday, February 17, 2010

தண்ணீர் தேசம் (குஜராத் பயணத்தொடர் 24)

காந்தி புட்டின தேசமுலோ.... தாகசாந்திக்குத் தடா இருப்பதால் தாங்கமுடியாமல், தவிச்ச வாய்களுக்கு 'இதோ. நானிருக்கேன்'ன்னு ஆறுதல் தருமிடம் ஒன்னு பக்கத்துலே(யே) இருக்கு. சுருக்கமாச் சொன்னால் ஒருகாலத்துலே ( 1982க்கு முன்பு?) தமிழ்நாட்டுக்குப் பாண்டிச்சேரி எப்படியோ அப்படி!

வெறும் 52 கிலோமீட்டர்தான் தூரம். அங்கே போய் சாப்புட்டுக்கலாமுன்னு (அட! பகல் சாப்பாட்டைச் சொல்றேங்க) முடிவு செஞ்சுக்கிட்டோம். அந்த ஊரையும் பார்த்தாப்பொலெ இருக்குமில்லெ? போர்ச்சுக்கீஸியர்கள் வசம் இருந்த பகுதி இது. டாமன் & டி(ய்)யூ (DAMAN & DIU) கேள்விப்பட்ட பெயரா இருக்குமே!

குஜராத்தின் கத்தியவார் பெனின்ஸுலாவில் ஒரு சின்னத் தீவு. அதன் கிழக்குக்கோடியில் ஒரு சின்ன இடம்தான் இந்த டிய்யூ வெறும் நாற்பது சதுர கிலோமீட்டர்கள்தான் பரப்பளவு.

வாஸ்கோட காமா வந்து கோழிக்கோடில் இறங்கியது 1498. இவுங்களும் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் வந்தவங்கதான். மெள்ளமெள்ள கோவா, டாமன், டிய்யூன்னு இடம்பிடிச்சு உக்காந்துக்கிட்டாங்க. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகுகூட வெளியேற மனமில்லாமக் கிடந்தவங்கதான்.

ப்ரிட்டிஷ்காரனைக்கூட ஓட்டிட்டோம். இவுங்களை ஓட்ட முடியலை அப்புறம் 1954-லில் சத்தியாகிரகிகள் கோவாவில் கூடி இவுங்களை ஓட்ட முயற்சி செஞ்சும் ஒன்னும் பலிக்கலை. கடைசியில் 1961 ஆவது ஆண்டு இந்திய ராணுவம் உள்ளே புகுந்துச்சு. இதுதான் ஆப்பரேஷன் விஜய். எப்படியாவது இடத்தைக் காப்பாத்திக்கணுமுன்னு வீராப்பா அங்கே இருந்த போர்ச்சுக்கல் ஆட்கள் வெறும் 3300பேர்தான். நம்ம வீரர்கள் முப்படையும் சேர்த்து முப்பதாயிரம் பேர்.

தாக்குப்பிடிக்கமுடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்ட போர்ச்சுக்கல் கவர்னர் சரண்டர் ஆறோமுன்னு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார். அதுக்குப்பிறகுதான் கோவா தனி மாவட்டமா ஆச்சு. டாமன் டிய்யூ ரெண்டும் மத்திய அரசாங்கத்தின் நேரடிப்பார்வையில் இயங்க ஆரம்பிச்சது. ஒப்பந்தப்படி இதோ அதோன்னு இழுத்துக்கிட்டே போய்க் கடைசி போர்ச்சுக்கீஸியர் வெளியேறிய வருசம் 1969. கிட்டத்தட்ட 460 வருசம் இடம்புடிச்சு உக்கார்ந்துருந்தாங்க. ஒவ்வொரு வந்தேறிகளையும் ஓட்ட எவ்வளவு மெனெக்கெட வேண்டி இருக்கு பாருங்க.

அநேகமாக எல்லா நகரத்துக்கும் அலங்கார நுழைவுவாயில் ஒன்னு கட்டி இருக்காங்க இந்தப் பக்கங்களில். தமிழ்நாட்டில் இதுபோல பார்த்த நினைவு இல்லை. வண்டியைக் கொண்டுபோய் சுங்கச்சாவடியில் நிறுத்துனதும் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு 140 ரூபாய் கட்டச் சொன்னாங்க. ட்ரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் ரசீது ஒன்னு கிடைச்சது.

நிறைய மரங்களும் நிழலில் சாலைகளுமா கொஞ்சம் நல்லாவே இருக்கு. குட்டியா ஒரு ஏர்ப்போர்ட். கடலை ஒட்டிய சாலைகளும் பீச்களுமா இருக்கு.
ரிவேரா ரெஸ்டாரண்டுக்குள் நுழைஞ்சோம். உள்ளேயும் வெளியேயும் அலங்காரம் சூப்பரா இருக்கு. வெளியே வரவேற்பில் ஒரு பளிங்கு ராதாகிருஷ்ணரின் சிலை கொள்ளை அழகு.

சாப்பாடானதும் ச்சும்மா ஊரை ஒரு சுத்து. கூட்டமே இல்லாத அழகான கடற்கரைகள். அங்கங்கே கொத்துக் கொத்தா சிலர் மட்டுமே. சின்னக் கொட்டகைகளிலே ரெஸ்டாரண்டுகள் என்ற பெயரில் உணவுக்கடைகள் கடலைப்பார்த்தபடி. முக்கியமாச் சொல்லவேண்டியது சுத்தம். தைரியமா மணலில் உக்கார்ந்துக்கலாம். ( சென்னை மெரினாவில் காணும்பொங்கலுக்கு மறுநாள் 100 டன் குப்பைகளை எடுத்தாங்களாம். தினசரியில் பார்த்த செய்தி சமயசந்தர்ப்பம் தெரியாமல் இப்ப இதைத் தட்டச்சும்போது மனசுக்குள்ளெ வந்து எட்டிப்பார்க்குது)
மத்தியான வேளை பாருங்க. அவ்வளவா (tide) டைட் இல்லாததால் அங்கங்கே கடல் உள்வாங்கி இருக்கு. மஸ்ஸல்ஸ் ஒட்டிப்பிடிச்சுருக்கும் பாறைகள் எல்லாம் வெளியில் வந்து, வெய்யல் காய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. கங்கேஸ்வர் என்ற போர்டு பார்த்துட்டு வண்டியில் இருந்து இறங்கினோம். கடற்கரை ஓரத்தில் சமூகக்கூடம் போல ஒரு ஹால் கட்டிவச்சுருக்காங்க. விழாக்கள் நடத்த ஏற்ற இடம். பேஸ்மெண்டுக்குப் போகும் படிகள் மாதிரி இருக்கும் இடத்துலே இறங்கிப்போனால் பாறைகளைக் குடைஞ்சதுபோல் ஒரு இடம். நிறைய சிவலிங்கங்கள் வச்சுருக்காங்க. பாறையின் மேல்புறம் நெளிஞ்சு வரும் பாம்பு. அஞ்சுதலை நாகமாம். அந்தரத்தில் நிக்குது. நந்தியும் புள்ளையாருமா இருக்காங்க.இன்னொரு இடத்தில் அஸிஸி தேவாலயம் ஒன்னு விசாலமான ஸ்பானிஷ் படிக்கட்டுகளோடு நிக்குது. இதுமாதிரி படிக்கட்டுகளை இத்தாலியில் பார்த்துருக்கேன். செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் அஸிஸி. இந்த மடத்தின் சார்பில் 1593லே கட்டப்பட்ட கோவில் இது. சரியான பராமரிப்பு இல்லாமல் கொஞ்சம் பாழடைஞ்ச தோற்றமா இருக்கேன்னு உள்ளெ போய்ப் பார்க்கலை.
இன்னும் கொஞ்சம் தூரம் போனால் பழங்கால தேவாலயம் ஒன்னு கம்பீரமா நிக்குது. 400 வருசப் பழசு. 1600 லே கட்ட ஆரம்பிச்சு பத்துவருசத்துலே முடிச்சுட்டாங்க. செயிண்ட் பால்'ஸ் சர்ச். உள்ளே அட்டகாசம். ஆல்டரில் மரவேலைப்பாடுகள் அருமை. நம்ம இந்துக்கோவில்களின் சிற்ப வேலைப்பாடுகளைப்போலவே இங்கேயும் பெயர்தெரியாதவர்களின் கைவண்ணத்தால் அற்புதமான நுண்சிற்பங்கள். உள்கூரை பிரமாதம். நல்ல பெரிய தேவாலயம்.
பழைய கட்டிடங்கள், வீடுகள் சில பழமை மாறாமல் இன்னும் அதே ஸ்டைலில் வச்சுருக்காங்க. அருமையான ஊர்தான். ஆனாலும் நாம் சுற்றுலாப் பயணிகளாச்சே. எதைப்பார்த்தாலும் நல்லாத்தானே இருக்கும்!
அங்கே சுத்தி இங்கே சுத்தின்னு ஒரு கோட்டைக்குப்போய்ச் சேர்ந்தோம். நுழைவுவாசலில் 30-9-922 ன்னு வருசம்(?) குறிப்பிட்டு இருக்கு. சந்தேகப்பேய் வந்து மனசைப் பிறாண்ட ஆரம்பிச்சது.
வெள்ளையர்கள் இங்கே நம்ம நாட்டுக்கு வருமுன் வருசங்களை எப்படிக் கணக்கிட்டோம்? கி.பி. எல்லாம் இவுங்க கொண்டுவந்ததில்லையோ? அதுவுமில்லாமல் முதலில் வந்தவங்க போர்ச்சுகீஸியர்கள் என்றாலும், வந்தது 1498தானே? கணக்குப்பார்த்தால் 512 வருசம். அப்ப 922 லே கோட்டையை யார் கட்டி இருப்பாங்க? அப்போதிருந்த மன்னர்கள் கட்டிவச்சு, அதுக்குப்பிறகு வந்து இடம்பிடிச்ச போர்ச்சுகல் அரசு மேம்படுத்தி இருக்குமோ?

கோட்டைமேல் பீரங்கிகள் ஏற்றிக் கொண்டுபோக சரிவான வழி ஒன்னு போட்டுவச்சுருக்காங்க. ஒரு ஏழெட்டு பீரங்கிகள் நிக்குது. இந்த இடங்களை எங்கியோ பார்த்துருக்கோமே..... கனவிலோ? ஊஹூம்..... மணிரத்தினம் படங்களில், மனிஷா கொய்ராலாவும் அர்விந்த்சாமியும் ஓடிவந்து சந்திச்சுக்கும் இடங்கள்!
பீரங்கிவச்சு என்னைத் தொலைச்சுடலாமுன்னு கோபால் கண்ட கனவு பலிக்கலை. திருப்ப முடியலையேப்பா......

கோட்டைக்குள் ஒரு சிவன் கோவிலும் இருக்கு. ஒருபகுதி சப் ஜெயிலா இயங்குதாம். இன்மேட்ஸ்களை வச்சு இடத்தைச் சுத்தம் செஞ்சுக்கலாம். அவுங்களுக்கும் ஒரு வேலை கொடுத்தமாதிரி ஆச்சு. ஆனால் சட்டம் என்ன சொல்லுதோ?

கீழே கோட்டையைச் சுற்றி அகழிகள். கடலில் டைட் வரும்போது தண்ணீர் வந்து சேரும்விதமா வழி செஞ்சுருக்காங்க. கோட்டைச்சுவர்களில் முளைச்சிருக்கும் செடிகளையும், மரக்கன்றுகளையும் அப்புறப்படுத்த ஏணிவச்சு ஏறி, சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க சில பணியாட்கள். (நம்ம பக்கம் கோவில் கோபுரங்களில் ஏகத்துக்கும் வளர்ந்து நிற்கும் செடிகொடிகளையும் அப்பப்பக் கவனிச்சு அகற்றினால் கோபுரங்கள் விரிசலடையாமல் இருக்கும். 12 வருசத்துக்கொருமுறை கும்பாபிஷேகம் செஞ்சுக்கும் கோவில்களுக்கு மட்டுமே விடிவுகாலம் இருக்கு. கவனிப்பு இல்லாதவைகள்........ பாவம் )

இன்னிக்கு இரவு இங்கே டிய்யூவில்கூடத் தங்கலாமுன்னு பப்பன் கொடுத்த ஐடியாவைத் தள்ளிட்டோம். டிய்யூ வரப்போறோமுன்னு யாருக்குத் தெரியும்? ஏற்கெனவே இன்னொரு ஊரில் தங்கலாமுன்னு திட்டம் இருக்கு. அங்கே இருக்கும் அரண்மனையில் அறை புக் பண்ண சென்னையில் இருந்து கூப்பிட்டால், முதலில் காசை மும்பையில் இருக்கும் ஒரு ஏஜண்டுக்கு அனுப்பணுமாம். காசு கிடைச்சபிறகுதான் ரிஸர்வ் செய்வோமுன்னு சொன்னாங்க. அப்புறம் அந்த ஏஜண்டு கூப்புட்டார். காசு காசுன்னு புலம்பல். சரி. உங்க பேங்க் அக்கவுண்டு சொல்லுங்க. இங்கிருந்து காசை அதுலே போடறோமுன்னால்..... அவுங்க ஒரு ஃபார்ம் அனுப்புவோமுன்னு சொன்னாங்க. 'சரி. அனுப்பு'ன்னதுக்கு, சென்னையை விட்டுக் கிளம்பும்வரை சேதி ஒன்னும் இல்லை. எதுக்கும் இருக்கட்டுமுன்னு வேற ஒரு ஹொட்டேலில் புக் பண்ணி வச்சுக்கிட்டோம்.

ஆனாலும் அரண்மனை ஆசை விட்டுச்சா? இல்லையே:( இன்னொருக்கா முயற்சி செய்யலாமுன்னு, 'கோட்டை'யில் இருந்து 'அரண்மனை'க்கு ஃபோன் போட்டால், இன்னிக்கு அறை காலி இருக்காம். வாங்கன்னு சொன்னாங்க.. இப்பவே மணி அஞ்சு. இன்னும் 200 கிலோமீட்டர் போகணும். எப்படியும் ராத்திரி 9 மணி ஆகிருமே. பரவாயில்லையாம். (ச்சும்மாக் கிடக்கப்போற அறையைத் தூக்கிவச்சுக்கிட்டா இருக்கப்போறாங்க? ) வாங்க. எந்த நேரமானாலும் பரவாயில்லை.

மைக்கேல் மதனகாமராஜன் மனோரமா மாதிரி..... 'மதன் மஹாலா? அரண்மனை மாதிரி இருக்கே'ன்னு நினைப்பு. சட்னு இருட்டிப்போச்சு. டிய்யூவைவிட்டு வெளியே வந்து குஜராத் மாவட்டத்துக்குள்ளே வந்தாச்சு. ஊனா என்ற ஊரில் சூடா ஒரு சாய் குடிச்சுட்டுப்போனோம். சக்கடா இல்லேன்னா ஊர்லே வேலையே நடக்காதுன்னே வச்சுக்கலாம். மகளிர் ஸ்பெஷல், ஸ்கூல் பஸ் எல்லாமே இதான்!
school bus
ladies spl
ஹைவேயில் வண்டியை விரட்டிக்கிட்டுப் போறார் பப்பன். அங்கங்கே பாலம் கட்ட, புது ரோடு போடன்னு வேலைகள் நடக்குது. மாத்துவழின்னு மாறிமாறிப்போறோம். எதிரில் வரும் வண்டிகள் ஃபுல் பீம்' போட்டுக்கிட்டு வர்றாங்க. எந்த விநாடி என்ன ஆகுமோன்னு ஒரு பயம் நமக்கு. இதென்ன, இந்தியா பூராவும் அவுங்களுக்குன்னே ஒரு சாலைவிதிகள் வச்சுக்கிட்டு இருக்காங்களோ? போதாக்குறைக்கு Tட்ரக் நடமாட்டம் ஏராளம்.

போய்ச்சேருமிடம் அரண்மனையா இல்லை ....... வேறெங்காவதா?

படங்கள் இங்கே ஆல்பத்தில். சீக்கிரம் பார்த்துக்கணும். சிலநாட்களில் காணாமல் போகலாம். வந்ததெல்லாம் தங்கிவிட்டால் வரப்போவதுக்கு இடமில்லையே.


பயணம் தொடரும்....................:-)

16 comments:

said...

கடற்கரை மிக அழகு ..

தத்துவத்தைப்பார்த்து பயந்து போய் நான் ஆல்பம் பக்கம் ஓடிட்டேன்..

said...

குஜராத் போகணும் 2 தடவை ப்ளான் செய்து போகமுடியவில்லை..நல்ல உபயோகமான தகவல்..

said...

தேர்ந்தெடுத்த பெயர் பொருத்தம் கவர்ந்தது. ஆனால் இந்த தொடர் முடிவதற்குள் உங்களுக்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாவிட்டாலும் குஜராத்தில் நரேந்திர மோடி உருவாக்கி உள்ள தீர்க்கதரிசன பாதையை குறைந்தபட்சம் கோடிட்டி தமிழர்களுக்கு புரியவைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உலகம் சுற்றும் வாலிபி. இல்லை இல்லை இந்தியாவை அன்புப்பிடியில் கொண்டு வந்து கொண்டு உங்களுக்கு வாழ்த்துகள்.

said...

ஆமாம் ஒவ்வொரு பதிவிலயும் கோபாலைக் குறி வைக்கிறது நீங்க.(காமிராப்பா)
இதில அவரு உங்களையே குறி வச்சிட்டாலும்:)
இங்க ஒண்ணும் குஃபா இல்லையா.
உங்க கேள்விக்கு விடை கண்டுபிடிச்சீங்களா. அது அவங்க கட்டின கோட்டையாத்தான் இருக்கும்.
வரலாறை முந்திப் போடப் பாத்தாங்களோ. இல்ல ஏற்கனவே வந்துட்டுப் போனவங்க வேற யாராவது??
குழப்புதப்பா.
பார்த்துப்பா. சமாஜம் ஏதாவது ஆரம்பிச்சுடப் போறீங்க. தத்துவம் உதிர்க்கிற வேகத்தைப் பார்த்தால் அப்டித்தான் தெரியுது.:)

said...

வாங்க கயலு.

இருக்கும் ஒரு GBக்கு உள்ள ஆட்டம்தான் போடணுமாம்,ஆமா:-)))))

said...

வாங்க அமுதா.

ஹப்பா.... பாலை வார்த்தீங்க. குறைஞ்சபட்சம் உங்களுக்காவது பயனாக இருக்கு:-)))

said...

வாங்க ஜோதிஜி.

அங்கே அந்த 'ஒரு விஷயம்' இல்லாததால் முன்னேற்றம் நிறையத் தெரியுது. குறைஞ்சபட்சம், சம்பாரிக்கும் காசு வீட்டுக்குல்லே போகுது!

ஆணும் பொண்ணுமாய் உழைக்குதுங்க. சோம்பல் இல்லாத ஊரில் மகாலட்சுமி வசிக்கிராள்.

நாம்? கண்ணை வித்துச் சித்திரம் வாங்கிட்டோம். அடுத்து, இலவச ஃபினாயில் தரப்போறாங்க!

said...

வாங்க வல்லி.

குஃபா விஜயம் முடிஞ்சது. இனி கோட்டையில்தான் கொடி!

சமாஜத்துலே உங்களுக்கு லைஃப் டைம் மெம்பர்ஷிப் கொடுத்துடுவேன்.

வர்றவங்க 'தப்பி ஓடாம'ப் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு:-)

said...

//அவ்வளவா (tide) டைட் இல்லாததால் அங்கங்கே கடல் உள்வாங்கி இருக்கு. மஸ்ஸல்ஸ் ஒட்டிப்பிடிச்சுருக்கும் பாறைகள் எல்லாம் வெளியில் வந்து, வெய்யல் காய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க.//

இந்தப்பக்கம் கடலில் பெரிய அலைகள் கிடையாது.. கவனிச்சீங்களா..

லோ டைட்(tide) வந்தா 2,3 கிலோமீட்டர் வரைக்கும்கூட கடல் உள்வாங்கும். நேரத்தை தெரிஞ்சி வெச்சிருந்தா ஜாலியா ஒரு வாக் போகலாம்.

said...

கடற்கரை அழகு.. பிகாசாவுல பார்த்தது தான் :)

said...

//மணிரத்தினம் படங்களில், மனிஷா கொய்ராலாவும் அர்விந்த்சாமியும் ஓடிவந்து சந்திச்சுக்கும் இடங்கள்!//

antha idam keralavakum. daman illai

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம ஹாஜி அலி (பாம்பேயில்) கூட டைட் இல்லாதப்ப நடந்துபோக நல்லாத்தானே இருக்கு.

ஆனா கணக்குப் பிசகக்கூடாது:-)

said...

வாங்க நான் ஆதவன்.

ஆல்பம் பார்த்ததுக்கு அஞ்சு மார்க் போனஸ்:-)

said...

வாங்க எல் கே.

//daman illai//

ஆமாம்.

said...

"பளிங்கு ராதாகிருஷ்ணரின் சிலை கொள்ளை அழகு." கொஞ்சும் அழகு.

ஆல்பம் படங்கள் யாவும் நன்று.

said...

வாங்க மாதேவி.

ஆல்பத்தைத்தான் அப்படியே விட்டுவைக்கமுடியாத நிலமை:(