சரியான நேரத்துக்கு வந்து, உன்னை மட்டும் பார்த்துட்டு அடுத்த படகைப் பிடிச்சு மெயின்லேண்டுக்குப் போகவிடாம இப்படி பதிவுகளுக்கு மேட்டர் தேத்திக் கொடுக்கறயேடா க்ருஷ்ணா! நாலுமணி நேரம் சுத்தவச்சுருக்கே. உன் சுதர்ஸனத்தை எங்கே வைப்பதுன்னு தெரியாம என் தலையில் வச்சியா? இல்லே சக்கரத்தில் ஏத்திவிட்டயா? (காலில் னு சொன்னால் மரியாதைக் குறைவாகுமேன்னு தலையில்னு எழுதி இருக்கேன்.. பார்த்துக்கோப்பா. உனக்குத் தெரியாததா?)
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று சொன்னவனை அதே மார்கழி மாசக்காலத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைச்சதேன்னு கூட்டம் நெரியும் கடைகளைக் கடந்து கோவில் வளாகத்தில் நுழைஞ்சோம். செல்ஃபோன், கேமெராவுக்கு அனுமதி இல்லை. மெயின்லேண்ட் கோவிலில் இருப்பதுபோலவே ரெண்டு ரூபாய்க்கு ஒரு அயிட்டம் காப்பாத்தித் தர்றாங்க. செருப்பு விடவும் தனி இடம், டோக்கன் இப்படி ஒன்னும் இல்லை. எங்கியாவது விட்டுட்டுப்போகணும்.
தொடல் தழுவல் எல்லாம் ஆச்சு. பெண்கள் கைப்பை கொண்டு போகவிட்டவங்க ஆண்களுக்குச் சட்டம் வேறன்னுட்டாங்க. எங்கே பையை வைக்கன்னு இவர் முழிக்கிறார். சும்மா வெளியே விட்டுட்டுப் போங்க இருக்கும்னு சொன்னாங்க.
இங்கே உள்ளே நுழைஞ்சால் வீடு மாதிரி ஒரு அமைப்பு. கோவிலின் லக்ஷ்ணம் ஒன்னும் கண்ணில் படலை. வீட்டு வாசலை நோக்கிப்போகும்போது வலதுபக்கம் இருந்த பக்கத்து வீட்டு வாசலில் ஒருத்தர் வந்து நின்னுட்டு, சீக்கிரம் ஓடிவாங்க. தர்ஷன் டைம் ஆச்சுன்னதும் எல்லோருமா அங்கே பாய்ஞ்சோம். மூடிய திரைக்கு முன்னே முட்டலும் தள்ளலும். இங்கேயும் கூட்டத்தின் நடுவில் சிக்கிக்கொண்டோம். ச்சாலுகரோன்னு யாரோ சொன்னதும் ராதே ஷ்யாம் ராதே ஷ்யாம்''ன்னு கோஷங்கள் ஆரம்பிச்சது. ஒருத்தர் சொன்னதும் அதையே எல்லோரும் ரிப்பீட்டறதுமா போய்க்கிட்டு இருக்கு. ஒரு கட்டத்தில் எல்லோரும் அப்படியே உணர்ச்சிவசப்பட்டு அலறுனதும் ஒரு ஓய்ச்சல். ரெண்டு விநாடி இடைவெளிவிட்டு அடுத்த ஆள் ஆரம்பிக்கிறார்.
"ஹாத்தீ கோடீ பால்கி
ஜெய் கனையா லால் கீ"
இப்படி ஒரு கோஷம் கிளம்புச்சு. பத்து நிமிசம் இடைவிடாம மக்களின் மனநிலையை ஏதோ மயக்கத்துக்குக் கொண்டுபோயிட்டு, சரேல்னு திரை விலகல். அவனே இவன்! அதே போல் அலங்காரமும் கூட! சரசரன்னு கூட்டம் நகர நாங்களும் தடுப்புவரை போய் தரசித்தோம். கண்ணைச் சுழற்றினால் இது ஒரு பெரிய முற்றம்தான். ரெண்டு பக்கம் வாசல் இருக்கு. மூலவருக்கு நேர் எதிரே தேவகி. ரெண்டு பக்கமும் தனிச்சந்நிதிகளில் புருஷோத்தமன், மாதவன். மூலவரின் இடது பக்க வாசலுக்கருகில் பெரிய திருவடி எழுந்தருளி இருக்கார்.
வந்த வாசலில் போய் அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். சத்யபாமா, அம்பாஜி சந்நிதிகள் ஒரு பக்கம். உள்ளே போகப்போக பரந்து விரிந்த கூடங்கள். ஏதோ பழைய காலத்து அரண்மனைப்பகுதி போல இருக்கு. அங்கங்கே சுவரில் சில சித்திரங்கள். யாரும் யாரையும் ஒன்னும் கேட்டுக்கலை. வலதுபக்கக்கூடத்தில் நுழைஞ்சால் சுவருக்கு முன் ஒரு முக்கால் அடி விட்டு ஒரு தூண் முளைச்சுருக்கு. யாராக்கும்? யாராக்கும் இதை இங்கே கொண்டுவந்து வச்சது? பார்த்தால் ரொம்பப் பழசாத்தான் இருக்கு. சுவரைத்தான் தூண் வந்தபிறகு கட்டி இருக்கணும்.
சிலர் அந்த இடைவெளியில் கஷ்டப்பட்டு நுழைஞ்சு வெளியே வர்றாங்க. ஏனாம் இந்தப் பாடு? அடுத்த பிறவி இல்லாமல் இருக்குமாம். அதான் காஞ்சி கைலாசநாதர் உள்பிரகாரத்தின் குகைவழியில் போய்வந்து பிறவியைத் தொலைச்சாச்சே. இங்கேயும் போகணுமா என்ன? பலன் ரிவர்ஸ் ஆயிட்டா? வேண்டாம் விஷப்பரீட்சை! அப்படியே அந்த பக்கத்துக் கூடத்தில் போனால்...மடப்பள்ளி. பெரிய பிரம்புக்கூடைகள் நிறைய பூரி மாதிரி ஒன்னு குவிஞ்சு கிடக்கு. பக்கத்துலே ஒரு பாயில் திரட்டிப்போட்ட பூரிகள், பொரிக்கத் தயாரா காத்துருக்கு. அச்சச்சோ.... ஏதோ வாசலில் நுழைஞ்சுட்டோமேன்னு பக்கவாட்டுக் கதவில் புகுந்து வெளியே வந்தால் அது மூலவர் இருக்கும் முற்றத்தில் கொண்டு விட்டுருக்கு.
கண் எதிரே யாருமே இல்லாமல் வெறிச்சுன்னு இருக்கும் முற்றத்தில் த்வார்கீஷீன் ஏகாந்த சேவை! சட்னு போய் முன்னால் நின்னேன். . கொஞ்சநேரத்துக்கு முன்னே முட்டித்தள்ளிய கூட்டம் எங்கே? மாயமாய் மறைஞ்சுருச்சு! 'சரி. தரிசனம் உனக்காக நல்லாக் கொடுத்துட்டார். வா போகலாமு'ன்னு இவர் அவசரப்படுத்தறார். 'தொரக்குனா இட்டிமண்ட்டி ஸேவா?' கொஞ்சம் இருங்க. தனியா இருக்கான். யாராவது வரும்வரை நான் துணைக்கு இருந்துட்டுத்தான் வருவேன். ஒரு ஆறேழு நிமிசம் வரை யாருமே வரலை. அடிச்சேன் ப்ரைஸ்!
ரெண்டு பேர் வந்து அங்கே நின்னாங்க. அவுங்களை துணைக்கு விட்டுட்டு வரலாமுன்னா.................சரேல்..... திரை மூடப்பட்டது. (அது என்னமோ எனக்குக் கோவில்களில் சாமி தேமேன்னு தனியா இருந்தால் துணைக்கு நிக்கத்தோணும். இங்கே அடையார் பதுமநாபனுக்கும் அடிக்கடி துணை போறதுதான்)
இந்தக் கோவில்களில் எல்லாம் டிமாண்ட் க்ரியேட் பண்ணி வைக்கிறாங்கன்னு தோணுது. பத்தே நிமிஷம்தான் தரிசனம்னு சொன்னதும் எல்லாக் கூட்டமும் முட்டி மோதி ஏதோ ரேஷன் கடையில் கிடைக்காத பொருளுக்கு அலைமோதும் மக்களைப்போல ஒரு ஸீன் உண்டாகிருது பாருங்க. திரை போட்டுப் போட்டு, நாளைக்கு பலமுறை சாமிக்கு சாப்பாடு. இப்படி வேளை பாளையில்லாமத் தின்னா உடம்பு என்னாவது? மூணு வேளை நைவேத்யம் வச்சால் போதாதா?
இத்தனைக் கலாட்டாக்களுக்கிடையில் எங்கேயும் இதுவரை சாமி ப்ரசாதமுன்னு நம்ம கண்ணுக்கு எதுவுமே காட்டப்படலை. இத்தனை bhog அயிட்டங்களும் எங்கே தான் போகுது? நம்ம கீதாவேற இனிப்பான இனிப்புப் பண்டங்கள் விருந்துதான் கண்ணனுக்குன்னு போறபோக்கில் எழுதிவச்சுட்டாங்க. ஆனால்........ எங்கே? எங்கே? அதாவது போகட்டும். இந்தப் பால்தயிர் வகையறாக்கள்...... குச் பி நை திக்த்தா........
கடல்கொண்ட கோவில் எந்தப் பக்கம் இருந்துச்சுன்னோ, பழைய துவாரகை நகர வீதிகள் தொல்பொருளாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களோ ஒன்னும் கிடைக்கலை. குறைஞ்சபட்சம் கோவில் வளாகத்துலே ஒரு கூடத்தில் படங்களைத் தொகுத்து வச்சுருந்தால்கூட நல்லா இருக்கும்.
வெளியே வந்து பை, செருப்புகள் எல்லாம் விட்ட இடத்தில் இருப்பதைப் பார்த்து 'தேங்ஸ்டா க்ருஷ்ணா'ன்னு சொல்லிட்டு கேமெரா, செல்கள் எல்லாம் திருப்பி வாங்கிக்கிட்டுப் படகுத்துறைக்குக் கிளம்பினோம். எப்படியும் கடைகளுக்கிடையில் உள்ள பாதைவழியாத்தானே வந்தாகணும்? பாசிமணிகள் அலங்காரம் எக்கசக்கமாக் கிடைக்குது. அழகாத்தான் இருக்குன்னாலும் கையில் எடுத்துப் பார்த்தால் ஏகப்பட்ட கனம். சின்னதா ரெண்டு நினைவுப்பொருள் (கல்லுவச்ச த்வார்காதீஷ்) வாங்கினோம். ப்ரெஷாக் கரும்பு ஜூஸ் பிழிஞ்சு கிடைக்குது. ஆளுக்கொரு க்ளாஸ் அடிச்சுட்டுப் படகுத்துறைக்கு வந்து காத்திருந்த படகில் ஏறிக் குந்துனோம்.
கோவிலில் நுழைஞ்சதுலே இருந்து வெளியே வர அரைமணிதான் ஆகி இருக்கு! இங்கே படகுக்கு வர ஒரு 20 நிமிசம். கூடிவந்தாலும் ஒரு மணிநேரம் தான் கோவில் விஸிட்டுக்கு ஆகுது! பதினைஞ்சு நிமிசக் காத்திருப்பு. கூட்டம் சேர்ந்து போனதும் படகு கிளம்பியது. வரும்போது 6, இப்போ போகும்போது 7 ன்னு 13 ரூபாய் ஒரு ஆளுக்கு டிக்கெட்.
காலிப் பால்கேன்கள் நாலைஞ்சு கோர்த்து எடுத்துக்கிட்டு நமக்கு முன்னால் படகுத்தரையில் ஒரு பால்காரம்மா. அப்பாடா..... கீதா சொன்ன பால் பாத்திரத்தையாவது பார்த்தோமேன்னு ஒரு திருப்தி:-) காயத்ரின்னு ஒரு பூ பெரிய குடும்பத்தோடு பயணிச்சது.. நிதானமாக 20 நிமிடப் பயணம்.
லைஃப் ஜாக்கெட்டை ஒரு பெரிய பெட்டியில் பத்திரமாவச்சு மூடி இருந்தாங்க. எத்தனை விபத்துகள் நடந்தாலும் யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டாங்க போல. விதிப்பா....விதி! எல்லாம் அவன் செயல்!
பயணம் தொடரும்..............:-)))))
Wednesday, February 03, 2010
மாதங்களில் அவன் மார்கழி (குஜராத் பயணத்தொடர் 14)
Posted by துளசி கோபால் at 2/03/2010 03:50:00 PM
Labels: அனுபவம் | குஜராத்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//பலன் ரிவர்ஸ் ஆயிட்டா?//
இன்னும் பயணம் போறதுக்கு எவ்வளவு இடம் இருக்கு. பிறவி வேண்டாம்னா எப்படி பயணப்படறது எல்லா இடத்துக்கும் :)
"ஒரு ஆறேழு நிமிசம் வரை யாருமே வரலை. அடிச்சேன் ப்ரைஸ்!" இவ்வளவு சிரமப் பட்டு துளசி கோபால் சென்ற பயணத்தில் இதையும் கொடுக்காவிட்டால்... துரோகியாகி விடுவாரே.
சொன்னாங்கப்பா, அடையாறில. பத்மநாபனுக்குக் காவலா ஒரு அம்மா தெனம் வந்துட்டு, நல்லாயிருக்கியா.
சரியாச் சாப்பாடு போட்டாங்களா, இப்படித் தனியாப் படுத்துண்டு இருக்கியேன்னு அர்ச்சனை பண்ணுது. அப்டின்னு:)
பால் கேனைக் காணோமே!!
//பலன் ரிவர்ஸ் ஆயிட்டா?/
என்ன ஒரு முன் ஜாக்கிரதை :)
திரை போடற வழக்கம் பத்தி ரொம்ப உண்மைகள் சொல்லி இருக்கீங்க.. :)
இப்போதைக்கு அந்த குழந்தை படம் நல்லா வந்திருக்கு ;))
வாங்க சின்ன அம்மிணி.
அடுத்த ஜென்மத்துலேயும் பதிவர் உத்யோகம்தானா??????
பிறந்தால் கடவுளாப் பிறக்கணுமுன்னு கேக்கப்போறேன்!
வாங்க மாதேவி.
இதெல்லாம் ஒரு ஆறுதல் பரிசுப்பா.
தலையில் குட்டிட்டுக் கையில் ஒரு முட்டாய் கொடுப்பது போல!
வாங்க வல்லி.
கேன் காலி! அதான் கழுவிக் கமுத்தியாச்சு!
வாங்க கயலு.
டிமாண்ட் இல்லைன்னா யாரு மதிக்கிறா?
ச்சும்மா இருக்கும் வட்டம் கூட நாலுவாட்டி நம்மை அலையவிட்டுல்லே பார்க்க முடியுது
வாங்க கோபி.
//இப்போதைக்கு//
சொன்னாலும் சொன்னீங்க கோடியில் ஒரு வார்த்தை.
இப்ப பூ.
அந்தப் பாட்டி வயசுலே எப்படி இருக்குமோ?
//சிலர் அந்த இடைவெளியில் கஷ்டப்பட்டு நுழைஞ்சு வெளியே வர்றாங்க. ஏனாம் இந்தப் பாடு? அடுத்த பிறவி இல்லாமல் இருக்குமாம்.//
:)
இதே போல் எல்லாக் கோவில்களிலும் இருந்தால் மக்கள் தொகை பெருக்கமாவது குறையும் !
வடக்கு தெக்குங்கிறாங்கே, அந்த குழந்தைகள் முகத்தைப் பார்த்தால் நம்ம தமிழ்நாட்டு குழந்தைகள் போலவே இருக்கு.
வாங்க கோவியார்.
நீங்க வேற........
ஒருத்தர் வதவதன்னு பெத்துப்போட்டுட்டு தூணுக்குப்பின்னே நுழைஞ்சுவந்தால் ஆச்சா?
பெற்றதுகள் பெறாமல் இருக்குமோ?
மனித குலம் பல்கிப்பெருகணுமுன்னு ரெண்டே நாட்டுக்கு பகவான் ஆசீர்வாதம் பண்ணிப்புட்டார்.
ஆனா பாரதத்துக்கு இது ஒன்னும் புதுசில்லை. எத்தனை முறை பூ பாரம் அதிகரிச்சுத் தன்னாலே தாங்க முடியலைன்னு பூமாதேவி முறையிட்டதால் பூ பாரம் குறைய வழி பண்ணியவர்தான்.
ஆனால் இப்போ...பூ.... மாதேவி டோண்ட் கேர்ன்னு இருக்காங்க போல!
Post a Comment