Tuesday, February 02, 2010

வடக்குன்னாலே இந்த ஆட்டமா? மகர்ஜோதியின் தாய் யார்? (குஜராத் பயணத்தொடர் 13)

எதிர்பாராமக் கிடைக்கும் சில அனுபவங்களைவச்சு ஐடியா ஒன்னு உருவாகிக்கிட்டே வருவதைத் தடுக்கமுடியலை. பத்தே நிமிசப்பயணத்துலே வந்து இறங்கிட்டோம். கோவிலுக்கு வளைவளைவா அலங்கார நுழைவாசலும் நல்ல காம்பவுண்டுமாக் கட்டிவச்சுருக்கு உள்ளே நுழைஞ்சால் நேரா, குட்டியா ஒரு சந்நிதியில் சிவன் லிங்க உருவில். தலையில் நாகம்.

நமக்குவலதுபக்கம் கூரை போட்டு மூணுபுறம் சுவர் வச்ச சந்நிதி. மேடையில் அந்த நவ்க்ரஹ். தென்னிந்தியக் கோவில்களில் இருப்பவர்கள் இங்கே வந்தது நம்ம கலியபெருமாளின் தயவால். நம்ம கோவிலுக்கு ஒரு ஸ்பெஷாலிடி வேணாமோ? அதான் க்ரஹ் வந்துருக்காங்க. அவுங்களுக்கும் கிரகநிலை சரி இல்லையோ என்னவோ..... ஒருவரிசையில் நடுவே நிற்க வேண்டிய சனி வலப்பக்கம் ஒதுங்கிட்டார். யாருக்கு இடம் கொடுத்துருக்காரோ? இப்போ ராகுவும் கேதுவும் அடுத்தடுத்து....தலையும் ஒடம்பும் எவ்வளோ நாள்தான் தள்ளித்தள்ளி நிற்பது? .அதுவுமில்லாமல் எட்டுப்பேரையும் நிக்கவச்ச திசைகளும் சரியில்லை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்தும்படியாக ஆகிக்கிடக்கு.
போயிட்டுப்போகுது போங்க. அவரவர் ரொம்ப பக்தியா வந்து கும்பிடும்போது
நாம் குறுக்கே விழுந்து இது சொள்ளை அது சொட்டைன்னு சொல்லணுமா? நம்பிக்கைதானே கடவுள். காலியாவுக்குத் தெரிஞ்சமாதிரி வச்சுருக்கார்ன்னு நினைச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான். இதுலே நாங்க 'ஸ்வாமிஜி'யைப் பார்த்துப் பேசணுமுன்னு அந்த ஐவருக்கு தீராத ஆசை. 'மத்ராஸி லோக், பாத் கைஸே?ன்னு ஆர்வம். இடப்பக்கம் இருந்த ஷெட் போன்ற குடிசை(?)அமைப்பில் கயித்துக்கட்டிலில் உக்காந்துருந்தார். நட்டநடுவிலே ஒரு யாககுண்டம். ஒருவேளை அடுப்பா இருக்குமோ? இல்லேன்னா குளிருக்குக் கணப்பு? உடல்நிலை இப்போக் கொஞ்சம் சரி இல்லையாம். சீர்காழி சொந்த ஊர்.. இங்கே வந்து .... அது ஆச்சு நாப்பது வருசம். (காரணம் என்னவோ!!! ரிஷிமூலம் பார்க்கக்கூடாது. தப்பு தப்பு. ) ஊர்ப்பக்கம் போய்வந்தீங்களான்னு கேட்டேன். போனமாசம் போயிட்டு வந்தாராம். இவருக்கு அடுத்தபடியா பீடத்தைப் பிடிக்க ஏற்கெனவே சிஷ்யப்பிள்ளை ரெடி. அவர் ஜெயங்கொண்டான்காரர். மூணாவது பீடாதிபதி போஸ்ட் இப்போதைக்குக் காலி. மனசுலே குறிச்சு வச்சுக்கிட்டேன். (வந்ததும் கோவிலை புனருத்தாரணம் செஞ்சு நவகிரகத்தை ஒழுங்கு படுத்தணும்.அப்புறம்..... ஒரு பெருமாள் சிலை, ம்ம்ம்ம் சரி. அப்போ பார்த்துக்கலாம்) எல்லாம் ஒரு பத்து நிமிசம்தான். பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். ஓம் நமசிவாயா.
அனுமன் கோவிலுக்குப் போறோம். அவர் மகனும் அங்கே இருக்கார். போச்சுடா..... நம்ம பக்கம் ப்ரமச்சாரின்னு வேஷம் கட்டிக்கிட்டு இங்கே வடக்கே வந்ததும் புள்ளையாருக்கு ரெண்டு, அனுமனுக்குப் புள்ளைன்னு என்னடா இது நமக்கடிச்ச சான்ஸ்ன்னு .....

இருவது நிமிச சக்கடாப் பயணம். இதுக்குள்ளே எப்படி ஏறி உக்காந்துகணும், எந்தக் கம்பி பிடிச்சுக்க வாகு, செருப்பைக் கழட்டி ப்ளாஸ்டிக் பையில் போட்டுத் தொடைக்கடியில் வச்சுக்கறதுன்னு ட்ரெய்னிங் ஆகிருச்சு. என்னமோ இதுலேயே பொறந்து வளர்ந்தாப்போல சிஸ்டமேடிக்கா செய்ய ஆரம்பிச்சேன். இவர்வேற முதலில் உல்லாசமா ரெண்டு காலையும் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்தாரா..... வண்டி குலுங்கும் குலுங்கலில் செருப்பு நழுவுது. விழுந்துருச்சுன்னா............. வண்டியை நிறுத்தச் சொல்லி ஓடிப்போய் எடுக்கணும். இதெல்லாம் தேவையா? சூஷிச்சால் துக்கமில்லை என்பது இதுக்கும்தான்.

கள்ளிச்செடி நிறைஞ்ச பாதை. நடுவிலே சின்னதா தார் ரோடு இருக்கு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனுச வாசனை இல்லை. எப்பவாவது ஒரு சக சக்கடா போனால் உண்டு. சில இடங்களில் பத்துப்பதினைஞ்சு வீடுகள் திடீர்னு முளைக்குது. ரொம்ப பழைய ஊர் என்பது சுவர்களையும் கதவு அமைப்புகளையும் பார்த்தாலே புரிஞ்சு போகுது. தீவுன்னதும் வட்டமா வரைஞ்சு காமிப்போமே அப்படி இல்லாம ஒரு ஆங்கில 'W' வை ரெண்டு ஓரத்தையும் கைகளில் பிடிச்சு ஒரே சமயம் புல் ஒர்க் பண்ணுவது போல் இழுத்தால் வரும் டிசைனில் கிடக்கு இந்தத் தீவு. பல இடங்களில் சமுத்திரத்தை ஒட்டியபடியே பாதை. இந்த நேரம் டைட்(tide) இல்லாததால் அங்கங்கே சதசதன்னு கிடக்கு.

கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு இந்தக் கோவில். மதில் சுவர், இரும்பு கேட்ன்னு நல்ல பாதுகாப்பு. கண்ணில் பளிச்ன்னு படுவது பெரீஈஈஈய்ய டிஷ் ஆண்டெனா. உள்ளே நடுவில் கூம்புவடிவக் கோபுரம். சுத்திவர ஏராளமான அறைகள். எங்கே பார்த்தாலும் 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்'ன்னு எழுதிவச்சுருக்கு. ஒரு பக்கம் சுவரில் ஹனுமன்சாலீஸா படக்கதையாக இருக்கு. மும்பைக்காரவுகளின் உபயம்.
கருவறையில் நுழைஞ்சவுடன் ஹனுமனும் அவருக்கு வலப்பக்கம் மகன் மகர்ஜோதியும். (ஆஹா.... இப்போ மார்கழி மாசம். தை ஒன்னு ஆனதும் 'அங்கே' வந்துருவாரோ!!) நமக்கிடப்பக்கம் புள்ளையாரும் தர்மபத்னியும்.(ஒரே ஒருத்தர்) வாசலில் இருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவந்து உடைச்சார் நம்ம குழு பக்தர் ஒருவர். இங்கேயும் ஒரு ஸ்வாமிஜி இருந்து 'பக்தர்கள்' எல்லோருக்கும் ஆசிகள் வழங்கினார். (என் யோசனை உறுத்திப்பட்டுக்கிட்டே இருக்கு. கொஞ்சம் நல்ல வசதிகள் இருக்கே இங்கே. 'அதுக்கு இது' தேவலையோ! ஒரு பூனையும் நாயும்கூட இங்கே இருக்கு. பெட்டர் ப்ளேஸ்)
"மகர்ஜோதியின் தாய் யார்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் அனுமடு. தெற்கே கட்டை பிரம்மச்சாரியா இருந்துக்கிட்டே வடக்கே இப்படி வாலை அவிழ்த்துவிட்ட மர்மம் என்ன?"

"ஏம்மா துளசி. இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இப்படி (எனக்குப் பதிலா) ஆகாயத்துக்கும் பூமிக்குமாக் குதிச்சு அல்லல் படறே? மனைவின்னு யாரும் இல்லை!"

"அப்போ? கொடுக்கு ஏது? க்ளோனிங் பேபின்னு சொல்லாதே. இதெல்லாம் இப்போ சமீபத்துலே வந்தது ஆமாம்."


"குழறுபடி இல்லாம யோசிக்கவே மாட்டியா? எனக்கெதுக்கு இந்த க்ளோனிங்கும் மண்ணாங்கட்டியும்."


"அப்போ? அச்சு அசலா அப்பனைக்கொண்டுருக்கே!"


"இது நான் தத்து எடுத்தத் தொட்டில் பிள்ளை. மானஸ புத்ரன்னுகூட வச்சுக்கலாம்."

"பிரம்மச்சாரிக்கு தத்து எடுக்கும் உரிமை அந்தக் காலத்துலே இருந்துச்சா என்ன? இப்பத்தானே எடுத்துக்கலாமுன்னு ஒரு சட்டம் வந்துருக்கு."


பதில் உடனே வந்தது.


"அதெல்லாம், இப்போ நடக்கும் கலிகாலத்துலே உங்க மானிட உலகுக்கு மட்டும்தான். எங்களுக்கு இல்லையாக்கும். போ....போய் அங்கே ஆடாம அசையாம எல்லாத்தையும் கவனமாப் பார்க்கும் கோபால்கிட்டே இருந்து பையை வாங்கி ஒரு ஓரமா வை. பாவம் அதைத் தூக்கிக்கிட்டே எல்லாப் படத்துலேயும் போஸ் கொடுக்கறார்."


"அதுக்கு நான் என்ன செய்யறது? கடல் பயணம் குளிரடிக்குமுன்னு ரெண்டு ஸ்வெட்டர் எடுத்துப் பையிலே வச்சுக்கிட்டார். பாவம். கையால் சுமக்காமல் உடலால் சுமக்கலாமுன்னா அந்தக் குளிர் எங்கே இருக்குன்னே தெரியலையே.......பை,பைன்னு சொல்ல ஒரு சேதிகூட இருக்கு. அப்புறம் ஒரு நாள் சொல்வேன், கேட்டுக்கோ. இப்ப நேரமாச்சு. பக்தர்கள் புறப்பட்டாச்சு. அப்புறம் பார்க்கலாம்."

இன்னொரு பத்து நிமிசப்பயணம். ஆஷாபூரா மாதா கோவில். சக்தி. சிம்ஹ வாஹினி. கோவில் வளாகத்துலே நடுவிலே ஒரு பெரிய சதுர மேடை. அதைச் சுத்தி வட்டவட்டமா (சிமெண்டுலே செஞ்ச)ராட்சஸ உளுந்துவடை வரிசையா இருக்கு. சௌராஸி சித்த பீட். எண்பத்திநாலு சித்தர்கள் பீடம். ஒரே சமயம் யாகம் செஞ்ச யாககுண்டங்களாம். இப்போ அதுக்குள்ளே அங்கங்கே 'நான்' இருந்தேன். இந்தப் பக்கம் ரெண்டு சந்நிதிகள். உள்ளே சிலா ரூபத்தில் ரெண்டு ரிஷி/முனி/ ஸ்வாமிகள். (உங்க விருப்பம்போல வாசிச்சுக்குங்க)
இடதுபக்கம் இருந்த ஒரு அறைக்கு பக்தர்கள் போனார்கள். பின் தொடர்ந்தோம். பகவான் ஸ்ரீ சந்திர மந்திர். அகண்ட யாககுண்டம்னு பெயர் இருக்கு. இங்கேயும் த்வாரகாநாத், இன்னும் சிலபல கடவுளர் & சாமியார்களின் படங்கள். அதற்கெதிரே பெரிய யாக குண்டம். சாம்பல் பூத்து நிறைஞ்சு வழியுது. சாமியார் இருக்கார். எல்லோரையும் ஆசீர்வதிச்சு விபூதி பூசிட்டு, எழுந்து வெளியே வந்தார். அம்மாடியோ................குழல்குழலா கால்பாதம்வரை நீண்டு தொங்கும் சடைமுடி. பக்தர்கள் நால்வர் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். இந்த இடத்தைப்பற்றிய விஷயமாம். கோர்ட்டில் கேஸ் இருக்காம். க்ளையண்ட் மீட்டிங்.
இதுக்குள்ளே சாமியாரின் அடுக்களையில் இருந்து உதவியாளர் வந்து 'சாய்' குடிக்கிறீங்களான்னு கேட்டார். அதெல்லாம் ஒன்னும் வேணாம். நன்றி.

நாங்கள் இருந்த மரமேடைக்கு ஐந்தாம் நபர் வந்து உக்காந்தார். வக்கீல். சிவில் கேஸும் வாதாடினாலும் க்ரிமினல் வழக்குகள் அதிகம் பார்க்கிறாராம். எந்த மாதிரி க்ரைம்? பெருசா ஒன்னும் இல்லை. வெறும் கொலை வழக்குகள்தான்.. நெசமாவாச் சொல்றீங்க? கிராமத்து ஆட்கள் விருமாண்டிகளா இருக்காங்களாமே!

கோவில் வளாகத்துப் பூனை வந்து தரிசனம் கொடுத்தது.

.ஐவர் குழு இன்னும் சில கோவில்கள் பார்க்கப் போறாங்களாம். இதுவரை பார்த்தது போதுமுன்னு தோணுச்சு. போனவழியிலேயே திரும்பி வந்தோம். யாருமில்லாத அத்துவானக் கள்ளிக்காட்டின் பாதையில் நல்ல ஆடை அலங்காரத்துடன் தன்னந்தனியா ஒரு பெண் நடந்து போய்க்கிட்டு இருக்காங்க. சனிக்கிழமை, அனுமன் கோவிலுக்குப் போறாங்களாம்.

அங்கே வேற நம்ம பப்பன் காத்துக்கிடப்பாரே. மணி நாலரை ஆகப்போகுது. நாம் இந்த தீவுக்கு வந்த வேலை இன்னும் முடியலை. அது நினைவிருக்கட்டும். .....

கோவிலுக்குப் பக்கம் இறக்கிவிடுறோமுன்னு சொல்லி வாசலில் இறக்கிவிட்டுப் போனாங்க.

பயணம் தொடரும்..............:-)

பின் குறிப்பு:

படங்களைத் தனி ஆல்பத்தில் போட்டுருக்கேன். பாருங்க. ஏற்கெனவே நம்ம லிமிட்டைத் தாண்டிட்டோமாம். பழைய ஆல்பங்களை எடுத்துட்டுத்தான் புதுசு சேர்க்க வேண்டி இருக்கு. அதனால் கொஞ்ச நாளில் இதையும் தூக்கவேண்டி இருக்கும்.

இன்னொரு விஷயம் இங்கேயே கேக்கணும். பதிவுகளில் படங்கள் இல்லாமல் போகும் நிலைக்கு வந்துக்கிட்டு இருக்கேன். 98% இடம் போயிருச்சு. அதனால் பழைய பதிவுகளில் போய் படநீக்கம் செய்யணும். ப்ளொக்ஸ்பாட் கடையில் கூடுதல் இடம் வாங்க வழி தெரிஞ்சால் சொல்லுங்க.

17 comments:

said...

துளசி எனக்கும் இதெ நிலை தான்.. 93% ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்.. :(

ப்ளாகுக்கு ஷேர் செய்தது தவிர இருக்கிற மத்த படங்களை வேற இமெயில் ஐடிக்கு மாத்தி வைங்க.. வேற என்ன வழி இருக்குன்னு தெரியலயே..

--
திடீர் திடீர்ன்னு ப்ளான் மாறி இப்படி போகிறதே ஒரு சூப்பரான அனுபவம் இல்லையா துளசி அதும் சக்கடாவில் போறது மாதிரி தடால்ன்னு மாறிக்கிட்டது பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க.. :)

said...

தெரியாத மகர்ஜோதி கதை, பயண அனுபவங்கள் சூப்பர். நிறைய்ய தெரிஞ்சுகிட்டேன்.

டிஸ்கில கடைசி பாரா என்னையும் பயமுறுத்துது. 600 அடிக்க போறேன். நீங்க கத்துகிட்டதும் விரிவா பதிவு போடுங்க

said...

நல்ல பதிவு டீச்சர். பைசா செலவு இல்லாம எங்களையும் சுத்திப் பார்க்க வைச்சுட்டீங்க. நல்ல படங்கள். மூணாவது சாமியாருக்கு நான் வேணா டிரை பண்ணட்டா.
நம்ம ஆளுக்கு குழந்தைன்னு சொன்னதும்,அட இராம இது என்ன புதுக்கதைன்னு யோசிச்சேன். நல்லவேளை சுவிகாரம்ன்னு சொல்லி சுவீட்காரம் கொடுத்தீங்க. ஆமா அந்தக் கதை எப்ப சொல்வீங்க. நன்றி டீச்சர். உங்க ஆளு விநாயக் குடும்பஸ்தர்ரா உக்கார்ந்து இருக்கார். மனையாளுடன் உங்களை எதாவது கவனிச்சாரா.?.

said...

ரெண்டு வாரம் க்ளாஸூக்கு கட் அடிச்சுட்டேன். இந்த பாடம் பாதியிலேருந்து ஜாயின் பண்ணலாமா? இல்ல அடுத்த பாடத்திலேருந்து ஜாயின் பண்ணிக்கவா டீச்சர் :)

said...

\\பதிவுகளில் படங்கள் இல்லாமல் போகும் நிலைக்கு வந்துக்கிட்டு இருக்கேன். 98% இடம் போயிருச்சு. அதனால் பழைய பதிவுகளில் போய் படநீக்கம் செய்யணும்.\\

ஆகா...!!!!

said...

மகர்ஜோதியா. ஐயப்ப சாமியோ:)
கட்டைவண்டி பிரயாணத்துக்கு கூட ஐடியா கொடுக்கிற டீச்சர் வாழ்க.:)
சாமியாருக்கெல்லாம் எப்படிப்பா பிரச்சினை வரும் அநியாயமா இருக்கே!

// தீவுன்னதும் வட்டமா வரைஞ்சு காமிப்போமே அப்படி இல்லாம ஒரு ஆங்கில 'W' வை ரெண்டு ஓரத்தையும் கைகளில் பிடிச்சு ஒரே சமயம் புல் ஒர்க் பண்ணுவது போல் இழுத்தால் வரும் டிசைனில் கிடக்கு இந்தத் தீவு.
பல இடங்களில் சமுத்திரத்தை ஒட்டியபடியே பாதை. //
இது மாதிரி விளக்கம் சொல்ல உங்களை விட்டா ஆளு கிடையாது சாமி.

படங்களைப் போய்ப் பார்க்கிறேன்.

தென்றல் !600 அடிக்கப் போறீங்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

said...

அவ‌ர் தான் சீர்காழிக்கார‌ரா? வீட்டில் கேட்டுப்பார்க்க‌னும் அவ‌ரை தெரியுமா? என்று.

said...

வாங்க கயலு.

கேக்காமலேயே கிடைக்குதேப்பா.... அதான் வருவது வரட்டுமுன்னு வண்டியில் ஏறிட்டோம்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பதிவுகள் எத்தனை ஆயிரமானாலும் பிரச்சனை இல்லை.

இது வலை ஏத்தும் படங்களுக்கு மட்டும்.

படமில்லாத பதிவுகள்தான் இனி:(

said...

வாங்க பித்தனின் வாக்கு.

மூணாவது உங்களுக்கா? ஓக்கே. ஆனா நவக்ரஹ் மறுபடி ஒழுங்கா செட் செஞ்சுருங்க.

இல்லேன்னா.... இப்படிக்கூட வச்சுக்கலாம். எல்லாக் கோவில்களிலும் இல்லாத புதுவிதமா இங்கே க்ரஹ் அமைஞ்சுருக்கு.

இதுக்கு ஒரு கதை யோசிச்சால் ஆச்சு!

said...

வாங்க நான் ஆதவன்.

இந்த போங்கு ஆட்டமெல்லாம் நம்ம வகுப்பில் இல்லை. இதுவரை வந்ததே 13 பகுதிதான். உக்கார்ந்து வாசிங்க. பரிட்சைக்கு வரும் பகுதி இது.

said...

வாங்க கோபி.

படநீக்கம் தவிர வேற வழி இல்லை(-:

said...

வாங்க வல்லி.
//சாமியாருக்கெல்லாம் எப்படிப்பா பிரச்சினை வரும் அநியாயமா இருக்கே!//


என்ன இது சின்னப்புள்ளெத்தனமா இருக்கு!

பிரச்சனை இருப்பதால்தானே பலரும் சாமியார் ஆகறாங்க:-)

அந்த ஆஆஆஆ வில் கொஞ்சம் உங்களுக்கும் வச்சுக்குங்க. 500 அடிக்கப்போறீங்களே!

said...

வாங்க குமார்.

புலன் விசாரணையா? ஆஹா.....

said...

தென்றல் !600 அடிக்கப் போறீங்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

ஆமாம் வல்லிம்மா இப்போதைக்கு 558 :))

said...

"தெற்கே கட்டை பிரம்மச்சாரியா இருந்துக்கிட்டே வடக்கே இப்படி வாலை அவிழ்த்துவிட்ட..."
கதை புதிதாகப் போகுதே. இன்னும் ஒருஊரில் மணவாட்டியையும் காட்டி விடுவார் :))

said...

வாங்க மாதேவி.

அடாப்டட் ஸன்!

ஆமதாபாத்லே ஒரு பெண்ணைக் காலால் மிதிச்சதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோன்னு இப்ப என் குறுக்கு புத்தி யோசிக்குதுப்பா:-)))))