அந்தக் காலத்தில் **** அரசரின் ஆட்சி பொற்காலம் என்று கூறப்படுவது ஏன்?
**** அரசர் சாலைகள் அமைத்தார். குளம் வெட்டினார். சத்திரங்கள் கட்டினார்.......
இந்தக் காலத்திலும் இதேதான். தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட இடத்தில் (மட்டும்) சாலைகள் அமைத்தார், ஷாப்பிங் மால்கள் கட்டினார். தொழிற்சாலைகளைப் பெருக்கி சிலபல மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினார்.
அழகான சாலையின் ரெண்டு பக்கங்களிலுமே அழகு ஆட்சி செய்யுது. ஒரு பக்கம் தொழிற்சாலையின் தோரணவாயில். நேரா எதிர்ப்புறம் ரிலையன்ஸ் மார்ட். பெரிய ஷாப்பிங் ஏரியா, இங்கே இந்த அத்துவானக் காட்டிலே!
முப்பது என்றது ரொம்ப ஆகிவந்த எண் போல இருக்கு. வெறும் முப்பதாயிரம் பேர் வேலை செய்யறாங்களாம். குடியிருப்பெல்லாம் கட்டிக்கொடுத்தால் ஆச்சா? அவுங்களுக்கு Bபூவா? அரிசிபருப்பு உப்புப் புளியெல்லாம் வாங்க ரெண்டு மணிநேரம் பயணம் செஞ்சு பக்கத்தூருக்குப் போகமுடியுமா? கட்டு, ஒரு ஷாப்பிங் மால்!
என்னைமட்டும் கண்ணைக்கட்டி அங்கே கொண்டுபோய் இறக்கிக் கண்கட்டை அவுத்துருந்தால் இது ப்ரிஸ்பேன்லே இருக்கும் ஷாப்பிங் மால்தான்னு துண்டை.... வேணாம்...துப்பட்டாவைப் போட்டுத் தாண்டி சத்தியமே செஞ்சுருப்பேன். ரெண்டே ரெண்டு விஷயம் மட்டுமே இது இந்தியான்னு சொல்லுச்சு.
அதுலே ஒன்னு, ஷாப்பிங் மாலுக்குள்ளே நுழையுமுன் ஹேண்ட் பேகைத் திறந்து காமிக்கணும்(-:. கெமெராவைக் கொடுத்துட்டுப் போகணுமாம். லிப்ஸ்டிக்கையும்.... ஏனாம்? உள்ளே இதெல்லாம் விக்கறாங்களாம். அதுனாலே ? குழப்படி ஆகிருமாம்! அதெல்லாம் ஆகாது. இதெல்லாம் வேற பிராண்டு. உள்ளூர் சரக்கு (இப்பெல்லாம் சீனச்சரக்கும் உள்ளூர் ஆகிப்போச்சுதே) இல்லைன்னு அடிச்சுவிட்டதும், வெளிவரும் வாசலில் நிற்கும் பெண்ணிடம் சொல்லிட்டுப் போங்கன்னு சொன்னாங்க அங்கே 'கடமை ஆற்றிய' பொண்ணு. (இங்கெல்லாம் ஹிந்தியை விட இங்கிலீஷு பேசறது பெட்டர்)
சும்மாச் சொல்லக்கூடாது. நியூஸிக்குத் திரும்பிப்போன மாதிரி இருந்துச்சு கடையின் செட் அப் ஒரே ஒரு பகுதியைத்தவிர. அது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் பகுதி. எனக்கோ....எவர்சில்வர் மேலே அப்படி ஒரு சொல்லவொண்ணாப் பிரியம். (இன்னும் இதுலே புடவை வரலையோன்னு கூடத் தேடுனதா ஆரம்பகாலப்பதிவுகள் ஒன்னில் குறிப்பிட்டு இருப்பேன்.) எட்டுப்பேருக்கான டின்னர் செட் விலை 399 தான்! ஸோ சீப் ஸோ சீப்ன்னு மனசு பரபரக்குது. அருவாளோடு கோபால் எதிரில் நிக்கிறார்! எல்லாம் அந்த ஆசையை முளையிலேயே வெட்டி எறிய(-:
விட்டுறமுடியுமா? அது இல்லேன்னா இதுவாவது வாங்கியே ஆகணுமுன்னு தாளிக்கும் கரண்டி ஒன்னு (ரூ 255) எடுத்துக் கையில் வச்சுக்கிட்டேன். (இதைமட்டும் இன்னிக்கு வாங்கலைன்னா , ஜென்மத்துக்கும் இனி தாளிப்பு இல்லை துளசியின் சமையலில். சூளுரை!)
"எதுக்கு இங்கே இருந்து 'சுமந்துக்கிட்டு'ப் போகணும்? சென்னையில் வாங்கிக்கோ"
சென்னையில் ரிலையன்ஸ் கடைகளில் வெறும் காய்கறி அரிசிபருப்புன்னுதான் இருக்கு(ன்னு நினைக்கிறேன்) இந்த மாதிரி மாலைக் கண்ணுலே காட்ட நீங்க ரெடியா?
(ஜெயிச்சேன்னு வையுங்க)
துணிமணிப் பகுதிக்குப் போனால்... குஜராத்தின் இந்தப் பகுதியின் (ஜாம்நகர் ஸ்பெஷல்ஸ்) விசேஷமான டை அண்ட் டை (tie & dye) துணிவகைகள் இருக்கு. 200 முதல் 2000 வரை உள்ள சல்வார்கமீஸ் செட்கள். சும்மா ஒரு நினைவுக்குன்னு 400 ரூ.வில் ஒன்னு வாங்கினேன். இதுக்குள்ளே இவர் மற்ற ரெடிமேடு பகுதிக்குள்ளே போய் ஒரு சால்வார் & துப்பட்டா செட்ன்னு ஒன்னு எடுத்துக்கிட்டு வர்றார். இதுக்கு கமீஸ் கிடையாது. நம்மிடம் இருப்பதில் காண்ட்ராஸ்ட்டா ஒன்னு எடுத்துப் போட்டுக்கலாம். என்ன திடீன்னு இப்படியெல்லாம் கொண்டுவந்து நீட்டுறாரேன்னு பார்த்தால் சுயநலம்தான். ஏற்கெனவே துப்பட்டா தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லி ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு இருந்தேன் பாருங்க. அந்தத் தேடலின் நிறம். அச்சச்சோ...... இனி நோ ஷாப்பிங்? வடை போச்சே..... ஆனாலும்.......... 'இந்தக் கலர் அந்தக் கலர் இல்லைன்னு தோணுது. எதுக்கும் இருக்கட்டும்'னேன்.
(கடைசியில் சென்னை திரும்பிவந்தபிறகு பார்த்தால்..... தேடுன அதே மூலிகைதான்)
பயணத்துக்கு இருக்கட்டுமுன்னு கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் மூணு மாம்பழ ஜூஸ் பாட்டில்களும் வாங்கிக்கிட்டோம், இது எவ்வளோ பயனா இருக்கப்போகுதுன்னு அப்போ உணராமலேயே! தனியா ஒரு பேக்கரி, இந்திய இனிப்புவகைகள் பகுதின்னு என்னென்னவோ இருக்கு. அப்போ கவனிச்சது இட்லி தோசை மாவும் விற்பனைக்கு இருக்கு. நாப்பது ரூ. கூடவே தேங்காய்ச் சட்டினிப் பாக்கெட் 50 ரூ. தமிழ்க்காரனைப் பிடிக்குதோ இல்லையோ இட்டிலிதோசையை இந்த வடக்கர்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போயிருக்கு!
மாலின் ரெஸ்ட் ரூமைத் தேடிப்போனால்..... அப்பழுக்கு இல்லாம நவீனவடிவில் அமைச்சுப் படுசுத்தமா இருக்கு. இது கட்டாயம் இந்தியாவாக இருக்கச் சான்ஸே இல்லை! என் கையைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்ததும்தான் நம்ப வேண்டியதாப் போச்சு.
அடுத்தவாசலில் நுழைஞ்சால் ஃபுட் கோர்ட். பளபளன்னு ஜொலிக்குது. டிஸ்னி லேண்டில் நுழைஞ்சுட்டேனா என்ன? கூட்டமே இல்லை! பகல் ஒன்னே முக்கால் ஆகப்போகுதே..இங்கேயே எதாவது சாப்பிட்டுக்கலாமுன்னு ஒரு எண்ணம்.
அஞ்சாறு கடைகள் இருக்குன்னாலும் கண்ணில் பளிச்சுன்னு பட்டது தோஸா கிங்டம். அரைமனசோட தோசைக்கு ஆர்டர் கொடுத்தோம். எப்படி இருக்குமோ என்னவோ? பப்பன் தனக்கு ஒரு ஃப்ரைட் ரைஸ் வாங்கிக்கிட்டார். கண்முன்னாலேயே செஞ்சு கொடுத்தாங்க. கொஞ்சம்கூட எதிர்பாராதவிதமா பேப்பர் ரோஸ்ட், உருளை மசாலா, சாம்பார் & சட்னியுடன் அட்டகாசமா வந்துச்சு. விலையும் ரொம்பவே மலிவு! அங்கே ஹைபர்மார்கெட்டில் விக்காத நேத்து மாவை இன்னிக்கு இங்கே தோசையாப் போட்டால் ஆச்சு! சட்னிக்கும் அதே அதே:-)
குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் ஏராளம். பெரியவர்களுக்கு ஆர்க்கெட் கேம்ஸ்ன்னு கம்ப்யூட்டர் விளையாட்டு வகைகள் இப்படிக் கொட்டிக்கிடக்கு. மல்ட்டிப்ளெக்ஸ் உள்பட வளாகம் மூணு லட்சம் சதுர அடி பரப்பளவு. ஒரே கூரையின் கீழ் என்று ஹைபர்மார்கெட் ஏரியாவில் தங்க வைர நகைகள், தோசைமாவு உள்பட 35,000 வகைப் பொருட்கள். (ஏம்ப்பா...இந்த ஆளுக்கு எதையும் சின்னதாச் செய்யத் தெரியாதா!!!!!!)
கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு. இது எப்பேர்ப்பட்ட சூப்பர் ஐடியா! இங்கே வாங்கும் சம்பளம் மொத்தத்தையும் இங்கேயே செலவளிக்க வைக்கும் திட்டம். மேலே மேலே வருமானம் பெருகாமல் என்ன செய்யும்? இந்தக் காட்டுலே சாமான்செட்டு வாங்க எங்கே போவாங்க இந்த முப்பதினாயிரம் குடும்பங்கள்? அதுக்காக விலையை ஏத்திக் கொள்ளை அடிக்கவும் இல்லை. வெளிமார்கெட் விலையைவிட இங்கே விலை கம்மியாத்தான் இருக்கு. வெளிநாடுகள் போல சேல் ஸ்பெஷல்ஸ் என்ற வகையில் தாற்காலிக விலை குறைப்பா நிறைய பொருட்கள் வச்சுருக்காங்க. கோபால் மேனேஜ்மெண்ட் ஐடியாக்களையும் மார்க்கெட்டிங் உத்திகளையும் என் மூளைக்கு அனுப்பப் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கார்.
ஆமாமாம். ஆயிரம் ரூ இருக்கும் வாணலி ஒன்னு 500க்கு போட்டுருக்குன்றதைக் கவனிச்சேன். நம்ம வீக்னெஸைத்தான் இவர் கண்டுக்கவே இல்லை(-:
ராஜ்கோட், ஜூனாகட், ஜாம்நகர் பகுதிகளில் இருந்துக்கூட ஷாப்பிங் செஞ்சுக்கிட்டுப்போக மக்கள் வர்றாங்களாம். பிக்னிக், அவுட்டிங் வகையில் சேர்த்துருக்காங்க போல! போதாக்குறைக்கு அக்கம்பக்கம் இருக்கும் எஸ்ஸார் ரிஃபைனரி ஜனங்கள் வேற! கூடுதல் மக்கள் வரவர கூடுதல் விலை குறைப்பு. முதலாளிக்குக் கூடுதல் பணவரவு.
மனசுக்குள்ளே வியாபாரத் தந்திரத்தைப் பாராட்டிக்கிட்டே கிளம்பினோம். சரியா அவுங்க அரசின் எல்லையைக் கடந்ததும் மந்திரக்கோலைத் திருப்பி அசைச்சாப்போல இந்தியாவில் இருக்கோமுன்னு உணரவைக்கும் சாலையும் டீக்கடையும் தெருநாயும். கொஞ்சதூரப் பயணத்தில் வரிசைவரிசையா நிற்கும் மூன்று கரத்தான்கள். எருமைகள் கூட்டம்.
இதுக்குள்ளே நம்ம பப்பனுக்கு, நம் காரியங்கள் எல்லாம் அத்துபடி ஆகி இருக்கு. கெமெராவை 'ஆன்' செஞ்சவுடன் வரும் மெல்லிய க்ரிங்' சத்தத்துக்குக் காதை ட்யூன் பண்ணி வச்சுருந்தார். சத்தம் கேட்டதும் வண்டியின் ப்ரேக்கைக் கால் தானா அமுக்குது. ஒன்னே முக்கால் நேரப் பயணத்துலே பலமுறை இப்படி. 'இல்லை. நீங்க போய்க்கிட்டே இருங்க'ன்னு அப்பப்பச் சொல்லிக்கிட்டே இருந்தோம்.
கண்ணுக்கெட்டிய ஒரு இடத்துலே தூரமா, கோபுர உச்சியில் வெள்ளையும் மஞ்சளுமா கொடி பறக்குது!! க்ளிக் க்ளிக் க்ளிக். பதினைஞ்சு நிமிசத்தில் துவாரகையை அடைந்தோம்.
ஏற்கெனவே வலையில் பார்த்து ஒரு ஹொட்டேலை புக் பண்ணிவச்சுருந்தாலும். முதல்முறையா ரெண்டாவது கருத்தை பப்பனிடம் கேட்டால், அதைவிட நல்ல இடங்கள் இப்போ வந்துருச்சாம். அந்த நல்ல இடங்களில் ரெண்டு மூணைப் போய்ப் பார்த்து '**** நாற்றம் சகிக்க முடியாமல் பின் வாங்கினோம். இப்பெல்லாம் முன் ஜாக்கிரதையா 'அறையைக் காமிங்க. பார்த்துட்டுச் சொல்றோம்' என்பது நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.
கடைசியில் ஹொட்டேல் ஸ்ரீ தர்ஷன். ராயல் ஸ்யூட் ஓக்கே ஆச்சு. படுக்கை அறை, ஒரு ஹால், பெரிய பால்கனியோடு அந்த ஊர் நிலைக்கு ரொம்பத்தரம்தான். கோவிலுக்கு அடுத்த தெரு. ஒரு மூணு நிமிச நடை. கோபுரதரிசனத்துக்குக் குறைவே இல்லை. அரைமணி ஓய்வுக்குப்பின் அரசனைப் பார்க்கப்போனோம்.
நம்ம பால்கனியில் இருந்து
பயணம் தொடரும்.........:-)

20 comments:
//ஏற்கெனவே துப்பட்டா தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லி ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு இருந்தேன் பாருங்க அந்த தேடலின் நிறம்.//
கோபால் சாரின் நினைவாற்றலுக்கு ஒரு பாராட்டு.
பயணத்தொடர் அருமை.
Miga arumai.. athuvum ipapdi shopping maal describe panni enga purseku vettu vaikarengale madam
http://lkspic.blogspot.com/2010/01/pillayar.html
அரசனைப் பார்க்க வந்தாச்சா. கோபுர அழகே அருமையா இருக்கு.
உண்மையிலும் அந்த ரிலையன்ஸ் மால் பெரிசாத்தான் இருக்கு.
பாத்திரங்கள் விற்கிற மாலை இப்பத்தான் கேள்விப் படுகிறேன்.!!
அநியாயத்துக்குப் பணம் கொட்டிக் கிடக்குதுப்பா. தோசை சூப்பர்.
வாங்க கோமதி அரசு.
வடை போச்சேன்னு இருக்கேன் நான்!
வாங்க எல் கே.
இது சென்னையில் இல்லைன்னு சொல்லித் தப்பிச்சுக்கலாமே:-))))
வாங்க வல்லி.
எங்கூர் மால்களிலும் பாத்திரங்கள் விக்கும் கடைகள் இருக்குப்பா. சூப்பர் மார்கெட்டிலும் ஒரு ஐல் பாத்திரபண்டங்களுக்கு இருக்கும். முக்கால்வாசி பேக்கிங் ட்ரே, கார்னிங் வேர் இப்படி!
மிகவும் ரசிக்கும் வகையில் உங்களின் படைப்புகள் அமைந்துள்ளது . வாழ்த்துக்கள்
\\(இதைமட்டும் இன்னிக்கு வாங்கலைன்னா , ஜென்மத்துக்கும் இனி தாளிப்பு இல்லை துளசியின் சமையலில். சூளுரை!)\\
சாட்சி நான் ;))
//பாத்திரங்கள் விற்கிற மாலை இப்பத்தான் கேள்விப் படுகிறேன்.!!
அநியாயத்துக்குப் பணம் கொட்டிக் கிடக்குதுப்பா. //
அதே ! அதே !!
படங்களும், மால்களில் உள்ள கடைகள் வர்ணனைகளும் அருமை.
நீங்க சொன்னது சரிதான்..இங்க ஸ்பென்சரில் ஒரு க்ரீம் இருக்கான்னு தேட அம்மாவும் நானும் அதை காட்டிக் கேட்டோம்..இது இங்க இல்லையே வரவைச்சுக்குடுப்பியான்னு.. அப்பவே திறந்து உத்து பாத்துட்டு.. இருந்தான். பின்ன பில் போடும்போது..இந்த மாதிரி ஐயிட்டமெல்லாம் உள்ள கொண்டுவராதீங்க உங்க நல்லதுக்குத்தான்னு அட்வைஸ்.. அடபாவிகளான்னு ஆகிடுச்சு எனக்கு..
பப்பனோட கேமிரா கவனிப்பு சூப்பர்.
//ஜெயிச்சேன்னு வையுங்க)//
தங்கமணிகள் தோற்றதா சரித்திரம் உண்டா?
//எட்டுப்பேருக்கான டின்னர் செட் விலை 399 தான்! ஸோ சீப் ஸோ சீப்ன்னு மனசு பரபரக்குது. அருவாளோடு கோபால் எதிரில் நிக்கிறார்! எல்லாம் அந்த ஆசையை முளையிலேயே வெட்டி எறிய(-:// You had us there..The only thing i know is not to read your blog at work. I was laughing so much, ppl around were looking at me suspiciously.
"கோபுர உச்சியில் வெள்ளையும் மஞ்சளுமா கொடி பறக்குது!! க்ளிக் க்ளிக் க்ளிக். பதினைஞ்சு நிமிசத்தில் துவாரகையை அடைந்தோம்."
அடுத்து துவாரகை ஆவலுடன் பார்க்கிறேன்.
வாங்க சங்கர்.
வாசகன், கவிஞன், படைப்புகளின் ரசிகன்ன்னு பலமுகக் கலைஞரா இருக்கீங்க!!!
வாங்க கோபி.
சாட்சி # 1 !!!!
வாங்க சதங்கா.
இந்த மால் அவர்களின் சொந்த மால்:-)))
வாங்க கயலு..
கஸ்டமரை எப்படி நடத்தணுமுன்னு இவுங்க புரிஞ்சுக்கவே இல்லைப்பா.
இங்கே ஒரு நாள் க்ரீம் ஒன்னு வாங்கப்போனால், இதைப் பாரு, அதை வாங்குன்னு ஒரே நச்சரிப்பு.
முகத்துக்கு இதைப்போடு அதைப்போடுன்னு .....
வயதைக் குறைக்கும் க்ரீம் இருக்கும்போது, இது (நாம் எடுத்த மாய்ஸரைசர்) எதுக்குன்னு எதிர்க்கேள்வி.
ஆமாம். போட்டவுடன் குழந்தையா ஆயிருவோமான்னு கேட்டேன்.
அடுத்தமுறை கடைக்குப்போகும்போது, மேலே விழுந்து பிடுங்கினால், இங்கே ஒன்னுமே வாங்கப்போறதில்லைன்னு சொல்லிரணும்.
வாங்க சின்ன அம்மிணி.
அப்படித்தோற்றாலும் சரித்திரத்தில் எழுதப்படமாட்டாது. டைம்கேப்ஸ்யூலில் மாத்தி எழுதுவோம்:-))))
வாங்க சந்தியா.
ஓசைப்படாமல் சிரிக்க பயிற்சி எடுத்துக்குங்க.
அதுக்கு **** யோகான்னு பெயர்:-)
வாங்க மாதேவி.
துவாரகை பதிவு ரெண்டு வந்துருக்கும். பாருங்க.
Post a Comment