Wednesday, January 20, 2010

சாந்தி நிலவ வேண்டும், ஆத்மசக்தி ஓங்க வேண்டும் உலகிலே..............(குஜராத் பயணத்தொடர் 4)

சபர்மதி நதிக்கரையில், அமைஞ்ச ஆசிரமத் தோட்டத்தில் அமைதியா உட்கார்ந்துருக்கார் காந்திஜி.. இங்கே நுழைஞ்சதும் வெளி உலகத்து ஓசைகள் எல்லாம் ஒடுங்கிப்போச்சு. சதுரவடிவ நாலுபுறமும் திறந்த மண்டபங்களில் சிலதை, ஒன்னோடொன்னு சேர்த்து அடுக்கிவச்சதுபோல் இடமும்வலதுமாகப் போகுது. அங்கங்கே காந்திஜியின் படங்கள், சரித்திர சம்பவங்கள், விளக்கங்கள்ன்னு இருக்கு. எங்கேயும் 'சைலன்ஸ் ப்ளீஸ் ஸைன் இல்லாமலேயே சைலன்ஸ் இயற்கையா அமைஞ்சுருக்கு. நமக்குமே குரலெடுத்துப் பேச ஒரு தயக்கம் வந்துருதுன்னா பாருங்க. அப்பா.....என்ன ஒரு அமைதி. அங்கங்கே சிலர் வாசிப்பும் எழுத்துமா இருந்தாங்க.

ஆற்றங்கரைக்குப் பக்கம் போனோம். தண்ணிக்குப் பக்கத்தில் போக ஒரு படித்துறையும் இருக்கு. குட்டியாச் சின்னதா ஒரு கோவில். உள்ளெ சிவன். சுத்தமாகப் பராமரிக்கும் தோட்டங்கள். மரத்தடியில் வச்சுருக்கும் தானியங்களையும் பழங்களையும் தின்னவரும் அணில், கிளி, புறா, குருவிகள். கிட்டே போனால் ஓடிருமோன்னு தூரக்க நின்னு நாலு க்ளிக்.
1917 இல் கட்டப்பட்டது. சத்யாகிரஹ ஆஸ்ரமம். உள்ளே நுழையும்போதே வரவேற்கும் அசோகமரம் 1963-இல் அப்போதையப் பிரதமர் நேரு நட்டதாம். அங்கிருந்தே ஆற்றங்கரை வரை நீண்டு போகும் இடத்தில்தான் கடவுள் வணக்கத்துக்கு எல்லோரும் கூடுவாங்களாம். நடுநடுவில் மரங்களோடு இதமா இருக்கு. ஒரு தினசரி நிகழ்ச்சியா இருக்கும்போல! ப்ரார்த்தனா பூமி. இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு 'உபாசனா மந்திர்'ன்னு தகவல் பலகை சொல்லுது.

'ஹ்ருதயகுஞ்' என்ற பெயரில் காந்தியும் கஸ்தூர்பாவும் வசித்த வீடு. பெரிய அகலமான முன் வெராந்தா, ஒரு சின்ன ஹாலின் அளவுலே இருக்கு. நமக்கு இடதுபுறம் வெராந்தாவையொட்டிய அறை காந்திஜியின் தனியறை. கண் எதிரே ரெண்டு வாசல்கள். முதல் வாசல் வீட்டுக்குள்ளே போக. அதுக்கு வலப்பக்கம் உள்ளது. சமையல் அறைக்கானது. வீட்டுக்கு யார் வர்றாங்கன்னு சமைச்சுக்கிட்டே நோட்டம் விடலாம். அந்த வாசலுக்கு அருகிலே சுவர் ஓரமா ஒரு ராட்டையும், ஒரு சர்க்காவும். இந்தப் பக்கம் கணக்குப்பிள்ளை டெஸ்க். உக்கார்ந்து எழுத ஒரு மெத்தை இருக்கை.

வீட்டுக்குள்ளே போனால் 'ப'வடிவில் வெராந்தா. ஒரு படி இறங்கினால் திறந்த முற்றம். ஹைய்யோ..... இது நான் மனசுலே வச்சுருந்த இடம். முற்றத்தில் நின்னால் மூணுபுறமும் உள்ள வெராந்தா, திண்ணையாகிரும். ஆஹா...... முற்றத்தின் முடிவில் சின்னதா ஃபென்ஸ் உள்ள தோட்டக் கதவு.
இடது பக்கம் ரெண்டு அறைகள். முதல் அறைவாசி கஸ்தூர்பா. அதை அடுத்து உள்ளது விருந்தினருக்கு. வலது பக்கம் ஒரே ஒரு வாசல். அதுக்குள்ளே நுழைஞ்சால் சமையலறை. இந்த அறைக்குமட்டும் ரெண்டு வாசல். அதில் ஒன்று தெருவைப் பார்த்து. இந்த அறைக்குள்ளேயே ஒரு சின்ன அறை ஸ்டோர் ரூம். அடுப்புக்கு ஒரு சின்ன மேடை. அங்கே ஒரு ஜன்னல். வேர்க்காம சமைக்க நல்ல ஏற்பாடு. அதே சமயம் கொஞ்சம் வேடிக்கையும் பார்த்துக்கலாம்.. அலமாரிகளில் வீட்டம்மா பயன்படுத்திய சில பண்டபாத்திரங்கள் நம் பார்வைக்கு.

உள்வெராந்தா மூலையில் தானியங்களைக் குத்தும் உரல் குழி. தரையோடு தரையாக. சிம்பிள் லிவிங். அங்கே இருந்து வாழ்ந்து பார்த்தேன் மனக்கண்ணால். ஓடுகள் வழியாக மழைத்தண்ணீர் சரசரவென்று இறங்கி முற்றம் நனைக்கும் மழைக்காலம். லேசான குளிருக்கு இதமா, சூடான வறுத்த (காந்திஜிக்குப் பிடிச்ச) வேர்க்கடலையுடன் வெராந்தா மூலையில் ஒடுங்கி உக்கார்ந்து மழையை ரசிக்கிறேன். ஹைய்யோ!!!!

ஆசிரமவாசியாக ஒரு தன்னார்வலர் அங்கே இருந்தாங்க. பெயர் லதா. விருந்தினர் புத்தகத்தில் எழுதுவீர்களான்னு கேட்டாங்க. (பதிவு எழுதி நாளாச்சு பாருங்க) அந்த கணக்குப்பிள்ளை மேசை, உக்கார்ந்து எழுத ரொம்பவே வசதியா இருக்கு. சரசரன்னு அரைப்பக்கத்துக்கு எழுதிட்டொம்லெ:-) அங்கே இருந்த சர்க்காவில் நூற்கலாமான்னு கேட்டதுக்கு தாராளமான்னு பதில் வந்துச்சு.
இதையெல்லாம் பார்த்தே கனகாலமாச்சு. வருமோ வராதோன்னு ஒரு உதறலோடுதான் ஆரம்பிச்சேன். என்ன மாயம் பாருங்கள். அழகா மெலீசா நூல் சரசரன்னு பஞ்சில் இருந்து பிரியுது. என்னவோ தினமும் செய்யும் காரியம்போல நூற்றுக்கிட்டே போறேன். கோபாலுக்கு ஒரே ஆச்சரியம்! இதுக்குள்ளே பார்வையாளர்கள் கூட்டம் ஒன்னு வந்துருச்சு. அவுங்களுக்கும் இந்த நூல் விஷயம் ஆச்சரியமா இருக்காம். அதுலே ஒருத்தர் ஜப்பான்காரர். வெறும் பஞ்சில் இருந்து நூல் எப்படி வருதுன்னு நூறு கேள்வி. நம்மால் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதா? (ஆங்கிலம் அவுங்களுக்கு மட்டும்)

இது ரொம்பவே லாங் ப்ராஸஸ். முதலில் செடியில் இருந்து பருத்தியைப் பிரிச்செடுத்து நல்லா காயவைக்கணும். அதுலே ஒட்டி இருக்கும் தூசு தும்பையெல்லாம் சுத்தப்படுத்தினபிறகு, பருத்திக் கொட்டையைப் பிரிச்செடுக்கும் சின்ன கை மெஷீன் ஒன்னு இருக்கு, அதுக்கு ஜின்னிங் மெஷீன்னு பெயர்.(இன்றைய இளைஞர்கள், பாஸ்தா மேக்கரை நினைவுபடுத்திக்கலாம்) வலதுபக்கம் இருக்கும் பிடியைச் சுத்திக்கிட்டே அதுலே பூரிக்கட்டை மாதிரி இருக்கும் ரெண்டு சின்ன மர உருளைக்கு நடுவில் பருத்தியைச் செலுத்தணும். கொட்டையெல்லாம் பிரிஞ்சு இந்தப் பக்கம் விழுந்திரும்.

இப்ப, அந்தப் பஞ்சை ஒரு வில்லால் அடிக்கணும். தலையெல்லாம் பஞ்சுபஞ்சா ஆகிரும். தலையை ஒரு துணியால் மூடிக்கணும். காந்திக்குல்லாய் இருந்தாலும் போட்டுக்கலாம்:-) வில்? ஒரு சின்ன மூங்கில் பட்டையை எடுத்து அதன் ரெண்டு ஓரத்தையும் முறுக்கின கயிறால் இணைச்சுட்டால் ஆச்சு. பஞ்சைத் தொட்டாப்புலே மேலே இந்த வில்லின் நாண் படுமாறு வச்சு நாணை இழுத்து விட்டால் அது பஞ்சின்மேல் பட்டு, தெறிச்சு பஞ்சு, பஞ்சுபஞ்சா ஆகிரும். நல்லா அடிக்கணும்.

அப்புறம் பட்டை போடன்னு ஒரு கருவி இருக்கு. கருவின்னா சின்னதா ஒரு பலகையும், சொப் ஸ்டிக் போல ஒரு குச்சியும்தான். கூடவே கட்டிடவேலை செய்யும் கொத்தனார்கள் சமன்படுத்த வச்சுருப்பதைப்போல் ஒரு சின்னப் பலகை கைப்பிடியோடு இருக்கும் கொஞ்சம் பஞ்சை எடுத்து பலகையில் பரவினார்போல வச்சு, அந்தக் குச்சியை பஞ்சில் வச்சு இடதுகையால் ஒருமுனையைப் பிடிச்சுக்கிட்டு, கைப்பிடி உள்ள பலகையால் அதன்மீது உருட்டணும் நாலைஞ்சு வாட்டி உருட்டுனால் சின்ன குழல்போல வரும். குச்சியை உருவி எடுத்துறலாம். இதுக்குப் பெயர்தான் பட்டை (இது தமிழ்மணம் பட்டை அல்ல)

குழல்குழலாச் செஞ்சு ஒரு அட்டைப்பெட்டியிலோ அலங்காரமான நகைப்பெட்டியிலோகூட அடுக்கி வச்சுக்கலாம். பஞ்சு ப்ராஸஸிங் இதோடு முடியுது.

சர்க்காவில் ஸ்பிண்டிலை இணைச்சு, பட்டையில் இருந்து ஒரு முனையில் லேசாகக் கையால் இழுத்தால் வரும் நூலை ஸ்பிண்டிலில் சுத்திட்டு வலது கையால் சர்க்காவின் சக்கரத்தைச் சுத்திக்கிட்டே இடது கையால் பஞ்சை லேசாக கட்டைவிரலால் அழுத்திக்கிட்டே இழுத்துக்கொண்டு போனால் நூல் வந்துரும். (இவ்வளவு முடியாதுன்னா ஏற்கெனவே நூத்த நூலில் இருந்து ஒரு முழம் ஸ்பிண்டிலில் சுத்திக்கிட்டு வேலையை ஆரம்பிக்கலாம்) நமது இடதுகையை மேலே சுலபமாத் தூக்கும் அளவுக்கு நூலை இழுத்ததும், கையை அப்படியே வச்சுக்கிட்டு மூணு விநாடி, பஞ்சை இழுக்காமல் சர்க்காவை சுத்தணும். இது, நூல் கொஞ்சம் முறுக்கேறுவதற்கு.
அடுத்து ஸ்பிண்டிலை லேசா உள்டாவா சுத்தவைக்கணும். சர்க்காவின் பிடியை (அப்ரதட்ஷணமா) லேசா இடது பக்கம் கொண்டுவந்தாலே ஸ்பிண்டில் முனையில் இருந்து நூல் பிரியும். இப்போ இடக்கையை மடக்காமல் முன்னுக்குக் கொண்டுவந்து ஸ்பிண்டிலின் தலைப்பக்கத்துக்கு நேரா வச்சு சர்க்காவின் பிடியை வலப்பக்கம் மெதுவாச் சுத்துனால் நாம் நூத்த நூல் ஸ்பிண்டிலில் சேகரம் ஆகும். அரைமுழம் நூல் பாக்கி இருக்கும் வரை பார்த்துக்குங்க. இப்ப முதலில் சொன்னதுபோல வலதுகையால் ராட்டினத்தைச் சுத்திக்கிட்டே இடதுகையால் பஞ்சை இழுத்துக்கிட்டே போங்க.

சுற்றுலாவந்த மக்களுக்கு அருமையான டெமோ கிடைச்சதாம். ஏன் உங்களுக்கும்தானே? படிக்கும்போதுதான் இவ்வளோ வேலை இருப்பதுபோல் தோணுதே தவிர நூற்கும்போது ஒருவகை தியானம் மாதிரி பரபரன்னு இழுத்தலும் சுற்றலும் நடக்குது. ஒரு சர்க்கா (சின்ன ப்ரீஃப் கேஸ் மாதிரி) கிடைக்குது. ஒன்னு வாங்கிவந்துருக்கலாமோ! அடடா...விட்டுட்டேனே. போகட்டும், இங்கே காதி கிராம உத்யோகில் கிடைக்குதான்னு பார்க்கலாம். ரெடிமேட் பட்டைகளும்கூட கிடைக்கலாம். ' லோகமந்த்தா ஸ்பீட் காதா? .அன்னி ரெடிமேட்'

இத்தனையும் பார்த்து மெய் மறந்த கோபால் பயணிகளுக்கு எடுத்த வகுப்பை க்ளிக்காமக் கோட்டை விட்டுட்டார். நம்ம விளக்கத்தைக்கேட்டு லதா அப்படியே ஆடிப்போயிட்டாங்க போல! ரொம்ப மெலிசா நூற்கிறேன்னு பாராட்டுனாங்க. கித்து ஃபைன் ச்சே:-))))

வினோபாஜியும் அவர் மனைவியும் தங்குன ஒற்றை அறை வீடு ஒன்னு அங்கே இருக்கு. பூனாவில் இந்த சைஸ் வீடு ஒன்னில் நாங்க இருந்துருக்கோம். கொசுவத்தி ஏற்றுதுப்பா இங்கே பலவிஷயங்கள்.

படங்களைத் தனியாக ஆல்பத்தில் போட்டுருக்கேன் பாருங்க.

என்னவோ சொல்லத் தெரியாத மனநிறைவோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
என் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியுதுன்னு கோபால் சொன்னார். நானும் நம்பிட்டேன்:-))))



பயணம் தொடரும்..............:-)))))

30 comments:

said...

test!

ஆஹா....

இது என்ன சத்தியத்துக்கே வந்த சோதனை!!!!

said...

சத்தியமே நிச்சயமாய் வெல்லுமே..

:)

ஆகா க்ளாஸை எடுக்காததுக்கு சொன்ன காரணம் ஓஹொஹோ.. கோபால் சாரை குறை சொல்லலைன்னா உங்களுக்கும்..:)

டீச்சராச்சே நீங்க டெமோ நல்லா சொல்லிக்குடுக்கலன்னா தான்.. ஆச்சரியம்..

said...

வாவ்..நம்ம டீச்சர் ஜப்பான்காரருக்கும் பாடமெடுத்தாச்சா? அந் நேரம் கோபால் அண்ணாவோட முகத்துல தோணியிருக்கும் பெருமிதம் மனக்கண்ணுல தோணுது எனக்கு.

வாழ்த்துக்கள் டீச்சர்.:-)

(அந்த கூடம், திண்ணை, கிளிகளெல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு)

said...

குஜராத் பயணத் தொடர் அருமை.
படங்கள் அழகு.
சிறு வய்தில் பள்ளியில் தக்கிளியில் நூல் நூற்றது நினைவுக்கு வந்தது.

//சாந்தி நிலவ வேண்டும்,ஆத்மசக்தி ஓங்க வேண்டும் உலகிலே//

ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி.

said...

NDTV GOOD TIMES டீவியில CHAK LE INDIA நிகழ்ச்சியில ஆஸ்ரமத்தை காட்டினாங்க. அருமையா இருந்துச்சு. காந்திஜி உபயோகிச்ச ஸ்பூன், கண்ணாடி எல்லாம் காட்டினாங்க. அப்பவே அங்க போகணும்னு முடிவு செஞ்சேன்.

உங்க பதிவை பாத்துட்டு கங்கணம் கட்டிகிட்டேன்(மனசுக்குள்ள தான்) பாவம் அயித்தான். :)

said...

சூப்பரம்மோ.துளசி, கஸ்தூர்பா,காந்திஜியும் அப்படியே மகிழ்ந்து போயிருப்பாங்க.
கோமதி சொல்வது போல் பள்ளி நாட்களில் நூற்றது நினைவுக்கு வந்தது.
அப்பாவுக்கு ராட்டையில் நூற்பது மிகவும் பிடிக்கும். ஒரு தியானம் போலச் செய்வார்.
சர்வோதயா பவன்ல கொடுத்துவிட்டு வருவோம்.
கிளிகள் அழகோ அழகு.
முற்றம் அதைவிட அழகு.

said...

படங்கள் அனைத்தும் அழகு...

said...

கலக்கிட்டிங்க டீச்சர்...;)

\\சுற்றுலாவந்த மக்களுக்கு அருமையான டெமோ கிடைச்சதாம். ஏன் உங்களுக்கும்தானே? \\\

உண்மை..உண்மை ;)

said...

தொடருங்க டீச்சர் .

said...

இப்ப தான் சாந்தி சாந்தினு யோகாவை முடிச்சுட்டு வந்தேன்...பாத்தாக்க டீச்சரும் சாந்தியை பத்தி தான் சொல்லியிருக்காங்க.அனேகமா ஜப்பான் காரரும் டீச்சரோட மாணாக்கர் லிஸ்ட்ல சேர்ந்திருவாங்க.

said...

ஆசரமத்திலே இருந்து எப்படி உங்களை வெளியே வர விட்டாங்க!! மாணவர்கள் எல்லாம் அழராங்க என்று சொல்லி தப்பி வந்துவிட்டீர்களா டெமோவில் அசத்திய துளசி கோபாலுக்கு வாழ்த்துக்கள்.

நூல் நூற்கும் போட்டோ அருமை.

said...

அசத்துறிங்க போங்கோ!

said...

வாங்க கயலு.

ஏம்ப்பா.....காந்தி மண்ணுலே நின்னுக்கிட்டு உண்மையைச் சொன்னாலும் இப்படியா? :-)

வரவர கோபாலுக்கு ஆதரவாளர்கள் கூட்டம் பெருகிக்கிட்டே போகுது!!!!

said...

வாங்க ரிஷான்.

எனக்கும் அந்த ஜோடிக்கிளிகள் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அசப்புலே பார்த்தால் துளசியும் கோபாலும் போல!!!!!

அந்த வீடு!!! சொல்லவே வேணாம். ஹைய்யோ!!!

said...

வாங்க கோமதி அரசு.

அந்த தக்ளியை வாங்கிக்கணுமுன்னு பலபயணங்களிலும்(கொஞ்சம்) முயற்சி செய்தும் இன்னும் கிடைக்கலை.

வருகைக்கு நன்றி

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இப்பெல்லாம் கங்கணத்தை இடுப்பிலும் கட்டிக்கலாமாம். என்ன ஒன்னு..... அது தங்கத்துலே இருக்கணும்:-))))


கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்தான். என்னமோ சொல்லத்தெரியாத ஒரு உணர்வு வருது அங்கே!

said...

வாங்க வல்லி.

நியூஸியில் மட்டும் இந்தியா போல காலநிலை இருந்தா அதே வீடுதான் !!!

நிம்மதியா இருக்கலாமுன்னு தோணுச்சு. சிம்பிள் லிவிங்.

ஏகப்பட்ட சாமான்செட்டுகளோடு வாழ்ந்துக்கிட்டு, இப்போ நிம்மதியையும் தொலைச்சுட்டோமோன்னுக்கூட சிலசமயம் தோணிப்போகுது.

said...

வாங்க சங்கவி.

புதுவரவா? நலமா?

ஆல்பம் பார்த்தீர்களா?

said...

வாங்க கோபி.

அச்சச்சோ......கலக்கிக்கிட்டே இருந்தால் தெளியவேணாமா?

said...

வாங்க ஸ்டார்ஜன்.

தொடருவேன். நீங்களும் தொடர்ந்து வரணும்!

said...

வாங்க சிந்து.

அதுக்கு நான் ஜப்பான் மொழி கத்துக்கணுமே! இப்போதைக்கு நாலைஞ்சு வார்த்தைதான் தெரியுது.

மிக்கிமோடோ, காவாஸாகி,கோனி ச்சுவா இப்படி!!!

said...

வாங்க மாதேவி.

சரியாப்போச்சு. அந்த லதாவின் வேலையை நான் தட்டிப்பறிக்கலாமோ?
:-)))))

said...

வாங்க கிருஷ்ண பிரபு.

என்னத்தை அசத்தறது? உடம்பு இப்போத்தான் அசதியா இருக்கு(-:

said...

ந‌ல்லாவே சுத்தியிருக்கீங்க‌!!ப‌ஞ்சு விப‌ர‌ம் அட்ட‌காச‌ம்.

said...

உங்க‌ளுக்கு என்று ஒரு வேலை அதை யார் குறுக்கீடும் இல்லாம‌ல் செய்தால் அதுவும் தியான‌ம் மாதிரி தான் இருக்கும்.சில‌ ச‌ம‌ய‌ம் பாத்திர‌ம் தேய்க்கும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌ன‌ அமைதியை உண‌ர்ந்திருக்கிறேன்.

said...

அமைதி தாண்டவமாடும் இடத்துக்கு அமைதியா வந்து படிச்சிட்டு போயிட்டிருக்கிறேன்.

said...

// என்னவோ சொல்லத் தெரியாத மனநிறைவோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
என் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியுதுன்னு கோபால் சொன்னார். நானும் நம்பிட்டேன்:-))))//

நம்பினார் கெடுவதில்லை.
உங்கள் பதிவு படித்தபின் எனக்கும் ஒரு மன நிறைவு ஏற்பட்டதும் நிஜம்.
சுப்பு ரத்தினம்.

said...

வாங்க குமார்.

தியானம் பற்றி நீங்க சொன்னது ரொம்பச் சரி. பாவம் கோபால்தான் இப்போவெல்லாம் தியானிக்கறதை விடவேண்டியதா ஆகிருச்சு(-:

பாத்திரமெல்லாம் தேய்க்கலை. வெறும் பொட்டி போடும் சமாச்சாரம்தான்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

பெயருக்கேத்தமாதிரிதான் இருக்கீங்க!!!

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

மனசெல்லாம் சாந்திதானே? மீனாட்சி அக்காகிட்டே கேக்கணும்:-))))