Tuesday, January 19, 2010

எங்கெங்கும் காணினும்..........(குஜராத் பயணத்தொடர் 3)

இருட்டு மசமசன்னு வந்துருச்சு. ஆனாலும் காலம் பொன்போன்றது. இதைவிட்டாக் கிடைக்காதுன்னு இன்னொரு பழங்காலக்கோவிலுக்குப் போனோம். 1848இல் கட்டப்பட்ட ஹதீசிங் ஜெயின் மந்திர். அப்போ இதுக்கான செலவு பத்து லக்ஷம் ரூபாய்கள். ஹதீசிங் பெரிய செல்வந்தரா இருந்துருக்கார். தன்னுடைய இஷ்ட தெய்வமான தீர்த்தங்கரர் வரிசையில் பதினைஞ்சாவதா இருந்த தர்மநாதருக்கு இதை சமர்ப்பிச்சு இருக்கார்.
வளாகத்துக்குள் நுழைஞ்சதும் மகாவீரருக்கு ஒரு ஸ்தூபி இருக்கு. 78 அடி உசரம். பத்துப்படி ஏறிப்போனால் உள்ளே மகாவீரரின் பளிங்குச்சிலை. அங்கே ஒரு கும்பிடு போட்டுட்டு, வளாகத்தின் அடுத்தபகுதிக்குப் போனால் ப்ரமாண்டமான கிண்ணக்கோபுரங்களுடன் அட்டகாசமான ஒரு ரெண்டு நிலைக் கோவில். முன்மண்டபத்துலே பனிரெண்டு அலங்காரத்தூண்கள். இங்கேயும் தர்மநாதரைத் தரிசிச்சுட்டுக் கோவிலைச் சுற்றிப்பார்க்கப்போனால் 'ப' வடிவில் மூணு பக்கமும் நல்ல அகலமான வெராண்டாகள். தூண்வரிசைகள். சுவரை ஒட்டிய பக்கத்தில் அங்கங்கே சின்னச் சின்ன அலங்காரக்கதவுகளும், கதவுகளுக்கு உட்புறம் சமண தீர்த்தங்கரர்களில் ஒருவர் சிலையுமா மொத்தம் 52 பெரிய சிலைகளும், ஒவ்வொரு பெரிய சிலைக்கு ரெண்டு பக்கமும் குட்டிக்குட்டியாச் சில சிலைகளுமா இருக்கு. (குஜராத் முழுக்க இந்தப் பனிரெண்டும் அம்பத்திரெண்டும் எண்ணிக்கைகள் பல இடங்களில் இருக்கு. இதை அப்புறம் இந்தப் பயணத்துலேயே பார்க்கலாம்)

ஹத்தீசிங் ஜெயின் மந்திர்
வராந்தாவில் பார்த்தால்தான் கதவுகளும் சந்நிதியுமா தனித்தனியாத் தெரியுதே தவிர , ஒரு சந்நிதிக்குள்ளே நுழைஞ்சால் சுத்திவரப்போகும்படியான ஏற்பாடு. பூஜை செய்பவர் எதாவது ஒரு மூலையில் புகுந்தால் போதும். பூஜிச்சு முடிச்சு அடுத்த மூணாவது வராந்தா மூலைச்சந்நிதிவரை உள்ளேயே நடந்து வரலாம். இந்த வராந்தாவே அட்டகாசமான மேல்வளைவு அலங்காரங்களுடன் போய்க்கிட்டே இருக்கு. படம் எடுக்க இங்கே தடை(யாம்). விவரம் நம்ம காதில் விழறதுக்குள்ளே சிலதைத் தெரியாத்தனமாக் கிளிக்கிட்டோம்(:
தாய்லாந்து கோவிலின் புத்தர்சிலைகளைப்போல இங்கே எங்கெங்கு காணினும் தீர்த்தங்கரர்கள்தான்.

மூணு பக்கமும் இப்படி வெராந்தா
அஹமதாபாத் நகருக்குள்ளே நுழைய 12 வாசல்கள் இருக்குன்னு சொன்னேன் பாருங்க. அதுலே டெல்லி வாசலுக்கு அருகில் இந்தக் கோவில் இருக்கு. பகல் நேரத்தில் போயிருந்தால் கலையழகை இன்னும் நல்லாக் கவனிச்சு இருக்கலாம். கோவில் இருந்த தெருவில் எதிர்ப்பக்கமா நிறைய ட்ராவல் கம்பெனிகள் இருக்கு. பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலும் கூட. நாளைமுதல் மற்ற இடங்களுக்குப் போக வண்டி ஒன்னு ஏற்பாடு செஞ்சுக்கணுமே. நம்ம கவலை நமக்கு. நாமாக ஒரு பயணத்திட்டம் போட்டு, அங்கங்கே தங்க ஹொட்டேல் புக் பண்ணி வச்சுருக்கோமே. விஷயத்தைக் கேட்ட மோஷின், அதெல்லாம் பஸ் டூர் ஏற்பாடு செய்யறவங்கன்னார். அப்போ எங்கியாவது நல்ல வண்டியும் ட்ரைவருமாக் கிடைக்குமான்னதும், அவுங்க ட்ராவல் கம்பெனியேகூட இருக்காம். முதலில் ட்ராவல் கம்பெனிக்குப் போய்ப் பார்க்கலாமுன்னு புறப்பட்டோம். வண்டியைவிட ட்ரைவர் அனுபவசாலியா இருக்கணுமே!

போகும் வழியிலேயே ராணி ரூப்மதி மஸ்ஜித் இருக்கேன்னு அங்கேயும் நுழைஞ்சோம். சுல்தான் மொஹ்முட் பெகாரா (Sultan Mehmud Beghara.) தன் இந்து மனைவியின் நினைவுக்காகக் கட்டியது. காலம் 1430 - 1440. இந்துக் கலைகளும் இஸ்லாமியக் கலைகளுமா இணைஞ்சு ஜொலிக்கும் 12 அலங்காரத்தூண்கள். அழகான தோட்டத்துக்குள்ளே அமைஞ்சுருக்கு. ஒருத்தர் மட்டும் தொழுகையில் இருந்தார். (யாரிடம் அனுமதி வாங்கணுமுன்னு தெரியலை. அதனால் நோ படம்)
கருப்புச்சட்டை மோஷீன் & வெள்ளைச்சட்டை (B)பப்பன்


இன்னொரு இன்னோவா வண்டியே கிடைச்சது. ட்ரைவர் பெயர் (B)பப்பன். சில வெள்ளைக்காரர்களை டூருக்கு அழைச்சுக்கிட்டுப் போனவர், முந்தாநாள்தான் திரும்பிவந்துருக்கார். அவர்கள் இவருக்குக் கொடுத்த பாராட்டுக் கடிதத்தைக் காமிச்சார். நேரம் தவறமாட்டாராம். ஒம்போது மணிக்கு வரச்சொன்னால் எட்டரைக்கே வந்துருவார்ன்னு மோஷின் சர்ட்டிஃபிகேட்வேற தந்தார். பார்த்தால் நல்ல மனுஷராத்தான் தெரிஞ்சார். இந்தப் பக்கம் வந்து நில்லுங்க, ஒரு படம் எடுக்கணுமுன்னதும், வாயைத் திறக்காம வந்து நின்னாங்க மோஷினும் பப்பனும். ட்ராவல்ஸ் முதலாளியுடன் பேசி ஒரு தொகைக்குச் சம்மதிச்சோம். அதே பரோடா ரேட் தான். ஆறுநாளைக்கு எடுத்தாச்சு. காலை ஒம்போது மணிக்கு வரச்சொல்லிட்டு மோஷினின் வண்டியில் கிளம்பிச் சாப்பிடப்போனோம். பகலில் சாப்பாடு சரியில்லை. நல்ல குஜராத்தி தாலிமீல்ஸ் வேணுமுன்னா அருமையான இடம் ஒன்னு இருக்குன்னு மோஷின் சொன்னார்.

இந்தத் தாலிக்கு நம்மபக்கம் என்னென்னவோ அர்த்தம் பண்ணிக்கிட்டுச் சில இடங்களில் 'தாளி' மீல்ஸ்ன்னு எழுதிவச்சுருப்பதைப் பார்த்திருக்கேன். தாலி என்றது தால் என்ற சொல்லில் இருந்து வந்துருக்கு. தால்= தட்டு. நாமும் தாலம் என்றால் தட்டுன்னுதானே தெரிஞ்சுவச்சுருக்கோம்.

கோபி டைனிங் ஹால். அட! நம்ம கோபி. சொல்லவேயில்லெ!!!! ஒரு பெரிய ஹாலில் வரிசையா நாற்காலிகளைப்போட்டு வச்சுருந்தாங்க. சுவர்களில் அருமையான துணி ஓவியங்கள்.(யானைகள் கூட இருக்கு) டிவி ஒன்னு ஓடிக்கிட்டே இருக்கு. மக்கள் சாவகாசமா உக்கார்ந்து அதுலே கண் நட்டு இருக்காங்க. இந்த ஹாலை அடுத்து ஒரு ஏஸி டைனிங் ஹால். பாரம்பரிய உடைகளில் பணியாட்கள்.

பெரிய துண்டங்களா வெட்டுன வெங்காயம், இதே போல வெட்டி வச்ச எலுமிச்சம்பழம், உப்பு, ஊறுகாய், இன்னும் என்னவோ பொடின்னு ஸ்டேண்டர்டு அயிட்டமா இந்தப் பக்கங்களில் கொண்டுவந்து முதலில் வைக்கறாங்க. கூடவே எண்ணெயில் வதக்குன முழு பச்சை மிளகாய்கள். அரிசி அப்பளம் வகைகள். தாகத்துக்குடிக்க மோர், பெரிய தட்டுகளில் அஞ்சாறு சின்னக் கிண்ணங்களில் கறிவகைகள், kadhiன்னு ஒருமோர்க்குழம்பு (இனிப்பு & காரமுன்னு ரெண்டு வகை.) டோக்ளா, சின்னதும் பெருசுமா பூரி வகைகள், பிஸ்கட் போல தடியா ஒரு சமாச்சாரம், ரோட்லி (சப்பாத்திதான்) கச்சோரி, வெள்ளைப்பூசணிக்காய்த் துண்டங்களை சக்கரைப்பாகில் ஊறவச்சு ஒன்னு இருக்கே அது (பெயர் மறந்து போச்சு!) இதுக்குப்பிறகு கிச்சடின்னு அரிசியும் பருப்புமாச் சேர்த்து வேகவச்சது. கடைசியா ஃபிர்னி ன்னு அரிசிமாவுப் பாயசம், கேரட் ஹல்வா. மீட்டா பான் (குல்கந்து வச்ச வெத்தலைபாக்கு பீடா (இன்னும் ஒன்னுரெண்டு விட்டுப்போயிருக்கு)
சமையல் பிரமாதமுன்னா அதைக் கொண்டுவந்து பரிமாறும்விதம் அதி சூப்பர். ஊட்டிவிடாத குறையா, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோன்னு சுடச்சுடக் கொண்டுவந்து......போதுமுன்னு சொன்னாலும் விடற எண்ணமே இல்லை அவுங்களுக்கு!

கடைசியா அவுங்க விஸிட்டர்ஸ் புத்தகம் கொண்டுவந்து நம்ம கருத்துக்களைப் பதியச் சொன்னாங்க. ஆஹா....அதெல்லாம் பின்னூட்டிட்டொம்லெ:-))


அறைக்கு வந்து சேர்ந்தோம். புது ஹோட்டேல். ஆறுமாசம்தான் ஆச்சாம். பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் எல்லாம் தரமானதா இருக்கு. காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு ரூம்வாடகையுடன் சேர்ந்தே இருக்கு. நாளைக்குக் கதையை நாளைக்குப் பார்க்கலாமுன்னு.......................


பயணம் தொடரும்..............:-)))))

29 comments:

said...

வராந்தா கொள்ளை அழகு.நீங்க பின்னூட்டநாயகி ந்னு ஹோட்டல்காரர்களூக்கும் தெரிஞ்சுருக்கும் போல.. :)

said...

அந்த சாப்பாட்டுத்தட்டு கொள்ளை அழகா இருக்கே!!!

said...

நல்ல குஜராத்தி மீல்ஸ் எஞ்சாய் செஞ்சீங்க போல இருக்கு. இது பத்தி எனக்கு சமீபத்துல பாத்த 3இடியட்ஸ் படத்துல ஒரு சீன் ஞாபகம் வந்துச்சு.

பழக நல்லாயிருக்கற குஜாராத்திக்காரங்க சாப்பாடு ஏப்பா இப்படி பயப்படுத்தற மாதிரி இருக்குன்னு ஆரம்பிச்சு கரீனா டோக்ளா, தேப்லா, காக்ரா, வெரைட்டிகளைச் சொல்லும் விதம் சூப்பர்.

அங்க போகப் போறீங்கன்னுஒரு வார்த்தை சொல்லியிருந்த நம்ம மாம்ஸை கண்டுக்கச் சொல்லியிருப்பேன்ல!!!

said...

இருக்கறவன் சாப்பாட்டுக்குத் தாலம் போடறான். இல்லாதவன் சாப்பாட்டுக்குத் தாளம் போடறான்.

சரிதானே ரீச்சர்! :)

said...

"படம் எடுக்க இங்கே தடை(யாம்)".அதனால் நாங்கள் ஒருவரும் ரசிக்கவில்லை என்றே கூறிவிடுவோம்.

தர்பார் தொப்பி அணிந்த பணியாட்களின் கையால் ராஜவிருந்துபசாரம்.ஆஹா..

said...

இந்தத் தாலி என்னவெல்லாம் செய்யுது பார்த்தீங்களா துளசி. மும்பையில கூட பஞ்சவடின்னு ஒரு ரெஸ்டரண்ட் இருக்கு. அங்க போனா....ஆஹா அங்க போட்ட இனிப்பு வகையெ ஏழு தேறும்.
அதுவும் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே இன்னோண்ணையும் கொண்டு வந்து போடுவாங்க.
நல்ல வேளை அப்பவெ அனுபவிச்சுட்டேன்.
என்ன வேலைப்பாடுப்பா இந்த சீலிங்ல.!!! படம் எடுத்தீங்களே அதுக்கு ஒரு நன்றி.:)கொஞ்சமும் சோம்பேறித்தனப் படாமல் இருந்தால் தான்

said...

கொஞ்சமும் சோம்பேறித்தனப் படாமல் இருந்தால் தான் அது சுற்றுலாவா இருக்கும். இல்லாட்டச்
சோம்பேறித்தூக்கமாப் போயிடும். அடுத்த பதிவு ப்ளீஸ்:)

said...

நல்ல படங்களுடன் அருமையான கட்டுரை. நாங்கள் உங்களுடன் பிரயாணம் செய்வது போல இருக்கு. இன்னும் எதிர்பார்க்கின்றேன். நன்றி டீச்சர்.

said...

எப்போதாவது வெளியூர் போவதென்றால், அதற்கு முன்னால் உங்க வலைப்பக்கம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போனால் எல்லா இடங்களையும் நிச்சயமாக ரசிக்கலாம். அருமையான கவரேஜ்.

- சிமுலேஷன்

said...

நமக்கு எது அதிகம் பிடிக்கவில்லையே அதுல தான் நம்ம பெயரை இருக்கும் ;)))

said...

arumai. nandrigal pala

said...

எட்டு வருஷமாயிருச்சு அஹமதாபாத் போயிட்டு வந்து...போட்டோவையெல்லாம் பாக்கும் போது ஊரு ரொம்பவே மாறியிருக்கு இப்ப.

said...

வாங்க கயலு.

இந்த முறை ஒரு மாறுதலுக்காக பின்னூட்டம் அங்கே எழுதுனவர் நம்ம கோபால்தான்:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

தாலி மட்டும்தான் அழகா!!!!

என்னப்பா ஒரே தாலி செண்டி?

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நம்ம இலக்கு வேற ஒரு இடம். இது ச்சும்மா அங்கே போக ஒரு குறுக்கு வழிதான்:-)

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்புத்தலைவர் (???) சொன்னால் சரியாத்தான் இருக்கும்.

ஆமாம்...உங்க புத்தகம் வந்துருக்கா என்ன? மோதிரக்கையின் பதிவில் பெயர் பார்த்தேனே!!!!

said...

வாங்க மாதேவி.

உணவைப் பொறுத்தவரை இந்த மாதிரி உள்ளூர் வழக்கப்படி இருக்கும் இடங்களில் உபசரிப்புப் பிரமாதம்.

கோவிலை விட்டுட்டுக் கிணத்தை பாருங்க:-))))

said...

வாங்க வல்லி.
உண்மையைச் சொன்னால் சுற்றுலாவில்தான் ரொம்பவே பிஸி ஆகிருவோம். கிடைக்கும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் கூடியவரையில் பார்த்து அனுபவிக்கும் வேகம் உடம்புலே புகுந்துக்கும்.

போய்வந்த பின்தான் உடம்பு தன் வேலையைக் காமிக்கும். இப்போ காமிச்சுக்கிட்டு இருக்கு எனக்கு!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

என்னிடம் வஞ்சனை இல்லைப்பா. நான் 'கண்ட' இன்பத்தை பகிர்ந்தே கொடுத்துருவேன்:-)

said...

வாங்க சிமுலேஷன்.

அதுக்காக ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டாலும் த்ரில் இல்லாமப் போயிரும்.ஆமாம்:-))))

said...

வாங்க கோபி.

என்னப்பா இது அக்கிரமம்? 'தாலி'பிடிக்கலையா?
அச்சச்சோ.....
பரவாயில்லை நீங்க போட்டுக்காதீங்கோ:-))))

said...

வாங்க எல் கே.
வருகைக்கு நன்றிகள் பல!

said...

வாங்க சிந்து.

எட்டுவருசமா? எட்டு வாரம் கழிச்சுப்போனாலே எல்லாம் மாறிடும் இப்போ உலகம் போகும் வேகத்தில்.

ஆமா....அந்தக் கிணறு மாறாமல்தானே இருக்கு?

said...

அசத்துறீங்களே டீச்சர் ,

நல்லா சுத்தோசுத்துன்னு சுத்திருக்கீங்க

எங்களுக்கும் சுத்தி காண்பிச்சிருக்கீங்க , உங்க எழுத்தாலே ...

பயணமெல்லாம் சிறப்பா அமைஞ்சதா டீச்சர்

said...

வாங்க ஸ்டார்ஜன்.

'வகுப்பு'க்காக எவ்வளோ கஷ்டப்படுறேன் பார்த்தீங்களா?

சொல்லறதுக்காகவே போறேன்:-)))

said...

இருக்கறவன் சாப்பாட்டுக்குத் தாலம் போடறான். இல்லாதவன் சாப்பாட்டுக்குத் தாளம் போடறான்
ஆஹா! இத்த‌னை நாள் இல்லாத‌ குறையை தீர்த்திட்டார்.சிரித்து ம‌கிழ்ந்தேன்.

said...

//அறைக்கு வந்து சேர்ந்தோம். புது ஹோட்டேல். ஆறுமாசம்தான் ஆச்சாம். பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் எல்லாம் தரமானதா இருக்கு. காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு ரூம்வாடகையுடன் சேர்ந்தே இருக்கு. நாளைக்குக் கதையை நாளைக்குப் பார்க்கலாமுன்னு.......................//

ஹோட்டல் அறை வாடகை பற்றிய விவரங்களும் கொடுத்தால் சுற்றிப் பார்க்கச் செல்கிறவர்கள் ஒரு பட்ஜெடோட போகலாம்.

//தாய்லாந்து கோவிலின் புத்தர்சிலைகளைப்போல இங்கே எங்கெங்கு காணினும் தீர்த்தங்கரர்கள்தான்//
குஜராத் ஜைன மதத்தின் சொர்க்க பூமி ஆச்சே ! மார்வாடிகள் மந்திர் நிறைய இருக்கும்

said...

வாங்க குமார்.

குறை தீர்த்த கொத்ஸ் என்று புதுப்பட்டம் கொடுக்கலாம்:-)

said...

வாங்க கோவியாரே.

ஹொட்டேல் வாடகையைச் சொன்னால் பிபி எகிறிட்டால்?
அதான் அடக்கி வாசிக்கிறேன்.

இப்பெல்லாம் 'பட்ஜெட்டுக்குப் பொருளே' இல்லை:(