எச்சரிக்கை: இது சமையல் பதிவு:-)
எங்க பாட்டி அடிக்கடி சொல்லும் பழமொழி. ஏன் எதுக்கு,எப்படின்னு பிச்சுப்பிடுங்குவேன் சின்ன வயசுலே.(பதிவர் ஆகும் லக்ஷணம் அப்பவே வந்துருக்கு. ஆனா யாரும்தான் கண்டுபிடிக்கலை இன்க்ளூடிங் மைசெல்ஃப்)
பாலைக் காய்ச்சுனா அப்படியே சுண்டிபோயிரும். ஒரு சொம்பு காய்ச்சுனா முக்காச் சொம்புதான் கிடைக்குமுன்னு சொல்வாங்க. சொம்புக் கணக்குத்தான் அவுங்களுக்கு. பழையகாலத்து ஆளுல்லே! ஆழாக்குலே அளந்து வாங்கிப் பழக்கமில்லை.
அப்ப மீனு? பக்கத்துவீட்டுலே போய்ப் பாருன்னுருவாங்க. பச்சம்மாக்கா வீட்டுலே மீன் கழுவும்போது போய்ப் பார்த்தேன்.(அப்புறம் இதுவே பழக்கமாகி அங்கே மீன் வாங்குனதும் சொல்லி அனுப்புங்கக்கா. வந்து வேடிக்கை பார்க்கணும் என்ற அளவுக்குப் போயிருச்சு. சிமிட்டாமப் பார்க்கும் அந்தக் கண்ணைப் பார்க்க எனக்கு ரொம்பவே பிடிக்கும்) அதை செதிள் நீக்க அருவாமணையிலே இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமா இழுத்துத் தேய்ச்சதும் சட்னு இளைச்சுப் போயிருச்சு. அப்புறம் தலையையும் வாலையும் வெட்டுனதும் மீனோட நீளம் பாதி காலி. வயித்தை அறுத்து உள்ளே சமாச்சாரங்களை வெளியே இழுத்துக் கடாசுனதும் புள்ளைப்பெத்த வயிறுமாதிரி பொசுக்ன்னு ஆகிருச்சு. பச்சமக்கா வூட்டுக்காரர் ரெண்டடி நீளத்துக்குக் கையில் புடிச்சுக்கிட்டுக் கம்பீரமாக் கொண்டு வந்த மீனு, இப்போ ஏழெட்டுத் துண்டாச் சட்டிக்குள்ளே கிடக்குது. அதை உப்புக்கல்லு போட்டு உரசி அந்தக் கவுச்சை எடுப்பாங்க அக்கா. நாந்தான் அடுப்படி ஜாடியிலே இருந்து உப்பள்ளியாந்து கொடுப்பேன். சட்டி உள்ளே அடுக்களைக்குப் போகும், நம்ம வேடிக்கையும் இத்தோடு முடிஞ்சுரும்.
இந்த மீன் & பாலோடு இன்னொரு ஐட்டத்தையும் புதுசாச் சேர்க்கணுமுன்னுதான் இதை இங்கே பதியறேன். பொல்லாத புடலங்காய்...என்னத்தை எழுதப்போறேன்னு கூவாதீங்க மக்கள்ஸ். எஸ்.... எஸ். அதே புடலங்காய்தான்!
எங்கூர்லே எல்லா இண்டியன் வெஜீஸ்-ம் ஃப்ரீஸர் ஐட்டமாத்தான் கிடைக்கும். புடவல்னு இருக்கும் பேக்கட்டைப் பிரிச்சால் 2 x 2 அளவுலே வெட்டுன துண்டுகள் கிடக்கும். Dடீஃப்ராஸ்ட் செஞ்சுட்டுச் சின்னதா வெட்டலாமுன்னா நழுவல். செய்யாம வெட்டலான்னா கையிலே பிடிக்க முடியாம ஐஸ். ப்ச்... அப்படியே தூக்கிப் பருப்புலே கடாசி, கூட்டுன்னு 'கதை' பண்ணிறலாம். இப்போ சி.செ.வில் இருப்பதால் கண்ணில் பட்ட காய்கறியை ஒரு கை பார்க்காம விடுவதில்லை. அதான் ஃப்ரெஷா(?) கிடைக்குதே.
சரியா என் உசரம் இருக்கும் புடலங்காய் ஒன்னு வாங்கியாந்தேன்.(அதெல்லாம் புடலை நிக்கவச்சு அளந்தாச்சு) எங்க பாட்டி வீட்டுலே செய்யும்(போச்சுடா...மறுபடி பாட்டியா!!!)புடலங்காய் வதக்கலை நம்ம முறைப்படி( அதான் எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழியாச்சே)செஞ்சுறணுமுன்னு.
புடலங்காய் வதக்கல்:
தேவையான பொருட்கள்:
உங்கள் உயரத்துக்கு ஒரு புடலங்காய்
உப்புத்தூள் 3/4 தேக்கரண்டி.
தாளிக்க:
எண்ணெய் 4 தேக்கரண்டி அல்லது 2 மேசைக் கரண்டி.
கடுகு அரைத்தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 4 (துண்டுகளா ஒடிச்சுக்கணும்)
பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு இணுக்கு
தேங்காய்த் துருவல் 2 மேசைக்கரண்டி (ஆப்ஷனல்)
மஞ்சள் பொடி ஒரு அரைக்கால் தேக்கரண்டி (இதுவும் விருப்பப்பட்டால் மட்டும்)
செய்(ஞ்ச)முறை:
முழுசா வீட்டுக்குக் கூட்டியாறமுடியாதுன்னு கடையிலேயே நாலா உடைக்கும்படி ஆயிருச்சு. எடைவேற போடணுமாமே (-: புடலங்காய்த் துண்டுகளை ஒருமுறை கழுவிட்டு நீளவாக்கில் ரெண்டா வெட்டணும். குடலை(?) உருவி (மாலையாக)போட்டுறணும். இப்ப இன்னும் ரெண்டாக் கீறிட்டு படத்தில் இருப்பதுபோல மெலிசா வெட்டணும்.
"ஏம்மா.....எல்லாப் புடலங்காயும் இன்னிக்கே செய்யப்போறியா?" கேட்டது யாருன்னு தெரியுதுல்லே? கண்டுக்காதீங்க. அதென்ன எல்லாப் புடலங்காயும்? வாங்குனதே ஒன்னுதான்.
நறுக்குன துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துவச்சு, கொஞ்சம் உப்புப்போட்டுக் கலந்து ஒரு பக்கமா மூடி வச்சுட்டு மத்தவேலைகளைப் பார்க்கலாம். ஒரு மணி நேரம் ஊறட்டுமே........அதுபாட்டுக்கு!
ஃப்ரீ டைம் கிடைச்சதும் அடுப்பில் ஒரு கடாய்/வாணலி வச்சு எண்ணெய் ஊத்திக் காய்ஞ்சதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ஞ்ச மொளகாய், கருவேப்பிலை போட்டுத் தாளிச்சுட்டு, புடலைத்துண்டுகளை பிடிப்பிடியா எடுத்து ஒட்டப் பிழிஞ்சுட்டு வாணலியில் போட்டு வதக்கணும். கொஞ்சம் சிறு தீயாக இருக்கட்டும். தண்ணியெல்லாம் சேர்க்காதீங்க. ஏற்கெனவே அதுவே தண்ணிவிட்டுக் கிடக்கும். அத்தைப்போயி.....
வாணலி நிறைய இருக்குமே! மெதுவா வதங்க வதங்க ,சுருங்கிச் சுருங்கி..... இப்பத்தான் எங்க பாட்டி சொன்ன பழமொழி இங்கே வருது!
கூடுதல் உப்பு தேவை இருக்காது. ஏற்கெனவே உப்புப்போட்டுப் பிசறி வச்சதுதானே? வேணுமுன்னா கொஞ்சம் சுவை பார்த்துட்டு காலோ அரைக்காலோ ஸ்பூன் உப்புத்தூள் சேர்த்துக்குங்க. ஆனா கவனமா இருங்க. கூடுதல் உப்பு உடலுக்குக் கேடு.
வதங்கிச் சுருண்டு, வாணலியை எட்டிப் பார்த்தா எங்கியோ கிடக்கும் அந்த வதக்கலில் கொஞ்சம் தேங்காய்த் துருவல் சேர்த்துக்கலாம் உங்களுக்கு விருப்பம் இருந்தால். நான் கொஞ்சம் சேர்த்தேன். (அளவு தெரியாம பிசறி வைக்கும்போதே தாராளமான கையாக இருந்ததை வேறு எப்படி சமாளிக்க? ஆனா ஒன்னு. இங்கே இந்தியாவில் 'தேஜ்' கொஞ்சம் கூடுதல்தான். உப்பாகட்டும், மிளகாய் ஆகட்டும், சக்கரை ஆகட்டும் எல்லாமே அதனதன் குணத்தில் தூக்கலாத்தான் இருக்கு. இதுமட்டுமா? சோப் தூள்? அதுவும்தான். மைல்டா இல்லேப்பா. ஸ்ட்'ராங்'கு காமிக்குது.)
நம்ம வீடுகளில், சமையலில் ஒரே ஒரு குறை என்னன்னா, மாய்ஞ்சு மாய்ஞ்சு சமைச்சுட்டு அதை பரிமாற எடுத்து வைக்கும்போது 'ப்ரஸண்டேஷன்' பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அப்படியே கிண்ணத்தில் எடுத்துவச்சு உணவு மேசைக்கு வந்துரும். அதை இன்று ஒரு நாளாவது மாற்றலாமேன்னு (அதான் ஃபோட்டோ புடிக்கறமுல்லெ) ஒரு தட்டில் எடுத்து வச்சேன். கண்ணாடித்தட்டோ பாத்திரமோ இருந்தால் நல்லா இருக்கும். தாற்காலிக வசதிகளால் இது ஒன்னும் இல்லை. காண்ட்ராஸ்டா எதாவது நிறம் இருக்கான்னு தேடுனா.... ஆரஞ்சு ஒன்னு கண்ணில் பட்டது. அப்படியே உரிக்காம வச்சுருக்கலாம். விதி யாரை விட்டது?
இப்படியாச்சு!
சாப்பிடும்போது...........
"என்னம்மா புடலங்காயில் உப்பு கொஞ்சம் கூடுதலா இருக்கே..."
"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"
(இப்படித்தான் சாப்பிடணுமுன்னு சொல்லி இருக்கலாமோ!)
பி.கு: பாட்டி வீட்டில் வதக்கல் கொஞ்சம் கருப்பா இருக்கும். இங்கே நம்ம வீட்டில் கருநிறம் வரவே இல்லை. நானே 'யோசிச்சு'ப் பார்த்ததில் காரணம் புரிஞ்சுருச்சு. பாட்டி காலத்தில் நான்ஸ்டிக் ஏது? இரும்பு வாணலிதானே!!!!
Sunday, January 03, 2010
காய்ச்சாத பாலும் கழுவாத மீனும் ஆம்புளெ கண்ணுக்கு அதிசயமாம்.
Posted by துளசி கோபால் at 1/03/2010 09:55:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
//காலோ அரைக்காலோ//
அரைக்கிலோன்னு படிச்சிட்டேன்! :P
தலைப்பே தவறு , எனக்கு பால் கறக்கவும் தெரியும் , மீன் பிடிக்கவும் தெரியும்.
பால்கோவாவும் புடலங்காயும் கனெக்ஷன் நல்லா இருக்கு :)
அடடா துளசி,
, மீன் படம் போடுவீங்கன்னு பார்த்தா, வெறும் புடலங்காயா:)
ஆனாலும் பச்சையா அழகாத்தான் இருக்கு.
கடைசி வரி துளசி டச் அருமை.!!
ஒரு மிளகூட்டான், மெழுக்குவர்த்தியும் போடுங்கோ. நானும் எங்க ராஜகுமாரி அக்கா
மீன் செய்யறதைப் பார்த்திருக்கேன். மண்சட்டில செய்வாங்க.:0)
அதே மசாலா போட்டு உருளைக்கிழங்கு பொரியல்+க்ரேவி செய்தா நல்லா இருக்கும்!
//எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"
//
uppu jastiya pottutu atha samalikarenga.. hmm enna panna veetuku veedu vasapadi
அன்பின் துளசி
அருமையான நகைச்சுவை
காய்ச்சாத பாலும் கழுவாத மீனும்
சின்னப்புள்ளயா இருகறச்சேயெ இவ்வளவு ஆர்வமா - அதான் இந்த வயசிலே இந்தப்போடு போடறீங்க
பொறாமையா இருக்கு
கண்ணால் கண்டதை அப்படியே விவரிக்கும் - ஆர்வமுடன் - ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் விவரிப்பது நன்று
சி.செ - இங்க எல்லாமெ ஃபிரெஷ் தான் - டீஃப்ராஸ்டெல்லாம் கிடையாது - ஓவன்லே சூடெல்லாம் பண்ன வேண்டாம் - எஞ்சாய் மாடி
உங்க உயரத்துக்கு புடல்ங்காயா - ( ஸ்டூல் மேலே வச்சிப் பாத்திங்களா )
பாவம் கோபாலு - இன்னிக்கும் புடலங்காயா
ஆமாம் இதுக்கெதுக்கு சம்யல் குறிப்பு - தமிழ் நாட்ட்டில் இது செய்யத் தெரியாத பொண்ணுகளும் இருக்காங்களா - எங்க ஊட்ல எப்பவுமே இது தான்
சரி சரி - இது இடுகையா மறுமொழியா
நல்லாருங்கப்பா
ஆகா பழமொழியும் அருமை, புடலங்காயும் அருமை. ஒரு சிம்பிளான புடலங்காய் கறியில் ஒரு அருமையான பதிவு டீச்சர்.
//எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"//
எல்லா வீட்டுலையும் இதுதான் கதை போல இருக்கு.இதுவே ஓட்டலாக இருந்தால் சர்வரை சத்தம் போடும் அதிகாரமாவது இருக்கும்.இங்க அதுக்கும் வழியில்லை. கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து சாப்பிடுங்கள். நன்றாக இருக்கும். நன்றி டீச்சர்.
எச்சரிக்கையை படிச்சுட்டு நேரா பின்னூட்டம் தான் :)
பின்ன பதிவை படிச்சுட்டு சாப்பிடனும்னு தோணாதா?
Enna build up:)))))
அடிக்கடி புடலங்காய் பண்றீங்க....:-)
வாங்க கவிநயா.
நோ ஒர்ரீஸ். கல்யாணச்சமையல் விருந்துன்னா அரைக்கிலோ சரியாத்தான் இருக்கும்:-))))
வாங்க குடுகுடுப்பை.
//...எனக்கு பால் கறக்கவும் தெரியும் , மீன் பிடிக்கவும் தெரியும்.//
கறந்துட்டு?
பிடிச்சுட்டு?
அப்படியே வச்சுக்கமுடியுமா?
தெரிஞ்ச விஷயத்தின் பின்விளைகள்தான் பதிவின் தலைப்பு!!!!
வாங்க சின்ன அம்மிணி.
அதெல்லாம் கனெஷன் கொடுத்துருவொம்லெ!
ஃப்ரெஷ் புடவல் அங்கே ப்ரிஸ்பேனில் ஒருவேளை கிடைக்கலாம்.
வாங்க வல்லி.
ஒரு சமயம் இறைச்சி மசாலா போட்டு உருளைக்கிழங்கு செஞ்சேன். சகிக்கலை(-:
வாங்க எல்கே.
பட்டபாட்டுக்கு சமாளிக்கத் தெரியலைன்னா எப்படி:-)))))
வாங்க சீனா.
என்னவிட உயரமாவும் கிடைக்குது. இது நாடன்.
ஹைப்ரீட் வகைதான் குழந்தைக் கையின் முழம்
வாங்க பித்தனின் வாக்கு.
முந்தாநாள் மஹாலக்ஷ்மி கேட்டரர்ஸ் வடையிலும் சரி, பட்டாணிக் குருமாவிலும் சரி ஒரே உப்பு.
கூட்டமோ நெரியுது. பரிமாறிக்கிட்டு இருந்த முதலாளி அம்மாட்டே ஓசைப்படாமச் சொல்லிட்டு வந்தேன். குடும்பமே அங்கே நின்னு உழைக்குது. பாவம், போயிட்டுப்போகுதுன்னுதான்.
வாங்க நான் ஆதவன்.
சாப்பிட்டு முடிச்சதும் அப்புறம் பதிவைப் படியுங்க.
இது பரீட்சைக்கு வரும் பகுதி:-)))
வாங்க சுவையான சுவை.
பெயரே இப்படிச் சுவையா!!!!!
எல்லாத்துக்கும் விளம்பரம் கொடுத்தாத்தான் வேலைக்காகுமாம்.பில்டப் பண்ணலேன்னா எப்படி? :-)))
வாங்க ப்ரியா.
இது என்னப்பா அக்கிரமம்!!!
ஒரே ஒரு புடலங்காய், ஒரே ஒரு நாள்தான் பண்ணி இங்கே போட்டேன்:-)
ப்ரியா,
கூடவே இதையும் சேர்த்துக்குங்க. நான் ஒரு புடலை போட்டா அது 100 புடலை போட்டமாதிரி:-)))
புடவைன்னு படிச்சுட்டு......
நோ..... எதுக்கு சொ.செ.சூ:-))
I like that "Virumandi" Knife. :-)
Snakeguard need that long knife?
வாங்க குமார்.
snake அடிக்கக் குச்சி நீளமா வேணுமே! அதான் கத்தியும் நீளமாப் போயிருச்சு:-))))
இதுதான் நம்ம வீட்டுல் 'ஆவி' வந்த கத்தி என்பதால் விட்டுடமுடியலை:-))))
//ஆமாம் இதுக்கெதுக்கு சம்யல் குறிப்பு - தமிழ் நாட்ட்டில் இது செய்யத் தெரியாத பொண்ணுகளும் இருக்காங்களா - எங்க ஊட்ல எப்பவுமே இது தான்//
இருகாங்க சீனா. ரசம் வைக்க கூட சமையல் குறிப்பு தேவை படர நவநாகரீக மங்கையர் உள்ளனர்
LK
ஆஹா ஏமாத்திபுட்டீங்களே... நானும் புடலையும்ன்னு ஒரு போட்டோ "பிட்டு'க்கு அனுப்ப ரெடி பண்ணி காமிப்பீங்கன்னு ஆர்வமா கடைசி வரை பாத்தேன் :((
என்சாய் மாடி!!!
சமையல் பதிவேன்னு ஓடி வந்தாக்க இது, நான் வெஜ் சமாசாரம்.
அய்யய்யோ !! அம்பேல். ஒடிப்போயிடறேன்.
மீனாட்சி பாட்டி.
=))... சூப்பரு... என்னமா சமைக்கிறீங்க டீச்சர்.... இப்பவே லேசா வயித்த வலிக்குதே... =))
//"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"//
இந்த இடத்துல சத்தமா சிரிச்சுட்டேங்க..
//"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"//
kalakiteenga!
Ezhilarasi Pazhanivel
அஞ்சு புடலங்காய் வாங்கி வெச்சிருக்கேன். பின்விளைவு என்னாலயா,மனைவியாலயே இன்னும் முடிவாகல.
வாங்க எல்கே.
சமையல் மட்டுமா? குழந்தை வளர்ப்பு? புத்தகத்திருவிழாவில் ஏகப்பட்ட கடைகள் இதுக்காகவே கிடக்கு!
எங்க வீட்டுப் பூனை, குட்டியை எப்படி வளர்த்துச்சுன்னு இடைவிடாமக் கவனிச்சதுலே ஏகப்பட்ட ஆச்சரியங்கள். அது எந்த கைடைப் படிச்சதுன்னு தெரியலை!!!!!
வாங்க இலா.
முழுசாப் படம் எடுக்க முடியலை.அடங்கமாட்டேங்குது ஒரு ஃப்ரேமுக்குள்ளே!
வாங்க மீனாட்சி அக்கா.
ஓடாதீங்க. மீன் சட்டிக்குள்ளே போறவரைதான் இருக்கு:-)
வாங்க கலகலப்ரியா.
எனக்கும் ரொம்பவே பாவமா இருக்கும். படாத பாடு பட்டுட்டார் இந்த 35.5 வருசத்துலே!!!!!
என்ன செய்யறது? விதின்னு ஒன்னு இருக்கேப்பா:-)
வாங்க கையேடு.
முதல்வரவோ?
வணக்கம். நலமா?
அப்பப்ப வந்து சிரிச்சுட்டுப்போங்க.
வாய்விட்டுச் சிரிச்சால் நோய் விட்டுப்போகு(மா)ம்:-)
வாங்க எழிலரசி.
கலக்காம விட்டா எப்படிங்க:-)))))))
தானே தெளிஞ்சுறாது?
குடுகுடுப்பை?
எதுக்கு அஞ்சு? ஜக்கம்மா சொன்னாளா?
அஞ்சும் பஞ்சாப்பறக்க வாழ்த்துகின்றேன்.
கு.க. வரிகளை இதிலும் கடைப்பிடிச்சால் தவறில்லை. ஒன்று (அல்லது இரண்டு)க்கு மேல் வேண்டாம்!
//முதல்வரவோ? //
ஆச்சர்யமா இருக்குங்க.. உண்மையிலேயே அடிக்கடி வந்து சிரிச்சிட்டு போறதுண்டு.
இப்போதான் சொல்லிட்டு போறேனோ??..
என்னங்க கையேடு,
ஓசைப்படாம வந்துபோனா எப்படி? வந்ததுக்கு ஒரு அடையாளம் வைக்கக்கூடாதா?
Post a Comment