Thursday, January 28, 2010

தாருகாவனத்து சிவன் ......... (குஜராத் பயணத்தொடர் 10)

'இடம் வசதியா இல்லைன்னா வந்ததுக்கு ஒரே நாள் தங்கிட்டுக் கிளம்பிறனுமாம். அதெப்படி? இதுக்காகத்தான் வந்திருக்கேன். கொஞ்சம் அப்டி இப்டி இருந்தாலும் பொறுத்துக்கிட்டு ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் வருவேன்.'

குடும்பத்துலே குழப்பம் விளைவிக்கவேணாமுன்னு சாமி நினைச்சுட்டார் போல! நல்லதாவே இடம் கிடைச்சுருச்சு.

காலையில் கண் திறந்ததும் , என்ன கொடின்னு பார்த்தேன். நேத்து மாலை மாற்றிய அதேதான். குளிச்சுமுடிச்சுக் கோவிலுக்குப் போனோம். காலை பூஜை முடிஞ்சு திரை போட்டுருக்கு. நிதானமா ஒரு சுத்து எல்லா சந்நிதிக்கும் போய்வந்தோம். பலராமர் சந்நிதியில் கொஞ்சம் பருமனான அம்மா ஒருத்தர் ஸ்டூல் போட்டு உக்கார்ந்துருந்தாங்க. நல்ல சம்கி வச்ச பளபள சேலையும் ரவிக்குமா. கழுத்து நிறையத் தங்கச்சங்கிலிகளும் விரல் நிறைய மோதிரங்களும், கை நிறைய வளைகளுமா கண்ணைக் கவர்ந்துச்சு. வயது ஒரு எழுபது இருக்கலாம்.. அவுங்க முன்னாலே காலடியில் ஒரு தட்டு. அதுலே குவியலா பத்து ரூபாய் நோட்டுகள். ஜனங்கள் என்ன ஏதுன்னு கேக்காம ரூபாயைப் போடுவதும், அந்தம்மா கைகளைச் சிரமத்துடன் தூக்கி ஆசி வழங்குவதுபோல் ஆட்டுவதுமா இருக்காங்க. நேத்து மாலை இந்த இடம் காலியாத்தான் இருந்துச்சு. ஒருவேளை காலை ட்யூட்டியோ என்னவோ?

எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு எனக்குள்ளே சின்னதா ஒரு மகிழ்ச்சி. ஏறக்கொறைய எல்லா அம்சமும் பொருந்தி இருக்குன்னு கோபாலும் சொன்னார். 'இன்னொரு பக்கம் சும்மாத்தான் கிடக்கு. உங்களுக்கு(ம்) ஒரு ஸ்டூல் போட்டுறலாம்ன்னேன். ஆனா ஒன்னு, சாய்ஞ்சு உக்கார்ந்துக்குவேன், பேப்பர் படிச்சுக்கிட்டே ஆசி வழங்குவேன்னு பிடிவாதம் பிடிக்ககூடாது'ன்னு கண்டிஷன் போட்டேன்.

இன்னொரு முறை மூலவர் சந்நிதிக்குப் போனால் திரை விலகி இருந்துச்சு. பர்ப்பிள் நிற உடுப்பில் கரும்பளிங்குச் சிலையாகக் காட்சி அளித்தார்.சின்னவனா, சட்னு இடுப்பிலே தூக்கிவச்சுக்கலாம் போல இருந்துச்சு. தேவகிக்கு முன்னால் இருந்த கொலுவைக் காணோம். அப்போ ஒரு 'பண்டிட்' வந்து கோவிலைச் சுத்திக் காட்டவான்னு கேட்டார். கூடவே அவர் சொன்ன இன்னொண்ணுதான் பிரமாதம்! ரெண்டு வைஷ்ணவர்கள் வருவாங்க. போய்க் கோவிலைச் சுத்திக்காமின்னு சொன்னாங்களாம்? யாரு? அந்த க்ருஷ்ணனே
சொல்லி அனுப்புனானா? பரவாயில்லையே! 9 மணிக்கு அருணை வரச்சொல்லி இருக்கோம். அப்போப் பார்த்துக்கலாமுன்னு சொல்லி அனுப்புனோம்.

ஹொட்டேலுக்கு முன்னால் இருந்த சாய் வண்டியில் ஒரு டீ வாங்கிக் குடிச்சுட்டு, முதல்நாள் வாங்கிவச்சுருந்த பிஸ்கெட், ஜூஸோடு ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம். கடைவீதியில் வண்டியை நிறுத்தி, இறங்கி ஓடுன கையோடு திரும்பி வந்து 'டைம்ஸ் ஆஃப் இண்டியா' கிடைக்கலைன்னு சொன்ன பப்பனை விநோதமாப் பார்த்தேன். பேப்பர் வேணுமுன்னு நாங்க யாருமே கேக்கலைன்னாலும், எங்களுக்குப் பேப்பர் அதுவும் டைம்ஸ் ஆஃப் இண்டியாதான் வாங்கித்தரணுமுன்னு மூணுநாளா படாதபாடு படறார். ஆமதாபாத், ராஜ்கோட்டில் எல்லாம் ஹொட்டேலே தினசரியை அறைக்கு அனுப்பிருச்சு. போனாப்போகட்டும் வேற எங்கெயாவது பார்க்கலாமுன்னு அப்போதைக்கு ஒரு சமாதானம் சொல்லி வச்சோம்!

துவாரகைக்கு வந்தால் 'பஞ்ச் த்வார்க்கா'ன்னு ஒரு ஐந்து இடங்களைப் போய்ப் பார்த்துவருவது ரொம்பவே முக்கியமாம். அதெல்லாம் என்னென்னன்னு ஒரு கார்டுலே அச்சடிச்சு அந்தந்த ஹொட்டேல்களில் வச்சுருக்காங்க . நாம் தங்கியிருந்த இடத்திலும் மேற்படி விவரம், இங்கே த்வார்க்கா கோவில் தரிசன நேரம் எல்லாம் கிடைச்சது. அஞ்சுலே ஒன்னு போச்சு, மிச்சம் நாலுன்னுதான் இப்போப் போய்க்கிட்டு இருக்கோம்.

நகரைவிட்டு வெளியே போய் வெறும் கள்ளிச்செடிகள் நிறைஞ்ச காட்டுப்பாதையில் பயணிக்கிறோம். இங்கே இந்த உவர் மண்ணில் கள்ளியைத்தவிர வேறெதுவும் வளராது. பொட்டல்காடு. ஒரு வளைவு திரும்பும்போது பாழடைஞ்ச சிதைஞ்ச கோபுரம் ஒன்னு. சைந்தவர்கள் கலையில் கட்டியது. காளி கோவில். உள்ளே மூணாக உடைஞ்ச மூலவர். கீழே விழுந்து கிடந்த பாகங்களை எடுத்து அடுக்கி வச்சுருக்காங்க. ஒரு காலத்தில் இங்கே ஊர் ஒன்னு இருந்திருக்கலாம்! இப்போ தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்பட்ட இடமா இருக்கு. கோவில் 8 இல்லை 9 ஆம் நூற்றாண்டுலே கட்டப்பட்டதாம். இதுக்கு எதுத்தாப்போலெ ஸ்ரீஷங்கர் கைலாஷ் ஆஷ்ரம்ன்னு ஒன்னு இருக்கு. கோவில் கோபுரமும் கொடியும் தெரிஞ்சதுன்னாலும் உள்ளே போகலை.




காளிகா மாதா

ஒரு பத்துநிமிஷப் பயணத்துலே, ரொம்ப தூரத்தில் சிவன் சிலை ஒன்னு பிரமாண்டமாய் கண்ணுலே பட்டது. நாகேஷ்வர் என்ற இடத்துக்குப் போறோம். தாருகாவனம் என்று வேதகாலத்தில் சொல்லப்பட்ட இடம்.

தாருகா என்ற அசுரனும் தாருகி என்ற அவன் மனைவியும் வாழ்ந்திருந்த காட்டுப்பிரதேசம் இந்த தாருகாவனம். இவன் நிறைய ஆட்களைப்பிடிச்சு சிறை வைத்திருந்தானாம். இவனுடைய போதாதகாலம், சுப்ரியா என்ற சிவபக்தரையும் பிடிச்சுச் சிறையில் அடைச்சுருக்கான். இங்கே இருந்து தப்ப வைக்கும்படி சிவனை நினைச்சு ஓம் நமசிவாயா ன்னு சொல்லிக்கிட்டே இருந்துருக்கார். சிறைப்பட்ட மற்ற ஆட்களும் பஞ்சாட்ஷர மந்திரத்தை ஓத ஆரம்பிச்சுருக்காங்க. இந்த ஓம்கார ஓசை பெரிய அளவில் விரிஞ்சுக்கிட்டே போனதும் தாருகனுக்குக் கோபம் வந்துருச்சு. இவ்வளவு நாள் சும்மாத்தானே கிடந்தாங்க. இப்ப எப்படி இப்படின்னு பார்த்தால் மூலகாரணம் இந்த சுப்ரியான்னு புரிஞ்சது. இதுக்கெல்லாம் முடிவு கட்டணுமுன்னு சுப்ரியாவைக் கொல்லப்போறான். சாக்ஷாத் அந்த சிவனே தோன்றி தன்னுடைய பாசுபத அஸ்திரத்தைச் செலுத்தி தாருகனை அழிச்சுட்டார். அப்போலே இருந்து சிவலிங்க உருவில் இங்கே அருள்பாலிக்கிறார். அதுக்குப் பிறகு நிறைய ரிஷி முனிவர்கள் இந்த இடத்தில் வந்து வசிச்சு சிவனை ஆராதிச்சு வழிபட்டாங்க.
சைவர்களுக்கு மிகவும் முக்கியமான பனிரெண்டு ஜோதிர்லிங்க உருவக் கோயில்களில் இது ஒன்னு. இங்கே வழிபட்டால் விஷக்கடியில் இருந்து காப்பாற்றப்படுவாங்க என்பது ஐதீகம். சிவலிங்கத்தைச் சுற்றி ஒரு பாம்பு வளைஞ்சு இருந்து தன் படத்தால் குடைபிடிப்பது மாதிரி உருவ அமைப்பு. இங்கே மட்டுமில்லை, இந்த சௌராஷ்ட்ராவில் நாம் பார்த்த சிவன்கோவில்கள் எல்லாமே இப்படிப் பாம்புக்குடையுடந்தான் இருக்கு. இன்னும் ஒன்னு கவனிச்சது என்னன்னா, சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திக்கு முன்னால் ஒரு ஆமை வடிவம். அதுக்கும் பூ, குங்குமம் எல்லாம் போட்டு வழிபடறாங்க. சிவலிங்கத்தின் பின்புறச் சுவரில் பார்வதியின் சிலையும் வச்சுருக்காங்க.

சமீபகாலமா ஒரு பிரமாண்டமான சிவனுருவம் செஞ்சு வச்சுருக்காங்க இந்த வளாகத்தில். . பக்கத்துப் பதினெட்டுப்பட்டிக்கும் தெரியுமோ என்னவோ? கோவிலுமே கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. நல்ல பராமரிப்பு. படு சுத்தமாவும் இருக்கு. சிலையின் முகமும் அதிலுள்ள சாந்தி உணர்வும் அற்புதம் கை கால் இடுப்பு எல்லாம் பாம்பணிகள். புலித்தோல் மீது இருக்காராம். புலியின் தலைகூட இருக்கு! வளாகத்துக்குள்ளே இருக்கும் ஆலமரமேடையில் தானியங்கள் இறைபட்டுருக்கு. எக்கச்சக்கப் புறாக்கள். இந்தப் பக்கத்துக் கோபுர அமைப்புகளில், புறா உக்கார இடம்செஞ்சுவிட்டாப்பொலே படிப்படியா ஒரு டிஸைன். இதுகளும் காலரியில் வரிசையா அடுக்கடுக்கா உக்கார்ந்துக்குதுகள். அங்கே விற்கும் தானியத்தை நாம் வாங்கித் தூவுனதும் அப்படியே படையெடுத்துப் பறந்து வந்து கொத்திட்டுப்போறதுதான் முக்கியப் பொழுதுபோக்கு!
நாம் தானியப் பொதியைப் பிரிச்சவுடன் ஒரு பையன் வந்து காலிப் பேக்கட்டை வாங்கிக்கிட்டான். குப்பைக்கூடையைத் தேடவேணாம். நல்ல ஏற்பாடுன்னு இருந்தேன். கடைசியிலே பார்த்தால் இது ஒரு ரீசைக்கிளிங் சமாச்சாரம். ஏகப்பட்ட தானியம் மேடையில் சும்மாக் கிடக்குது திங்க நாதியில்லாமல். அதையெல்லாம் கூட்டிப்பெருக்கி இதே பையில் அடைச்சால் வியாபாரத்துக்குச் சரக்கு கிடைச்சுருதுல்லே!! சூப்பர் ஐடியா.
கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் பெரிய ஹால். நேரெதிரா கருவறை, வழக்கமா தென்னிந்தியக்கோவில்களில் இருப்பதைப்போல் இல்லாமல் சின்ன ஹால் அளவுக்கு இருக்கு. சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் நடந்துக்கிட்டே இருக்கு. லிங்கத்தின் தலைக்குமேல் உள்ள பாத்திரத்தில் இருந்து சொட்டுச்சொட்டாக பால் விழும்படியான அமைப்பு. சிவன் கோவில்களில் வழக்கமா நம்ம விண்ணப்பங்கள் எல்லாத்தையும் நந்தியின் காதில் ஓதிட்டுப்போகும் வழக்கம் இங்கேயும் இருக்கு. வலதுகைப் பெருவிரலும் சுண்டுவிரலும் ரெண்டு கொம்பிலும் படுமாறு வச்சுக்கிட்டுக் குனிஞ்சு காதுலே சொல்லும் ஜனங்கள். நாமும் நம் பங்குக்கு! தமிழில் சொன்னது அதுக்குப் புரிஞ்சுருக்கும்தானே?
முன் மண்டப ஹாலில் நினைவுப்பொருட்கள், சிவலிங்கங்கள், ஜெபமாலைகள் இப்படி விற்பனை ஜரூரா நடக்குது. எட்டிப் பார்த்தவள் பலவித நிற மணிகளால் செஞ்ச மாலை இன்னு முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். அதைக் கழுத்தில் போட்டுக்கிட்ட நொடிமுதல் தலைவிதியே மாறிப்போச்சு!


பயணம் தொடரும்.........:-)

22 comments:

said...

இது என்ன திருப்பம் கடைசியில் ? யாரும் உடனே சிஷ்யர்களா சேருரேன்னு சொல்லிட்டாங்களா? அடுத்த பகுதி எப்போ எப்போ...:))

said...

எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு
ஹூம்! கையில ரெடியா தொழில் வந்துடிச்சு!! :-)

said...

ஆஹா, சஸ்பென்ஸ் வெச்சிட்டீங்களே???

மீ த வெயிட்டிங்

said...

\\\எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு எனக்குள்ளே சின்னதா ஒரு மகிழ்ச்சி\\

சூப்பரு...ஏற்கனவே ஒரு தலைவி இருக்காங்களே!! ;)

ஆகா..கடைசியில சஸ்பென்ஸ்சா!!

சீக்கிரம் போடுங்க ;)

said...

தாருகாவனம் சிவன், கோயில், புறாக்கள்,
ஆலமரம் சிவப்புப் பழங்களுடன் யாவும் மனத்தை நிறைக்கின்றது.

said...

பார்க்க வேண்டிய இடங்கள் .

said...

டீச்சர் உங்க பயணத்தொடர் எல்லாம் படிச்சிகிட்டு தான் இருக்கேன்னு சொல்லிக்கிறேன் .. வருகை பேடுல மறக்காம குறிச்சி வையுங்க

said...

//அதுலே குவியலா பத்து ரூபாய் நோட்டுகள். ஜனங்கள் என்ன ஏதுன்னு கேக்காம ரூபாயைப் போடுவதும், அந்தம்மா கைகளைச் சிரமத்துடன் தூக்கி ஆசி வழங்குவதுபோல் ஆட்டுவதுமா இருக்காங்க. நேத்து மாலை இந்த இடம் காலியாத்தான் இருந்துச்சு. ஒருவேளை காலை ட்யூட்டியோ என்னவோ?//

அடுத்த முறை சென்றீர்கள் என்றால் அங்கே ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பார்க்கலாம். :)

//எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு எனக்குள்ளே சின்னதா ஒரு மகிழ்ச்சி. ஏறக்கொறைய எல்லா அம்சமும் பொருந்தி இருக்குன்னு கோபாலும் சொன்னார். 'இன்னொரு பக்கம் சும்மாத்தான் கிடக்கு. உங்களுக்கு(ம்) ஒரு ஸ்டூல் போட்டுறலாம்ன்னேன். ஆனா ஒன்னு, சாய்ஞ்சு உக்கார்ந்துக்குவேன், பேப்பர் படிச்சுக்கிட்டே ஆசி வழங்குவேன்னு பிடிவாதம் பிடிக்ககூடாது'ன்னு கண்டிஷன் போட்டேன்.//

வருங்கால அம்மா பகவனா ! அவ்வ்வ்வ்

said...

படங்கள் அனைத்தும் அருமை...

said...

வாங்க கயலு.

திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடர்ன்னு தலைப்பு வச்சுறலாமா? :-))))

said...

வாங்க குமார்.

ஓய்வூதியம் தரப்போறதில்லை. நீங்களே பணம் சேர்த்துவச்சுக்கணுமுன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே இன்னொருபக்கம் வரிகளைக் கறாரா வசூலிக்கும் நாட்டில் இருக்கேன்.

அதான்...... எதாவது வழி கிடைக்காதான்னு ஒரு தேடல்!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அடுத்ததைப் போட்டாச்சு:-)

said...

வாங்க கோபி.

ஏற்கெனவே இருக்கும் தலைவியுடன் கூட்டுச்சேரப்போறேன். ஆளுக்கு அம்பது:-)

said...

வாங்க மாதேவி.

இடம் அருமையாத்தான் இருக்கு. எப்படி சைவத்தையும் வைணவத்தையும் இணைச்சுருக்காங்கன்னு பார்த்தும் வியந்தேன்.

said...

வாங்க ஸ்டார்ஜன்.

இந்தியாவில் பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம். நாம்தான் இதைச் சரியா ப்ரமோட் செய்யலையோன்னு கூட இருக்கு.

உள்நாட்டு ஜனத்தொகைக்கு ஒரு பத்து சதம் மக்கள் பயணம் செஞ்சாலே அதிகம்தான்.

said...

வாங்க நசரேயன்.

ஓசைப்படாம வந்து போனா ஆஜர்பட்டியலில் யாரைன்னு சேர்க்க?
ப்ராக்ஸி கொடுக்க யாரும் இல்லையா? :-))))

said...

வாங்க கோவியாரே.

விலைவாசி ஏறும்போது இதுவும் ஏறத்தானே வேணும்?

பூனைச்சாமியாரிணின்னு புதுமை புகுத்தலாமுன்னு இருந்தேன். கோகிக்குக் கொடுத்துவைக்கலை:(

said...

வாங்க சங்கவி.

வருகைக்கு நன்றி

said...

பேப்பர் சாமியார்னு கோபாலுக்கும், ரு.பூ.சாமியாரிணி ன்னு உங்களுக்கும் பெயர் சூட்டியாச்சு.
ஒரு நாளுக்கு ரெண்டு பதிவா. இதென்ன ஆமதாபாத் எக்ஸ்ப்ரஸ் இந்தப் பிடி பிடிச்சு ஓடுது:)
சிவன் நல்ல கம்பீரம். சேஷன் பக்கத்தில கோபாலும் போஸ் கொடுத்திருக்காரே. :)

said...

இந்த தாருகாவனம் மதுரை பக்கமா இருக்கறதா படிச்சா ஞாபகம்.

Madam Please check this site

http://freetouse.webs.com/apps/links/

said...

வாங்க வல்லி.

பெருமாளானாலும் சரி, சிவனானாலும் சரி சேஷன் இல்லாத இடமில்லை.

அவன் பயம் நீங்கிக் கொடுத்த போஸ்:-))))

said...

வாங்க எல் கே.

ஹா.... இதுக்கெல்லாம் ரெடி பதில் உண்டு.

மதுரை பக்கம் இருந்தால் அது தென் தருகாவனம்:-)