Thursday, January 21, 2010

WOW......அடலாஜ் வாவ். vav.................(குஜராத் பயணத்தொடர் 5)

சொன்ன நேரத்துக்கு 'டான்'னு பப்பன் வந்ததுக்கும் நாங்களும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு ரெடியா இருந்ததுக்கும் சரியா இருந்துச்சு. பஃபேதான். என்ன இருக்குன்னு போய்ப் பார்த்தால்.......இப்பெல்லாம் 'சவுத் இண்டியன் மெனு'ன்னு வைப்பது ஒரு கலாச்சாரப் பரிமாற்றம்போலப் பெருகி வருது. இட்லி சாம்பார், தோசை, ஊத்தப்பம். எனக்கு வெஸ்ட்டர்ன் போதும். கோபால்தான் ஆசையா இட்லி சாம்பார் எடுத்துக்கிட்டு வந்தார். ரெண்டு ரூபாய் சைஸில் இட்லி!! நல்லாவே இல்லைன்னு முழிச்சதைப் பார்த்துப் பரிதாபமா இருந்துச்சு. அதுக்குப்பிறகாவது சூதானமா இருந்துருக்கலாம். ஊத்தப்பம் சொன்னதும் தேசலா ஒன்னு வந்துச்சு. ஹூம்......

செக் அவுட் பண்ணிட்டுக் கிளம்பி நேரா சபர்மதி ஆஸ்ரமம். இப்போ அங்கிருந்து கிளம்பி சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அடலாஜ் வாவுக்குப் போய் இறங்குனோம். (வாவ் = கிணறு. வாவின்னு நீர்நிலைக்கு நாமும் சொல்றோமே) 1498 லே கட்டுன படிக்கிணறு. நேத்துப் பார்த்ததைப்போலத்தான். ஆனால் அதைவிடப் பெருசாவும் கலைஅழகோடும் பளிச்சுன்னும் இருந்துச்சு. (ஒருவேளை நாம் வந்த நேரமாவுமிருக்கலாம். நேத்து இருட்டுக் கவிழும் சமயமாப் போயிருச்சே) எல்லாம் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள். இதுக்கு மூணு வாசல்கள் வேற. மூணுபக்கத்தில் இருந்தும் முதல் மண்டபத்தில் இறங்கலாம். தொல்பொருள் இலாக்காவின் பொறுப்பில் இருக்கு.


மாணவர் கூட்டம் ஒன்னு அங்கங்கே உக்கார்ந்து வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிடக்கலை பயிலும் மாணவர்களாம். ஒவ்வொரு அடுக்காக இறங்கிப்போனோம். எங்கே பார்த்தாலும் யானைகள் வரிசை (என்னைச் சொல்லிக்கலை) 'எல்லாவிதமான' சிற்பங்களும் இருக்கு. கடைசி அடுக்கு வந்தவுடன் இருக்கும் கிணற்றுக்குக் கம்பிகளால் மூடிபோட்டு வச்சுருக்கு. அதுக்கு இடையில் சேர்ந்த குப்பை, மண் இவைகளை மூணு பணியாளர்கள் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. சின்னதா ஒரு வேக்குவம் க்ளீனர் இருந்தால் சுலபமா உறிஞ்சி எடுக்கலாம். ரெண்டு நாளைக்கொருமுறை சுத்தம் செய்யவேண்டி இருக்காம். சலிப்பு பேச்சிலும் முகத்திலும்.


இதைத்தாண்டியும் ஒரு சின்ன இடம் இருக்கேன்னு எட்டிப் பார்த்தால் அங்கேயும் ஒரு கிணறு இருக்கு. நீலத் தண்ணீரும், அதில் மிதக்கும் குப்பைகளுமா(-: என்ன பொறுப்புணர்வு இல்லாத மக்கள் பாருங்க! நான் மட்டும் இங்கே அதிகாரியா இருந்தால் எந்த விதமான தீனிகளும் உள்ளே கொண்டுபோக அனுமதி இல்லைன்னு கறாரா இருப்பேன். மிஞ்சிமிஞ்சிப்போனா அரைமணி நேரம் போதும் உள்ளே படிகளில் இறங்கிப் பார்த்துவர. அதுக்குள்ளே அங்கே போய் தின்னுதான் ஆகணுமா? சரி. தின்னதுதான் தின்னீங்க அதுக்காக அந்த பொருள் பொதிஞ்சுவந்த உறைகளை அங்கேயே போட்டுத்தான் ஆகணுமா? இவ்வளவு நேரம் அது உங்க பையில்தானே இருந்துச்சு. காலியானதும் மீண்டும் பையிலே வச்சுக் கொண்டுபோகவேண்டியதுதானே? குப்பைத்தொட்டியில் கொண்டு போட்டால் ஆகாதா? ப்ச்....என்னமோ போங்க(-:

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஒட்டுனாப்பலெ ஒரு கோவில் இருக்கு. (கண்ணுக்கு உறுத்தலா இருந்ததுன்றது வேற) தாய் தகப்பனை மறந்துடாதேன்னு ஸ்ரவண், தன் பெற்றோர்களைக் காவடியில் கொண்டுபோகும் படம் ஒன்னு வெளிப்புறச் சுவரில். (இதேமாதிரி ஒன்னை இன்னொரு இடத்திலும் பார்த்தேன். வெளிநாடு, வெளியூர் வேலைகளுக்குப் போனவங்களுக்கு நினைவூட்டும் டெக்னிக்?) கோயில் இது சம்பந்தமானதோன்னு உள்ளே போனால்.... அது தேவி கோயில். அழகான கண்ணாடி வேலைப்பாடுகள். முன்மண்டபத்தின் ரெண்டு பக்கங்களிலும் சுவர் நிறைச்சு கண்ணாடி பதிச்ச ஓவியங்கள். கோவிலின் கதைகளைச் சொல்லுது. ஒரு அரசனுக்கு, அம்மன் தோன்றி வாழ்த்தி இருக்காங்க. சின்ன கண்ணாடி அலமாரியில் பளிங்கு அனுமார். காலின்கீழ் மனுஷி இல்லை!

வெளியில் இருக்கும் திறந்த மண்டபத்தில் அன்னாடக் கலெக்ஷனுக்காக ஒரு பண்டிட் தயார் செஞ்சுக்கிட்டு இருந்தார். கடவுளைக் குஷிப்படுத்தி மக்கள் (மனக்)குறை தீர்த்துவைப்பார் போல!

நெடுஞ்சாலை 41. மெஹ்ஸானா என்னும் ஊரை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கோம். சுங்கம் வசூலிச்சாங்க. அருமையான சாலை. போக ரெண்டு வர ரெண்டுன்னு நாலு லேன். நெடூக, நடுவிலே பூச்செடிகள் வரிசை. தண்ணீர் அவ்வளவாத் தேவைப்படாத வகைகள். போகன்வில்லா பலநிறங்களில் பூத்துக்குலுங்குது. இது இல்லாம இடது பக்கமும் வலது பக்கமும் சர்வீஸ் ரோடு போல அகலமா ஒன்னு. ரெண்டு சக்கரம், மூணு சக்கரமெல்லாம் அதுலே போகுது. இந்த ஏற்பாடு அருமையா இருக்கேன்னு நினைச்சேன். ஆபத்து இருக்காது. நெடுஞ்சாலையில் விர்ரிடும் வண்டிகள் அதுபாட்டுக்குப் போகலாம்.

குஜராத்தின் முதல் அம்யூஸ்மெண்ட் பார்க், வாட்டர் ஒர்ல்ட் ரிஸார்ட்டைக் கடந்தோம். எல்லாக் கேளிக்கைகளுக்கும் கேரண்டி என்றது போல ராட்சஸ ராட்டினமும், ரோலர்கோஸ்ட்டர் அமைப்பும் நிக்குது. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது வந்து கொண்டிருக்கும் ஊர்களில் எல்லாம் திடுக் திடுக் என்று கோவில்களின் கோபுரங்கள். நம்ம பக்கம் இருப்பதுபோல் ஒற்றைக்கோபுரமா இல்லாமல் சின்னதும் பெருசுமா ஒரு கூட்டமா நிக்குது இங்கே.

மெஹ்ஸானா நகரம் நம்மைக் கைகூப்பி வரவேற்கிறது. அது கும்பிடுமுன்னே நாம் இடது பக்கம் திரும்பி இருக்கணும். நம்ம இலக்கு வேற! அங்கே போகும் வழியைத் தவறவிட்டுட்டோம். சரின்னு கும்பிட்ட கைகளை வலம்வந்து தவறவிட்ட பாதைக்குத் திரும்பினோம். (தவறவிட்டதுக்காக நாலைஞ்சுமுறை மன்னிப்பு கேட்டுக்கிட்டார் பப்பன்! இதெல்லாம் சகஜமப்பான்னு சொன்னோம்.)
இதுவரையில் நல்ல மனிதராகத்தான் இருக்கார் நம்ம(?) பப்பன்.


பயணம் தொடரும்..............:-)))))

பி.கு: படங்களை ஆல்பத்தில் போட்டுவைக்கவா?

32 comments:

Anonymous said...

அந்தப்பெயிண்ட் கலர்புல்லா இருக்கு

said...

என்ன கலைப்பா. எத்தனை பேரு சிரமப்பட்டுச் செய்தாங்காளோ.
அதுவும் அந்த ஊரு வெய்யிலும் கொளுத்தும், குளிரும் வாட்டும்னு கேள்வி. கூப்பின கைகள் பிரம்மாண்டமா இருக்கே!!
நம்ம ஊருக்கும் சுத்தத்துக்கும் சம்பந்தமே இல்லப்பா. அலுத்துக் கொண்டு பிரயோசனமில்லை:)

said...

மேடம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..:))

said...

புகைப்படங்கள் அருமை

said...

டீச்சர்..

தாத்தா பிறந்த மண்ணத் தொட்டுட்டீங்களா..?

வாழ்க..

said...

படங்கள் எல்லாம் அருமை.

நாங்களும் உங்களுடன் பயணித்த மாதிரி உள்ளது.

said...

Thulasiamma, ennoda work relateda gujaratla iruakra nerya perkuda daily pesaren. anga oor mattum illa makkalum arumai , enaku terinthavari..

said...

படங்கள் அருமையா இருக்கு.

இப்போல்லாம் சுத்தத்தை தேடத்தான் வேண்டியிருக்கு.அதிலும் வடநாட்டுக்காரர்கள் பான்பராக் ரங்கோலியில் வல்லவர்கள்.

said...

Hello Mam, i have become a regular reader of ur blog.. I have visited Beijing, New Zealand etc thru ur articles @ 0 cost.. :)
Now Gujarat. Good write-up. Keep writing.

said...

ஆஹா! பார்க்க வேண்டிய இடங்கள்! உங்கள் பதிவின் மூலமா நாங்கள் பார்த்தோம்! நன்றி!

said...

படங்கள் அருமையா இருக்கு.

said...

வாவ் ..கவனிச்சீங்களா அட் சீரோ காஸ்டாம், அதான் பின்னூட்டம் போட்டு சரி செய்துட்டீங்களே பத்மஜா.. ;)

said...

கலைநயமிக்க கட்டிடங்கள்.பார்வைக்கு இனிமை,தொடரட்டும் உங்கள் இனிய பயணம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இந்தக் கோயிலே உள்ளேயும் ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்குப்பா!

said...

வாங்க வல்லி.

இந்தக் கிண்ணக்கூரைகள் வேலைப்பாடுதான் ரொம்பவே பிரமிக்க வைக்குது. எப்படித்தான் செஞ்சாங்களோ!!!

said...

வாங்க பலா பட்டறை.

எனக்கும் உங்களையெல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சியே.

ஆன்மீகத்துலே(யும்) கலக்குறீங்க!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஏம்ப்பா.... படங்கள் அருமை அருமைன்னு புதுசா வாங்க அடிபோட்டுக்கிட்டு இருக்கும் கெமெராவுக்கு ஆப்பு வைக்கலாமா:-))))

said...

வாங்க உண்மைத் தமிழன்.

விருது பெற்ற வீரரே வருக வருகன்னு வரவேற்கின்றேன்.

தாத்தா வீட்டுக்குள்ளேயும் போயிட்டு வந்துட்டொம்லெ:-))))

said...

வாங்க கோமதி அரசு.

சரித்திர வகுப்புலே சுற்றுலா போகலைன்னா எப்படிங்க:-))))

தொடர்ந்து வருவது மகிழ்வைத் தருகிறது.

said...

வாங்க எல் கே.

அது என்னவோ உண்மைதாங்க. நல்லா இனிமையாப் பேசறாங்க. கள்ளம் இல்லாத உபசரிப்பு. gக்ரீடினஸ் கொஞ்சம் குறைவாவே இருக்கு அங்கே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரங்கோலி போட்ட இடங்களுக்குப் போகும் வாய்ப்பு கிடைக்கலை:-))))

said...

வாங்க பத்மஜா.

வணக்கம். நலமா? புதுசா வந்துருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சி.

உங்களைப்போன்றோர்களின் கருத்துக்கள்தான் இன்னும் நல்லா எழுதணுமே என்ற உணர்வை ஏற்படுத்துது.

தொடர்ந்து வரேன்னு சொல்லிட்டீங்க. வாக்கு தவறமாட்டீங்கதானே:-))))

said...

@Thulasi madam

ennoda pathiva parunga abotu my wedding day

http://lksthoughts.blogspot.com/2010/01/wedding-day.html

said...

வாங்க ராஜேஷ் நாராயணன்.

நீங்களும் புது வரவாத் தெரியறீங்க!!!

வணக்கம். தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க ஸ்டார்ஜன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கயலு.

கூடவே சுத்திப்பார்க்கும் வகுப்புக்கண்மணிகள் எக்ஸ்ட்ரா பின்னூட்டம் ஒன்னு போடணுமுன்னு 'விதி' வைக்கலாமா:-)))))

said...

வாங்க அபுல் பசர்.

நீங்களும் புதுசுங்களா? வரவர எனக்கு எந்தப் பெயரைப்பார்த்தாலும் புதியவர்களாத் தோணுது. அன்னிக்குப் பாருங்க, கடற்கரைக்குப் பதிவர் சந்திப்புக்குப் போயிட்டுக் காத்திருந்த நேரத்தில் அங்கே இருந்தவங்க எல்லோருமே பதிவர்களோன்னு தோணுச்சு:-)))

தொடந்து வருவது மகிழ்ச்சி.

said...

இந்தக் கலர் ஓவியம் ரொம்பத்தான் மயக்குதே.

said...

வாங்க மாதேவி.

கலர்ஃபுல் குஜராத் :-)))))

இன்னும் பல இடங்களில் இப்படி அழகான ஓவியங்கள் பார்த்தேன்.

said...

அம்மணி,
தங்கள் வலைப்பூவில் குஜராத்
மாநில செய்தி மற்றும் படங்கள்
கண்டேன். சென்று வந்த இடங்களை
மீண்டும் நினைவில் அசை போட
வைத்தது.
நன்றி,
மீண்டும் வருவேன்
தங்கள்
கோ. முனுசாமி,
சென்னை துறைமுகம்
gmunu_2008@rediffmail.com

said...

வாங்க முனுசாமி.

பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதுதான் தமிழ் தட்டச்சு செய்ய வந்துருச்சே. பேசாம ஒரு பதிவைத் தொடங்கிருங்க.

பதிவர் வாசகரா இருப்பதுபோல, வாசகரும் பதிவராக ஆகணும்.

said...

அடாலஜ் படிக்கிணறில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை:
https://photos.google.com/share/AF1QipMVKrHxFMoqCUQZLgskX_ZUDV6fOkxOwDohHzr9xK04KA8AEBPIgPsFAOduP6zErg?key=d0ZMUmk1c3NFbm1kYmpOZ1NKUDVvR29RZHJmamFB

தாதா ஹரிர் என்ற இன்னொரு படிக்கிணறில் எடுத்த புகைப்படங்கள் இவை:
https://photos.google.com/share/AF1QipMEIA0QyoCYxMJo_bOwQ5IUtvP1UOd-AOLb0eIUznb8OCeyoC_pxdK9DrbQ9x3mqw?key=RFkzb1ZfMzhjdGoxaDFXbzc3dmRZNnFVS1daSkNB

- ஞானசேகர்