Saturday, January 16, 2010

விக்ரம் வேலைக்கு ஆப்பு? (குஜராத் பயணத்தொடர் 1)

அமடாவாட் குஜ்ஜூஸ்..... ஹியர் ஐ கம். போய் இறங்குன ரெண்டே மணி நேரத்தில் சீட்டைக் கிழிக்கும்படியாச்சு. எனக்கு(ம்) கொஞ்சம் மனவருத்தம்தான். வேறென்ன செய்ய? ஏழுநாள் மாரடிக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்க.

புத்தம்புது வண்டியோடு வர்றேன்னு தகவல் வந்தப்பவே என்னடான்னு கொஞ்சம் யோசனைதான்.

சென்னையில் இருந்து சரியான நேரத்துக்குக் கிளம்பிப் பகல் ரெண்டே காலுக்குப் போய்ச் சேர்ந்து பெட்டியை எடுக்கவே அரைமணி ஆச்சு. கோபால் வந்து காத்துக்கிட்டு இருந்தார். பரோடாவில் இருந்தே வண்டியும் ட்ரைவருமா வந்துருக்கார். பத்து வருச அனுபவமாம் ட்ரைவருக்கு. எதுக்கு இங்கே ஏழு நாள்? மூணு நாளே அதிகம். பேசாம நாலு நாளைக்கு ராஜஸ்தான் போயிட்டு வந்துறலாம்ன்னு இவர் காதை நிறைச்சு வச்சுருக்கார் அந்த ட்ரைவர். இவருக்கும் பரவாயில்லையே ஒரே கல்லில் ரெண்டு ஸ்டேட்ன்னு இருந்துருக்கு. சரி எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கலாமுன்னு சொன்னேன். நம்ம ஆளுக்கும் முன் ஜாக்கிரதை அதிகம். மேடம் வரட்டும். அப்புறம் இதைப் பத்திப் பேசலாமுன்னு சொல்லி இருக்காராம். பாவம்.பேய்க்கு வாழ்க்கைப்பட்டு ஆச்சே முப்பத்தியஞ்சரை! வண்டி என்னவோ பளபளன்னு ஜொலிப்புதான்.

ட்ரைவரைப் பார்த்ததும் மனசுக்குப் பக் னு ஆச்சு. சின்னப் பையன். வயசு மிஞ்சிமிஞ்சி இருந்தால் 22 இல்லே 23 இருக்கும். (மெய்யாலுமா பத்து வருச காரோட்டும் அனுபவம்(??)பெயர் என்னன்னு விசாரிச்சேன். விக்ரம். இங்கே ஏர்ப்போர்ட்லே இருந்தே கிளம்பி இங்கே அக்கம்பக்கம் பார்த்துட்டு அறைக்கு சாயந்திரமாப் போகலாமுன்னு ஒரு ஏற்பாடு இருந்துருக்கு போல. ஸ்பைஸ்ஜெட்லே, கயிலைமலைத் தண்ணீர் ஒரு பாட்டில் கொடுத்ததோடு சரி. பையன் வரும்வழியிலேயே 'டான்'ன்னு பனிரெண்டரைக்குச் சாப்பிட்டாச்சாம். இவர்? எனக்காகக் காத்திருக்கார். (ஓ ஹௌ ஸ்வீட்...)
முதலில் அறைக்குப் போயிட்டு கொஞ்சம் எதையாவது சாப்பிட்டுட்டுப் போகலாமுன்னு சொன்னேன். ரிஃப்ரெஷ் பண்ணிக்கவேணாமா? ஹொட்டேல் பெயரைச் சொல்லி அங்கே முதலில் போகச் சொன்னதும் விக்ரம் முகத்தில் ஒரு அதிர்ச்சி. எங்கே இருக்குன்னே தெரியாதாம்! நம்ம முன் ஜாக்கிரதை முத்தண்ணா அதுக்குள்ளே உள்ளூர் மேப், விவரங்கள் எல்லாம் சேகரிச்சு வச்சுருந்தார் விமானநிலையத்தில் எனக்காகக் காத்திருக்கும் நேரத்தில். (சபாஷ்!)

வரைபடத்தைக் காட்டினாலும் அங்கெல்லாம் போகத் தெரியாதாம். ஒருவழியாக நம்ம கோபாலே, இங்கே அங்கேன்னு சொல்லி நகரத்துக்குள் வந்து சேர்ந்தோம். வாயிலே இருக்கு வழின்றது இந்த விக்ரமுக்குத் தெரியலை. யாரையாவது கேட்டுக்கோன்னு நாம் சொன்னாலும் ஒரு அதிர்ச்சி முழி! இத்தனை கலாட்டாவுலே ரெண்டு பேரை வழி கேட்டு வந்து சேர்ந்தப்பவே மணி மூணரை. இங்கே லஞ்ச் டைம் முடிஞ்சுபோச்சு. ரெஸ்டாரண்ட்லே எனிடைம் ஸ்நாக்ஸ்ன்னு ஒரு பிட்ஸா வாங்கினோம். ம்ம்ம்ம்.....ஒன்னும் சொல்றதுக்கில்லை. நாலரைக்குக் கிளம்பி முதலில் கோவிலுக்குப் போகலாமுன்னு வரைபடத்தைக் காமிச்சால்.... அதெல்லாம் எங்கே இருக்குன்னே தெரியாதாம். எல்லாம் ச்சோட்டா ஸே மந்திராம். குஜராத் முழுசும் நல்லாத் தெரிஞ்ச(???) விக்ரமுக்கு இந்த ஆமதாபாத் மட்டும் தெரியலையேப்பா.....

அப்பனே ஞானபண்டிதா, உன் வண்டி வேணவே வேணாம். நீ பரோடாவுக்கேத் திரும்பிப்போ ன்னு கணக்குப் பார்த்துக் காசைக் கொடுத்துட்டு (ஐயோ..... போனஜென்மக் கடன். வசூலிச்சுட்டுப் போயாச்சு!) ஹொட்டேல் வரவேற்பில் இன்னிக்கு ஊர் சுத்த ஒரு ட்ராவல் வண்டி வேணுமுன்னதும் ஒரு இண்டிகா வந்தது. உள்ளூர்க்காரர். மோஷின் என்று பெயர்.

இப்போ கொஞ்சம் சரித்திரம் பார்க்கலாமா? பதினோராம் நூற்றாண்டு முதல் இந்த நகரம் ஜேஜேன்னு ஆகி இருக்கு. சோலாங்கி அரசர் வம்சம் ஆட்சி. அதுக்குப்பிறகு பல கைகள் மாறி 1411 வது வருசம் டெல்லி சுல்தான் வசம் வந்து சேர்ந்துச்சு. முஸாஃபாரித் சாம்ராஜ்யம்.. புதுசா ஒரு தலைநகரம் வேணுமுன்னு இருந்த சமயம், முயல் ஒன்னு ஒரு நாயைத் துரத்துனதைப் பார்த்த டெல்லி பாதுஷா ஒருத்தர் இந்த மண்ணில் வீரம் நிறைஞ்சு கிடக்குன்னு நகரத்தை நிர்மாணித்தாராம். ( இதே போல ஒரு கதையை தமிழ்நாட்டுலேயும் கேட்ட நினைவு வருதே!) இதுக்குப்பிறகு 1487 வது வருசம் அவருடைய பேரன் அஹமத்ஷா, இந்த நகரத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்த நகரத்தைச் சுத்தி கோட்டை மதில் சுவர் எழுப்பி இருக்கார். உள்ளே நுழைஞ்சு வர அங்கங்கே வாசல்கள். மொத்தம் 12. இந்த பாரா தர்வாஸா (ஹிந்தி) வழியாகத்தான் ஊருக்குள்ளே நுழைய முடியும். ஒவ்வொன்னுக்கும் ஒரு பெயர் கொடுத்தாச்சு.
அந்தப் பனிரெண்டில் இது ஒன்னு. போக்குவரத்தை அனுசரிச்சு ஒன்னு, ரெண்டு , மூணுன்னு ஆர்ச் வச்சுக் கட்டி இருக்காங்க. மூணு வாசல் ரொம்பப் புகழ் வாய்ந்ததாம். தீன் தர்வாஸா. அரசர் வரும் வழியாக இருந்திருக்கலாம்.


நம்ம பக்கத்துப் புள்ளையார் கோவில்கள் போல எக்கச்சக்கமா மசூதிகள் கட்டிவிட்டுருக்காங்க. ஒவ்வொன்னிலும் இந்திய பாரம்பரியக் கலை அழகோடு பாரசீகக் கலையையும் சேர்த்து அபூர்வமான வேலைப்பாடுகளும் அமைஞ்சுருக்கு. சரித்திரக் குறிப்புகளோடு இருக்கும் சமாதிகளும் எக்கச்சக்கம். 1947 சுதந்திரம் கிடைச்சு பதிமூணு வருசங்கள் ஆனபிறகுதான் (1960) புது மாநிலமா ஆகி இருக்கு. சுதந்திரப்போராட்டமுன்னதும் காந்திஜியின் பெயர் நினைவுக்கு வராமப்போகாதில்லையா? அவருடைய ஆசிரமம் இங்கேதான் இருக்கு. சபர்மதி நதிக் கரையில் அமைஞ்ச ஊர். இப்போ ரொம்பவே விரிவடைஞ்சு நதிக்குக் குறுக்காக ஏழு இடத்தில் பாலங்கள் கட்டி நதிக்கு ஒரு பக்கம் பழைய நகரமும். மறு பக்கம் புதிய நகரமுமா அமைஞ்சுருக்கு. பழைய நகரத்தில் கண்ணுலே பளிச்ன்னு பட்டது அந்த அகலமான தெருக்கள். இப்போதையக் கணக்கில் சொன்னால் நாலும் நாலுமா எட்டு லேன் ட்ராஃபிக் அளவு.
அரசாங்க அலுவலகங்களுக்கு இடம் போதலைன்னு சமீபகாலத்துலே ஒரு முப்பது கிலோமீட்டர் தூரத்துலே காந்தி நகர் என்ற புது நகரம் உருவாக்கி இருக்காங்க. துணிக்கான ஆலைகள் ஏராளம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஊராம். செல்வச் செழிப்பு எங்கும் தெரியுது. அதே சமயம் ஏழைபாழைகள் இல்லாமல் இல்லை. குடி இல்லாத மாநிலம். மக்கள் நல்ல உழைப்பாளிகளாத் தெரியறாங்க. சம்பாரிக்கும் காசு முழுசும் குடும்பத்துக்கே போகுது. நான் பார்த்தவரையில் தெருக்களில் எந்த 'வாழ்க'வும் எழுதப்படாமல், கல்யாணம், கருமாதி, கண்ணீர் அஞ்சலி ஏதும் இல்லாமல் சுவர்கள் எல்லாம் பளிச்ன்னு காலியாக் கிடக்கு! நடைபாதைகளில் மக்கள் நடக்கறாங்க!!! அந்த இடங்களை ஆக்ரமிச்சு யாரும் வசிக்கலை, கடைகளும் போட்டுக்கலை. போதாக் குறைக்கு அங்கங்கே மெயின் ரோடுகளில் நடைபாதைகளில் இருக்கைகள் போடப்பட்டுருக்கு. நடக்கும்போதே கொஞ்சம் உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டுப் போகலாம்.

வரப்போகும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கண்காட்சியின் விளம்பரத்தில் மட்டும் சின்னதா முதல்வரின் படம் இருக்கு. அதுவும் நாற்சந்திகளில் பெரிய கம்பங்களின் மேல் வச்சுருக்கும் போஸ்டர்கள். கண்ட இடங்களில் ஒன் போகும் ஆட்களைக் காணோம். (எல்லாரும் சென்னைக்கு வந்துட்டாங்க போல!)

போக்குவரத்தைப் பொறுத்தவரை ஒருவிதத்தில் சென்னைதான். வண்டிகள் ஏராளம். இதெல்லாம் நகர எல்லைக்குள்ளில். பஸ் போக்குவரத்துக்குன்னே சாலைகளின் நடுவில் ஒரு பஸ்லேன். அங்கங்கங்கே நிறுத்தங்கள். கன்ணாடிச்சுவர்களும், தானியங்கிக்கதவுகளும், குழல்விளக்குகளுமா சூப்பர். சுரங்கவழியாக தெருவைக் கடந்து நடைபாதைக்குப் போய்விடலாம்.


பஸ் நிறுத்தங்கள். காரில் போகும்போது எடுத்ததால் அவ்வளவு தெளிவு இல்லை(-:


பஸ்ஸுக்கான தனி லேன்

மேம்பாலங்கள் அவ்வளவா இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் இருக்கு. முழுக்க முழுக்க டைல்ஸ் பதிச்சு ரொம்பச் சுத்தமா இருக்கு. அந்த டைல்ஸ்களிலும் ஒரு சித்திரங்களை அமைச்சுருக்காங்க. ஒரு இடத்தில் காந்தியின் தண்டி யாத்திரை, உப்புக் காய்ச்சியது எல்லாம் டைல்ஸ் சித்திரமா இருந்துச்சு.

மேலோட்டமாக எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே போனோம். காய்கறிகள் எல்லாம் அமோகமாக் குவிஞ்சு இருக்கு. டென்னிஸ் பந்து அளவுள்ள முட்டைக்கோஸ்கள் பார்க்கவே ஆசையா இருந்துச்சு. நியூஸி விட்டு வந்ததுமுதல் முட்டைக்கோஸைப் பார்த்து ஆசைப்பட்டது இதுதான் முதல்முறை!

பயணம் தொடரும்..............:-)))))

44 comments:

said...

ஆமதாபாத் பயணம் நகரை நேரே பார்த்த உணர்வைத்தருகிறது துளசி கோபால்.

மிகுதித் தொடருக்கு ஆவலுடன் வெயிட்டிங்...

said...

Kalakareenga Aunty.

said...

{(மெய்யாலுமா பத்து வருச காரோட்டும் அனுபவம்(??)பெயர் என்னன்னு விசாரிச்சேன். விக்ரம்.}

{ஹொட்டேல் பெயரைச் சொல்லி அங்கே முதலில் போகச் சொன்னதும் விக்ரம் முகத்தில் ஒரு அதிர்ச்சி. எங்கே இருக்குன்னே தெரியாதாம்!}

{வரைபடத்தைக் காட்டினாலும் அங்கெல்லாம் போகத் தெரியாதாம். ஒருவழியாக நம்ம கோபாலே, இங்கே அங்கேன்னு சொல்லி நகரத்துக்குள் வந்து சேர்ந்தோம். வாயிலே இருக்கு வழின்றது இந்த விக்ரமுக்குத் தெரியலை. யாரையாவது கேட்டுக்கோன்னு நாம் சொன்னாலும் ஒரு அதிர்ச்சி முழி! இத்தனை கலாட்டாவுலே ரெண்டு பேரை வழி கேட்டு வந்து சேர்ந்தப்பவே மணி மூணரை.}

{நாலரைக்குக் கிளம்பி முதலில் கோவிலுக்குப் போகலாமுன்னு வரைபடத்தைக் காமிச்சால்.... அதெல்லாம் எங்கே இருக்குன்னே தெரியாதாம். எல்லாம் ச்சோட்டா ஸே மந்திராம். குஜராத் முழுசும் நல்லாத் தெரிஞ்ச(???) விக்ரமுக்கு இந்த ஆமதாபாத் மட்டும் தெரியலையேப்பா.....}

அது எப்படி உங்களுக்குன்னு 'தம்பிகள்' இப்படி அமையுறாங்க...திருப்பதிலயும் சரி,இங்கயும் சரி..


சிவராமா,எப்படி உன்னால மட்டும் முடியுதுன்னு..ஜனகராஜ் சொல்லற கதையா ஆயிடப்போகுது..

:)))))

said...

//நான் பார்த்தவரையில் தெருக்களில் எந்த 'வாழ்க'வும் எழுதப்படாமல், கல்யாணம், கருமாதி, கண்ணீர் அஞ்சலி ஏதும் இல்லாமல் சுவர்கள் எல்லாம் பளிச்ன்னு காலியாக் கிடக்கு!//

இது குஜராத்தின் சிறப்பு! அவர்கள் தேர்தல் பிரச்சாரமும் அருமை என்று அங்கே இருக்கும் என் உறவினர் கூறினார்!

//நடைபாதைகளில் மக்கள் நடக்கறாங்க//

:-))

மோடி பற்றி பல்வேறு (மத) சர்ச்சைகள் இருந்தாலும் அவர் குஜாராத்தை முன் மாதிரி மாநிலமாக வைத்துக்கொண்டு இருக்கிறார் என்பது அங்கே உள்ள பொதுமக்களின் கருத்து.

//பயணம் தொடரும்............//

குஜராத் பற்றி மேலும் பல தகவல்கள் சிறப்பாக தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

said...

வாங்க மாதேவி.

இப்படியெல்லாம் சொல்லப்பிடாது. வாய்ப்புக் கிடைக்கும்போது வாசகர்களும் ஒருமுறை நேரில் போய் குறைஞ்சபட்சம் நான் எழுதுனது சரியா இருக்கான்னாவது சரிபார்த்துக்கிட்டு வரணும்,ஆமா:-))))

said...

வாங்க விஜி.

கலக்கலும் ஒரு நாள் தெளியாமலா போயிரும்:-)))))

said...

வாங்க அறிவன்.

எனக்குன்னே உலகம் முழுசும் இப்படிப்பட்டத் தம்பிகளை தூவிவிட்டு இருக்காருப்பா அந்த பொல்லாத கடவுள்!!!!

ஆனாலும் இந்தமுறை சட்னு முழிச்சுக்கிட்டு வச்சுட்டேனில்லே ஆப்பு:-)))

said...

வாங்க கிரி.

போய்வந்த அனுபவங்களின் கணக்கைப் பார்த்தா நீங்கெல்லாம் போதும் போதுமுன்னு சொல்லும்வரை குஜராத் தான்:-)

said...

ஆகா..மோடி கலக்குறாரு போல!! ;)

said...

அட??? எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க??? இன்னும் ஆச்சரியம் காத்துட்டு இருக்கும்னு நம்பறேன். மோடியோட சர்வசாதாரணமாக் கைகுலுக்கி மோடிபாய், கைஸே ஹோ னு கூப்பிட்டுப் பேசலாமே?? பேசிட்டு வரது தானே???

said...

இப்போ கொஞ்சம் சீரியஸா, மாநிலத்தை முன்னேற்ற மோடி காட்டும் அக்கறையை மக்களும் காட்டறாங்க. நோ இலவசம்! பரோடாவிலே என்னோட மாமியாருக்குக் கூடமாட உதவி செய்யும் பணியாளர் பெண்ணுக்கு தீபாவளிக்குப் புடவை வாங்கிக்கோனு பணம் கொடுத்தா வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா! இத்தனைக்கும் அவள் கணவர் ஆட்டோ தான் ஓட்டறார். நீங்க ஆட்டோவிலேயும் பயணம் செய்திருப்பீங்கனு நம்பறேன். ஆட்டோ டிரைவர்கள் கூடப் பேசினா இன்னும் நல்லாவே புரியும்!

said...

//இப்படியெல்லாம் சொல்லப்பிடாது. வாய்ப்புக் கிடைக்கும்போது வாசகர்களும் ஒருமுறை நேரில் போய் குறைஞ்சபட்சம் நான் எழுதுனது சரியா இருக்கான்னாவது சரிபார்த்துக்கிட்டு வரணும்//

flight ticket(includin return Journey) vangi tanga.. poitu varen

said...

சமீபகாலத்துலே ஒரு முப்பது கிலோமீட்டர் தூரத்துலே காந்தி நகர் என்ற புது நகரம் உருவாக்கி இருக்காங்க. //

இது டோண்டு சார் சொல்லற சமீபமோ?? ஏன்னா காந்திநகர் அறுபதுகளின் கடைசியிலேயே உருவாகிவிட்டது! :D

said...

அருமை டீச்சர் ...

said...

கண்கள் மட்டுமன்றி அகமதும் பார்த்து ரசித்த அகமதாபாத்தின் பயணக்கட்டுரை தொடங்கிவிட்டதே! :)

ஒப்புரவு ஒழுகுன்னு சொன்ன ஔவையார் துப்புரவு ஒழுகுன்னும் சொல்லீருக்கலாம். குப்பையப் பொது எடத்துல போடக்கூடாதுன்னு எல்லாருக்கும் புரியனும். நேத்து ஒரு பிரபல எழுத்தாளரை பெசண்ட் நகரில் சந்தித்தேன். கிளம்பும் பொழுது அதே தெருவில் இன்னொரு பெரிய காரும் சென்றது. திடீரென காருக்குள் இருந்து ஒரு கோக் கேன் சாலையில் வந்து விழுந்தது. படித்து செல்வத்தில் கோடியில் கூடியிருக்கும் மாடி வீட்டு துண்டுபீடிகளும் இப்பிடி நடக்கையில் படிக்காதவரை என்ன சொல்ல! இந்த விஷயத்தில் குஜராத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டியதுதான் போல.

said...

:o.. இவ்ளோ மிஸ் பண்ணிட்டேன்... அவ்வ்வ்...

superb post..

said...

துல்சிபெ(b)ன், கேம்ச்சே....

//மக்கள் நல்ல உழைப்பாளிகளாத் தெரியறாங்க.//

நூத்துல ஒரு வார்த்தை.. இன்றைய மும்பையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இவர்களும் ஒரு முக்கியமான காரணம்.

said...

அன்பின் துளசி

பாவம் கோபால் - விக்ரத்தக் கூட்டிட்டு வந்தா அவன் வேலைக்கு ஆப்பு வச்சீட்டிங்களே ! - ம்ம் - குஜராத்- ஆமதாபாத்- நல்ல பயணக் கட்டுரை - படங்கள் சூப்பர்- ஓக்கே - மோழ்ஹின் இன்னும் இருக்காரா 0 இல்ல சீட்டக் கிழிச்சாச்சா

நல்வாழ்த்துக்ள் துளசி

said...

வீதியோர இருக்கைகள் மிக அழகு.. நினைச்சுப்பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு துளசி.. :)

said...

இப்படித் தலைப்பு வைக்கிறத்துக்கு வேற , உங்க கிட்ட பயிற்சி எடுத்துக்கணும் போல இருக்கே!!
அஹமதாபாத் நேரிலியே பார்த்த மாதிரி இருக்கு. பல நண்பர்களுக்கு இந்தத் தொடர் பயன் படும்.
துளசி பயணம் செய்தால் எங்களுக்குத் தான் லாபம்.

said...

வாங்க கோபி.

நல்லாக் கலக்கி விட்டுட்டா..... அப்படியே தெளிஞ்சுரு(மா)ம்.

சிங்கிள் உள்ளுறவு மந்திரி என்பதால் வண்டி சீரா ஓடிக்கிட்டு இருக்கு.

said...

வாங்க கீதா.

சுயமரியாதையை உண்டாக்குறோமுன்னு சொல்லி, நம்ம மக்களை, சுயமரியாதையை முற்றிலுமா தொலைக்க வச்சுருக்காங்க. இலவசத்துக்கு ஆலாப் பறக்கும் சமுதாயத்தை ஏற்படுத்துனது ஒரு மாபெரும் வெற்றி என்ற அளவுலே இருக்கு.

எளிதில் அணுகும் அளவில் தலைமை இருக்கணும். ந்ங்க ஊரிலும்கூட பிரதமரை எளிதாகச் சந்திச்சுப் பேசமுடியும்.

ஜால்ராவின் ஓசை தமிழ்நாட்டில்தான் அலவில்லாமக்கிடக்கு(-:

சரித்திரத்தில் அம்பது அறுபது எல்லாம் மிகச்சமீபம்:-)))))

ரெண்டாவது பகுதியில் ஒரு ஆன்மீக விளக்கம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

said...

வாங்க எல் கே.

நம்ம வகுப்புலே சேர டொனேஷன், கேப்பிடல் ஃபீஸ் ஒன்னும் இல்லை கவனிச்சீங்களா?

டூர் அறிவிப்பு வந்தவுடன், எல்லோரும் வந்து சேர்ந்துக்கணும் அவுங்கவுங்க கைக்காசோடு!

வாய்ப்பு இப்படி(யும்)வரும்:-)

said...

வாங்க ஜீரா.

நீங்க சொன்ன அந்தப் பிரபல ஏரியாவுக்கு நானும் போயிருக்கேன். மக்கள்ஸ்க்கு வீட்டுக்குள்ளே மட்டும் சுத்தம் இருந்தால் போதுமாம். வாசலைப் பற்றிக் கவலை(யே) இல்லை(-:

said...

வாங்க கலகலப்ரியா.

ஒன்னும் மிஸ் பண்ணலை. இதுதான் தொடரின் ஆஆஆஆஆஆஆஆ ...ரம்பம்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரைட்ச்சே.

எல்லோரும் உழைச்சால்தானே நாடு முன்னேறும்!

கடமைன்னு ஒன்னு இருக்கே.

said...

வாங்க சீனா.

கோபாலுக்கு பயங்கர ஆதரவாளரா ஆகிக்கிட்டே இருக்கீங்க. நல்லதுக்கில்லே...ஆமாம்.:-)

மோஷீனை குஜராத்திலெயே விட்டுட்டு வந்துட்டோம்!

said...

வாங்க ஸ்டார்ஜன்.

தொடர்ந்து வாசிக்கணும். இது பரிட்சைக்கு வரும் பகுதி:-)

said...

//நம்ம வகுப்புலே சேர டொனேஷன், கேப்பிடல் ஃபீஸ் ஒன்னும் இல்லை கவனிச்சீங்களா?

டூர் அறிவிப்பு வந்தவுடன், எல்லோரும் வந்து சேர்ந்துக்கணும் அவுங்கவுங்க கைக்காசோடு!/

engaluku ellame ilavasama venum :P.. so freeya kuttikitu ponenganathan varuvom :D

said...

வாங்க கயலு.

எங்கூர்லேயும் ஷாப்பிங் பகுதிகளில் இப்படிப் போட்டுவச்சுருப்பாங்க. ஆனா...இங்கே மெயின்ரோடுலே கூட இருக்கை இருக்கு என்பதுதான் வியப்பா இருக்கு.

said...

வாங்க வல்லி.

என்னாலே லாபமுன்னு சொன்ன ஒரே ஆளு நீங்கதான். கோபாலைக் கேட்டுப் பாருங்க............
மூக்கால் அழுவார்:-)

said...

எல் கே.

எல்லாமே இலவசமா வேணுமா?

சரியான கேப்டன் பார்ட்டியா இருக்கீங்க?

தமிழன் என்பதை நிரூபிச்சுட்டீங்கப்பா:-))))))))))))

said...

வந்தேன் வந்தேன் பதிவுகளை படிச்சுகிட்டு இருக்கேன்.,
ப்ரஸண்ட் போட மறந்திடாதீங்க

said...

வாங்க புதுகைத் தென்றல்.

'மறைந்திருந்து பார்க்கும் மர்மம்' என்ன?

said...

அகமதாபாத் என்றதும் எனக்கு வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் தான் நினைவிற்கு வரும் (சென்றது 90களில். இப்போது மாறி விட்டதோ அல்லது நீங்கள் புதிய நகர்ப்பகுதியில் சுற்றினீர்களோ ?

உங்கள் பயணக்கட்டுரையை எதிர்நோக்கி...

said...

ரீச்சர் ! ஆரம்பிச்சாச்சா!!! பாடத்தை தான்... நீங்க குசராத் பத்தி சொல்லறதப்பாத்தா.. இங்கயே ஸ்லம் டாக் படமெடுத்து இருக்கலாமோ... இங்க பாக்கறவனுகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்காதில்ல... இப்பதான் முத பாடம் ஓவர்!!!

said...

வாங்க மணியன்.

நகரத்துக்குள் அவ்வளவாக மாடுகள் இல்லை. அங்கங்கே ஒன்னு ரெண்டுதான். பழைய நகரில் சில ஒட்டக வண்டிகள் இருந்தன. இருட்டிவிட்டதால் படங்கள் எடுக்க முடியலை.

இண்று மூன்றாம் பகுதி வெளிவந்துள்ளது:-)

said...

வாங்க இலா.

மூணாம்பகுதி போட்டாச்சு.

இந்தியா முழுக்க ஒவ்வொரு பாகமாச் சுத்திப் பார்க்கணும்னு இருக்கேன்:-)

இது பரீட்சைக்கு வரும்,ஆமாம்:-))))

said...

டீச்சர் அஹமதாபாத் போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா....

said...

வாங்க சிந்து.

சொல்லி இருந்தால் .......
யோகநித்திரையில் இருந்து எழுந்து ஓடிவந்துருப்பீங்களா?:-))))))

said...

நா ஓடி வந்தா பூகம்பம் வந்திருச்சுன்னு ஜனங்க நினைப்பாங்க...

என்னோட பெரிய அண்ணி வீடு அங்க வஸ்த்ராபூரில் தான் இருக்கு.அவங்க தங்கைகளும் நியூசியிலிருந்து இரண்டு வாரத்துக்கு முன்னாடி அஹமதாபாத் லேண்டாயிருக்காங்க.ஏதாவது லோக்கல் சப்போர்ட்டுக்கு உதவியா இருந்திருக்குமேனு நினைச்சேன் டீச்சர்.

said...

சிந்து ,

ஜஸ்ட் ஒரு நைட் தங்கல்தான் அங்கே. இதுக்குப் பிரமாதப்படுத்துவானேன்னு கொயட்டா இருந்துட்டேன்!

said...

//ஸ்ஸுக்கான தனி லேன்

மேம்பாலங்கள் அவ்வளவா இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் இருக்கு. முழுக்க முழுக்க டைல்ஸ் பதிச்சு ரொம்பச் சுத்தமா இருக்கு. அந்த டைல்ஸ்களிலும் ஒரு சித்திரங்களை அமைச்சுருக்காங்க. ஒரு இடத்தில் காந்தியின் தண்டி யாத்திரை, உப்புக் காய்ச்சியது எல்லாம் டைல்ஸ் சித்திரமா இருந்துச்சு.

மேலோட்டமாக எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே போனோம். காய்கறிகள் எல்லாம் அமோகமாக் குவிஞ்சு இருக்கு. டென்னிஸ் பந்து அளவுள்ள முட்டைக்கோஸ்கள் பார்க்கவே ஆசையா இருந்துச்சு. நியூஸி விட்டு வந்ததுமுதல் முட்டைக்கோஸைப் பார்த்து ஆசைப்பட்டது இதுதான் முதல்முறை!

பயணம் தொடரும்..............:-)))))//

பேருந்துகளுக்கு வழிப்பிரிவு வைத்திருப்பது சிங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல பலன் அளிக்குது, பேருந்தில் வேலைக்குச் செல்கிறவர்கள் நேரத்துக்கு சென்றுவிடலாம். இந்த முறை பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஏன்னா நடுத்தர பொதுமக்கள் பேருந்தில் தான் அலுவலகம் செல்கிறார்கள்.

said...

வாங்க கோவியாரே.

எங்கூரில் (கிறைஸ்ட் சர்ச்சில்) பஸ்ஸுக்கு மட்டுமில்லை, சைக்கிளுக்கும் தனி லேன், மரூன் சிகப்பில் போட்டுருக்காங்க. பள்ளிப்பிள்ளைகள் பாதுகாப்பு கருதி.