Thursday, January 14, 2010

வீடு நோக்கி ஓடி வந்த என்னையே.........

அரக்கப்பரக்க நாலுமணிக்கு எழுந்து அஞ்சுமணிக்கு விமானநிலையம் வந்து சரியான நேரத்துக்கு விமானம் கிளம்பி சரியான நேரத்துக்குச் சென்னைக்கு மேலேவந்து வட்டமடிச்சே அரைமணி நேரம் கடந்துபோனது. இறங்க முடியாதாம். பனி மூட்ட(மா)ம். ஓடுதளம் கண்ணுக்குப் புலப்படலையாம்!!!! இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை????

விமானத்தை பெங்களூருவுக்குத் திருப்பி அங்கே போய்ச் சேர்ந்தாலும், யாரையுமே இறங்க அனுமதிக்கலை. கதவு மட்டும் திறந்து வச்சுருக்கு. பெங்களூருக்கிளை மசாலாவிமானப் பணியாளர்கள் கொண்டு வந்து கொடுத்த ரெண்டு நிமிஷ நூடுல்ஸ் கப்புலே, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி எதிர்பாராத தடங்கலுக்கு வருந்திக்கொண்டே காலை நாஷ்டா பரிமாறினாங்க. மசாலா நூடுல்ஸ்! ஏம்ப்பா..இதுவும் உங்க விமானச்சேவை போல மசாலாவாத்தான் இருக்கணுமா? வாயில் வச்சால் வழங்கலை. நொந்து உண்மையாவே நூடுல்ஸ் ஆகிட்டேன். ஆனா நம்ம ஜனங்களுக்குப் பொறுமை ஜாஸ்த்தி. ஏதோ பிக்னிக் வந்த சந்தோஷத்துலே ஜாலியா இருக்காங்க. அந்த நூடுல்ஸே தேவாம்ருதமா இருக்கு போல!!!!!!!!
இரண்டாவது உலகப்போர் முடிஞ்ச சமயத்துலே நிறைய மக்கள் போதுமான உணவு கிடைக்காமக் கஷ்டப்பட்டப்போது ஆராய்ச்சி பலதும் செஞ்சு இந்த உடனடி நூடுல்ஸ் கண்டு பிடிச்சவர் ஒரு ஜப்பானிய டாக்குட்டர். (Dr. Momofuku Ando) போர் முடிஞ்சது என்னமோ 1945 வது வருசம். பதிமூணு வருசம் கஷ்டப்பட்டு இதை இவர் கண்டுபிடிச்சது 1958லே!

விமானதளத்தில் ஒரு பக்கமா நிறுத்துனவங்க, ரொம்பவே பெரியமனசு பண்ணிப் போனாப்போகட்டுமுன்னு மொபைல் பயன்படுத்திக்கலாமுன்னு தயை புரிஞ்ச அடுத்த விநாடி முதல், 'இங்கே வந்து இறங்கின காரணத்தை விதவிதமான மொழிகளில் மக்கள்ஸ் அவுங்கவுங்க மக்கள்ஸுக்கு ஒலி பரப்புனாங்க. இது ஏதோ த்ரில்லர் மாதிரி பெருமிதத்தோடுக் கதைச்சதையெல்லாம் கேட்டுக்கிட்டே இருந்த நாம் மட்டும் சும்மா இருக்க முடியுமா? அண்ணன் வீட்டுக்கும், பதிவுலகத்தோழி ஒருவருக்கும் கொஞ்சம் மசாலா எல்லாம் சேர்த்து கதை விட்டேன்:-))))
ஒரு மணிநேரம் ஆனதும் பத்தே முக்காலுக்குக் கிளம்பி ஆடிஅசைஞ்சு பதினொன்னரைக்கு சிங்காரச்சென்னையில் தடம் பதிச்சோம். வெறும் மூணேகால் மணி நேரத் தாமதம்தான். வெளிமக்களை வரவேற்கும் விமானநிலையத்தில் விழாக்கால அறிவிப்பும் வாழ்த்து(க்)களும் வச்சுருந்தாங்க. நிறையப்பேருக்குத் தமிழ் படிக்கத்தெரியாதது எவ்வளோ நல்லதாப் போச்சு பாருங்க!

இந்த இனிய பொங்கள் திருநாளில்
மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்.



அடடா.... எப்பவும் இந்த டாஸ்மாக் ஞாபகம்தானா? அதுவும் செம்மொழி மாநாடு எல்லாம் அமர்க்களப்படப்போகுது..... கனிவோடு கொஞ்சம் மொழியைக் கவனிங்கப்பா................

வெளியே வந்ததும் வழக்கமான ................ ப்ச்.... இருக்கட்டும். இப்ப வேணாம். பண்டிகைக் காலம் அல்லவா?

எல்லோரையும் அரசுவழியிலேயே வாழ்த்திக்கலாம்.


அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்து(க்)கள்!!!!.

31 comments:

said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

said...

சரி சரி பொங்கல் வாழ்த்துக்கள்

said...

கள் - பெரிசா தான் இருக்கு.
பொங்கல் கரும்பு சாப்பிட்டு எத்தனை நாளாகிவிட்டது!!

said...

ஹய் கப்போ நூடுல்ஸ் மாதிரியா...

அந்த த்ரில்லர் ஸ்டோரி சொல்ற இடம் சூப்பர்.. :)

said...

டீச்சரக்கா!! உங்களுக்கும் இனிய பொங்'கள்' நல்வாழ்த்துக்'கள்'.

உங்களுக்காக ஹல்தி குங்குமம் என் வீட்டுல காத்துகிட்டு இருக்கு.

said...

பொங்காத கள் வாழ்த்துக்கள் டீச்சர்

said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

said...

பொங்கல் வாழ்த்துக்கள்.பயண கட்டுரை ஒண்ணுமில்லையா??

Anonymous said...

பொங்கல் மற்றும் பொங்கள் வாழ்த்துக்கள்.

பின்னே சே டு யூ சொல்லவேணாமா

said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

said...

சூப்பரு பயணம் எல்லாம் முடிச்சிட்டு சரியாக பொங்கலுக்கு வந்திட்டிங்களா! கலக்கல் டீச்சர் ;))

மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;)

said...

Wish you and your family a very very Happy Pongal..We are glad that you are back safely.

said...

அன்பின் துளசி

ஆகா ஆகா - நூடுல்ஸ் கொடுத்தா சாப்பபிட வேண்டியதுதானே - அதுக்கு ஒரு பதிவு - நூடுல்ஸ் யார் கண்டுபிடிச்சா எப்போ - ம்ம்ம்ம்

விமானத்தில் 4 மணி நேரம் சும்மா உக்காந்திருக்க முடியுமா என்ன

செம்மொழி மாநாடு - கனிவோடு மொழியக் கவனிக்கலாமே - ம்ம்ம் ரசிச்சேன்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...

//செம்மொழி மாநாடு - கனிவோடு மொழியக் கவனிக்கலாமே - ம்ம்ம் ரசிச்சேன்/

point noted. seekiram unga veetuku police vara pothu

said...

இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

நல்வரவு துளசி. என்ன எல்லாம் நடக்குது நம்ம ஊரில ன்னு தெரிஞ்சுக்கத்தான் ,
இப்படி மசால ஜெட் கரங்க செய்திருக்காங்க. புரியலையே உங்களூக்கு:)
பொங்கல் நாள் நல் வாழ்த்துகள் துளசி.
பயணக்கட்டுரைகள் ஒரு நல்ல நாளில் ஆரம்பிச்சாச்சு!!!

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

said...

வாங்க வாங்க வாங்க.

@ கட்டபொம்மன்
@ அண்ணாமலையான்
@ குமார்
@ ஸ்டார்ஜன்
@ கயலு
@ அமைதிச்சாரல்
@ சங்கர்
@ ரோமியோ
@ விஜி
@ சின்ன அம்மிணி
@ கவிதா
@ கோபி
@ சந்தியா
@ சீனா
@ எல்கே
@ மாதேவி,
@ வல்லி
@ நசரேயன்

அனைவரின் வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றி.

இது ச்சும்மா யானை மணி ஓசை. பயணக்கட்டுரை வந்துகொண்டே இருக்கு!



குமார்,

நாங்களும் ரொம்ப வருசத்துக்குப்பிறகு கரும்பு சாப்பிட்டோம்(?)

ஸ்டார்ஜன்,

நீங்க அவரா? க்ளு இதோ...

//கண்களில் நீர் வரவழைத்து விட்டீர்கள். 13 வருடங்களுக்கு முன்பாக நான் இழந்த
எனது கபியை நினைத்து. அன்றில் இருந்து வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கக்
கூடாது என்ற முடிவெடுத்தேன். //

ஆட்டோவுக்கு அட்ரஸ் தெரியாதுன்னு ஒரு நம்பிக்கைதான். பிரபலமானவர்கள் விலாசம்கூட தெரியலைன்னு போலீஸே சொல்லுது.

said...

அயர்வு இன்றி உயர்வு கொள் பயணம் சென்று
பகிர்வு கொள் பதிவு மூலம் பெருமை கொண்ட
நுகர்வு சிறக்கும் துளசிதளத்தின் டீச்சரே வாழ்க வாழ்க :)

பொங்கள் வாழ்த்துகள். அதுவும் எங்கள் வாழ்த்துகள் :)

அந்த நூடுல்ஸ்க்குக் கப்பு-ஓ-நூடுல்ஸ் என்று பெயர். ரொம்பத் தின்னா வயித்துக்குள்ள பிளாஸ்ட்டிக் போகுமாம். என்னோட நண்பனோட நண்பனுக்குக் கப்பு-ஓ-நூடுல்ஸ் ரொம்பப் பிரியமாம். அதையே தெனமும் சாப்ட்டு சாப்ட்டு... வயித்து வலியாம். வயித்தச் சோதிச்சுப் பாத்தா... உள்ள பிளாஸ்டிக். கொதிக்கக் கொதிக்க வெந்நீ ஊத்துறாங்கள்ள... அதுல கொஞ்சங் கொஞ்சமா உள்ள போயிருக்காம்.

said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் !!தமிழ் புத்தாண்டை தீபாவளியாக துவக்கி இருக்கிறீர்கள் !!

said...

வாங்க ராகவன்.

ஹப்பா...... எவ்வளோ நாள் ஆச்சு இங்கே உங்களைப் பார்த்து!!!!

கவிதையெல்லாம் ஆறாப் பெருகுது? செம்மொழி மாநாட்டுக்கான பயிற்சியா?????

ப்ளாஸ்டிக் இப்போ எல்லோர் வயித்துலேயுமா!!!!

said...

வாங்க மணியன்.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

உண்மையைச் சொன்னா தீபாவளிக்கு ரொம்பத் தாமதமாத்தான் எழுந்தேன்:-)

அதுக்கு இப்போ ஈடு கட்டியாச்சு.

புது பயணத்தொடர் ஆரம்பிச்சுருக்கேன்.

வழக்கம்போல் ஆதரவு வேண்டுகிறேன்.

said...

வாங்க துளசிஜி, ஏன் செம்மொழியை எல்லாம் நினைச்சு குழப்பிக்கிறீங்க. இதுவும் சம்மொழி ன்னு விட்டுடுங்க.

http://kgjawarlal.wordpress.com

said...

வாங்க ஜவஹர்.

விட்டுத் தொலைக்கலாமுன்னா இந்த ப்ரூஃப் ரீடர் புத்தி நம்மை விடமாட்டேங்குதேப்பா! அதிலும் மொழி என்பதை மனிதர்கள் தங்கள் எண்ணங்களை அடுத்தவருக்குத் தெரிவிக்கும் ஒரு கருவியாக நினைக்காமல் அதை வச்சே அரசியல் பண்ணும்நாட்டில் வேற பிறந்து தொலைச்சுட்டோமே......

said...

ஆஹா அரசு என்னை பின்பற்றுதா! "வெறி" குட்:-))

(நான் 2வருஷம் முன்னமே பொங்கள்ன்னு சொல்லி கல்லடி பட்டவனாக்கும் டீச்சர்)

said...

வாங்க அபி அப்பா.

ஆஹா.... அரசின் ஆலோசகர் நீங்கதானா?

மொழி உருப்பட்டுரும்:-))))

said...

நாம சென்னை வானிலையை பத்தி ரொம்ப பேசறோம்னு ரோஷம் வந்திருச்சோ என்னவோ
:)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

சென்னையில் ஃபோக் என்றது ஒன் ஆஃப் த உலக அதிசயமாத்தான் இருக்குப்பா!!!

said...

டீச்சர் வந்துட்டதை நா தான் ரொம்பபபப லேட்டா தெரிஞ்சிக்கறேன் போல...

said...

வாங்க சிந்து.

யோகாவில் மெய் மறந்துட்டீங்க போல:-))))