Friday, November 07, 2008

யானைக்கு அடி சறுக்கிடுச்சேப்பா.....சறுக்கிடுச்சே(-:

ஒரு ஊருலே ஒரு யானை இருந்துச்சாம். அதுக்குத் தன் ஞாபகசக்திமேலே அசாத்திய நம்பிக்கையாம். அதைப் பத்திச் சொல்லிச் சொல்லி அதுக்கு ஒரு கர்வமே வந்துருச்சுன்னா பாருங்களேன்!

முக்கியமா தேதிகள், வருசங்கள் தன் மனசுலே அப்படியே நின்னுருமுன்னு பெருமையாப் பீத்திக்கறதும் உண்டு. ஆனா முந்தாநேத்து என்ன குழம்பு வச்சே..... போன திங்கக்கிழமை என்ன நிற உடுப்புப் போட்டேன்னு கேட்டுப்பாருங்க....... அம்பேல். ஹா...இதெல்லாம் ஒரு விசயமா நினைவு வச்சுக்கன்னு அலட்சியமாத் தூக்கி எறிஞ்சுரும் இந்தக் கேள்விகளை.

தினமும் ஒரு முக்காமணி போல நேரம் ஒதுக்கித் தேடும் பழக்கமும் இதுக்கிருக்கு. என்னத்தைத் தேடுமாம்? அதெல்லாம் தெரியாது....அப்பப்ப மனசுலே அதைக் காணோமே, இதைக் காணோமே, எங்கே வச்சுருப்பேன்னு தேடும் டைம்:-)

இப்ப எதுக்கு இந்தப் பேச்சு வந்துச்சு? காரணம் இருக்கு. யானைகிட்டே செல்ஃபோன் ஒன்னு இருக்கு. எதுக்கு வச்சுருக்கு? யாருக்குத் தெரியும்? ஊருலகத்துலே எல்லாரும் வச்சுருக்கும்போது யானைக்கு இல்லைன்னா எப்படி? செல் இல்லாதவன் புல்லுன்னு பழமொழி இருக்கே........

இது எப்படி வந்துச்சுன்ற விவரம் இங்கே இருக்கு, பாருங்க.

வருசாவருசம் ஒருதடவை குறிப்பிட்ட (குறைஞ்சபட்ச) தொகைக்கு இந்த ப்ரீபெய்டு சர்வீஸுக்கு டாப் அப் செஞ்சுக்கும் வழக்கம் யானைக்கு. ஒரே ஒரு முறைதான். ஏன்னா..... அந்த ஃபோன்லே இருந்து யாரையும் கூப்புடாது. மறுபாதிக்கு மட்டும் விதிவிலக்கு. கூப்புட்டாலும் மிஸ்டு கால் தான் விடும். இதனால் வருசாவருசம் போடும் மொய் வளர்ந்துக்கிட்டே இருந்துச்சு.

இந்த வருசம் மொய் எழுதும் தினம் வந்ததும் மொய் எழுதப்போச்சு. அப்ப அந்த போன்கார(ன்)ர் சொல்றார், 'உன் கணக்கு காலாவதி ஆகிப்போச்சு முந்தாநேத்தோட'ன்னு! பகீர்னு இருந்துச்சு யானைக்கு!

அதெப்படி...... இன்னிக்குன்னுதானே மெமரியி(மனசு)லே பதிஞ்சுருக்கு. ஏற்கெனவே ஒரு முறை இப்படி ஆனதை, சாவித்திரி போல் வாதிட்டு சத்யவான் உயிரை மீட்ட அனுபவம் இருக்கேன்னு யோசிச்சு ஆவன செய்யலாமுன்னு ஆரம்பிச்சது யானை.. முதல் ஸ்டெப்...... அவுங்களுக்கு ஒரு ஃபோன் கால் . இதுக்குன்னே ஒரு 0800 எண் இருக்கு:-)

அந்தப் பையன் (குரல் அப்படித்தான் இருந்துச்சு) கொஞ்சம் இளவயசு. போனை முதல் முதல் ரெஜிஸ்தர் செஞ்சப்ப ஒரு 4 டிஜிட் பாஸ்வேர்டு கொடுத்தோமே அதைச் சொல்லுன்னார். யாருக்குத் தெரியும்? மகள் கொடுத்த போனும் சிம்கார்டும் ஆச்சே. அப்போ என்ன எண் கிடைச்சதோ?
அதெல்லாம் நினைவில்லைன்னு, இப்ப ஆகவேண்டியதைச் சொல்லுன்னா..... பழைய பேலன்ஸ் போனது போனதுதான். ரூல்ஸ் அப்படி. நீ என்னத்துக்கு முந்தாநாளே டாப் அப் செய்யலைன்னு மறு கேள்வி கேக்கறார். ( அடப்பாவி) அது முந்தாநாளுன்னு நினைவிருந்தா...... இப்படி அஸால்ட்டா இருந்துருப்பேனா? சரி . உன் பெயரைச்சொல்லுன்னு கேட்டுக்கிட்டு, அவுங்க வலைப்பக்கம் கொஞ்ச நேரம் ஆராய்ஞ்சு பார்த்தா.......

டாப் அப் தேதிக்கு முன்னாலே (போதுமான நாள் குடுத்து)ஒரு ரிமைண்டர் டெக்ஸ்ட்( எஸ் எம் எஸ்) அனுப்புவோம்னு போட்டுருக்கு. ஆஹா..... நம்ம செல்லில் ஆராய்ஞ்சால் அப்படி ஒன்னு வரவே இல்லை. அதுவுமில்லாம ஒரு சமயம் யாரோ டாப் அப் பண்னது தவறுதலா நமக்கு வந்து, ரெண்டுவாரம் இருந்துட்டு மறுபடி கிளம்பிப்போயிருக்கு. போகும்போது ஒரு அஞ்சு டாலரை (அபராதமா?) விட்டுப்போயிருக்கு. இவ்வளவும் நடந்துருக்கு யானைக்குத் தெரியாமலேயே...... கடைசியா அங்கே வந்துருக்கும் டெக்ஸ்ட், ஜூன் மாசம் இதே வோடாஃபோன் அனுப்புன சேதிதான். இண்டர்நெட் கனெக்ஷனுக்கு இனிமேல் கூடுதல் காசுன்னு சொல்லும் அறிவிப்பு. ஆஹா..... ஆப்டுக்கிட்டாண்டா.....

உடனே கஸ்டமர் ஹெல்ப் லைனுக்குப் போய் ஒரு அழுவாச்சிக் காவியம் அனுப்பி இருக்கு யானை. மூணுவருசமுன்பு இருந்த 'மனுநீதி சோழன்' இப்ப அங்கே இல்லையோன்னு ஒரு சந்தேகம். மூணுநாளைக்கு மேலாகியும் பதில் ஒன்னும் வரலை ஒரு ஆட்டோமாடிக் ரெஸ்பான்சைத்தவிர. ஆனாலும் 'கேஸ் நம்பர்' கிடைச்சுருக்கே. விடாமல் போராடணுமுன்னு இப்போதைய முடிவு.

கோபால்கிட்டே சொன்னால் கஷ்டப்பட்டு முகத்தைக் கொஞ்சம் சோகமா வச்சுக்கிட்டுக் 'காசு போனது எனக்கும்தான் கஷ்டமா இருக்கு'ன்றார். மகள் சாட் லைனில் வந்து , 'ஹை ஹௌ ஆர் யூ'ன்னதும் ஒரு பாட்டம் அழுதது யானை. 'காசு இனிமே உன் அக்கவுண்டுலே வராது. அது கிடக்கட்டும், உனக்கு எதுக்கு ஃபோன்? வெளியே போனால் எடுத்துக்கிட்டுப் போறதே இல்லை. பேசாம டெலிகாம் அக்கவுண்டுலே சேர்த்துவுட்டுரு. அந்த பில் வீட்டுப் பில்லோட சேர்ந்துரும். நிம்மதியா இருக்கலாமுன்னு சொல்றாள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய ஞாபகசக்திக்குக் கர்வபங்கம் வந்துருச்சே என்றதுதான் யானைக்குப் பலத்த அடியாக் கிடக்கு.

போனால் போகட்டும் போடான்னு சோகமாப் பாடும் யானைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தாலும் அவுங்களை(யாவது) மறக்காமல் வச்சுக்கறேன்னு இப்பச் சொல்லிக்கிட்டு இருக்கு.இதனால் அறியப்படும் நீதி?

1. தேதிகளை மறக்காதீர்.

2. போராடுவோம் போராடுவோம் இறுதிவரை(???) போராடுவோம்.

61 comments:

said...

யானைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தாலும் அவுங்களை(யாவது) மறக்காமல் வச்சுக்கறேன்னு இப்பச் சொல்லிக்கிட்டு இருக்கு.//

வந்துட்டேனே!

said...

சரியான பாயிண்டை பிடிச்சிருக்கீங்களே, கண்டிப்பா போனுக்கு உசிர் வந்துடும்.

said...

வரேன், திரும்ப ஒருக்கால் படிச்சுட்டு, இப்போ சாட்டிட்டே படிச்சதிலே சரியாப் புரியலை

said...

யானை யானை குட்டி யானை. காசுப்போனா போது
கவலப்பட்டு உடம்பக்கெடுத்துக்காதே.
அப்புறம், உன்னோட படம் அழகா இருக்கு. திருஷ்டி சுத்தி போட்டுக்கோ.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

ஆறுதல் அளிக்க வந்ததுக்கு நன்றிப்பா.

தமிழ்மணத்துலே இணைக்க முடியலை(-:

ஃபோனுக்கு உசுரு இருக்குப்பா. அதான் மொய் (தவறான தேதினாலும்) எழுதியாச்சே!

said...

வாங்க கீதா.

யானை இழுத்து வந்துருக்கு!

said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.

படம் சமீபத்துலே என் நினைவா வாங்குன குட்டிக் குஷன்.

அழுகையிலே ஒரு 500 கிராம் குரையுதான்னு நாளைக்குப் பார்க்கணும்!

said...

இதனால் அறியப்படும் நீதி?

பாவம் அந்த யானைப் பாகன். :))

1) யானையையும் பாத்துக்கனும்,
2) யானை பண்ற இந்த லொள்ளையும் சமாளிக்கனும்.

said...

ஆஹா.. பரவாயில்ல டீச்சர், அடி சறுக்குனாலும் யானை யானைதான்.. கவலையே படாதீங்க.. :))

said...

இட்லிவடையில் கி.அ.அ.அனானி உங்களைத்தான் சொல்றாரோ ;))

said...

டீச்சர் ,
யானைக்கும் அடி சறுக்கும் !

said...

//'யானைக்கு அடி சறுக்கிடுச்சேப்பா.....சறுக்கிடுச்சே'//

நான் நம்ப மாட்டேனேப்பா....மாட்டேனே.

இந்த விஷயத்தை என்னமா எழுதி கம்பீரமா நிக்குது யானை.

said...

சரி.. சரி.. பரவாயில்லை.. இதுக்கெல்லாம் போய் அழுகலாமா டீச்சர்..

நாங்க எவ்வளவோ 'அழுதுட்டு' அழுகாம இல்ல..

எங்களுக்கு நீங்க பரவாயில்லைன்னு நினைச்சுக்குங்க..

said...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய ஞாபகசக்திக்குக் கர்வபங்கம் வந்துருச்சே என்றதுதான் யானைக்குப் பலத்த அடியாக் கிடக்கு.


kaasu pona kavalai ilaingala?

said...

டீச்சர் எனக்கு எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்மா புரியுது, இப்போதைக்கு உள்ளேன் போட்டுகிறேன்

said...

எப்பவாச்சும் இது மாதிரி நடந்தாதான் ஒழுங்கா எல்லாத்தையும் note பண்ணனும்னு strong ஆ தோணும், ஸோ நோ ஃபீலிங்ஸ் ஆஃப் நியூஸி! டேக் இட் ஈஸி.

said...

அதெல்லாம் யானைகு அடி சறுக்காது. காசு திரும்பிடும்,கவலைப்படாதே சகோதரி. நம்ம கணேசன் காத்திருப்பான், கைபேசி வந்தூஉடும் ,கவலைப்படாதே சகோதரி.:)
நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் ,சரியாப்போச்சு துளசி!!!!

said...

யானைக்கு என்னுடைய ஆறுதல்கள். யானையும் நானும் இந்த விஷயத்துல ஒன்னுதான்.

என்னன்னு கேக்குறீங்களா..... இந்தியாவுக்குக் கூப்புடுறதுக்குன்னே ஒரு மொபைல் வெச்சிருந்தேன். லைகா-ன்னு ஒரு மொபைல் கம்பெனி. வெளிநாட்டுக்குக் கூப்டா ரொம்ப மலிவு. அதுனால 33 யூரோவுக்கு ஒரு மொபைலை வாங்கி.. அதுல லைகா சிம் கார்டு போட்டு... அப்பப்ப தேவைக்கு ஆன்லைன் டாப்பப் பண்ணீட்டு கால் பண்ணீட்டு இருந்தேன்.

நெதர்லாந்துக்குன்னு இன்னொரு மொபைல் இருக்கு. அது ஒசத்தி மொபைல் கீ பேடே கிடையாது. எல்லாம் டச்சிங் டச்சிங்தான். அதுல இண்டர்நெட்டெல்லாம் வருது. என்ன வசதின்னா 150 நிமிடம் இலவசம். 100 குறுஞ்செய்தி இலவசம். ஆகையால அடிப்படைத் தொகையிலேயே நம்ம அடிப்படைத் தேவைகள் தீர்ந்திரும்.

இப்பிடிச் சிக்கனமா இருந்த நான்...ஒரு நாள்... அதென்ன ஒரு நாள்... நவம்பர் 5ம் தேதி 200ம் வருசம்....மொபைலைக் கைதவறி எங்கயோ வெச்சிட்டேன். என்னது..எந்த மொபைலா....அதாங்க 33 யூரோ மொபைல். அந்த மொபைல்தான். எங்க தேடியும் கிடைக்கலை. 43 யூரோ போச்சு. பத்து யூரோவுக்குக் காசு அதுல மிச்சம் இருந்தது.

வேற வழி... அப்பாம்மாவுக்குத் தினமும் பேசனுமே.... கடைக்கு ஓடு.... 33யூரோ மொபைலைக் காணோம். சரின்னு 59யூரோவுக்கு ஒரு தொறந்து மூடுற மொபலை வாங்கி... ஒரு லைகா சிம்மையும் வாங்கிப் போட்டாச்சு. :)

ஆகையால யானை புண் மயிலுக்குத் தெரியும். :-)

said...

இப்போதைய நிலவரம் தெரிய ஆவல் ;)

said...

வாங்க அம்பி.

பாகனுக்குப் பாகன் பாசம் இல்லைன்னா எப்படி?
அதானே?

said...

வாங்க வெண்பூ.

சறுக்கினாலும் மெதுவா எழுந்து நிக்க முயற்சி செய்யுதுப்பா அந்த 'யானை':-)

said...

வாங்க ராமமூர்த்தி.

//இட்லிவடையில்......//

அப்டீங்கறீங்க???

!!!!

said...

வாங்க அருவை பாஸ்கர்.

பழமொழியை நிரூபிச்சுட்டேனா? :-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

'யானை' மேல் உள்ள பிரியம் உங்களை இப்படிச் சொல்ல வைக்குது:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

இரு கோடுகள் தத்துவமா? :-)

said...

ஓ.. இப்படி வேற ஆயிடுச்சா? டீச்சர், சொல்லுங்க வொடபோனையை கிவியை விட்டே தூக்கிடலாம்.. ஈஸி தான்.. நம்ம கிட்ட வம்பு பண்ணின தூக்கிட வேண்டியது தான்.. சொன்னீங்களா? அடுத்த தேர்தலில் நீங்க தான் ஜெயிக்கப் போறதை..:))

said...

வாங்க கோபிகிருஷ்ணன்.

காசுக் கவலை இல்லாமல் இருக்குமா?

ஆனா...காசு நாம் சம்பாதிக்கலாம்.
அது வரும் போகும்.
ஆனால் கர்வபங்கம்?(-:

said...

வாங்க நசரேயன்.

கொஞ்சம் கொஞ்சமாப் புரியுதா? முழுசும் தெரிஞ்சுக்கணுமுன்னா ஒரு 796 பதிவுகளைப் படிக்கவேண்டி இருக்குமே.

said...

வாங்க கபீஷ்.

இனிமேக் கவனமா மூளையில் ஒரு முடிச்சுப் போட்டுவச்சுக்கணும்,இல்லை?

said...

வாங்க வல்லி.

கைப்ப்பேசி உசுரோடுதான் இருக்குப்பா. ஆனாக் கொஞ்சம் பலஹீனமா இருக்கு. பழைய சக்திதான் வீணாப்போச்சே(-:

said...

வாங்க மயிலு .

யானையின் உண்மை உணர்வைப் புரிஞ்சு ஆறுதலா இருக்கும் மயிலே,
என் அழுவாச்சிக் காவியத்துக்கு சப்போர்ட்டா இருக்கும், என் வலி உணர்ந்த மயிலே....
நீ வாழ்க. உன் கொற்றம், குடை எல்லாமும்கூட வாழ்க.

said...

வாங்க தமிழ் பிரியன்.

அந்த வோட ஃபோனை ஓட ஓட விரட்டலாமா?

நான் ரெடி.

said...

வாங்க கோபி.

வீக் எண்ட் வந்துருச்சே.

ஆனாலும் தினம் ஒரு மடல் தட்டி நியாயம் கேக்கத்தான் போறேன்.
நமக்கும் ஒரு fair go வேணுமுல்லே?

Anonymous said...

ஆறுதல் சொல்ல நானும் வந்தாச்சு

said...

//அது கிடக்கட்டும், உனக்கு எதுக்கு ஃபோன்? வெளியே போனால் எடுத்துக்கிட்டுப் போறதே இல்லை. //

யானைத் தலைப்பைப் பார்த்துட்டு ஓடி வந்தேனா, கீழே விழுந்துடுச்சே யானை, தூக்கிவிடத் தான், அப்போ பார்த்து நம்ம அதியமான் தொந்திரவு, பின்னூட்டம், பின்னூட்டம், பின்னூட்டம்னு! தாங்கலை, சரினு போட்டுட்டுப் போயிட்டேன்,

என்ன, இப்போ ஆயிடுச்சு?? பேசாமல் தூக்கி வீசி எறிஞ்சுட்டு நிம்மதியா உட்காருங்க, நாங்களும் பாருங்க, ஞாபகமா செல்லை மறந்து வீட்டிலேயே வச்சுட்டுப் போயிடுவோம்!! :))))))))) இதிலே ஜம்பமா எல்லாரையும் செல்லிலே கூப்பிடுனு வேறே சொல்லிப்போம்! அவங்க பாட்டுக்குக் கூப்பிடுவாங்க, பாவம்! :P:P:P

said...

கொஞ்சமே கொஞ்சம் மாத்தியிருந்தா நல்ல கதையாயிருந்திருக்குமோ!!

said...

யானைப்பாகருக்கு மகிழ்ச்சி தானே வரனும் உண்மையில் .. நீங்கதான் போனை மறந்திருக்கீங்களே இத்தனை நாளும்.. எங்கவீட்டுல கூட போனை மறந்துட்டா தேவலையேன்னு ஒரு ஆள் ஆசைப்படறார். ஆனால் எதமறந்தாலும் இது மறப்பதில்லை.. பல காலம் கழித்து பெற்ற பிள்ளை மேல உள்ள பாசத்தை மாதிரி.. ரொம்ப நாள் கழிச்சு தான் எனக்கும் போன் கிடைச்சது.. :)))

said...

போராடுவோம் !!!!!!

said...

ஐயோ பார்த்து ...யானை பழைய சறுக்கலையெல்லாம் நினைவு வச்சுட்டு இருந்தால் காயம் பெருசாயிடும்மா.....போயிட்டுப் போகுது விடு யானை...
அன்புடன் அருணா

said...

ஆனைக்கும் அடி சறுக்கும்ன்றது பழமொழி - அது நெசத்துலே நடக்காத மொழின்னுலே நெனைச்சிக்கிட்டி இருக்கென்.... ம்ம்ம் - உண்மையாய்ப் போச்சே

அய்யய்யோ - நம்ப முடியவில்லை நம்ப முடிய வில்லை. இருக்காது இருக்கவும் கூடாது

யானைக்கு கர்வபங்கம்னா நியூசியவே கொழுத்திடுவோம் - ஆமா !
சீக்கிரமே போன் கம்பேனி மண்டியிடும்

said...

யானை இந்நேரம் எழுந்து டான்ஸும் ஆடிக்கிட்டிருக்கும்னு நம்பறேன் (மயிலோட :).

said...

பாகனோட பயமெதுவும் இல்லாம
பைசா துதிக்கையிலே வாங்காம

வத்தலகுண்டு கொசுவத்தி முதல்
பிஜிதீவு கல்யாணம்,நியூஸிலாந்து

ஜெயில் முதக்கொண்டு சிஷ்யருக்கு
தலையிலே தட்டி ஆசியா வழங்கும்

அறிவுக்களஞ்சிய யானைக்கு இந்த
சோளப்பொறிக்கெல்லாம் ஏது நேரம்?

இந்த பதிவானை நினைத்தாலும் சரி
மறந்தாலும் சரி அது ஆயிரம் பொன்!

said...

இந்த விஷயத்தில் மட்டும் உங்க அவரைக் குறை சொல்ல முடியாது. ஏன்னா இந்த தேதி மேட்டர் எல்லாம் இட ஒதுக்கீட்டின் போது உங்களுக்குத் தந்தாச்சே!!

அது இல்லைன்னா இதைக் கூட ஞாபகப்படுத்தத் தெரியலைன்னு சொல்லி ஒரு ஆப்பு அடிச்சு இருக்கலாம்.

ஹை ஜாலி!! யானைக்கு அடி சறுக்கிட்டுச்சு. இது நமக்கு ரொம்ப யூஸ்புல்!

said...

வாங்க சின்ன அம்மிணி.

பக்கத்தூட்டுலே இருந்து இவ்வளவு லேட்டா வந்தா எப்படிப்பா?

சரி. ஆனாலும் வந்து ஆறுதல் அளித்ததுக்கு நன்றிப்பா.

said...

கீதா,

கடமை தவறாம வந்ததை குறிச்சு வச்சுக்கிட்டேன்(உயிலில்)

தலையைச் சுத்தி டேபிளில் உக்காரவச்சுருக்கேன் இப்ப!

said...

வாங்க ஜ்யோவ்ராம் சுந்தர்.

வராதவுங்க வந்துருக்கீங்க! வணக்கம். நலமா?

அப்படியெல்லாம் மாத்தத் தெரிஞ்சால் இப்படியா இருப்பேன்?

said...

வாங்க கயலு.
பலகாலம் கழிச்சு வந்த புள்ளை இப்ப வேற ஊருக்குப்போயிருச்சுப்பா!


பாகருக்கு விதவிதமா ஃபோனை ஆஃபீஸ் கொடுத்துக்கிட்டு இருக்கு. ரிட்டயர் ஆகி உக்கார்ந்தா நம்மதைத்தான் கொடுக்கணும். அதுக்காகக் காப்பாத்திவச்சுருக்கேன்!

எவ்வளோ கருத்தா இருக்கேன் பாருங்க:-)

said...

வாங்க செந்தழல் ரவி.

இறுதிவரைதானே?
அப்புறம் பேச்சு மாறக்கூடாது.

said...

வாங்க அருணா.

எப்படிப்பா விடமுடியும்? யானைக்குத்தான் ஞாபகம் அதிகம்(?) ஆச்சே!

said...

வாங்க சீனா.
//நியூசியவே கொழுத்திடுவோம்//
ஹா.......ஏற்கெனவே நியூசி, கொழுத்துதான் இருக்கு. இளைக்கச் சொல்றாங்க இப்ப. நீங்கவேற கொளுத்திப்போடாதீங்க!

said...

வாங்க கவிநயா.

மயில், ஆறுதல் சொல்லிட்டுப் பறந்து போயிருச்சுப்பா.

யானையும் மெதுவா நடமாட ஆரம்பிச்சு இருக்கு.

said...

வாங்க தமாம் பாலா.

(வத்தல)குண்டு யானைக்குக் கவிதையாலே கண்ணீர் துடைச்சதுக்கு நன்றி.

ஆமாம். அது கவிதை தானே? தளை தட்டுது, எதுகை மோனை சரியில்லேன்னு யாராவது(?) சொல்லிறப்போறாங்க.

said...

வாங்க கொத்ஸ்.

என்னது ஜாலியா?
வகுப்புத்தலைவன் பேசுற பேச்சா இது?

இன்னும் தேர்வுகள் ஆரம்பிக்கலை என்பது நினைவிருக்கட்டும்.

யானை எளிதில் (இதைமட்டும்)மறக்காது

said...

தமிழ்மணத்துலே இணைக்க முடியலை(-://

இது எல்லோருக்கு வந்திருக்கும் பிரச்சனை. இப்படி ஏதும் ஆகும்னு நினைச்சோ என்னவோ பிளாக்கர் ஃபாலோ தி பிளாக் கொண்டு வந்திருக்காங்க போல.

நானும் உங்களை ஃபாலோ செஞ்சு மீ த பர்ஸ்டா வந்திட்டேன்.

:)))))))))))))))

said...

யானைக்காவது அடி சறுக்கறதாவது? வல்லிமா சொல்றாப்ல ''காசு திரும்பிடும்,கவலைப்படாதே சகோதரி. நம்ம கணேசன் காத்திருப்பான், கைபேசி வந்தூஉடும் ,கவலைப்படாதே சகோதரி.:)''ன்னு நானும் ஆறுதல் சொல்றேன்
நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் ,சரியாப்போச்சு துளசி!!!!??>>>

நானும்...


ஷைலஜா

said...

யானைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தாலும் அவுங்களை(யாவது) மறக்காமல் வச்சுக்கறேன்னு இப்பச் சொல்லிக்கிட்டு இருக்கு.

என்னையும் மறக்காதீங்க துளசி அம்மா.

said...

புதுகைத் தென்றல்,

ரீடர்லே போட்டுவச்சுக்கலாமுன்னா முக்கால்வாசித் தமிழ்மணத்தைப் போட வேண்டி இருக்கும்.

மேய்ச்சல்தான் எப்பவும்:-)

said...

வாங்க ஷைலூ.

யானை வாயில் போன கரும்பும், காசும் திரும்பிவந்ததா சரித்திரம் உண்டா? :-))))

said...

வாங்க பாண்டியன் புதல்வி.

அதெல்லாம் மறக்கமாட்டேன். அழும்போது வரும் நண்பர்கள்தானே உண்மையான நண்பர்கள்:-))))

said...

//பாவம் அந்த யானைப் பாகன். :))

1) யானையையும் பாத்துக்கனும்,
2) யானை பண்ற இந்த லொள்ளையும் சமாளிக்கனும்//
ரொம்ப சரி அம்பி!
இப்ப உங்க தும்பிக்-கைபேசி நம்பிக்கையோடு இருக்கா..துள்சி!
ஏன்னா...யானையின் பலம் அதன் தும்பி-கைபேசியிலே!!ஹி..ஹி..!

said...

வாங்க நானானி.

தும்பிக்கை நம்பிக்கையோடு இருக்கு. போனவாரம் உதவி செய்யறோமுன்னு மடல் வந்துருக்கு. ஓடஃபோனை ஓடஓட விரட்டிக்கிட்டு இருக்கேன்.

ப்ரைவஸி ஆக்ட் இருக்குதே. அதனால் சில கேள்விகளைக் கேட்டுப் பதில் சொல்லு. ஃபோன் கணக்கு உன்னுதுதானான்னு பார்க்கணுமுன்னு சொன்னாங்க.

ஆஹா....ன்னு ஒரு 'பதிவு' எழுதி அனுப்பி இருக்கேன்:-)