Friday, November 14, 2008

நல்ல முடிவு எடுத்தாச்சு ......இப்போதைக்கு

அங்கே போய் நிக்கும்போது, (கேப்பாங்கன்னு நினைக்கிறேன்) மறக்காம நமக்கு என்ன விருப்பம், எங்கே எப்படின்னு தெளிவா எடுத்துச் சொல்லிறணும். அப்புறம் விதியைப் பழிச்சுக் காரியம் இல்லை. நினைவில் இருக்கணும் என்பதுதான் ரொம்பவே முக்கியம்.


சரி. வாங்க, வண்டி பிடிச்சு அப்படியே ஒரு 149 வருசத்துக்கு முந்திப்போய் இறங்கலாம். ஆச்சா.............. இப்போ எங்கே இருக்கோம். கேண்டர்பரி ஆஃப் நியூஸி. அங்கங்கே கூடாரம் போட்டு அலங்காரம் நடக்குது. இன்னிக்கு ஃபன்னி டே & பண்ணி டே. நடத்துவது Canterbury Pastoral Association . மாடு, பன்றி எல்லாமும் வந்துருந்துச்சுன்னாலும் அன்னிக்கு முக்கியமா மதிப்பீடு செஞ்சது 28 கிடை ஆடுகளுக்கு!

எல்லாரும் இங்கிலாந்துலே இருந்து இங்கே வந்து குடியேறுன குடியானவர்கள். நியூஸிலாந்து கம்பெனி என்ற பெயரில் இங்கிலாந்துலே ஆரம்பிச்ச ( ரியல் எஸ்டேட்?) கம்பெனியில் 150 பவுண்டு காசைக் கட்டிப்பிட்டுக் கப்பலில் ஏறுனவுங்க. இங்கே வந்தபிறகு அந்த காசு கட்டுன ரசீதைக் காமிச்சு லேண்ட் ஆஃபீஸுலே, ஊரு வரப்போகுதுன்னு ஒதுக்கிவைக்கப்பட்ட இடத்துலே முக்கால் ஏக்கர் இடமும், ஊருக்கு வெளியிலே அம்பது ஏக்கர் நிலமும் கிடைச்சது. அதுக்கெல்லாம் பக்காவா வரைபடம் போட்டு ஆளுங்க விருப்பம் கேட்டு, அவுங்கவுங்க தேர்ந்தெடுத்துக்கிட்டதுதான். ரெண்டு நாள்(!) இதே வேலையா பயங்கர பிஸி ஆயிருச்சாமே அந்த லேண்ட் ஆஃபீஸ்.


வெவ்வேற ஊருலே வருசா வருசம் நடந்துக்கிட்டு இருந்த இந்த விழா, அப்படியே நகர்ந்து நம்ம ஊரான கிறைஸ்ட்சர்ச்சுக்கு வந்துச்சு ஒரு மூணுவருசத்துலே. நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? அடுத்தவருசமே Canterbury Agricultural and Pastoral Association ன்னு ஒன்னை நிறுவி அதுக்காக ஒரு 14 ஏக்கர் இடத்தை வாங்கிப்போட்டாங்க. பிரமாதமா ஆரம்பிச்ச விழாவை , பயங்கரமழை வந்து ஒன்னுத்துக்கும் ஆகாமக் கெடுத்துவிட்டுருச்சு.

அடுத்துவந்த வருசங்களில் விழா நல்லாத்தான் நடந்துச்சுன்னு எழுதிவச்சுப்போயிருக்காங்க. ஊர்லே ஜனம் பெருகப்பெருகக் கால்நடைகளும் கூடுமுல்லே? இந்த இடம் பத்தாமப்போயிருச்சு. இன்னொரு இடத்தைப் பார்த்து (ஆடிங்டன் என்ற பகுதி) 29 ஏக்கர் பேசி முடிச்சாங்க. நிலத்தை வித்தவர் ரொம்ப தயாளு. இன்னொரு அஞ்சு ஏக்கரைக் கொசுறாவும் கொடுத்தார். 1887 இல் இருந்து நாங்க இங்கே வந்தப்பிறகும்கூட 1996 வரை அங்கேதான் விழா வருசாவருசம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.

குதிரைகளைப் பழக்கி வேலி தாண்டுறதுக்குப் பயிற்சி கொடுத்து (ஷோ ஜம்பிங்) அதை ஒரு விசேஷ நிகழ்ச்சியா ஆக்குனது இந்த ஆடிங்டன் வந்த பிறகுதான். குறைஞ்சது 4 அடி உயரம் தாண்டனுமாம்.(இப்ப இது இன்னும் கூடிப்போய் நமக்கே பார்க்கப் பரிதாபமா இருக்கு அந்தக் குதிரைகள் மிரண்ட பார்வையுடன் குதிக்கிறதைப் பார்த்தால். மனுசன் அடங்கமாட்டான் இல்லே?)

நியூஸிக்கு முதலில் குடியேற வந்த 4 கப்பல் மக்களை கவுரவப்படுத்தணுமுன்னு அவுங்க காலு குத்துன தினத்தைக் கேண்டர்பரி அனிவர்ஸரி டே ன்னு டிசம்பர்லே ஆரம்பிச்சது எல்லாம் சேர்த்து சும்மா ஒரு நாளு நடந்துக்கிட்டு இருந்த விழா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து 1918 வது வருசம் முதல் ஷோ வீக் ஆகிப்போச்சு. காலம்போற போக்குலே கொஞ்சம் முன்னே பின்னேயானாலும் பரவயில்லைன்னு இப்போதைக்கு நவம்பர் மூணாவது சனிக்கு மூணு நாள் முன்னாலே விழா:-) எங்க மாநிலம் முழுசுக்கும் அந்தவாரம் வெள்ளிக்கிழமை விடுமுறைநாள். லாங்க் வீக் எண்டுன்னு போய்க்கிட்டு இருக்கு.

இந்தக் கப்பல் கதையை இன்னொருநாள் சொல்றேன். இன்னிக்கு விழாவைப் பார்க்கலாம். புது இடம் 250 ஏக்கர். பிரமாண்டமா வளர்ந்துபோயிருக்கும் திருவிழா. எதோ அம்யூஸ்மெண்ட் பார்க்குக்குப் போறாமாதிரி ஒரு அனுபவம். வகைவகையான (தலை சுத்திக்கிட்டு வரும் ) ராட்டினங்கள், தேன் வகைகள், சீஸ் வகைகள், ஆட்டுமந்தைகளை ஓட்டிக் கிடையில் சேர்க்கும் வேலைக்கார நாய்கள், அளவுக்கு மீறி வளர்ந்து நிக்கும் அபூர்வப் பூசணிக்காய்ன்னு , துப்பாக்கியால் பலூனைச் சுடுவது அது இதுன்னு நம்ம தீவுத்திடல் பொருட்காட்சிதான் போங்க! இங்கேயும் 12 வருசமாயிருச்சு. அடுத்தவருசம் ஒன்னரைச்சதம் கொண்டாட்டம் இன்னும் பெரிய அளவில் நடக்குமாம்.


எங்கூர் பந்தயத் திடல்

இவ்வளோ எல்லாம் நடக்கும்போது குதிரைப் பந்தயம் இல்லாம இருக்குமா? அதுவும் 1870லே இருந்து ச்க்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கு. இங்கே நியூஸிக் கோப்பைப் போட்டியில் (இது நடப்பது நம்ம ஊர்லேதான்) கலந்துக்கறதே ஒரு மதிப்பான விஷயமுன்னு ஆயாச்சு. அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் (??) குதிரைகள் பறந்து வருது. அப்ப உள்நாட்டுக் குதிரைகள் வசதிகளோடு பயணம் செய்யணுமா இல்லையா?
அதுக்காக புதுசா வடிவமைச்ச குதிரை ஃப்ளோட்டுகளை ஒரு இடத்தில் பார்வைக்கு வச்சுருந்தாங்க. அடடா........அப்பத்தான் தீர்மானிச்சேன் அடுத்த பிறவியில் என்னவாப் பிறக்காப் போறேன்னு என்கிட்டே கேட்க்கும்போது கொஞ்சம் கூட யோசிக்காம ' நியூஸியிலே குதிரை' னு சொல்லணும்.
குதிரையாப் பிறக்கும்போது எப்படி நிக்கணுமுன்னு பயிற்சி

நின்னுக்கிட்டுப் போகும்போது ரெண்டு பக்கமும் அடிபடாமல் இருக்க மெத்துமெத்துன்னு இருக்கு. ரெண்டு தனித்தனி அறை. ஆனாலும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக்கிட்டேப் போகலாம். கஷ்டப்படாம ஏற சரிவான, கால் வழுக்காத உலோகத் தகடு. சின்னதா ஒரு குட்டி ஃப்ரிட்ஜ்.
சூடாச் சமைச்சுக்க (கொள்ளு அவிக்க?) ஒரு மைக்ரோ வேவ் அவன். உக்காந்து சாப்புட, எழுத்துவேலை இப்படிச் சமாச்சாரங்களுக்கு மேசைபோல ஒரு அமைப்பு. எல்லாத்துக்கும் சிகரம் வச்சதுபோல 'ஊத்திக்க' தலைகீழாய் தொங்கும் குப்பிகளோடு( குட்டிகளோடுன்னு அவசரத்துலே படிச்சுறாதீங்க) பார்! ரம் இருக்கான்னு பார்க்கணும்.

ஆமாம்.....குதிரைக்கு இதெல்லாம் வேணுமா? வரப்போற ஜென்மத்துலே குடிச்சுவேற பழகிக்கனும்.இந்தக் கப் டே கொண்டாட்டத்துக்கு, மகளிர் தொப்பிகள் விற்பனைதான் தூக்கலா இருக்கும். அலங்காரத் தொப்பிக்குன்னே விசேஷப் பரிசு உண்டு, ஒரே ஒரு கண்டிஷன் இருக்கும்போல, முகமே தெரியக்கூடாதுன்னு:-)
கச்சிதமான ஃப்ளோட்


இந்த வருசம் சிறப்பு விருந்தினர் கையாலே பரிசு வாங்க தொப்பியும் குதிரையும் ஆவலாக் காத்துக்கிட்டு இருக்கு. லண்டனில் இருந்து இளவரசி (Princess Royal) வந்துருக்காங்க இதுக்குன்னே.

நானும் போய் தொப்பி ஏதாவது தேறுதான்னு பார்க்கணும். இன்னிக்கு நல்ல வெய்யில் இருக்கு. மரியாதையாத் தோட்டவேலை கொஞ்சம் செஞ்சுக்கனும்.

33 comments:

said...

டெஸ்ட்

said...

அப்ப me the first?

said...

/*
குதிரையாப் பிறக்கும்போது எப்படி நிக்கணுமுன்னு பயிற்சி
*/
ரெம்ப நல்லா இருக்கு

said...

///துளசி கோபால் said...

டெஸ்ட்///
டெஸ்ட் பாஸ் பண்ணிட்டோம்!

said...

///இன்னிக்கு நல்ல வெய்யில் இருக்கு/// அப்படின்னா?

said...

//ஃபன்னி டே & பண்ணி டே.//

பாடத்தில ஒரு சந்தேகம். இது ஆங்கிலப்பன்னி, தமிழ்ப்பன்னி ரெண்டுமா? ஹிஹி

said...

சின்ன அம்மிணி கேட்ட சந்தேகம்தான் எனக்கும் அந்த வரி புரியல. ..

said...

//நானும் போய் தொப்பி ஏதாவது தேறுதான்னு பார்க்கணும். இன்னிக்கு நல்ல வெய்யில் இருக்கு. மரியாதையாத் தோட்டவேலை கொஞ்சம் செஞ்சுக்கனும்//

புதுச்செடி வைக்கப்போறீங்களா, எங்கூர்ல இன்னிக்கு மழை, இன்னும் நாங்க வெலிங்டன் மாதிரி வராது புராணம் பாடி ஓயலை.

said...

வாங்க நசரேயன்.
எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதைதான்.

பயிற்சி இல்லேன்னா கழுத்து வலிக்காதா? :-))))

said...

வாங்க தமிழ் பிரியன்..
அதெல்லாம் பாஸ்தான். கவலை எதுக்கு?:-)

உண்மையைச் சொன்னால் என் இப்போதைய சாமி சூரியந்தான்.

குளிர் தாங்க முடியலைன்றது ஒரு பக்கம். எதுவும் செஞ்சுக்கமுடியாத மூட் வந்துருது இந்தக் குளிரில்.
SADன்னு ஒரு நோய்(?) அதான் வெய்யில் வந்துருக்குன்னா அதுவே ஒரு விசேஷம்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி & கயலு.

இப்படிச் சந்தேகம் வந்தாக் கேக்கும் மாணவிகளை டீச்சருக்கு ரொம்பப் பிடிக்கும்(!!!)
உங்க ரெண்டு பேருக்கும் அஞ்சு மார்க் எக்ஸ்ட்ராவா போடறேன்.

அம்மிணி, யூ ஆர் ரைட்.

வேடிக்கை விநோதங்கள் & பன்றிகள் எல்லாம் இதில் சேர்த்தி.

said...

சின்ன அம்மிணி.

புதுச் செடி எல்லாம் இல்லை. இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊத்தும் வேலைதான்:-)

ரெண்டு வாரம் முன்பு லுபேலியா வாங்கி வச்சுருக்கு. மொத்தம் 16 தொட்டியில் வச்சுருக்கேன். பூக்க ஆரம்பிச்சுருச்சு.

said...

"குதிரையாப் பிறக்கும்போது எப்படி நிக்கணுமுன்னு பயிற்சி"

நீங்க தானே குதிரையாய் பிறக்கப்போறீங்க? ஓ கோபால் சாரை இந்த ஜென்மத்தில் கொடுமைப் படுத்தறதுப் போதாதுனு அடுத்த ஜென்மத்திலும் விடுவாதாய் இல்லை போல. What a evil plan; but a lovely couple :))

said...

ஒரு தொப்பி, ஒரு குருத பார்சேல்!

said...

எஸ் டீச்சர்...;;

said...

//ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக்கிட்டேப் போகலாம்.//
ஓஹோ! குதிரை பாஷை வேற கத்துக்கணுமா? ஹி...ஹி..ஹி..!

said...

//'ஊத்திக்க' தலைகீழாய் தொங்கும் குப்பிகளோடு( குட்டிகளோடுன்னு அவசரத்துலே படிச்சுறாதீங்க)//
துள்சியின் இந்த லொள்ளு இல்லாட்டா குதிரை கூட கொள்ளு சாப்பிடாது.

said...

நல்ல நல்ல தகவல்களை லொள்ளுகளோடு தரும் துள்சிக்கு ஒரு 'ராயல் ஷல்யூட்! அட நிஜமான சல்யூட்தானுங்கோ...பாட்டிலெல்லாம் இல்லை. இது எப்படியிருக்கு?

said...

நியூசில குதிரை மேய்க்கிற வேலை கிடைக்குமா...;)

said...

குதரை தண்ணில்லாம் அடிக்குமா டீச்சர்...:)
எனக்கு இப்பதான் தெரியும்...

said...

நியுசிலாந்து குதரை என்ன பாஷைல பேசும் டீச்சர்...:)

said...

நல்லாருக்கு - பாக்கறதெல்லாம் எழுதுற திறமை துளசிக்கு மட்டும் தான் உண்டு - பொறாமையா இருக்கு

தலைகீழாத் தொங்கும் குட்டிகளா - ச்சீச்சீ - குப்பிகள் - அவசரத்துலே ஒண்ணும் புரிய மாட்டேங்குது

நானானிக்கே ஒங்க லொள்ளு தாங்கலே - எங்களுக்கு ? - யப்பா

நல்லாருங்க - பாவம் கோபால் - மாட்டிக்கிட்டு முழிக்கிறார்

said...

வாங்க பாண்டியன் புதல்வி.

உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா? அடடா..........

ஒரு ஜென்மத்தில் மட்டும் கணவன் மனைவியா ஒரு தம்பதிகள் இருக்க முடியாது. எல்லாப் பிறவிகளுக்கும் அதே ஜோடிதான். அதுக்குத்தான் மறு பாதின்னு சொல்றொம்.

இதுக்கு உதாரணம் கூடச் சொல்வேன். கணவன் & மனைவி சீக்கிரமே சிலசமயம் பிரிஞ்சு போய், விவாகரத்து ஆனபிறகு வேற ஒருத்தரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு ரொம்ப நாள் (அதாவது இறுதிகாலம் வரை) நல்லா வாழறாங்கதானே?

ஏன்? முதலில் தவறான ஜோடி சேர்ந்துருச்சு. அதுக்குப்பிறகு தவறு திருத்தப்பட்டது.

கடவுளுக்கும் இப்ப வேலை அளவுக்கு மேல் கூடிப்போச்சு. நாட்டுலே மக்கள் தொகை விஷம் மாதிரி ஏறிக்கிட்டு போனால் அவரும்தான் ஒத்தை ஆளா என்னன்னுப் பார்த்துச் செய்ய முடியுதா?

மிஷ்டேக் ஆகிப்போகுது சிலமுறைகள்.

இதை ஆராய்ஞ்சு கண்டு பிடிச்சது யாருன்னு நினைக்கிறீங்க?

சாக்ஷாத் நம்ம மாதா துளசிதான்.

(ஆனந்த என்ற சொல் இடையில் வரணுமுன்னு விதி இருக்கோ?)

said...

வாங்க கொத்ஸ்.

இன்னொரு படம் அட்டகாசமா இருந்துச்சு. உங்க பின்னூட்ட ஆர்டரைப் பார்த்ததும் அதை இங்கே போடாமப் போயிட்டேனேன்னு நினைச்சேன்.

said...

வாங்க கோபி.

எஸ் எஸ் எஸ்

said...

வாங்க நானானி.

எல்லாம் இருந்தும் ஒன்னு இல்லைன்னு இருக்குப்பா.

இவ்வளவு செஞ்சவுங்க அங்கே ஒரு மடிக்கணினி வச்சுருக்கக்கூடாதா?

பேசாம வரும் தருணங்களில் பதிவாவது தட்டிக்கிட்டு வரலாமுல்லே?

குதிரை பாஷை எல்லாம் பிறப்போடு தானே வந்துறாதா?

said...

வாங்க தமிழன்-கறுப்பி.

இதென்ன அரேபியாவா? மேய்ச்சலுக்குன்னு கொண்டு போக?

அப்படியே மேய்க்கணுமுன்னாலும் அதுக்குத்தான் நாய் இருக்கே!

குதிரை நம்மூர்லேயே தண்ணி அடிக்குதாமே.

நியூஸியில் கிவி ஆக்ஸெண்டுலே பேசும்ப்பா:-)

said...

வாங்க சீனா.

பதிவரின் கணவரா இருக்கும் கஷ்டத்தைத் தாங்க முடியாமல்தான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு எஸ் ஆகிடுறாரு கோபால்:-)))

said...

தமிழ்மணம் பராமரிப்பு வேலை செய்யறாங்களாம்.அதனால் யாரையும் வீட்டுக்குள்ள விடமாட்டீங்கறாங்க.நீங்களாவது கண்ணில் பட்டீங்களேன்னு ரொம்ப சந்தோசம்.

said...

//1887 இல் இருந்து நாங்க இங்கே வந்தப்பிறகும்கூட 1996 வரை அங்கேதான் விழா வருசாவருசம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.//

இது புரியலை..

said...

குதிரையாப் பிறக்கும்போது எப்படி நிக்கணுமின்னு பயிற்சியெல்லாம் நல்லாவே இருக்குது.ஆனா பந்தயத்திடலும்,குதிரை தூங்கி வழியறதும்தான்....

பந்தயத்திடல் எப்படி இருக்கணுமின்னு நம்ம சொந்த தளம் www.photocbe.com போய் கேலரியத் திறந்து எக்ஸ்பிரஷன் கிட்டப் போய் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எங்க நடக்குதுங்கன்னு கேட்டீங்கன்னா சொல்வார்.அது பந்தயத்திடல்:)

கொசுறா அந்தமாதிரிக் கவுத்தவச்ச பாட்டிலா?உவ்வே....நம்ம பந்தயக் காளைகளுக்கெல்லாம் நாட்டுச் சரக்குதான் தெம்புன்னு கேள்வி!

said...

வாங்க ராஜ நடராஜன்.

வீட்டுக்குப் பராமரிப்பு நடத்தும்போது நாம குறுக்கே நெடுக்கே போனா நல்லாவா இருக்கும்? பெயிண்ட் டப்பா அப்படியே நம்ம மேலே கவுந்துட்டா?

அதான் 'டேஞ்சர் ஸோன்' ஆக்கிட்டாங்க போல.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நமக்குத் தெரியாதாங்காட்டியும்? அதான் மருதைக்கார மருமகளாச்சேங்க நான்.

இங்கே காய்ச்சத் தெரியாத பயலுக தான் இருக்காங்க(-:

said...

வாங்க தூயா.

அதுவா....... நான்

1887 லே ஓட்டைக் கப்பலில் இங்கிலாந்துலே இருந்து வந்து, அந்த ஜென்மம் முடிஞ்சு, மறுபடி இந்தியாவில் பொறந்து,வளர்ந்து.... 1988 லே இங்கே வந்தேன்ப்பா. அப்படி வந்தப்பவும் முந்தி நான் விட்டுட்டுப்போன அதே திடலில்தான் விழா நடந்துக்கிட்டு இருந்துச்சு 1996 வரை.

இப்போப் புரிஞ்சுருக்குமே:-)))))