சரியாத்தான் சொல்லிவச்சுட்டுப் போயிருக்காங்க. சட்டைப்பையில் 500 ரூபாய் இருக்கான்னு முதல்லே பார்த்துக்கிட்டு அப்புறமா உள்ளே காலடி எடுத்து வையுங்க. நுழைஞ்சதுக்குப்பிறகு' நீ ஏன் மொதல்லேயே சொல்லலை'ன்னுக் கத்தப்பிடாது.
டில்லி மாநகரில் இருக்கும் ஏராளமான மால்களில் குர்காவ்(ன்)லே இருக்கும் ஆம்பியன்ஸ் மால். ஃபுட் கோர்ட் இருக்கே, எதாவது சாப்புடலாமேன்னு உள்ளே நுழையறோம். நேராப்போய் கடையில் நின்னமா வாங்குனமா தின்னமான்னு வேலை முடியாது. முதல்லே ஒரு 500 ரூபாயைக் கொடுத்து ஒரு டோக்கன்(கார்டு) வாங்கிக்கணுமாம். அதுக்கப்புறம் பிடிச்ச உணவை விற்கும் கடையில் மெனுவை செலக்ட் செஞ்சுட்டு இந்தக் கார்டைக் கொடுத்தால் ஒரு தேய்ப்பு தேச்சு அதுக்குண்டான விலை கழிக்கப்படும். இப்படியே அங்கங்கே சாப்பிட எதுவேணுமானாலும் வாங்கிக்கலாம். கார்டில் போதுமான காசு இல்லைன்னா? திருப்பி ஒரு 500க்கு நிரப்பிக்கணும். ஏன் எதுக்குன்னு கேள்வியே கேட்டுறக்கூடாது. வெளியே வரும்போது தேய்ச்சுப் பார்த்து மீதிக்காசு இருந்தால்(!!) கொடுத்துருவாங்களாம்.
பழகுன கண்ணுக்குப் 'பட்' எனத் தெரியுது தோசைக்கடை!
ஒரு மூணு பேர் தின்ன ஐநூறே அதிகமுன்னு நினைச்சீங்க...... அம்புட்டுத்தான்....(-:
தோசையம்மா தோசை,
நெய்யில் சுட்ட தோசை
அரிசிமாவும் உளுத்தமாவும்
கலந்து சுட்ட தோசை
பாடிக்கிட்டே மெனுவைப் பார்த்தால்......
(நமக்கு எப்பவும் வலப்பக்கம் பார்க்கத்தாங்க தெரியும்)
159 முதல் ஆரம்பிச்சு அப்படியே 65 வரை இறங்கிவருது. குழந்தைகளுக்கான ஸ்பெஷல் 99 & 95
நளதமயந்தியில் மாதவன் சொல்வது,
இதுலே தக்காளி சேர்த்தால் தக்காளி தோசையாக்கும்
புதினா சேர்த்தால் புதினா தோசையாக்கும்:-)
அப்ப டொமாட்டோ &சில்லீஸ் சேர்த்தால் டொம்சீ டோஸா!
தோசை....எத்தனை.... தோசையடி!
படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துப் புரிந்து (வயிறு எரிந்து) கொள்ளலாம்.....
தமிழ்நாட்டுத் தோசையை எப்படியெல்லாம் நாசம் செய்யணுமோ அப்படியெல்லாம் செஞ்சு வெரைய்ட்டி காமிச்சுட்டான்யா...... வெரைய்ட்டி காமிச்சுட்டான்.
இனிமேல் தோசை சாதாரணக்காரர்களுக்கான உணவு இல்லை(-:
அதுக்காக டில்லிக்குப் போனால் தோசையே சாப்புட முடியாதா?
கூல் டவுன்...... ... கூல் டவுன்......ஏன் முடியாது?
முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.

46 comments:
விலைய பார்த்தாலே பசி போயிடும் போல இருக்கு...பார்த்தேன் ரசித்தேன்னு படம் பார்த்துட்டு வெளிய வந்துரணும் போலருக்கே :0(
தோசையிலே இவ்வளவு வகையா?
படம் பாத்தாலே சாப்புட்ட திருப்தி
//
முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.
//
அதெல்லாம் முன்னாடியே விசாரிச்சிட்டோம்ல ;)
ஆத்தாடி! இம்புட்டு வகையா? அது சரி, நீங்க சாப்டீங்களான்னு சொல்லவே இல்லையேம்மா?
படத்தைப்பாத்து சாப்பிட்ட மாதிரி நெனச்சுக்க வேண்டியதுதான்
\\முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.\\
அதெல்லாம் கரைட்ட செய்துடுவோம்ல ;)))
இது நல்லாயிருக்கேன்னு அக்காவும் முத்துலெட்சு(முதல்ல இதே பெயரில் வேற யாரும் இருக்காங்களான்னு பார்த்துக்கனும்!);-)) தோசை கடைன்னு ஒன்னு ஆரம்பிச்சிட்ட போறாங்க.!! ;))
வொய் திஸ் கொசுவர்த்தி நௌ?
///படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துப் புரிந்து (வயிறு எரிந்து) கொள்ளலாம்.....///
படத்தை பெரிதாக்கிப்பார்த்து புரிந்து பின் வயிறு எரிந்துகொண்டேன்!
:)
///Thooya said...
//
முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.
//
அதெல்லாம் முன்னாடியே விசாரிச்சிட்டோம்ல ;)
//
பின்னே!?
நாமெல்லாம் யாரு?!!!!!
விவரம்ல
(தூய்ஸ் தங்கச்சி நீங்க எப்ப அங்க வர்றீங்க?)
// கோபிநாத் said...
\\முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.\\
அதெல்லாம் கரைட்ட செய்துடுவோம்ல ;)))
இது நல்லாயிருக்கேன்னு அக்காவும் முத்துலெட்சு(முதல்ல இதே பெயரில் வேற யாரும் இருக்காங்களான்னு பார்த்துக்கனும்!);-)) தோசை கடைன்னு ஒன்னு ஆரம்பிச்சிட்ட போறாங்க.!! ;))
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!
தோசை பிரியை நானு. இப்ப்ப்போதான் இட்லி பிரியயா மாறினேன்.
தோழி முத்துலெட்சுமி கயல்விழி
எங்களை கொஞ்சம் தெரிஞ்சுவெச்சுக்கோங்க. தெரியுமுல்ல்ல்ல்ல.
ஆகா ..இது என்ன பதிவு முடிவில் இப்படி ஒரு வேட்டு.. நல்லவேளை லிங்கெல்லாம் குடுக்கலை... :)))
நான் அந்த மாலுக்கு போகலையான்னு அடிக்கடி கேட்டிட்டுருந்தது இதுக்குத்தானா.. இனி கூட்டிட்டே போகமாட்டாங்க அதான் விலை தெரிஞ்சுடுச்சே..
என் காப்பிதான் நல்லா இல்லன்னு சொல்லிட்டீங்க( அப்பாடி ஒரு மைனஸ் பாயிண்டும் சேர்த்துவச்சிக்குவோம்) .. பரவாயில்லை எங்க வீட்டு தோசை நல்லா இருந்திருக்கும் போலயே.. கோபால் சாருக்கு நன்றி..
இட்லி தோசைக்கு கடை ஆரம்பிக்க சொல்லி என் பெண்ணும் கணவரும் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்காங்க..ஆயில்யன்.. அவ தினம் ரெண்டு டிபன் பாக்ஸ் தான் கொண்டுபோவா.. அவளுக்கும் டீச்சர் ப்ரண்ட்ஸ்கும் ன்னு :)) இட்லி கொடுத்தே எல்லாரையும் ப்ரண்ட்ஸாக்கிடுவாங்களாக்கும்.
ஒரே கலர்புல்லா இருக்கு தோசைங்க..ஆனா 500ரூபாய்!!!!!! இப்ப எங்க போனாலும் கிட்ஸ் மீல் போட்டு நம்ம பர்சுக்கு ஆப்பு வைச்சர்றாங்க.(அனுபவம் தான்).ரெசிபி விசாரிச்சிங்களா?
//(நமக்கு எப்பவும் வலப்பக்கம் பார்க்கத்தாங்க தெரியும்)//
ஆனா ஆர்டர் பண்ண இடப்பக்கம் வந்துதானே ஆகணும்:)?
முத்துலெட்சுமி-கயல்விழி said...
//இட்லி கொடுத்தே எல்லாரையும் ப்ரண்ட்ஸாக்கிடுவாங்களாக்கும்.//
திருநெல்வேலி போய் வரும் போதெல்லாம் வாங்கி வந்து அல்வாவைக் கொடுத்தே நான் நிறைய பேரை ஃப்ரண்ட்ஸாக்கியிருக்கேனாக்கும்:))!
தோசை சாப்பிட்டீங்களா இல்லையா??
என்ன தோசை சாப்பிட்டீங்க.
எப்படி இருந்தது. துளசி!
இதுக்கெல்லாம் பதில். தேவை.
வெரைட்டியா வைக்கிறாங்க.:(
கொன்னுட்டாங்க நம்ம ஊரு தோசையை.
இதோ இப்பவே ஒண்ணு வார்த்துச் சாப்பிடுகிறேன்ன்)
தோசைக்கு ஆசையோட வந்தா இப்படி ஏமாத்திட்டீங்களே துளசி, சரி, கயல்விழி, மு.ல. நீங்களாவது கொடுத்துடுங்க.
//ஆனா ஆர்டர் பண்ண இடப்பக்கம் வந்துதானே ஆகணும்:)?//
@ராமலட்சுமி, புலி தான் இடப்பக்கமா வந்து சாப்பிடுமாமே?? :P :P :P அல்வா ஒரு கிலோ பார்சல் அனுப்பிடுங்க!
ஆஹா ஆஹா ஆஹா, இன்னைக்கு இப்டி சாப்பாட்டுப் பதிவா படிக்கிறேனே. தோசை எத்தனி தோசயடிங்கர ரேஞ்சில் சூப்பரா இருக்கே:):):) இப்டி நாக்கை ஊற வெச்சுட்டீங்களே:):):) நான் எப்பவோ முத்துக் கிட்ட விருந்து வெக்கனும்னு வாக்கு வாங்கிட்டேன்:):):)
சென்னையில் முன்ன தோசா கார்னர்னு பெசன்ட் நகர் மற்றும் நுங்கம்பாக்கம்ல இருந்துச்சு. இப்போ இருக்கான்னு தெரியல
வாங்க அதுசரி.
//பார்த்தேன் ரசித்தேன்னு படம் பார்த்துட்டு வெளிய வந்துரணும் போலருக்கே :0(//
அதேதான். நீங்க சொல்வது மெத்தச்சரி!
வாங்க நசரேயன்.
திருப்திக்கு நாங்க உத்திரவாதம் னு விளம்பரம் வச்சுக்கலாமா?
வாங்க தூயா.
உங்களை, முன்ஜாக்கிரதை முத்தண்ணின்னு இனிமேக் கூப்புடணும்:-)
வாங்க கவிநயா.
எங்கே நான் சாப்புடாம வந்துட்டனோன்னு பதறுனீங்கப் பாருங்க, அது.
நான் சாப்பிடலைப்பா(-:
வாங்க சின்ன அம்மிணி.
நினைப்புத்தான்( தோசைக்கடைக்காரர்) பொழப்பைக் கெடுக்குது!
வாங்க கோபி.
அப்ப டில்லிக்குப்போனால், நம்ம முத்துலட்சுமி கடை ஆரம்பிச்சாங்களான்னு நல்லா விசாரிச்சுக்கணும். அப்படி இல்லேன்னா மட்டும்..... காசு கொடுத்து வேற எங்காவது சாப்பிட வேண்டியதுதான்.
சரவணபவன், மூணு இடத்துலே கிளைகள் வச்சுருக்கு.
///கோபிநாத் said...
\\முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.\\
அதெல்லாம் கரைட்ட செய்துடுவோம்ல ;)))
இது நல்லாயிருக்கேன்னு அக்காவும் முத்துலெட்சு(முதல்ல இதே பெயரில் வேற யாரும் இருக்காங்களான்னு பார்த்துக்கனும்!);-)) தோசை கடைன்னு ஒன்னு ஆரம்பிச்சிட்ட போறாங்க.!! ;))////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
ஆனா அக்கா கடையில் கடையில் தொட்டுக்க சட்னி, சாம்பார் ஏதாவது ஒன்னு தான் கிடைக்குமாம். சட்னி வச்சா சாம்பார் இல்லியாம்.. சாம்பார் வச்சா சட்னி இல்லியாம்.. கவனமா இருங்க..(ஓசில எதைக் கொடுத்தா என்னன்னு சொல்றிங்கன்னா சரி தான்)
வாங்க கொத்ஸ்.
'நௌ' தானே கடை வந்தவிவரம் கிடைச்சது. போனமாசம் டில்லிப் பயணத்துலே கோபால் கொண்டுவந்த ஸ்பெஷல் தோசா இது:-)
இதோட கிளை ஒன்னு ஆக்லாந்துலே திறந்துருக்காங்க. ஃப்ரான்சைஸ் வேணுமான்னு விளம்பரம் வந்துருக்கு உள்ளூர் இந்திய (இலவச) பேப்பரில்.
கொசுறுச் செய்தி: த பெர்ஃபெக்ட் பிக்சர் ஆஃப் ட்ரெடிஷனல் இண்டியன் பியூட்டின்னு முழுப்பக்கப் படம் ஒன்னு வந்துருக்கு அதுலே.
யாரா இருக்கலாமுன்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்:-)
க்ளூ: ஒரு நடிகை.
வாங்க ஆயில்யன்.
நீங்க இல்லாமத் தோசையா?
ஒட்டிப்பிடிச்சுறாது?
நோ வே:-))))
வாங்க மது.
நம்ம ஆயில்(யன்) பயத்துலேதானே இட்லிப் பிரியையா மாறுனீங்க?
வாங்க கயலு.
நீங்க தோசைக் கடையைக் கவனிச்சாப் போதும்ப்பா.
பக்கத்துலேயே நான் ஒரு டீ,காஃபிக் கடை தொறந்துருவேன்:-)
வாங்க சிந்து.
ரெஸிபியெல்லாம் விசாரிக்க முடியுமா?
கெண்டக்கி மாதிரி சீக்ரெட் ரெஸிபிதான்:-)
தோசைபடமே கண் வயிறை நிறைக்குதே!!(பின்னே விலையைப்பார்த்தா வேற என்ன சொல்றதாம்?:))
தமிழா இருந்தா சினேகா, கிந்தியா இருந்தா ஐஸ்வர்யா.
நமீதான்னு சொல்லி என் மனசை உடைச்சுடாதீங்க! :)
சரோஜினி நகர், ஐ என் ஏ மார்க்கெட் பக்கம் போனா குறைச்ச விலையிலெ தோசை கிகைக்கும் (1990 இல்) இப்ப எப்படியோ தெரியாது. நீங்க franchise ஆரம்பிங்களே துளசி.
//கூல் டவுன்...... ... கூல் டவுன்......ஏன் முடியாது?
முத்துலெட்சுமி கயல்விழி வீடு எங்கேன்னு விசாரிச்சு வச்சுக்குங்க.//
நியுசிலாந்தோ , டெல்லியோ நமக்கு ஓசி தோசைதான், கூடவே பூசையும்.
வாங்க ராமலக்ஷ்மி.
கண்ணு முதலில் வலதுபக்கம் போயிட்டு, 'படிஞ்சா' இடப்பக்கம் வரும்:-))))
அல்வா அனுப்ப விலாசம் வேணுமுன்னா தரேன்:-)
வாங்க வல்லி.
தோசை படுசுமார்ன்னு (எனக்காக) சொன்னார் கோபால்:-)
(இல்லாட்டி நடக்கும் கதையே வேற)
வாங்க கீதா.
புலி இடப்பக்கமா? பேஷ் பேஷ் எனக்குத் தெரியாமப்போச்சே!!!!
அந்த அல்வா கிடைச்சா பாதி எனக்கு அனுப்புங்க.
ஒருகிலோ உடம்புக்கு ஆகாதுப்பா:-)
வாங்க ராப்.
சென்னை தோசா கார்னர்?
தெரியலைப்பா. ஆனால் சிங்கப்பூர் செராங்கூன் ரோடில் ஒன்னு இருக்கு.
ஆரம்பத்தில் நல்லா இருந்துச்சு. போன முறை போனப்ப... சுமார்தான். அதுக்கு நம்ம 'கோமளாஸ்' எவ்வளவோ பரவாயில்லை.
வாங்க தமிழ் பிரியன்.
தோசைக்கு வந்த வாழ்வு பாருங்களேன்:-)
வாங்க ஷைலூ.
கண் நிறைஞ்சால் வயிறு நிறையாதா?
மாத்தி யோசிக்க வேண்டியதாப் போச்சே? :-))))
கொத்ஸ்.
மனசை உடைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.
கிந்திதான்.
ராணி முகர்ஜி.
வாங்க பத்மா.
நலமா? ரொம்ப நாளா வராதவங்களைத் தோசை இழுத்துவந்துருச்சே!!!
ஆரம்பிக்கறது ஒன்னும் பிரச்சனை இல்லை பத்மா. இதைத் தின்னத் தேவையான கூட்டம் இங்கே இல்லை.
வெறும் 300 ஆயிரம் மக்களுக்குன்னு ஆரம்பிச்சால்.... நான் திருப்பதிக்குப் போகாமலேயே.......:-))))
வாங்க குடுகுடுப்பை.
உங்களுக்காகவே நம்ம தடாலடி தோசை தயார்:-)
(இதோட ரெஸிபி போடணுமுன்னு ஏராளமான மக்கள் தனி மடலில் விண்ணப்பித்து இருக்காங்க. போட்டுறணும் சீக்கிரம்)
//அது சரி said...
விலைய பார்த்தாலே பசி போயிடும் போல இருக்கு...//
ஹா ஹா ஹா ரிப்பீட்டேய்
வாங்க கிரி.
வீட்டு விருந்தாளிக்கு (அவுங்க குஜராத்திங்க) பதிவுப் படத்தைக் காட்டி விளக்குனப்ப, இந்தியில் கூட டைட்டில் சரியா வந்துச்சு.
ஹாத் மே பைஸா, மூ(ஹ்) மே தோஸா.
Post a Comment