Tuesday, November 25, 2008

சனிதோறும் 'தீபாவளி'

இது ஒரு சரித்திர 'தீபாவளி'

கொஞ்சம் சொல்றதுக்கே அநியாயமாத்தான் கிடக்கு. ஆனாலும் சரித்திரத்தைச் சொல்லாம விட்டுட்டேன்னு நாளைமக்காநாள் ஒரு பேச்சு வந்துறக்கூடாதில்லையா? போனமாசம் அக்டோபர் 11க்குத் தொடங்குன தீபாவளி விழா இந்த நவம்பர் மாசம் 22 தேதியோட ஒரு முடிவுக்கு வந்துருக்கு (இப்போதைக்குன்னு நினைப்பு)

சனிக்கிழமை தோறும் எண்ணெய்தேய்ச்சுக் குளிப்பாங்களாமே....அதே போல சனிக்கிழமைதோறும் தீபாவளி. விதவிதமாக் கொண்டாடுனோம்.

சனிக்கிழமை வந்துட்டாப்போதும்...தீபாவளிதான்.

ஃபிஜி இந்தியர்களின் ராமாயண மண்டலிகளே நாலு இருக்கு. அந்தக் கணக்குலே நாலு விழா. அதுலே ஒரு விழாவுக்குப் போனோம்.
வழக்கமான கொண்டாட்ட நிகழ்ச்சிகளோடு இலவச விருந்து. நிகழ்ச்சியின் குறிப்பிடவேண்டியது நேடிவ் ஃபிஜியன்களின் நடனம். ரொம்ப நல்லா இருந்துச்சு. படமாப் பிடிச்சுக்காம இவர் வீடியோவா எடுத்துட்டார். ஒரு நாள் யூட்யூப்லே ஏத்திறலாம்.நல்ல கூட்டம்தான். மறுநாளே தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் விழா. எல்லா வட இந்தியர்களும் திவாளி, திவாலின்னும்போது 'தீபாவளி' ன்னு சொல்வது தென்னிந்தியர்கள்தானே. பேனரிலும் அப்படியே போட்டுருந்தாங்க.
இங்கேயும் நல்ல கூட்டம். அதாவது நேத்து அங்கே வந்தவங்க எல்லாம் இன்னிக்கு இங்கே:-) நேத்து உள்ளே நுழைஞ்சதும் 'மூ மீட்டா கர்னேகேலியே ஏக் ஏக் பர்ஃபி'. இன்னிக்கு சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவுலே குலாப் ஜாமூன்(ட்ரை) முறுக்கு, பஜ்ஜியா & மிக்ஸர்ன்னு கொஞ்சம்கொஞ்சம் நிறைச்சு ஆளுக்கு ஒன்னு. கையோடு அதை எடுத்துக்கிட்டுப்போய் இடம் பார்த்து உக்கார்ந்துக்கலாம். கண்ணுக்கு விருந்து நடக்கும்போது வாய் மட்டும் ஏன் சும்மா இருக்கணும்? :-)

நடனம், பாட்டுன்னு மட்டும் இல்லாமல் பாரம்பரிய நிகழ்ச்சியாக 'டெர்கூத்' நடந்துச்சு. போனவருசம் ராமராவண யுத்தம். இந்த முறை மாடர்ன் டெர்கூத்.

பூரி, வெஜிடபுள் பிரியாணி, பருப்பு, தக்காளி சட்னி, சாலட், ஆலு பைங்கன், கத்து என்று இலவச விருந்து.

இந்தி சினிமா பாதிப்பால் பயங்கர திறந்தவெளிகளாய் முதுகுகள். வெளியே வரும்போது குளிருக்குப் பயந்து எல்லாரும் ஜாக்கெட், கோட் என்று போத்திக்கிட்டப்பத் தோழியிடம்,

"க்யா...ஸப் கிடுக்கி பந்த் ஹோஹயா?"

" க்யா கரூ(ன்)? தண்டி ஹை"

கோபால் வேற ஊரில் இல்லை. தனியாக் கிளம்பிப்போக போரா இருக்குன்னு நடுவிலே நாலைஞ்சு தீவாளியை விட்டுட்டேன். இந்த வெள்ளிக்கிழமை வந்துட்டார். சனிக்கிழமை கடைசி தீவாளி. வீட்டுலே விருந்தினர் ஃபிஜியில் இருந்து வந்துருக்காங்க. அவுங்களையும் கூடவே இழுத்துக்கிட்டுப் போனோம். கிறைஸ்ட்சர்ச் மாநகரத்தின் சரித்திரத்தில் முதல் முறையாக நகர்மையச் சதுக்கத்தில் மேளா ஸ்டைலில் நடத்தறோம். சிட்டிக்கவுன்ஸில் முழுக்க முழுக்க ஸ்பான்ஸார் செஞ்சுருக்கு. இந்த விழாவை நடத்துவது இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப். இந்த மாபெரும் க்ளப்பினைத் 'தோற்று'வித்த'வர்' உங்களுக்கெல்லாம் நல்லாவே பரிச்சயமான ஒருத்தர்தான் என்பதை இங்கே அறிவிக்கும் கடமையைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

அவர் பெயர் மூன்றெழுத்து. முதல் எழுத்து 'கோ'. கடைசி எழுத்து 'ல்'
இடையில் உள்ள எழுத்து என்னவா இருக்கும்? கண்டுபிடிக்க முடியலைன்னா ஒரு க்ளூ தரேன். 'குழந்தை *ல் குடிக்கும்.'

1997 வருசம் ஆரம்பிச்ச இந்த க்ளப் இதுவரை வருசாவருசம் திவாளி கொண்டாடுனாலும், சிட்டிக் கவுன்ஸில் முன்னூறோ நானூறோ நிதி உதவி செய்றது வழக்கம்தான். ஆக்லாந்து வெலிங்டன் நகரில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் அங்கே இதையும் ஒரு முக்கிய விழாவா பொதுமக்கள் அனைவரும் வந்து போகக்கூடியதாக் கொண்டாடுறாங்க. நம்மூர்லே இது முதல் முறை. பப்ளிக் ஈவண்ட் இன் சிட்டி ஸ்கொயர். இந்திய உணவுக் கடைகள், மேக்கப் சாதனங்கள் விற்கும் கடைன்னு ஸ்டால்கள் போட்டுருந்தாங்க. சின்னப் பிள்ளைகள் வர்ணம் தீட்டி மகிழ கலரிங்க் சாமான்களும், தீபாவளி சம்பந்தமுள்ள அச்சடிச்ச படங்களுமா ஒரு ஸ்டாலில் இலவசமா வச்சுருந்தோம்.
சுடச் சுடத் தோசை செஞ்சு, மசாலா நிரப்பி அஞ்சு டாலருக்கு விற்பனை நடந்துக்கிட்டு இருந்துச்சு. வெஜிடேரியன்களுக்காக கீரையும், பனீரும் சேர்த்த கபாப் சுட்டு, சப்பாத்தியில் வச்சுச் சுருட்டி வித்துக்கிட்டு இருந்தாங்க. மற்ற இறைச்சி உணவுகளும் ஸ்டால்களில் இருந்துச்சு. ஒரு லட்டு, பர்பி, இன்னும் ரெண்டு மிட்டாய்களை வச்சு பாக்கெட்ஸ் ஒரு இடத்தில். பூரி, ஃப்ரைடு ரைஸ், பஜ்ஜியா, பேல்பூரின்னு அமர்க்களம் போங்க. கரமா கரம் சாய் கூட வச்சுருந்தாங்க.


மேடை அலங்கரிச்சு, ஒலி ஒளி ஏற்பாடெல்லாம் செஞ்சு அது ஒரு பக்கம். சதுக்கத்தில் போய் நின்னப்ப....... சிதார் இசையும், இந்திப் பாட்டுமா ஜேஜேன்னு இருக்கு. ஊரையே நம்ம இசையைக் கேக்கவச்சாச்சு.


மேடைக்கு அருகே தோழி (ஃபிஜி) ரங்கோலி போட்டுவச்சுருந்தாங்க. அரிசியில் வர்ணங்கள் சேர்த்து அழகா இருந்துச்சு. மக்கள் அதன்மேல் நடக்காமல் இருக்க ஒரு கம்பித்தடுப்பு. 6 கிலோ அரிசி. அஞ்சுமணி நேர உழைப்பு. இவுங்க குழுதான் இன்னிக்கு ராம்லீலா நடத்தப்போறாங்க. ராமன் இன்னும் வேலை முடிஞ்சு வரலை. ராவணனும் சீதாவும், அனுமாரும் ஜாலியாப் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. படம் எடுத்துக்கிட்டேன். அருகில் ஒரு அரக்கியும் உண்டு:-)

ராமன், அவசர அவசரமா வந்து சேர்ந்துக்கிட்டார், 'பார்க்கிங் நை மிலா'வாம். கலியுகராமன் டீ ஷர்ட்டில். பரவாயில்லை. ஸப் ச்சல்த்தா ஹை:-)

மாலை நாலரை மணிக்கு விழான்னு நாங்களும் சரியா அஞ்சே முக்காலுக்குப் போய்ச்சேர்ந்தோம். இப்போதைய க்ளப்பின் தலைவர் கையில் இருந்த நிகழ்ச்சிநிரலை வாங்கிப் பார்த்தேன். இன்னொரு ஸ்டாலில் ஒரு டாலர்னு வித்துக்கிட்டு இருப்பதால் வாங்கிக்கலைன்னு சொன்னேன்:-) நிரல் இருந்தாப் போதுமா? எப்பதான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப்போறீங்க? இதுவும் இண்டியன் டைமுக்கா?ன்னு கேட்டதும், 'துள்சிஜி, ஸாடே ச்சே கோ ஜரூர் ஷுரூ கரேங்கா. ஆப் தேக்கியே'ன்னார்.

ஆறரைக்கு மேடை ஏறிட்டார்!. பல மைல் நீளத்துக்கு பேச்சுகள். உள்ளூர் தலைகள், ரெண்டு வாரம் முன்பு நடந்த பொதுத் தேர்தலில் தெரிஞ்செடுக்கப்பட்ட பாராளுமன்ற இந்திய அங்கங்கள், மீண்டும் அங்கமான சீனப்பெண்மணி இப்படி.....பேச்சோ பேச்சு. நம்ம ஆளுங்களுக்குக் கையில் மைக் பிடிச்சா விடமுடியறதில்லைப்பா.

இந்த முறை தோத்துப்போயிட்டா அடுத்த முறை ஜெயிக்கமாட்டாமா? மக்களோடு தொடர்பு இருக்கணுமேன்னு லேபர் கட்சியின் எத்னிக் லயசன் ஆப்பீஸர், நெத்திப் பொட்டு என்ன, மூக்குத்தி என்னன்னு இந்திய அலங்காரத்தில் வந்துருந்தாங்க. எகிப்து நாட்டுக்காரர். நம்ம தோஸ்துதான்.


மேளாவை, மல்ட்டிக் கல்ச்சர் விழாவா மாத்திட்டோம் பெல்லி டான்ஸ், மிடில் ஈஸ்டர்ன் டான்ஸ் எல்லாம் வச்சு:-))))) பஞ்சாபி பெண்கள் நடனம், குஜராத்தி கர்பா, பரத நாட்டியம், பாலிவுட் டான்ஸ், பாங்ரான்னு ஜமாய்ச்சுட்டோம்.

இந்த விழாக்களில் எல்லாம் ஒரு அதிசயமான ஒற்றுமை என்னன்னா சுதா ரகுநாதன். சொல்லிவச்சாப்போல எல்லாத்துலேயும் முதல் ஐட்டமே பரதநாட்டியம்தான். கணீர்ன்னு சுதாவின் குரலில், தமிழ்ப்பாட்டுக்கு நம்ம பசங்க தூள் கிளப்பிட்டாங்க. ஆரம்பமே தமிழ்ப் பாட்டுன்னு எங்களுக்கு வாயெல்லாம் பல்.


நம்ம வீட்டு விருந்தாளிக்கு ( தீபக் bhaiya) இங்கிருக்கும் இந்தியர்கள் பலரை ஒருச்சேரக் காட்டிட்டொம்லெ. (உங்க வரவை முன்னிட்டுத்தான் இன்னிக்கு தீபக் வந்ததால் திவாலி. ) அதுலே அவரை வேற அடையாளம் கண்டுக்கிட்டாங்க சில ஃபிஜி இந்தியன்ஸ். வந்து போனதுக்கு சாட்சி கிடைச்சுருச்சு:-))) அண்ணனும் அண்ணியும் உள்ளூர் ட்ராம்லே போகணுமுன்னு ஆசைப்பட்டாங்க. சதுக்கத்துலேயே ஒரு பக்கம் ட்ராம் ஸ்டாப் (!!) இருக்கேன்னு அங்கேயே அவுங்களை ஏத்தி அனுப்பிட்டு, சுத்திப் பார்த்துட்டு இதே இடத்துலே இறங்கி எங்களைத் தேடுங்கன்னேன்.

நாங்களும் தெரிஞ்சவங்களோடு கப்பா மாறிச்சுத்தித் திரிஞ்சப்ப ட்ராம்லே போனவங்களும் வந்துட்டாங்க. பூரி,சோளெ, பேல்பூரி, வெஜிடபுள் புலாவ், பாலக் ஷீஷ் கபாப் னு வாங்கித் தின்னு அங்கேயே டின்னரை முடிச்சுக்கிட்டோம். கடைசி நிகழ்ச்சியா வாணவேடிக்கை, பட்டாஸ் கொளுத்துவது எல்லாம் இருந்துச்சு. ஆனாலும் விருந்தினர் களைச்சுப்போனதாலும், மறுநாள் அதிகாலையில் அவுங்க தெற்குத்தீவு சுத்திப்பார்க்கக் கிளம்புவதாலும் பட்டாஸை அவுங்களே வெடிச்சுக்கட்டுமுன்னு வீட்டுக்கு வந்துட்டோம்.

யாருமே காசு கொடுத்து வாங்கிக்காமக் குவிஞ்சு கிடந்த நிகழ்ச்சிநிரல்களைக் கொண்டுவந்து கூட்டத்துக்கு விநியோகம் செய்ய ஆரம்பிச்சாங்க. இந்தா உனக்கு ஒன்னு, உன் பூனைக்கு ஒன்னு, உன் நாய்க்கு ஒன்னு, இந்தக் கைக்கு ஒன்னு அந்தக் கைக்கு ஒன்னுன்னு......மறுநாள் ஒரு 'சரித்திரம் படைக்கப்போறேன்'னு எனக்கே தெரியாது.......
===========================

30 comments:

said...

/*ஆரம்பமே தமிழ்ப் பாட்டுன்னு எங்களுக்கு வாயெல்லாம் பல்*/
படிச்ச எனக்கும் தான்

Anonymous said...

/இந்தி சினிமா பாதிப்பால் பயங்கர திறந்தவெளிகளாய் முதுகுகள். //

ஜன்னல் வைச்ச ஜாக்கட் போடவான்னு ஒரு பாட்டு கூட ஞாபகத்துக்கு வருது.

//ராவணனும் சீதாவும், அனுமாரும் ஜாலியாப் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. படம் எடுத்துக்கிட்டேன். அருகில் ஒரு அரக்கியும் உண்டு:-)//

இதுதான் கலிகாலம் ஹஹஹா :)
//கலியுகராமன் டீ ஷர்ட்டில்// நல்லதாப்போச்சு நீங்களே உறுதிப்படுத்தீட்டீங்க

said...

சப் சல்தா ’ஹை’!!

said...

///"க்யா...ஸப் கிடுக்கி பந்த் ஹோஹயா?"

" க்யா கரூ(ன்)? தண்டி ஹை"///
:))))))

///மறுநாள் ஒரு 'சரித்திரம் படைக்கப்போறேன்'னு எனக்கே தெரியாது.......///
சஸ்பென்ஸ் வச்சாச்சு.. நாளைக்கு வரை டென்சனா இருக்குமே..:)

said...

இத்தனை படங்கள் - இவ்வளவு பெரிய பதிவு - துளசின்னா துளசி தான்

ரொம்ப ரசிச்சுப் பாத்தேன் - படிச்சேன்

கோ என்ன கொடுக்கும் - கோவினையும் அதையும் பிரிக்க முடியுமா என்ன

ஆனா ரொம்பக் கஷ்டமான புதிர்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

(((( இது தானா நவீன இராமயணம்)))..எகிப்து ஆண்டி சோசோ ஸ்வீட்.நம்ம ஊர்ல கூட தீபாவளி இத்தன அமர்க்களம் இல்ல.

said...

\\cheena (சீனா) said...
கோ என்ன கொடுக்கும் - கோவினையும் அதையும் பிரிக்க முடியுமா என்ன
ஆனா ரொம்பக் கஷ்டமான புதிர்//

அதானே..?

said...

மாற்றத்துக்கு தீபாவளி வந்துடுத்தோ:)

வண்ணவண்ணமா எத்தானை படங்கள்!!
துளசி இளைசிட்டாங்கப்பா.
கோவர்த்தனகிரி கோபால் தானெ சங்கம் படைத்தவர்:)

என்ன சரித்திரம்.
டென்சன் பண்ணாதீங்க. சகல சாமுத்ரிகா லட்சணம் படைத்த நாவலாசிரியரா மாறி வரீங்க:)

said...

இந்த மாதிரி உள்ளூர் நிகழ்வுகளை வெளிநாட்டில் இருந்து படிக்கும் போது பார்க்கும் உணர்வு வருகிறது.
தோசைக்கு எதுக்கு ஓவன்??அவ்வளவு குளிரா?

said...

கோ வுக்கும் ல் க்கும் நடுவிலே என்ன வரும்னு மண்டை காயுதே?? :P:P சரி, அது என்ன உங்க கிட்டே ஸாடே சாத் னு சொல்லிட்டு ஆறரை மணிக்கு மேடை ஏறி இருக்கார் ஒரு மணி நேரம் முன்னாலேயே?? :))))))

said...

வாங்க நசரேயன்.

ஒன்னுவிடாம எல்லாத் தீபாவளி விழாவிலும் முதல்லேத் தமிழ்ப் பாட்டுங்க.
அதான் ரொம்பவே இளிச்சுட்டோம்:-))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஜன்னல் கூட இல்லைப்பா. பிரமாண்டமானக் கோட்டைக் கதவுதான்ப்பா:-))))

said...

வாங்க கொத்ஸ்.

வொயித்தோ:-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

எதுக்கு இப்ப அனாவசிய டென்ஷன்?

டேக் இட் ஈஸி :-)))

said...

வாங்க சீனா.

கஷ்டமான புதிர்தான் போல! இதுவரை யாருமே விடுவிக்கலை பாருங்களேன்:-))))

said...

வாங்க சிந்து.

இப்பத்தான் எகிப்து ஆண்ட்டி, பாலிடிக்ஸ்லே இருந்து விலகிட்டேன்னு மெயில் அனுப்புனாங்க.

said...

வாங்க கயலு.

புதிரை விடுவிக்க முயற்சி செய்யுங்க:-))))

வெளுத்ததெல்லாம் -- ன்னு நினைக்காதீங்க,ஆமாம்:-)

said...

வாங்க வல்லி.

ராஃபா பக்கத்துலே நிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஒல்லியா இருப்பேன்:-)))))

said...

வாங்க குமார்.

அவன் சிக்கனுக்கும் சமோசாவுக்கும். சுடவச்சுக் கொடுக்க.

தோசைக்கு கேஸ் அடுப்புதான்.

நல்லவேளை அன்னிக்குக் குளிர் இல்லை.
22 டிகிரி இருந்துச்சு.

said...

வாங்க கீதா.

இவுங்க எங்கே சொன்ன நேரத்துக்குன்னு......

தட்டச்சுச் செய்யும் கையிலே ஏழரை வந்து உக்கார்ந்துக்கிச்சு.

ரொம்ப நன்றிப்பா. திருத்திட்டேன்.

ச்சே ச்சே ச்சே

said...

//அவர் பெயர் மூன்றெழுத்து. முதல் எழுத்து 'கோ'. கடைசி எழுத்து 'ல்'
இடையில் உள்ள எழுத்து என்னவா இருக்கும்? கண்டுபிடிக்க முடியலைன்னா ஒரு க்ளூ தரேன். 'குழந்தை *ல் குடிக்கும்.'//

ஓஹோ!!வூட்டுக்காரர் பேரைச் சொல்லமாட்டீங்களோ?

எங்க ஊரிலே ஒரு தம்பதி...எங்கு விசேஷமானாலும் அடுப்பை அணைத்துவிட்டு வீட்டைப் பூட்டிட்டு கிளம்பி விடுவார்கள். எனக்கும் அப்படித்தான் நீங்க சொன்ன மெனுக்கள் எல்லாம் படித்தவுடன் அனுமார் மாதிரி ஒரே ஜம்ப் அங்கே வந்து விழுந்துடலாமானு இருந்தது.

சரித்திரமென்ன? ஓர் இதிகாசமே படச்சுட்டேள் போங்கோ!!!!!!!

said...

///மறுநாள் ஒரு 'சரித்திரம் படைக்கப்போறேன்'னு எனக்கே தெரியாது.......///

என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன என்ன

உஷ் அப்பாடா
அடிக்க முடியலயே இதுக்கு மேல.

ஆனா இவுங்க எப்படி இம்மாம் பெரிய பதிவெல்லாம் போடறாங்களோ.

said...

அக்கா மூனு பாகம் போயிந்தியா? :))


//தீபாவளி சம்பந்தமுள்ள அச்சடிச்ச படங்களுமா ஒரு ஸ்டாலில் இலவசமா வச்சுருந்தோம்.
//

என்னது இலவசம் படங்களை அங்க வெச்ருந்தாங்களா?ன்னு முத தடவ படிக்கும் போது நெனச்சேன்.
:D

said...

சரித்திரம் படைக்கும் நியூசி தீபாவளி ,ரொம்ப சந்தோழமா இருக்கு ரீச்சர்

said...

வாங்க நானானி.

இந்த வீட்டுக்காரர் பெயரைச் சொல்லக்கூடாது, போட்டோ புடிச்சால் ஆயுசு குறைஞ்சுரும், பேர் சொல்லாததுன்னு ஒரு மருந்து இப்படி பலவிஷயங்கள் அந்தக் காலத்துலே இருந்துருக்குல்லே!!!

நானும் கோபால் பெயரைச் சொல்லாம இருக்கலாமான்னு யோசிக்கிறேன்:-))))

இங்கேயெல்லாம் விழா அதுவும் ஃபிஜி இந்தியர்கள் விழான்னு சொன்னாவே சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவாங்க.

வீடுகளில் பூஜைன்னாலும், நம்மூர்லே வெத்தலைபாக்கு மஞ்சள் குங்குமத்தோட நிறுத்திக்கிறோமே அப்படி இல்லைப்பா.

நம்புனவங்களைக் கைவிடலாமா? நீங்களே சொல்லுங்க:-)

said...

வாங்க அ.அ.

நாட்டுநடப்பு எங்கே தெரியாமப் போயிருமோ என்ற கலக்கம்தான் இப்படி நீஈஈஈஈஈஈஈளப் பதிவு:-)

said...

வாங்க அம்பி.

வானரங்களை ஆயிரம் இருக்கான்னு நீங்க எண்ணும் நேரத்தில் அக்கா மூணு தாண்டி இதோ நாளைக்கு நாலாவது பகுதிக்குத் தயாரா இருக்காங்க!

said...

வாங்க சிங்.செயகுமார்.

கவிஞரை எங்கே ரொம்ப நாளாக் காணொமேன்னு பார்த்தேன்.

//ரொம்ப சந்தோழமா இருக்கு ரீச்சர்//

மகிழ்ச்சி கூடிப்போனால் வாய் குழறுவது உண்மை. அதை நிரூபிச்சதுக்கு நன்றி:-)

said...

ஆகா இதுதான் தீபாவளி மேளாவா? அப்படியே உங்க வீட்டுல நடந்த deepavali photos- யையும் போட்டிருக்கலாமில மேடம்..ரொம்ப நல்லா இருந்திருக்குமே!!! :)))

said...

வாங்க ஹேமா.

இப்பெல்லாம் வீட்டுலே கொண்டாட்டம் என்பது ரொம்பவே குறைஞ்சு போச்சுப்பா.

அப்படியும் (வாங்குன) இனிப்புகளொடு ஒரு பதிவு போட்டுருந்தேனே:-)))