Sunday, November 16, 2008

நடுத் தோட்ட வீதியிலே, நடந்து நான் போகயிலே

வெயில் எப்போதாவதுதான் வருது. வசந்தகாலம், ரெட்டைப்படை எண்ணில் காலநிலை வந்துச்சுன்னு கும்மாளம் போட முடியாம, திடுக் திடுக்குன்னு அண்டார்ட்டிகாலே இருந்து இந்த சதர்லீ வந்து, ' ரொம்பத்தான் ஆடாதே. அடங்கு'ன்னு மிரட்டிட்டுப் போகும். அப்படியெல்லாம் நாம் அடங்கிட்டாலும்............. அது கொஞ்சம் அடங்குன நேரம் பார்த்து,
ட்ரெட்மில்லை ஓரங்கட்டிட்டு, நடைப்பயிற்சிக்குக் கிளம்பினோம்.

நடுத் தோட்ட வீதியிலே

நடந்து நான் போகையிலே

இப்படியே தெம்மாங்கு பாடிக்கிட்டே நம்ம தெருவில் இருக்கும் அழகையெல்லாம் கெமெராவில் வாரிக் கொண்டு வந்துருக்கேன்.

ஆரஞ்சுச் சிகப்பூ

சிம்பிளா ஒரு வெள்ளை

பளபளன்னு ஒரு பச்சை!


எதை விடுவது எதை எடுப்பது........ மாற்றான் தோட்டங்கள் எல்லாமே அட்டகாசமா இருக்கே!

எடுத்தது நூத்துச் சொச்சம். கொடுத்தது........


இதுக்குப்பெயர் ஸ்நோ பால். மொட்டு வரும்போதே பூ மாதிரிதான் இருக்கு. பச்சைப்பூக்கள். கொஞ்சமாக் கிள்ளி எடுத்துவச்சுப் பார்த்தேன். பூத்தவுடன் நிறம் மாறுமோன்னு. வச்சது அப்படிக்கப்படியே பச்சையாவே நின்னுபோச்சு.




ஆனால் மரத்தில் பறிக்காமல் விட்டவைகள் வெள்ளைப்பந்தா இருந்துச்சு சிலநாட்களுக்குப்பிறகு:-)))
Snow balls
சைனீஸ் பெல் (நம்ம உபயம்தான்)

நம்மூர் அவரைப்பூவைப்போல அமைப்பு. ஆனாக் கொத்துக்கொத்தா பூத்துக்குலுங்குது. மணமில்லாத மலர். இதுக்குப் பெயர் தெரியாத காலத்தில் இதை 'ராவணன் செடி'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். காரணப்பெயர்தான். நம்ம பழைய வீட்டு டெக்கில் கொடிபோலப் படர்ந்து இருந்துச்சு. அப்படியே வளர்ந்து சாஃபிட்டைத் துளைச்சு கூரைக்கு உட்புறம் போனதால் கொடியை அடியோடு வெட்டிட்டோம். ஆனாலும் விடாமல் வெட்ட வெட்ட வளர்ந்துக்கிட்டே இருந்துச்சு. ரவுண்டப் என்ற மருந்தைக்கூட அடிச்சுப் பார்த்தாச்சு. ஊஹூம்......


இது ரெண்டும் ராவணன் செடி

இதோட உண்மைப்பெயர் Wisteria



டபுள் கலரில் இருக்குல்லே இந்தக் கண்ணு வச்ச ரோடோஸ்

சாதாரண ரோடோஸ்

ரோடோக்கள்


Rhododendron


பின்புலத்தில் இருப்பது forget me not





நீலப்பூ


சிகப்பூ


அழுத்தமான பிங்க்


ஒரு வீட்டுலே..... அழகா அமைப்பா வச்ச்சுருக்காங்க புல்வெளியில் ஒரு பக்கம்


பூமரம்


நம்வீட்டு வாசலில் இருக்கும் Coleonema

55 comments:

said...

எல்லாமே அழகு.

said...

நல்லாப் பூச்சுத்தறீங்க! :)

said...

வாங்க குடுகுடுப்பை.

'தமிழ்மணம்' சேர்க்க மாட்டேங்குது(-:

பூக்களை வெறுக்கும் அளவுக்கு அதுக்கு
என்ன கஷ்டமோ?

அழகை அழகுன்னுதான் சொல்லணும் இல்லே?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

இன்று இருக்கும் நிலையில் இதைவிட வேற வழி தெரியலை:-)

said...

மலர்களில் ஆடும் இனிமை இனிமையே!
பாட்டுத்தான் மனசுல ஓடுது டீச்சர்.

said...

பூவெல்லாம் பிரமாதம்!

ஆனா, டீச்சர் தான் சரியில்லை. இப்படி நாங்க இந்த பக்கம் குளிரில நடுங்கிட்டு இருக்கோம். பூ காட்டிறீங்களே!! அவ்வ்வ்வ்!

said...

டீச்சர், செடிகளும், பூக்களும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு! நல்லா படம் பிடிச்சு இருக்கீங்க...:)

தமிழ் மணம் யாருக்கும் வேலை செய்யலை டீச்சர்!

said...

கண்ணுக்கு குளிர்ச்சி.. எல்லாமே அழகு.. அந்த பச்சைக்கலர் பூ ரொம்பவே அழகா இருக்கு..

said...

வாங்க புதுகைத் தென்றல்.

மலர்களைப் பார்த்தாலே 'தென்றலுக்கு' மகிழ்ச்சிதானேப்பா:-)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

வேணுமுன்னு செய்யலைப்பா. உலகம் உருண்டையாப் போனதால் வந்த வினை.

நாங்க இன்னும் எலக்ட்ரிக் ப்ளாங்கெட்டை அணைக்கலை(-:

said...

வாங்க தமிழ் பிரியன்.

திறமைன்னு ஒன்னும் இல்லைப்பா. அதுவே அழகு. அதுலே பத்துலே ஒரு பங்குக் கெமெராவுலே கிடைச்சுருச்சு.

ஆமாம். நீங்க புதுக் கெமெரா வாங்கியாச்சா?

said...

வாங்க கயலு.

தீவுளிக்கு ஹேக்ளி பார்க் போனோம். அங்கே இன்னும் அருமையான 'பச்சைப்பூக்கள்' இருக்கு.

ஒருநாள் அதையும் போட்டுருவோம்:-)

said...

வண்ணத்துக்கு ஒண்ணுன்னாலே எத்தனை பூ இருக்கு துளசி!!.
இந்த ஊரிலயும் எல்லாம் பச்சைப் பசேல்னு இருக்கு. மம்ஸ் நிறைய வந்திருக்கு.

அந்த ஊரு வித விதமாப் பார்க்கலை. ரொம்ப மனசுக்கு இதமா இருக்குப்பா.

said...

ஒவ்வொரு போட்டோவும் அழகோ அழகு...திருஷ்டி சுத்தி போடுங்க உங்களுக்கும் கேமராவுக்கும் சேர்த்து.பிகாசாவில் லோடு பண்ணினா மொத்த போட்டோவையும் நாங்க பார்க்க முடியுமே.

said...

///துளசி கோபால் said...
வாங்க தமிழ் பிரியன்.
ஆமாம். நீங்க புதுக் கெமெரா வாங்கியாச்சா?///
இல்லீங்க டீச்சர்.. செண்ட்ரல் கவர்மெண்ட்டில் இருந்து அனுமதி கிடைக்கலை... 10 ஆயிரம் ரூபாய்க்கு கேமராவா? வாங்கிட்டு வந்தீங்கன்னா வீட்டுக்குள்ளேயே அனுமதி கிடையாதுன்னு தங்கமணி சொல்றா...:(
பதிவில் போடுவது எல்லாம் செல் போனில் எடுத்தவையே..:)

said...

ஐ லைக் ஸ்னோ பால் & டபுள் கலர் Rhododendron!

என்னாது ராவணன் செடியா?
தூங்கு மூஞ்சி மரம் அது பக்கத்துல இருந்தா கும்பகர்ணச் செடியா?
டீச்சர் ரொம்பவே இதிகாசம் படிக்கறாங்களோ? :)

said...

ரொம்ப அழகா இருக்கு..ராவணன் செடி பெயர் மிகப் பொருத்தம்..

said...

’உள்ளம் கொள்ளை போகுதே’ன்னும்
பாடலாம்தானே:))?

said...

என்னம்மா அழகா இருக்கு

said...

பூ மரம் ரொம்ப அழகு!!

Anonymous said...

பூவெல்லாம் நியூசி வாசம். பூவைப்பாத்ததும்தான் ஸ்பிரிங்க்னு ஞாபகம் வருது.

said...

அன்பின் துளசி,

அருமை அருமை - வண்ண வண்ணப் பூக்கள் - காமெராவின் திறமையா - துளசியின் திறமையா ? காமெராவுக்குச் சுத்திப் போடுங்கோ - என்னா சேரியா ?

சிம்ப்ளீ சுப்பர்ப் - ஆமா

said...

மலர்களிலே பல நிறம் கண்டேன்!
இவ்ளோ அழகா உங்க ஊரு? ம்ம்ம்..கொடுத்துவச்சவங்கப்பா!

said...

என்ன அழகு! எத்தனை அழகு!!

said...

விடாமல் வெட்ட வெட்ட வளர்ந்துக்கிட்டே இருந்துச்சு.//

இங்க உக்காந்து உக்காந்து பார்த்துக்கிட்டாலும் போடான்னு போயிருதுக :-(

//இவ்ளோ அழகா உங்க ஊரு? ம்ம்ம்..கொடுத்துவச்சவங்கப்பா!//

அதே!

said...

பிரமாதம்!

said...

Rhodorum sideoram எப்பவுமே அழகுதான் :))

said...

வாங்க வல்லி.

பூக்களே மனசுக்கு இதம்தானேப்பா.

அதுவும் அடுத்த வீட்டுத் தோட்டமுன்னா....ஹா....(நான் ஒரு துரும்பைத் தூக்கிப்போட்டுருவேன்?)
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது......

said...

வாங்க சிந்து.

பிக்காஸோ ஐடியா புர்ரா நஹி. செஞ்சுருவொம்.

திருஷ்டிச் சுத்தித் தெருவுலே போடமுடியுமான்னு தெரியலை. அப்புறம் நடுத்தோட்டம் மசாலாவா ஆகிருச்சுன்னா?

இப்பத்தான் நினைவுக்கு வருது, எங்க வீட்டுலே திருஷ்டி சுத்தன்னு காஞ்சமிளகாய், கடுகு & உப்பு சேர்த்துச் சுத்துவாங்க. ஏன்னு தெரியலை....தாளிச்சுடுறாங்களோ?

said...

தமிழ் பிரியன்.

தங்கமணி சொன்னா அதுக்கு அப்பீலே இல்லை. அதுதான் கடைசிச் சொல்.ஆமாம்.

செல்ஃபோன்லேயே இவ்வளவு அழகா எடுக்கறீங்க!!!!!

நம்மாண்டை ஒரு ப்ளாக்பெர்ரி இருக்கு. அதுலே எடுத்தவை எல்லாம்......ஹூம்..... ஒருநாள் சாவகாசமா உக்காந்து அதுகூட வந்த குறிப்புப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லணும்,கோபாலை.

said...

வாங்க கே ஆர் எஸ்.

உண்மையா இதிகாசம் கேக்கறேன் சிலநாட்களா.

இங்கே தூங்குமூஞ்சு மரம் இல்லை. ஆனாக் கொன்றை மரம் கண்ணில் பட்டுச்சு. ஸில்க் ட்ரீ !!!

said...

வாங்க பாசமலர்.

மலர்கள் என்றவுடன் மலரே வந்துருச்சே!!!


சிவாஜி (கணேசன்) ஸ்டைலில் வாசிக்கணும்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பொருத்தமான சிச்சுவேஷன் சாங்!

நீங்க அதைப் பாடுங்க. நான் , மலர்களே மலர்களே...... பாடறேன்.

said...

வாங்க நசரேயன்.

அழகை அழகுன்னு சொன்னதே என்னமா அழகா இருக்கு!!!

said...

வாங்க கபீஷ்.

நன்றி,உங்களுக்கும் அந்த மரத்துக்கும்!

said...

வாங்க சின்ன அம்மிணி.

இன்னும் 13 நாட்கள்தான்.

டிசம்பர் ஒன்னு கோடை!!!!

said...

வாங்க சீனா.

உங்க பேச்சை சீரியஸா எடுத்துக்கிட்டு கெமெராவைச் சுத்தித் தெருவுலே போடப் பார்த்தேன்......

ச்சும்மா.....:-))))

நன்றி.

said...

வாங்க ஷைலூ.

இது நம்ம தெரு. நடுத்தரவகுப்பு வாழும் இடம்.

ஊருலே 'மால்தாரீஸ்' இருக்கும் இடங்கள் எல்லாம் தோட்டம் அப்படியே
கண்ணுலே ஒத்திக்கறாப்போல இருக்கும்.

பருவநிலைக்கு ஏத்தமாதிரிப் பூச்செடிகளை மாத்திக்கிட்டே இருப்பாங்க.

நம்ம வீட்டுலே....ஒரு செடி வாங்கிவச்சா...... அதுவே செத்தொழிஞ்சால்தான் வேற வாங்கலாமான்னு யோசிப்பேன்.

said...

வாங்க ஜோதி பாரதி.
அழகை ரசித்ததுக்கு நன்றி.

உங்க சிங்கையிலும் அழகுத் தோட்டங்கள் இருக்கே. கன்ஸர்வேட்டரிக்கு தேவையே இல்லாத ஊராச்சே உங்களுது!

said...

வாங்க தருமி.

நம்ம நாட்டுலே சுற்றுச்சூழல் மாசு நிறைய ஆனதாலேதான் செடிகளும் முந்திமாதிரி செழிப்பா வர்றதில்லை.

எங்க பாட்டி வீட்டுலே தினமும் ஒரு கூடைப்பூக்களைப் பறிப்போம் அந்தக் காலத்துலே!

said...

வாங்க காஞ்சனா.

பிரமாதப் படுத்துனதுக்கு நன்றிங்க.

said...

வாங்க கபீரன்பன்.

ரோடோரம் இருப்பது ரோடோண்ட்ரன்.
அப்ப சைடோரம்?

காரணப்பெயர் படு பொருத்தம்:-)

said...

//ரோடோரம் இருப்பது ரோடோண்ட்ரன்.
அப்ப சைடோரம்? //

சைடு ஓரம் (”நடு சென்டர்” மாதிரி )

:))))

இந்த பேரு எல்லாத்துக்கும் பொருந்தும்

said...

எங்க பாட்டி சொல்லுவாங்க...அந்த காலத்திலே திருடன் வராம இருக்க வெளி அடுப்பிலே இதை எல்லாம் போட்டு வைப்பாங்களாம்.காந்தல் நெடி இருக்கறதால வரமாட்டானாம் வந்தாலும் இருமறதை வச்சு கண்டுபிடிப்பாங்களாம்.இது உண்மையானு எனக்கு தெரியாது.

said...

அழகு...

said...

ஆஹா....வாக்கிங் போற தெருவுல இவ்ளோ அழகான பூக்களா? இப்படி மட்டும் இருந்தா நான் தினமும் வாக்கிங் போவேனே..ஆஹா..சூப்பர் டீச்சர்... :)

said...

சிந்து,

//வெளி அடுப்பில்.....//

என்னத்தை?

திருஷ்டி சுத்துன மொளகாயையா?

சரியாப்போச்சு. திருடன் வரும்வரை தாங்குமோ?:-)

said...

வாங்க அமுதா.

நன்றி.

ஒருநாள் நம்மூர் தோட்டத்தைப் போடறேன். ரொம்பப் பிடிக்கும் உங்களுக்கெல்லாம்.

எனக்குதான். அங்கே நாம் தோட்டவேலை ஒன்னும் செய்யவேணாமுல்லெ:-))))

said...

வாங்க ரிஷான்.

இது நம்ம தெருவேதான். பெயரையும் தமிழ்ப்படுத்தி இருக்கேன்:-))))

குளிர்காத்து அடிக்கும்போது எங்கே தினமும் வெளிக்கிட முடியுது?

ஜாக்கெட், குல்லாய், ஸ்வெட்டர்ன்னு ஒரு நாலுகிலோவைச் சுமந்துக்கிட்டுப்போக பஞ்சியாக்கிடக்கும்

said...

திருஷ்டி மிளகாய் தான் டீச்சர்.இது 50 அல்லது 60 வருஷங்களுக்கு முன்னாடி நடந்த விஷயம்.கரண்ட் இல்லாத அந்த காலத்தில் மாலை 7 அல்லது 8 மணி லேட் நைட்டாம்.

said...

சிந்து,

இருட்டுனவுடனே ராத்திரி:-)))))

said...

வாவ்!!!

said...

வாங்க கவிநயா.

நன்றிப்பா.

said...

Thulasi teacher,
I'm new to the blog world.I loved your post "akka".your posts gave me feel that I'm watching a good movie .I'm also going to start a blog.Nothing more to say, SIMPLY SUPERB.

said...

வாங்க தேனிக்காரி.(சரியா?)

வந்து ஜோதியில் கலந்துருங்க. நம்ம பதிவுகளால் பலரும் எழுத வந்தது மகிழ்ச்சியே.

(இவளே எழுதும்போது............)

ஹாஹா

ஊர் தேனியா?

ஆம் என்றால், என் மாமியார் வீடும் அருகில்தான்:-)