Monday, November 03, 2008

போலீஸ் செல்லில் நான்.......

சின்ன அறை. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டாய்லெட், அதுக்கு மேலேயே சுவத்துலே பதிச்ச வாஷ் பேஸின்( எல்லாம் ஒரே யூனிட்டா பத்தவைப்பு ஒன்னுமில்லாமல் இருக்கு) காங்க்ரீட் மேடை, கட்டிலா இருக்க அதுக்குமேலே ஒரு ஃபோம் மெத்தை. பரவாயில்லை. நாட் பேட். என்ன ஒன்னு பாத்ரூமுக்கு மறைவு இல்லாததால் ப்ரைவஸி கிடையாது. உள்ளே கூரையில் பதிப்பிச்சு இருக்கும் லைட்டுக்கு ஸ்விட்ச் அறைக்கு வெளியில்.

ரெண்டு நாளைக்கு முன்னே ஆளும் கட்சிக்கான 'எத்னிக் லயஸன் ஆஃபீஸர்' இமெயிலில் விவரம் அனுப்புனாங்க, 'மறக்காதே'ன்னு. 'கவலையே படாதே...உள்ளே போக ஆர்வமா இருக்கு. ஆவன செய்வேன்'னு உறுதி அளிச்சேன். 'ஹேண்ட் கஃப் இல்லை'ன்னு அவுங்களும் பதிலுறுதி தந்தாங்க.

பத்து முதல் நாலுவரைன்னு மடலில் சேதி இருந்தாலும் விளம்பரம் எதையும் உள்ளூர் தினசரியில் பார்க்கலையேன்னு, காலையில் பத்துமணி போல தொலை பேசுனேன்.

'டூ யூ ஹவ் அன் ஓப்பன் டே டுடே?'

'எஸ். வீ டூ. பிட்வீன் 10 & 4 யூ ஆர் மோஸ்ட் வெல்கம்'
(என்னை உள்ளே பிடிச்சுப்போட இவ்வளோ ஆர்வமா?)
சனிக்கிழமையாச்சே. கோவிலுக்குப் போயிட்டு, நல்ல 'அறை'யாக் கிடைக்கணுமுன்னு வேண்டிக்கிட்டு அப்புறம் 'செல்'லுமிடத்துக்குச் 'செல்' லலாம். சரியா ஒரு மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். ஒரு ப்ளாக் முழுசும் தெருவுலே குறுக்கா 'போலீஸ் எமர்ஜென்ஸி'ன்னு டேப் கட்டி வச்சுருந்தாங்க. அதிகாரம் உன்வசம் இருக்கும்போது ஊரையே வளைச்சுக் கட்டினாலும் யார் என்ன செய்ய முடியும்?

நடுத்தெருவுலே நாலைஞ்சு கூடாரம் அடிச்சு வச்சுருக்கு. எல்லாம் வெளியேதான் விளக்கம். உள்ளே போகமுடியாதுன்னு கோபால் சொன்னார். யாரையாவது ( உங்களைன்னு படிக்கணும்) அடிச்சுட்டாவது, உள்ளே போகத்தான் போவேன்.....

முதல் கூடாரத்தில் டார்ச் லைட் வச்ச கைத்தடியுடன் ஒரு போ.ஆ(போலீஸ் ஆஃபீசர்) ரெண்டு சூட்கேஸ் திறந்து வச்சுருந்துச்சு. உள்ளே..... கட்டுக்கட்டாப் பணம்? ஊஹூம்.... வெறும் கம்ப்யூட்டர் மானிட்டர். மேற்கூரை இப்படி உசரமான இடங்களில் இருப்பதைப் பார்க்கும் சாதனம். கைத்தடியில் ஒரு சின்னக்கெமெரா. அது பார்க்கும் இடங்களைத் துல்லியமாப் பொட்டி காமிக்குது. இன்னொன்னு எக்ஸ்ரே மெஷீன். அங்கங்கே கேட்பாரற்றுக் கிடக்கும் பெட்டிகளில் உள்ளே குண்டு எதாவது இருக்கான்னு பார்க்க நாயெல்லாம் வேணாம். இதைப் பெட்டிக்கு வெளியில் வச்சாவே உள்ளே இருப்பது எல்லாம் பளிச்.
வெளியே ஒரு செவ்வகப்பெட்டி நிறைய அடுக்கடுக்காய்ப் பல கருவிகள். பூட்டு ரிப்பேர்க்காரர் வேணாம். பூட்டு முதல் இரும்புக் கதவு வரை எதைவேணுமுன்னாலும் திறந்துக்கலாம் ஓப்பன் சிஸமே.........திருடனும் ஒன்னு வாங்கி வச்சுக்குவானோ?


அடுத்த கூடாரம் கொலை, விபத்து இத்யாதிகள். அதுக்கு அடுத்துக் கைரேகை பார்ப்பது. அஷ்டமத்துச் சனி இப்போ எங்கேன்னும் கண்டுபிடிக்கலாமோ? சின்னப் பசங்க கூட்டம் நெரியுது( நம்ம வழக்கப்படி நாலு பேருக்கு மேல் நின்னால், கூட்டம் என்று கொள்ளணும்) பசங்க தங்களுடைய பெயர் எழுதுன காகிதத்தில் ரேகை பதிஞ்சு எடுத்துக்கிட்டு போகுதுங்க. ரெண்டு பெ.போ.அ.(பெண் போலீஸ் அதிகாரி) உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கையில் இருக்கும் மசியைத் துடைக்க ஸ்ப்ரிட் கலந்த டிஷ்யூ எல்லாம் கொடுத்து எங்கள் கைகள் கறைபடியாமல் பார்த்துக்கிட்டாங்க! பசங்க பூந்து வெளையாடிக்கிட்டு இருந்துச்சுங்க. வாண்டட் அறிவிப்புலே நூறுவயசு அம்மாவை வரைஞ்சு வச்சது ஒரு குட்டிப்பொண்ணு. குற்றம்: டிவி பார்ப்பது!
பசங்க கூட்டம் அதிகமா இருந்த இந்தக் கூடாரத்தில் மயக்கமருந்து , P ன்னு 'செல்லமாச் சொல்லும்' methamphetamine,அதோட வரலாறு, அதைத் தொடர்ந்து பயன் படுத்துறவங்க உருவம் எப்படியெல்லாம் பயங்கரமா மாறிக்கிட்டு வருதுன்னு எல்லாம் படங்கள் வச்சுருந்தது பாராட்டப்படவேண்டியதுதான். வெறும் ஆபத்து, கூடாதுன்னு சொல்றதைப் படங்களால் விளக்கினால் வளரும் பிஞ்சுகளுக்கு மனசுலே பதிஞ்சுபோயிரும்தானே?




சுத்திவரக் கம்பிவலைத் தடுப்புப் போட்டு போலீஸ் ட்ரெய்னிங்ன்னு மேலே ஏறி குதிச்சு, சின்ன பொந்தில் ஊர்ந்து வெளியே வந்து ஓடின்னு பிள்ளைகளுக்குப் பயிற்சி. செஞ்சு முடிச்சவங்களுக்கு பேட்ஜ், ஸ்டிக்கர்ன்னு பரிசு. அந்தப் பகுதியில் இருந்த பெண் போலீஸிடம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். உள்ளே ஸ்டேஷனில் போய்ப் பார்க்கும் வரிசையில் கோபாலை நிக்க வச்சாச்சு. எட்டுவருசமா வேலை செய்யறாங்களாம். எத்னிக் மவொரி, பஸிபிக் தீவுகள் மக்கள் தொடர்பா வேலை பார்க்கணுமாம். முக்கியமா குடும்பப் பிரச்சனைகள். பெண்களுக்கெதிரான வன்முறைகள். வேலை பிடிச்சுதான் இருக்காம். பெண்களுக்கு மறைமுகமா நடக்கும் கொடுமைகளைக் குறைக்கணுமுன்னு நினைக்கிறாங்களாம். இவுங்க போலீஸ் துறையில் பெண்களுக்கு எதிரா எதாவது நடக்குதான்னு கேட்டேன். இல்லையாம். எல்லாரும் பெண்களை நல்லமுறையில்தான் நடத்தறாங்களாம்.

சாப்பாடு எல்லாம் கடைசிக் கூடாரத்துலே ஏற்பாடு செஞ்சுருக்கோம். சாப்பிட்டுட்டுப் போங்கன்னு உபசாரம்வேற செஞ்சாங்க. 1935 வது வருசம்தான் பெண்களைக் காவல்துறையில் சேர்க்கணுமுன்னு அப்போ ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி தீர்மானிச்சது. ஆனாலும் ஆறு வருசம் கழிச்சுத்தான் 10 பெண்களைத் தேர்ந்தெடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புலனாராய்வு செய்யும் பகுதிக்கு அனுப்பிப் பயிற்சி கொடுத்தாங்க. முக்கியமா இரவு நேரங்களில் ரொம்ப லேட்டா ஊர்ச்சுத்தும் இளம் பெண்களை, ஆபத்துகளில் இருந்துக் காப்பாத்தவேண்டி. உலகப்போர் காரணம், டவுன்களில் அமெரிக்கன் படைவீரர்கள் நடமாட்டம் அதிகம் இருந்த காலக்கட்டமாம்.

ஆரம்ப காலங்களில் பெண்களுக்குன்னு சீருடை கூட இல்லையாம். அரெஸ்ட் செய்யும் அதிகாரமும் இல்லையாம். குற்றம் நடக்கும் இடத்தில் இருந்தாலும், கூட ஒரு ஆண் போலீஸ் இருந்தால்தான் குற்றம் செய்பவரை அரெஸ்ட் செய்ய முடியுமாம். (அடக் கடவுளே) அதுக்குப்பிறகு 1952 இல் சீருடைகள் கொடுத்து, அதிகாரமும் கொடுத்தாங்களாம். அதுக்குப்பிறகு 4 வருசம் கழிச்சு 1956 முதல் பயிற்சி வகுப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்னுபோலவே ஆச்சுதாம். காவல்துறையில் இப்போதைக்கு பெண்கள் 16 சதமானம்.

காவல்துறைக்கு நாய்களைப் பயிற்றுவிப்பது இப்போ ஒரு 52 வருசமா இருக்கு. இங்கிலாந்தில் போலீஸ் நாய்களுக்குக் கொடுக்கும் பயிற்சியைக் கத்துக்கிட்டு 1956 லே மிஸ்கா என்ற பேருடைய முழுப்பயிற்சி பெற்ற நாயையும், இன்னும் 3 இளவயது நாய்களையும் கப்பலில் கூட்டிக்கிட்டு வந்தார் சார்ஜெண்ட் ரெய்லி என்றவர். கப்பலில் வரும்போதே விவகாரமாகி இங்கே வந்து இறங்கும்போது 12 நாய்க்குட்டிகள் எக்ஸ்ட்ராவா ஆகிப்போச்சாம். அதுதான் முதல் டாக் ஸ்க்வாடு:-))))

வரிசையில் நிக்கும் மக்களுக்குப் போரடிக்காம இருக்க டைம் பாஸுக்குன்னு தீனியாக் குக்கீஸ் கொண்டுவந்து கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பார்ச்சூன் குக்கீஸ்:-)))) ரவுடியை எப்படிப் போலீஸ் பிடிக்குதுன்னு ஒரு காட்சி. தமாஷா இருந்துச்சு. உடையாத பாலிகார்பொனேட் தலைக்கவசம், உடல்கவசம் எல்லாம் நானும் போட்டுப் பார்த்தேன்:-))))

குற்றவாளிகளை அடையாளம் காட்டும் லைன் அப் ரூம், பார்வையாளர்கள் சந்திக்கும் இடம் எல்லாம் பார்த்தோம். கோபாலை லைன் அப் ஸ்டேஜில் நிக்கவச்சேன்:-))))


டைனிங் ஹால் முழுசும் காங்க்ரீட்டால் ஆன பெஞ்சுகளும் மேசைகளும். ரெண்டு மூணு வீடியோ கெமெரா பொருத்தி இருக்கு கண்காணிப்புக்கு. அங்கே இருந்த ரெஸ்ட் ஏரியாவில் எங்கே பார்த்தாலும் சுவரில் எழுதி வச்சுருக்காங்க.
ஆறடி அகலக் காரிடோர். ரெண்டு பக்கமும் அறைகள் உள்ள செல். காங்க்ரீட் (கட்டில்) மேடை. பதிவின் முதல் பாராவை ஒரு முறை பார்த்துக்குங்க.
கதவின் மேல் பாகத்தில் கம்பிகள் இருக்கு. ஆனால் தொட்டு எண்ண முடியாமல், கையால் பிடிச்சுக்கிட்டுப் போஸ் கொடுக்க முடியாமல் உடையாத ஃபைபர்க்ளாஸ் தகடை உள்பக்கம் பொருத்தி இருக்காங்க.
அங்கேயும் சுவரில் எழுத்தோ எழுத்து. மனசில் உள்ள அழுத்தம், எரிச்சல், ஆத்தாமை, கோபம் இதுக்கெல்லாம் வடிகால் இந்த மாதிரி எழுதி வைக்கறதுதானாம். இதை ஒருவிதத்தில் கண்டுக்காம இருப்பதுமாதிரி ஊக்குவிப்பாங்களாம். 'அடங்கட்டுமுன்னு'????
எழுத மார்க்கர், ஃபெல்ட் பென் எல்லாம் ஏதுன்னு கேட்டதுக்கு 'மர்மச் சிரிப்பு' சிரிச்சாங்க அந்த பெண் போலீஸ்:-))))

சிலசமயம். கஸ்டடியில் இருக்கும்போது தற்கொலைன்னு சேதிவருதே அது எப்படின்னு விசாரிச்சோம். ஆபத்துன்னு நினைக்கும் எல்லாப் பொருட்களையும் கழுத்துலே இருக்கும் நெக்லேஸ், பைஜாமா நாடா, காதணி இப்படி நீக்கிட்டுத்தான் செல்லில் விடுவாங்களாம். ஆனாலும் மெத்தைக்குப் போட்ட உறையையோ, போட்டுருக்கும் துணிகளைக் கிழிச்சோ டாய்லட்டைச் சுத்திக் கட்டி, அசம்பாவிதம் நடந்துருதாம். அதனால் இப்ப கொஞ்சம்கூட கூரான பாகம் இல்லாத கழிவறைச் சாதனம், கிழிச்சாலும்கூடக் கிழியாத துணின்னு கொடுக்கறாங்களாம். (இங்கே நியூஸியில் மரண தண்டனை கிடையாது)
கார் விபத்து நடந்து நொறுங்கிப்போன வண்டி ஒன்னு பார்வைக்கு இருந்துச்சு. பக்கத்தில் ஆம்புலன்ஸ். அதில் உள்ள வசதிகள்ன்னு ஒன்னொன்னாப் பார்த்துக்கிட்டுப் போகுது கூட்டம். விபத்துக் காட்சி ஒன்னைப் படம் எடுத்து வச்சுருந்தாங்க. பார்த்ததும் நெஞ்சு அப்படியே நின்னுபோச்சு. சம்பவம் நடந்த இடம் நம்ம வீட்டுப் பக்கம்!!!!

சுமைகளை அளவுக்கதிகமா ஏத்திக்கிட்டுபோறாங்கன்னு தெரிஞ்சா எடை எவ்வளவுன்னு உடனடியாப் பார்க்க தட்டையான ஸ்கேல் வச்சுருந்துச்சு. அதுலே கோபால் நின்னு பார்த்தார். 'நான் நிக்க மாட்டேன். என் எடை ஒரு ரகசியமுன்னு அந்த போலீஸ்காரர்கிட்டே சொன்னதுக்கு, லேடீஸுக்கு மன்னிப்பு உண்டுன்னு சிரிச்சார். போலீஸுக்கு நிக்காம ஓடும் வண்டிகளை நிறுத்த முள்கம்பித் தகடை எப்படி வீசி எறிஞ்சு டயர்களைப் பஞ்சர் பண்ணறதுன்னு காமிச்சார் ஒருத்தர். ஆனாலும் சில கில்லாடிகள் நிறுத்தாம பஞ்சர் ஆன டயரோடு 100 கிலோமீட்டர்வரை போயிருக்காங்களாமே!!!! (நெசமாவா???)

நேத்துமட்டும் 7000 பேர் வருகைன்னு இன்னிக்கு போலீஸ் வலைப்பக்கத்துலே போட்டுருந்துச்சு. கூட்டம் வரும் இடத்துலே தேவைப்படும் மக்களுக்காக செளகரியம் செஞ்சுவச்சதையும் சொல்லணுமுல்லே!

போலீஸ் வேலைக்கு இன்னும் ஆள் வேணுமாம். முக்கியமாப் பெண்கள் காவல்துறையில் சேரணுமுன்னு எல்லா இடங்களிலும் அறிவிப்பு இருந்துச்சு.
ஃபார்ச்சூன் குக்கீஸை திறந்தப்ப, எனக்கு வந்தது,' Everyday will be different(if you join the NZ police). கோபாலுக்கு A great fortune awaits you. (Start on a $50k + package @ NZ Police) அப்படியா? முதல்லே போலீஸ் கார்லே உக்கார்ந்து பார்க்கணும்,அப்படியே துப்பாக்கியைச் சரியாப் பிடிக்க வருதான்னும் பயிற்சி எடுத்துக்கணும்.


இந்திய சினிமாக்களில் மட்டும் போலீஸ் ஸ்டேஷன்களையும், பெண்கள் புகார் கொடுக்கக்கூடத் தனியாப் போக முடியாத நிலையில் இருக்கும் பயங்கர வேலிகளே பயிர் மேயும் நடைமுறைகளைத் தினசரிகளில் படிச்சும் இருந்த எனக்கு, இந்த நியூஸி போலீஸ் ஓப்பன் டே ஒரு புது அனுபவமா இருந்துச்சு. எப்ப இருந்து இப்படி பொதுமக்களைக் கூப்பிட்டு, போலீஸ் நடைமுறைகளைக் காமிக்கறீங்கன்னு கேட்டேன். இதுதான் வரலாற்றிலே முதல் முறையாம்!
அப்பாடா............. இதுக்கு முந்தி, எனக்குத் தெரியாம ஏதும் நடந்துருக்குமோன்னு பயந்துட்டேன்:-))))))

64 comments:

said...

துளசிமேடம், எத்தனை விவரமான பதிவு! புதுமையான அனுபவம்! அடேயப்பா...பாராட்ட வார்த்தை இல்லை.

said...

கோபால்ஜியைப் பார்த்தா ஆக்ஷன் ஹீரோ மாதிரில்ல இருக்கு...!

said...

வாங்க ஷைலூ....நான் ஜெயிலில் இருக்கேன்னதும் ஓடோடி வந்துருக்கீங்க:-))))

விஸிட்டர்ஸ் சந்திக்கும் அறை நல்லா இருக்கு என்பது கூடுதல் தகவல்:-)

said...

வாங்க தருமி.

வெத்துத் துப்பாக்கி வச்சு ஏமாத்திட்டான்னு அவர் அழுத அழுகை எனக்குத்தானே தெரியும்:-)

said...

முதல் பார்த்ததும் நான் கூட ஏதோ நியூஸிலாந்து அரசியலைப் பற்றி எழுதித் தான் போலிஸ் காவலில் வச்சுட்டாங்கன்னு நினைச்சேன்... ;))

நல்லா விவரிச்சு சொல்லி இருக்கீங்க...வளர்ந்த நாடுகளில் போலிஸ் - பொதுமக்கள் உறவு ந்ன்றாகவே இருப்பதாகப் படுகின்றது.

said...

டீச்சர்! நேத்து என் மனைவி நம்ம ஆஸ்பத்திரிக்கு உறவினர் ஒருவரைப் பார்க்க சென்று வந்தாளாம்... அவளிடம் நான் சொன்னேம் “ 40,45 வருஷத்துக்கு முன்னாடி நம்ம சொந்தக்காரங்க ஒருத்தர் தான் அங்க சீப் டாக்டர்” என்று... அவளுக்கு ஒன்னும் புரியலை.. ;)
(இப்ப ஷிப்டில் மூன்று டாக்டர்களாம். ஞாயிறு என்பதால் ஒரு டாக்டர் தானாம்)

said...

அப்ப மொத்தம் ஒரே ஒரு டாக்டர்தான்.
அதுலே சீப்பும், காஸ்ட்லியும் எங்கே?:-))))

said...

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!! ரீச்சரை உள்ளே தூக்கி வெச்சுட்டாங்களாம். கடை கண்ணி எல்லாம் அடிச்சு நொறுக்குங்கடா!!

said...

உங்க அவரு உள்ளே போக வரிசையில் நின்னாரு. அப்போ உங்க ஹெல்மெட் படம் யாரு எடுத்தது?

said...

கோபால்ஜியைப் பார்த்தா ஆக்ஷன் ஹீரோ மாதிரில்ல இருக்கு...!

ரிபீட்டேய்

said...

அட்டகாசம் துளசி....சூப்பெர் பதிவு...
செல்லுகுள்ள உக்காந்துகிட்டு அதென்ன அப்படி வாய் கொள்ளா சிரிப்பு...???

said...

அவரை லைன் அப் ரூமில் நிக்க வைக்கணமுன்னு எம்புட்டு நாளா ஆசை?! :)

said...

என்ன செய்வது, பதிவை படிக்க வாசகர்களை வரவழைக்க இந்த மாதிரி விளம்பரம் செய்ய வேண்டி உள்ளது. 1980 kalil வந்த குமுதம் , விகடன் ஒரு பக்க கதை இப்படித்தான் இருக்கும்.

ஆனால் இந்த மாதிரி செய்வதால் வேறு விசயங்களை பற்றி நீங்கள் சிறந்த பதிவு போடும் பொழுது கூட, வாசிக்க உள்ளே போக வேண்டாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

Anonymous said...

அருமையான நிகழ்வு
அங்கிருந்தால் நானும் நிச்சயம் சென்றிருப்பேன்..

Anonymous said...

//அறிவிப்புலே நூறுவயசு அம்மாவை வரைஞ்சு வச்சது ஒரு குட்டிப்பொண்ணு. குற்றம்: டிவி பார்ப்பது!// ஒருவேளை தான் வரைஞ்சதுக்கு தானே 100 மார்க் போட்டுக்கிட்டதா நெனச்சுக்கிச்சோ என்னவோ, அது சரி, கோபால் சாரை அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில புக் பண்ணியிருக்காங்களா டேனியலுக்கு பதிலா :)

Anonymous said...

//இங்கிலாந்தில் போலீஸ் நாய்களுக்குக் கொடுக்கும் பயிற்சியைக் கத்துக்கிட்டு 1956 லே மிஸ்கா என்ற பேருடைய முழுப்பயிற்சி பெற்ற நாயையும், இன்னும் 3 இளவயது நாய்களையும் கப்பலில் கூட்டிக்கிட்டு வந்தார் சார்ஜெண்ட் ரெய்லி என்றவர். கப்பலில் வரும்போதே விவகாரமாகி இங்கே வந்து இறங்கும்போது 12 நாய்க்குட்டிகள் எக்ஸ்ட்ராவா ஆகிப்போச்சாம். அதுதான் முதல் டாக் ஸ்க்வாடு:-))))
///

ஹஹஹஹஹா

said...

//வாண்டட் அறிவிப்புலே நூறுவயசு அம்மாவை வரைஞ்சு வச்சது ஒரு குட்டிப்பொண்ணு. குற்றம்: டிவி பார்ப்பது!//

சூப்பரு!!!!! ஆனால் நாம கண்டு பிடிச்சுட்டோமில்ல, இந்த மாதிரி ஏதோ வேலைதான் செய்திருக்கீங்கனு! அதனாலே தலைப்பைப் பார்த்துட்டு ஏமாறலை!

அருமையான பொக்கிஷம் இந்தப் பதிவு, நம்ம ஊரு போலீசுக்கும் forward பண்ணிடலாமேனு தோணுது!

said...

செல்லுக்குள்ளே உட்கார்ந்து போஸ் கொடுத்த ஒரே ஆள் நீங்கதானு நினைக்கிறேன். கூடவே ஜிகேயையோ இல்லாட்டி ஏதானும் ஒரு ஆனக்குட்டியையோ கூட்டி வந்து வச்சிக்கலாம், பொழுது போக!

said...

நிஜமாவே ஆச்சரியமா இருக்கு டீச்சர்.. நம்ம ஊர் போலீஸை பாத்து வெறுத்துப்போன நமக்கு இந்த செய்தி ஆச்சரியமா இருக்கிறது ஆச்சரியமே இல்லை.. சரியா??

நல்ல வர்ணனைகள்.. பொறாமையா இருக்கு டீச்சர்.. வாழ்க்கையை எஞ்சாய் பண்ணிகிட்டு இருக்கீங்க.. :)))

said...

நல்ல விரிவான பதிவு. நேரில் பார்த்த அனுபவம் தந்தது...

நன்றி அக்கா,... :)

said...

பதிவும், படங்களும் அருமை டீச்சர்...
இதெல்லாம் நம்ம ஊருல எப்போ நடக்கப் போவுதோ...?
ஹ்ம்ம்ம்ம்ம்ம்

said...

//இதுதான் வரலாற்றிலே முதல் முறையாம்!
அப்பாடா............. இதுக்கு முந்தி, எனக்குத் தெரியாம ஏதும் நடந்துருக்குமோன்னு பயந்துட்டேன்:-)//

நடந்திருமா மேடம்:))?

விவரமான பதிவுக்கு நன்றி.

said...

வரலாற்றில் முதல்முறை அதுவும் 4 பேர் இருந்தால் கூட்டம் என்னும் ஊரில் உங்களுக்கு தெரியாம போகுமா?
எப்பதான் 10 பேர் கூட்டம் என்று ஆகப்போகிறதோ? :-)

said...

ஆம்புலன்ஸ். அதில் உள்ள வசதிகள்ன்னு ஒன்னொன்னாப் பார்த்துக்கிட்டுப் போகுது கூட்டம். விபத்துக் காட்சி ஒன்னைப் படம் எடுத்து வச்சுருந்தாங்க. பார்த்ததும் நெஞ்சு அப்படியே நின்னுபோச்சு. சம்பவம் நடந்த இடம் நம்ம வீட்டுப் பக்கம்!!!!//
எதிர்த்த வீட்டுப் பாட்டி கார் சம்பவமா:(

அதென்ன ரெட்டைப் பின்னல் போட்டு ஒரு சின்னப் பொண்ணு உங்க ஜாடையில் இருக்கே:))
இந்த கொத்ஸுக்குக் குத்தம் கண்டு பிடிக்கறாதே வேலையாப் போச்சுப்பா. என்னா ஒரு சந்தோஷம்:))

ஜெயில் சென்று மீண்ட தலைவி துள்சி வாழ்க வாழ்க.

said...

\\\இலவசக்கொத்தனார் said...
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!! ரீச்சரை உள்ளே தூக்கி வெச்சுட்டாங்களாம். கடை கண்ணி எல்லாம் அடிச்சு நொறுக்குங்கடா!!
\\

ஏய்ய்ய்ய்ய்...ஜாலி..லீவே..!! ;))

said...

இனி எங்க டீச்சர் போலீஸ் டீச்சர் என்று அனைவராலும் அழைக்கப்படுவார் ;))

\\சம்பவம் நடந்த இடம் நம்ம வீட்டுப் பக்கம்!!!!\\

வல்லிம்மா சொல்ற சம்பவம் தானே அது!

said...

எல்லாத்த தகுதியும் வந்தாச்சு. எப்போ கட்சி ஆரம்பிக்கிறீங்க?

said...

ஜெயில்ல இருக்கிற வசதியை பார்த்தல், உள்ளபோன ரெம்ப நிம்மதியா இருக்கலாம் போல தெரியுது

said...

வாங்க கொத்ஸ்.

மாணவர் நினைத்தால் நடத்திக் காட்டுவார்?????????

அமைதி அமைதி. என் அருமை மாணவர்களே..... நீங்கள் அமைதி காக்க வேண்டிய தருணம் இது.

நாம் யார் என்பதை நாளைய சரித்திரம் சொல்லும்!!!!

போலீஸுக்கு கெமெராவைக் கையாளத் தெரியாதா??????

said...

வாங்க குடுகுடுப்பை.

வில்லன் மாதிரி இல்லாதவரைக்கும் நல்லது:-))))

said...

வாங்க ராதா.

பின்னே சிரிப்பு வராதா ? கதவை மூடாம விட்டுட்டாங்களேப்பா:-)

said...

கொத்ஸ்,
லைன் அப் லே நிக்கவச்சு என் கையால் படமும் எடுத்தேனே! யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டம்:-)

said...

வாங்க குப்பன் யாஹூ

//ஆனால் இந்த மாதிரி செய்வதால் வேறு விசயங்களை பற்றி நீங்கள் சிறந்த பதிவு போடும் பொழுது கூட, வாசிக்க உள்ளே போக வேண்டாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது.//

நெசமாவாச் சொல்றீங்க!!!!

said...

வாங்க தூயா.

நம்ம மக்கள் யாருமே வரலைப்பா. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நாங்க ஒரு ஜோடிதான்.

ஜெயிலுக்கும் ஜோடியாத்தான் போவோமாக்கும்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஜேம்ஸ் பாண்டா நடிக்கத் தோதாத வயசுலேதான் இருக்கார்:-)

said...

வாங்க கீதா.

பதிவர்களில் செல்லுக்குப்போன முதல் ஆள் நாந்தான்:-)))))

பூனையை வச்சுக்க முடியாது. (உள்ளே மண்தரை இல்லை)

யானைக்குக் கஷ்டம். வாசல் சின்னது.

அதான் பொழுதுபோக எழுத்து இருக்கே. ஃபெல்ட் பென் கிடைச்சுரும்:-)

said...

வாங்க வெண்பூ.

ஆச்சரியமான ஆச்சரியம்தான். இங்கே போலீஸுக்குத் துப்பாக்கிகூட இல்லை.

போலீஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் சும்மா ஒரு அடி அடிக்கவும் உரிமை இல்லை.

பாவம்தான்.

said...

வாங்க சுடர்மணி.
//நேரில் பார்த்த அனுபவம் தந்தது...//


உங்களுக்காகக் கஷ்டப்பட்டு ஜெயிலுக்குப் போய்வந்தேன்ப்பா:-))))

said...

வாங்க தமிழ்ப்பறவை.

நம்ம நாட்டுலே.......
கனவுலே வேணுமுன்னா முயற்சிக்கலாம்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதானே...நடக்க வுட்டுருவோமா? :-)))

said...

வாங்க குமார்.

இந்த நாலை மாத்தும் சமயம் வந்துருச்சு. சீனர்கள் கூட்டம் கூட்டமா வந்துக்கிட்டு இருக்காங்க.

இனிமேல் 8க்கு மேலே போனால் கூட்டம் என்று 'கொல்லணும்'

said...

வாங்க வல்லி & கோபி.

எதிர்வீட்டுச் சம்பவம் இல்லைப்பா. ஆனா நம்ம பேட்டையில் நடந்ததுதான். விளக்குக் கம்பம்(மரம்). இதுலே மோதி கார் ரெண்டு துண்டா ரெண்டுபக்கம் உடைஞ்சு கிடந்துச்சு.

said...

வாங்க இளா.

ஏற்கெனவே கூட்டுமந்திரிசபையில் இடம் புடிச்ச ஒரு கட்சியின் அங்கம்தான் நான். அதுலே இருந்துக்கிட்டே பார்லிமெண்டில் இடம் புடிச்சறனும். அதான் MMP ஸீட்ஸ் இருக்கே:-))))

said...

வாங்க நசரேயன்.

இது வெறும் செல்தான். அசல் ஜெயிலில் வசதிகள் ஏராளம். வீட்டுக்கு அதுவே மேல்:-)

said...

கொஞ்ச நாள் முன்ன தான் நீங்க போலீஸ் வேலை மட்டும் தான் பாக்கலைன்னு நினைக்கிறேன்னு சொன்னதா ஞாபகம்.. அதுவும் நிறைவேறிடுச்சா..

உங்களுக்கு தெரியாம இதுக்கு முன்னாடி என்ன இனிமேயும் நியூஸியில் ஒருவிசயம் நடந்துடாது கவலைப்படாதீங்க...

said...

உங்களுடைய விலாவாரியான பதிவு எழுத்துக்களுக்கு எப்போதுமே ரசிகன் நான். துல்லியமான விவரிப்புகள் சுவை குறையாமல் தந்திருக்கிறீர்கள். அருமையான பதிவு. புகழ்ந்து கொண்டே போகலாம்.

உங்க ஊர்க்காவல்துறை எப்படியும் இருந்திட்டுப் போகட்டும்; அங்கே குற்றம் குறைஞ்சிருச்சா என்ன? என்ன இருந்தாலும் எங்க ஊர் "மாமூ"க்களின் பாணியே தனி தான்.

said...

//எனக்குத் தெரியாம ஏதும் நடந்துருக்குமோன்னு பயந்துட்டேன்//

அதானே! நடந்துருமா என்ன? :p

கோபால சாரை நிக்க வைக்கறதுல என்ன ஒரு ஆனந்தம்? :))

அவரு மீசை ஸ்டையில் சூப்பரா இருக்கு. மறக்காம சொல்லிடுங்க. :)

said...

வித்தியாசமான அனுபவம்தான் டீச்சர்...

said...

முதல் முறையிலேயே உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது நல்ல விசயம்தான்...
ஆமா அங்க உள்வங்களுக்கு அரசியல் ஆலோசனை வழங்குறதே நீங்கதானாமே அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியாம ஏதும் நடக்கும்...:)

said...

தருமி said...
\
கோபால்ஜியைப் பார்த்தா ஆக்ஷன் ஹீரோ மாதிரில்ல இருக்கு...!
\

ரிப்பீட்டு...! :)

said...

வாங்க கயலு.

நடக்க வுட்டுருவமா? அதுவும் பதிவர் வேற:-))))

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

மனுச குணம் பூமி முழுசும் ஒன்னுதானே?

விகிதாச்சாரக் கணக்குப்படிப் பார்த்தா....
குற்றங்களின் எண்ணிக்கை.....கூட்டிக்கழிச்சுப் பார்த்தாச் சரியாத்தான் இருக்கும்.

தேசங்கள் முழுதும் பாஷைகள் மட்டுமே வேறு!

ஆனாலும் 21 வருசமாப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்...முந்திக்கு இப்போக் கொஞ்சம் கூடுதலாத்தான் இருக்கு.
அதுக்கேத்தமாதிரி மக்கள் தொகையும் கூடி இருக்கு.

மாமூ ஸ்டைல் வராதுன்னு நினைக்கறேன். இல்லேன்னா எங்களை 'டீக்கு சொல்லு'ன்னாமே .................இருந்து சாப்புட்டுப் போன்னுவாங்களா? :-))))

said...

வாங்க அம்பி.

அவரு நின்னாத்தானே நான் (பதிவெழுத)உக்காரமுடியும்:-))))

மீசையை எடுத்துறலாம்முன்னு ஒரு யோசனையில் இருக்கார். நீங்கவேற!

said...

வாங்க தமிழன்....(கறுப்பி)

அதென்ன இடையில் கறுப்பி??????

அரசியல் வியாதிகளுக்கு ஆலோசனை கொடுக்க நான் ரெடி. கேட்டுக்க அவுங்களும் ரெடிதான்.

சந்திச்சுப் பேச கெடுபிடி ஒன்னும் இல்லை.கருப்பாவது பூனையாவது காவலுக்கு வந்துட்டாலும்......

இந்தக் கணக்குலே பார்த்தால் கருப்புப்பூனை(படை) எனக்குத்தான் இருக்கு:-)

said...

அது சரி - எங்கே கூப்டாலும் போயிடறதா ? நான் சட்டுன்னு பயந்துட்டேன் - இருந்தாலும் தெரியும் இது துளசியின் குறும்பான தலைப்புன்னு

நல்லாவே எழுதி இருக்கீங்க - ஒரு நா உள்ளே போய் நிம்மதியா இருக்கணும்னு ஒரு ஆசை இருக்கு உங்க கிட்டே - தெரியுது

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

துளசிக்கா

சூப்பர் போஸ்ட். ”சிறையில் செக்கிழுத்த செம்மல்” பின்னாடி சொல்ல வசதியாயிருக்கும்! :0

அடுத்த தடவை, போலீஸ் வேன்ல ஏர்றதுக்கு முன்னாடி ஒரு கும்பிடு போட்டு சிரிச்சி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு, வாழ்க கோஷம் போட்டு, வண்டில ஏர்ற (யப்பா பெரிய multi-tasking வேலையா இருக்கும் போலருக்கு) workshop நடத்துனாங்கன்னா எனக்கு ஒரு invite அனுப்புங்க. கத்துக்கிட்டு கைவசம் ஒரு தொழிலை வச்சுக்கறேன். எதுக்கும் உதவும்! :-)

said...

தலைப்பைப் பார்த்துப் பயந்துட்டே ஓடி வந்துட்டேன் டீச்சர்...
நல்லவேளை அப்படியேதும் இல்ல.அப்பாடா :)

said...

வாங்க சீனா.

ஒருநாள் என்ன ஒரு மாசம் இருக்கச் சொன்னாலும் நான் ரெடிதான். ஆனால் இணையவசதியோடு கணினி கொடுத்தால்தான்:-))))

said...

வாங்க சுந்தர்.

இந்த மல்டி டாஸ்க் பத்தித்தான் எங்கபக்கம் ஒரு பேச்சு நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஆம்பிளைங்களாலே மல்ட்டி டாஸ்க் செய்ய முடியாதுன்னு. ஆனால்......
நீங்க சொல்லும்விதத்தில் அரசியல் வியாதிக்கு இந்த திறமை நல்லாவே இருக்கும் போல!

கூடவே மனசுலே நினைப்பதை முகம் தெரிவிக்காமல் இருக்க ஒரு பயிற்சி, வேணும். இல்லை?

said...

வாங்க ரிஷான்.

எதுக்குப் பயம்?

பதிவர்களில் முதல்முதலாய் சிறை சென்றுவந்த செம்மல்(பட்டம். உதவி வற்றாயிருப்பு சுந்தர்)னு எக்ஸ்ட்ர்ரா குவாலிஃபிகேஷன் வந்துருக்குமேப்பா:-))))

said...

//இங்கே நியூஸியில் மரண தண்டனை கிடையாது//

அப்படியா!!!!!!!!!!!!!

//சில கில்லாடிகள் நிறுத்தாம பஞ்சர் ஆன டயரோடு 100 கிலோமீட்டர்வரை போயிருக்காங்களாமே!!!! //

அதானே! கில்லாடிக்கு கில்லாடிகளாச்சே

//இந்த நியூஸி போலீஸ் ஓப்பன் டே ஒரு புது அனுபவமா இருந்துச்சு. //

எனக்கும் தான்

மேடம் உங்களை மாதிரி யாரும் இப்படி பொறுமையா விளக்கமா பதிவு போட முடியாதுன்னு நினைக்கிறேன் :-)

said...

வாங்க கிரி.

ஜெயிலில் ஓய்வா உக்கார்ந்துக்கிட்டுப் போட்ட பதிவு இது:-))))

said...

அப்பப்பா எத்தனை விவரங்கள்.... இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்குன்னா, சும்மா ஒரு வாரம் இருந்துட்டு வந்து இருக்கலாமே :))))


தலைக்கவசத்தோடு பார்த்தேன்... உங்களை.... நல்லாத்தேன் இருக்கு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் ரெண்டு பதிவர்கள் இருந்தால் 'செல்லில் சந்திப்பு 'ன்னு ஒரு வாரம் இருக்கலாம்:-)))))