Saturday, November 01, 2008

சக்கரகட்டி: என் பார்வையில்

திராபை(-:

24 comments:

said...

பயங்கர பார்வையாக இருக்கே!! :-)

said...

கலக்கல்!

said...

கலக்கல் விமர்சனம் டீச்சர்... இவ்ளோ பெரிய விமர்சனத்த படிச்சிட்டு உண்மைத்தமிழன் பொறாமைப்படப்போறாரு.. :))))

Anonymous said...

?????????

said...

அவ்வளவு மோசமான படமா டீச்சா்? துபாய் வந்த ரெண்டு வருஷமா ஜாஸ்தி படம் பார்கறதில்லை…எல்லாம் பட்ஜெட் தான்……(30 திர்ஹாம் - கிட்டதட்ட 10 டாலர் ஒரு டிக்கட்). சிடி கடைகாரனும் வாடகை கொடுக்க முடியாம ஓடிட்டார்.குமுதம் சன் டிவி விமர்சனம் மட்டும் தான் இப்போதைக்கு என்ன படம் வருதுனு தெரிஞ்சுக்க முடியுது...நல்ல படமா இருந்தா கதை சொல்லுங்க டீச்சர்.

said...

ஒரு வார்த்தை சொன்னாலும்.....நச் நச்...ஆமா..அது எப்படி..படத்தை எடுத்து முடித்து விட்டு அதை ஒரு முறையாவது பார்த்திருந்தால் கூட ரிலீஸ் செய்ய மனம் வந்திருக்குமா...

காமிராவுக்கும், இசைக்கும் மட்டும் ஒரு ஓ.கே..

said...

ஆழந்த கருத்துக்கள்...அற்புதமான விமர்சனம் டீச்சர் ;))

said...

நல்ல விமர்சனம் :-).

Anonymous said...

நெசமாலுமே இப்படியோரு விமரிசனத்தை நான் படிச்சதேயில்ல. நீங்களும் இப்படியோரு விமரிசானத்தை எழுதியிருக்க மாட்டீங்க(நானும் ஒரு பட விமரிசனம் பண்ண சொல்லி கேட்டுட்டே இருக்கேன்.)

said...

நீங்க இது திரை விமர்சனமுனு சொல்லவே இல்லை

said...

நல்லவேளை..நான் பாக்கல:-))

said...

was it really that bad..

said...

தி ரும்ப
ராத்திரி
பைய்ய பார்க்கணும்.

அம்புட்டு நல்லா இருக்கு, அப்படின்னு ரீச்சர் சொன்னதைப் புரிஞ்சுக்காம இது என்ன க்ளாஸில் இவ்வளவு சத்தம்?

said...

துளசி உங்க விமர்சனத்துக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்.

ஒரு படம் திராபை என்றால் எ என்ன எவை எல்லாம் திராபைகள், நடிப்பு, இசை, கதை என்ன, ஏது, ஏன் என்று விளக்கமாய் எழுத வேண்டும். அதை விட்டு, சும்மா திராபை என்றால், நாங்கள் குழம்பிப் போகிறோம்.

சின்னம்மணி, பாய்ஸ் படத்துக்கு ஆவியின் விமர்சனம் "சீ". ஏறக்குறைய அதே ஒற்றை சொல், என்ன ஒண்ணு, சொற்கள் அதிகமா போயிடுச்சு. இனி அடுத்த விமர்சனத்தில் துளசி திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்

said...

எப்படி டீச்சர் உங்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிசா விமர்சனம் செய்ய நேரம் கிடைக்குது? போன பதிவுல தமிழ் படத்துக்கும் விமர்சனம் செய்யவும் சொன்னதற்கு இப்படி ஒரு விமர்சனத்த நான் எதிர்பார்க்கவே இல்லை.:-)

said...

துளசியால் இவ்வளவு பெரிய பதிவும் கூட போட முடியுமா என்ன ? ஆச்சரியமாய் இருக்கிறதே ! இது துளசியின் பதிவல்ல - அல்ல - அல்ல.

ஜீக்கெ அல்லது கோபாலாய் இருக்கும்


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

டீச்சர்..

எழுதியது தாங்கள்தானா..

நச் என்று உள்ளது..

இப்படியெல்லாம் ஆகும் என்று நினைத்துத்தான் நான் புதிய படங்களையெல்லாம் பார்ப்பதே இல்லை..

நன்றாக இருப்பதாகப் பேச்சு வந்தால் ஒழிய இது மாதிரி திராபைகளை பார்க்கச் செல்வதில்லை..

said...

சக்கரக்கட்டி நல்லாத்தான் இருக்கும்னு நினச்சேனே.

இதை வேற ஏதிலயாவது செய்து பேரை மாத்திட்டாங்களோ:)

த்ராபை....பொருள் கூறுக.:)

said...

//சின்னம்மணி, பாய்ஸ் படத்துக்கு ஆவியின் விமர்சனம் "சீ". ஏறக்குறைய அதே ஒற்றை சொல், என்ன ஒண்ணு, சொற்கள் அதிகமா போயிடுச்சு. //

இளக்கியவாதி சொல்வது என்ன? புதசெவி.

said...

நானே (படம்பார்த்து) நொந்துபோன நிலையில் இருந்ததால் தனித்தனியா உங்க எல்லாருக்கும் பதில் சொல்ல முடியாமப்போயிருச்சு.

மன்னிக்கணும்.

பாசமலர் சொன்னது போல இசைக்கு ஓக்கே இல்லை. ஏற்கெனவே ஹிந்தியில் வெளிவந்த மெட்டுக்கள்தான். அதையே தமிழுக்கும் அச்சு அடிச்சு அனுப்பிட்டார் இசை அமைப்பாளர்.

இசைக்குத்தான் மொழி இல்லையாமே!!!!!!

அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

said...

///சக்கரகட்டி: என் பார்வையில்

திராபை(-:///

That is the shortest review I have ever read! :=)

Is that a "colloquial word" or "pure thamizh"?

Is there a "better" politically correct word to express this?!

May be "kuppai" LOL!

said...

அகில்,

குப்பைன்னு சொல்லி இருக்கலாமுன்னா......

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதா ஒரு செய்தி படிச்ச நினைவு இருக்கேப்பா:-)))))

said...

//திராபை(-://

மேடம் ரொம்ப தாக்கிட்டீங்க.. பாவம் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம்

//துளசி கோபால் said...
அகில்,

குப்பைன்னு சொல்லி இருக்கலாமுன்னா......

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதா ஒரு செய்தி படிச்ச நினைவு இருக்கேப்பா:-)))))//

:-(

சரி நான் படம் பார்க்கிறேன். உனக்கு ரொம்ப தைரியமுன்னு சொல்லாதீங்க...அந்த அளவிற்கு மோசமா என்று பார்க்கிறேன்.

மேடம் இவர் (தாணு பையன்) முதன் முதலில் இயக்கிய படம்..அதனால் கொஞ்சம் எனக்கு வருத்தமாக உள்ளது. முதல் படமே இதை போல விமர்சனங்கள் வந்தால் பொதுவாக திரை துறையில் நல்ல எதிர்காலம் இருக்காது என்பார்கள், இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை என்பதால் இதில் கருத்து கூற எதுவுமில்லை.

said...

வாங்க கிரி.

இயக்குனரைப் பத்தி நீங்க சொன்னது சரிதான். இவர் தாணுவின் மகன் என்பதாலே திரைப்படத்துறையின் நெளிவு சுழிவுகளையெல்லாம் அருகே இருந்து பார்த்து அறியும் வாய்ப்பு அதிகமா இருக்கும்தானே?

அப்படி இருந்தும் இப்படி..எப்படி? என்றதுதான் ....

பதிவைவிட நீண்ட பின்னூட்டமாப் போயிருச்சே இது:-)