Wednesday, November 05, 2008

ஆத்தா.....நானும் ஓட்டுப் போட்டுட்டேன்

எங்க நாடாளுமன்றத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடக்கப்போகுது. நவம்பர் 8. இப்போ இருக்கும் ஆளும் கட்சி ஹேட் ட்ரிக் அடிச்சதுபோல மூணாவது முறையாத் தொடர்ந்து ஜெயிச்சு இருக்கு. நியூஸி வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிப் போனாலே தெரிஞ்சுரும் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் மும்மூணு சுத்து சுத்திட்டுத்தான் போகுதுன்னு. இந்தக் கணக்கில் பார்த்தால் இப்ப வேற ஒரு கட்சிக்குத்தான் சான்ஸ் கூடுதல்.

மக்களுக்கு நன்மை செய்யறோமுன்னு பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கும் தொழிலாளர் கட்சி, ஒரு பக்கத்தையே ஊட்டி வளர்க்குது. அடுத்த பக்கம் சவலையாக் கிடக்குன்னு ஆதங்கப்படும் மக்கள் ஒரு பக்கம். இலவசமுன்னு நிறையத் தூக்கிக் கொடுத்துக்கிட்டு, கறவை மாட்டை ஒட்டக் கறக்குதே..... கன்னுக்குட்டிக்கு ஊட்டக்கூட ஒன்னும் விட்டுவைக்கலையேன்னு பலருக்கு எரிச்சல். கிடைச்சவரை லாபம்னு குளிர்காயும் கூட்டம் ஒரு பக்கம். பொறுத்துருந்து பார்க்கலாம். எதுவானாலும் சனிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு முடிவுகள் அநேகமா வந்துரும்.

ஓட்டுப்போடும் மக்களை, 'வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கான்னு பாருங்க'ன்னு நாலைஞ்சு மாசமா, டிவி, ரேடியோ, உள்ளூர் தினசரி, இலவசப் பத்திரிக்கை இப்படி எல்லா மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமும் கூவிக்கூவிக் கூப்ட்டுக்கிட்டு இருக்காங்க. ஒரு இலவச தொலைபேசி எண்ணும் கொடுத்து அதுலே கூப்புட்டுப் பதிவு பண்ணிக்குங்க. இல்லேன்னா வலை விலாசம் கொடுத்து இணையம் வழியாவும் சேர்ந்துக்குங்கன்னு கெஞ்சிக்கெஞ்சிக் கூப்புடறாங்கப்பா.

பக்கத்து நாட்டுலே ஆஸியில் ஓட்டுரிமை உள்ளவங்க கட்டாயமா ஓட்டுப்போட்டே ஆகணும். இல்லேன்னா அபராதம் செலுத்தணும். எங்களுக்கு அப்படி இல்லை. ஆனா....கள்ள ஓட்டுப்போட்டா அபராதம் 40 ஆயிரம் டாலர்கள். நல்ல ஓட்டுப் போடவே ஆளில்லை. இதுலே கள்ள ஓட்டு வேறயா?


ஓட்டுப்போடும் முறைகளை ஆங்கிலம் தவிர 19 மொழிகளில் அச்சடிச்சு அனுப்பி இருக்காங்க. இந்திய மொழிகளில் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபின்னு மூணு இதில் இருக்கு! ( அன்னிக்குப் போலீஸ் ஸ்டேஷன் விஸிட் பண்ணப்பக்கூட 12 மொழிகளில் சேவை செய்யறோமுன்னு அச்சடிச்ச ஒரு புக் மார்க் கொடுத்தாங்க. அதில் ஹிந்தி இருக்கு.தமிழ் இல்லையான்னு கேட்டதுக்கு,பயந்துட்டார் போல. மன்னிக்கனும் என்பது போல் தலை அசைச்சார் அந்த போலீஸ்க்காரர். இனி ஆபத்துன்னு போலீஸைக் கூப்புடும்போது, 'பச்சாவ்...முஜே பச்சாவ்...'ன்னு கத்தலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்)

போனவாரம் தபாலில் நம்ம வீட்டுக்கே Easy Vote Card ன்னு ஒன்னு வந்துச்சு. இதை எடுத்துக்கிட்டு ஓட்டுப்போடப்போனல் 'சட்'னு வேலை முடிஞ்சுரும். இது இல்லாமையும் ஓட்டுப்போடப் போகலாம். அதுக்கு (ஒரு அஞ்சு நிமிசம் லைன்லே நிக்கணும்?) நேரம் எடுக்குமுன்னு இருந்துச்சு. அதுவுமில்லாம தேர்தல் அன்னிக்கு உனக்கு ஓட்டுச்சாவடி வரை போகமுடியலைன்னா கவலைப்படாதே.... இந்த வாரமே போய் ஓட்டுப் போட்டுக்கோ. இந்தந்த இடங்களில் உனக்காகவே நாங்க ஓட்டுச்சாவடி வச்சுருக்கோம். போய்ப் பாருன்னு இருந்துச்சு.

நாட்டில் எத்தனை கட்சிகள், யார் யார் எங்கே வேட்பாளர்ன்னு நாலு பக்கத்துக்கு விவரம் தபாலில் வந்துச்சு. லேபர், நேஷனல், க்ரீன் ன்னு இது மூணும் 65 இடத்துலே நிக்கறாங்க.மத்தக் கட்சிகள் எல்லாம் அவுங்கவுங்க வசதிப்படி. பதினெட்டு கட்சிகள் இப்போதைக்கு இங்கே:-)
Aotearoa Legalise Cannabis party ன்னு ஒன்னு 20 இடத்தில் நிக்குது!


எனக்காக இவ்வளோ செய்யும்போது, அந்த வசதிகளைப் பயன்படுத்திக்கலைன்னா எப்படி? மத்தியானம் இவர் சாப்பாட்டுக்கு வந்தப்ப, 'துளசி விலாஸில்' இட்லி சாம்பாரை ஒரு ப்ளேட் நல்லா அடிச்சுட்டுக் கிளம்பிப்போனோம்.

வாசலில் நின்னு ஒரு படம் புடிச்சுக்கலாமுன்னா...... கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கமிருந்து ,வா வா....ன்னு வெத்தலை பாக்கு வைக்காத குறையா தலையை ஆட்டிக் கூப்புடறாங்க, போலிங் ஆஃபீஸர் அம்மா. பத்துமணி முதல் வெட்டுவெட்டுன்னு உக்காந்து, போரடிச்சுக் கிடந்தாங்கன்னு மூஞ்சே சொல்லுச்சு. உள்ளே போனதும் உக்காருங்க உக்காருங்கன்னு உபசாரம் வேற. படம் எடுத்துக்கவான்னு அனுமதி வாங்கிக்கிட்டு ஓட்டையும் போட்டுட்டு, க்ளிக்கிட்டும் வந்தோம்.


பதினெட்டுக் கட்சிகளில் 12 கட்சி நம்ம வார்டுலே நிக்குது. எண்ணிப்பார்த்தேன். ஆளுக்கு ரெண்டு ஓட்டு. ஒன்னு நல்ல ஓட்டு ஒன்னு கள்ள ஓட்டா? ..... ஒன்னு பதினெட்டுப் பட்டியில்....ச்சீச்சீ...பதினெட்டு கட்சியில் பிடிச்ச கட்சிக்கு. இன்னொன்னு 12 வேட்பாளர்களில் பிடிச்ச வேட்பாளருக்கு!




எதுக்காக தேர்தல் அன்னிக்கு என்னாலே ஓட்டுச்சாவடி வரமுடியலைன்னு ஏழெட்டு விளக்கம் ஒரு அச்சடிச்ச படிவம் இருக்கு. அதுலே விவரம் எழுதணும். அதுலே போட்டுருந்த காரணம் ஒன்னு வேடிக்கையா இருந்துச்சு. தேர்தல் நாளில் (சனி) ஓட்டுப்போடுவதை என் மதம் அனுமதிக்கலை, ரிலிஜியஸ் ரீஸன்ன்னு போட்டுருக்கு. அடக்கடவுளே!!!!!


வாக்கு சேகரிக்கும் பெட்டி வெறும் அட்டைப்பொட்டி. இதுக்குப்போய் பூட்டு எதுக்குன்னு ச்சும்மாக் கிடக்கு!

ஆத்தா நான் ஓட்டு போட்டுட்டேன் ன்னு ஒரு ஸ்டிக்கர் வேற வச்சுருக்காங்க. நாமே ஒன்னை எடுத்து ஒட்டிக்கிட்டு வரவேண்டியதுதான். நெத்தி சின்னதா இருந்ததாலே சட்டையில் ஒட்டிக்கவேண்டியதாப் போச்சு:-)

39 comments:

said...

அட நல்லா இருக்கே - இந்தியாவுலே இத மாதிரி நடத்தலாமே !

said...

என்ன எப்ப பாரு துளசி வி லாஸ் வி லாஸ்ன்னு சொல்லிக்கிட்டு. ஒரு பில் போட்டு காசு வாங்கினா வி கெயின் ஆயிடுது!

அப்புறம் விக்ரம் வோட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு மத்தவங்களுக்கு வாக்குக் கிடைக்காம செய்யும் அரசாங்கத்துக்குக் கண்டனங்கள்.

நீங்க வோட்டுப் போட்ட பொழுது வெளியில் காவலுக்கு நின்ன மாதிரி உங்க அவர் படத்தைப் போட்டுட்டு அவர் வாக்களிப்பதை இருட்டிப்பு செய்தமைக்கு கண்டனங்கள்.

said...

வாங்க சீனா.

ஓட்டு இருக்கட்டும். இந்நேரத்துலே என்ன செய்யறீங்க கணினியில்?

போய்த் தூங்குங்க.

said...

அப்ப நீங்க எலெக்சன்ல நிக்கலையா?

said...

ஆஹா வேட்பாளர் கணக்கா போஸ் கொடுத்திருக்கீங்க மேடம்(அதென்ன அய்யா படம் மட்டும் ஒன்னே ஒன்னுதானா)

said...

வாங்க கொத்ஸ்.

உங்க ஊர்லே 'கெய்னை'க் கோட்டை விட்டுட்டு எனக்குச் சொல்லுங்க கெயின் வருமுன்னு:-))))

அவர் உடுப்பைப் பாருங்க...... கருப்புப்பூனைப் படையின் சீருடை மாதிரி இல்லை?

விக்ரமைச் சொல்லி அப்புறம் விஜயோட தொகுதி எங்கேன்னு கண்டனம் தெரிவிக்கணும்.ஆமாம்...

said...

வாங்க நசரேயன்.

இங்கே எலக்ஷன்லே நின்னா மஜா ஒன்னும் இல்லைப்பா.
வேட்பாளரே தனியா வண்டி ஓட்டிக்கிட்டு வரோட தொகுதிக்கு வீடுவீடாப்போய் தான் யாருன்னு அறிமுகப்படுத்திக்கிட்டு ஓட்டுக் கேக்கணும்.

ஆள், அம்பு, வட்டம், சதுரம் எல்லாம் இல்லாமச் சீன்னு கிடக்கு.
போதாததுக்கு ஒரு மேடை உண்டா, கூட்டம் உண்டா அட்லீஸ்ட் எதிர்க்கட்சி வேட்பாளரைக் கன்னாபின்னான்னு திட்டும் உரிமையாவது உண்டா?

said...

வாங்க ராப்.
அய்யாவுக்கு அரசியல் ஆர்வம் இல்லை. நாந்தான் போஸ் கொடுக்கப் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன்.

நாளைக்குத் திடீர்னு MMP ஸீட்( நம்மூர் ராஜ்யசபா அங்கம் போல)கிடைச்சுருச்சுன்னா...உதவுமேன்னு:-))))

said...

//ஆள், அம்பு, வட்டம், சதுரம் எல்லாம் இல்லாமச் சீன்னு கிடக்கு.
போதாததுக்கு ஒரு மேடை உண்டா, கூட்டம் உண்டா அட்லீஸ்ட் எதிர்க்கட்சி வேட்பாளரைக் கன்னாபின்னான்னு திட்டும் உரிமையாவது உண்டா?//

நியூசிலாந்து போனாலும் ஆசை கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது:)

said...

அட உங்க ஊர்லையும் தேர்தலா!!!

ஒரு பிரியாணி பர்சல் கூடவா இல்ல...என்ன தேர்தல் இதெல்லாம்..!!! ;)

Anonymous said...

ஓட்டுப்போடபோய் ஈ ஓட்டிட்டு வந்த மாதிரி இல்ல இருக்கு. என்னோட அனுபவம் பேசுது. நானும் இந்த மாதிரி ரெண்டு த்ஹரம் நியூசில ஈ ஓட்டீட்டு வந்திருக்கேனாக்கும்.

Anonymous said...

யாருக்கு ஓட்டுப்போடப்போறீங்கன்னு சொல்லவேயில்லை:}

said...

என்ன அருமையா (அம்மாவை விட) வோட் போட்டு இருக்கீங்க.:)
நீங்க ஓட்டு போட்ட கட்சி ஆட்சிக்கு வந்திருச்சா!!

சீக்கிரமே ராஜ்ய சபா மெம்பராகப் ப்ராப்திரஸ்து:)

said...

வாங்க குடுகுடுப்ப்பை.

இங்கேயே பிறந்து வளர்ந்து இருந்தால் இப்படியெல்லாம் நினைப்பு வந்துருக்காது.

பூர்வஜென்ம வாசனை இன்னும் விடாமல் இருக்கேப்பா:-)

said...

வாங்க கோபி.

பிரியாணி இல்லாட்டாலும் போகுது. ஒரு குடம், இல்லை ஒரு மூக்குத்தி.....

அட்லீஸ்ட் ஓட்டுப்போட வீட்டுக்கு வந்து கூட்டிக்கிட்டுப் போகணுமா இல்லையா?
என்னவோ போங்க. இவுங்க தேர்தல் ஒன்னுத்துக்கும் ஆகலை:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

அதைத்தானேப்பா நானும் சொல்றேன்.

குறைஞ்சபட்சம் 'ஈ' இருந்தாலாவது அதை 'ஓட்டு'னேன்னு சொல்லிக்கலாம்.

ரகசிய ஓட்டுமுறைப்பா. அதான் சொல்லலை.

முடிவு வந்தபிறகு பார்த்துக்குங்க:-)

ஆமாம். உங்க ஓட்டை அங்கே ஆஸியில் பதிவு செய்யலாம். மறந்துறாதீங்க.

said...

வாங்க வல்லி.

தேர்தல் சனிக்கிழமைதான் நடக்கப்போகுதுப்பா.

உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்.

'பார்லி'யில் சிலை வைக்க முடியுமான்னு பார்க்கிறேன்:-)

said...

என்ன இருந்தாலும் நம்ம ஊர் ஓட்டு முறை மாதிரி வராது தான்... அதில் தான் என்ன ஆனந்தம், மகிழ்ச்சி.. ஆகா. பேஷ் பேஷ்.

உங்க கட்சி ஆட்சிக்கு வந்தா என்ன செய்வாங்கன்னு வாக்குறுதி ஒன்னும் தரலியா??

said...

அம்மா! கோபால் சார் ஏன் பயந்த மாதிரி நிக்கிறாரு??? அங்க வந்து வால்தனம், சேட்டையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு மிரட்டி கூட்டிட்டுப் போனிங்களோ? :)))

said...

ஒரு மைக் செட் உண்டா? பிரசாரத்துக்கு ஒரு நடிகை உண்டா...என்ன எலக்ஷ்சன் இது டீச்சர்....கோபால்ஜி பார்த்துதான் வோட் போட போனமாதிரி இருக்கு...நீங்க பிக்னிக் போன மாதிரி இருக்கு.

said...

வாங்க தமிழ் பிரியன்.

அரசியல் வியாதி வாக்குறுதி கொடுக்கலேன்னா எப்படி? அதான் அச்சடிச்சு அச்சடிச்சு ஆளாளுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்காங்களே.

டிவியிலும் ஒரு ஓப்பன் டிபேட் வந்துச்சு. இப்போதைய ஆளும் கட்சிப் பிரதமரும், எதிர்கட்சித்தலைவரும் வந்து ரெண்டு மணி நேரம் நேருக்கு நேர் விவாதம் பண்ணாங்க.

said...

வாங்க புதுகை அப்துல்லா.

அவருக்குக் கொஞ்சம் பயந்த சுபாவம்:-))))

said...

வாங்க சிந்து.

ஜாலியாப்போய் ஓட்டுப்போட்டா பிக்னிக்கா?

வெளையாட்டா அரசை மாத்துறோமுன்னு சொல்றீங்களா? :-))))

said...

Hi,
we are a startup www.hyperwebenable.com based on silicon valley.
providing next generation blogging service.
we have seen your blog its very interesting we request to write review
about our service in your blog it will be useful to all your readers .
We will be happy to provide more info about our service.
Thanks and regards
raj
hyperwebenable.com



About us:
HyperWebEnable.com is a free website for blog service. We provide free
website and various other services to our users.We enable blogger and
content creators to create their own free website.

Our service is distinct by providing our users a web
domain(yoursitename.com) of their choice instead of sub
domain(yoursitename.blogspot.com). We have a wide variety of services like
virtual computer, desktop sharing and web conferencing which we provide with
support from alliance partners. We do not charge for registration, and
renewal of our user sites, this is a great opportunity to start a website
for bloggers and content creators.

Currently all web enthusiasts, bloggers face the problem of acquiring a
website. They have to pay for site name, space and hosting. We at
www.HyperWebEnable.com understand the time and cost involved with this
activity. We address the problem by providing all these services for
bloggers and content creators.We also help these users through blog/website
building process also. We also enable the users to generate their own
revenue by allowing them to place their own ads in other space available on
the website/blog.

Visit us at www.hyperwebenable.com

said...

//நல்ல ஓட்டுப் போடவே ஆளில்லை. இதுலே கள்ள ஓட்டு வேறயா?
//

ஹஹாஹா.

இனிமே போஸ் குடுக்கும் போது V மாதிரியோ, இல்ல கட்டை விரலை தூக்கியோ போஸ் குடுங்க. ஒரு கெத்தா இருக்கும்ல. :))

said...

கலக்கறீங்க போங்க. நானும்தான் போயி எங்க ஊர்ல ஓட்டுப் போட்டேன். யாரும் சீந்தகூட இல்லை :-(

said...

நல்ல கவரேஜ் டீச்சர்.. சரி..சரி.. எனக்கு மட்டும் சொல்லுங்க? அங்க ஓட்டோட ரேட் எவ்ளோ? செக்கா? கேஷா? :)))

said...

ஆஹா..டீச்சர் சூப்பர் தேர்தல்..
உங்க வர்ணனையைப் பார்த்தவுடனே எனக்கும் வோட்டுப் போட ஆசை வந்துடுச்சு..

ஆனா..சுத்த போரா இருக்கும் போலிருக்கே..ஒரு ஆட்டோ இல்ல..அலேக்காத் தூக்கிட்டுப் போய் வோட்டு போடுறவஙகளுக்கு ஒரு பிரியாணி,குவாட்டர் இல்ல..ஒரு மிரட்டல் இல்ல..காவலுக்கு போலிஸ் இல்ல..பந்த் இல்ல..பந்தோபஸ்து இல்ல...பார்க்குறதுக்கே போரடிக்கிற மாதிரி இருக்கு டீச்சர்..

ஆனாலும் பரவாயில்ல...நீங்களோ, கோபால் அண்ணாவோ அடுத்த தேர்தல்ல நில்லுங்க..பதிவர் கூட்டமா வந்து இதையெல்லாம் செஞ்சு வோட்டுப் போடறோம் டீச்சர் :)

(ஆமா..அந்த வெள்ளைக்கார அம்மிணி ரெண்டு பேரும் உங்களை வேட்பாளர்னு நினைச்சுக்கலையா போட்டோ எல்லாம் எடுத்ததை வச்சு? )

said...

ஜனநாயகக் கடமைய சரியாச் செஞ்சு இருக்கீங்க.... சபாசு!

said...

அடுத்த நியூசிலாந்து பிரதமர் துளசி அம்மா தான்!
பொறுப்பா படமெல்லாம் எடுத்து போட்டிருக்கீங்க!!

said...

வாங்க ராஜ்.

எங்க மக்கள்ஸ் பார்த்துட்டுச் சொல்வாங்க உங்க சேவையைன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க அம்பி.

கையை எப்படி காட்டிப் போஸ் கொடுத்தாலும் பிரச்சனை ஆயிருதேப்பா:-)

அருளாசி வழங்குவது போல் போஸ், ஓக்கே ஆகுமா?

said...

வாங்க நாகு.

அதுக்குத்தான் எல்லாரும் போற நாளில் நாம் போகக்கூடாது.

போகும்போது மறக்காமல் ஃபோட்டோக்காரரையும் கூட்டிக்கிட்டுப் போகணும்ப்பா.
அததுக்கு ஒரு மொறை இருக்குல்லெ:-)))

said...

வாங்க வெண்பூ.

சரியாப்போச்சு. இங்கே ஒரு கட்சிக்கு டொனேஷன் ஒரு லட்சம் டாலர் கிடைச்சது.

அதைப் பத்தி நாரு நாராய்க் கிளிச்சுத் தோரணம் கட்டித் தொங்கவிட்டுட்டாங்க.

கோர்ட்டுக்கெல்லாம் போய் நிரபராதின்னு வெளியே வர்றதுக்குள்ளே டவுசர் கிழிஞ்சுபோச்சு அதன் தலைவருக்கு. இத்தனைக்கும் அவர் மந்திரி வேற.

சூட்கேஸ் வாங்கத் தெரியாத அரசியல்வாதிங்க இங்கே. (நான் சொல்லிக் கொடுத்தால்தான் உண்டு)
அப்புறம் நமக்கு எங்கே ஓட்டுக்குக் காசு?

said...

வாங்க ரிஷான்.

பொறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடி முடிஞ்சதா?

இனிய வாழ்த்து(க்)கள்.

அந்த வெள்ளைக்கார அம்மணிகள் வாழ்க்கையில், முதல் முறையா ஒரு இந்தியர் ஓட்டுப்போடறதைப் பார்த்து மகிழ்ந்து போய்( இல்லே திகைச்சுப் போயா?) இருந்துட்டாங்கப்பா:-)

said...

வாங்க பழமை பேசி.
அதெல்லாம் கடமையை கரெக்ட்டாப் பண்ணிருவொம்லெ:-)

said...

வாங்க ஜோதி பாரதி.

ஒருமுறை ஆட்சிக்கு வந்தவங்களை மும்மூணுமுறை உக்காரவச்சு அழகு பார்க்கறது எங்க வழக்கம்.

அடுத்த முறை நான் பிரதமர் ஆக நீங்க 9 வருசம் காத்துருக்கணுமே:-)

said...

//நெத்தி சின்னதா இருந்ததாலே சட்டையில் ஒட்டிக்கவேண்டியதாப் போச்சு:-)//

ஹா ஹா ஹா துளசி மேடம் குசும்பு

said...

வாங்க கிரி.

குசும்புக்கு நமக்கென்ன குறைச்சல் சொல்லுங்க:-))))

தேர்தல் முடிவு வந்தபிறகு, காலையில் தினசரியை எடுக்க அவர் வீட்டு வாசலில் இருக்கும் மெயில் பாக்ஸ்க்குப் புதுப்பிரதமர் போனப்ப, வாசலில் ரெண்டு செக்யூரிட்டி நிக்கறதைப் பார்த்துத் திகைச்சுட்டாராம். அப்புறம் வீட்டு ரப்பிஷ் கூடையை வாசலில், சிட்டிக்கவுன்ஸில் ரப்பிஷ் கலெக்ஷனுக்காகக் கொண்டு வச்சப்ப
தெருவுக்கு மறுபக்கம் ஃபோட்டோக்கிராஃபர்ஸ் நின்னுக்கிட்டு இருந்தாங்களாம். பாப்பராசிப் பரதேசிங்க:-)

நம்மூர்லே ஒரு வட்டம் தன் வீட்டுவேலை செஞ்சுருமா என்ன?