Sunday, November 09, 2008

நியூஸிக்குப் புதிய பிரதமர் 'திறவுகோல்'

நேத்துத் தேர்தல் நடந்து முடிஞ்சது. நாலு மணிநேரத்துலே முடிவு தெரிஞ்சுபோச்சு. மொத்தம் 122 ஸீட்ஸ். அதுலே 'ஜான் கீ' தலைமையில் நேஷனல் கட்சிக்கு 59 இடங்கள். இதுவரை (9 வருசமா)ஆண்ட தொழிலாளர் கட்சிக்கு 43 இடங்கள்.

MMP கேக் வெட்டிக் கொடுத்ததுலே கிடைச்சதுதான் இவைகள். குறைஞ்ச பட்சம் 5 சதமானம் கட்சிகளுக்கான ஓட்டு விழுந்துச்சுன்னா அந்தக் கட்சிக்குச் சில இடம் (தேர்தலில் நிக்காட்டாலும்)கிடைக்கும். ஆளுக்கு ரெண்டு ஓட்டு. ஒன்னு பிடிச்ச வேட்பாளருக்கு, ஒன்னு பிடிச்ச கட்சிக்கு. ரெண்டும் வெவ்வேறாவும் இருக்கலாம்.

இதுவரை பிரதமரா இருந்த ஹெலன் க்ளார்க், அவுங்க தொகுதியிலே ஜெயிச்சுட்டாங்க. ஆனாலும், பாராளுமன்றத்துலே எதிர்கட்சித் தலைமை வேணாமுன்னு , புது தலையைத் தெரிஞ்செடுக்கச் சொல்லி அவுங்க கட்சி மேலிடத்தைக் கேட்டுக்கிட்டாங்க. மேடையில் ஏறுனப்பவே 'நமஸ்தே, சத்ஸ்ரீகால், சலாம் ஆலேக்கும், ஹாரே மாய்'ன்னு 20 மொழிகளில் கும்பிட்டுக்கிட்டே வந்தாங்க.(அரசியல்வியாதியா, கொக்கா?) எல்லாம் இந்த 9 வருசப் பிரதமர் வாழ்க்கையில் படிச்சுக்கிட்டது. இவுங்க கட்சி செஞ்ச ஒரே தவறுன்னா.... அது ஒட்டக் கறந்ததுதான். பக்கத்து நாட்டுலே புல் பசுமையா இருக்குன்னு பல கிவிக்கள் பறந்து போயிருச்சு. போனவருசம் 27 ஆயிரத்துச் சொச்சம்பேர் நாட்டைவிட்டுப் போயிட்டாங்க. இந்த வருசமும் மக்கள்ஸ் நாடு மாறிக்கிட்டே இருக்காங்க. (நம்ம சின்ன அம்மிணிகூட என்னைத் தனியா வுட்டுட்டுப் போயிருச்சுப்பா)

அதுவும் இல்லாம எங்க வழக்கமே ஒருத்தருக்கு மூணு முறை சான்ஸ் கொடுக்கறதுதான். எடுத்தேன் கவுத்தேன்னு இல்லாம நாட்டுக்கு என்ன செய்யறாங்கன்னு பொறுமையாக் கவனிச்சுக்கிட்டு இருப்போம். நாங்கள் எல்லாரும் பொறுமையின் பூஷணங்கள்:-))))


நேஷனல் 59 இடம் புடிச்சாலும், இன்னும் சில ( மவொரி, ஆக்ட் & யுனைட்டெட் ஃப்யூச்சர்) கட்சிகளைச் ( 5+5+1) சேர்த்துக்கிட்டு கூட்டுமந்திரி சபைதான் அமைக்கப் போறாங்க. தனி மெஜாரிட்டி இப்பெல்லாம் கிடைக்கறதில்லை. (நாங்களும் முழிச்சுக்கிட்டொம்லெ)
மவொரிக் கட்சியின் கொள்கைகள் பல நல்லாவே இருக்கு.


வழக்கம்போல தேர்தல் முடிஞ்சதும் இனிமேல் ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேடையில் வந்து ஒருவரை ஒருவர் பாராட்டிப் புகழ்ந்தாங்க. புது ஆட்சியில் தலை சரியா இருந்தாலும், பரிவாரங்களில் சில கொஞ்சம் லொடலொட. எல்லாம் பார்த்துச் சரிபண்ணுவாங்கன்னு நம்பறோம்.புதுப் பிரதமர் ஜான் கீ( John Key) அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம். நல்லதே நடக்கணும். நடக்கும்

28 comments:

said...

\\புதுப் பிரதமர் ஜான் கீ( John Key) அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம். நல்லதே நடக்கணும். நடக்கும்\\

ரீப்பிட்டே ;))

said...

உங்க ஆளு பெட்டரா எங்க ஆள் பெட்டரா, வாங்க ஒரு கை பார்த்துடலாம்.

said...

//எல்லாம் இந்த 9 வருசப் பிரதமர் வாழ்க்கையில் படிச்சுக்கிட்டது. இவுங்க கட்சி செஞ்ச ஒரே தவறுன்னா.... அது ஒட்டக் கறந்ததுதான். பக்கத்து நாட்டுலே புல் பசுமையா இருக்குன்னு பல கிவிக்கள் பறந்து போயிருச்சு. போனவருசம் 27 ஆயிரத்துச் சொச்சம்பேர் நாட்டைவிட்டுப் போயிட்டாங்க. இந்த வருசமும் மக்கள்ஸ் நாடு மாறிக்கிட்டே இருக்காங்க. (நம்ம சின்ன அம்மிணிகூட என்னைத் தனியா வுட்டுட்டுப் போயிருச்சுப்பா)
//

ஒம்பது வருசமா இருந்த அம்மா ஆட்சி கவிழ நான் காரணம் இல்லைன்னு சொல்லிக்குவேன். எனக்கு என்னதான் டாக்ஸ் அதிகம் புடுங்குனாலும் அம்மா மேல ஒரு மதிப்பு உண்டு. வின்ஸ்டன் பீட்டர்ஸ் வெவகாரத்தில கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. கேக்க வேண்டிய கேள்விகளை கேக்காம அப்படியேவா நம்பறது. :)

said...

//உங்க ஆளு பெட்டரா எங்க ஆள் பெட்டரா, வாங்க ஒரு கை பார்த்துடலாம்// கொத்தனார் எல்லா ஊருலயும் ஆள் வைச்சிருக்கார். ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல இருக்கு. டீச்சர் உங்க ஆள் யாரு?

said...

//நல்லதே நடக்கணும். நடக்கும்//

இந்த ந்ல்லெண்ணமும் நம்பிக்கையும்தான் வாழ்க்கை, இல்லையா மேடம்.

said...

நல்ல ஆட்சி அமைந்து நன்றாக நாடு விளங்கட்டும்.

புதியவருக்கு ஜான் நல்லவரு வல்லவரு நல்லா இருக்கட்டூ. அதான் பேரிலயே கீ வச்சிருக்காரே:)

said...

டீச்சர், இனி நாம 9 வருஷத்துக்கு நேஷனல் கட்சி ஆளுங்களா? ரொம்ப அதிக நாளா இருக்கே.. அங்க லஞ்சம் வாங்கி கட்சி மாறும் எம்பி எல்லாம் இல்லியா? என்னய்யா இது கட்சி மாறும் ஜனநாயக உரிமை கூட இல்லையா?.. :(

said...

டீச்சர்

நானும் உங்க 'தலை'யை வாழ்த்துறேன்..

நீங்களாவது நல்லாயிருங்க என்று வயித்தெரிச்சல்படாம சொல்லிக்கிறேன்..

said...

ஆகா = புதுத்தலைமையா ? வாழ்க - நல்லதே நடக்க நல்வாழ்த்துகள்

said...

மே 2009 இல் நாங்களும் பதிவு போடுவோம். இந்தியாவிற்கு புதிய பிரதமர் லால் கிருஷ்ணா அத்வானி என்று.

இன்னும் 150 நாட்கள் உள்ளது.

குப்பன்_யாஹூ

said...

புது தலைமைக்கு வாழ்த்துகள்...மாணவர்களுக்கு பார்ட்டி கீர்ட்டி ஏதாவது இருக்கா டீச்சர்?

said...

அம்மா ஹெலன் கிளார்க் பேச்சு நெட்ல பாத்தேன். தோல்விக்கு நானே முழுப்பொறுப்பு ஏத்துக்கறேன் அப்படீன்னு தலைமைப்பொறுப்பை ராஜினாமா பண்ணின விதம் அருமை. அதை எடுத்து உரைல கம்பீரமா சொன்னதும் நல்லா இருந்துது.

said...

வாங்க கோபி.

கூட வர்றதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கொத்ஸ்.

கையெல்லாம் பார்க்க முடியாது. எனக்குக் கைரேகை பார்க்கத்தெரியாது!

said...

வாங்க சின்ன அம்மிணி.

பாவம்ப்பா. வின்ஸ்டன் பீட்டர்ஸ்.

முதல்லேயே விளக்கமாச் சொல்லித் தொலைக்காம NO NO ன்னு போர்டைக் காமிச்சுக்கிட்டுக் கடைச்யில் ஃப்ராடு ஆஃபீஸ் வரை போய்..... க்ளியர் ஆச்சுன்னாலும் தேவையில்லாத......பிடிவாதம்.

வெறும் அஞ்சாயிரத்துச் சொச்சம் ஓட்டுதான் கிடைச்சது கடைசியில்(-:


ஹிட்லர் பேச்சு நல்லா கம்பீரமா இருந்துச்சு.

said...

சின்ன அம்மிணி,

என் ஆளு யாரா?

கோபால்தான்:-))))

சரியாப் போச்சு. விடியவிடிய ராமாயணம்கேட்டு .....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நம்பிக்கைதான் வாழ்க்கைப்பா.

இந்தத் தலைப்புலே முந்தி ஒரு பதிவு போட்டுருக்கேன்:-)

said...

வாங்க வல்லி.

கீயை வச்சுருந்தா .....போறவங்க வாரவங்க கீ கொடுத்துட்டுப் போயிட்டா? :-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

அதேதான்..... (நம்ம)நாகரிகம் தெரியாத ஜென்மங்கள்.....

said...

வாங்க உண்மைத் தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. நானும் வாழ்த்தி ஒரு இமெயில் காலையில் போட்டேன். அவுங்க ஆஃபீஸ்லே பி.ஏ. கிட்டே இருந்து பதில் வந்துச்சு.

said...

வாங்க சீனா.

நன்றி.

said...

வாங்க குப்பன் யாஹூ.

150 நாள்தானே? பொறுத்து இருப்போம்..... பதிவுக்காக!

said...

வாங்க சிந்து.

பார்ட்டி எல்லாம் அவுங்கவுங்க வீட்டுலேதான்.

ஜான் நல்லாவே சமைப்பாராம். பிள்ளைகளைப் பார்த்துக்குவாராம்.

எல்லா பார்லிமெண்ட் அங்கத்தினர்களும்
சமையலில் கெட்டி( இல்லேன்னா எப்படிக் கூட்டு வரும்?)

சமையல் புத்தகம் போட்டு ஒன்னு கொடுத்துருக்காங்க. அதிலும் எங்க வார்டு வேட்பாளர் chef வேலை பார்க்கிறார்.

என்னிடம் ஒரு நாள், 'நல்ல காரமான மிளகாய் எங்கே கிடைக்கும் தெரியுமா?'ன்னார்.

சொல்லு(ங்க)ன்னேன். எனக்குத் தெரியாது. அதான் உன்கிட்டே கேக்கறேன். எனக்குக் காரம் பிடிக்கும்னார்:-)

இண்டியன் கடையில் வாங்குன்னேன்:-)

said...

வணக்கம் டீச்சர்.நேற்றே தொலைக்காட்சி அறிவிப்பு வரும்போது உங்களுக்கு ஒரு பின்னூட்டம் போடணுமுன்னு இருந்தேன்.இப்பவெல்லாம் நியுசின்னாலே நினைவுக்கு வருவது டீச்சர்தான்:)

said...

///வழக்கம்போல தேர்தல் முடிஞ்சதும் இனிமேல் ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சியும் மேடையில் வந்து ஒருவரை ஒருவர் பாராட்டிப் புகழ்ந்தாங்க. ///

இது இங்கே எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போ நடக்கும்.

பதிவுக்கு நன்றி துள்சிம்மா

said...

///
புதுப் பிரதமர் ஜான் கீ( John Key) அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம். நல்லதே நடக்கணும். நடக்கும்///

வாழ்த்துகள். பொறுமைகாக்கும் உங்களுக்கும் நல்லதே நடக்கட்டும்.

said...

வாங்க ராஜ நடராஜன்.

//.இப்பவெல்லாம் நியுசின்னாலே நினைவுக்கு வருவது டீச்சர்தான்:)//

நன்றி. நாட்டுக்கு ஒரே ஒரு பதிவரா இருக்கும் சுகமே தனி:-))))

said...

மது,

வருகைக்கு நன்றி.

மீண்டும் மீண்டும் வருக:-)