Wednesday, November 12, 2008

செலவு வாங்கிக்க ஆகும் செலவு.

கிராமத்துப் பக்கம் ரொம்பப் பழைய காலத்துலே வீட்டுக்கு வந்துட்டுப் போகும் சில பெரியவர்கள் ' அப்ப...செலவு வாங்கிக்கறேன்'னு சொல்வாங்க. போயிட்டு வரேன்னு அதுக்குப் பொருளாம்.


போனவாரம் இங்கே ஒரு இன்ஸூரன்ஸ் கம்பெனி அனுப்புன மெயிலில்

உலகைவிட்டுப்போகும் 'செலவு'க்கு ஆகும் செலவுக் கணக்கைச் சொல்லி இருக்காங்க. என்ன ஏதுன்னு பார்த்தால்.......

சரி. இருக்கட்டும். தெரிஞ்சுவச்சுக்கறதில் என்ன தப்பு?

"நீ(ங்க) பாட்டுக்கு மண்டையைப் போட்டுட்டால், குடும்பம் உங்களை வழியனுப்பும் செலவுக்குத் தவிக்காமல் இருக்க பேசாம ஒரு பாலிஸி எடுத்துக்கோ. அதெல்லாம் ஒன்னும் பெருசா இருக்காதுன்னா கனவு காணறே? இதைப் பார். நல்லாப் படிச்சுப் பார்த்துட்டுச் சொல்லு. குடும்பம் உன்னை மகிழ்ச்சியா அனுப்பணுமுன்னா நாங்க சொல்ற பேச்சைக் கேளு"


ஃப்யூனரல் டைரக்டர்ஸ்க்கு
சேரவேண்டியது( மொதல் சார்ஜ் : 2830
இவுங்களுக்குத்தான்)

உள்ளூர் அரசாங்கத்துக்குக் கட்டவேண்டியது
(செத்தாலும் காசு கொடுத்துட்டுத்தான் சாகணும்): 1666

ஹெட்ஸ்டோன்.
தலைக்குப் பாறாங்கல்லா?

ச்சீச்சீ.... நான் யார், எத்தனை பதிவு எழுதி இருக்கேன் என்ற விவரமெல்லாம் பொறிச்சு வைக்கணுமா இல்லையா? அதுக்கு: 2000



பெட்டி ( உள்ளே வசதியாப் படுக்கறமாதிரி) : 1072

வந்துபோற மக்களுக்குக் காபித்தண்ணி கொடுக்க : 500

செலிப்ரெண்ட் ( சாஸ்த்திரம் சொல்லி நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்க) 272

பொட்டிமேல் வைக்கும் பூக்கள் அலங்காரம்: 250

நிகழ்ச்சி நிரல் அச்சடிச்சு நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் கையில் கொடுக்க : 200

உள்ளூர் தினசரியில் எப்போ, எங்கே, இன்னார்னு விவரம் அறிவிக்க: 100

போயே போயாச்சு. மீண்டு(ம்)வர நோ ச்சான்ஸ் ன்னு உறுதிப்பத்திரம் வாங்க : 26

ஆக மொத்தம் 8916 நியூஸி டாலர்கள்.

இந்தியக்காசுக் கணக்கு வேணுமுன்னா 30 வது வாய்ப்பாடு தெரிஞ்சவுங்க போட்டுப் பார்த்துக்குங்க:-)))


எங்க ஊர் மின்சார மயானம் நாகரீக வசதிகளோடு 'பளிச்'ன்னு இருக்கு. இப்ப இந்தியர்கள் நிறைய வந்துட்டதால் இந்த இடத்துக்கு 'உயிர்' வந்த மாதிரின்னு வச்சுக்குங்க.
ஆனா ஒன்னு, இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது(உயிரோடுதான்) மனவருத்தம் இருக்குன்னாலும், சூழல் இனிமையா இருக்கு. அதுவும் இப்பெல்லாம் கல்லறையிலும் சரி, எரிக்கும் இடங்களிலும் சரி தோட்டம் பிரமாதம். அஸ்தியைச் சின்ன அலங்காரப் பெட்டி(நகைப்பெட்டி மாதிரி அழகா இருக்கு)யில் வச்சு ஒரு இடத்தில் புதைச்சு அதுக்கு மேலே அழகான ரோசாச் செடியை நட்டு வைக்கும் வழக்கம் பரவலா வந்துக்கிட்டு இருக்கு. நம்ம தெக்கியின் பதிவு யாருக்காவது நினைவு இருக்குங்களா?

பூந்தோட்டம். திடுக்குன்னு எந்திருச்சு வெளியே வந்தாலும் போரடிக்காம இனிமையா அக்கம்பக்கத்து ஆவிகளோடு பேசிக்கிட்டு இருக்கலாம்,இல்லே?



அச்சானியமா இருக்குன்னு யாரும் நினைச்சுறாதீங்க.
அச்சச்சோ....இவ்வளோ செலவு பண்ணிச் சாகத்தான் வேணுமா?
புனரபி ஜனனம்,புனரபி மரணம் .(நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்)

38 comments:

said...

நாந்தான் முதல்ல

said...

இதப்படிச்சிட்டு என்னோட விளம்பரம் போடாட்டி நான் ஏமாளி.

குடுகுடுப்பை: சாவு காப்பீட்டின் அவசியம்.

said...

பதிவு நல்லாத்தான் இருக்கு - பாலிசி எடுத்துடுங்க துளசி

said...

விவரங்கள் நல்லா கொடுத்திருக்கீங்க.
இதைப் படிச்சதும் எனக்கு என்ன தோ்ணுதுன்னா, இந்த பாலிசி எடுக்காம செத்தவங்க உறவுக்காரங்க சொல்லக்கூடிய பழ்மொழி இதுதானோ!

“செத்தும் கெடுத்தான் சீதக் காதி”

said...

வாங்க குடுகுடுப்பை.

இதுக்குமா முதலில் வர போட்டி?

உங்க பதிவை எப்படியோ மிஸ் பண்ணி இருக்கேன்.

விளம்பரத்துக்கு நன்றி :-)

said...

வாங்க சீனா.

நம்ம மெடிகல் காப்பீடுலேயே இதுவும் சேர்ந்துருக்கு. கோபாலுக்கு நோ ப்ராப்ளம்:-)

said...

வாங்க புதுகைத் தென்றல்,

//“செத்தும் கெடுத்தான் சீதக் காதி”//

:-))))))))))))))))

said...

துளசி கோபால் said...

வாங்க குடுகுடுப்பை.

இதுக்குமா முதலில் வர போட்டி?

//

படிக்காம பின்னூட்டம் போடக்கூடாதுன்னு இப்ப புரியுது.

said...

அச்சச்சோ....இவ்வளோ செலவு பண்ணிச் சாகத்தான் வேணுமா


''இதுக்கு சாகாமலே இருந்துடலாம்''

Anonymous said...

//எங்க ஊர் மின்சார மயானம் நாகரீக வசதிகளோடு 'பளிச்'ன்னு இருக்கு. இப்ப இந்தியர்கள் நிறைய வந்துட்டதால் இந்த இடத்துக்கு 'உயிர்' வந்த மாதிரின்னு வச்சுக்குங்க//

உங்க டச்

said...

//அச்சானியமா இருக்குன்னு யாரும் நினைச்சுறாதீங்க.//
நினைக்கலை, எல்லாரும் ரிடர்ன் டிக்கெட் வித் அவுட் டேட்டோட தான் வந்துருக்கோம்

said...

வேற வழி வாங்கிட வேண்டியது தான்...

said...

இடத்தோட அழகுக்கு இங்கேயே போகலாம் போலே தெரியுது(காத்து வாங்க)
குடுகுடுப்பை யோட சதி ஒன்னும் இல்லையே?

said...

உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது, சாவைப்பற்றி ஈசியா எடுத்துக் கொள்வதுடன் ஜாலியா அதைப்பத்தி பேசுறீங்க!

---------------------

****ஆக மொத்தம் 8916 நியூஸி டாலர்கள்.

இந்தியக்காசுக் கணக்கு வேணுமுன்னா 30 வது வாய்ப்பாடு தெரிஞ்சவுங்க போட்டுப் பார்த்துக்குங்க:-))) ****

எதுக்கு நம்மாலால இவ்வளவு செலவு வரனும்? உயிரோட இருந்து எல்லோரையும் கொல்லுவோம்னு சொல்றீங்களா, டீச்சர்? :)

said...

காப்பீட்டோட, முக்கியமா உயில் எழுதிரணும். ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகி, என் விருப்பங்களைத் தெரிவிக்க வழி இல்லையின்னா? எனவே, (1) உடல் / உறுப்புகள் தானம், (2) தகனம் / சாம்பலை என்ன செய்வது? (3) உயிர் போகாமல் "இழுத்துகிட்டு" இருந்ததுன்னா, கதையை முடிச்சிடுறதா‌. செத்தும் கொடுக்கலாம்:-)

நெருப்புன்னா வாய் வெந்துடாது. //ரிடர்ன் டிக்கெட் வித் அவுட் டேட்டோட // ரிப்பீட்டு.

இதெல்லாம் நடக்கப் போவுதுன்னு நெடுநாள் நல்லா இருப்போம்:-)

said...

செம ஜாலியான பதிவு துளசி..
குடுகுடுப்பை பின்னூட்டம்படிச்சு சிரிப்பு :)))))
என்ன அவசரம் , வரிசையில் முந்துவதுங்கறது எதுக்குன்னாலுமா ஆஹா..

பதிவு முழுதும் உங்க டச் வேற சிரிப்பை உண்டாக்கிடுச்சு.. பின்னூட்டங்களும் சுவாரசியம் தனித்தனியா பாராட்டனும்.

கேக்கேப்பிக்கிணி சொல்ற மாதிரி தானே பாலிசி விளம்பரங்கள் வருது.. பாலிசி எடுத்துட்டா நிம்மதியா இன்னும் கூட கொஞ்சம் நாள் வாழ்வீங்க..ஜீத்தே ரஹோ..ன்னு

துளசி ஜீ ஜீத்தே ரஹோ.. :)

said...

குடுகுடுப்பை,

இப்பச் சொன்னீங்களே.....அது:-))))

said...

வாங்க ஜீவன்.

செலவைப் பார்த்தாலே கண்ணைக் கட்டிக்கிட்டு வருது. அதனால் இன்னும் கொஞ்சம் இருந்துட்டே போகணும்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

டச்ன்னு சொன்னதே ஒரு நச்:-)

said...

வாங்க கபீஷ்.

ஆமாங்க. ஓப்பன் டிக்கெட்தான்:-)

said...

வாங்க கோபி.

வாங்கித்தான் ஆகணும். காலம் போற போக்கில் கணக்குப் பார்க்கணுமா இல்லையா?

said...

வாங்க நசரேயன்.

இங்கே போயிட்டுவந்தால் நம்மூர் மாதிரி வந்தவுடன் எதையும் யாரையும் தொடாமப்போய் குளிக்கிறது, கட்டிட்டுப்போன துணிகளைக் கையோடு துவைக்கிறதுன்னு ஒன்னும் இல்லை.

எல்லாரும் ஜம்முன்னு கோட் சூட்டோட வர்றாங்க.

said...

வாங்க வருண்.

எப்படியும் போகத்தான் போறோம். அதுவரை சிரிச்சு வாழ்ந்துறலாமுன்னுதான்:-)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

1. இதை ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்கும்போதே குறிப்பிட்டுட்டா நிம்மதி.

2. உயிலில் சில விசயங்கள் எல்லாம் செய்யமுடியாது. வேணுமுன்னா லெட்டர் எழுதி நான் 'கண்ணை மூடுனதும்' பார்ன்னு ஒரு இடத்துலே வைக்கலாம்.
(நாம் தூங்குனவுடன் எடுத்துப் பார்க்காமல் இருக்கணுமே)

3. ஊஹூம்..... இங்கே நியூஸியில் நோ ச்சான்ஸ். பக்கத்து நாடான அஸ்ட்ராலியாவில் ஒரு ஸ்டேட்டுலே மட்டும் இருக்கு.

( இழுக்கும்போது அங்கே கொண்டுபோயிறச் சொல்லலாம்.)

said...

வாங்க கயலு.

இன்னிக்கு ரொம்ப 'நிம்மதி'யா இருக்கீங்க போல!

பயங்கர ரசிப்பா இருக்கே:-)

said...

சமீபத்தில் (அவ்வளவு சமீபம் இல்லைங்க, இது ஒரு மாசத்துக்குள்ள) என் நண்பனின் தாயார் இங்கு வந்திருந்த பொழுது இறந்து விட்டார்கள். அதனைப் பற்றிப் பதிவு போட வேண்டும் என நினைத்திருந்தேன்.

இங்க இம்புட்டு செலவு இல்லை!

said...

வந்தவங்க எல்லாம் போயித் தான் ஆகணும்..அதனால வழிச்செலவுக்கு இப்பவே கொஞ்சம் சேத்து வைக்க ஆரம்பிச்சிட்டேன் :0)

said...

வாங்க கொத்ஸ்.

//இங்க இம்புட்டு செலவு இல்லை!//


அங்குட்டுதான் வந்துறணும்போல நேரம் வரும்போது!

said...

வாங்க அதுசரி.

'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது?'

அருமையாச் சொல்லிட்டுப் போயிருக்கார்
கவியரசர்.

said...

ஏன் துளசி அப்படி திடுக்னு எழுந்துக்கும்போது தோட்டமெல்லாம் கண்ல படும:)
சரி ஓகே. கண்ணு தெரியுமா:)

ரொம்ப நல்லாத்தான் இருக்கு.


விலைதான் ஜாஸ்தி:)
சூப்பருங்கோ.

said...

வாங்க வல்லி.

கண்ணுமட்டுமா தெரியும்?

உடல்தானம் கொடுத்தவங்களுக்கு அப்படியே இளமையான உடலும் கிடைக்குமாம்.

இப்போப் போகும்போது என்ன கொடுக்கறோமோ அதுக்கு நூறு மடங்காம்.

said...

ஊஊஊஊஊஊஊஊஊஊஊ ..வேற ஒண்ணுமில்ல மேடம் சங்கு தான் :-)))

//குடுகுடுப்பை said...
துளசி கோபால் said...

வாங்க குடுகுடுப்பை.

இதுக்குமா முதலில் வர போட்டி?

//

படிக்காம பின்னூட்டம் போடக்கூடாதுன்னு இப்ப புரியுது.//

ஹா ஹா ஹா

மீ த பஷ்டு போடுறவங்க பி கேர் புல் :-)))

said...

//படிக்காம பின்னூட்டம் போடக்கூடாதுன்னு இப்ப புரியுது.//
நல்லா சிரிச்சேன்! குடுகுடுப்பை ஒரு அவசரக்குடுக்கை!!
சமரசம் உலாவுமிடத்தில் திடுக்கினு எழுந்து உலா வர ஆசைப்படும் நீங்கள் அப்படியே உள்ளே எப்படியிருந்துதுன்னு ஒரு பதிவும் போட்டுடுங்க. நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல? நல்ல நிதர்சனமான பதிவு. எதிர்பார்ப்போடு இருந்தால் பயமில்லை.

said...

LIC வந்த ஆரம்பகாலத்தில் ஏஜெண்டுகள் பாலிசி பத்தி பேசினாலே என்னவோ நாளைக்கே போயிடுவோம்னு பயந்த காலம் உண்டு. இப்போது நல்ல விழிப்புணர்வு வந்திருக்கு. உங்க பதிவைப் படித்தால் இன்னும் ஜரூராக தயாராயிடுவாங்க.
நாஞ் சொல்றது சர்தானே?

said...

புனரபி ஜனனம்,புனரபி மரணம்அப்ப திரும்பி வரப்ப 8000 சொச்சம் டாலர் கொடுப்பாங்களா? :-)

said...

வாங்க கிரி.

மீ த ஃபர்ஷ்டு எப்படி மாட்டுனாங்க பாருங்க:-))))

சங்கே முழங்கு:-))))))

said...

வாங்க நானானி.
உள்ளே எப்படி இருந்துச்சுன்னு பதிவு போடணுமா?

அதெல்லாம் மூனு வருசம் முந்தியே போட்டாச்சு:-)

இங்கே பாருங்க

said...

வாங்க குமார்.

புனரபி ஜனனம் எந்த ஊர், எந்த நாடுன்றதைப் பொறுத்து கொஞ்சம் டிஸ்கவுண்டு போக மீதி கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை எல்லாம் இருக்கு:-))))