Monday, November 24, 2008

அக்கா ( பாகம் 3 )

கும்பி கூழுக்கு அழுவுதாம் கொண்டை பூவுக்கு அழுவுதாம். நெசமாவா இருக்கும்? பூன்னு சொன்னதும் ஞாபகம் வருது. கடைசி வீட்டுலே இருக்கற எபிநேசர் வாத்தியார் வீட்டுலே நிறைய கனகாம்பரம், மல்லின்னு பூச்செடிகள் வச்சுருக்காங்க. அங்கே கிணறுகூட இருக்கு. 100 பூவு பத்துகாசுன்னு விப்பாங்க. மல்லி மட்டும் ஒரு சின்ன உழக்குலே அளந்து போடுவாங்க. நாங்கதான் அவுங்களோட மெயின் கஸ்டம்மர். அஞ்சு தலைங்க இருக்கே. அதுவும் மல்லி சீஸன் வந்துருச்சுன்னா..... ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு ஜடைதச்சு விடறதே வேலை. பெரிய பித்தளைக் குண்டான் தண்ணியிலே மல்லி மொட்டுகளைப் போட்டுவச்சுக்கிட்டு ஊசியாலே கோர்த்துக்கிட்டு இருப்போம்.

என்னதான் விறுவிறுன்னு வேலையைப் பார்த்தாலும் இருட்டிரும் பூ தைச்சு முடிக்கும்போது. அக்கா மகளுங்க பலசமயம் அப்படியே ஆடாம உக்கார்ந்தே தூங்கிரும். தூக்கத்துலேயே பவுடர் பூசிப் பொட்டுவச்சு, நல்ல துணி மாத்திப் படுக்க வைக்கறதுதான். தூங்கற புள்ளையை அலங்கரிக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா அழகாப் பூப்பின்னல் போட்டுக்கிட்டு முகத்தைச் சரிப்படுத்தலைன்னா நல்லாவா இருக்கும்? எனக்குத் தைக்கும்போதுமட்டும் உஷாரா இருப்பேன். நகைநட்டெல்லாம் போட்டுவிடுவாங்க. பட்டுப்பாவாடை அழுக்காயிருமுன்னு சின்னத்திண்ணையில் பாய்போட்டு உக்காந்துக்குவேன். அக்கம்பக்கம் போய் காமிக்க எல்லாம் முடியாது. இருட்டுலே பூச்சி பொட்டு இருக்குமாம். நல்லாக் காட்டுலே இருக்கு வீடுன்னு அழுகையா வரும்.

இம்புட்டுப் பூ இருக்கும் எபிநேசர் சார் வூட்டுலே மூணு அக்காங்க இருக்காங்க.
ஒருநாள் கூட இத்துனூண்டு பூவை அவுங்க தலையில் நான் பார்த்ததே இல்லை. எல்லாத்தையும் பறிச்சு வித்துருவாங்க. நாம போய்ச் சொன்னதும் பூப்பறிக்கப் பின்பக்கத் தோட்டத்துக்குப் போவாங்க. நானும் கூடவே போவேன்.
நல்லா குளுகுளுன்னு இருக்கும் அங்கே. ஒவ்வொரு கனகாம்பரச் செடிக்கும் வட்டவட்டமாப் பாத்தி கட்டி, தண்ணீர் தானே பாயறமாதிரிக் கொத்திக் கரை கட்டி வச்சுருப்பாங்க. கிணத்துலே தண்ணி இறைச்சுத் தரையிலே கொட்டுனாவே போதும். அப்படியே சரிஞ்சு சின்ன வாய்க்கலா ஓடும். நானும் அப்பப்பத் தண்ணி சேந்தி ஊத்துவேன். அதுலே கடைசி அக்கா எங்க ஸ்கூலில்தான் படிக்குது. இந்தவருசத்தோடு படிப்பை முடிச்சுருமாம். அப்புறம் வாத்தியார் வேலைக்குப் படிக்கப்போகுதாம். நடுவுலே அக்கா போனவருசம் முடிச்சதாம். உடனே டீச்சர் ட்ரெயினிங் போகமுடியாம பயங்கரக் காய்ச்சல் வந்து இப்பத்தான் உடம்பு தேறியிருக்காம். இந்த ரெண்டு பேரையும் ஒன்னாவே ட்ரெயினிங் அனுப்பப்போறாராம் சார்.

கனகாம்பரத்தை, மொட்டுக்களைச் சேதாரம் பண்ணாம எப்படிப் பறிக்கணும்னு அவுங்கதான் சொல்லிக் கொடுத்தாங்க. நானும் இப்ப தேறிட்டேன்.ஆனா மல்லிச் செடிகிட்டே மட்டும் போகவிடமாட்டாங்க. அங்கே 'பேர் சொல்லாதது' இருந்தாலும் இருக்குமாம். ஊராமூட்டுப் புள்ளேன்ற பயம் போல. பயமுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது.

போனவருசம்,(நான் இங்கே வர்றதுக்கு முந்தி) சார் எங்கியோ ஊருக்குப் போயிருந்தப்ப..... ராத்திரி திருடன் வந்துட்டானாம். வாத்தியாரம்மா ( வாத்தியார் வூட்டுப் பொம்பளைங்களை வாத்தியாரம்மான்னுதான் இங்கே எல்லாரும் கூப்புடறாங்க. நாங்கெல்லாம் வத்தலகுண்டுலே டீச்சர்னு கூப்புடுவோம்) சத்தம் கேட்டு முழிச்சுக்கிட்டாங்களாம். பக்கத்துலே மூணு பொட்டைப்பசங்களும் நல்லாத் தூங்குதுங்க. டார்ச் லைட் வெளிச்சத்துலே திருடன் பாட்டுக்கு பொட்டியைத் திறந்து கிளறிக்கிட்டு இருந்தானாம். 'டேய் திருடா.... எடுத்ததை வச்சுட்டுப் போடா'ன்னு மெள்ளச் சொன்னாங்களாம். அவன் அதைச் சட்டையே பண்ணாம அங்கே இங்கேன்னு துளாவிக்கிட்டே இருந்தானாம். இன்னும் கொஞ்சம் சத்தமா, தூங்கும் புள்ளைங்க எழுந்துக்கப்போதேன்னு பயந்துக்கிட்டே, ' இங்கே ஒன்னும் இல்லை போடா போடா'ன்னு சொன்னதுக்கு அவன் திரும்பிப் பார்த்துக் கத்தியைக் காட்டுனானாம். அம்புட்டுத்தான். கப் சுப்னு இருந்துட்டாங்களாம். எதையாவது எடுத்துக்கிட்டுப்போய்த் தொலையட்டும். மகள்களை ஒன்னும் பண்ணாம விட்டாச் சரின்னு நினைச்சாங்களாம். அந்தப் பேட்டையிலே எவனோ வாத்தியார் ஊருலெ இல்லேன்றதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் வந்திருப்பான்.

மறுநாள் பூரா இதே பேச்சு.. பாவம் அந்தம்மா,பயந்துபோய் நின்னுச்சாம். சார்தான் திரும்பி வந்தபிறகு குதிச்சுக்கிட்டு இருந்தாராம். அவனை அடையாளம் பார்த்து வச்சேயா....ஆளைக் காமி. தொலைச்சுப்புடறேன்னு...... காமிச்சா மட்டும் இவர் என்ன செஞ்சுருப்பாராமுன்னு பள்ளிக்கூடத்துலே டீச்சர்ஸ் ரூமிலே ஒரே கலாட்டாவாம். மாமாதான் அப்பப்ப பள்ளிக்கூட நியூஸையெல்லாம் வீட்டுலே வந்து சொல்வார். அக்காவுக்குச் சிரிப்பா வரும். எல்லாம் ஓல்ட் நியூஸ்ன்னு சொல்லும். அதான்....காலையில் சார்ங்க எல்லாம் பள்ளிக்கூடம் கிளம்புனவுடன் லேடீஸ் மீட்டிங் ஆரம்பிச்சுருமே!!

நம்மூட்டுலே கிணறு இல்லேன்னு சொன்னேனே. அதனால மூனாவது வீட்டுலே இருந்து தண்ணி எடுத்துக்குவாங்க அக்கா. பக்கத்து வீட்டுக் கணக்கு வாத்தியார் கிணறு இருக்குதான். ஆனா அவுங்க சிலசமயம் அவ்வளவு இணக்கமா இல்லைன்னு அக்கா சொல்லும். அந்த லைனில் மொத்தமே மூணு கிணறுதான். . எபிநேசர் சார் வீடு கட்டக் கடைசி. அம்மாத்தூரம் யாரு போவான்னு இருக்கும். மூனாவது வீட்டுக்குச் சொந்தக்காரர், நம்ம ஹைஸ்கூல் கடைநிலை ஊழியர். அவர் பெயர் அன்னு. நாங்களும், அன்னண்ணேனோட அடுத்தப் பக்கத்து வீட்டுக்காரங்களும் தண்ணி எடுக்கன்னு அன்னு அண்ணன் வீட்டுக் கிணத்துக்கிட்டே சந்திப்போம் பாருங்க. அதுதான் லேடீஸ் க்ளப்.

நம்ம எபிநேசர் சார் மட்டும் வீட்டை, மனையின் முன்னாலே கட்டிப் பின்பக்கம் முழுசும் தோட்டம் போட்டுருக்கார். மத்தவங்க எல்லாரும் அவுங்கவுங்க மனையிலே முன்னாலே ரொம்ப இடம் விட்டுக் கடைசியில் வீட்டைக் கட்டி இருக்காங்க. ஒருத்தர் கட்டுனதைப் பார்த்து அடுத்தவுங்க கட்டிக்கிட்டாங்க போல! எல்லாரும் வேலி வேற போட்டு வச்சுக்கிட்டதாலே அப்படியே சுத்திக்கிட்டுப்போய் தண்ணி கொண்டாரணும். அவுங்கவுங்க தனியாத் தாம்புக்கயிறு வாங்கி வச்சுக்கிட்டுக் கொண்டுபோவோம், என்னாத்துக்கு நாளை மறுநாள் ஒரு பேச்சுன்னு.

நான் அங்கே போன சமயம், கணக்கு வாத்தியார் வேற ஊருக்கு மாத்தல் வாங்கிக்கிட்டுப் போயிட்டார். அந்த வீட்டுக்கு புதுசா வந்த கணக்கு வாத்தியார் குடிவந்துட்டார். கணேஷ் சார் ஒத்தைக் கட்டை. அப்பப்ப நம்ம வீட்டுலே இருந்து குழம்பு ரசம் கொண்டுபோய்க் கொடுப்பேன். அவர்தான் அப்புறம் வேலியை ஒரு ஆள் வர்றமாதிரிப் பிரிச்சு விட்டார். அவர் ஒரு பக்கம் பிரிச்சா நான் அந்தப் பக்கம் அன்னு அண்ணன் வீட்டுப் பக்கம் வழி செஞ்சேன். குறுக்காலே புகுந்து தண்ணி எடுத்தாற வசதியாப் போச்சு. கணேஷ் சார், அவுங்க கிணத்துலேயே தண்ணி மொண்டுக்கச் சொன்னார்தான். ஆனா அக்காதான் எதுக்கு வம்பு. இவர் குடித்தனம் இருக்கறவர்தானே? கணக்கு வாத்தியார் தண்ணியிலும் கணக்காவே இருக்கட்டுமுன்னு விட்டுருச்சு.

நான் போனபிறகு அக்காவுக்குக் கூடமாடன்னு உதவியாத்தான் இருந்தேன். ஆரம்பத்துலே தண்ணி எடுக்கும்போதுதான் தேங்காநாரு அப்படியே கையிலே உராய்ஞ்சு உள்ளங்கையெல்லாம் தோலுறிஞ்சு செகசெகன்னு ஆகிப்போச்சு. அக்காதான் அழுதுகிட்டே தேங்காய் எண்ணெய் தேய்ச்சு விட்டு, இனிமே நானே எடுத்துக்கறென்னு சொல்லுச்சு. ஆனா அதுவும் பாவம்தானே எவ்வளோன்னு வேலை செய்யும்? இதுலே பொழுதன்னிக்கும் புள்ளைத்தாய்ச்சி. எனக்கு அப்புறம் கை பழகிப்போச்சுன்னு வையுங்க. பாதி வழி குடத்தைக் கொண்டுவந்தா மீதி வழி அக்கா சுமந்துபோய் எல்லாத்துலேயும் தண்ணி ரொப்பிக்கும். எல்லாத்துலேயுமுன்னா சின்னச் சொம்பு டம்ப்ளர்னு ஒன்னு விடாது.


காலையில் தண்ணி எடுக்கறது கொஞ்சம் கொஞ்சமா சாயங்காலமுன்னு ஆச்சு. எல்லாருக்கும் காபி, இட்லி, சட்னி எல்லாம் செஞ்சு, மூத்த ரெண்டு பசங்களைக் குளிப்பாட்டிப் பள்ளிக்கூடத்துக்கு
ரெடியாக்கி அதுங்களுக்கு சடை போட்டு, எனக்கும் சடை பின்னிவிட்டு, மத்த சின்னதுக்கும் பால் பாட்டில் தயார் செஞ்சு இட்லி ஊட்டிவிட்டுன்னு காலை நேரத்துலே ஒரே களேபரமா இருக்கும். இந்த அழகுலே விறகு ஈரமா இருந்தா விடிஞ்சது(-: காபி கூட ஃபில்ட்டர்லே போடமாட்டாங்க. அடுப்புலே தண்ணி கொதிக்கவச்சு அதுலே காப்பித்தூளையும் பாலையும் ஊத்திக் காய்ச்சும். முதல்லே எனக்கு நாக்குக்கு நல்லாவே இல்லை. ஒன்னும் சொல்லாம இருக்கப் பழகிக்கிட்டேன். மாமா ஒரு வேலையும் கூடமாடச் செஞ்சு நான் பார்த்ததே இல்லை. அவர் காலேல எந்திரிச்சு வெளையாடப் போயிருவார். ஒம்போது மணிக்கு வந்து குளிச்சு, இட்லி தின்னுட்டு ஒம்பதே முக்காலுக்கு பள்ளிக்கூடம் கிளம்பிருவார். அவர்கூடவே நானும் போயிருவேன்.

பள்ளிக்கூடத்துப் போகும் வழியில் ஒரு பெரிய மொட்ட மைதானம் இருக்கு. எனக்கு அதைத் தனியா தாண்டிப்போக பயமா இருக்கும். பெரிய பெரிய கழுகுங்க ஒரு சின்னப்புள்ளை உசரத்துலெ மஞ்சமூக்கோடு அங்கே நிக்கும். யாரையும் ஒன்னும் செய்யாதாம். பொணம்தின்னிக் கழுகான்னு கேட்டால் இல்லையாம். ஆனாலும்...........

இதுக்கு நடுவிலே அக்காவுக்கு நாலாவது பொண் குழந்தை பிறந்தாச்சு. வீட்டுலேதான் பிரசவம். நானு பள்ளிக்கூடத்துலே இருந்து வரேன், வீட்டுலே ஒரு புதுப் பாப்பா! மதீனாக்காதான் கூடமாட உதவி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.
பாப்பாவுக்கு ரேணுகான்னு பெயர் வச்சாங்க அக்கா. இப்போ மூனாவது குழந்தை முதல் இந்த பெயர்வைக்கும் இலாக்கா அக்காவுக்கு மாற்றிட்டாங்க போல. இன்னிக்கு இதை எழுதும்போது, 'ஏன் நான் ஒரு பெயரைத் தெரிஞ்செடுக்காமல் இருந்தேன்?' னு எனக்கே புரியலை. ஜனனின்னு வச்சுருக்கலாம். எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர்.

இந்தக் குழந்தை பிறந்ததுலே இருந்து என்னுடைய காலை நேரத்து உதவிகளில் மாற்றம் வந்துருச்சு. குழந்தைக்கு எப்பப் பார்த்தாலும் வயித்துக் கோளாறு. ரெண்டே நிலைதான். 'போகும்'. 'போகவே போகாது'. உள்ளூர் அரசாங்க ஆசுபத்திரியில் இருந்து மருந்து வாங்கிக்கிட்டு வரணும். ஆசுபத்திரிகள் நல்ல நிலையில்தான் இயங்கிக்கிட்டு இருந்துச்சு அப்பெல்லாம்.
போகாம இருக்கும் போது போகறதுக்கும், போய்க்கிட்டே இருக்கும்போது போகாமல் இருக்கவுமுன்னு ரெண்டு சீட்டு எழுதி வாங்கியாச்சு. குறைஞ்சது வாரம் ரெண்டு முறை மருந்து வாங்கப்போவேன். அக்காவுக்குத் தெரியும் எந்த சீட்டுன்னு. எடுத்துக்கிட்டுப்போய், அவுட் பேஷண்ட் பார்க்கும் வரிசையில் நின்னு டாக்டர்கிட்டே காமிச்சால் கையெழுத்து போடுவார். அதை அப்படியே கம்பவுண்டர்கிட்டே கொடுத்தால் கலக்கி வச்சுருக்கும் தண்ணி மருந்து எடுத்து நான் கொண்டு போகும் சீசாவில் ஊத்தித் தருவார். ரெண்டு சீட்டு, ரெண்டு சீசா. கூட்டம் எல்லாம் இருக்காது. நாலைஞ்சு பேர் நின்னா அதிகம். பள்ளிக்கூடம் போகற பொண்ணுன்னு எனக்கு முன்னுரிமை கொடுப்பார் டாக்டர்.

ஒவ்வொருமுறை ஆசுபத்திரி போய்வரும்வழியில் எல்லாம் மனசு சஞ்சலத்தோடு இருப்பேன். அந்த டாக்டரைப் பார்க்கும்போது அம்மா, அவுட்பேஷண்ட்டைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது நான் பள்ளிக்கூடம் கிளம்பி தூர இருந்தே கை ஆட்டிட்டுப்போனது எல்லாம் நினைவுக்கு வரும். அழுகையா வரும் . அதை மறைக்க விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வருவேன். சுமார் மூணு நாலு கிலோமீட்டர் தூரம் இருக்கும் வீட்டுக்கும் ஆசுபத்திரிக்கும்.

( இப்போ இதைத் தட்டச்சு செய்யும்போது அம்மாவின் நினைவு ரொம்ப வந்து மனசுலே கனமா இருக்கு. மானிட்டரைப் பார்க்க முடியாமல் கண்ணுலே கண்ணீர் தளும்பி வழியுது. அப்புறமா தொடரலாம் என்ன)

தொடரும்..........

48 comments:

said...

டீச்சர், நாங்களும் உங்களோடதானே வருகின்றோம்... எனக்கும் கண் கலங்கி விட்டது.

said...

டீச்சர், உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா கண்டிப்பா படிச்சுபுட்டு கருத்து சொல்லுறேன்

said...

என்ன ஒரு கஷ்ட காலம் அது ..
ரெம்ப அருமையா இருக்கு,அடுத்த பாகம் வரும் வரை காத்து இருக்கிறேன்

said...

அச்சோ, படிக்கறச்சேயே மனசுக்கு கஷ்டமாயிருக்கு. இதுக்காகவான்னும் உங்க அம்மா உங்க நல்ல நிலையைப் பார்த்துட்டு போயிருக்கலாம்.... அவங்க ஆசிகள் உங்களுக்கு என்றென்றும் உண்டு.

இந்த அக்கா, அவங்க குழந்தைங்க எல்லாரும் இப்ப எப்படி இருக்காங்க? (கடைசிப் பக்கம் படிக்க எட்டிப் பாக்கறேன்).

எழுதி முடிச்சதும், எங்கியாவது சுற்றுலா போய் வாங்க. மனசுக்கு நிம்மதியா இருக்கும் (அமெரிக்கா வாங்க!)

said...

//
தமிழ் பிரியன் said...
டீச்சர், நாங்களும் உங்களோடதானே வருகின்றோம்... எனக்கும் கண் கலங்கி விட்டது.
//

Me too..

said...

//( வாத்தியார் வூட்டுப் பொம்பளைங்களை வாத்தியாரம்மான்னுதான் இங்கே எல்லாரும் கூப்புடறாங்க. நாங்கெல்லாம் வத்தலகுண்டுலே டீச்சர்னு கூப்புடுவோம்)//

நாங்க எல்லாம் ரீச்சர்ன்னு சொல்லுவோம்!! :))

said...

சரி. கொஞ்சம் மூட் சரியான உடனே அடுத்த பாகத்தைப் போடுங்க.

said...

என்ன பண்றது டீச்சர்...மனச தேத்திக்கறது தான் ஒரே வழி...மூட் சரியானதும் அடுத்த பாகம் எழுதுங்க.

Anonymous said...

:( :(

said...

:(:(:(

said...

நண்பர்களே......

கடைசி வரிகளை ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுதிட்டேன். அதைப் பார்த்துட்டுப் பதிவில் சொல்லி இருக்கும் மத்த விஷயங்களைக் கோட்டை விட்டுறாதீங்க.

இந்தக் கதையின் நாயகி அக்காதான். நான் இல்லை.

said...

முடிவைப் பார்த்ததும் :(.

//கடைசி வரிகளை ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழுதிட்டேன். அதைப் பார்த்துட்டுப் பதிவில் சொல்லி இருக்கும் மத்த விஷயங்களைக் கோட்டை விட்டுறாதீங்க.//

விட மாட்டோம்.

//அக்கம்பக்கம் போய் காமிக்க எல்லாம் முடியாது. இருட்டுலே பூச்சி பொட்டு இருக்குமாம். நல்லாக் காட்டுலே இருக்கு வீடுன்னு அழுகையா வரும்//

அடடா!

//அக்காதான் அழுதுகிட்டே தேங்காய் எண்ணெய் தேய்ச்சு விட்டு, இனிமே நானே எடுத்துக்கறென்னு சொல்லுச்சு. ஆனா அதுவும் பாவம்தானே எவ்வளோன்னு வேலை செய்யும்?//

பாசம் வைப்பதிலும் காட்டுவதிலும் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை.

said...

இந்த பூ கட்டறது, அவங்க தலையில் பூவே கிள்ளியும் வெச்சுக்காதது இதெல்லாம் வண்ணதாசன் சிறுகதை ஒண்ணுல படிச்சாப்புல இருக்கு. இங்கே இதைப்போல குடும்பம் பார்த்திருக்கிறோம்.

முன்பு கிணறில் நீர் இறைத்த ஞாபகங்கள்.
//அப்படியே கையிலே உராய்ஞ்சு உள்ளங்கையெல்லாம் தோலுறிஞ்சு செகசெகன்னு ஆகிப்போச்சு. அக்காதான் அழுதுகிட்டே தேங்காய் எண்ணெய் தேய்ச்சு விட்டு, இனிமே நானே எடுத்துக்கறென்னு சொல்லுச்சு//

போங்க துள்சி. அழுவாச்சியா வருது.

//ரெண்டே நிலைதான். 'போகும்'. 'போகவே போகாது'.//

சிறந்த சொல்லாட்சி.

said...

டீச்சர், பூ தைக்கிறதுன்னா என்ன?

//பெரிய பெரிய கழுகுங்க ஒரு சின்னப்புள்ளை உசரத்துலெ மஞ்சமூக்கோடு அங்கே நிக்கும். யாரையும் ஒன்னும் செய்யாதாம். //

டீச்சர் நீங்க அதை நேர்ல பார்த்திருக்கீங்க..சூப்பர்ப்..நானெல்லாம் டிஸ்கவரில மட்டும்தான்.. அது சின்ன ஆட்டுக்குட்டியை எல்லாம் தூக்கிட்டுப் போயிடும் :(

//அதை மறைக்க விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வருவேன். சுமார் மூணு நாலு கிலோமீட்டர் தூரம் இருக்கும் வீட்டுக்கும் ஆசுபத்திரிக்கும்.//

என்ன டீச்சர்? இவ்ளோ ஈஸியா சொல்றீங்க 3,4 Km தான்னு...நான் ஏதோ பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரின்னு நெனச்சேன்..

// இப்போ இதைத் தட்டச்சு செய்யும்போது அம்மாவின் நினைவு ரொம்ப வந்து மனசுலே கனமா இருக்கு. மானிட்டரைப் பார்க்க முடியாமல் கண்ணுலே கண்ணீர் தளும்பி வழியுது. அப்புறமா தொடரலாம் என்ன//

வாசிச்சிட்டுப் போகும் போது எனக்கும் இதே தான். தானா கண் கலங்கிடுது..அனுபவிச்சதை எழுதுற உங்களுக்கு எப்படியிருக்கும்னு புரியுது டீச்சர் :(

said...

"ஊராமூட்டுப் புள்ளேன்ற".. அப்படியே கிராமத்து வாடை... எப்படி இந்த சூழ்நிலைலேர்ந்து ஆஸ்திரேலியா செட்டில்??? ஆச்சரியமா இருக்கு ரொம்ப பழைய பதிவுகளை தேடிப்படிக்கனுமோ...

said...

நடையோ நடை. ஒரே வேகம். படிக்கப் படிக்க கண்ணும் தண்ணியுமா நிக்க வச்சிட்டீங்க. அந்த அழகான அம்மா இப்ப இருக்கக்க் கூடாதா. சட்டுனு போயி சரித்திரத்தையே மாத்திட மாட்டமான்னு இருக்கு.

@ராமலக்ஷ்மி !!! உங்களை மாதிரி பின்னூட்டம் போட முடியலையேன்னு கிளைக்கவலை வேற வருது:)

said...

தமிழ் பிரியன்,
நசரேயன்,
கெக்கேபிக்குணி,
கபீஷ்,
கொத்ஸ்,
அதுசரி,
சின்ன அம்மிணி &
ராப்


வாங்க வாங்க. கூட இருக்கேன்னு சொன்னது மனசுக்குத் தெம்பா இருக்கு.


கொத்ஸ்,

//நாங்க எல்லாம் ரீச்சர்ன்னு சொல்லுவோம்!! :))//

அதுதான் ஏன்னு ஹேமா கேட்டுருந்தாங்க பார்த்தீங்கல்லே?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சின்னக்காவோடு இவ்வளவு பாசமா இருந்ததா நினைவு இல்லைப்பா.

பெரியக்காதான் ரொம்பப் பொறுமைசாலி.

அவுங்க ரெண்டுபேரும் குணாதிசயத்துலே நேர் எதிர்!!!

said...

வாங்க மது.

கவிஞருக்குத் தெரியாத சொல்லாட்சியா? :-))))))

அழாதீங்க மது. இனி எல்லாம் சுகமே:-)

வண்ணதாசன்?

நான் எதாவது படிச்சேனான்னு யோசிக்கிறேன்......

said...

வாங்க ரிஷான்.

பூக்களை நூலில் கோர்த்து அப்படியே சடையில் வச்சுத் தைப்பாங்க. கல்யாணப்பொண்ணுக்கு சடை நீளத்துக்குப் பட்டையா பூக்கள் இருக்குமேப்பா அது.

இப்பெல்லாம் பூக்கடைகளில் மட்டையில் தச்சுக் கிடைக்குது. அதை அப்படியே சடையில் கட்டி விடலாம். அந்தக் காலத்துலே அதெல்லாம் ஏது?

இதே போலத்தான் நடை. ஆட்டோக்கள் இல்லாத காலம். தினமும் ஒரு பத்துப்பதினைஞ்சு கிலோ மீட்டர் நடை இருக்கும். கணக்கே இல்லை.

எவ்வளவு தின்னாலும் உடம்புலே ஒட்டாமக் குச்சியா இருந்ததுக்கு அதுகூட ஒரு காரணமா இருந்துருக்கும்!

said...

வாங்க கிருத்திகா.

ஆஸ்தராலியான்னா கூடப் பரவாயில்லை( இந்தியாவுக்கு மலிவா விமானப் பயணம் கிடைக்கும்) இருப்பது நியூஸிப்பா.

எங்கியோ பிறந்து, எங்கியோ வளர்ந்துன்னு 'நீர்வழிப்படும் புணை' (சரியாச் சொல்லி இருக்கேனா?)போல் வாழ்க்கை கூட்டிக்கிட்டுப் போயிருச்சு.

said...

((((இதிலே பொழுதன்னிக்கும் புள்ளதாச்சி))) அப்ப எல்லாம் அப்படிதான் இருக்கும் போல.....கிணறு,மல்லிகை பூ,வாத்தியார் வீடு இதெல்லாம் படிக்கும் போது நான் பிறந்த ஊருக்கு போகணும்னு ஆச ஆசையாய் இருக்கு டீச்சர்.

said...

'நீர்வழிப்படும் பிணை' தான் சரியோ?

தெரிஞ்சவுங்க சொல்லுங்கப்பா.

said...

ஓமக்குச்சியா இருந்தீங்கன்னு கேள்விப்பட்டேன். .. உங்ககிட்ட கேக்கனுன்னு இருந்தேன் ..நீங்களே சொல்லிட்டீங்க.. :)

said...

//போகாம இருக்கும் போது போகறதுக்கும், போய்க்கிட்டே இருக்கும்போது போகாமல் இருக்கவுமுன்னு ரெண்டு சீட்டு எழுதி வாங்கியாச்சு//

நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கை :-)

டீச்சர் யாரோ கூடவே உட்கார்ந்து கதை சொல்ற மாதிரி இருக்கு....

said...

வாங்க வல்லி.

அனாவசியமா உங்க மனசையெல்லாம் சங்கடப்படுத்திட்டேனோன்னு இருக்குப்பா.

சரித்திரத்தை மாற்றத்தான் நானே சரித்திர டீச்சரா மாறிட்டேன்:-))))

இது எப்படி இருக்கு?

said...

வாங்க சிந்து.

வருசாவருசம் ஊருக்குப் போறீங்கதானே?

ஆனா....மாற்றங்கள் வேகமா வந்துருச்சு. முந்தி இருந்த அந்த உணர்வு இப்பெல்லாம் கொஞ்சம் கம்மிதான்.

said...

வாங்க கயலு.

கேள்விப்பட்டீங்களா?
பட்சி யாரோ? :-))))

said...

வாங்க நான் ஆதவன்.

'நின்னாப் போக, போனால் நிக்க' ன்னு எழுதி இருக்கலாமுன்னு அப்புறம் தோணுச்சு:-)

யோசிக்காம உணர்வுபூர்வமா எழுதுனது இருக்கட்டுமுன்னு விட்டுட்டேன்:-)

நான் அடிப்படியில் ஒரு கதை சொல்லி தாங்க.

ஐயேம் அ ஸ்டோரி டெல்லர்:-)

said...

//சின்னக்காவோடு இவ்வளவு பாசமா இருந்ததா நினைவு இல்லைப்பா.//

நீங்க முன்னர் சொன்ன சம்பவங்களே போதும்:(. அதாஙக் தங்கள் ஈகோவுக்காக உங்க தலையைப் பின்னி விடறேன்னு ஆள் மாற்றி மாற்றி அண்ணாவும் சின்னக்காவும் பிரித்துப் பிரித்துப் பின்னியது:(! நீங்க அத வேடிக்கையா விவரித்திருந்தாலும் மனசு கனத்துப் போனதென்னவோ நிஜம்.

said...

அக்மார்க் துளசி தள எழுத்து..

துளசிக்கென ஒரு தனிமண(ன)ம் இருப்பதில் வியப்பென்ன?

said...

//ரெண்டே நிலைதான். 'போகும்'. 'போகவே போகாது'.//

கனகாம்பரம் பறிக்கிற சாமர்த்தியம்...

ரசிச்சேன்...

said...

ராமலக்ஷ்மி,

மனுசனுக்குப் பொருள்மீது (அது இன்னொரு உயிரோ, அல்லது ஜடப்பொருட்களோ எதுவானாலும் சரி) தன் உரிமையை நிலை நாட்டிக்கும் ஆவேசம் இருக்குல்லே. அதுதான் அன்றையக் காலத்தில் அண்ணனும் அக்காவும் என் 'தலையில்' விளையாடியது:-)

said...

வாங்க அறிவன்.

அக்கா உங்களையும் இங்கே கூட்டிவந்துட்டாங்களா?

தொடர்ந்து வாசிச்சுட்டுச் சொல்லுங்க.

said...

வாங்க பாச மலர்.

மலரைப் பத்தி எழுதுனதும் மலரே வந்தாச்சு:-))))

ரசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

"நீர்வழிப் படும் புணைபோல் ஆருயிர்"
இதுதான் சரி.
சரியா?

said...

// i am a story-teller//

you are a scene stealer also

said...

இன்னா யக்கா
இப்புடி அசத்தலா ஆரம்பிச்சு கடேசியில அழ வச்சுட்டீங்களே.
அழுதது நீங்க மட்டும் தானா.
அழாத யக்கா. கஷ்டமா கீது.


இதுலே பொழுதன்னிக்கும் புள்ளைத்தாய்ச்சி. எனக்கு அப்புறம் கை பழகிப்போச்சுன்னு //
யப்பா நம்ம டீ.ஆர் ஸ்டைல்ல பொளந்து கட்டறீங்க.

ஆனாலும்...........//
நான் ஃபில் பண்றேன்.
ஆனாலும் இல்ல ஆவாக்காட்டியும் பயந்தான்.

said...

வாங்க சிஜி.

ஐயம் தெளிவிச்சதுக்கு நன்றி.

பேராசிரியர் சொன்னதுக்கு அப்புறம் அப்பீல் உண்டா?

இந்தத் திருட்டுக்குத் தண்டனை ஒன்னும் இல்லைதானே? :-)

said...

வாங்க அ.அ.

ஒரு வயசுக் குழந்தை இருக்கு. பின்னே பயம் இல்லாமப்போகுமா? :-))))

said...

//என்னதான் விறுவிறுன்னு வேலையைப் பார்த்தாலும் இருட்டிரும் பூ தைச்சு முடிக்கும்போது. //
அடடா!! அடுத்த நாள் அதே பூவை வச்சுக்க முடியாதா மேடம்??

said...

//ஆரம்பத்துலே தண்ணி எடுக்கும்போதுதான் தேங்காநாரு அப்படியே கையிலே உராய்ஞ்சு உள்ளங்கையெல்லாம் தோலுறிஞ்சு செகசெகன்னு ஆகிப்போச்சு. அக்காதான் அழுதுகிட்டே தேங்காய் எண்ணெய் தேய்ச்சு விட்டு, இனிமே நானே எடுத்துக்கறென்னு சொல்லுச்சு. ஆனா அதுவும் பாவம்தானே எவ்வளோன்னு வேலை செய்யும்?//

இந்த பாகத்துல நீங்க அதிகமா பக்கத்து வீட்டு கதைய சொல்லி இருந்தாலும் இந்த வரிகள்ள உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் இடையிலே இருந்த பாசத்த அழகா சொல்லீடீங்க!!!

said...

வாங்க ஹேமா.

ச்சும்மாத் தலையில் வச்சுக்கும் பூச்சரத்தை எடுத்து பாத்திரத்தில் மூடிவச்சு, இல்லேன்னா ஈரத்துணியில் சுத்திவச்சு மறுநாள் வச்சுக்குவோம். ஆனால் பின்னலில் தைச்சுவிட்டதை ஒன்னும் செய்ய முடியாதுல்லே(-:

பாசம் என்றதெல்லாம் அப்பத் தெரியலைங்க. நம்ம அக்காவுக்கு நாம்தான் உதவணுமுன்னு நினைப்பு.

said...

படிச்சிட்டேன்...ஆனா பின்னூட்டம் போட மாட்டேன்...எனக்கும்...;(

said...

வாங்க கோபி.

பின்னூட்டம் போடமாட்டேன்னு ஒரு பின்னூட்டமா? ;-))))

said...

//கனகாம்பரம், மல்லின்னு பூச்செடிகள் வச்சுருக்காங்க. அங்கே கிணறுகூட இருக்கு. 100 பூவு பத்துகாசுன்னு விப்பாங்க. மல்லி மட்டும் ஒரு சின்ன உழக்குலே அளந்து போடுவாங்க. நாங்கதான் அவுங்களோட மெயின் கஸ்டம்மர். அஞ்சு தலைங்க இருக்கே. அதுவும் மல்லி சீஸன் வந்துருச்சுன்னா.....///

இரெட்டை ஜடை போட்டு அதுல ஜடையில கனகாம்பரம் வச்சுட்டு போவமே...அந்த அழகு இப்ப யாரு கிட்ட இருக்குக்கா... ம்ம்ம்ம்... சில சமயம் அதுல மரிக்கொழுந்து வச்சு கட்டி... ஸ்கூலுக்கு போறப்போ உலக அழகி லெவலுக்கு நம்மை நினச்சுட்டு.. ஆஹா அக்கா பதிவே எழுதலாம் போல இருக்கே... ம்ம்ம்ம்

said...

வாங்க மங்கை.

//ஆஹா அக்கா பதிவே எழுதலாம் போல இருக்கே... ம்ம்ம்ம்//

போல இருக்கேவா? ஊஹூம். சட் புட்டுன்னு எழுத ஆரம்பியுங்க.

said...

அம்மா.....

இந்த தொடரை மூன்றாவது முறையாக வாசிக்கிறேன்.... ஒவ்வொரு முறையும் பின்னூட்டமிட முயன்று ஏதாவது வழியில் தட்டிக்கொண்டே இருக்கும்.....இம்முறை பின்னூடாமிட்டே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.....அருமையான நடையில் ஒவ்வொரு காட்சியும் படமாக விரிகிறது கண் முன்னால். அந்த கால வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆர்வம் ஏற்படுகிறது. இந்த பரபரப்பான வாழ்க்கையில் எதை தேடி ஓடுகிறோம் என்ற எண்ணம் வருகிறது.... ஏதோ ஒரு இனம் புரியா கனம் ஏறிக்கொள்கிறது மனத்தில்..... ஆனாலும் தொடர்ந்து படிக்க மனம் விழைக்கிறது.....சொல்ல மறந்து விட்டேன்... உங்களுக்கு பிடித்த பெயர் தான் என் மகளுக்கு.....ஸ்ரீஜனனி என்ற அஞ்சனா..........