Thursday, November 13, 2008

நரியின் வேஷம் கலைஞ்சுபோச்சு டும் டும் டும்.....

இன்னிக்குக் காலையில் கணினி திறந்ததும் கூகுள் அருளால் முகத்தில் முகம் பார்க்கலாமுன்னு போட்டுருந்துச்சு.

அவுங்க சொல்பேச்சைக் கேட்டு உடனே அதைப் பதிஞ்சுவச்சாச்சு. இப்ப நம்ம பெயருக்கு முன்னால் ஒரு வீடியோ கெமெரா வருது:-))))

பரிசோதிக்கணுமேன்னு நினைச்சப்ப..... நம்ம மயூரேசன் ஒரு பதிவு போட்டுருந்தார். அதுக்குப்பிறகு நானும் அவர்கூடப் பேசி ரிப்பன் கட் பண்ணலாமுன்னு நினைச்சால்.....

ஐயகோ...... நம்ம முகம் மட்டுமே மிரட்டும் விதத்தில் தெரியுது!!!!
அடடா...... அதுவும்......என்ன ஏதுன்னு புரியாம முழிக்கும் விதத்தில்.......

ஆஹா...... வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிடுமோ? இனிமேல் கணினியில் கண் திறப்பது அறவே கூடாது.

மேக்கப், அட்லீஸ்ட் தலையைச் சீவி(?)க்கிட்டாவது வந்து உக்காரணும்.


இன்னும் சரியா செட்டிங் செய்யலைபோல இருக்கு. அவுங்கவுங்க முகமே அவுங்கவுங்களுக்கு :-))))முந்திரிக்கொட்டை போல முந்திக்கிட்டா இப்படித்தான். மயூரேசனும்..... மனக்கலக்கத்தோட இருந்தாராம்.
(நல்லவேளை)

முகம் காமிக்காமல் பேசும் ஆப்ஷனும் இருக்கா? இல்லே இல்லையா?

ஏதானாலும் இனிமே.......

அலங்காரச் சாதனங்கள் விற்பனையை ஏத்திவிடத்தான் கூகுள் ஏற்பாடு செஞ்சுருக்கோன்னு ஒரு சம்சயம்.


பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட்.

37 comments:

said...

எட்டு சதம் எட்டியதற்கு இனிய நல்வாழ்த்துக்கள்!

said...

800ஆ!!

ஓக்கே ஓக்கே!!

இவ கிட்ட சொல்லிடறேன். எங்க ரீச்சர் ரொம்ப தூரத்தில் இல்லைன்னு! :)

said...

என்னையும் உங்களையும் போல அழகுசாதனப் பொருட்களைப் பாவிக்காதோரை அதில் விழ வைக்கத்தான் இந்த முயற்சியை கூகிள் எடுத்துள்ளது. ;)

நிசமாகவே நல்லகாலம் காலையில் என்ட முகத்த நீங்க பாக்கேல. நித்திரையால் எழும்பி அப்படியே இருந்தேன்.

said...

ஆஹா, 800ஆஆஆஆஆஆஆ! வாழ்த்துகள்!

நமக்கு சான்ஸே இல்லை!

said...

800 பதிவுகளா!!!! வாழ்த்துகள் டீச்சர்.இப்ப தான் ஜிமெயில் வீடியோ சேட் டவுன்லோடு பண்ணினேன்...யாராவது பயப்படுறாங்களானு பார்க்கனும்!!!!!!!

said...

800 ஆவது பதிவா?
இனிய வாழ்த்துக்கள் டீச்சர் :)

அதுசரி...நான் இனிமேத்தான் டவுன்லோட் பண்ணனும்..நல்லவேளை சொல்லிட்டிங்க டீச்சர்..இல்லேன்னா என்னைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருப்பாங்களோ? :)

said...

ஏஏஏ அப்பா! 800!!!!

said...

எயிட் ஹண்ட்ரட் எட்டிய ஏஞ்சலே வாழிவாழி!!

said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
800 ஆவது பதிவா?
இனிய வாழ்த்துக்கள் டீச்சர் :)

அதுசரி...நான் இனிமேத்தான் டவுன்லோட் பண்ணனும்..நல்லவேளை சொல்லிட்டிங்க டீச்சர்..இல்லேன்னா என்னைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருப்பாங்களோ? :)

11/13/2008 6:20 PM
<<<>>>>இளவரசரே இப்படி சொன்னா நான் என்னப்பா பண்றது?:)

Anonymous said...

எண்ணூறா, சான்ஸே இல்லை போட்டிக்கு, வாழ்த்துக்கள்

said...

800-ஆ..

அதுக்குள்ளயா..

நல்லாயிருங்க டீச்சர்..

நல்லாயிருங்க..

முருகன் அருளால 800, 8000 ஆகி, 80000 ஆகவும் வாழ்த்துகிறேன்..

நானும் இன்னும் சோதிச்சுப் பார்க்கலை.. அநேகமா அது நீங்களாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. எதுக்கும் பக்கத்து ஆஸ்பத்திரில ஒரு பெட் ரிசர்வ் செஞ்சு வைச்சுக்குங்க..

said...

என்னது 800 தானா?
திருமப எண்ணிப்பாருங்க- தவறுதலாக இருக்கப்போகிறது.

said...

800 க்கு வாழ்த்துக்கள்.
:)

said...

800-க்கு இனிய வாழ்த்துகள் அம்மா. மேக்கப் அப் போட்டுக்கிற அன்னிக்கு உங்கள கூப்பிடறேன் :)

said...

அடேயப்பா 800 பதிவா!!!!?
நான் எல்லாம் ஒன்னு எழுதுவதுக்கே முழி பிதுங்குது.
ரெம்ப பெரிய விஷயம், வாழ்த்துக்கள்

said...

பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட்.

சீக்கிரம் 1000 பதிவு கண்ட டீச்சரின் கணவர் என்ற புகழ் கோபால் சாருக்கு கிடைக்கட்டும்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றிப்பா.

said...

வாங்க கொத்ஸ்.


//இவ கிட்ட சொல்லிடறேன்.//

?????????

தூரமில்லைன்னு(ம்) சொல்லுங்க:-)

said...

வாங்க மயூரேசன்.

இன்னும் தெளிவாகலைன்னு நினைக்கிறேன்:-)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

எல்லாம் சிறுசேமிப்புதான். சேர்ந்துரும் அதுவாவே:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க சிந்து.

நன்றி.

ஆமாம், என்னைப் பயப்படுத்தத்தான் காலையில் வந்து போனீங்களா?

நான் கோகியுடன் தோட்டத்துலே இருந்தேன்

said...

வாங்க ரிஷான்.

நன்றிப்பா.

கணினி பக்கத்துலே ஒரு கண்ணாடியும் வச்சுக்கணும்:-)

said...

வாங்க ஜீவன்.

நன்றி.
அதென்ன அப்படி ஒரு 'ஏ'காரம்:-)))

said...

வாங்க ஷைலூ.

எயிட்டுக்கு ஏஞ்சலா?

நம்மை, இங்கே வீட்டுலே துர்தேவதைன்னுதான் எப்பவும் புகழ்வாங்க:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

அப்படியெல்லாம் சொல்லப்பிடாது.

எழுதுங்க எழுதுங்க. நீங்களும் எழுதிக்கிட்டே இருங்க என்னைப்போல ரிட்டயர் ஆன பிறகு:-)

said...

வாங்க உண்மைத்தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

எண்ணிக்கையைப் பார்த்துப் பயப்படலாமா?

உங்க பதிவையே பிச்சுப்போட்டா ஒன்னு பத்தாகாதா?

ஊருக்கே ஒரே ஒரு ஆஸ்பத்திரி. அதுலே என்னன்னு ரிஸர்வ் செய்யறது.

said...

வாங்க குமார்.

எண்(ண)ணித் தெரிவதில்லை......

ப்ளொக்ஸ்பாட் சொல்வதை நம்பும் அப்பாவி நான்:-)

said...

வாங்க கயலு.

நன்றிப்பா.

said...

வாங்க கவிநயா.

நன்றி.

நீங்க கூப்புடும் அன்னிக்கி நான் எந்த 'கதி'யில் இருப்பேனோ? :-)

said...

வாங்க நசரேயன்.

நன்றி. எல்லாம் இந்த நாலுவருசத்துலே கொட்டுன 'குப்பை'

said...

வாங்க குடுகுடுப்பை.

//.....கோபால் சாருக்கு....//

'வரப்புயர' ஸ்டைலா?

நன்றிப்பா.

said...

வாழ்த்துக்கள் டீச்சர் ;))

said...

நன்றி கோபி.

said...

//பி.கு: இது 800 வது பதிவுன்னு சொல்லுது, ப்லொக்ஸ்பாட்.//

யப்பா! மேடம் கண்ணை கட்டுது..

நான் என்னோட 100 வது பதிவு போட்ட போது..நீங்க அதுக்குள்ளயா!!! னு கேட்டு இருந்தீங்க..சரி ரொம்ப ஸ்பீடா போகிறோம் போலன்னு நான் குறைச்சுகிட்டேன், அதே போல இனிமே எழுதினா ஓரளவிற்காவது உருப்படியான பதிவு எழுதணும் என்று முடிவு செய்தேன். அதை ஓரளவிற்கு சுமாரா பின்பற்றியும் வருகிறேன்.

உங்களின் 800 வது பதிவிற்கு வாழ்த்த வயதும் இல்லை பதிவுலகில் அனுபவமும் இல்லை. எனவே என்ன சொல்வதென்று தெரியவில்லை. நாலு வார்த்தை என்னால முடிஞ்சது "சூப்பர்"

உங்களை போன்ற மிக மிக மிக மூத்த பதிவர் (மேடம் இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இப்பெல்லாம் 5 மாதம் பதிவிட்டாலே மூத்த பதிவர்னு சொல்லிக்கிறாங்க அல்லது சொல்லப்படுறாங்க) எங்களை போன்ற புதிய பதிவர்களை அடிக்கடி பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்த வேண்டும் கருத்துக்கள் கூற வேண்டும், தவறு இருந்தால் சுட்டி காட்ட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

said...

வாங்க கிரி.

எட்டு நூறுலே எத்தனை தேறும் என்பதுதான் பேச்சு.

நீங்க எல்லாம் சொன்னால்தான் உண்டு.

மூத்த இளைய ன்னு எல்லாம் ஒன்னுமில்லைப்பா.

எல்லாம் அக்னிக்குஞ்சுங்க.

said...

அம்மாடி ... எண்ண்ண்ண்ண்ணூறா? எப்டிங்க...
அப்ப ஆயிரத்தை மொதல்ல தொட்ட பதிவரா ஆக வாழ்த்துக்கள்.

அட்வான்ஸா ... ஆயிரம் பதிவு கண்ட டீச்சர் .. எல்லோரும் கை தட்டிக்கிட்டே சத்தமா சொல்லுங்கப்பா.. வாழி .. வாழியவே!

said...

வாங்க தருமி.

அரியணை வீட்டு இறங்குமுன் வாழ்த்தியதுக்கு நன்றி.

தகதகன்னு இருக்கு:-)