பிடிச்ச விஷயம், பிடிச்ச பொஸ்தகம்னு நாலு சொல்லணுமாக்கும். எனக்குப் பிடிச்ச விஷயம் கிட்டத்தட்டநாலு லட்சத்துக்கு இருக்கறப்ப எந்த நாலைச் சொல்லுவேன்?
பிடிச்ச மிருகங்களிலே ஆரம்பிக்கவா? ஐய்யோ.... எல்லா மிருகங்களுமே எனக்குப் பிடிக்கும். அதுலேயும்குழந்தைங்க ( மிருகக்குழந்தைங்க)ன்னா, அடடாடா இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே நிப்பேன்( ஆனாயாராவது அப்பப்ப காஃபி, டீ, சாப்பாடுன்னு டயத்துக்குக் கொடுத்துரணும். அட, எனக்குத்தாங்க)
1. யானை
2. பூனை
3. நாய்
4. குரங்கு.
பிடிச்ச பூ
1. மல்லிகை
2. ரோஜா
3. தாமரை ( லட்சுமி இருக்குமாம்லெ?)
4. மேலெ சொன்னதைத்தவிர மத்த எல்லாப்பூவும்.
பிடிச்ச ஊர்
1. வத்தலகுண்டு
2. கிறைஸ்ட்சர்ச்
3. மரூக்கிடோர்
4. மில்ஃபோர்ட் சவுண்ட்
பிடிச்ச காய்கள்
1. புடலை
2. வெண்டை
3. பூசணி( வெள்ளை)
4.பீன்ஸ்
பிடிச்ச பண்டிகைகள்
1. ஸ்ரீ ராமநவமி( பிரசாதம் செய்யக் கஷ்டப்படவே வேணாம்!)
2. கிருஷ்ண ஜெயந்தி
3. பொங்கல் பண்டிகை
4. வைகுண்ட ஏகாதசி ( சமைக்கவே வேணாம்)
பிடிச்ச இடங்கள்
1. கடற்கரை ( கப்பல் கண்ணுலே பட்டா இன்னும் விசேஷம்)
2. கோயில் ( ரொம்பக் கூட்டமில்லாத பழைய கோயில்களா இருக்கணும்)
3. தென்னந்தோப்பு ( உக்கார ஒரு கயித்துக்கட்டில் கண்டிப்பா இருக்கணும்)
4. என்னோட கணினி இருக்கற ரூம்.
பிடிச்ச பழங்கள்
1. பலாப்பழம்
2. சப்போட்டா
3. மாம்பழம்
4. கொய்யாப்பழம்
பிடிச்ச எழுத்தாளர்
1. தி.ஜா.ரா
2. லா.ச.ரா
3. நரசய்யா
4. உமா கல்யாணி
இன்னும் பிடிச்சவுங்கன்னு ஏராளமா இருக்காங்க. யாரைச் சொல்ல, யாரை விட?
பிடிச்ச இனிப்பு வகைகள் ( தின்னிப் பண்டார அக்கா இதைச் சொல்லலைன்னா எப்படி?)
1. ஜாங்கிரி
2. அல்வா( யாரும் கொடுத்துறாதீங்க.வேணுமுன்னா நானே வாங்கிப்பேன்)
3. அதிரசம்
4. பொருள்விளங்கா உருண்டை ( அந்தக் காலத்துச் சமாச்சாரம்)
பிடிச்ச வேலை
1. பதிவு எழுதறது ( இப்பெல்லாம் இது பொழுதுபோக்குலே இருந்து உத்தியோகமா மாறிப்போச்சு!)
2. தையல் ( ஒரு காலத்துலே தையல் மெஷினே கதின்னு இருந்துருக்கேன்)
3. பசங்களுக்கு( நம்ம பூனைங்கதான்) பேன் பாக்கறது!
4. வீட்டுக்குள்ளே தோட்டவேலை
பிடிச்ச நடிகர்.
1. கமல்
2. கமல்
3. கமல்
4. கமல்
பிடிச்ச நடிகைகள்
1. பானுமதியம்மா
2. சாவித்திரி
3. தேவிகா
4.கண்ணாம்பா( எங்க அம்மாவோட முகச்சாயல் இருக்கு இவுங்ககிட்டே)அடடா....எல்லாரும் மேலே போயிட்டவங்கதான். போகாதவங்க லிஸ்ட்டு ஒண்ணு தந்துரலாமா?
1. மனோரமா
2. கோவை சரளா
3. பத்மினி
4. ஊர்வசி
பழையபடி அந்தக்கால லிஸ்ட்டாப் போயிருச்சே. சரி, சமீபத்திய நடிகைகளைப் பார்க்கலாம்
1. மீரா ஜாஸ்மின்
2. ஜோதிகா
3.????
4.????
ஒண்ணும் தோணலைங்க.
புடிச்ச இசைக் கலைஞர்கள்.
1. யேசுதாஸ்
2. எம். எஸ். அம்மா
3. காயத்திரி (வீணை)
4. ஜாகீர் ஹுஸைன் ( தப்லா)இன்னும் எக்கச்சக்கமானவங்க இருக்காங்க. லிஸ்ட்டு ரொம்பப் பெரூசாப் போயிரும் ஆமா...
சினிமாப்பாட்டு பாடறவங்க.
சித்ரா ( தமிழ் & மலையாளம்)
ஆஷா போஸ்லே (ஹிந்தி மட்டும்)
தமிழைக் கொலை செய்யாமப் பாடற எல்லோரையுமே பிடிச்சிருக்கு.
பிடிக்காத நாலுபேர்.
1. முன்னாலெ ஒண்ணு பின்னலே வேற ஒண்ணுமா பேசித்திரியுறவங்க.
2. மனைவியையும், குழந்தையையும் அடிக்கறவங்க.
3. தெருவுலே அசிங்கம் செய்யறவங்க.
4. பெண்களையும், குழந்தைகளையும் பாலியல்ரீதியா துன்பப்படுத்தறவங்க.
(பாலியல் வன்முறை)இன்னொண்ணையும் சேர்த்துக்கறேனே ப்ளீஸ்....
5. மிருகங்களை அடிச்சுத் துன்புறுத்தறவங்க.
ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன், இந்த விளையாட்டை ஆரம்பிச்சது யாரு? நாலுக்குள்ளெ அடங்கற உலகமா இது?
யாரையும் விளையாட்டுலெ இழுக்கலை. உங்களுக்கு ஆசை இருந்தா நீங்களே வந்து சேர்ந்துக்குங்க.
அடப் போங்கப்பா. நாலுபேர் நாலு சொல்றதுக்குள்ளே இங்கனயெ இதை நிப்பாட்டிக்கறேன்.
Monday, March 13, 2006
நவ்வாலு
Posted by துளசி கோபால் at 3/13/2006 05:26:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
எங்கள் தானைத்தலைவி, தங்கத்தாரகை அஸினை விட்ட அக்காவை வன்மையாக அகில உலக அஸின் ரசிகர் மன்ற ரஷ்ய வட்டத்தலைவரென்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
பொருள்விளங்கா உருண்டை - எங்க வீட்டுலேயும் பண்ணுவாங்க. நிஜமாவே உள்ள என்னதான் இருக்கும்?
அதான ராம்ஸ், இவங்க என்ன அஸினை விட்டுட்டாங்க..ரொம்ப அநியாயம்'பா :-)
துளசியக்கா,
தமிழ்மண கலைஞானி கமல் பேரவை சார்பில் நன்றி!நன்றி!நன்றி! ஹி.ஹி
தம்பி ராம்ஸ்,
அதான் ????? இடத்துலெ அவுங்களுக்குப் பிடிச்ச அஸினோ, கஸினோ நிறப்பிக்க வேண்டியதுதானே?
பொருள் விளங்கா உருண்டை பேருலேயே இருக்கேப்பா, அதுக்குள்ளே என்ன பொருள் இருக்குன்றதே தெரியாதுன்னு?:-)))
ஆனா, ஒரு உருண்டையை மெதுவாக் கடிச்சுத் திங்கவே ஒரு மணி நேரமாயிருமில்லெ? ச்சும்மா கல்லு போல
திம்முன்னு இருக்கும். நடுநடுவிலே நிலக்கடலை, முந்திரிப்பருப்பெல்லாம் வரும்.
தருமி,
என்ன.... நீங்க அசினோட விசிறியா? ஹூம்.... காலம்.
அப்புறமா டீச்சருக்குப் ஃபோன் போட்டு பேசணும்.:-)))
ஜோ,
இந்தக் கலைஞனோட அருமை ஜனங்களுக்குத் தெரியலையேப்பா.....
எனக்கு பிடிச்ச நாலு பதிவு,
துளசிதளம், துளசிதளம்,துளசிதளம், துளசிதளம்..
போறுமா..
நீங்க சொல்ல கூச்சப்பட்டதை நானே சொல்லிட்டேன்..
அதுசரி ஜோ..
அதென்ன தமிழ்மண கலைஞானி கமல் பேரவை?
எங்கருக்கு அது? ஏன்னா மெம்பராலாமேன்னுதான்..:-)
டீச்சரும் கடைசீல மாட்டிக்கிட்டாங்க....
அசினைச் சொல்லாட்டி என்ன டீச்சர். ஜோதிகாவைச் சொல்லீருக்கீங்களே...அது போதும். :-)
கண்ணாம்பாவை எனக்கும் பிடிக்கும். பாத்தாலே அம்மா ஃபீலிங் இருக்குங்குறது உண்மைதான்.
பொருள்விளங்கா உருண்டை எங்க வீட்டுல செய்ய மாட்டாங்க...ஆனா அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ்ல கெடைக்கும். கடுக்கு மொடுக்குன்னு இருந்தாலும் நல்லாயிருக்கும். வெச்சி வெச்சித் திங்கலாம். நல்லதுங்கூட. பாசிப்பயறு, நெய், கொஞ்சம் வெல்லம் போட்டுச் செஞ்சதால...வயித்துக்கோ ஒடம்புக்கோ கெடுதலே பண்ணாதது.
ஸ்ரீராம்நவமிக்கு என்ன பிரசாதம் செய்வாங்க?
புடலங்காய் எனக்கும் பிடிக்கும். பருப்பு போட்ட கூட்டு ரொம்பவே பிடிக்கும். அம்ம ரொம்ப நல்லாப் பண்ணுவாங்க.
டிபிஆர் ஜோ,
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? சரி சரி, பெரியவுங்க சொன்னா எதாவது 'பொருள்' இல்லாம இருக்குமா?
மெம்பர்ஷிப் காசை உடனே எனக்கு அனுப்பி வையுங்க. இதையெல்லாம் நம்ம 'ஜோ'கிட்டே என்ன கேக்கறது?
நாந்தான் 'பொருளாளர்' ஆமாம், சொல்லிட்டேன்:-)))))
ராகவன்,
ஜோதிகா ரசிகர்கள் நிறைய இருக்காங்களா நம்ம கூட்டத்துலே? அப்படீன்னா அவுங்களுக்கு ஒரு 'நியூஸ்' நம்ம
பயணக்கதையிலே வரப்போகுது!
அப்பாடா, உங்களுக்காவது இந்தப் பொருள் ( பொரி)விளங்கா உருண்டை தெரிஞ்சிருக்கே. க்ராண்ட் ஸ்வீட்லே கிடைக்குதா?
தெரியாமப் போச்சே(-:
ஸ்ரீராம நவமி பிரசாதம் ரொம்ப ஈஸி.
அதை இங்கே பாருங்க
ஸ்ரீராமநவமி
நானும் இந்த நாலு எழுதாம பாக்கி வ்ச்சிக்கிட்டு இருந்தேன், இதோ எழுதிபுடறேன்!
// மனைவியையும், குழந்தையையும் அடிக்கறவங்க//
//பெண்களையும், குழந்தைகளையும் பாலியல்ரீதியா துன்பப்படுத்தறவங்க.
(பாலியல் வன்முறை)இன்னொண்ணையும் சேர்த்துக்கறேனே ப்ளீஸ்....
5. மிருகங்களை அடிச்சுத் துன்புறுத்தறவங்க.//
எல்லோரையும் கண்டு கொண்டீர்கள்; ஆண்களை மட்டும் விட்டுவிட்டீர்கள். எங்களைத் துன்புறுத்தினால் பரவாயில்லையா ? ஆண்பாவம் பொல்லாததுங்கோ :))
ஏங்க மணியன்,
இதுவரைக்கும் நம்ம வலைஞர்கூட்டத்துலே யாருமே(!) இதைக் கண்டுக்கலையா?
பாவங்க, ஆண்கள். அவுங்களை 'வதை'க்கிறவங்களையும் புடிக்காதவுங்க லிஸ்ட்டுலே சேர்த்துக்கிட்டாப் போச்சு,
இதுக்கு ஏங்க நீங்க கண் கலங்குறீங்க? போது வுடுங்க!
அக்கா,
பண்டிகைகள்ள தீபாவளியயும், நடிகர்களில் ரஜினியையும் வுட்டுடீங்களே :(
கார்த்திக்,
நீங்க ரஜினி விசிறியா?
தீபாவளி இப்பெல்லாம் கொஞ்சம் அலுத்துப் போச்சுப்பா. ஒரு நாளு, ரெண்டு நாளு கொண்டாடுனா நல்லா இருக்கும்.
இங்கெ போன தீபாவளி 10 வெவ்வேற நாளுலே கொண்டாடுப்படி ஆயிருச்சு. ஒரு பண்டிகைக்குப் பத்துப் பொடவைன்றது கொஞ்சம்
டென் மச்சா ஆயிருச்சு. அதான்.....
Post a Comment