Saturday, March 11, 2006

கிருஷ்ணா நீ பேகனே......


பயண விவரம் பகுதி 2


"எவ்வளோ நாள் ஆச்சு, இந்த மாதிரி தினப்பத்திரிக்கைகளைப் பார்த்து?

என்னதான் 'நெட்'லே பார்த்தாலும் இதுமாதிரி வராதுல்லே? ஹிந்து படிச்சு வருசக்கணக்காச்சு. ஆனா மாறுதல் ஒண்ணும் இல்லை. பேப்பர் மெலிஞ்சுருக்கு,அவ்வளோதான்."

"அதுவும் இந்த தினமலர் பத்திரிக்கையை இப்பத்தான் மொதமொதல்லே கண்ணாலே பாக்கறேன்."

"அது என்ன தினமலர் வேணுமுன்னு வாங்கிட்டே?"

"எல்லாம் ஒரு அபிமானம்தான். தினம் ஒரு தமிழ் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தறாங்களே!"

இப்படியெல்லாம் அளந்துக்கிட்டே பேப்பரைத் தரையில் பரத்திக்கிட்டு 'சென்னையில் இன்று' நிகழ்ச்சிகளைப்பார்க்கறேன்.

"அடடே, நம்ம இசைக்கல்லூரியிலே பொன்விழா நடக்குதாம். யேசுதாஸ் பாடறாராம். அனைவரும் வருகன்னுபோட்டுருக்கு, போலாமா? காலையிலே பத்தரை முதல் பன்னெண்டுவரையாம்."

"எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதை முடிச்சுக்கிட்டுப் போலாம்."

போனவேலை முடிஞ்சு, இசைக் கல்லூரிக்குள்ளே வாழ்க்கையிலேயே முதல்முறையா நுழையறோம்.பழங்காலத்துக் கட்டிடம். பாட்டுச்சத்தம் மெலிசாக் கேக்குது. அதைத் தொடர்ந்துகிட்டே ஹாலுக்குப்போயிட்டோம். வாசலில் அழகான கோலம் போட்டு, அதுக்கு வர்ணப்பொடி தூவி ரங்கோலி அட்டகாசமா இருக்கு.நாலைஞ்சு பெண்கள் பட்டுடுத்திச் சந்தனமும், குங்குமமும் கொடுத்து வரவேற்கிறாங்க.


கனகம்பீரமா பாடிக்கிட்டு இருக்கார் நம்ம யேசுதாஸ். அவர் முன்னாலே ஒரு மடிக்கணினி. பக்க வாத்தியக்காரர்கள் சூழ்ந்திருக்கும், அலங்காரமில்லாத சாதாரண மேடை. கீழே ஜமக்காளம் விரிப்பு. இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிறைந்திருக்காங்க. எல்லாம்இளவயசுப் பசங்க. பெண்கள் எல்லாம் ஜிலுஜிலுன்னு பட்டுலே ஜொலிச்சாங்கன்னா, ஆண்கள் எல்லாம் ஜிப்பா! பாக்கவே ரம்யமாஇருந்துச்சு.


இசைக்கல்லூரியின் பொன்விழா ஆண்டுக்காக 25 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். அதுலே இதுதான் கடைசி நிகழ்ச்சியாம்.அரங்கத்துலே கொஞ்சம் போல நாற்காலிகள் போட்டு வச்சிருந்தாங்க. மாணவர் அல்லாதவர்கள்( பொது மக்கள்னு சொல்லலாம்) உட்கார்ந்து இசையை ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இடமா முக்கியம்? பாட்டுக் கேட்டாப் போதாதான்னு ஒரு ஓரமாநின்னுக்கிட்டு இருந்தோம். யாரோ ஒரு மாணவர்போல, ரெண்டு நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டு நம்மை உக்காரச் சொன்னார்.யார் பெத்த பிள்ளையோ? நல்லா இருக்கணும். கொஞ்ச நேரத்துலே ரெண்டு பார்வையிழந்த இளம்பெண்கள் அங்கேவந்து சேர்ந்தாங்க. அவரே இன்னும் சில நாற்காலிகளைக் கொண்டுவந்து கதவருகிலே போட்டு உதவினார்.


ஒரு பாட்டு முடிஞ்சு, அடுத்த பாட்டா'அதிசய ராகம்'ன்னு ஆரம்பிச்சாரோ இல்லையோ, மாணவர்கூட்டத்துலே இருந்து அபார வரவேற்பு. அடுத்தடுத்து பாட்டுங்க பாடிக்கிட்டே இருக்கார். நாங்கெல்லாம் அப்படியே 'தேன் குடிச்ச நரி(!)' போலஒரு மயக்கத்துலே உக்கார்ந்திருக்கோம். அப்ப நிகழ்ச்சி அமைப்புக்கு உதவும் ரெண்டுபேர்( அதான் ஒரு பேட்ஜ் குத்திக்கிட்டுஇருந்தாங்கல்லே!) பச்சை பார்டர் போட்ட வெண்பட்டுச்சேலையில் இருந்த ஒரு அம்மாவைக் கூட்டிட்டுவந்து முன்பக்கமாமேடைக்கருகில் உக்காரவச்சாங்க. (பாதி மயங்கிய நிலையிலும் எனக்குப் பட்டெல்லாம் 'பட்'டுன்னு தெரிஞ்சிரும்,ஆமா) எங்கியோ பார்த்த முகம். யாருன்னு புரிபடலை. மணி பன்னெண்டரை ஆயிருச்சு. பரிசுப் பொருட்கள், பொன்னாடைகள் எல்லாம் எடுத்துக்கிட்டு நிர்வாகிகள் மேடைப்பக்கம் வந்தவுடனே, அடுத்த பாட்டு ஆரம்பிக்காம இருந்தார் யேசுதாஸ்.


சொற்பொழிவுகள் ஆரம்பமாச்சு, பி.பி.ஸ்ரீநிவாஸ் சுருக்கமாப் பேசுனார். அப்படியே இன்னும் சில பெருந்தலைகளும்.யேசுதாஸ் பேசும்போது அவருடைய பக்க வாத்தியக்காரர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து புகழ்ந்துபேசினார்.அவர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தினார்கள். அவருடைய இன்றைய நிகழ்ச்சிக்காகவே ஸ்பெஷலாவந்திருந்த ஃப்ரெண்ட்ன்னு சொல்லி, அந்தப் பச்சை பார்டர் அம்மாவைச்சுட்டி மேடைக்கருகிலே கூப்புட்டார்.அவுங்களை ரெண்டு வார்த்தை பேசச் சொன்னார்.


அந்த அம்மாவும், மைக்கைக் கையிலே வாங்கிக்கிட்டு,'நலம் தானா?'ன்னு கேட்டாங்க. அட! நம்ம நாட்டியப்பேரொளிபத்மினி! கைதட்டுனதுலே எங்க கையெல்லாம் அப்படியே சிவந்து போச்சுங்க. மொதநாள் ராத்திரிதான் அமெரிக்காவுலே இருந்து வரமுடிஞ்சதாம். களைப்பாத்தான் இருந்தாங்க. பாவம், வயசாச்சுல்லே? நகைச்சுவையாப் பேசுனாங்க.அன்னைக்குத்தான் யேசுதாஸ் அவர்களின் திருமண நாளாம். அவருடைய மனைவியும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாங்க.கரகோஷமே கோஷம்...


இதெல்லாம் முடிஞ்சு, மறுபடி பாட ஆரம்பிச்சுப் பாடிக்கிட்டு இருந்தார். 'கிருஷ்ணா நீ பேகனே' பாட ஆரம்பிச்சாரோ இல்லையோ,நாட்டியப்பேரொளி எழுந்து நாட்டியமாட ஆரம்பிச்சுட்டாங்க. ஐய்யோ, எனக்குப் பாக்கியம்தான் போங்க. ரொம்ப இயல்பான,ஆரவாரமில்லாத அலங்காரமும், அபிநயமும், அதுக்கேத்த மாதிரி 'தேனாபிஷேகம் செஞ்சு கிடைச்ச குரல்'ன்னு சொல்வாங்க பாருங்க,அப்பேர்ப்பட்ட குரலில் சங்கீதமும் சேர்ந்து தேவலோகத்துலெ இருக்கறேன். ( அப்ப நான் இருந்த நிலைமையைச் சரியா வர்ணனைசெய்யத் தெரியலைங்க. மன்னிச்சுடுங்க)


பாட்டு நின்னப்பத்தான் மணியைப் பாக்கறேன், ரெண்டு! மாணவர்கள் கூட்டமெல்லாம் யேசுதாஸோடக் காலைத் தொட்டுக்கும்புடறாங்க.

வெளிவராந்தாவிலே வந்து உக்கார்ந்த பத்மினியம்மாகிட்டே ஆட்டொகிராஃப் வாங்க மாணவிகள் கூட்டம்மொய்க்குது. நாங்களும் எழுந்து பிரபா யேசுதாஸ் கிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பினோம். அப்பத்தான் வெளிப்பக்கமாக் கண்ணை ஓட்டறேன். கட்டிடத்தை ஒட்டி பெரிய ஆறு ஓடுது. நிறைய மரங்கள். பசுமையா இருக்கு. பழங்காலக் கட்டிடமாச்சா,பெரிய பெரிய ஜன்னல்கள். பாட்டுக் கத்துக்கத் தோதான சூழ்நிலைதான். இது இருக்கற இடம் நம்ம சிங்காரச் சென்னையான்னு கூட நம்பமுடியலை.


வெளியே வந்து பார்த்தா,ச்சுள்'ன்னு வெய்யில். பசி வேற. சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அருணாவோட வீட்டுக்குப்போகலாம். அவுங்க வீட்டுலே இருப்பாங்களான்னு கேட்டுக்கலாமுன்னு அவுங்களுக்கு ஃபோனைப் போட்டேன்.வீட்டு விலாசம் சொல்லுங்க, ஒருமணிநேரத்துலே வர்ரோமுன்னு சொல்லலாமுன்னா, இப்ப நாங்க எங்கெருந்துபேசறோமுன்னு அவுங்க கேட்டாங்க. இசைக்கல்லூரி வாசலில் நிக்கறொமுன்னு சொன்னதும், அசையாம அங்கேயே நிக்கணுமுன்னு ஒரே போடாப் போட்டுட்டாங்க.


ரெண்டே நிமிஷம்தாங்க. 'வாங்க துளசி'ன்னு குரல் கேட்டுத் திரும்புனா, 'அருணா'! அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்,ச்சுடச்சுட இட்டிலியும், காஃபியும்! தொட்டுக்கச் சட்டினி அரைக்கறேன்னு ஆரம்பிச்சாங்க. தேங்காய் வேணாங்க.மிளகாய்ப்பொடி இருக்கான்னு தெரியாத்தனமாக் கேட்டுட்டேன். இட்லிமொளகாய்ப்பொடி இல்லாத தென்னிந்திய வீடு இருக்கான்னு கேட்டுட்டு எடுத்துவச்சாங்க. இப்ப அவுங்க வீட்டுலே எந்த ஜாடியிலே அது இருக்குன்னு எனக்குத் தெரியுமே:-)))))


அன்னிக்குப் பூராவும் அந்தப் பாட்டும், நடனமும் மனசைவிட்டுப் போகாம சுத்திக்கிட்டே இருந்துச்சுங்க. ஏங்க, 'கொடுப்பினை'ன்னு சொல்றாங்களே, அது இதுதானா?


பி.கு: அன்னைக்கு எடுத்த படங்கள் கோபாலோட மடிக்கணினியிலே இருக்கு. அப்புறமா இங்கே போடறேன். சரியா? அதுவரைக்கும் 'பழங்களைப் பார்க்கலாமா?'

42 comments:

said...

துளசியக்கா,
என்னால உங்க இடத்துல இருந்து ஃபீல் பண்ண முடியுது. ரொம்ப நல்ல அனுபவமா இருந்துருக்கும்.

மேலும் பயண அனுபங்களை எதிர் நோக்கும்...

said...

புள்ளையார் சுழிக்கு நன்றி கார்த்திக்

said...

குடுத்து வச்சவங்க அக்கா நீங்க. எனக்கு ஜேசுதாஸ் குரல் ரொம்ப பிடிக்கும் அவரோட செமிக்ளாச்சிகல் பாட்டுகளைக் கேக்கிறதுன்னா வேற ஒன்னுமே வேணாம். அதோட நாட்டியப் பேரொளியோட அபிநயமுமா? ரொம்ப நல்லா இருந்திருக்குமே. ஹும். கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு. சீக்கிரம் படங்களையும் எடுத்துப் போடுங்க. படம் பார்த்தாவது திருப்திப் பட்டுக்கறேன்.

said...

குமரன்,

மாமா ஊர்லே இருந்து வரட்டும். படங்களைப் போட்டுரலாம்.

said...

பாருங்க துளசி இந்த அநியாயத்தை. நாங்க உள்ளூர்ல இருந்துக்கிட்டு அனுபவிக்க முடியாததை நீங்க கடல் கடந்து வந்து அனுபவிச்சிருக்கீங்க.

ஹூம் பொறாமையா இருக்கு.

ஆனா அத அப்படியே காமெராவுல புடிச்சா மாதிரி நீங்க எழுதின ஸ்டைல் இருக்கே..

சூப்பர்ங்க..

said...

என்னங்க டிபிஆர் ஜோ,

அதான் 'கொடுப்பனை' ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

said...

ஆகா! எப்பேற்பட்ட நிகழ்ச்சி. யேசுதாஸ் பாட...அதுக்கு பத்மினி ஆட.....சென்னைக்குப் போனா பேப்பர்ல இப்பிடி நெறைய பாப்பேன். ஆனா போய்ப் பாக்க மாட்டேன். இனிமே ஒருகை பாத்துற வேண்டியதுதான்.

அதிசயராகத்தை மேடையில் பாடினாரா யேசுதாஸ்....அவர் பாடிய அதியற்புதமான பாடல்களில் அது சிறந்தது என்றால் மிகையில்லை.

பத்மினியின் நடனத்தில் ஆர்ப்பாட்டத்தை விட எளிமையான அசைவுகள் இருக்கும். அதுதான் அவருடைய சிறப்பு. நேருல பாக்கக் கொடுத்து வெச்சவங்க நீங்க......

(பொடி என்ன கலர்ல இருந்தது....ஏன்னா பல நெறங்கள்ள பாத்திருக்கேன். வெளிறிய, சிவந்த, எள் போட்டுக் கருந்த, கருவேப்பிலை போட்டுப் பசந்த....இப்பிடி பல நெறங்கள். நல்லெண்ணதான ஊத்திக்கிட்டீங்க?)

said...

ராகவன்,

ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம் போல.

இந்தமாதிரி இன்னும் சில அனுபவங்கள் கிடைச்சது. நீங்களும் வுட்டுராதீங்க.

பொடி நல்ல ஆரஞ்சுச்சிகப்புலேதான் இருந்துச்சு. 'இதயம்'நல்லெண்ணெய்தான். இல்லே அருணா?

said...

யக்கோவ்.. உங்களை டாக்கியிருக்கேன் இங்கே

said...

இசை மழையில் நனைந்து
இதயம் நல்லெண்ணெயோடு
இட்லியில் மிளகாய் பொடி


"ஏங்க, 'கொடுப்பினை'ன்னு சொல்றாங்களே, அது இதுதானா?"டீச்சரக்கா! அடுத்த பாடம் எப்போ? இன்னிக்கி லீவு நாளாச்சா அதேன் அவசரம்!

said...

பாடமா? எங்கே? எப்போ?

சரி சரி. நானும் நாளைக்கு லீவுதான். திங்க(!)க்கிழமை
பார்க்கலாம்.

said...

யேசுதாஸ் பாடறதையும், பத்மினி ஆடறதையும் பாத்துட்டு வெளியே வந்தா எங்களுக்கு அருணா மேடம் வீட்டுல இட்லியும் மொளகாப் பொடியும் கெடக்குது. இந்த பதிவைப் படிச்சுட்டு எதோ நாங்களே அனுபவிச்ச மாதிரி உணர முடிஞ்சுதுங்கக்கா.

இந்த மாதிரி லைவ் ப்ரோக்ராம்ஸ் பாக்குறதுல சிறப்பு அம்சமே, நாம சில சமயம் தன்னிலை மறந்துடுவோம். அப்படி தான் பாருங்க ஒரு தரம் தில்லித் தமிழ்ச் சங்கத்துல வள்ளித் திருமணம் பொம்மலாட்ட நிகழ்ச்சி போட்டாங்க. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) அப்புறம் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியைப் பாக்குறேன், அதுல வள்ளி மாதிரி பேசுறவரு ஒரு ஆம்பளை, அவரு பேசுன விதமும் பொம்மைகளோட எதார்த்த அசைவுகளும், அதுக்கு அவுங்க போட்ட பாடல்களும் அப்படினு மெய்மறந்து போயிட்டேன். கையையும் காலையும் அசைச்சுட்டு உண்மையிலேயே குதிச்சுட்டு இருந்தேன். வழக்கமா இவ்வளவு 'animated'ஆ இருக்கறதில்லன்னாலும் அன்னிக்கு பயங்கர உணர்ச்சி வேகம்...நீங்க சொன்ன மாதிரியே தான் எனக்கும் இருந்தது அன்னிக்கு...நீங்க எப்படி உணர்ந்திருப்பீங்கனு யூகிக்க முடியுது.

said...

நல்ல சுழி!
நிஜ பத்மினி டான்ஸ்..பக்கத்தில இருந்து..நேர்ல உக்காந்து...அதுவும் ஜேசுதாஸே பாட...அடப் போங்க...செம சுழிங்க..

said...

அடடே, கைப்புள்ளைங்களா? வாங்க வாங்க.
மொதமுறையா வந்திருக்கீங்கதானே? இப்பத்தான் வழி தெரிஞ்சதாக்கும்?

வாங்க. இப்படி வந்து உக்காருங்க. சொகமா இருக்கீங்களா?
அதெப்படிங்க நீங்க நம்ம ஊர்க்காரங்க வடிவேலு மாதிரியே அச்சுஅசலா இருக்கீங்க?

ஏய் ஜி.கே, ஓடிப்போய் தம்பிக்கு ஒரு ஜோடா கொண்டா

ஆமாங்க. சிலப்ப இந்த தன்னிலை மறந்து ஒரு விஷயத்தை ரசிக்கறதுன்றது எவ்வளோ பெரிய
பாக்கியம்.

said...

வாங்க தருமி,
நம்ம சுழி, கோபாலுக்கும் இருந்திருக்கு பாருங்க. ஆனா ஒண்ணுங்க, அன்னிக்கு நான் மட்டும்தான் பார்த்திருந்தேன்னு
வையுங்க, ஐயோ, இவர் வராமப்போயிட்டாரேன்னு நிகழ்ச்சி முழுக்க நினைச்சுக்கிட்டே எனக்குக் கிடைச்ச ச்சான்ஸையும்
ரசிக்காமப் புலம்பிக்கிட்டு இருந்திருப்பேன். நல்லவேளை, இவர் கூட இருந்தார்.

said...

என்னப்பா ஜீவ்ஸ்,

என்னை இழுத்துட்டீங்க?

said...

""ஏய் ஜி.கே, "" - யாரடா இப்படி கூப்பிட்ராங்கன்னு நினச்சேன். பெறவுதான் புரிஞ்சிது நம்ம கோபால கிருஷ்ணன் அப்டின்னு!!

said...

கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்க. தேங்க்ஸ்.

said...

//அடடே, கைப்புள்ளைங்களா? வாங்க வாங்க.
மொதமுறையா வந்திருக்கீங்கதானே? இப்பத்தான் வழி தெரிஞ்சதாக்கும்?//

இல்லீங்க. முன்னேயே ஒரு தரம் வந்திருக்கேன். நீங்க ஊருக்குப் போறதுக்கு முன்னடி வச்சீங்களே வெங்காயப்பூ குவிஸ்...நான் கூட டாண்டலியான்னு சொன்னேனே...நியாபகம் வந்துச்சா?

//வாங்க. இப்படி வந்து உக்காருங்க. சொகமா இருக்கீங்களா?//
நல்ல சொகமா இருக்கேங்க.

//அதெப்படிங்க நீங்க நம்ம ஊர்க்காரங்க வடிவேலு மாதிரியே அச்சுஅசலா இருக்கீங்க?//
அவரு தாங்க இவரு :)-


//ஏய் ஜி.கே, ஓடிப்போய் தம்பிக்கு ஒரு ஜோடா கொண்டா//
ஏங்க அக்கா! தம்பியைக் கவனிக்க இப்பிடியா ஆத்துக்காரரை வெரட்டுவாங்க? எனக்கு கன்னிராசி படம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு
:)-

said...

கைப்புள்ளெ,

முந்தியே வந்திருக்கீங்களா?

ஏய் ஜி.கே, ஜோடாவெல்லாம் வேணாம். முந்தியே வந்தவர்தானாம். நீ போய் தோட்டத்துலெ எலி எதாவது
இருக்குதான்னு பாரு.

ஏங்க, இப்பத் தெரியுதுங்களா நம்ம ஜி.கே. யாருன்னு?:-)

said...

//ஏங்க, இப்பத் தெரியுதுங்களா நம்ம ஜி.கே. யாருன்னு?:-) //

ரொம்ப சாரிங்க!மன்னிக்கனும். அவசரப் பட்டுட்டேன். தப்பு நடந்து போச்சு. தயவு செஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க!

said...

கைப்புள்ளெ,
அட இதுக்கு ஏங்க இவ்வளவு வருத்தம்?
அடுத்த ஜென்மத்தில் ஜி.கே'வைக் கல்யாணம் செஞ்சுக்கறதா வாக்குக் கொடுத்திருக்கேனேங்க.ஏன்னா, அது அவ்வளோ
டிவோஷன்ங்க. என்கூடவே எப்படி இருக்குங்கறீங்க?
ஆனா நான் பூனைப்பிறவி, அது மனுஷப்பிறவி!

said...

//ஆனா நான் பூனைப்பிறவி, அது மனுஷப்பிறவி!//

இதுக்கு என்னக்கா அர்த்தம்?

said...

அடக்கடவுளே, இதுக்கெல்லாம அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்க முடியும்?

நான் பூனையாப் பிறந்து 'இப்ப அது என்னை என்ன பாடு படுத்துது, அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு, அதைப் பழி வாங்குவேன்:-)))

அப்ப அது மனுஷப்பிறவி எடுத்திருக்குமே!

அடுத்த ஜென்மம் எடுக்கற நாள் வந்துச்சுன்னா, அப்ப காலம்கூட மாறியிருக்கும். பூனையும் மனுஷனும் கல்யாணம் கட்டிக்கலாமுன்னு
சட்டம் வந்தாலும் வந்திருக்குமுங்க. யார் கண்டா?

said...

//அடக்கடவுளே, இதுக்கெல்லாம அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்க முடியும்?//

நமக்கு மேல்மாடியில சரக்கு கொஞ்டம் கம்மிங்கக்கா. அதனால தானுங்களே நாம 'கைப்புள்ள' - ஒத வாங்கியே பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கேன்:)-

இப்படி பட்ட கேள்விக்காக மறுபடியும் மன்னிக்கனும். ஆனா இப்ப வெளங்கிடிச்சு.
:)-

said...

சென்னையில் தவிர்க்க முடியாத சில கடுப்புகளுக்கிடையே, பாலைவனச் சோலை போன்ற இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே, வருஷம் பூரா நினைத்து மகிழ, இல்லையா துளசி!

said...

கைப்புள்ளெ,

//ஆனா இப்ப வெளங்கிடிச்சு.//

ஹா...... ????????? :-)))))

said...

தாணு,

ஏதோ அதிர்ஷ்டம்தான், இப்படி அமைஞ்சது. அதுவும் 'பைசா' செலவில்லாமல்!
அடிக்கடி இந்த மாதிரி எதாவது அபூர்வமான நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.
கண்ணைத் திறந்துவச்சுப் பார்த்தாலே போதும்.

said...

"கிருஷ்ணா நீ பேகனே...... "

ஏங்க என்னைத் தொந்தரவு செஞ்சிக்கிட்டிருக்கீங்க?

said...

ஸ்ரீ ரங்கன்,

அந்தக்காலத்துலே இருந்து இப்படித் தொந்திரவுபண்ணிக் கூப்புட்டும், நீங்களும் சரி நம்ம 'காவேரி'யும் சரி தமிழ்
நாட்டுக்கு வர அடம்புடிக்கிறீங்களே, ஞாயமா இருக்கா?

said...

துளசி

பழைய நினைவுகளை கிளறிவிட்ட பதிவு. இதே மாதிரி எழுதி நான் பழச நினைக்க, எனக்கு இன்னும் மறதி வரல சந்தோஷப்படலாம்:) எப்படி எளிமையா படிக்க நல்லா எழுதறீங்க. அதுக்கு ஒரு கிளாஸ் எடுக்க கூடாதா

said...

போங்க பத்மா நீங்கவேற! எப்படியோ வகுப்புக்கு ஒரு ஆள் சேர்ந்துபோச்சு:-))))

said...

துளசி அக்கா! படத்தை பார்த்தவுடன் நம்ம ஊரு கோயம்பேடு சந்தைய பற்றி எழுதியிருக்கீங்கன்னு படிச்சா, இசைவிழா பற்றி எழுதி இருக்கீங்க
:-))

ஒவ்வொன்னா ஊருக்கு போனதை எடுத்து விடறீங்க. நாங்களும் ஒசில ஒரு ரவுண்ட் வந்த மாதிரி இருக்கு.
தொடருங்க.

said...

சிவா,

இது பனகல் பார்க் பழக்கடைங்கதான்.

கோயம்பேடு பக்கம் கால்குத்தமுடியலைப்பா,
என்னா சனம், என்னா சனம்!

said...

வாவ்! சங்கீத கலாநிதி பாட ,நாட்டியப்பேரொளி ஆட..அட. அட.!

said...

§ƒÍ¾¡Š!
ÀòÁ¢É¢!!
¿õÁ ŨÄôÀ¾¢× ¿ñÀ÷¸û!!!
¬Ä ¾Ã¢ºÉí¸û!!!!
±øÄ¡òÐÄÔõ ¿¡í¸Ùõ ܼ§Å!!!!! :)

ÐǺ¢ ¿£í¸ ±Ø¾È¾ôÀò¾¢ ±øÄ¡÷¸¢ð§¼Ôõ ¦º¡øÄ¢ ¦º¡øÄ¢ Á¡ïÍ §À¡§Èý

±ØÐí¸ ±ØÐí¸

said...

போன பின்னூட்டம் திஸ்கியிலே இருக்கு. அதை யூனிகோடுக்கு
மாத்திப் போட்டுருக்கேன்.

ஜசுதாஸ்!
பத்மினி!!
நம்ம வலைப்பதிவு நண்பர்கள்!!!
ஆலய தரிசனங்கள்!!!!
எல்லாத்துலயும் நாங்களும் கூடவே!!!!! :)

துளசி நீங்க எழுதறதப்பத்தி எல்லார்கிட்டேயும் சொல்லி
சொல்லி மாஞ்சு போறேன்

எழுதுங்க எழுதுங்க

எழுதுனது ..மீனா

வாங்க மீனா,

அதெப்படி உங்களையெல்லாம் வுட்டுட்டுப் போறது? அதான் மனசுக்குள்ளேயே வந்து
சட்டமா உக்காந்துக்கிட்டீங்கள்ளே:-))))

said...

ஜோ,

இப்ப நினைச்சுப் பார்த்தாலும் பிரமிப்பாத்தான் இருக்கு. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம்தான்.

said...

சிட்னிபக்கத்துலேருந்து புகைஞ்சு மணக்கலே? ;O)

said...

ஆமாமாம். ஷ்ரேயா, அந்தப் புகைக்கு நடுவுலெ இருந்துதான் அடுத்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கேன்.:-))))

said...

சௌக்கியமா ஊர் போய் சேர்ந்திட்டீங்களா?

ஒரு மாசத்துக்கு முன்னால விஜய் டிவீல ஒரு ஞாயித்துக்கெழமைல "சிகரம் தொட்ட மனிதர்கள்" நிகழ்ச்சியில பத்மினியம்மா வாரப்பவே நினைச்சேன் அவுக சென்னை வந்திருப்பாகன்னு.நல்லாவே அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

தொடர்ந்து டென் தௌஸண்ட் வாலா மாதிரி உங்க பயணக் கதைகளைக் கொளுத்திப் போடுங்க.

அப்புறம் "சுட்டாச்சு,சுட்டாச்சு" படிக்க நேரம் கிடைச்சுதா?

said...

வாங்க சுதர்ஸன்.
கண்ணு சரியாச்சா?

நான் படிச்சுட்டேன். இப்ப கோபால் படிக்கறார்.
அதையும் கொஞ்சம் பயணக்கதையிலே சேர்த்து எழுதணுமுன்னு நினைச்சேன். நீங்களே கேட்டுட்டீங்க?
(வாசகப் பெருமக்களுக்கு ஆர்வம்(!) அதிகமாயிருக்குமே:-))))