Wednesday, March 15, 2006

கோவை பிரதர்ஸ்

மென்னியப் புடிக்கற அளவுக்கு வேலை( எல்லாம் எழுதற வேலைதான்) இருக்கப்ப இது என்ன திடீர்னுஒரு சினிமா விமரிசனம்? கேப்பீங்க கேப்பீங்க, கேக்கமாட்டீங்க பின்னே?


நினைவலைகளில் 'பின்நீச்சல்' போட்டுக்கிட்டு இருக்கமே, நாட்டு நடப்பு இப்ப எப்படி இருக்கு? நம்ம தமிழ்சினிமாஉலகத்துலே 'என்னென்ன நடக்கு'ன்னு பாக்கலாமுன்னு இருந்தப்பக் கிடைச்சது சில சினிமாக்கள்,பரமசிவம், ஆதி,சரவணா,சண்டக்கோழின்னு........


எஸ்.ராவோட வசனம், குட்டி ரேவதி கலாட்டான்னு பிரசித்தமான சண்டக்கோழியைப் பார்த்தேன். என்ன இப்படி?பார்த்தேன்னு 'சப்'னு முடிச்சிட்டேனா? அதுலே சொல்லிக்க ஒண்ணும் இல்லை. அதுனாலதான் விளம்பரயுக்தியாஅந்த துப்பட்டா சுத்தற வசனத்தைச் சேர்த்தாங்களோ என்னவோ? அவுங்க எதிர்பர்த்தபடியே ஒரு ச்சின்ன கலாட்டாவும்நடந்து,அதையும் பத்திரிக்கைகள் செய்தியாக்கிக் கொடிபிடிக்கவும் செஞ்சு, அதனாலே இன்னும் ஒரு பத்து( அட ஒரு பேச்சுக்குத்தான்!)பேர் படத்தை அப்படி என்னாதான் இருக்குன்னுன்ற ஆவலுடன்(!) என்னையும் சேர்த்துத்தான் பார்த்திருப்பாங்களோ என்னவோ?


சரி, அதை விடுங்க.மத்த படங்களும் அப்படி ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லே. எடு கோவை பிரதர்ஸைக் கையிலே.சத்தியராஜ் படம். அவ்வளவு மோசமா இருக்கவும் வாய்ப்பில்லை, அதுக்காக ரொம்பவே எதிர்பார்ப்போடு நாமும் இருக்கவும் வாய்ப்பில்லைதானே.


நம்ம நாட்டுலே நடக்குற பல அக்கிரமங்களைப் பத்திரிக்கையிலே படிச்சுட்டுக் கொதிச்சுப்போய் பதிவாப் போட்டுப் புலம்பறோமுல்லே, அதையேதான் சினிமாவா எடுத்துருக்காங்க. பதிவுன்னா கிடைக்குற வாசகர்களைவிட சினிமாவோட ரீச் பெருசுல்லையா? ரீச் ஆயிருமுன்னு நினைக்கறேன். ஆனா, நம்ம பொதுஜனங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சாலும்'இங்கெ இப்படித்தான். நாம் சொல்லி என்ன ஆகப்போகுது'ன்னு ஒரு (விரக்தி)மனப்பான்மை இருக்கு பாருங்க. மொதல்லேஅதை மாத்தணும்.


மக்களைப்பத்திக் கவலையே இல்லாத அரசாங்க அதிகாரிகள், மனசாட்சி இல்லாம நடந்துக்கற மருத்துவர்கள், இதுலே'டேய், நான் சட்டையைப் போட்டுருந்தா டாக்டர். கழட்டிட்டேன்னா லோஃபர்'னு டயலாக்! யார்ரா அந்த டாக்குட்டர்? தெரிஞ்சமுகமா இருக்கேன்னு பார்த்தா, அட,நம்ம அருண் பாண்டியன்.


நம்ம கைப்புள்ளெவேற நினைவுக்கு வந்துக்கிட்டு இருந்தார் படம் பூரா! படத்துலே அவர் பேர் 'ஏகாதசி' ஜோசியச்சீட்டு எடுத்துக் குடுக்கற கிளிகூட அவரை என்னமா ஏசுது! கிளிவேசம் மனுசனுக்குப் படுபொருத்தமா இருந்துச்சுங்க.


இவ்வளோ சொல்லிட்டு ஹீரோ, ஹீரோயினைப் பத்திச் சொல்ல வேணாங்களா? ஹீரோயின்கூடப் பாட்டுப்பாடி ஆடறவர் தானேங்க படத்துக்கு ஹீரோ? அது சிபிராஜ். நாயகி நமீதா. அப்ப சத்தியராஜுக்கு யாரு ஜோடிங்கறீங்களா?அது எப்படிங்க, அவருக்கு ஜோடி இருந்தே ஆகணுமுன்னு கட்டாயமா? கோவை சரளா ஒன்சைடா அவரை 'லவ்ஸ்'வுடறாங்க, ச்சும்மா ஒரு நிமிஷக் கனவுப் பாட்டுலே!


டெல்லி கணேஷ் , ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியா ஒரு சீன்லேவந்து, சோஷியல் சர்வீஸ் செய்யவேணாம், (வாங்குற)சம்பளத்துக்கு வேலை செய்யுங்க'ன்னு மெஸேஜ் கொடுத்தார்ங்க.


பரவாயில்லை, ஒருமுறை பார்க்கலாம், அட்லீஸ்ட் வடிவேலோட காமெடிக்காவது.


கடைசியிலே விகடன், குமுதம், குங்குமம்னு எல்லா கமர்சியல் பத்திரிக்கைகளும் வாசல்லே வீசப்பட்டன, அரசு அலுவலர்களால்!


நம்ம ஆக்களுக்கு இந்த வம்பு இல்லை. எதையும் வீசவேணாம், படிச்சுக்கிட்டுக்கற 'விண்டோ'வை மூடுனா ஆச்சு,இல்லீங்களா?

40 comments:

said...

சத்யராஜ் வழமைபோலவே இந்தப்படத்தில் சகட்டு மேனிக்கு எல்லோரையும் போட்டுத் தாக்குகிறார். விஜயகாந்த உட்பட சக நடிகர்களையும். தொலைக்காட்சி அறிவிப்பாளினி முதற்கொண்டு அரசியல் வாதிகள், அரசியற்கட்சிகள் வரை எல்லோரையும் வாருகிறார். இப்போதெல்லாம் சத்யராஜ் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் இவர் யாரைச் சாடுகிறார் என்று கண்டுபிடிப்பதே வேலையாகிப் போனது.

நீங்கள் சொல்வது போல வடிவேலுவின் காட்சிகளில் (கோயம்புத்தூர் காட்சிகள் தவிர்த்து) எனக்குச் சிரிப்பு வரவில்லை. சத்திதான் (வாந்தி) வந்தது.

said...

என்னங்க கொழுவி,

நலமா?
//நீங்கள் சொல்வது போல வடிவேலுவின் காட்சிகளில் (கோயம்புத்தூர் காட்சிகள் தவிர்த்து) எனக்குச்
சிரிப்பு வரவில்லை. சத்திதான் (வாந்தி) வந்தது. //

அப்டீங்கறீங்க?

said...

அதெப்படி? தேடித் தேடிப் போய் இந்த மாதிரி முத்துக்களை அள்ளிகிட்டு வர்றீங்க அக்கா? எனக்கு ஆச்சரியமா இருக்கு. :P

said...

இதுலெ என்ன ஆச்சரியம் ராம்ஸ்?
எல்லாம் 'ஆண்டவனாப் பார்த்து அனுப்பறார்'!

said...

ஒங்க துணிச்சல் நாங்க அறிஞ்சதுதான். ஆனா இவ்வளவு இருக்குமுன்னு நெனக்கலையே.........இந்தப் படத்தையும் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டிருக்கீங்க. இரும்பு உள்ளம் கொண்ட இதய டீச்சர்-னு பட்டம் கொடுத்திறலாம் போல இருக்கு! :-)

said...

இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் இடப்போவதில்லை.. :-)

said...

அப்போ படம் (கோவை) சிபியாலயும், கைப்புள்ளயாலயும்(வடிவேலு) தான் (க்கமெடி காட்சிகள்)ஓடுதுன்னு சொல்லுங்க!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

ராகவன்,

டீச்சருக்கு இரும்பு இதயம் இல்லேன்னா, இப்படி வளர்ந்த மாணவர்களை வச்சு வகுப்பு நடத்த முடியுமா?:-)))

ஆனாலும் கரும்பு மனசு டீச்சரை இரும்பு மனசாக்கியது எது?

said...

தருமி,

இது நல்லா இருக்கே.
பின்னூட்டம் கிடைத்தது:-))))
நன்றி

said...

ஆஹா....கோவை (சிபி)!
கதை அப்படிப்போகுதா?:-)))

said...

அக்கா...கோவிச்சுக்கக் கூடாது. நான் பதிவைப் படிக்கலை...பின்னூட்டங்களை மட்டும் படிச்சேன்...அப்படியே என் பின்னூட்டத்தையும் போட்டுட்டுப் போயிடலாம்னு...இல்லாட்டி கிளாஸை கட்டடிச்சுட்டேன்னு நீங்க ஆப்ஸென்ட் போட்டுட்டா? :-)

said...

குமரன்,

இதுவும் 'சூப்பர் ஐடியாதான்!:-))))

said...

என்னத்த சொல்றது,,

எத்தன வருஷம் கழிச்சி இந்தியா வந்தீங்க.. ஒரு மூனு மணி நேரத்த படத்த பார்த்து வேஸ்ட் பண்ணதோட உங்க பொன்னான அரை மணி நேரத்த அதுக்கு ஒரு விமர்சனம் எழுதி வேஸ்ட் பண்ணீட்டீங்கன்னு நினைக்கிறேன்..

போட்டும் இதுவும் ஒரு பாஸ்ட் டைம்தானே..

அப்படிதான் நானும் இதை எடுத்துக்கிட்டேன். சீக்கிரம் உங்க பயண அனுபவத்தொடருக்கு திரும்புங்க..

said...

என்னங்க டிபிஆர் ஜோ,

இந்தப் படத்தை இங்கே நேத்து ராத்திரிதானே பார்த்தேன். ச்சென்னையிலே ஒரு தமிழ் சினிமா பெரிய திரையிலே
பாக்கலாமுன்னு இருந்தேன். ஆனா நான் பார்க்க இஷ்டப்பட்டப் படம் ஓடி முடிஞ்சிருச்சாம்.தீவிரமா விசாரிச்சப்ப ஏதோ ஒரு தியேட்டர்லே
இன்னமும் ஓடுதுன்னு சொன்னாங்கதான். ஆனா அங்கெல்லாம் தேடிப்போக நேரமில்லாமப்போச்சுங்க.
ஆகக்கூடி பயணத்துலே ஒரு படமும் பார்க்கலை(-:

said...
This comment has been removed by a blog administrator.
said...

// டீச்சருக்கு இரும்பு இதயம் இல்லேன்னா, இப்படி வளர்ந்த மாணவர்களை வச்சு வகுப்பு நடத்த முடியுமா?:-))) //

அதுவும் உண்மைதான்.

// ஆனாலும் கரும்பு மனசு டீச்சரை இரும்பு மனசாக்கியது எது? //

எது...தமிழ் சினிமாதான்...ஆனாலும் நீங்க மாணவர்களுக்குக் கரும்பு உள்ளம் கொண்ட டீச்சர்தான்.

said...

நீங்கப் பாக்க நினைச்சப் படம் இன்னும் ஓடுதாமே எதோ ஒரு தியேட்டர்ல்ல ... அது என்ன படம்ங்கோ?

said...

ராகவன்,

டீச்சரைப் புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி
( முந்தியெல்லாம் 'புரிதலுக்கு நன்றி'ன்னு மக்கள்ஸ் சொல்லிக்கிட்டு இருந்தது தப்பாமே!)

said...

அதுங்களா? 'தவமாய் தவமிருந்து'ம் பார்க்க முடியலைங்க(-:

said...

பாரதி,
கொஞ்சநாள் 'ட்ரெண்டை' மாத்திப்பாக்கலாமுன்னு நினைக்கிறாரோ என்னவோ?

நஷடம்னு ஒண்ணு யாருக்கும் இருக்காது. இது இல்லேன்னா அது.

said...

அடங்கொக்கா மக்கா! கோவை பிரதர்ஸ்-க்கு வந்த வாழ்வ-ப் பாருங்கப்பா!

said...

// இப்படி?பார்த்தேன்னு 'சப்'னு முடிச்சிட்டேனா? அதுலே சொல்லிக்க ஒண்ணும் இல்லை. //

என்னமோ நீங்க பாக்குற மத்த படத்துல எல்லாம் சொல்லிக்க ஏதோ இருக்கிற மாதிரி... ஊர் உலகத்துல எங்கியுமே கேள்விப்படாத, தமிழ்நாட்டுல அப்பிடி ஒரு படம் எடுத்தாங்களான்னே தெரியாத, பொட்டி தியேட்டருக்கு வந்ததும் தெரியாம போனதும் தெரியாம இருக்கிற படங்கள மட்டும்தானே நீங்க பாக்குறது வழக்கம்... (உங்க பழைய பட விமர்சனத்த எல்லாம் அட்டவணை போட்டு லிங்க் கொடுங்க. அடுத்த தடவை சினிமா பேர் விளையாட்டு ஆடும் போது இந்த மாதிரி சத்தியமா படம் வரலன்னு எதிரிகட்சி காரவுங்க சண்டை போடும்போது காமிக்க)

said...

ஜோ,
'எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்....:-))

said...

முகமூடி,
இதுக்கெல்லாம் இப்படி சடச்சுக்கிட்டா எப்படி?

சரி போங்க, உங்க மனசமாதானத்துக்காக இது.இப்பத்தான் 'டிஷ்யூம்'னு ஒரு படம் பார்த்து முடிச்சேன்.
அருமையா இருக்கு. நாயகிதான் கொஞ்சம்......
அநியாயம் என்னன்னா பிரியங்கான்னு ஒரு நடிகை கொஞ்ச நாளுக்கு முன்னே இருந்தாங்க பாருங்க, அவுங்க நாயகிக்கு 'அம்மா'!

said...

//ஒங்க துணிச்சல் நாங்க அறிஞ்சதுதான். ஆனா இவ்வளவு இருக்குமுன்னு நெனக்கலையே.........இந்தப் படத்தையும் பாத்துட்டு..விமர்சனம் வேறே//
மாணவர்கள் தங்களுக்கு கஷ்டம்னா டீச்சர்கிட்டே முறையிடலாம், டீச்சருக்கேகேகேகே கழண்டுடுச்சுன்னா யார்கிட்டே போய் முறையிடறது!!

said...

தாணு,

வாங்க, வாங்க. எப்படி இருக்கீங்க? ஆமாம், நான் தெரியாமத்தான் கேக்கறேன்,
சினிமா பாக்குறது வெறும் 'அறிவு வளர'ன்னு நீங்க நிஜமாவே நம்புறீங்களா?

அது ஒரு 'பொழுதுபோக்கு சாதனம்'ன்னு சொல்றதைத் தவிர வேற ஒண்ணும் இல்லைன்னு நான்
நினைச்சுக்கிட்டுஇருக்கேன்.

அதனாலேதான் வகுப்பு வேலைக்கிடையிலும் மனசை லேசாக்கிக்க இப்படி...:-)

said...

துளசி
அறுசுவை விருந்து பத்தி பதிவு படிச்சுட்டு வரதுக்குள்ள இன்னொன்னா? இந்த வேகத்துக்கு எழுதினா நான் எப்படி படிக்கிறதாம். இனிமே புதுசா படம் எடுக்க வரவுங்க ஒரு DVD ஆவது விக்கும்ற நம்பிக்கையோட எடுக்கலாம்தானே.
10ரூபா எதுக்காம்?ஏதாவது தெரிஞ்சுதா

said...

கிளாஸ் இன்னிக்கி போரடிச்சி போச்சு ,எந்த படத்துக்கு போகலாம்?!

said...

பத்மா,
இன்னும் 10 ரூபாய் புதிர் விடுவிக்கப்படலை:-)

said...

சிங்.செயகுமார்,

இதென்ன கேள்வி. இருக்கவே இருக்கு 'கோவை ப்ரதர்ஸ்':-)
நிறைய படங்களை நக்கலடிச்சு வருது.
'லகான்'கூடத் தப்பலை.

said...

துளசி அக்கா,
'டிஷ்யூம்' ல கதாநாயகிக்கு அம்மா - 'அண்ணி' மாளவிகா ... பிரியங்கா இல்ல...

said...

என்னங்க இப்படி ஷாக் கொடுத்துட்டீங்க? மாளவிகாவா? இது ரொம்பவே அநியாயமுங்க.
அந்தப் பொண்ணு நாயகியைவிட ஒரு நாலு வயசு கூட இருந்தாலே அதிகம். அடடாடா....(-:

ஆமாம், அதென்ன பேரு 'ஊமை'ன்னு? ஒரு வேளை கல்யாணம் ஆகாதவரோ?
'பேச்சிலர்'? உம்....

said...

இன்னும் டைம் பாஸ் ஆகலைன்னா
என்னோட அமனுஷ்ய வாசகி கதையைப் படிங்க. மொத்தம் 13 பார்ட் இருக்கு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

படிக்கணுங்க. தோதா நேரம் கிடைக்கமாட்டேங்குது. கட்டாயம் படிச்சுருவொம்லெ!

said...

துளசி அம்மா,

ஊர் உலகத்துல எங்கியுமே கேள்விப்படாத, பொட்டி தியேட்டருக்கு வந்ததும் தெரியாம போனதும் தெரியாம இருக்கிற படத்தை எல்லாம் எப்படி பார்க்க முடியுது.

இதுக்கு 2 காரணம் இருக்கு.

1) உங்களுக்கு அளவு கடந்த பொறுமை இருக்குன்னு எனக்கு சத்தியமா புரியுது.(அதுல ஒரு 10 % எனக்கு கொடுங்க pls)

2) கோபால் சார் உங்க ஊர்ல தமிழ் பட DVD டிஸ்ட்ரிபுடர் பிஸினஸ் பார்க்குறார் :-) சரியா?

said...

கல்யாணமெல்லாம் ஆகிப்போச்சு... கல்யாணத்துக்கு முன்னால வாயாடி ன்னுதான் பேரு. கல்யாணத்துக்கப்புறமாத்தான் ஊமை ன்னு மாறிப்போச்சு :-(

said...

ஊமை,
அட! இதுவும் நல்லா இருக்கே-)))))

said...

கார்த்திக்,

உங்க மெயில் ஐடியை அனுப்புங்க. பொறுமைக்கு ஒரு ட்யூஷன் எடுத்து 10% தரேன்.
அப்படியே சினிமா விவரமும் சொல்றேன். சரியா?

உங்க ஐடியை பப்ளிஷ் செய்யமாட்டேன்.

said...

துளசி அம்மா,

என்னோட ID : karthikpushparaj{[at]}gmail{[dot]}com

டியுசன் கிளாஸ் எப்ப இருந்துன்னு சொல்லுங்க. எங்க புது வீட்டுல இன்னும் நெட் வரலை. எப்படியும் இன்னும் 3 நாளு ஆகும்ன்னு நினைக்குறேன்..

said...

கார்த்திக்,
புதுவீடா? பேஷ் பேஷ்.
தனிமடல் பார்க்கவும்