Saturday, March 04, 2006

அர்ரைவுடு சேஃப்லி வித் அம்னீஷியா


மொத வேலை

மக்கள்ஸ்!

எப்படி இருக்கீங்க? எல்லாரும் சுகம்தானே?

ஒருவழியா தேர் நிலைக்கு வந்துருச்சு. தமிழ்மணம் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? எப்படியோ 36 நாளை ஓட்டிட்டிட்டேன். நடுவிலே ஒரு தோழி வீட்டுலே ஒரு நாள் தமிழ்மணம் 'பார்க்க' முடிஞ்சது.கணினி மையங்களிலே( இதுமட்டும்தான் தமிழ்!) தமிழ் ஃபாண்ட் இல்லீங்க. அப்படியும் பழக்கம் வுட்டுப் போயிரக்கூடாதுன்னு தினமும் தமிழ்மணம் தொறந்து பார்த்து, அந்தச் சதுரங்களையும், கேள்விக்குறிகளையும் 'படிச்சு'ப் பார்த்தாச்சு. ஹூம்....


நேத்துப் பகல் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், பின்னூட்ட மாடரேஷன் போட்டுரலாமுன்னு வந்து பார்த்தா, ஜனங்க எழுதோ எழுதுன்னு எழுதித் தள்ளியிருக்கீங்களேப்பா! இதையெல்லாம் படிச்சு முடிக்கவே இன்னும் ஒரு 36 நாளு வேணும்போல! அர்ரியர்ஸ் வச்சுக்கிட்டு படற அவஸ்தையெல்லாம் உங்களுக்குத் தனியாச் சொல்லணுமா, என்ன?

இதுலே குறிப்பா சிலர் எனக்குப் போட்டியா என் 'பட்டத்தை'ப் பறிக்க சதி செஞ்சு அதுலே வெற்றியும் அடைஞ்சிருக்காங்க.(நற நற) பூனையில்லா வீட்டில் ஓடித்திரியும் எலிக்குட்டிகள்:-))))) பிழைச்சுப் போகட்டும். (நற நற)


எனக்கு 'ஞாபகசக்தி' யானைமாதிரின்னு அலட்டிக்கிட்டு இருந்தேனே, அதுகூடப் பொய்யாப் போயிருச்சுங்க. அதுலேகூடப்பாருங்க, இந்த 'செலக்டிவ் அம்னீஷியா' ஒரு குறிப்பிட்ட நிமிசத்தைப் பத்தித்தான்.


போறதுக்கு ரெண்டு நிமிசத்துக்கு முன்னாலே, என்னோட சாவிக்கொத்தைப் பத்திரப்படுத்தறேன்னு(!) ஒரு இடத்துலேவச்சேன். இப்ப அது எந்த இடமுன்னு தெரியலை. ஒவ்வொரு ஷெல்ஃப் முன்னாலேயும் போய் அப்படியே சிலை மாதிரிநின்னு முழிக்கறேன். நினைவுபடுத்திப் பாக்கறேனாம்! கிடைக்கறவரை இந்த 'நிலை' தொடரும். இப்படியானதுக்குக் காரணம் என்னவா இருக்குமுன்னு யோசிச்சப்ப, 36 நாளில் 'வழக்கத்துக்கு மாறா' செஞ்ச காரியங்களாலோன்னு சந்தேகம் வருது.


1. டி.வி. தொடர்கள் பார்த்தது.

2. தமிழ்மணம் படிக்காமல் இருந்தது.

3. வீட்டுவேலைன்னு ஒரு துரும்பையும் எடுத்துப்போடாம இருந்தது.

4.சென்னை சில்க்ஸ், குமரன், நல்லின்னு ஓடித்திரிஞ்சது( இப்ப இதுலே புதுசா 'சரவணா ஸ்டோர்ஸ்' வேற சேர்ந்துக்கிச்சு)

5. முழுக்கமுழுக்கச் செல்பேசியும் கையுமா இருந்தது.

6.தினமலர், ஹிந்து, தினகரன் பேப்பர்களைத் தினந்தவறாமல்'வாங்கி'ப் படிச்சது.

7. சக வலைஞர்களைச் சந்தித்துப் பேசியது!

8. சிங்கப்பூரில் ஒருகிராம் தங்கம்கூட வாங்காம பல நகைக்கடைகளை வலம் வந்தது. என்ன மன உறுதி!!( அதெல்லாம் மதுரையிலேயே கொஞ்சம் வாங்கியாச்சு)

இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.... .....

கொஞ்சம் பொறுங்க, சாவியைத் தேடிட்டு வந்துடறேன்!!!

83 comments:

said...

துளசிக்கா நல்லபடியா ஊருக்கு வந்து சேந்தேளா! துளசி இல்லாத தமிழ் மணம்............... நல்லா ரெஸ்ட் எடுத்து சீக்கிரம் சாவி கண்டு பிடிச்சி வாங்க!

said...

வாங்க, செயகுமார்.

இப்பத்தான் மட்டுறுத்தல் செஞ்சுட்டு இந்தப் பதிவைப் போட்டுட்டு, 'இயல்பு நிலை'க்குத் திரும்ப ஆரம்பிச்சிருக்கேன்:-)))

சாவி எங்கே????????

said...

விடுமுறைக்குப் பிறகு வீடு திரும்பும்போதைய மனநிலை பற்றி ஒரு பதிவு படித்த நினைவு. சுட்டி கொடுக்கலாம் என்றால் எனக்கும் அம்னீஷியா தொற்றிக் கொண்டுவிட்டது.
மற்றபடி நீங்களும் கோபால்சாரும் நலம்தானே ? விட்டு சென்ற petsஉம் நலம்தானே ?
சாவி கிடைக்க ஆனைமுகன் அருள்செய்வான்.

said...

//இதுலே குறிப்பா சிலர் எனக்குப் போட்டியா என் 'பட்டத்தை'ப் பறிக்க சதி செஞ்சு அதுலே வெற்றியும் அடைஞ்சிருக்காங்க.(நற நற) பூனையில்லா வீட்டில் ஓடித்திரியும் எலிக்குட்டிகள்:-))))) பிழைச்சுப் போகட்டும். (நற நற)
//

யாருக்கா அது? எங்க கிட்ட சொல்லுங்க. ஆட்டோவுல போயி செய்யவேண்டிய பணிவிடை எல்லாம் செஞ்சுட்டு வர்றோம். :-)

அக்கா இல்லாத தமிழ்மணம் ரொம்பவே போரடித்தது. (பொய்யில்லீங்க. உண்மை).

சாவி கெடைச்சவுடனே சொல்லுங்க.

said...

மணியன்,

நன்றி. கோபால் நலம்தான். அவர் 10 நாளைக்கு முன்னாலேயே திரும்ப வந்துட்டார்.
கோபால கிருஷ்ணனை 'கேட்டரி'யில் இருந்து எடுத்தாச்சு. நலமாக இருக்கின்றான்.

said...

ஆஹா.... குமரன்,

வாங்க வாங்க. நலமா?

என்னாப்பா சொல்லறது? பின்னூட்டமா ஆளுங்க 'குவிச்சுக்கிட்டு' இருந்ததை நிஜமாவே
கவனிக்கலையாக்கும்?:-)))( இல்லே தன்னடக்கமா?)

நட்சத்திரப்பதிவுலேகூட 'அள்ளீட்டாங்களே'ப்பா!

said...

தலைவி,
உ.பி.ச.வோட நட்சத்திர வாரம் முடியற நேரத்தில கரெக்டா என்ட்ரி குடுத்துட்டீங்க. வாழ்த்த வயதில்லை (மக்களெல்லாம் நம்மளை அக்கா போட்டு வயசைக் கூட்டிருவாங்க போல்ருக்கு. சைக்கிள் கேப்ல வயசைக் குறைச்சுக்க சான்ஸ்:-))). வணங்கி வரவேற்கிறோம். (நம்ம வீட்டுக்குத்தான்... ஃபிலிமெல்லாம் காட்டிருக்கோம். என்னான்னு வந்து பாத்துட்டுப் போலாமில்ல?)

said...

நிலா,

வாங்க வாங்க.

தமிழ் ஃபாண்ட் இல்லாம ஒரு நாள் இங்கிலிபீசுலே நட்சத்திர வாழ்த்துச்
சொன்னதைக் கண்டுக்கலையேப்பா(-:

'நாலு பேர்' லேகூட நம்மளைக் கூட்டு சேர்த்துக்கலையேப்பா(-:

விம்மும் உ.பி.ச
துளசியக்கா

said...

வாங்க வாங்க ஊர்ப்பயணத்தையெல்லாம் போட்டுத்தாக்குங்க... படங்களும்..

said...

தலைவி

உங்கள் கண்ணில் நீரைப் பார்த்தா அண்டசராசரமே பதறுமே!!!
உங்க இங்கிலிபீசு வாழ்த்து வாக்களாப் பெருமக்கள் கூட்டத்தில அமுங்கிப் போச்சு.

ஆனாலும் அதைத் தேடிக் கண்டுபிடிச்சு நன்றி சொல்லாதது இந்தப் பாவி தப்புதான்.என்னை மன்னிச்சிருங்க தலைவி. (இந்தியா போய் தொடர் பார்த்திருப்பீங்கல்ல. அந்த எஃபெக்டுக்காகத்தான் லாஸ்ட் ரெண்டு லைன்)

said...

தங்களை சென்னையில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

said...

துளசியக்கா,

சாவியை கண்டுபிடிக்கறது இருக்கட்டும.்

I tagged you here

சீக்கிரமா ஒரு "நாலு" பதிவு போடுங்க

said...

வாங்க அம்மா/அக்கா/மேடம் இல்லை துளசிக்கா!

உங்ககிட்டதான் அதிக பின்னூட்டம் பெறுவது எப்படின்னி டியூஷன் சேரலாம்னு இளவஞ்சிகிட்ட விசாரிகிட்டு இருந்தேன், நீங்களே வந்துட்டீங்க!

ஹி.ஹி.


(இதன் நகல்:http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

வாங்க வாங்க.

நீங்க இல்லாம சுரத்தே இல்ல.

அம்னீஷ்யா தான் இந்தியாலேர்ந்து வாங்கிட்டு வந்தீங்களா?

மணியன் சார் சொன்ன பதிவு இதோ. :))

said...

அக்கா,
அந்துட்டீங்களா? ரொம்ப சந்தோசம்.

////இதுலே குறிப்பா சிலர் எனக்குப் போட்டியா என் 'பட்டத்தை'ப் பறிக்க சதி செஞ்சு அதுலே வெற்றியும் அடைஞ்சிருக்காங்க.(நற நற) பூனையில்லா வீட்டில் ஓடித்திரியும் எலிக்குட்டிகள்:-))))) பிழைச்சுப் போகட்டும். (நற நற)
////

என்னங்க நீங்க. நான் போட்டு குடுத்த பாதயில நம்ம தம்பிங்க இந்த கலக்கு கலக்கறாங்களேன்னு பெருமை படுவீங்கன்னு பாத்தா இப்படி சொல்லிட்டீங்களே.

என்ன இருந்தாலும், பின்னூட்ட நாயகின்னா அது நீங்கதானே.

said...

ஆஹா...வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க..
வரவேணும்...வரவேணும்..
அதான் நீங்க available இல்லைன்னு தெரியுமே..அதனாலதான் உங்கள் 'நாலு'
ஆட்டத்துக்குக் கூப்பிடலை.
இனிம என்ன, ஆளாளுக்குக் கூப்பிடுவாங்க.ரெடியா இருந்துக்குங்க..

said...

துளசி
கவலை படாதீங்க. திரும்ப பட்டம் பதவி எல்லாம் வரும். ஊருக்கு போனப்போ பொற்கிழி கொடுத்தும் மறந்துட்டாங்களா?

said...

அக்கா! வீடு போயி சேர்ந்தாச்சா!

சந்தோசம்! :)

said...

ஆஹா ஊருக்கு வந்து சேர்ந்தாச்சா.


//இப்படியானதுக்குக் காரணம் என்னவா இருக்குமுன்னு யோசிச்சப்ப, 36 நாளில் 'வழக்கத்துக்கு மாறா' செஞ்ச காரியங்களாலோன்னு சந்தேகம் வருது.//


நல்ல இனிய அனுபவங்கள் தான் உங்கள் 36 நாள் பயணத்தில்.

//இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.... ..... //


சீக்கிரம் உங்கள் அனுபவங்களைப் பதிவாகப் போடுங்கள்.

படிக்கக் காத்திருக்கிறேன்.

said...

அன்புள்ள துளசி அக்கா,
உங்க பேச்சு நான் காய் :-(((
சாவிக்கொத்தை மறந்தது போல, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறேன் என்று வாக்களித்துவிட்டு பிறகு மறந்துவிட்டீர்களா?

said...

வாங்க முகமூடி. சொன்னா நம்ப மாட்டீங்க. நான் சந்திச்ச நம் சகவலைஞர்கள் பொரளி
( வார்த்தை உபயம் இளவஞ்சி.நன்றி) கட்டத்துக்கு வந்தப்ப கேட்டது 'முகமூடி யாருங்க?'ன்னு.
ஜனங்க துடிப்பா இருக்காங்க, நீங்க முகமூடியை எடுக்கற நாளுக்கு!

நான் கல்லுமாதிரி எதிருலே உக்கார்ந்து இருக்கேன், முகமூடி யாராம், முகமூடி:-))))

said...

நிலா,

நீங்களும் 'விடாம' டி.வி.மெகாதொடர் பாக்கறீங்கன்னு தெரிஞ்சுபோச்சு:-)

said...

வாங்க நாராயணன். உங்களையெல்லாம் சந்திச்சதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் 'உரையாட'
நிறைய நேரம் இல்லாமப் போச்சு.

said...

என்னங்க சிபி,

கொஞ்சநாள் இங்கிருந்து போனவுடனே நம்ம இடத்தை புடிச்சுக்க பயங்கரப் போட்டி இருந்துருக்குப்பா.
300, 400ன்னு பின்னூட்டத்தை ஏத்திக்கிட்டும், நட்சத்திரவாரத்துலே108க்கு மேலேன்னும் சொல்லிக்கிட்டு
ஒரு 'கூட்டம்' இருக்குப்பா.

இன்னிக்கு நிலையிலே நானே அங்கே 'ட்யூஷன்' போகணும் போலெ. எதுக்கும் நாம ரெண்டு பேரும்
சேர்ந்தே போகலாம். செலவுலே எதாவது க்ரூப் டிஸ்கவுண்ட்டு கிடைக்குமான்னு பார்க்கலாம்.

said...

வணக்கம் வந்தனம், வந்தாச்சா, பயணம் முடிஞ்சு, பயண களைப்பே தெரியல போலிருக்கு, வந்தோன வந்தனம் பாடியாச்சு! நடுவிலே நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போனமாசம் தான் கச்சேரிக்கு வந்தேன், வரணும் தினம் ஒரு பதிவு தரணும்! தொடருணும் இந்த துளசி மடம் இல்ல தளம்..!

said...

ராம்ஸ் தம்பி ,

சுகமா இருக்கீங்களா? 'சுட்டி'க்கு நன்றி. என்ன டாக்டருங்கப்பா இந்தியாவுலே. அம்னீஷியாவை
சாவிக்கு கொடுத்துட்டாங்களேப்பா...:-)

said...

தருமி,

நலமா? நான் ரெடியா இருந்து என்ன ஆகப்போகுது, அதான் 'ஆட்டம்' முடிஞ்சுருச்சுல்லே(-:
( நான் உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டுருந்தேன். கவனிச்சீங்கல்லே? தினம் பத்து + குத்து வந்துரணும்,
ஆமா!)

said...

இளவஞ்சி,

'சந்திப்பு' பத்தி அட்டகாசமா ஒரு பதிவு போட்டுட்டீங்க. சிரிச்சுச் சிரிச்சு வவுத்துவலி வலி வந்துருச்சு கோபாலுக்கு!

said...

பச்சோந்தியாரே,

வாங்க. உங்க நட்சத்திரவாரத்துக்கு இல்லாமப் போயிட்டேன்(-:
பதிவெல்லாம் போட ஆரம்பிக்கணும்தான். இல்லாட்டா அதுவும் மறந்துருமோன்னு பயம் வந்துருச்சு.

said...

என்னங்க உதயகுமார், நீங்களும் ஒரு மாசம் லீவா? என்ன விசேஷமோ?

said...

என்னங்க பாலராஜன் கீதா,

வூட்டுக்குப் போன் போட்டுப் பேசினேனேங்க. அவுங்களும் முடிஞ்சா வலைப்பதிவர் சந்திப்புக்கு
வரேன்னு சொன்னாங்களே! ( ஆனா வரலைங்க!)

said...

ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்ன்னு சொல்லற மாதிரி (முழுக்குறளும் போட்டா விளக்கம் கொடுக்கணும்ன்னு குமரன் அடம் பிடிப்பார்) நீங்க ஆரம்பிச்சதை நாங்க இப்படி கொண்டு போனா சந்தோஷப் படுவீங்கன்னு பாத்தா, உங்க பட்டத்தை பறிக்க சதி அப்படி, இப்படின்னு எழுதிட்டீங்களே.

இதுல நான் போட்ட முதல் பின்னூட்டத்தை வேற சென்சார் பண்ணிட்டீங்க.

எப்பவுமே நீங்கதான் பின்னூட்ட நாயகி. நாங்களெல்லாம் நீங்கள் காட்டிய பாதையில் வருபவர்கள். சரிதானே.

said...

உங்களின் மறுவருகை நல்வருகை ஆகுக...

இதோ உங்களையும் சங்கிலிப் பதிவில் இழுத்துவிட்டிருக்கிறேன்.

சாவியைக் கண்டிபிடித்துவிட்டு மெதுவாய், பதிவைப் போடுங்க..

நன்றி,
பூங்குழலி

said...

ஆக, வீடு திரும்பிவிட்டீர்கள். செட்டிலாகி விட்டீர்களா? இனிமேல் பதிவுகள் போட வேண்டியதுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

இலவசக் கொத்தனாரே,

நீங்க சொல்றதுலே 'நியாயம்' இருந்தாலும் பாழாப்போன மனசு கேக்குதா? 'நான் இருக்கறவரை என் சொத்தை
நானே அனுபவிக்கணும்'ன்ற கொள்கைப் பிடிப்போ என்னவோ? அது போட்டும். இந்த கமெண்ட் மாடரேஷன்
வந்தாவுட்டு சிலது கொஞ்சம் லேட்டாத்தான் மெயில்லே வருது. 'சென்சார்' எல்லாம் கிடையாதுங்க. எப்படியோ
உங்ககிட்டே இருந்து ரெண்டு பின்னூட்டம் வந்து நம்ம ரேங்க் குறையாம பார்த்துக்கிச்சு:-)

said...

கோபித்தம்பி நலமா? ஒரு நாலுநாள் போனாவுட்டு 'நாலுலே' கலந்துக்கறேன்.
நம்மையும் நாலுலே சேர்த்ததுக்கு நன்றிப்பா! ஆமா, தண்ணி சுகமா?

said...

பத்மா,

சாவி இன்னும் கிடைக்கலே. ஞாபகசக்தி திரும்பறதுக்கு, முன்னே பழகிய இடங்களுக்குக் கொண்டுபோனா
நல்லதுன்னுட்டு, கடைகளுக்குக் கொண்டுபோனார் கோபால். அங்கே விறுவிறுன்னு சாமான்களை ( அதுலே முக்காவாசி
வேண்டாதது. ஒரு இம்பல்ஸ் பை)ட்ராலியிலே நிறைக்கறதைப் பார்த்துட்டு, 'ஆஹா... பேக் டு நார்மல்'ன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டாராம்.
சாவி எங்கேன்னு ஞாபகம் வந்துருச்சான்னு கேட்டாரா, இல்லைன்னதும் பாதிசாமான்கள் ட்ராலியிலே இருந்து திரும்ப
ஷெல்ஃபுக்கே போயிருச்சு. இது வேலைக்காகாதுன்னுட்டு, அங்கேயே கோபாலோட சாவிகளைக் கொடுத்து ஒரு செட் 'டூப்ளிகேட்'
சாவிகளைச் செஞ்சுக்கிட்டோம். இது எப்படி இருக்கு?

said...

வாங்க டோண்டு. இன்னும் ஜெட்லேக் கொஞ்சம் இருக்கு. இதுக்கு நடுவுலே இந்த சாவி .... பதிவுகளை இன்னும் சில நாட்களிலே
ஆரம்பிக்கத்தான் வேணும்.

said...

வாங்க பூங்குழலி,

நாலு நாலுன்னு ஒரே மகளிரணியா போட்டுட்டீங்க. 'மருள்நீக்கி'யையும் இப்போதைக்கு மகளிர்
அணியிலே சேர்த்திருக்கேன்:-)

வந்துர்றேன், ஒரு நாலு நாள் டைம் கொடுங்க.

said...

//நட்சத்திரவாரத்துலே108க்கு மேலேன்னும் //

துளசிக்கா. ஒரு சின்ன திருத்தம். நட்சத்திர வாரத்துல 108க்கு மேலே இல்லை. 180க்கு மேலே. :-)

said...

//'சென்சார்' எல்லாம் கிடையாதுங்க. எப்படியோ
உங்ககிட்டே இருந்து ரெண்டு பின்னூட்டம் வந்து நம்ம ரேங்க் குறையாம பார்த்துக்கிச்சு:-)//

ஆகா, அதுதானே பாத்தேன். நிஜ சென்சாரென்றால், பின்னூட்டத்தை போட்டுவிட்டு பின் அதனை அழிக்க வேணும். அதுவும் முழுதாக அழிக்கக்(delete permanently) கூடாது. அப்பொழுதுதானே பின்னூட்ட எண்ணிக்கையும் கூடும், போட்ட கருத்தும் தெரியாது. என்ன, நான் கற்றுக்கொண்ட பாடம் சரிதானே? :)

said...

குமரன் & இ.கொ,

அடடாடா..... எல்லாம் விவரமா இருக்கீங்களேப்பா. அக்காவோட ட்ரெயினிங் பரவாயில்லையே! பேஷ் பேஷ்

said...

ஆமா, புது வருஷத்துக்கு நியூயார்கெல்லாம் போயிட்டு திரும்பி தமிழ் மணத்தை பார்க்க லேட்டாயிடுச்சு. நம்ம அரிதார தொடர் தினமலர் வரைக்கும் விளம்பரமாயிடுச்சு. பிறகு போட்ட அஞ்சு பகுதியை மெதுவா நேரம் கிடைக்கிறப்ப படிங்க, படிச்சுட்டு எப்படின்னு பின்னூட்டம் போடுங்க, அதான் பார்க்கிறேன் டீச்சரை காணாமே எல்லாம் தவிக்கிறதை, பாடம் ஆரம்பிங்க சீக்கிரம்!

said...

நீங்க இல்லாம 'சித்திரம் பேசுதடி' போன்ற படங்களை கவனிக்க ஆளே இல்ல... வருக :-)

said...

//சாவி இன்னும் கிடைக்கலே. ஞாபகசக்தி திரும்பறதுக்கு, முன்னே பழகிய இடங்களுக்குக் கொண்டுபோனா
நல்லதுன்னுட்டு, கடைகளுக்குக் கொண்டுபோனார் கோபால். அங்கே விறுவிறுன்னு சாமான்களை ( அதுலே முக்காவாசி
வேண்டாதது. ஒரு இம்பல்ஸ் பை)ட்ராலியிலே நிறைக்கறதைப் பார்த்துட்டு, 'ஆஹா... பேக் டு நார்மல்'ன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டாராம்.
சாவி எங்கேன்னு ஞாபகம் வந்துருச்சான்னு கேட்டாரா, இல்லைன்னதும் பாதிசாமான்கள் ட்ராலியிலே இருந்து திரும்ப
ஷெல்ஃபுக்கே போயிருச்சு//


இது...இது துளசி கோபால்..

said...

வாங்க வாங்க வாங்க.....நல்லபடியா வீடு வந்து சேந்துட்டீங்க...இனிமே தமிழ் மணத்தைக் கலக்கிச் சுகந்தத்தைப் பரப்புங்க....

டீச்சர். நீங்க அப்ப ஊருல இல்லைன்னுதான் ஒங்களை நாலு விளையாட கூப்பிடலை. நீங்க வந்ததும்...நம்ம கோபி ஒங்கள கூப்பிட்டிருக்காரு பாருங்க........வெளுத்து வாங்குங்க....

சரி. திறவுகோல் கிடைத்து விட்டதா? (எங்க பட்டிக்காட்டுல சின்ன வயசுல ஊருக்குப் போனா தொறகாலு எடுத்துக்கிட்டு வான்னு ஊர்க்காரங்க சொல்வாங்க....நான் என்னன்னு கேட்டா சாவியக் காட்டுவாங்க...இப்ப அங்கயும் சாவிதான்....)

said...

ஆமாங்க உதயகுமார், டீச்சரே அர்ரியர்ஸ் வச்சா ஆகுமா? சீக்கிரமா இதுவரை வந்த பதிவுகளை 'மேய்ஞ்சிட்டு'
சரித்திர வகுப்பை ஆரம்பிச்சுரணும். தினமலர்லே உங்களைக் கண்டுக்கிட்டதுக்கு வாழ்த்துகள்( ராகவன் கவனிக்க.)

said...

பாலா,
சித்திரம் பேசுதடி வந்துருச்சா?அடடா.....

said...

ராம்கி,

வாங்க வாங்க.
சிங்கப்பூர்லே 'முஸ்தாஃபா'வோட புது நகைக்கடையிலே வலம் வந்தப்ப, என்னவோ தெரியலை
உங்களை நினைச்சுக்கிட்டேன்! ஒரு கிராம் கூட வாங்கலையாக்கும்.

said...

ராகவன்,

நல்லா இருக்கீங்களா? இன்னும் ரெண்டுவாரம் ஆகும் சரித்திர வகுப்புத் தொடங்க.

கிராமத்துலே பழைய வீடுங்க சாவி எல்லாம் அவ்வளோ சீக்கிரமாத் தொலைஞ்சு போகாதுல்லே?
அதான் ஆறு இஞ்சு நீளமா, கனமான இரும்புச் சாவியாச்சேப்பா.

said...

//குமரன் & இ.கொ,

அடடாடா..... எல்லாம் விவரமா இருக்கீங்களேப்பா. அக்காவோட ட்ரெயினிங் பரவாயில்லையே! பேஷ் பேஷ்//

ஆகா, கடைசியா வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி.

வாங்கறதுக்குள்ளதான் தாவு தீந்து போச்சு. :)

said...

அக்கா, போடிக்கு என்னா விசயமா வந்தீக? நம்மளும் அந்த பக்கந்தேன். போடிலதான நம்ம சின்னப்பாட்டையா வம்சமே இருக்கு. மத்தபடி பொறந்தது வளந்ததெல்லாம் கோம்பை.

said...

யக்கோவ், கும்புட்டுக்குறேன். நல்லா இருக்கீங்களா...? ஆனாலும் நீங்க செஞ்சது ரொம்ப அநியாயம். இங்க வர்றப்ப வீட்டுக்கு வர்றேன்னு சொன்னத மறந்துட்டீங்க போல...ஹும். நிலா கதையில உங்க போட்டோ நல்லா இருந்துச்சு. சாவி கெடைக்க ஒரு வழி சொல்லவாக்கா..? அம்னீஷியாவுக்கு ட்ரீட்மெண்ட் எடுங்க...! அடிக்காதீங்கக்கா....!!

said...

துளசி, இன்னும் விரிவாய் பயணக்கதையை எழுதுங்க. பார்த்தது, கேட்டது, பேசியது, சந்தித்தது
மற்றும் வம்பெல்லாம் இருக்கே :-))

நானும் ஊருக்கு போறேனே. நாலு நாளிலா அல்லது இருபதாம் தேதியா என்று முடிவாகவில்லை.

said...

முருகன் தம்பி,

எங்கே வர்றது? அங்கே இருந்தது வெறும் 48 மணி நேரம்தான். அதுலேயும் அரைநாள்
தேக்கடிக்குப் போயாச்சு. எங்க போயிரப்போறேன்? அடுத்தமுறை வந்துரட்டா?

said...

பிரேமலதா,
அடடே, நீங்களும் அந்தப் பக்கம்தானா? எனக்கு 'போடி' மாமியார் வீடு. நாத்தனார்
புள்ள கல்யாணத்துக்காக வரவேண்டியதாப் போச்சு.

said...

உஷா,

நீங்களும் ஊருக்கா? மதுமிதாகூடப் பேசிக்கிட்டு இருந்தப்ப உங்களுடன் நடந்த சந்திப்பைச்
சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எப்படியாவது ஒருசமயம் நீங்களும் நானும் சென்னையில் சந்திக்கணுமுன்னு
ஒரு தீர்மானம் போட்டுருக்கேன். நடக்குதான்னு பார்க்கணும்.

சந்தோஷமாப் போயிட்டு வாங்க.

said...

துளசியக்கா,
தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களை சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

said...

டி.ராஜ்,

உசிலம்பட்டி வழியாப் போனப்ப உங்களை நினைச்சுக்கிட்டதென்னவோ நிஜம். ஆனா நீங்க இல்லாததாலே
ஊர் பயங்கர செழிப்பா கண்ணுக்கு அழகா இருந்துச்சு:-)))))

said...

ஜோ,
அதனாலென்ன, அடுத்தமுறை சந்திச்சாப் போச்சு. நமக்கு இந்தியா போகமுடியலைன்னா, அந்த வருத்தம் தீர
விசிட் அடிக்கத்தான் சிங்கை இருக்கேப்பா.

said...

ஹலோ..

எப்படி இருக்கீங்க?

சென்னை மீட்ல எடுத்த ஃபோட்டோஸ்லாம் இருக்கா?

உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்.. கோபால் சாரையும்தான்.

உங்க பயண அனுபவங்களையே இன்னும் பத்து பதிவுக்கு எழுதலாம் இல்லையா?

எழுதுங்க..

said...

வாங்க டிபிஆர் ஜோ,

மடமடன்னு எழுதித் தள்ளியிருக்கீங்க. நின்னு படிக்க நேரமில்லாம வந்ததில் இருந்து ஒரே ஓட்டம். இன்னும் ரெண்டு மூணு
நாளில் படிக்க நேரம் கிடைக்கும். பதிவெல்லாம் படத்துடன் போடலாமுன்னு இருக்கேன்.

said...

டி ராஜ்,

:-)))))

said...

//சிங்கப்பூர்லே 'முஸ்தாஃபா'வோட புது நகைக்கடையிலே வலம் வந்தப்ப, என்னவோ தெரியலை
உங்களை நினைச்சுக்கிட்டேன்! ஒரு கிராம் கூட வாங்கலையாக்கும். //

மதுரைலேயே என்னை நினைச்சிருக்கக் கூடாதா? கோபால் கார்டு தேய்ச்சிருக்க வேண்டிய அவசியம் குறைஞ்சிருக்குமே!:-))

said...

//நீர் தான் அக்கா அக்கா என்கிறீர்!
அங்க பின்னூட்ட பிதாமகள் உம்மை பத்தி ஊருக்கு போன உடனே பொறாமை படறாரே!//

பாருங்க, நம்ம பதிவுல இப்படி எல்லாம் பின்னூட்டம் போடறாங்க. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?

said...

இ.கொ,

போகட்டும் விடுங்க. அவுங்கெல்லாம் 'பாசமலர்' பார்க்காதவங்களா இருக்கலாமுல்லே? இப்படி
'மூட்டிவிடறதே' வாழ்க்கை லட்சியமாக் கொண்டு பலர் இருக்காங்கதானே?:-))))

said...

இவங்க பேச முடியாதபடி நம்ம பதிவுக்கு வந்து ஒரு கருத்து போடுங்க. (உங்களுக்கு ஒண்ணு இது. எனக்கு ஒண்ணு?)

சின்ன பையன். இந்த கையிக்குன்னு அழுதாலும் அழுவேன். தயாராகவே வாங்க.

said...

துளசிக்கா,

Welcome back! நல்வரவு! வந்து வழக்கம் போல அசத்துங்க!

ஊர்ல பேசிக்கிட்டாங்களான்னு தெரியலை. நீங்க படிச்ச பேப்பர்லயும் வந்துச்சான்னு தெரியலை. அதனால இங்க சொல்லிடறேன். ரீஜண்டா ஒரு பதிவு ஆரம்பிச்சிருக்கேன் - தலைவருக்காக! நேரம் கிடைக்கும்போது வந்து கொஞ்சம் "கேளுங்க" :)

said...

அடட... சுந்தர்! வாங்க வாங்க. அக்காவோட சூறாவளிச் சுற்றுப் பயணத்துலே 'பேப்பரை' ஊன்றிப் படிக்க நேரமில்லையேப்பா!:-)
புதுப் பதிவைக் கட்டாயமா வந்து 'கேட்டுக்கறேன்'.

said...

பத்திரமா வந்தது மகிழ்ச்சி.
திறப்பு கிடைச்சிட்டுதா?

said...

வாங்க ஷ்ரேயா.
திறப்பு இப்பத்தான் கிடைச்சுச்சு!

இனி எல்லாம் சுகமே:-)

said...

என்னை மறந்ததேன்... அக்காவே .. அக்காவே....


:(( அழும் தம்பி ...

ஜீவா

jeeves_k at yahoo.com

said...

ஆப்சென்ட் ஆனதுக்கு மன்னிச்சிடுங்கோ! விசிட் பத்தி விவரமா எழுதிடுங்கோ! போட்டோ எல்லாம் உண்டுதானே?

said...

Vanthacha periyamma :-)

said...

வந்துட்டேண்டா என் சிநேகிதியே.

said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்????????
///நடுவிலே ஒரு தோழி வீட்டுலே ஒரு நாள் தமிழ்மணம் 'பார்க்க' முடிஞ்சது///

சாவி கிடைச்சாச்சா?????????

said...

ம்து,

டூப்ளிகேட் சாவிங்க செஞ்சவுடனே பழைய சாவிங்க கிடைச்சிருச்சுப்பா.

அந்தக் கடைக்கு போன ஜென்மத்துலே (!)கடன்வச்சிருந்தேனாமே:-)

said...

ஊருக்கு போயிட்டு வந்தாச்சுன்னு சொன்னா 80 பின்னூட்டமா? (உங்க பதிலையும் சேத்துதான்.) உண்மையிலையே ....

//என்ன இருந்தாலும், பின்னூட்ட நாயகின்னா அது நீங்கதானே.//


ஹிஹி

said...

இ.கொ,

'கிடைச்ச பட்டத்தை' தக்கவச்சுக்கிறதுக்கு என்னெல்லாம் பண்ணவேண்டியிருக்கு பாருங்க.

ஆச்சு இன்னும் ரெண்டு:-)

said...

வாங்க ராம்கி,

உங்களைச் சந்திக்க முடியாமப் போனது கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்துச்சு.
எங்கே போயிருது? அடுத்தமுறை நான் அங்கே வர்றப்பவோ, இல்லாட்டா நீங்க இங்கே
வர்றப்பவோ சந்திச்சாப் போச்சு! என்ன நாஞ்சொல்றது?

said...

பாரதி,

நல்ல சந்தர்ப்பத்தைக்'கோட்டை' வுட்டுட்டீங்களே:-))))
( அடிக்க வரலை தானே?)

டீச்சர் இல்லாதப்ப சேர்ந்த புது மாணவரா? அடடா.... ஸ்பெஷல் க்ளாஸ் ஃபீஸை
யாருகிட்டே கொடுத்தீங்க?

அடுத்தமுறை ஸ்டேஷன் பெஞ்சு பேச்சை மீறக்கூடாது, ஆமா.

said...

ரொம்ப சாரி, முந்தைய பதிவுகளெல்லாம் பார்க்காமல் 8 ஆம் தேதி பதிவுதான் முதல்னு நினைத்து அங்கே ஒரு மிஸ்ட் கால் விட்டிருக்கேன்!

said...

தாணு,

வாங்க. என்னடா காணாமேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.