Friday, March 24, 2006

மீநாக்ஷி, நல்லா இருக்கியாம்மா?





பயண விவரம் பகுதி 9


'கடக் முடுக்'குன்னு ஒவ்வொரு ச்சீடையா வாய்க்குள்ளெ போய்க்கிட்டு இருக்கு. டைம் பாஸ்! வேற என்ன செய்ய?இதோ, மதுரைக்குப் போகறதுக்காக 'ஏர் டெக்கன்' லே ஏறக் காத்துக்கிட்டு இருக்கோம். மாலை நாலரைக்குன்னு 'நெட்'லே பார்த்தோம். இங்கிருந்தெ பதிவும் செஞ்சாச்சு. நேத்து இதே விமானத்துலே கிளம்புன 'மாப்பிள்ளை' ஏர்ப்போர்ட்லே இருந்து ஃபோன் செஞ்சு, நாலரை கிடையாதாம். 'அஞ்சரையாம்' ன்னு சொல்லியிருந்தார். ஆனா இப்பமணி ஏழாகப்போகுது. நாலரையை அஞ்சரையா மாத்துனதுக்கோ, இல்லே இப்படி எல்லாரையும் காக்க வச்சதுக்கோ ஒரு அறிவிப்பும் கிடையாது. ஒரு குற்ற உணர்ச்சியோ அல்லது மக்கள் கிட்டே ஒரு மன்னிப்பு சொல்றதோன்னு எதுவுமே இல்லை. நம்ம மக்களும் இதெல்லாம் ரொம்பவே சகஜமப்பான்னு எதுருலே இருக்கற டிவியிலே கிரிக்கெட்டுகேம் பார்த்துக்கிட்டு இருக்காங்க.


வரவர, இந்த கேம் ஒரு போதைப் பொருளாட்டம் ஆயிருச்சு. ஜனங்கள் சுற்றுப்புறத்தை மறந்து கேள்வி ஏதும் கேக்காம இருக்கணுமுன்னா, இந்த கிரிக்கெட்டு கேம் (முந்தி எப்பவோ விளையாடி முடிச்சதா இருந்தாலும் பரவாயில்ல. மறு மறு மறு ஒளிபரப்போ, இல்லே டேப் செஞ்சு வச்சுக்கிட்டு போடறாங்களோ தெரியாது) ஒண்ணைப் போட்டுட்டாப் போதும்! பயணிகள் காத்திருக்கற பகுதியிலே 'நடிகை கீதா' உக்காந்துக்கிட்டு, செல்லுலே மும்மரமாப்பேசிக்கிட்டு இருந்தாங்க. இதை நான்கூடக் கவனிக்கலை. எங்க இவர்தான் பார்த்துட்டுச் சொன்னார். இந்த மாதிரி முக்கிய விஷயம் எல்லாம் இவர் கண்ணுலேதான் படும்!


ஒருவழியா ஏழரைக்குக் கூப்புட்டு உள்ளெ ஏத்துனாங்க. ரொம்ப குறுகலா ஒரு பாதைவிட்டு ரெண்டு பக்கமும் ரெவ்வெண்டு ஸீட் வச்ச விமானம். இதோட ரெக்கைகளைப் பார்த்தாவே, இது என்னாத்த சுத்தி, என்னாத்தைக் காத்துகிளம்பி, எப்படி இதை தூக்குமுன்னு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செஞ்சது. படிக்க எதாச்சும் இருக்கான்னு முன்னாலேபார்த்தா ஒரு 'இன் ப்ளைட் மேகஸீன்' இருந்துச்சு. அதுலெ வர்ற கூப்பான் ஸ்பெஷல் எல்லாம் யார்யாரோ நீட்டாக் கிழிச்சுட்டாங்க போல, மீதி இருக்குற நாலு பக்கம் அம்போன்னு தொங்குது. சரி, இருக்கட்டுமுன்னு ஒரு சின்ன தூக்கம் போட்டேன். துப்பட்டா இருக்கறது நல்லாத்தான் இருக்கு, மூஞ்சை மூடிக்கிட்டுத் தூங்க:-)


நண்பர் ஏற்கெனவே ஹொட்டலே ரூம் போட்டுருந்தார். ஹொட்டல்காரவுகளே 'பிக் அப்' செஞ்சுக்கிட்டாங்க. நமக்காகஹொட்டல்லே காத்துக்கிட்டு இருந்த நண்பருக்குப் ஃபோன் செஞ்சு 'வந்துக்கிட்டே இருக்கொம்'னு சொல்லியாச்சு.


அங்கெ போய்ச் சேர்ந்ததும் நண்பரோடு கூட இன்னொரு நண்பரும் இருந்தார். நம்ம கையிலே ஒரு ச்சின்னப் பொட்டி மட்டும்தான். அதைக் கொண்டு போய் ரூம்லே போட்டுட்டுக் கீழே வந்தோம். அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட்,பேரு'கிறிஸ்டல்' இருக்கு. சாப்புட்டுக்கிட்டே பேசலாமுன்னு உள்ளெ போய் உக்காந்து, மெனுவைப் பார்த்தா, வறுத்த குழந்தை இருக்குன்னு போட்டுருக்கு. அதுவும் தங்க நிறத்துலே வறுத்ததாம்.'என்னாடா இது சிறுதொண்டர் காலமா? 'ன்னு நினைச்சுக்கிட்டே இன்னும் படிச்சா, ஆந்திரா மிளகாய் விளக்கு! போச்சுரா, இது என்ன அற்புத விளக்கா?


'ராயல் கோர்ட்' லே கொஞ்சம் சொல்லி வைக்கணும்! அட்டகாசமா யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு அலங்காரமா சர்வ் செய்யறவரைக்கும் சரி. இத்தையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா? இந்த 'மெனு' பார்த்துச் சிரிக்கிற வழக்கம்என் மக கிட்டே இருந்து தொத்திக்கிச்சு. மெட்ராஸ் 'கீதா கஃபே' லே cali flover பார்த்து ஆரம்பிச்சது மூணரை வருசம்முந்தி.( இன்னும் அப்படியேதான் இருக்குன்றது வேற விஷயம்!)


மதுரைன்னதும் நம்ம நண்பர்கள் யாருன்னு ஊகிச்சிருப்பீங்கல்லே? நம்ம தருமியும், காகாபிரியனும்! வலை நண்பர்களைச்சந்திக்கறப்ப, அவுங்களை இப்பத்தான் மொதமொதப் பாக்கறோமுன்ற உணர்வு வர்றதில்லைங்க. காலங்காலமாய்தெரிஞ்சவுங்கன்னு தோணிப்போகுது. பேசுனோம், பேசுனோம் அப்படிப் பேசிச் சிரிச்சோம்.


ஒரு வழியா ' இரண்டாம் இண்ட்டர்நேஷனல் வலை மாநாடு' முடிஞ்சப்ப இரவு 11 மணி ஆயிருச்சு. நம்ம 'காகா'வோடபெயர்க் காரணத்தையும்( ரொம்ப முக்கியம் பாரு?) கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். யாருகிட்டேயும் சொல்றதில்லைன்னு கையிலே கிள்ளி சத்தியம் செஞ்சுட்டேன்லெ:-) அவர் ஒரு நாளைக்கு 'கொசுவத்தி' ஏத்தறப்ப சொல்லிருவார்,இல்லியா?ஆனா அதுக்கு நாளாகும். இப்ப ச்சின்னப் பையனா இருக்கார். இஞ்சிநீயரிங் கடைசி வருஷ மாணவர். ஆனாலும் இப்படிச்சின்னவயசுக்காரங்க நிறையப்பேர் தமிழிலே எழுதறதும், வாசிக்கறதுமா இருக்கறது மெய்யாலுமே சந்தோஷமாத்தான் இருக்கு.


மறுநாள் காலையிலே 'மீநாக்ஷி'யைப் பாக்கப் போனோம். கடைசியாப் பார்த்து 16 வருசத்துக்கும் மேலே ஆயிருச்சு.அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கிட்டு உள்ளே போனா ,நம்ம 'பார்வதி' ஓரக்கண்ணாலே தட்டையே நோட்டம் விடுது.சரி, இந்தான்னு அதுலே இருந்த வாழைப் பழங்களை பார்வதி'கை'யிலே கொடுத்துட்டு உள்ளே போனா, பள்ளிக்கூடப்பசங்க கூட்டம். ஸ்கூல் பிக்னிக்? இருக்கும்.


மீநாக்ஷி அப்ப பார்த்த மாதிரியேதான். முன்னாலே உக்காந்து கொஞ்சம் குசலம் விசாரிச்சேன். குருக்கள் அர்ச்சனையை'திவ்யமாப்' பண்ணார். 'பழம் வைக்கலையா'ன்னு கேட்டார். 'பார்வதி'க்குக் கொடுத்துட்டேன்னதும், 'கடைக்காரங்க பழம்வைக்காம விட்டுட்டாங்களோ?'ன்னு நினைச்சேன்னார்.
நம்ம சுந்தரேஸ்வரரும் அப்படிக்கப்படியே இருந்தார். மண்டபத்துலே 'யாராவது' இருக்காங்களான்னு பார்த்தேன்.கோயிலைச் சுத்தி வர்றப்பக் கோயில் கடைகளையும் ஒரு நோட்டம் விட்டேன். முந்தியெல்லாம் அழகான கலர்களிலே கல்லுரல், திருகைக்கல், குடம், பாத்திரமுன்னு, மரச் செப்புகள் குவிஞ்சு கிடக்கும்.இப்ப ஸ்டிக்கர் பொட்டும் வளையலுமா இருந்துச்சு. ரிப்பன் கடைகள் கூட இப்பெல்லாம் காணாமப் போயிருச்சுல்லே?


இன்னொரு பிரகாரத்துலே மூணு ஒட்டகங்கள் உக்கார்ந்திருந்தன, அலங்கார 'ச்சத்தர்' மேலே போர்த்திக்கிட்டு! ஆமா, எப்பருந்து ஒட்டகம் கோயிலுக்கு வந்துச்சுன்னு யாருக்காச்சும் தெரியுமா? அதுக்கும் ஒரு கதை இருக்கணுமே? அப்படியே மெதுவா நகர்ந்துப் பொற்றாமரைக் குளம் வந்தோம். நிஜமாவே தங்கத்தாமரை ஒண்ணு ஜொலிச்சுக்கிட்டு இருந்துச்சு.


இங்கே போறதுக்கு முன்னலெ ஒரு வாசலைக் கடந்து வந்தோமா, அங்கே இருந்த ஒரு விளக்கலங்காரம் அடடா...பித்தளையிலே செஞ்சு சுவத்துலேயே பதிச்சு இருக்காங்க. அந்தச் சிற்பத்தோட விரல், நகம் எல்லாம் சொல்லமுடியாத அழகு!


இப்ப எவ்வளவுக் கஷ்டப்பட்டாலும் இது போல ஒரு கோயிலை உண்டாக்க முடியுமா? ச்சின்ன இடைவெளியிலும் கூடபார்த்துப் பார்த்துச் செய்த சிற்ப வேலைகள். ஒவ்வொண்ணையும் அனுபவிச்சுச் செஞ்சிருக்காங்க. மனுஷனுக்கு இவ்வளவு அழகுணர்ச்சியும், கலையைப் பரிபூரணமா உணர்ந்து படிச்சு, அதை கண்முன்னே கொண்டுவர முடிஞ்சதையும் பார்த்தா, அப்பத்து மக்கள் எல்லாம் ரொம்பவே ஆனந்தமா இருந்திருக்கறாங்கன்னு தோணுது.


கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு( கொஞ்ச நேரம்தான், முழூஊஊஊஊஊஊசாப் பாக்கறதுன்னா வாழ்நாள் பத்தாதே!) பொற்றாமரைக் குளத்துப் பக்கத்துலே பூ வித்துக்கிட்டு இருந்த அம்மாகிட்டே,(ம்ம்ம்ம்ம் என்ன பூவா? மதுரையிலே என்ன வாங்குவாக? மதுரை மல்லிதான்!) என்னா விலைன்னு கேட்டா நூறு அஞ்சு ரூவாயாம். ஆமாம் எப்படி எண்ணுவீங்கன்னு கேட்டா அப்படியே கட்டைவிரல் நகத்தாலே நகத்தி எண்ணிக் காமிச்சாங்க. பத்து ரூபாய்க்குப் பூவை வாங்கி மணக்கமணக்கத் தலையிலே வச்சுக்கிட்டு ( எண்ணாமத்தான் ஒரு அளவாக் குடுத்தாங்க அந்தம்மா) இன்னொருக்கா நம்ம 'பார்வதி'யைப் பார்த்துட்டு வெளியே வந்தோம்.


நமக்காக ஷங்கர் வெளியே காத்துக்கிட்டு இருந்தார். ஓ... சொல்ல மறந்துட்டேன் இல்லே ஷங்கர் யாருன்னு?ஒரு அஞ்சு நாளைக்குக் கார் வேணுமுன்னு ட்ராவல்ஸ்லே கார் எடுத்தோம். அதோட ட்ரைவர்தான் நம்ம ஷங்கர்.வெளியே வந்து காருக்குள்ளெ ஏறரதுக்குள்ளே பொண்ணுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு கைக்குழந்தையோட வேறநம்மளைச் சூழ்ந்துக்கிட்டு தர்மம் செய், தர்மம் செய்ன்னு பிச்சுப் புடிங்கிட்டாங்க. நிறைய இடங்களில் கோவிலுக்குப் பக்கத்துலே இப்படி தர்மம் கேட்டு ஆட்கள் இருக்காங்கன்னாலும், இங்கே கொஞ்சம் வித்தியாசமா உணர்ந்தேன்.ஏறக்குறைய ஒரே வயசுப் பொண்கள், ஒரே வயசுக் குழந்தைகள். பாவம்தான். இல்லேங்கலே. ஆனா இரக்க குணம் இருக்கறவங்களையும் அரக்க குணமா மாத்தறதுபோல இருந்தது அவுங்க செயல். என்னன்னு புரியலை(-:இதை எழுதவேணாமுன்னு தான் நினைச்சேன். ஆனா இதுலே என்னமோ இருக்கு, அதெப்படி எல்லாரும் ஒரே வயசு?யாராவது இவுங்களை வச்சு இந்தப் பிச்சைத்தொழிலைச் செய்யறாங்களோ?


அறைக்கு வந்ததும் பொட்டியை எடுத்துக்கிட்டு உடனே கிளம்பிட்டோம், போடியை நோக்கி. அடடா, தாழம்பூ குங்குமம் கோயில்கிட்டே இருந்துச்சே, வாங்காம வந்துட்டமே. சரி, எப்படியும் இங்கேதானே ரெண்டு மூணு நாளுலே திரும்பவரப்போறோம், அப்ப வாங்கிரலாம்.

28 comments:

said...

டீச்சர்
மீநாக்ஷி , மீனாக்ஷி எது சரி???

வர வர தமிழே மறந்துவிடும் போல இருக்கு எனக்கு

said...

there was an article in Hindu about these beggars. they are from North camping near the busstand, mattu thaavani. children are all hired and the child-attached beggars have their business time from 1am to 3 pm and average income is around 300/day.

you have inadvetently torn the 'mukath thirai' of kaaka priyan, i suppose!

said...

சின்னவரே,

இப்படி சந்தேகம் வருவதும் நியாயம்தான்.
நம்ம வீட்டுலே இருக்கற ஒரு பழைய சாமிப் படத்துலே இப்படி 'மீநாக்ஷி'னு இருக்கு.
சரிதான், சாதாரண மனுஷனுக்கு/மனுஷிக்கு மீனாக்ஷி. சாமிக்கு மீநாக்ஷி ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.
பண்டிதர்கள் பதில் சொல்ல வேணும்.

said...

வாங்க தருமி,

அப்படியா விஷயம். இதுக்கு அரசு நடவடிக்கை ஒண்ணும் எடுக்கலையா?

'காகா பிரியன்' உண்மைப் பேரைச் சொல்லலியே, முகத்தை மட்டும்தானே காமிச்சேன் :-)

said...

அக்கா,
போட்டோல டாலடிக்கற ஆரஞ்சு அடிடாஸ் டீஷர்ட் போட்டுகிட்டு ஸ்டைலா இண்டெலிஜெண்ட் லுக் நல்லாத்தான் விடறாரு பெரிய்ப்பா :))

/அதெப்படி எல்லாரும் ஒரே வயசு?யாராவது இவுங்களை வச்சு இந்தப் பிச்சைத்தொழிலைச் செய்யறாங்களோ?
//
மதுரைல நான் அவ்வளவு பாக்கல. இந்த விஷயத்துல நான் பாத்ததுலேயே மகா மோசம்னா திருச்சானூர்தான்.

said...

ராம்ஸ்,

திருச்சானூர்லேயா? என்னன்னு விவரமாச் சொல்லுங்க.

உங்க 'பெரியப்பா' அட்டகாசமா இருக்காருல்லே?:-)

பழக இனிமையானவர்ப்பா. நல்லா இருக்கட்டும்.

said...

இதோட ரெக்கைகளைப் பார்த்தாவே, இது என்னாத்த சுத்தி, என்னாத்தைக் காத்துகிளம்பி, எப்படி இதை தூக்குமுன்னு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செஞ்சது. //

எனக்கும் அப்படி பலமுறை தோனியிருக்கு.. ஆகாசத்துல போறப்போ ஏதோ பறக்குற பஸ்சுல போறா மாதிரி இருக்கும்..

என்ன பண்றது? அதுக்குன்னு மதுரைக்கு ஏர்பஸ்சா விடமுடியும்.. ஏதோ ஒங்கள மாதிரி அசலூருலருந்து வர்றவங்கதான மதுரைக்கு பறந்து போறீங்க.. இங்கருக்கறவங்க கார்லல்லே பறக்கறாங்க.. இல்லன்னா இருக்கவே இருக்கு செகண்ட் ஏசி. ராத்திரியில ஏறி படுத்தா விடியற்காலைல மதுரை.. தூங்கி எழுந்தா மாதிரியும் இருக்கும். ஏர்போர்ட்ல போயி மணிக்கணக்கா உக்கார்ந்துட்டிருக்கறதுக்கு இது தேவலை..

said...

//பயணிகள் காத்திருக்கற பகுதியிலே 'நடிகை கீதா' உக்காந்துக்கிட்டு, செல்லுலே மும்மரமாப்பேசிக்கிட்டு இருந்தாங்க. இதை நான்கூடக் கவனிக்கலை. எங்க இவர்தான் பார்த்துட்டுச் சொன்னார். இந்த மாதிரி முக்கிய விஷயம் எல்லாம் இவர் கண்ணுலேதான் படும்!// வேறப்படி, அதானே எப்பவுமே அட்ராக்ஷன்!

said...

http://en.wikipedia.org/wiki/Meenakshi

இதுக்கு எதுக்கு பண்டிதர்லாம்? மீனாக்ஷிங்கிறது தமிழே கிடையாது, சமஸ்கிருதம். சுத்த தமிழாக்கம் வேணுமின்னு நினைச்சா "அம்மா கயல்விழி"ன்னு வைச்சுக்கலாமே.

said...

கேட்டா நூறு அஞ்சு ரூவாயாம். ஆமாம் எப்படி எண்ணுவீங்கன்னு கேட்டா அப்படியே கட்டைவிரல் நகத்தாலே நகத்தி எண்ணிக் காமிச்சாங்க.

முத முதல்ல மதுரைக்கு வெளில முழம்-போட்டு பூ வாங்கினப்ப என்னால புரிஞ்சுக்கவே முடியல. நாங்க எப்பவும் 100, 200தான். எனக்கு எண்ண மட்டுமில்ல, கட்டவும் தெரியும்.

said...

என்னங்க டிபிஆர் ஜோ,

ஏர் பஸ் விட்டாக் கூட நல்லாத்தான் இருக்குமுல்லே? அதான் கூட்டம் வருதேங்க.

//ஏர்போர்ட்ல போயி மணிக்கணக்கா உக்கார்ந்துட்டிருக்கறதுக்கு இது தேவலை..//

நியாயம்தான். ஆனா நேரத்தைச் சேமிக்கலாமுன்னு திட்டம் போட்டா இப்படித்தான் ஆயிருது
இல்லீங்களா?

said...

உதயகுமார்,

'பாம்பின் கால் பாம்பறியாதா?':-))

said...

பிரேமலதா,

வாங்க வாங்க. நலமா?

கயல்விழி! அப்படிப்போடு அருவாளைன்னானாம். ஆனா கயல்விழி கோயில்ன்னு எழுதுனா
மக்கள்ஸ் எளிதாப் புரிஞ்சுக்குவாங்களாங்க?

said...

அப்புறம் "கெயவி"ன்னு MGR சொல்ற மாதிரிப் போயிடும்.

(நான் இன்னொரு பின்னூட்டம் விட்டேன் காணலியே?)

(I was joking about "pure Tamil").

said...

பிரேமலதா,

உங்க பின்னூட்டம் 'பார்வதி' மாதிரி ஆடி அசைஞ்சு இப்பத்தான் வந்து சேர்ந்திருக்கு. சேலம் பக்கம் அரூர்லே கூட
நம்ம அக்கா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டே இருந்து 100, 200ன்னு கனகாம்பரம் (உதிரிப்பூக்கள்) வாங்குனது ஞாபகம் வருதே.
நிறைய செடி போட்டு பூ வித்துக்கிட்டு இருந்தாங்க அவுங்க. நாங்கதான் மெயின் கஸ்ட்டமருங்க. வீட்டுலே 7 தலைகள் பூ வச்சுக்கறதுக்குன்னு:-)

எம் ஜி ஆர்....கெயவி... ஹா ஹா ஹா....(

said...

தனியொருவராக (நக்கீரர் இல்லாத நேரமா பாத்து) வந்து, தருமிக்குப் பொற்கிழி கொடுத்ததைப் படம் எடுத்தும் அதைப் போடாமல் விட்டதற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(உங்கள் இருவரையும் எங்கள் வீட்டில் வைத்து எடுத்தது 'கூவி'ரிச்சே அது மாதிரிதான் ஆயிரிச்சோ?)

said...

என்னங்க தருமி,

படம் போடாத காரணம் எல்லாம் ஒரு தன்னடக்கம்தான்:-)

போடச் சொன்னா போட்டுடறேன்.

தமிழ் எழுத்து வந்துருச்சே, திக்விஜயம் முடிந்ததா?

said...

"ம்ம்ம்ம்ம் என்ன பூவா? மதுரையிலே என்ன வாங்குவாக? மதுரை மல்லிதான்!) என்னா விலைன்னு கேட்டா நூறு அஞ்சு ரூவாயாம். ஆமாம் எப்படி எண்ணுவீங்கன்னு கேட்டா அப்படியே கட்டைவிரல் நகத்தாலே நகத்தி எண்ணிக் காமிச்சாங்க. "

மதுரையில மல்லி விலை கேட்டு மகராசிகிட்ட வாங்கி கட்டுனது ஒரு ஞாபகம் மின்னுறது!

said...

மீனாட்சியம்மனைத் தரிசனம் செய்தீர்களா...ஆகா! பக்கத்திலதான திருப்பரங்குன்றம், அழகர்கோயிலு, பழமுதிர்ச்சோலை எல்லாம் இருக்குது.........அங்கயும் ஒரு எட்டு போயிட்டு வந்திருக்கலாமே.......

பார்வதிக்கு வாழப்பழம் குடுத்த மாதிரி முந்தாநேத்து சங்கரங்கோயில் கோமதிக்கு ஒன்னு குடுத்தோம்...குடுக்குறது எங்க...கோமதியே எடுத்துக்கிட்டா..என்ன ஏதுன்னு...இப்ப சொல்ல முடியாது..பதிவு போடனும்ல....கொஞ்சம் பொறுங்க...

ஆகா! வறுத்த குழந்தையா......ம்ம்....சின்னப்பிள்ளைல நாங்க
சாப்பா
டுப்போ
டப்பா
டும்-னு சொல்லி விளையாடுவோம்...இப்ப உண்மையாயிருச்சே...

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கோயமுத்தூர்ல ஒரு ஓட்டல்ல....please bare with usன்னு போட்டிருந்தது.....எல்லாரும் பயந்து ஓடி வர இருந்தாங்க...நாந்தான் தைரியஞ் சொல்லி சாப்பிட வெச்சிக் கூட்டீட்டு வந்தேன்.

said...

ராகவன்,

நீங்க சொன்ன இடமெல்லாமும் வருதுல்லெ. நின்னு நிதானமா எழுதலாமுன்னு......
எதை எழுதறது எதை விடறதுன்னு ஆகிருச்சே. எல்லாமே அம்சமான இடங்கள். அதான்....

said...

ஏர் பஸ் விட்டாக் கூட நல்லாத்தான் இருக்குமுல்லே? அதான் கூட்டம் வருதேங்க//

ஆனா அவ்வளவு பெரிய ஏர்க்ராஃப்ட ஹேண்டில் பண்ண ஃபெசிலிட்டி மதுரை ஏர்போர்ட்ல இருக்கோ என்னமோ..

said...

என்னங்க டிபிஆர் ஜோ,
இப்படிச் சொல்லிட்டீங்க? வளர்ச்சி வேண்டியிருக்குதானே? வேணுமெங்கில் பலா வேர்லேயும் காய்க்குமாமே!

நிறைய ப்ரைவேட் ஏர்லைன்ஸ் இருக்கறதும் ஒரு வகையிலே நல்லதுதான். வெவ்வேற நேரத்துலே நாள் முழுதும்
சர்வீஸ் இருக்கறமாதிரியும் செய்யலாம்.

இப்போதைக்கு இந்த ஏர் டெக்கன் சஸ்த்தாவா இருக்குது. மத்ததெல்லாம் இது மாதிரி ரெண்டு மூணு மடங்கு பாருங்க.

ஆனா 'ச்சீப்'ன்னு இருந்தாலும் சர்வீஸ் அத்தனை சுகமில்லை. இன்னும் வரப்போதுங்க பாருங்க, வரும் அத்தியாயங்களிலே!

said...

\\இந்த மாதிரி முக்கிய விஷயம் எல்லாம் இவர் கண்ணுலேதான் படும்!\\

:)))

\\மீநாக்ஷி அப்ப பார்த்த மாதிரியேதான்\\

லோகத்துல நடக்கறதெல்லாம் பாத்து சிரிச்சுட்டு இருக்கா?!

said...

ஆமாம் மீனா. அந்தம்மா சாமி.
நாமோ? அதான் சிரிக்கறா.

said...

அருமையான பதிவு.
இங்ஙன ஹைதராபாதில இருந்துக்கிட்டு எனக்கு நம்ம ஊரப்பக்கம் போவக் குடுத்து வைக்கலை.

அவ்வளவு தூரம் போனவுக பாண்டியன் (ஐடிசி)யிலயோ அல்லது அஷோக்கிலயோ தங்கிருக்க வேண்டியதுதானே... அடுத்த மாசம் அதே ஏர் டெக்கானில டிக்கட் போட்டிருக்கேன், சித்திரத் திருவிழாவப் பாத்துறணுமின்னு... எங்காத்தா மீனாச்சி எப்பக் கூப்பிடுவாளோ...

பைதிவே மீனாட்சி (மீன் அட்சி) அதாவது மீன் எப்படி தன் கண்களால் பார்த்தே தன் குஞ்சுகளைக் காக்கிறதோ அது போல் தன் ஆட்சியில் மக்களை அட்சி (கண்ணால்) பார்த்தே காப்பவள் அன்னை மீனாட்சி - அட இது நம்ம சொந்தச் சரக்கு இல்லைங்கோவ்... விசயகாந்தரு ராதா நடிச்சு மீனாட்சி திருவிளையாடல்னு ஒரு படம், அதில நம்ம சீர்காழி சிவசிதம்பரம் சொன்னாரு... அந்தக் காலத்துல நம்ம ஊருக் கோயிலக் காட்டுறாகன்னு பத்து தடவை பாத்த படமில்ல அது? (அதாவது கேசட்டு வாடகைக்கு நாள் முழுக்க எடுத்து ஒரே தடவை பாத்துட்டுக் குடுக்குறதாங்குற நல்ல எண்ணமும் உண்டு)

said...

வாங்க பிரதீப்,

பாட்டு, கச்சேரின்னு அமர்க்களமா இருக்கீங்க போல!

மஹால் கிட்டே போனப்ப உங்க நினைப்பும் வந்துச்சு. முதல் தெரு எங்கேன்னு கூடக் கேட்டேன்.

மீனாட்சியைப் பத்தி விஜயகாந்தரு சொன்னாச் சரியாத்தான் இருக்கும். அவரும் மருதைக்காரராச்சே!

அங்கே தங்குனது ராயல் கோர்ட்டுலே. நல்ல இடம்தான். விலையும் மலிவுதான். சர்வீஸும் நல்லா இருந்துச்சு.

கோயமுத்தூர்லே ஒருதடவை ஐடிசி/தமிழ்நாடு டூரிஸம் ஹோட்டல்லே தங்குனோம். திராபை. வாசல்லே வச்சிருந்த ஆளுயரக் குத்துவிளக்குதான்
அம்சமா இருந்துச்சு.

இப்பவும் சித்திரைத் திருவிழா விசிடி வாங்கியாந்திருக்கேன்.

said...

///ஆகா! வறுத்த குழந்தையா......ம்ம்....சின்னப்பிள்ளைல நாங்க
சாப்பா
டுப்போ
டப்பா
டும்-னு சொல்லி விளையாடுவோம்...இப்ப உண்மையாயிருச்சே...
////
ராகவன்,
இந்த சாப்பா டும்போ டப்போ டும், என்னோட ரெண்டாம் வகுப்பு வாத்தியார் சொன்னார், நீங்க சொன்னதும் திரும்ப ஞாபகம் வந்துடுச்சு.

said...

இங்கே
சாப்பா
டுப்போ
டப்ப
டும்

நான் சின்னப் புள்ளேலேயெ சொல்லி வெளயாண்டது