Thursday, March 23, 2006

துள்ளுவதோ முதுமை?



பயண விவரம் பகுதி 8


"ஹை, ஹவ் ஆர் யூ யங் மேன்?"

50+ ஐப் பார்த்து 80 கேக்கற கேள்வி!

கூடப் பேசறவங்களுக்குத் தன்னாலேயே உற்சாகம் தொத்திக்கும்!

இந்தப் பதினெட்டு வருச நட்பு ஆரம்பிச்சது 'இங்கேயும் இல்லே'ன்றதாலே. அதைச் சொன்ன விதத்தைவிட, சொல்லப்பட்டமொழி நம்மளை அப்படியே இழுத்துருச்சு. என்ன மொழியா? தமிழைத் தவிர வேற என்னவாம்?


சூப்பர் மார்க்கெட். ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும். வியாழக்கிழமை.அன்னைக்கு இங்கே 'லேட் நைட்'ன்னு சொல்ற நாள்.(இப்பக் காலம் மாறிப்போச்சு. 24 மணிநேரம் திறந்திருக்கற சூப்பர் மார்க்கெட்டெல்லாம் வந்துச் சக்கைப்போடு போடுது!)நானும், நாலுவயசு மகளும் ஒரு ஷெல்ஃபுலே சாமான்களை எடுத்துக்கிட்டு இருக்கோம். எங்க இவர் வேற ஷெல்ஃப்லே ஏதோ தேடிக்கிட்டு இருக்கார். 'இங்கேயும் இல்லே'ன்னு குரல் ஒண்ணு காதுலே வுழுது. என்னோட தலை அந்த மொழிக்குக் கட்டுப்பட்டுஅப்படியே ஒரு திரும்பல். அங்கே யாரும் இல்லை, ஆனா என் காலு மட்டும் சத்தம் வந்த திசையிலே பாயுது.கொஞ்சம் வயது முதிர்ந்த பெண்ணும்,ஆணும்.


" இந்தியாவா? தமிழ் பேசுனீங்களே?"

" அட, நீங்களும் தமிழா?"

'அப்பா, தமில் தமில்' னு சொல்லிக்கிட்டே அப்பாவைத் தேடி ஓடும் மகள்!

'வாங்க வீட்டுக்கு, இங்கே பக்கத்துலேதான்'ன்னு கையோடு கூட்டிக்கிட்டு போயாச்சு. 'விட்டாக் காணாமப் போயிருவாங்களோ'ன்ற பயம்?:-)


அரக்கப் பரக்க உப்புமா செஞ்சு விருந்தோம்பலை முடிச்ச சமயம் நாங்க 'திக் ஃப்ரெண்ட்ஸ்' ஆயாச்சு.நல்ல நட்புக்கு வயசு வித்தியாசமெல்லாம் இருக்கா என்ன?


இங்கே பஸிஃபிக் சமுத்திரத்துலே இருக்கற 'நவ்ரு'தீவுலே இருந்து வந்திருக்காங்க. 'ஏர் நவ்ரு'விலே'சீஃப் இஞ்சிநீயர்'. இதுக்கு முன்னாலே இந்தியன் ஏர்லைன்ஸ்லெயும், ஏர் இண்டியாவிலேயும்  வேலை செய்து ரிட்டையர் ஆனவர்.


இவுங்க ஏர் நவ்ரு ப்ளேன்களை எல்லாம் சர்வீஸ் செய்யறது, இங்கத்து ஏர் நியூஸிலாந்து. அதனாலே ப்ளேனை சர்வீஸுக்குக் கொண்டு வந்திருக்கார். ஒவ்வொரு தடவை வரும்போதும் ஏறக்குறைய ரெண்டு மாசம் ஆயிருமாம். இங்கே மோட்டலில் தங்கல். கூடவே மனைவியும்.


தினமும் காலையில் மாமா வேலைக்காக'ஹேங்கர்' போயிட்டால், திரும்ப வரும்வரை மாமி எங்க கூடவே!


ஒரு மாசம் போனதெ தெரியலை. சனி, ஞாயிறுன்னா ஒண்ணா ஊர் சுத்தல்!
அதுக்கப்புறம் இவுங்க ச்சென்னைக்கே திரும்பப் போயிட்டாங்க. நாமும் ச்சென்னை வரும்போதெல்லாம் தவறாம 'விஸிட்'னு நட்பு தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு.


இப்ப மாமாவுக்கு எம்பது முடிஞ்சுருச்சு. மாமிக்கு எழுபத்தாறு. இன்னும் பழைய சீண்டல், கேலி எல்லாம் அப்படியே இருக்கு.


இன்னமும் மாமா வேலை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கார். ரஷ்யா( ராம்ஸ் கவனிக்க)விலே இருந்து இங்கெ 'பைலட் ட்ரெயினிங்' எடுக்க வர்றவங்களுக்கும், ரஷ்ய விமானங்களில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்யப் பெண்களுக்கு 'ஏர்ஹோஸ்ட்டஸ் ட்ரெயினிங்' கொடுக்கவும் இருக்கற ஏவியேஷன் கம்பெனிக்கு ஜெனரல் மானேஜர்.


முந்தி இருந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாடியில் உக்கார்ந்து 'கடல்' பார்க்கலாம். நியூஸி மேலே ஒரு தீராத மோகம். இங்கே பார்த்த 'மோட்டல்'களின் டிஸைனை வச்சு அங்கேயும் வீட்டுலே ஒரு அவுட் ஹவுஸ் கட்டி வச்சிருந்தாங்க. ரொம்பப் பெரிய வீடு! இப்ப மெயிண்டெயின் செய்ய முடியலையாம். ஏர்கண்டிஷனரில் பீச் மண் வந்து நிறைஞ்சுருதாம். அதனாலே வீடு மாறியாச்சு.இப்பவும் அதே ஏரியான்னாலும் 'ஸீ வ்யூ' இல்லை.ப்ச்சு...(-:


ஆனா, கண்ணுக்குக் குளுமையா வேற காட்சிகள் இருக்கு. சடைசடையாக் காச்சுத் தொங்குற புளியமரங்கள். இதெல்லாம் ஒரு காட்சியான்னு நினைச்சா, அவுங்க பக்கத்து வீட்டுக்கு வரப்போறவங்களை வேணுமுன்னாச்
சொல்லலாம். சூரியா & ஜோதிகா. வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. அடுக்குமாடிதான். ஆனா ஒரு மாடி முழுசும் எடுக்கறாங்களாம். நல்ல நெய்பரா இருப்பாங்கல்லே?(படம் எடுத்தேன். போடலாமுன்னு ...)


'பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் நம்ம வீட்டு வழியாத்தான் போறாங்க தெரியுமா? ஆனா நான் வேற வழியாப்போவேன்'னார்.


மொதல்லெ புரியலை. அப்புறம் புரிஞ்சது. மின்சார மயானம் போற வழிதான் இது. அப்ப அது என்ன வேற வழி? உடல்தானம் செஞ்சுருக்கார். அதனாலெ மயானம் போகாம எதிரே இருக்கும் மலர் ஹாஸ்பிடலுக்குப் போயிருவாராம்.'இந்த லேடியை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. போனபிறகு அஞ்சுமணி நேரத்துக்குள்ளே என்னை அங்கே அனுப்பிறணும். வண்டியெல்லாம் ரெடி பண்ணனுமே'ன்னு மனைவியைப் பார்த்துக் கண்ணடிச்சுக்கிட்டே சொல்றார்.


எனக்கு அந்தப் பழைய வீட்டு மேலே 'தீராத மோகம்' ன்றதாலே எல்லோருமா கிளம்பி அங்கே ஒரு 'ரைடு' போயிட்டுஅப்படியே ஒரு 'செட்டிநாடு ரெஸ்டாரண்ட்'டில் ராச்சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டுத் திரும்பினோம்.


சாவை பத்தின பயம் இல்லாததாலே ஒவ்வொரு நிமிஷ வாழ்க்கையையும் அனுபவிக்கறாங்க. மாமா ஒரு பக்கம் பிஸின்னா,மாமியும் ஆன்மீகம், கோயில், வாக்கிங், எக்ஸ்னோரா பொறுப்புன்னு ஒரே ஓட்டம்தான். அழகான வீடு நிறையநியூஸியின் இயற்கை எழில் கொஞ்சும் படங்கள்.( இங்கே நம்ம வீட்டுலே ஒண்ணுமே இல்லை)


மூணுமணி நேரம் பறந்ததை நம்பவே முடியலை. அதுக்குள்ளே தொட்ட விஷயங்கள் ஒரு மூணு கோடி இருக்கும்!

19 comments:

said...

துளசியக்கா,
இந்தப் பதிவு நிறைய யோசிக்க வைக்குது.

said...

முத்துத்தம்பி,

இப்படிச் சொன்னா எப்படி? என்ன யோசிச்சீங்கன்னு சொல்றதுதான்?

said...

இந்த ஸ்ரீதர் 'இளமை ஊஞ்சலாடுகிறது'ன்னு படம் எடுத்தப்ப, ஸ்ரீதர் திருப்பி 'முதுமை தள்ளாடுகிறது' அடுத்த படம் எடுக்க போறார்னு நாங்கள் எல்லாம் கிண்டலடிச்சுக்கிட்டு இருப்போம், நீங்க துள்ளுவதோ முதுமைன்னு கிளப்பிட்டீங்க போங்க!

said...

இளமை என்பதும் கிழமை என்பதும் உளமே என்க. இளமையிலேயே கிழமையான உளங்களும் உள. கிழமையிலும் இளமையாக இருக்கும் உளங்களும் உள. உங்கள் நண்பர்கள் இரண்டாம் வகை. வாழ்க நலமுடன்.

அடடா! புளியங்காயா தொங்குதே....அதுல ரெண்டப் பறிச்சி...கோணூசில இல்லைன்னா சிணுக்கோலில (இதுக்கு வீட்டுல திட்டு விழும்) குத்தி தணல்ல வாட்டுனா..புஸ்ஸுன்னு வெடிச்சிக்கிட்டு வரும்...அப்ப லேசா உப்பத் தொட்டுக்கிட்டு தின்னா.......அடடா!

இல்லைன்னா...புளியங்கா, பச்ச மெளகா, உப்பு மூணும் சேத்துத் தட்டித் தின்னா...நாக்கெல்லாம் லேசா வெந்து...ஒரு மாதிரி சொகமா இருக்குமே!

ஐயா! சூரியா-ஜோதிகாவா.....போய்ப் பாக்கனுமே..பாக்கனுமே......

said...

வாங்க உதயகுமார்,

நீங்களே 'ட்ராமாப் பார்ட்டி!' நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.
உங்ககிட்டே எதாவது நகைச்சுவை நாடகம் ( ஒரு 4 பேர் வரை நடிக்கிறது) இருக்கா?
இப்பத்தான் உங்க தொடர் நாஸர் வர்ற வரை படிச்சிருக்கேன்

said...

ராகவன்,

புளி, மொளகா, உப்பு எல்லாம் திருட்டுத்தனமா வீட்டுலே இருந்து ஸ்கூல் கொண்டுபோய் கல்வச்சுத் தட்டித்
தின்னுட்டு, நாக்கெல்லாம் தோலுரிஞ்சு எரிஞ்சது அப்பப்பா......ஒரு வாரம் தினம் தயிர் சோறாயிருச்சு.

சிணுக்கோல் இப்பத்தான் (ஆனந்தா மெட்டல்ஸ்) மதுரையிலே இருந்து எட்டு ரூவாய்க்கு வாங்கியாந்தேன்.

said...

சாவை பத்தின பயம் இல்லாததாலே ஒவ்வொரு நிமிஷ வாழ்க்கையையும் அனுபவிக்கறாங்க. மாமா ஒரு பக்கம் பிஸின்னா,மாமியும் ஆன்மீகம், கோயில், வாக்கிங், எக்ஸ்னோரா பொறுப்புன்னு ஒரே ஓட்டம்தான்//

மனசும் உடலும் ஆக்டிவா இருந்தா அப்புறம் என்ன? வயசெல்லாம் ஒரு கணக்கே இல்லை..

said...

வாங்க 'என் உலகமே'!

சரியாச் சொன்னீங்க. என்னைக்குப் போறோமுன்னு தெரியாது. அப்ப எதுக்காக கவலைப்படணும்?
இருக்கறவரை சந்தோஷமா இருந்துட்டுப் போலாமுல்லே?

said...

//என்னைக்குப் போறோமுன்னு தெரியாது. //

இந்தக் கவலை வந்தாலே முதுமை இளமையைத் தின்றுவிட்டது என்று பொருள்.

... இன்னுமொரு கிழம்

said...

நானும் அதைத்தான் சொல்ல வந்தேன் ஞானவெட்டியாரே.
( மனசுக்குள்ளேயா?ன்னு கேக்க மாட்டீங்கதானே?)
இந்தக் கவலைக்கு இடங்கொடாமல் இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருக்கணுமுன்னு.

said...

துளசியக்கா,
ரொம்ப யோசிக்க எதுவும் இல்லை, பீச் பக்கத்தில் வீடு கட்டினால் ஏசியில் மணல் நிறைக்கு என்பது போன்றவைதான். :-).

said...

Aunty,
I have linked your post in Desipundit...:)

said...

அடி ஆத்தீ... இது யாரு? நம்ம டுபுக்குத் தம்பியா?

சொகமா இருக்கீஹளா? நம்மளையும் உங்க பண்டிட்டுலே சேத்துக்கிட்டதுக்கு ரொம்ப டேங்க்ஸு.

ஊருக்குப் போஹச் சொல்ல வாங்க. ஜோதிகாவூட்டண்டை கூட்டிக்கிட்டுப் போனாப் போச்சு.
என்னா சொல்லுதீஹ.

said...

இதானா விஷயம்?
சரி சரி. சீக்கிரம் பங்களாவைக் கட்டுங்க. நமக்கும் அடுத்தமுறை இந்தியா வரப்போ
தங்கறதுக்கு வசதியா இருக்கும்.

said...

கையில எந்த டிரமாவும் இல்ல, வேணா எழுதி தரலாம், எதை பத்தின்னு சொல்லுங்க!. நாளு ரொம்ப ஆச்சு, அந்த வேலை எல்லாம் செஞ்சு!

said...

உதயகுமார்,

உங்க மெயில் ஐடி யை அனுப்புங்களேன் ( பப்ளிஷ் செய்யமாட்டேன்)
மேல் விவரம் அதுலெ சொல்றேன்,ப்ளீஸ்.

said...

\\'இந்த லேடியை நினைச்சாத்தான் கவலையா இருக்கு. போனபிறகு அஞ்சுமணி நேரத்துக்குள்ளே என்னை அங்கே அனுப்பிறணும். வண்டியெல்லாம் ரெடி பண்ணனுமே'ன்னு மனைவியைப் பார்த்துக் கண்ணடிச்சுக்கிட்டே சொல்றார்.\\


என்ன ஒரு இயல்பாய் எடுத்துக்கறார்! பெருமிதமா இருக்கு அந்த 'இளைஞரை'!நினைத்தால்

said...

மீனா,

அங்கதான் அவர் ( அந்த இளைஞர்) நிக்கறார். என்ன நாஞ்சொல்றது?

said...

வாங்க யோகன்,

நீங்க சொல்றதுமாதிரி ஆக்களை நானும் நிறையப் பார்த்திருக்கேன்(-: