Tuesday, March 14, 2006

மூணு விருந்து ஒரே நாளில்.


பயண விவரம் பகுதி 3
இப்பெல்லாம் ச்சென்னயிலேயே செங்கல்பட்டு இருக்குது போல! அட, ஆமாங்க. புது வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குபோகணுமுன்னு 'கால் டாக்ஸி' யைக் கூப்புட்டாச்சு. முஹூர்த்தம் காலையிலே ஆறு முதல் ஏழரை வரை.அண்ணன் வீடுதான். இன்னும் முழுசா முடியலை. உள்புறம் வேலைங்க, அதாங்க வுட் ஒர்க், லைட்டிங், கிச்சன்எல்லாம் பாக்கி இருக்குதான். ஆனா இப்பத்தானே நாங்க அங்கே இருக்கோம். அதனாலே கொஞ்சம் முன்னாலே வச்சுக்கிட்டாங்க.


நமக்குத் தெரியாத மெட்ராஸா? அதெல்லாம் கவலைப்படவேணாம். 'டாண்'னு அஞ்சரைக்கே அங்கெ இருப்பேன்னு சவால் விட்டாச்சு.


போய்க்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கோம். அதிகாலை இருட்டுலே ஒண்ணும் சரியாத் தெரியலை. ராமச்சந்திராஆஸ்பத்திரி வாசல்லே வந்ததும்தான், சந்தேகம் வந்துச்சு. அதான் 'கைத்தொலைப்பேசி இருக்க எனெக்கென்ன மனக்கவலை'ன்னு ஃபோன் போட்டாச்சு.


" எங்கே இருக்கீங்க?"

" ராமச்சந்திரா வாசல்லே"

" சரி. அப்படியே நேரா வாங்க, ஒரு ரெண்டு கிலோ மீட்டர்தான்"

கால் டாக்ஸி ட்ரைவர் இந்தப் பக்கம் வந்ததே இல்லையாம். அதுக்கென்ன? ' நேராப் போங்க'ன்னாச்சு.

ஒரு பத்துகிலோ மீட்டர் போயாச்சு. கெரகம்பாக்கமோ, கரையான்சாவடியோ, இல்லே போரூரே வந்துட்டமோன்னும் தெரியலை.

போடு ஃபோனை. இந்த முறை ஃபோனை எடுத்தவர் யாரோ ஒரு விருந்தினர். அண்ணன் 'மந்திரம்' திருப்பிச் சொல்லிக்கிட்டு இருக்காராம்.


"நீங்க ரொம்ப தூரம் போயிட்டீங்களே. திரும்ப ராமச்சந்திரா மிஷன் ஆஸ்ரமம் வாங்க."

" அட, ராமச்சந்திரா! என்ன மிஷனா? ஆஸ்பத்திரிதானேங்க இருக்கு?"

" இல்லையே, மிஷனும் இருக்கே"

அப்படி இப்படின்னு மறுபடி விளக்கமெல்லாம் கேட்டு, அங்கே சுத்தி இங்கே சுத்தி இடம் கண்டுபிடிச்சு(சுப முஹூர்த்தநாளாம்.இன்னும் ரெண்டு வீட்டுக்கு அங்கேயே பூஜை நடந்துக்கிட்டுஇருக்கு.) எந்த வீடுன்னு தெரியாம பார்த்துக்கிட்டே போய் ஜன்னல்லே தெரிஞ்ச தலையை வச்சுக் 'கரெக்ட்டாக்' கண்டுபிடிச்சு 'டாண்'னு ஏழுமணிக்குபோய்ச் சேர்ந்தாச்சு.


பட்ட கஷ்டம் எல்லாம் தீர 'நம்ம ரேவதி சண்முகம்' (அதாங்க 'அவள் விகடன்'லே சமையல் சொல்லித்தருவாங்களே, கண்ணதாசனோட மகள்) கேட்டரிங்செஞ்ச காலை டிஃபன். மெனு சொல்லட்டுங்களா, வேணாமா?

கேசரி, இட்டிலி, நாலுவகைச் சட்டினிங்க, சாம்பார், தோசை, பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, இடியாப்பம் தேங்காய்ப்பால் அப்புறம் காஃபி.


அன்னிக்கு வேலைநாளா இருந்துச்சுங்களா, அதனாலே நிறையப்பேர் காலை டிஃபன் முடிஞ்சு உடனே போயிட்டாங்க.நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இருந்தோம். ரேவதியம்மா கையாலெ பகல் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டோம்.வழக்கமான தென்னிந்தியச் சமையல்தான்.சாம்பார், கறி, கூட்டு,புளிக்குழம்பு, ரசம் இத்தியாதி. கூடவே வடை, பாயாசம், பப்படம்.'சாப்பாடாங்க நமக்கு முக்கியம்?' வீடுதானே? வீட்டைச் சுத்திப் பார்க்கலாமுன்னா.....


அடுத்த வீட்டுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? அவசரத்துக்கு, ஒரு குழம்போ,கூட்டோ வேணுமுன்னா கையைக் கொஞ்சமே கொஞ்சம் எட்டினாப் போதும். ரொம்ப நீட்டிட்டா நீங்களே அவுங்க சமையலறையிலே இருந்து எடுத்துருவீங்க.அது, அவ்வளவா நல்லா இருக்காதில்லையா? ஒரு வார்த்தைக் கேக்கவேணாமா?


முன்னாலே ஒரு சாண்,பின்னலெ ஒரு சாண்( இது, பப்பரப்பான்னு நம்ம உள்ளங்கையை விரிச்சுவச்சா கட்டைவிரல்நுனிக்கும், சுண்டுவிரல் நுனிக்கும் இடைப்பட்ட தூரம். புது ஜெனரேஷனுக்குத் தெரியாதுன்னு ஒரு விளக்கம் கொடுத்துட்டேன்)மண் தரை. தோட்டம்(!) போட்டுக்கவாம். ஆமாமாம். புல் வெட்டற வேலை மிச்சம். விலையைக் கேட்டா மயக்கமெல்லாம் வராது,பைத்தியம்தான் பிடிக்கும். சாலைவிபத்துலே சாகற மனுஷ உயிருக்கு விலை இல்லை, ஆனா மண்ணுக்கு என்னா விலை,என்னா விலை? ஹப்பா.....


சாலை விபத்துன்னதும் ஒண்ணு நினைவுக்கு வருதுங்க. நாங்க ஊர் மண்ணுலே காலு குத்துனதும் ஒரு டாக்ஸிஎடுத்துக்கிட்டு வீட்டைப் பாக்கப் போய்க்கிட்டு இருக்கோம். இதென்ன நமக்குத் தெரியாத இடமா?'அதெல்லாம் யாரும்வரவேணாம். ராத்திரி 11 ஆயிரும். நாங்களே டாக்ஸியிலே வந்துருவொம்'னாச்சு.


"இப்பெல்லாம் சிகப்புதான் 'கோ சிக்னலா? மாத்திட்டாங்களா? முந்தி பச்சை இருந்துச்சுலே?"


" இல்லைம்மா. ராத்திரி 10 மணி ஆயிருச்சுன்னா நம்ம பாட்டுக்குப் போலாம்"
" அப்படியா? புது ரூல்ஸ் வந்துருச்சா?"


"................................" ( மெளனம்)


எந்தப்பக்கம் வண்டிவந்து நம்மைத் தாண்டிக்கிட்டுப் போகுதுன்னு தெரியாம எல்லாப்பக்கத்துலேயும் சீறிக்கிட்டுபோறாங்க. கிருஷ்ணார்ப்பணம்.

இதெல்லாம் ட்ராஃபிக்கே இல்லையாம். நாளக்குப் பகல்லே பார்க்கணுமாம். பார்த்தேனே..........


ஒருசிலர் 'ஹெல்மெட்' போட்டுக்கிட்டுப் போறதைப் பார்த்தேன். அதுலே சில பெண்களும் உண்டு. சந்தோஷமாஇருந்துச்சு. ஆனா யாராவது கீழே விழ நினைச்சாலும் முடியாதுங்க. அதான் தரையே தெரியாத அளவுக்கு அடைச்சுக்கிட்டுநிக்குதே வண்டிங்க. ஜனத்தொகை ரொம்பவே கூடிப்போச்சுன்றது முகத்துலே அறையும் உண்மை.


சாயந்திரம் முக்கியமான நிகழ்ச்சி ஒண்ணு இருந்துச்சு. இந்தியா நீங்கலாக, வெளிநாட்டுலே இருக்கற வலைஞர்கள் சார்பில் அந்த நிகழ்ச்சியிலே கலந்துக்கப்போற ஒரே ஆளு நான் தான்றது அப்போ எனக்குத் தெரியாது. நான் வெறும் நியூஸி சார்பாப் போறேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.


காந்திலால் கல்யாண மண்டபம். நம்மை அழைச்சவர்தான் அங்கே முக்கிய 'புள்ளி'. ஆனா அவரை முன்னேபின்னே பாத்ததில்லை.இது என்ன பிரமாதம்? எல்லாம் அங்கே போய்ப் பார்த்துக்கலாம்.

கஷ்டப்படுத்தாம, மாலையும் கழுத்துமா இருந்தவரைக் கண்டுபிடிக்க அரைநொடிகூட ஆகலை.


கல்யாண நிச்சயதார்த்தம். சடங்கையெல்லாம் ஓடி ஓடிப் படம் எடுத்தார் என்னோட வந்த ஃபோட்டோகிராஃபர்.(பயணக்கதை எழுதற பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் கூடவே ஒரு ஃபோட்டோகிராஃபரைக் கொண்டு போவாங்க.உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)

மாப்பிள்ளை தனது தாயாரைக் கூட்டிக்கிட்டு வந்து அறிமுகம் செஞ்சுவச்சார். அங்கே சென்னையில் உள்ள பிரபல மக்கள் ( நம்ம வலை உலகப் பிரமுகர்கள்) ரெண்டு பேரைப் பார்க்கும் பாக்கியம் கிடைச்சது. அறிமுகம் செஞ்சுக்கிட்டேன்.ஒருத்தர் நம்ம பா.ரா, இன்னொருத்தர் நம்ம பத்ரி. பா.ராவுடன் ஒரு வார்த்தை பேசினேன்,'வணக்கம்' அவ்ளோதான்.பெரிய எழுத்தாளர், அவர்கிட்டே என்ன பேசறதுன்னே தெரியலை(-:பத்ரிகூட கொஞ்சநேரம் நிறையவே பேசினோம். கிழக்குப்பதிப்பகம் டி.சர்ட் போட்டுக்கிட்டு இருந்தார். நட்போடு பழகினார்.


விழா முடிஞ்ச கையோட சாப்பாடு. கேசரி, இட்டிலி, சட்டினி வகைகள், லட்டு( லட்டா ஜாங்கிரியா?) இன்னும் பலவிதமா இருந்துச்சுதான். ஆனா, ரெண்டு நேரம் ரேவதியம்மா சாப்பாட்டை வெட்டுனதுனாலே அவ்வளவா(!) பசியில்லை.


வர்றப்ப தாம்பூலம் கொடுத்தாங்க. சணலில் செஞ்ச ஒரு ச்சின்ன ஷாப்பிங் பையும்( காய்கறி வாங்கிக்க வசதியாஇருக்கும்)கூடவே ஒரு பத்து ரூபாயும்.
ரூபாய் எதுக்குக் கொடுத்தாங்கன்னே தெரியலை. ஒருவேளை எதாவது காய் வாங்கி அந்தப் பையிலே போட்டுக்கறதுக்கோ?


மாப்பிள்ளைகிட்டே கேக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா கேக்கலை. எங்க இவரும் எதுக்குஅந்தக் காசுன்னு யோசிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்தார்.


மாப்பிள்ளையும் இந்த விழாவைப் பத்தி நீங்க எழுதிறாதீங்கன்னு கேட்டுக்கிட்டார். நானும்,'மாட்டேன். இது உங்கவிசேஷம், நீங்க முதல்லே எழுதுங்க'ன்னு பெருந்தன்மையா சொல்லிட்டேன். (நானே எழுதலாமுன்னா தமிழ் ஃபாண்ட்டுக்குஎன்ன செய்யறதாம்?) இப்ப அவரே எழுதிப் படமெல்லாம் போட்டுட்டதாலே நானும் 35 நாளுக்கப்பறம் எழுதிட்டேன்.கல்யாணம் ஏப்ரல் 30. அதுவரை 'கடலை போடுங்க'ன்னு சொல்லிக் கொடுத்துட்டு வந்தேன். ஏதோ நம்மாலான உபகாரம்.


அச்சச்சோ...மாப்பிள்ளை பேரைச் சொல்ல மறந்துட்டேனே!!!!
நம்ம 'கிருபாசங்கர்'தான்.__________________

29 comments:

said...

அடடா உங்களோடவே சேர்ந்து கிரகப்பிரவேசத்துலயும் கல்யாணத்துலயும் கலந்துக்கிட்டா மாதிரி இருந்திச்சி..

உங்க நடையே நடைதாங்க துளசி..

இப்பல்லாம் சென்னையில வண்டி ஓட்டிட்டா ஒலகத்துல எந்த முக்குலயும் வண்டி ஓட்டிரலாம் போல. இத நான் சொல்லலை. என்னோட கோலாலம்பூர் மாப்பிள்ளை. ரெண்டு வாரம் ஊர்ல இருந்தப்போ நான் ஓட்டுன ஸ்டைல பார்த்து மனுஷம் அப்படியே மயங்கி விழாத குறைதான். அப்பா எங்கள விட்டுருங்க.. நாங்க கால் டாக்சியிலயே போய்க்கறோம் என்றாள் என் மகள்!!

said...

//கேசரி, இட்டிலி, நாலுவகைச் சட்டினிங்க, சாம்பார், தோசை, பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, இடியாப்பம் தேங்காய்ப்பால் அப்புறம் காஃபி//
அப்பா... ஒரு புல் ப்ரேக்பாஸ்ட் கட்டுன மாதிரி இருக்கு.

//சாம்பார், கறி, கூட்டு,புளிக்குழம்பு, ரசம் இத்தியாதி//
இத்யாதின்னு சொல்லி விட்டாக்க எப்படி.. முழு விவரம் எங்கே?

//அவசரத்துக்கு, ஒரு குழம்போ,கூட்டோ வேணுமுன்னா கையைக் கொஞ்சமே கொஞ்சம் எட்டினாப் போதும். ரொம்ப நீட்டிட்டா நீங்களே அவுங்க சமையலறையிலே இருந்து எடுத்துருவீங்க.//
:)))))))

//லட்டு( லட்டா ஜாங்கிரியா?) //
இந்த மாதிரி ஒரு சந்தேகம் எப்படிக்கா வரும்?? அதுவும் நம்மள மாதிரி ஆளுகளுக்கு??

said...

"ரொம்ப நீட்டிட்டா நீங்களே அவுங்க சமையலறையிலே இருந்து எடுத்துருவீங்க.//- இது வசதிதானே.ஆனா என்ன அவங்க நீட்டிட்டா என்ன பண்றது..? அதுக்குத்தான் நம்மள மாதிரி காட்டுக்குள்ள வீடு கட்டணும்..இல்லீங்களா? (நீங்க சொல்றதுக்கு முந்தி நானே 'ஒப்புதல் வாக்குமூலம்'!)

said...

டிபிஆர் ஜோ,

நீங்க சொல்றது ரொம்பச் சரி. சென்னையிலே வண்டி ஓட்டிட்டா உலகத்துலே மத்த இடமெல்லாம் ஜுஜுபி ..தான்.

said...

ராம்ஸ்,

லட்டுக்கும் ஜாங்கிரிக்கும் வித்தியாசம் தெரியாதா ஆளா நாம?

பரிமாறுனவர் இலைக்கு முன்னே வந்து நின்னு பரிமாறுனப்ப வேணாமுன்னு தலையை அசைச்சதுக்கு
அவர் ஜாங்கிரி/லட்டுன்னு என்னமோ சொல்லிட்டார்.( அட முண்டம், இதைப்போய் வேணாங்கறியே!'ன்ற மாதிரி)
அப்புறம் இந்தப் பயணம் முழுதும், சிறுதீனிகளா( ஜாங்கிரி, பாதாம் ஹல்வா,ன்னு) வெட்டிக்கிட்டே இருந்துட்டேனேப்பா!
இப்ப எல்லாம் ஒரு மயக்கமா இருக்கு:-))))

said...

டி ராஜ்,

சாப்புடற படங்கள் இருக்குதான், ஆனா அதுலெ குடும்பம் உக்காந்து வெட்டுதேப்பா. கோபால் பரிமாறுனது, புது வீட்டுப் பால்
காய்ச்சுனதுன்னு கூட இருக்கு.

said...

தருமி,

இது இது......:-)))) ஆமாம், பொடிப்பசங்க எப்படி இருக்காங்க? பக்கத்து வூட்டு ஆளு அவுங்க வீட்டுக்குப் போயிட்டாரா?

said...

இதோ பாருங்க.. பத்து ரூபா எதுக்குன்னு ரொம்ப குழப்பமா இருந்தா அத போக்க நான் ஒரு வழி சொல்றேன்... பேசாம எனக்கு மணிஆர்டர் பண்ணிடுங்க ஹிஹி (பத்துன்னா வெறும் பத்தோட நிறுத்தணும்னு இல்ல.. மேல ஒரு லட்சமோ கோடியோ சேத்துக்கலாம்.. அபிராமி அபிராமி)

said...

அடடே, வாருமைய்யா முகமூடி, நலமா?

கொஞ்சம் முந்தியே சொல்லியிருக்கலாமுல்லையா? அந்தப் பத்து ரூபாயை சாமிக்குக் கொடுத்துட்டேனே.
வேற 'பத்து'பரவாயில்லையா?:-)

said...

என்ன துளசி இதுக்கூட தெரியலையே உங்களுக்கு ????
அது சீக்கிரம் கிளம்புங்கன்னு பஸ் சார்சுக்கு :-)))

said...

உஷா,
அப்டீங்கறீங்க? அப்ப அதைச் சாப்புடறதுக்கு முன்னாலெ கொடுத்திருந்தா..... :-))))
பேசாம கிருபாகிட்டேயே கேட்டுறவேண்டியதுதான்.
அவர் எங்கெ கடலை வறுத்துக்கிட்டு இருக்காரோ?

said...

"கல்யாண நிச்சயதார்த்தம். சடங்கையெல்லாம் ஓடி ஓடிப் படம் எடுத்தார் என்னோட வந்த ஃபோட்டோகிராஃபர்.(பயணக்கதை எழுதற பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் கூடவே ஒரு ஃபோட்டோகிராஃபரைக் கொண்டு போவாங்க.உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)"


ஆருன்னு தெரிஞ்சி போச்சு . இருந்தாலும் இந்த அநியாயம் கூடாது!

said...

//ஆனா யாராவது கீழே விழ நினைச்சாலும் முடியாதுங்க. அதான் தரையே தெரியாத அளவுக்கு அடைச்சுக்கிட்டுநிக்குதே வண்டிங்க//. இந்த மாதிரி நாட்டு நடப்பை நாலு வரியில் நச்சுன்னும் சொல்லிட்டு நளபாகம் பற்றி நேர்முக விமர்சனமும் கொடுக்கும் பாங்கு நம்ம துளசி தவிர யாருக்கும் வராதுப்பா!! மக்களே ஒரு `ஓ' போடுங்க!

said...

என்ன அநியாயம் இது.. நான் ரெண்டு பின்னூட்டம் போட்டேன். ஒண்ணுதான் பப்ளிஷ் பண்ணிருக்கீங்க! என்னோட ரெண்டாவது எங்கே எங்கே எங்கே?

அதில் அதிமுக்கியமான ஒரு கேள்வி கேட்டுருந்தேனே!

said...

சிங்.செயகுமார்,

'கரீட்டா'க் கண்டு புடிச்சிட்டீங்க. 'கப்சுப் காராமணி'ன்னு இருந்துருங்க. இல்லேன்னா நான்
'பெரிய எழுத்தாளர் லிஸ்ட்டு'லே எப்ப்டிச் சேர்றதாம்?:-)))

said...

வாங்க தாணு,

ஆமாம், இன்னுமா இந்த 'ஓ' போடறது இருக்கு? புச்சா ஒண்ணும் இந்த 'தமிழ்சினிமாங்க'
கண்டுபிடிக்கலையா?

said...

பாரதி,

சொன்னா கோச்சுக்கமாட்டீங்கதானே? அதெப்படிங்க ஒண்ணு மட்டும் நினைவுக்கு வரும்.
ஒரு வார்த்தையா இல்லெ ஒரு வாக்கியமா? சரி சரி. ஒரு வரின்னு வச்சுக்கவா?

சென்னைன்னதும், ச்சூடு,கூட்டம்,சொந்தக்காரங்க,போத்தீஸ்குமரன்நல்லிசென்னைசில்க்ஸ் இப்ப சரவணா
(ம்ஹூம் இதுவேலைக்காகாது) பனகல்பார்க்பாண்டிபஜார்அண்ணாசாலை,கோயில்கள் நண்பர்கள்,
இப்பப்புதுசா வலைநண்பர்கள், பழங்கள்,தலையில் வச்சுக்கப்பூ( இப்ப இருக்கற 'நாலு'க்கு எவ்வளவு வச்சுக்கணுங்கறது
வேற விஷயம்) தான் நினைவுக்கு முதல்லே வருது. மத்ததெல்லாம் அப்புறம் நினைவுக்கு வரும்:-)

said...

ராம்ஸ்,

ரெண்டு பின்னூட்டமா? அச்சச்சோ,எப்படித் தொலைச்சுட்டேன்? வரவே இல்லையேப்பா? அது என்ன முக்கியமான
கேள்வி? இப்படி யாராவது வர்ற லக்ஷ்மியை( பின்னூட்டம்தான்!) வேணான்னு சொல்வாங்களா?
சிரமம் பாக்காம இன்னொருக்கா அனுப்பிவையுங்க,ப்ளீஸ்.

said...

மிக நன்றாக எழுதுகிறீர்கள். அங்கேயே இருப்பது போல் இருக்கிறது.

எனக்கு புரியாத ஒன்று எப்படி சென்னையில் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு எந்த இடத்துக்கும் வழி தெரியாது என்பது தான்.

said...

வாங்க நித்யா.

அதென்ன குறிப்பாஆட்டோ ஓட்டுபவர்கள்? கால் டாக்ஸி உட்பட எல்லாருக்குமே(!) வழிதெரியாது. அப்பத்தானே 'சுத்தி சுத்தி'
போகலாம். ஆனா ஒண்ணு, சுத்துனாலும் அங்கே இங்கேன்னு கேட்டுக் கரெக்ட்டாக் கொண்டுபோய் விடறதுலே இந்த
ஆட்டோக்காரர்கள் கொஞ்சம் கெட்டிதான்! இல்லே?

said...

//பயணக்கதை எழுதற பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் கூடவே ஒரு ஃபோட்டோகிராஃபரைக் கொண்டு போவாங்க.//

ஆ!!!!!!

said...

//ஆ!!!!!! //

ஆ ....மாம்:-)))))

said...

//மாப்பிள்ளை பேரைச் சொல்ல மறந்துட்டேனே!!!!
நம்ம 'கிருபாசங்கர்'தான்//

அவர்தான் பாத்திரமெல்லாம் தேய்க்கிறாரா? ;O)

said...

ஷ்ரேயா,

இது வேணுமா? பாவம் கிருபா.ஆமாம், அவர் பாத்திரம் தேய்க்கிறதை எங்கே பாத்தீங்க?(-:

கிருபா, ஷ்ரேயாவோட இந்த பின்னூட்டத்துக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். தப்பா நினைச்சுக்காதீங்க.

said...

பாரதி,

அது எப்படீங்க ச்சென்னைச் செந்தமிழை மறக்க முடியும்?

இப்ப என்னான்றெ?அதுபாட்டுக்கு ஒரு ஓரமாத்தான் கீது:-)))

said...

//ஆமாம், அவர் பாத்திரம் தேய்க்கிறதை எங்கே பாத்தீங்க?(-://

in the last photo... :O(

(sorry Krupa! ச்சும்மா fun...)

said...

ஷ்ரேயா,

இருங்க இருங்க, அவரோட வீட்டம்மாவுக்குப் 'போட்டுக் குடுக்கறேன்':-)

said...

//"இப்பெல்லாம் சிகப்புதான் 'கோ சிக்னலா? மாத்திட்டாங்களா? முந்தி பச்சை இருந்துச்சுலே?"

" இல்லைம்மா. ராத்திரி 10 மணி ஆயிருச்சுன்னா நம்ம பாட்டுக்குப் போலாம்"
" அப்படியா? புது ரூல்ஸ் வந்துருச்சா?"


"................................" ( மெளனம்)//

))))))-

நீங்க முதல்ல கேட்டது அக்மார்க் துளசி ப்ராண்ட் கேள்வி.

அதுக்கும் சீரியஸா பதில் சொல்லியிருக்காறே ?

said...

ஜெயஸ்ரீ,

சிங்கப்பூர் ப்ளைட்டுலே வந்ததாலே நம்மளை சிங்கப்பூர்க்காரங்க நினைச்சுக்கிட்டு கொஞ்சம்
மரியாதையா(!) பதில் சொன்னாரோ என்னவோ?

அவுருக்கு மாத்திரம் நாங்க ச்சிங்காரச் சென்னையின்னு தெரிஞ்சிருந்தால் 'சும்மா கீசி'யிருப்பார்,இல்லே?