Tuesday, March 21, 2006

இந்த நாள் இனிய நாள் (ரியலி?)




பயண விவரம் பகுதி 7


இன்னியோட ஊருக்கு வந்து 9 நாளாயிருச்சு. பொழுது விடியறப்பவே மனசு குதியாட்டம் போட்டுச்சு, அதே சமயம் பெரு மூச்சும் வந்துச்சு. காரணம்? ம்ம்ம்ம்ம்........இருக்கே!


கோயிலுக்குப் போய் 'பெருமாள்' கிட்டே விஷயத்தைச் சொல்லிறலாமுன்னு போனோம். இன்னிக்கு ஒரு விசேஷம்( எனக்குத்தான்) இருக்குன்றதாலே அர்ச்சனை செஞ்சுறலாமுன்னு, அதுக்குன்னு விக்கறதை வாங்கிக்கிட்டு உள்ளெ போயாச்சு. கூட்டம்தான். ஆனாலும் பொறுமை காத்து நின்னோம். எங்க இவர் நீட்டுன அர்ச்சனைப் பையைப் பட்டர் வாங்குனார், அதுலே இருந்த தேங்காயை மட்டும் எடுத்து அங்கெ இருந்த ஒரு கூடையிலே (வழக்கம் போல்) கடாசுனார்.அதுலேயெ இருந்த தேங்காய் மூடிகளில்(ஏற்கெனவே உடைக்கப்பட்டிருந்தது) ஒண்ணை எடுத்துப் பையிலே போட்டார்.அப்புறம்? அதைத் திருப்பி இவரிடம் கொடுத்துட்டார். உள்ளே இருந்த பூவையோ, பழங்களையோ, குங்குமத்தையோ பார்க்கக்கூட இல்லை. பை, முந்தி இருந்தது போலவே இருக்கு,ஆனா முழுத்தேங்காய்க்கு பதில் அரைத்தேங்காய்!!!!! ஆச்சு அர்ச்சனை? யாருக்கு...?

தட்ஸ் இட். இன்னிக்குப் பூரா கோபத்துக்கு இடம் கொடுக்கக்கூடாதுன்னு காலையில் நினைச்சதுக்குப் பலத்த அடி.மண்டபத்துக்குள் போய் உக்காரலாமுன்னா அதையும் தடுத்து வச்சிருக்காங்க. வெளியே போறதுக்கு பின்னாலே வழியாத்தான் போகணும். எப்படியும் வெளியே போய்த்தானே ஆகணுமுன்னு அது வழியாப் போனா அது போய் ஒருக்யூவுலே சேருது. இப்ப எதுக்கு வரிசை கட்டி விடறாங்கன்னு முணுமுணுத்துக்கிட்டே நகர்ந்து போறொம். ஒரு பத்தடி தொலைவிலே ஒரு கவுண்ட்டர் திறந்திருக்கு, நமக்கு முன்னாலே இருக்கறவங்க எல்லாம் பரபரன்னு பாக்கெட்லே இருந்து காசை எடுத்துக்கிட்டு இருக்காங்க.


என்னன்னு விசாரிச்சப்பத் தகவல் கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் முதல் ஞாயிறுக்குத் திருப்பதியில் இருந்துஅர்சிக்கப்பட்ட லட்டு இங்கே வருமாம். அதை இங்கே பக்த கோடிகளுக்கு விற்பார்களாம். இன்னிக்கு மாசத்தின் முதல் ஞாயிறாம். அட்ரா சக்கை!


ஆங்....... 'அல்வா' குடுக்கறது கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சாமி இப்படி 'லட்டு' கொடுத்துட்டாரே! 'கரெக்ட்டாகாசு வச்சிருந்தா இந்த கவுண்ட்டர்லே வாங்க'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். கரெக்ட்டுன்னா எவ்வளோ?10 ரூபாயாம் ஒரு லட்டு . சரி. எத்தனை தருவாங்களாம்? ஆளுக்கு ரெண்டு. நின்னது நின்னாச்சு, ரெண்டுபேருமே ரெண்டுரெண்டு வாங்கிரலாம்னு வாங்கிட்டோம். நமக்கு முன்னாலே வாங்குன மக்கள் முகத்தில் 'பார்த்தாலே ஒரு பரவசம் '.


'நீ சாமிக் கிட்டே கோவிச்சுக்கிட்டதுக்கு , உனக்கு ஸ்பெஷலா லட்டு குடுத்து விட்டுருக்கார் பாரு'ன்னு எங்க இவர்சொல்லிக் கலாய்ச்சார்.

''நாலு லட்டு, என்ன பண்ணப்போறே?"

நமக்கு இல்லாத உறவா, நட்பா? இவுங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னு சொன்னேன்.

நட்புன்னதும் ஞாபகம் வருது. இந்த ஒரு வாரமா நட்பு வட்டங்களொட ஃபோன் உரையாடல்தான். அருணா( அலைகள்) அடிக்கடிபோன் செஞ்சு நலம் விசாரிச்சுக்கிட்டே இருந்தாங்க. அவுங்களுக்கு 'திசைகள்' வேலை தலைக்கு மேலே கிடக்குது.ஆனாலும் அப்பப்ப நம்மளையும் நினைச்சுக்கிட்டாங்க. நம்ம ரஜினிராம்கி கிட்டேயும் கிருபாகிட்டேயும், ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வீங்களான்னு கேட்டதுக்கு 'நோ ப்ராப்ளம்'னு சொல்லிட்டாங்க. ஒரு ஞாயித்துக்கிழமையின்னா எல்லாருக்கும் வசதியா இருக்குமேன்னு சொன்னாங்க. அதுவுஞ்சரிதானே? அடுத்த ஞாயிறு ஃபிப்ரவரி 12 சரியாஇருக்கும். 19 ன்னா எங்க இவர் இருக்கமாட்டார். என் தம்பி தங்கைகளை இவரும் பாக்கணும் தானே?


அன்னிக்குப் பகல், இந்த நாளைக் கொண்டாடியே தீரணுமுன்னு அண்ணன் குடும்பத்தோடு வந்து 'ஹோட்டல் ரெஸிடன்ஸி'க்குகொண்டு போயிட்டார். பஃபே விருந்து. பழைய காலத்து இங்கிலாந்துலே இருக்கற ஒரு தெரு போல அலங்கரிச்சுஇருந்துச்சு அந்த ஹால். ஏராளமான சைவ, அசைவ உணவு வகைகள். 'டிஸ்ஸர்ட்' வகைகளும் ஏராளமா இருந்துச்சு.பால்பாயாசம் கூட இருந்துச்சுங்க. பிரியாணி வகைகள் எல்லாம் அருமை. ஒண்ணோடு ஒண்ணு ஒட்டாம உதிரி உதிரியாவும், அதே சமயம் நல்லா வெந்தும் மெத்துமெத்துன்னு இருந்துச்சு. அண்ணனோட மகளும் குடும்பத்தோட நியூ ஜெர்ஸியிலேஇருந்து வந்திருந்தது டபுள் சந்தோஷம். அவளோட கல்யாணத்துலே கூட கலந்துக்க முடியாமப் போச்சு.ஆச்சு 8 வருஷம். இப்ப என்னன்னா ரெண்டு குழந்தைகளோடு வந்துருக்கா.



சாப்பாடு ஆனப்புறம் ஒரு சினிமாவுக்குப் போகலாமுன்னு நினைச்சா, குழந்தைங்க ( ஒன்னேகாலும், ரெண்டரையும்)சிணுங்குதுங்க. சரின்னு நாங்க ரெண்டு பேரு மட்டும் விடாகண்டனா அண்ணாசாலைக்குப் போனோம். 'தன்மந்த்ரா'ன்னுமலையாளப்படம். மோஹன்லால். ஆனந்த் தியேட்டர். கூட்டமான கூட்டம், சேச்சிகளும், சேட்டன்மாரும்! ஹவுஸ் ஃபுல்.


துணிந்த பின் மனமேன்னு எங்க இவர் 'கறுப்பு'லே டிக்கெட் கிடைக்குமான்னு ஆராய்ஞ்சார். ஒரு டிக்கெட் மட்டும் இருக்காம்.என்னதான் நாங்க ரெண்டுபேரும் ஒர் மனசுன்னாலும் ஓர் உடல் கிடையாதுல்லையா?(-:வேணாமுன்னுட்டு திரும்ப கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தோம். ஒரு தெருவுலே திரும்புறப்ப 'டக்'னு கண்ணுலெ பட்டுச்சுஅந்த அறிவிப்புப் பலகை,'எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்'.


ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்! இன்னிக்கு இங்கேதான் போறொம். உள்ளே நுழைஞ்சவுடன் நம்ம காலணிகளை விட்டுவைக்கஒழுங்கு செஞ்சிருக்காங்க( இலவசம்)


ஹாலுக்குள்ளே நுழைஞ்சா அந்தக் காலத்துலே எம்ஜிஆர் பயன் படுத்திய கார். அதுக்குப் பக்கத்திலே நாலுபேர்நின்னு போஸ் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஒரு போட்டோக்காரர் அவுங்களைப் படம் புடிச்சுட்டு அவுங்க விலாசத்தையெல்லாம் கேட்டு எழுதறார். அப்புறம் அனுப்பி வைக்கவாம். மக்கள்ஸ் கண்களிலே தெரிஞ்சசந்தோஷம் உண்மையானதுன்னு 'டக்'னு புரிஞ்சு போச்சு.


நம்ம கேமெராவுலே படம் எடுத்துக்கலாமுன்னு கேட்டதுக்கு, 'கூடாது'ன்னுட்டார் அந்த போட்டோக்காரர்.அவரோட பிழைப்பு கெட்டுருமுல்லே?


எம்ஜிஆருக் கிடைச்ச பரிசுப்பொருட்கள், வெள்ளிவிழாக் கேடயங்கள், சினிமாவைத் தவிர அரசாங்க வாழ்க்கை மூலமா கிடைச்சதுன்னு ஏகப்பட்டதுகள் அழகா அடுக்கி, அததுக்கு விளக்கம் எல்லாம் எழுதிக் கண்ணாடி அலமாரிகளிலே இருந்தன.


சில பொருட்களைப் பார்த்ததும் 'அடடா.. இது ரொம்ப நல்லா இருக்கே. நமக்கும் ஒண்ணு கிடைச்சாத் தேவலையே'ன்னுஆசை வந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது, கலை அழகோடு கூடியவைகள்!


கீழே ஹாலைச் சுத்திப் பார்த்துட்டு மாடிக்குப் போனோம். அங்கே 'சதி லீலாவதி'யிலே இருந்து 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' வரை இவர் நடித்த படங்கள் எல்லாம் வரிசைக் கிரமமா ஸ்டில்ஸ்! நிறையப் படங்களைமிஸ் செஞ்சுருக்கேன் (-: நிறையப் படங்களில் 'அம்மா' இருக்காங்க.
அப்புறம் அவர் ஆஃபீஸ் ரூம், முக்கியமானவர்களைச் சந்திக்கும் ஹால்னு எல்லாம் பார்த்துட்டு கீழே வந்தோம்.


இதுக்கு முன்னாலே நான் போயிருந்த சில நாடுகளிலே அங்கத்து முக்கியஸ்த்தர்கள் வீடுகளை இப்படி நினைவகமாசெஞ்சு வச்சிருந்தது ஞாபகம் வந்தது. அதுக்கெல்லாம் எந்த வகையிலும் தரத்திலே குறையாம இங்கே நம்ம ஊருலேயும் வச்சிருக்கறதைப் பார்த்து கொஞ்சம் திருப்தியாவே இருந்துச்சு.


என்னதான் சொல்லுங்க, 'சாதாரண நடிகனா ஆரம்பிச்ச வாழ்வு, தமிழ்நாட்டின் பெரிய பதவியிலே வந்து முடிஞ்சது'ன்றதுகொஞ்சம் பிரமிப்பாத்தான் இருந்தது. அதெ எண்ணத்துலே இந்த 'ஸ்டில்ஸ்'லே ஜெயலலிதா ( அந்தக் காலத்துலேஎன்னோட ஃபேவரைட் நடிகைகளிலே ஒருத்தர்)வைப் பார்க்கும் போதும், தான் இப்படி முதன் மந்திரியாகி இத்தனைபேரை அடிபணிய வைக்கப்போறோமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்திருப்பாங்களா?ன்னு தோணுச்சு.


ஒன்னரை மணிநேரம் போனதெ தெரியலை. வெளியே வந்தா அப்பதான் வந்து நின்ன டூரிஸ்ட் பஸ்ஸுலே இருந்து திமுதிமுன்னுஜனங்கள் இறங்குறாங்க, முகத்தில் சந்தோஷம் கொப்புளிக்க.


சாயங்காலம் வேற என்ன செய்யலாமுன்னு தினசரியிலே தேடுனா..ஆஆஆ....ஆப்டுடுச்சு.


'நடன அரங்கேற்றம். கே.ஜே.சரசாவின் மாணவிகள். அனைவரும் வருக. '

இதோ, வந்துட்டோம். இடம் வாணி மஹால்.

இங்கே எங்க தமிழ்ச்சங்கத்துலே நடனம் பயில்கிற பிள்ளைகளுக்கு பயன்படுமுன்னு நினைச்சு ஒரு எட்டு டிவிடி இருக்கற ஒரு செட், பரதநாட்டியம் அறிமுகம்னு வாங்கியிருந்தோம், அதுலே பாருங்க ஒருவெள்ளைக்காரப் பெண்மணி எட்டு வெவ்வேற நடன ஆசிரியர்களை பேட்டி எடுக்கறாங்க. எல்லோருக்கும்ஒரே மாதிரியான கேள்விங்கதான். இதுலே அவுங்க ஒவ்வொருத்தரும் அவுங்கவுங்க பள்ளியிலே இருக்கற மாணவ மாணவிகளை வச்சு 'டெமோ' கொடுத்துருந்தாங்க.


தனஞ்செயன் சாந்தா, கலாக்ஷேத்திரா, கெ.ஜெ.சரசான்னு எல்லாம் பெரியபெரிய ஆளுங்க. இதுலே மத்தவங்கஅந்த வெள்ளைக்காரப் பெண்மணிக்குப் புரியணுமுன்னோ என்னவோ ஆங்கிலத்துலெயே பதில் சொல்லிக்கிட்டுஇருந்தாங்க. ஆனா நம்ம சரசாம்மா மட்டும் தமிழிலே பதில் சொன்னது மட்டுமில்லாம நல்லா 'டாண் டாண்'னுபொட்டுலே அடிச்சமாதிரி விஷயத்தை விளக்கியும் சொன்னாங்க. இதைப் பார்த்தது முதல் எனக்கு 'சரசா'ம்மா மேலேஒரு அன்பும் அன்னியோன்னியமும் ஏற்பட்டுப் போச்சு. நான் எல்லாம் 'சரசா'ம்மாவை நம்ம 'ஜெயா'ம்மா வோட டான்ஸ் டீச்சர்ன்ற வகையில் மட்டுமே தெரிஞ்சு வச்சிருந்தேன்.


எங்களுக்கு இந்த பாட்டு, நடனம், நாடகம் எல்லாம் ரொம்ப ஆசை. ஒரு வருஷமாவது இந்த டிசம்பர் மாச மியூஸிக் சீஸன்சமயம் ச்சென்னைக்கு வந்து கச்சேரிகள், நடனங்கள் எல்லாம் போகணும்னு தீராத மோகம் இருக்கு. ஆனா நமக்குவாய்க்க வேணாமா? அது போட்டும், வெளிநாடெல்லாம் இந்த 24 வருசமாத்தானே? அதுக்கு முன்னே இந்தியாலே இருந்தப்பமெட்ராஸ்க்குப் போய் பார்த்திருக்கக்கூடாதான்னு நினைச்சீங்கன்னா, அப்ப ஏதுங்க ஐவேஜு? நம்ம நிதி நிலமைபடு பாதாளத்துலே இல்லே கிடந்துச்சு.


இப்படி இருந்த நேரத்துலே கே.ஜே.சரசாவின் மாணவிகள் நடனம்னு தெரிஞ்சதும் 'ச்சலோ'ன்னு புறப்பட்டாச்சு. வாணிமஹால் எங்கே இருக்குன்னு கூடத் தெரியாது. அதுக்காக விட்டுற முடியுமா? வாயிலே இருக்கு வழி.அங்கெ போய்ச் சேர்ந்தா, கீழே படிக்கட்டுலே உக்காந்திருந்த ஒருத்தர், மாடிக்குப் போங்கன்னு சொன்னாங்க.மாடியிலே ஒரு அழகான ஆடிட்டோரியம். ஒரு 200 பேர் உட்கார வசதி இருக்குன்னு நினைக்கறேன். ஆனா இப்ப ஒரு இருபது பேர் இருந்தா ஜாஸ்தி! மேடையில் பதினேழு வயசு ( இருக்கும்) பொண்ணு ஆடிக்கிட்டு இருக்கு.ஜதி சொல்லிக்கிட்டு இருக்கறது யாருங்கறீங்க? சாக்ஷாத் சரசாம்மாவேதான், கலைமாமணி கே.ஜே.சரசா!வயசு எம்பதுக்கு மேலே ஆயிருச்சாம். ஆனா அந்தக் குரல், இன்னும் கணீர்னுதான் இருக்கு. விஜயலக்ஷ்மினு ஒருத்தர் பாடறாங்க. இவுங்களும் கலைமாமணி விருது வாங்குனவங்களாம். குரலழகுக்குக் கேக்கணுமா?


ரொம்பக் கவனமெடுத்து ஆடுதுங்க, அந்தப் பொண்ணு. ச்சும்மா சொல்லக்கூடாது. அருமையான நடனம். 'ஆமாம்,உனக்கு டான்ஸ் பத்தி ரொம்பத் தெரியுமாக்கும்?'னு கேக்க மாட்டீங்கதானே? ஊரூராப் போய்க்கிட்டிருந்த ச்சின்னவயசு வாழ்க்கையிலே போற ஊர்லே எல்லாம் 'டான்ஸ் டீச்சரை'த்தேடிப் பிடிக்கறதும், அடுத்த வருசம் இதேபோல இன்னொரு ஊர்லே தேடறதும்னுதான் தொடர்கதையா ஆயிருச்சேங்க. ஆனா அதுக்காகக் கலையை ரசிக்கத் தெரியாமப் போயிருமா?பாட்டு கத்துக்கிட்ட கதையை இன்னொருநாள் சாவகாசமாச் சொல்றேன்:-)


ஒருமணி நேர ஆட்டத்துக்குப் பிறகு, இன்னொரு பொண்ணு ஆட வந்து அருமையா ஆடுனாங்க. இதுக்கு நடுவிலே கலைஞர்களின் அறிமுகம் ஆச்சு. சரசாம்மா எல்லோரையும் அரவணைச்சும், தட்ட வேண்டிய இடங்களில் தட்டிக்கொடுத்தும்,குட்ட வேண்டிய இடங்களில் தலையிலேகுட்டியும் பேசுனாங்க. ரெண்டாவதா ஆடுனவங்களுக்கு 20 வயசாம். இஞ்ஜிநீயரிங்படிக்கிற மாணவியாம். மொதல்லெ ஆடுனவுங்களும் கல்லூரியிலே மொத வருசம் டிகிரி வகுப்பாம்.நல்ல பிள்ளைங்க. படிப்போட விட்டுறாம, கலைகளும் படிக்கறாங்கல்லே? நல்லா இருக்கட்டும்! கலை சம்பந்தப்பட்டஇரண்டு பிரமுகர்கள் ,மாணவிகளைப் பாராட்டிப் பரிசு கொடுத்தாங்க.


நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கப்பவே நமக்கு முன்னாலே வரிசையிலே இருந்தவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில்அப்பப்ப விறுவிறுன்னு எழுதிக்கிட்டு இருந்தார். 'சுப்புடு'வோன்னு சந்தேகத்தோடு பார்த்தோம்:-) இடைவேளையில்எங்க இவர், அவர் பக்கத்துலெ போய் உக்கார்ந்துக்கிட்டுப் பேச்சுக் கொடுத்தப்ப விஷயம் தெரிஞ்சது. அவர் ஒருதெலுங்கு பத்திரிக்கைக்காக விமரிசனம் எழுதிக்கிட்டு இருக்காராம். நடனம் எப்படின்னு கேட்டதுக்கு நல்லாவேஇருக்குன்னும் சொன்னார். ஏதோ நாந்தான் அந்தப் பொண்களோட அம்மா மாதிரி, 'அப்பாடா'ன்னு இருந்துச்சு.


அரங்கேற்றத்துக்கு நிறைய செலவு செஞ்சுருக்காங்க போல. 'லைவ் ம்யூசிக்' பார்ட்டி ரொம்பக் கவனமாத் தெரிஞ்செடுக்கப்பட்டவங்களாம். மேக்கப் ஆர்டிஸ்ட், அரங்க வாடகை, உடுப்பு, அலங்கார நகைகள்னு நிறையத்தான் ஆயிருக்கும். ரெண்டு பேர் என்றதாலே செலவைப் பகிர்ந்துக்கிட்டாங்களாம். எங்கியாவது போனமா, பார்த்தமா,வந்தமான்னு இருக்குற ரகமா நானு? வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுதா?


நேரமாக ஆக கொஞ்சம் கொஞ்சமா மக்கள்ஸ் வந்து அரங்கம் ஏறக்குறைய நிரம்பிருச்சு. கிளம்பி வரும்போதுஎன் பிறந்தநாள் இவ்வளவு இனிமையா, பல்வேறு அனுபவங்களால் சந்தோஷமா அமைஞ்சதுக்குக் கடவுள்கிட்டே நன்றி சொல்லிக்கிட்டே ( எல்லாம் மனசுக்குள்ளேதான்!) மணி பத்தரை ஆயிருச்சே, சரவணா இன்னேரம் திறந்திருக்குமான்ற'கவலை'யோட ஆட்டோவில் ஏறுனோம். ஹூம்... ஒருவேளை உணவை ஒழி என்றால் ஒழியாய்......

43 comments:

said...

துளசிம்மா அப்ப அன்னிக்கு பிறந்தநாளா
சொல்லவே இல்லியே
சரி தாமதமா சொல்றேன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
///
என்னதான் நாங்க ரெண்டுபேரும் ஒர் மனசுன்னாலும் ஓர் உடல் கிடையாதுல்லையா?(-:///
எங்கேயோ போயிட்டீங்க துளசி:-)))))

///ஏதோ நாந்தான் அந்தப் பொண்களோட அம்மா மாதிரி, 'அப்பாடா'ன்னு இருந்துச்சு.///
வாஸ்தவம்

said...

மது,

வாங்க வாங்க. நலமா? உங்களுக்கு இன்னும்(!) 'தனிமடல்' போட்டுக்கிட்டு இருக்கேன்:-)
நீங்க என்னை முதல் முதல்லே பார்த்தப்ப பிறந்த நாள் முடிஞ்சு ஒருவாரமாயிருச்சப்பா!

சரி. அடுத்தது வர்றவரைக்கும் பிலேட்டட் வாழ்த்துக்கள்... ஆஹா வரட்டும் வரட்டும்.

நன்றி மது!

said...

துளசி அக்கா,
நல்லவேளை நீங்க எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டம் இல்லத்துக்கு போகல்ல..ஒரு தடவ நான் போயி ரொம்ப வருத்தமா இருந்தது .விரல் நுனியில தமிழ்நாட்டையே ஆட்டிபடைச்ச வாத்தியார் வாழ்ந்த இடம் இப்போ அலங்கோலமா இருக்கு!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி அக்கா. //ஃபிப்ரவரி 12 சரியாஇருக்கும். 19 ன்னா // -ஃபிப்ரவரி தான் முடிஞ்சுடுச்சே...

said...

என்னங்க ஜோ, இப்படிக் குண்டைத் தூக்கிப்போடறீங்க? அண்ணன் வீட்டுக்கு ராமாவரம் தோட்டம் தாண்டித்தான்
போனோம். உள்ளெ போய் பார்க்கணுமுன்னு தோணலையே (-:

said...

பூன்ஸ்,

இது 'பயணக்கதை(!)யாச்சே. எல்லாம் 'அப்ப' நடந்ததைத்தான் 'இப்ப'ச்சொல்லிக்கிட்டு வர்றேன். அது போச்சு,
போனமாசம் அஞ்சாம் நாள். சரி இருக்கட்டும். வாழ்த்துக்கு தேங்க்ஸ்!

said...

துளசிதளத்துல நான் பின்னூட்டம் எழுதும் போதெல்லாம், ஒழுங்கா புரிஞ்சிக்காம்லே எழுதறேனே.. இனிமே தினம் படிச்சு கரெக்ட்டா எழுத முயற்சி பண்ண வேண்டியது தான்... :)

said...

பூன்ஸ்..
அது.... !

said...

பிறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்
பிறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்
பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்
Happy Birthday To You (belated)...

இது சிலோன் ரேடியோவுல பிறந்தநாளுக்குப் பாடுறது...நான் உங்களுக்குப் பாடுறேன்.

நாட்டிய நிகழ்ச்சியெல்லாம் பாத்திருக்கீங்க..இனிமே நானும் பேப்பர்ல பாத்துட்டு அங்கெல்லாம் போய்ப் பாக்கனும்.

said...

பிஃப் 5 - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
நான் உங்களுக்கு ஒருநாள் முன்பு பிறந்தநாள் கொண்டாடினேன்:)

said...

ராகவன்,
இப்பத்தான் உங்க ஆன்மீகப் பதிவைப் போய்ப் பார்த்துட்டு,வருகையிலும்
போகையிலுமுன்னு வந்தேன். திரும்பிப் பாக்கறதுக்குள்ளே 'குமரி பெற்ற குமரன்'ன்னு
ஆரம்பிச்சிட்டீங்க!

இந்த பிறந்த நாள் பாட்டை நாங்க இப்படியும் பாடுவோம் அந்தக் காலத்துலே,
'பிள்ளைகள் எல்லாம் தொல்லைகளாக வளர்ந்த நாள்'....

இனிமேக் கட்டாயம் பேப்பர் பார்த்துரணும், ஆமா! உண்மைக்குமே பல நல்ல நிகழ்ச்சிகள்
நடந்துக்கிட்டுத்தானிருக்குன்னேன்.

said...

மணியன்,

உங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.
இப்பெல்லாம் வாழ்த்துன்னு எழுதறப்ப ராகவனை நினைக்க வேண்டியதாப் போச்சு:-)

said...

துளசியக்கா,
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

நன்றி முத்துத் தம்பி!

வாழ்த்து(க்)க்கள் உங்க புதிய தளத்துக்கு.

said...

துளசி
இரண்டுவரியில பிறந்தநாள் பத்தி மெயில் அனிப்பிட்டு இப்ப இரண்டு பக்கம் விரிவா எழுதி இருக்கிறத பாத்தா டீச்சருக்கு சுருக்கமா சொல்லவும் அதையே விரிவாக கட்டுரையாவும் எழுத திறமை இருக்கிறது நல்லாவே தெரியுது. மீண்டும் ஒருதர: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

என்னங்க பத்மா, நீங்களுமா? அதுபோய் ஒன்னரை மாசமாயிருச்சே!

said...

எத்தனை முறை சொன்னா என்ன துளசி பிறந்தநாள் வாழ்த்துக்கு. படிக்க நல்லா எழுதி இருந்தீங்க. இன்னொரு தடவை சொல்வோமே-

said...

பத்மா,

உங்க பதிவுலே பின்னூட்டம் போட்ட எர்ரர்னு சொல்லுது. கொஞ்சம் பாருங்க

said...

இன்று போல் எல்லாமும் பெற்று இனிதே என்றும் வாழ்க.

said...

ஞானவெட்டியாரே,

எல்லாம் உங்க ஆசீர்வாதம். நல்லா இருக்கீங்களா?

said...

பாட்டு கத்துக்கிட்ட கதையை இன்னொருநாள் சாவகாசமாச் சொல்றேன்:-)
இது வேறையா???அய்யோ ஆண்டவனே....

எங்கியாவது போனமா, பார்த்தமா,வந்தமான்னு இருக்குற ரகமா நானு?
அதானே!!!!???

//ஆச்சு அர்ச்சனை? யாருக்கு...?//
//என்னதான் நாங்க ரெண்டுபேரும் ஒர் மனசுன்னாலும் ஓர் உடல் கிடையாதுல்லையா?(-://
//ஹூம்... ஒருவேளை உணவை ஒழி என்றால் ஒழியாய்...... //

டிபிக்கல் துளசியக்கா இஷ்டைல்.

said...

வாங்க சுதர்ஸன்.

ஆமாம். காதல் மன்னனுக்கு 'தெவசம்' பண்ணிட்டீங்க போல. நீங்க எழுதனதைப் படிச்ச பின்னேதான் நினைவுக்கு
வந்துச்சுங்க. ஒரு வருசம் போயிருச்சுல்லே. அப்ப நான் சிங்கையிலே இருந்தேன். தமிழ்ச்சானல்லே சிறப்பு நிகழ்ச்சியா
அவரோட படங்களிலே சில பகுதிகளைக் காட்டினாங்க.

said...

உங்க பயணக்கதையை ஒவ்வொரு பகுதியா இப்பத்தான் படிச்சிக்கிட்டு இருக்கேன். நெறைய இடங்கள்ல வாய்விட்டு சிரிக்க வைக்கிறீங்க துளசிம்மா. நல்லா இருங்க:))

said...

செல்வா, வாங்க வாங்க. நலமா?
அதான் வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம்லே?
நமக்கெல்லாம் (மன) நோயே வராதுல்லே?:-))))

said...

நீங்களும் ஐந்தா?!!!

பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி :)

அருவியாய் கொட்டும் பயணக்குறிப்புகளை படிக்க படிக்க !

அன்பு
மீனா

said...

பிறந்த நாள் வா....ழ்த்துக்கள் துளசியக்கா! இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் தங்களுக்கு இனிய நாளாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

said...

கொஞ்சம் லேட்டாயிடிச்சில்ல! பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

வாழ்த்துக்கள் அம்மா :) சொல்லவே இல்லையே என்கிட்ட தொலைபேசில பேசறப்போகூட? :) சரி சரி பரவாயில்ல, அடுத்த வருசத்துக்கும் சேத்து இப்பவே வாழ்த்து வாங்கிக்கோங்க :)
வாழ்க வளமுடன்
ஸ்ரீஷிவ்...:)

said...

மீனா,

அது என்ன நீங்களும் அஞ்சா? ஓஓஓ..... அப்ப நீங்களும் அஞ்சா?:-)ஆனா எந்த மாசத்து அஞ்சுன்னு சொல்லுங்களேன்.

said...

சிபி,

வாழ்த்துக்கு நன்றி

said...

சிங். செயகுமார்,

சிங்கையிலே பார்த்தப்பச் சொல்லியிருக்கலாம் இல்லே?

said...

சிவா,

இது நல்ல ஐடியாவா இருக்கே.

சரி, இதுவரை வாழ்த்திய அன்புள்ளங்களுக்கெல்லாம், அவுங்கவுங்க பிறந்தநாள் வர்றப்ப( எப்போ?) அதுக்கு
நான் இப்பவே அட்வான்ஸா வாழ்த்தியதா நினைச்சுக்குங்கப்பா:-)))))

said...

"சிங்கையிலே பார்த்தப்பச் சொல்லியிருக்கலாம் இல்லே? "

நேக்கு தெரிஞ்சிருந்தா சொல்லாம இருபேனா.மன்னிச்சுகோங்க டீச்சர்!
ரொம்ப நேரமா பெஞ்சுமேல நிக்கிறேன் .எல்லாரும் பாக்கிறாங்க .இறங்கட்டுமா!

said...

செயகுமார்,

சரி சரி, ரொம்ப நேரம் நின்னாச்சு. கீழே இறங்குங்க.

நான் சொல்லியிருக்கலாமுன்னு சொன்னது என்னைப் பத்தி:-)
( உங்களுக்குச் சொல்லியிருக்கலாமுன்னு!)

said...

அத்துழாய்,

உங்க நெஞ்சுக்குள்ளே இருந்து வந்த இந்த வாழ்த்துக்கு மிகவும் நன்றி. சந்தோஷமா இருக்கு.
ஆமாம் துழாய்ன்னா துளசி தானே?

said...

//ஆமாம் துழாய்ன்னா துளசி தானே?
//

ஆமாம் துளசியக்கா. அத்துழாய்ன்னா துளசி தான். அவங்களும் இன்னொரு துளசியக்கான்னு நினைக்கிறேன்.

பயணத்தில இருக்கிறப்பவும் உங்க பயணக் கட்டுரை எல்லாம் தவறாமப் படிக்கிறேன். பின்னூட்டம் தான் போடறதில்லை (உங்களை மாதிரியே :-) நீங்களும் எங்க பதிவுக்கு வந்து படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறதில்லையே). பிறந்த நாள் பதிவுக்குப் பின்னூட்டம் போடாட்டி எப்படி?

பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.

said...

வாழ்த்துகளுக்கு நன்றி குமரன். இப்படியா பின்னூட்டம் போடாம இருந்ததை மாட்டி விடறது? படிச்சுட்டு அப்புறமுன்னு
நினைக்கறப்ப இப்படி ஆகிருதுப்பா.

பயணம் எல்லாம் எப்படிப் போகுது?

said...

அடடா,

ஊர்லருந்து வந்துட்டு இருக்கற வேலையில உங்க பிறந்த நாள் பதிவை மிஸ் பண்ணிட்டேனே..

சாரி, சாரி, சாரி..

இன்று போல் என்றும் வாழ்க.. அதே இளமையோட!!

சரிங்க.. என்ன இப்படி பெரீரீரீசா எழுதறீங்க.. படிச்சி முடிக்கறதுக்குள்ள மூச்சு முட்டி போயிருது..

said...

வாங்க 'என் உலகமே'!

பொறந்த நாள் போய் ரொம்ப நாளாச்சுங்க. பயணக்கதைன்றதாலே அன்னிக்கு நடந்ததை எழுதப்போக....
இப்ப நீங்கெல்லாம் வாழ்த்துச் சொல்லிக்கிட்டு இருக்கீங்க!

இருக்கட்டும் இருக்கட்டும்! இதுவும் நல்லாதான் இருக்கு. வாழ்த்துங்க, வாழ்த்துங்க.

இதெல்லாம் வீணாப்போற சமாச்சாரமா என்ன? அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும். என்ன நாஞ்சொல்றது?

ரொம்பப் பெரிய பதிவாப் போச்சுங்களா? இனிமே ச்சின்னச் சின்னதாப் போட்டுறலாங்களா?

ஒரு நாளில் நடந்தது ஒரு பதிவுன்னு வச்சதாலே இப்படி! ஒரே நாளுலே என்னென்ன நடந்துருது பார்த்தா,
சில சமயம் ஆச்சரியமாப் போகுதுல்லே? சில நாளுலே ஒண்ணுமே நடக்காது.அப்படியே கடந்து போயிரும்(-:

said...

யக்கா கொஞ்சம் லேட்டாய்டுச்சிக்கா...
பொறந்த நா வாழ்த்துக்கா...

said...

அது பரவாயில்லை. அக்கா நினப்பு இருந்தாச் சரி.

said...

\\எந்த மாசத்து அஞ்சுன்னு சொல்லுங்களேன்.\\


ஜூன் அஞ்சு துளசி.. :)

said...

அன்பு மீனா,

இனி இந்த நாளை மறக்கவே முடியாதுப்பா. எங்க வாழ்க்கையின் இனியநாள்தான் அது.

மறக்கவுட மாட்டீங்களே:-)))