Friday, March 17, 2006
என்ன தவம் செய்தனை.....


பயண விவரம் பகுதி 5


இந்தப் பயணத்துக்கு ஒரு முக்கிய நோக்கம் இருந்துச்சுன்னாலும், தினப்படி என்ன செய்யப்போறொம்னெல்லாம்திட்டமுன்னு ஒண்ணும் போட்டுக்கலை. அன்னன்னைக்கு எப்படி வருதோ அப்படி!


'ஆதத் சே மஜ்பூரி'ன்னு சொல்றதுபோல மனுஷன் பழக்க வழக்கத்து அடிமையாயிடறான் இல்லே?தமிழ்மணம்பாக்காம நான் எப்படி இருக்கப்போறேனோன்னு எங்க இவருக்கு ரொம்பக் கவலை. பழக்கம் தப்பிட்டா தலை திரிகிபோகுமு( பைத்தியம் புடிச்சிரும்)ன்னு நினைச்சுக்கிட்டு, அவரோட மடிக்கணினியிலே கலப்பையை இறக்கிவச்சுக்கிட்டார். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, நாம் தங்குன இடத்துலே இருந்த ஃபோன் கனெக்ஷனை எடுத்துட்டுருக்காங்க. 'அதான்எல்லார் கையிலும் செல் வந்துருச்சேங்க'ன்னு பதில் வருது. இல்லை, இது வேலைக்காகாது. ஃபோன் லைனை மறுபடிபோடுங்கன்னு சொல்லிட்டோம்.


கணினி மையத்துலே போய்தான் மெயில் பாக்கறது, அனுப்பறதுன்னு நாள் போய்க்கிட்டு இருக்கு. ஒரு ஃபோன் லைன்கனெக்ஷன், அவுங்க கணினிக்குப் பதிலா எங்க லேப்டாப்புக்குக் குடுங்கன்னு கேட்டதுக்கு, கணினிமைய உடமையாளர் ஏதோஅவர் மையத்தையே கேட்டுட்டாப்போல திகைச்சு நின்னுட்டார். சரி, அவருக்கு ஏன் தொல்லைன்னு பேசாம இருந்துட்டோம்.
அன்னிக்குச் சனிக்கிழமை. ஊர் வந்து எட்டு நாளாச்சு. தமிழ்மணம் பார்க்காத எட்டு நாட்கள்! வெற்றிகரமாச் சமாளிச்சுக்கிட்டு இருக்கேன்.எங்க இவருக்குத்தான் பயம். 'வித்ட்ராயல் சிம்ப்ட்ம்ஸ்' இருக்கான்னு கவனிச்சுக்கிட்டு இருக்கார். இன்னமும் 'கோல்ட் டர்க்கி'வரை போகலைன்றது ஒரு நிம்மதி. சனிக்கிழமைன்னதும் கோயிலுக்குப் போகணுமுன்னு நினைப்பு வந்தது. எனக்கு இதுலேயும் ஒரு 'ஆதத்' இருக்கு, எல்லா சனிக்கிழமையும் கட்டாயமாக் கோயிலுக்குப் போகணும். இந்தியா வந்தமுன்னா எக்ஸ்ட்ராவா தினமும் ஒரு கோயில்னு போறதுதான்.


வெங்கடநாராயணா சாலையிலே திருப்பதி தேவஸ்தான கோயில்லே சனிக்கிழமைன்னா கூட்டம் எக்கச்சக்கம். எல்லாரும் நம்மளைப் போலவேஆயிட்டாங்க போல! அவுங்களை ஒழுங்குபடுத்த கயிறுகட்டி, வரிசை உண்டாக்கின்னு ஏக அமர்க்களம். இது நமக்குச் சரிப்படாது. வேற எதாவது கோயிலுக்குப்போகலாம், எல்லா சாமியும் ஒண்ணுதானேன்னுட்டு, கோபதி நாராயணசாமி சாலையிலே இருக்கற ஜெயின் கோயிலுக்குப் போனோம்.


தெருவைப் பாக்காம கொஞ்சம் பக்கவாட்டுலே திரும்பி இருந்த பெரிய கேட்டைத் திறந்துக்கிட்டு உள்ளெ போனா....பிரமாண்டமான ஐராவதம் ரெண்டு,எதிரும் புதிருமா! ரெண்டுக்கும் நடுவிலே படிக்கட்டுங்க. ஒரு ஏழெட்டு இருக்கும்.பெரிய கூடம்.சுவத்தோரமா மூணு சந்நிதிங்க. கூடத்துலே ச்சின்னமேடையிலே ஒரு விக்கிரஹம். மூணு மார்வாடிப்பெண்கள். முகத்தை மறைக்கும் முக்காடு. அதிலே ரெண்டுபேர் விக்கிரஹத்துக்கு அபிஷேகம் செய்யறாங்க. ஒருத்தர்தரையிலே உக்காந்துக்கிட்டு கையிலெ இருக்கற பெரிய தட்டுலே இருந்து அபிஷேகப் பொருட்களை ஒவ்வொண்ணாஎடுத்துக் கொடுக்கறார். ச்சின்னக் குரலில் எதோ பாட்டும் பாடிக்கிட்டே இருக்காங்க.


நாமோ, இந்தக் கோயிலுக்குப் புதுசு. இவுங்க பூஜை முறைகள் ஒண்ணும் தெரியாது வேற.அதனாலே யாரையும் தொந்திரவு செய்ய வேணாமுன்னு நினைச்சுப் பேசாம பளிங்குத் தரையிலே உக்கார்ந்து கொஞ்ச நேரம் தியானம்(!) செஞ்சோம். அப்புறமா அந்தக் கோயிலை வலம் வரலாமுன்னு( நோஸி?) வந்தோம். படு சுத்தமா இருந்துச்சு. பின்னாலே ஒரு பெரிய ஹால் அப்புறம், பக்கவாட்டுலேயும் ( மெயின் ரோடைப் பார்த்தாமாதிரி)இன்னொரு ஹால். அவுங்க சம்பந்தப்பட்ட விசேஷங்களுக்கு பயன்படுதாம். நல்ல ஐடியா இல்லே? கோயில் வெளி வராந்தாவுலே ஒரு சந்தனம் அரைக்கிற ச்சின்னக் கல். அரைச்செடுத்த சந்தனம் கொஞ்சூண்டு ஒரு கிண்ணத்துலே,அதை இட்டுக்க ஒரு குச்சியும், முகம் பார்க்கும் கண்ணாடியும். கோணாமாணான்னு நெத்தியிலே இட்டுக்காமஅழகா அளவா இட்டுக்க முகம் பார்க்கும் கண்ணாடி. பேஷ் பேஷ். ( திருப்பதி தேவஸ்தான கோயில்லேயும் ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய கண்ணாடி இருக்கு, கவனிச்சீங்களா?) கேமெரா எடுத்துக்கிட்டு போகலையேன்னு வருத்தமா இருந்துச்சு. ஆனா போனவாரம் நம்ம 'கபாலி'யைக் கண்டுக்கினு வர்றப்ப அப்படியே குளத்துலே எட்டிப் பார்த்தாஆச்சரியமாப் போச்சு, குளம் நிறையத் த்ண்ணியும், துள்ளிக் குதிக்கும் மீன்களும்! உடனே மீனுக்குப் போடன்னபொரி வியாபாரம் அமோகமா நடக்குது. நானும் வாங்கிப்போட்டேந்தான். ஆனா மீன்கள் பாவம். பொரியே தின்னு போரடிச்சு கிடக்குதுங்க.எங்க இவர் சில இடங்களுக்குப் போகணுமுன்னு சொன்னதாலே, ட்ராவல்ஸ்லே ஒரு கார் எடுத்துக்கிட்டுக் கிளம்புனோம்.வேளச்சேரி எல்லாம் கடந்து தாம்பரம் போற ரோடு. அங்கே இருந்து கிளை பிரியும் ரோடுலே போறோம். புது கட்டிடங்கள் ஏராளமாக் கட்டிக்கிட்டு இருக்காங்க. பல அடுக்குமாடிகள். ஆனா வெனிஸ் ஞாபகம் வந்துச்சு.போனவெள்ளத்தோட மிச்சங்கள் இன்னும் இருக்கு. சில இடத்துலே எல்லாம் பச்சையா பாசி பிடிச்சுத் தேங்கிக் கிடக்குது.அதுக்கு அடியிலே இருக்கும் தரை விற்பனைக்கு! எனக்கோ,படகு விடத்தெரியாது,எதுக்கு ரிஸ்க்குன்னு திரும்பவந்தப்பதான் வண்டி தாம்பரம் கிட்டே போறதைக் கவனிச்சேன்.


இந்த ரோடிலெ நண்பர் வீடு இருக்கே, அங்கெ போயிட்டுப் போயிரலாமுன்னு அவருக்கு ஒரு ஃபோன் போட்டேன்.அதான் மூணுதாளும், செல்லும் கையிலே இருக்கே:-)


நண்பருக்குப் பேருக்கேத்தாப் போலவே சந்தோஷம். வீட்டுவாசலிலே இறங்குறப்பவே சந்தோஷின் மனைவி ஓடிவந்து கட்டிப் புடிச்சுக்கிட்டாங்க.
இவுங்களை எனக்கு ஒரு மூணுவருசமாத்தான் தெரியும். ஆனா இவுங்களைப் போல உள்ளவங்களைத் தெரிஞ்சுக்கறதுக்கும், நட்பு வச்சுக்கவும் நாம்தான் புண்ணியம் பண்ணி இருக்கணும்.


சந்தோஷ் நளினி தம்பதிங்களுக்கு மூணு குழந்தைங்க. அதுலெ ஒரு இரட்டையரும் இருக்காங்க. ஆனா இதுமட்டுமே அவுங்க குடும்பமில்லை. இன்னிக்குக் கணக்குக்கு மொத்தம் 26 புள்ளைங்க.

19 comments:

said...

இன்னிக்கு ப்ளொக்கர் ஒரே சொதப்பல்.
முதல்தடவை பப்ளீஷ் செய்யலை. எர்ரர்னு சொல்லுச்சு. ரெண்டாம் முறை பப்ளீஷ் செஞ்சப்ப ரெண்டு பதிவும்
இருக்கு. சரி ஒண்ணை எடுத்துரலாமுன்னா அதுக்கும் விடமாட்டேங்குது. எடிட் செஞ்சா எர்ரர்னு சொல்லுது(-:

said...

//கோபதி நாராயணசாமி சாலையிலே இருக்கற ஜெயின் கோயிலுக்குப் போனோம்.//
ஜி.என்.ஷெட்டி ரோட்னு தமிளில சொன்னா அல்லாருக்கும் பிரியும்.
//ஆனா வெனிஸ் ஞாபகம் வந்துச்சு.போனவெள்ளத்தோட மிச்சங்கள் இன்னும் இருக்கு//
வேளச்சேரியை வெனிஸோட கம்பேர் செய்யரதெல்லாம் த்ரீ மச்.
//சந்தோஷ் நளினி தம்பதிங்களுக்கு மூணு குழந்தைங்க. அதுலெ ஒரு இரட்டையரும் இருக்காங்க. ஆனா இதுமட்டுமே அவுங்க குடும்பமில்லை. இன்னிக்குக் கணக்குக்கு மொத்தம் 26 புள்ளைங்க.//
ஹூம்.டீபீஆர் சார் தான் இப்படி முடிச்சு நகத்தைக் காலி பண்ண வைப்பார்னா,நீங்களுமா??

said...

ஏங்க சுதர்ஸன்,
'ஜாதி'யைத் தெருப்பேர்களிலே இருந்து(மட்டுமே) எடுத்தது உங்களுக்குத் தெரியாதா? அட தேவுடா?
ஆமாமாம். நீங்கதான் 'பெங்களூரூ'வாசியாச்சே.

முழுக்க முழுக்க கம்பேர் செய்ய முடியாதுதான். ஏன்னா படகுங்க இல்லையே. ஆனா அங்கெ இருக்குற
Bridge of sigh இங்கெ இல்லேன்னாலும் காட்சிகள் பல sigh யை வரவழைச்சுருச்சு...... ஹூம்

எல்லாம் டிபிஆர் கிட்டே படிச்ச ட்ரெயினிங்னு சொன்னா நம்புவீங்களா? நம்பணும்,ஆமா:-)

said...

எங்கே ' என்ன தவம் ' ? இடுகை செய்தனை என்று ஆரம்பிக்கிறது. ப்ளாக்கரின் சொதப்பலா?
என்னதவம் செய்தனை -->//ஆனா இவுங்களைப் போல உள்ளவங்களைத் தெரிஞ்சுக்கறதுக்கும், நட்பு வச்சுக்கவும் நாம்தான் புண்ணியம் பண்ணி இருக்கணும்.// சரியா ?

said...

வாங்க மணியன்,
இன்னிக்கு 'சொதப்ஸ் டே'! உங்க பதிவுலேயும் வாழ்த்து சொல்லிப் போடறதுக்குள்ளே பேஜார் செஞ்சுருச்சு.

said...

ஓ ஜி.என்.செட்டி ரோடுதான் அந்த கோபதி நாராயணசாமி ரோடா.....நான் இதென்னடா ரோடுன்னு கொழம்பிக் கிடந்தேன். (சொன்னதுக்கு நன்றி சுதர்சன்).

குளத்துல மீன் இருக்கா....ம்ம்ம்ம்..இப்பிடித்தான் திருப்பரங்குன்றத்துலயும் மீனுக்குப் பொரியா போட்டுக் கெடுத்து வெச்சிருக்கோமுல்ல.....

கோயில் ரொம்பவே துப்புரவா இருக்கு. நிர்வாகத்துக்குப் பாராட்டுகள்.

அது சரி...மொத போட்டோவுல பத்துத் தலைகளோட ஜம்முன்னு கம்பீரமா கால மடக்கி உக்காந்திருக்காரே...அந்த ஆணழகன் யாரு?

ஆனையப் பாத்ததும் விட மாடீங்களே....ஆனைய உங்க பக்கத்துல வெச்சுக்கிட்டு ஒரு ஃபோட்டோ...நடக்கட்டும் நடக்கட்டும்.

ஜெயின் கோயில்கள்ள எல்லாம் பொம்பளைங்கள பூஜை செய்ய விடுறாங்க. நம்ம கோயில்கள்ளயும் அது நடக்கனும்.

said...

அப்ப்ப்பாடா.. ப்ளாகர் சரியாயிருச்சின்னு நினைக்கிறேன்..

நானும் காலைலருந்து முயற்சி செஞ்சி சோர்ந்து போய்ட்டேன்.

உங்க நகர்வலம் பதிவுகள் எல்லா இடத்துக்கும் நானே போய்வரா மாதிரி இருக்கு..

தொடர்ந்து எழுதுங்க..

said...

ராகவன்,

இங்கே கர்ப்பகிரகத்துக்குள்ளே கூட யார்வேணுமுன்னாலும் போய் பூஜிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன்! அங்கே
கோயில்லேயெ இருக்கற குழாயடியிலே குளிச்சுட்டு அப்படியே வரணுமாம். நல்ல ஐடியாதானே?
பொண்ணுங்களுக்குத்தான் முடியாது(-:

ஆனா, வெளியே இருக்கற உற்சவமூர்த்தி போல இருந்ததுக்குப் பொண்கள் தானே பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
அதுவே யதேஷ்டம், இல்லையா?

ஆமாம், அந்த ஆணழகன் தலையை எண்ணலையா? யாரா இருக்கும்?ம்ம்ம்ம்ம்ம்ம்.....

said...

என்னங்க டிபிஆர் ஜோ,

உங்களையும் ப்லொக்கர் படுத்திருச்சா? இப்பகூட உங்க 100ஐப் படிக்க முடியலை(-: 'கேன் நாட் ஃபைண்ட் சர்வராம்.'
என்ன ஆணவம் பாருங்க அதுக்கு.

said...

துளசியக்கா (hope I am younger than you, which I doubt very much),

எனக்கு ஒரு மாவிளக்கு படம் வேணும். நீங்க இதுக்கு முன்னாடி மாவிளக்கு குடம் பார்த்திருக்கீங்களா?, இல்லைனா, ஒருமாதிரியா வரைஞ்சிருக்கேன், http://premalathakombai.blogspot.com/2006/03/help-maavilakku.html பாருங்க, ஒரு நல்ல படமா கிடைச்சா ஒரு மெயில் தட்டிவிடுங்க, ரெம்ப புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு. நன்றி.

said...

எதுக்குப்பா துளசி ரெண்டு தரம் போட்டாங்கன்னு நினைச்சேன். ஜி.என். செட்டி இப்படி உருட்டப்படுறாரே, பாவம். மார்வாடி கோயில்களெல்லாம் நல்ல சுத்தமா இருக்கு துளசி. ஊட்டி போற பாத்கையில்கூட ஒரு கோயில் மெயிந்தைன் பண்றாங்க, அவ்வளவு சுத்தம்.

said...

அன்புள்ள பிரேமலதா,

இந்த மாவிளக்கு குடம்ன்றதை நான் பார்த்ததே இல்லை. எங்க மாமியார் வீட்டுலே
ஈர அரிசிமாவும், வெல்லப்பாகும் போட்டுப் பிசைஞ்சு அதையே ஒரு தாம்பாளத்துலே போட்டு மொத்தையா
வச்சு நடுவிலே பெரிய குழியாக்கி, அதுநிறைய நெய்விட்டுத் திரிகள் போட்டு விளக்கு வைக்கறதைத்தான்
பார்த்திருக்கேன்.

நீங்க கொடுத்த 'லிங்க்'லே இருக்குற குடம் அழகா நல்லாதானே வந்துருக்கு.

said...

தாணு,

ஒரு நல்ல ஓட்டு ஒரு கள்ள ஓட்டுன்னு இன்னிக்கு அநேகமா எல்லோருக்கும் ப்ளொகர் சப்ளை செஞ்சிருக்கு.
எலக்ஷன் வருதுல்லே:-)

said...

துளசி,
செடியின் தன்மை போலவே, படிப்பவருக்கு இதமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த மயிலாப்பூர் திருவிழாவில் அடியேனும் சில புகைப்படங்கள் எடுத்து, போட்டிக்கு பதிந்தேன்! அமெச்சூரான எனக்கு ஆறுதல் பரிசு!! உங்கள் எழுத்து நடையில் நல்ல fluency இருக்கிறது. இனி தவராமல் வாசிப்பேன்.
ஜெ.சந்திரசேகரன்
http://maraboorjc.blogspot.com

said...

வாங்க ஜெயசந்திரன்,

எப்படி இருக்கீங்க?

ஆமாம், (ஆறுதல்) பரிசு வாங்குன படத்தை எங்களுக்குப் போட்டுக் காமிச்சா
ஒரு ஆறுதலா இருக்குமில்லெ?

எப்படியோ இன்னுமொரு வாசக அன்பர் கிடைச்சிருக்கீங்க. ஆதரவுக்கு நன்றின்னு சொன்னா
ஏதோ ஒப்புக்குச் சொல்றதுபோல இருக்குல்லெ? சரி, அது வேணாம்.

சென்னைக்கு அடுத்தமுறை இன்னும் சீக்கிரம் வரணுமுன்னு தோணுது இப்ப:-)

said...

அடடா, பேருன்றது ஒரு மனுஷனுக்கு எவ்வளோ முக்கியம்? அதைப் போய் தப்பா எழுதிட்டேனே(-:
மன்னிச்சேன்னு சொல்லுங்களேன், ஜெய. சந்திரசேகரன், ப்ளீஸ்.

said...

பாத்திரக்கடைக்கெல்லாம் போக பொறுமை இருந்ததா துளசி. நல்லா எழுதி இருக்கீங்க வழக்கம் போலவே. நான் ஊருக்கு போற ஆசையை கிளப்பிவிட்டுடுத்து இந்த பதிவு. பார்க்கலாம் ஜூன்ல போக முடியுதான்னு.

said...

பத்மா,

கொஞ்சம் அங்கேயும் போயிட்டுத்தான் வந்தேன். இல்லாட்டா இந்த ட்ரிப் பூர்த்தியாகாதுல்லெ?

said...

//அன்புள்ள பிரேமலதா,

இந்த மாவிளக்கு குடம்ன்றதை நான் பார்த்ததே இல்லை. எங்க மாமியார் வீட்டுலே
ஈர அரிசிமாவும், வெல்லப்பாகும்
//வெல்லாமா? மாவிளக்குலயா? தப்பாச்சே. உப்போ இனிப்போ எதுமே இருக்கக்கூடாதே.

நீங்க போடியாச்சே, அல்லது வத்தலக்குண்டாச்சே (எங்கியோ படிச்ச மாதிரி ஞாபகம்) அதான் நம்ம மாவிளக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.

//போட்டுப் பிசைஞ்சு அதையே ஒரு தாம்பாளத்துலே போட்டு மொத்தையா
வச்சு நடுவிலே பெரிய குழியாக்கி,
//

மாவிலேயே திரி போடக்கூடாது, அகல்விளக்கு பதிச்சு அதிலதான்...

//அதுநிறைய நெய்விட்டுத் //

மாவிளக்குக்கு கடலெண்ணைதான்.....நெய் தப்பு.


Actually, the festival comes after the harvesting of groundnut crop and rice crop(wetland). It is very old traditional festival. rice and groundnut oil lights are offered to God as a note of thanks. Ghee is a wrong addition there.

Thanks anyway, I will ask other people.//நீங்க கொடுத்த 'லிங்க்'லே இருக்குற குடம் அழகா நல்லாதானே வந்துருக்கு. //

I tried to draw, to give an idea. but I am looking for a better picture. thanks.