வந்துட்டேன்...........
எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம்தானே? ரொம்பவே நிம்மதியா இருந்தமாதிரி உங்க முகமெல்லாம் ஒளிவீசுதே.... ம்ம்ம்ஹூம். இப்படியே உங்களைவிட்டா அது நல்லதுக்கில்லே:-)
எல்லாம் விவரமாச் சொல்லக் கொஞ்சம் நேரம் எடுக்கும். முதல்லே வயித்துப்பாட்டைப் பார்த்துட்டு அப்புறமா அறிவை விருத்திச் செய்யலாமா?
இதோ இன்றைய சமையல்:-))))
குட்டிக்குட்டியா முட்டைக்கோசு
இப்படி ஒரு ஈயடிச்சான் காப்பியா ஒரு காய் இருக்குமா? அச்சு அசல் முட்டைக்கோசு. ஆனால் அழகான மினியேச்சர். 'ஹனி ஐ ஷ்ரன்க் யுவர் காப்பிக்கேட்' ன்னு மந்திரம் போட்டுட்டாங்க போல.
இது ஒரு தண்டுச் செடியில் வளருது. ரெண்டு மூணடி உயரம் வருமாம். அந்தத் தண்டு முழுசும் குட்டிக்குட்டியாக் காய்ச்சுட்டு மேலே உச்சாணியில் குடை மாதிரி அஞ்சாறு இலைகள்.
பொதுவா சூப்பர் மார்கெட்டில் தண்டில் இருந்து பிச்சுப்போட்டதாத்தான் கிடைக்கும். சீஸன் சமயம் நகருக்கு வெளியில் இருக்கும் பண்ணைகளில் தண்டோடு விற்பனைக்கு இருக்கும். தண்டை ஒன்னும் செய்ய முடியாது. ஆனால் தண்டோடு பார்க்கும்போது அழகா இருக்கு. ஃபேன்ஸி! அதுக்காக ஒன்னு வாங்கிக்கறதுதான்.
முட்டைக்கோசுன்னு சொன்னாலும் அதுலே இருக்கும் ஒரு ' மணம்' இதுலே இல்லை. முட்டைக்கோசைக்கூட நிறைய நேரம் வேக வச்சாத்தான் பிரச்சனையே. நாலு நிமிசத்துக்கு மேலே வேகவைக்கலேன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். வேகும்போது கூடவே ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டா 'போயே போச்'. இது சமையல் குறிப்பு:-)
இன்னிக்கு நாம் சமைக்கப்போவது ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட் .
தேவையான பொருட்கள்:
ஒரு ஃபுட் ப்ராசஸர். (ஹா..) நம்ம 'ஈஸிப் பீஸி இண்டியன் குக்கிங்' ( வெளியிடப்போகும் சமையல் புத்தகத்தின் பெயர். நல்லா இருக்கா? ) முறைக்கு அவசியமான சமையலறைச் சாதனம்.
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட் : 200 கிராம்.
பயத்தம்பருப்பு ; 50 கிராம் (காலே அரைக்கால் கப். ) தண்ணீரில் ஊறவச்சுக்கணும்.
மிளகாய் வத்தல் ; 3 ( பிய்ச்சுச் சின்னதா துண்டுகள் செஞ்சது)
கடுகு ; அரைத் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் : கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி : கால் தேக்கரண்டி
உப்பு : அரைத் தேக்கரண்டி
எண்ணெய் : 3 தேக்கரண்டி
கருவேப்பிலை; ஒரு இணுக்கு
தேங்காய் துருவியது: ஒரு மேசைக் கரண்டி
(ஆகாதவங்க சேர்த்துக்கலேன்னா பரவாயில்லை.)
செய்முறை:
தண்டோடு ஒட்டியிருந்த பகுதியை லேசா கத்தியால் சீவி எடுத்துட்டுக் காய்களைத் தண்ணீரில் அலசிட்டு ஃபுட் ப்ராசஸரில் போட்டு( shredder blade) நறுக்கிக்கணும். இது பார்க்க அழகா ஒன்னுபோல மெலிசா நறுக்கித்தரும்.
பயத்தம் பருப்பைக் கழுவிட்டு அந்தத் தண்ணீரை வடிச்சுட்டு ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு ரெண்டு நிமிஷம் 50% பவரில் வேகவிடுங்க. அரை வேக்காடா இருக்கும் அது போதும்.
வாணலியை அடுப்பில் ஏத்தி அந்த எண்ணெயைச் சூடாக்குங்க. ஆச்சா? கடுகு, மொளகாய், கருவேப்பிலை போட்டு வெடிச்சதும் பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கிட்டு நறுக்குன ஸ்ப்ரௌட்டுகளையும் போட்டுச் சிறு தீயில் வதக்கணும். எண்ணி மூணே நிமிஷம். அரைவேக்காட்டுப் பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிஷம் கூடுதலா வதக்குக.
ஆச்சு. ஸ்டவ் ஆஃப்.
சிம்பிளான ஹெல்தி ஸைட் டிஷ். (ரசம் சாதத்துக்கு நல்லா இருக்கு. காரக்குழம்புக்கும் சரிப்படும்)
எதுக்கு இப்படிப் ஃபுட் ப்ராசஸர்லே வெட்டணுமுன்னா எல்லாத்துண்டுகளும் ஒரே கனத்தில் ஒன்னுபோல வெட்டிரும். சமைக்கும்போது தண்ணீரே சேர்க்க வேணாம். 'சட்'னு அதுவே வெந்துரும்.
சாதனம் இல்லைன்னு இதைச் சமைக்காம இருந்துருறாதீங்க. கையாலேயும் நறுக்கிக்கலாம். வெங்காயம் நறுக்கிக்கற மாதிரி. சமைக்கும்போது ரெண்டு மேசைக்கரண்டித் தண்ணீயை வாணலியில் தெளிச்சுவிடுங்க.
இவ்வளவு மெனெக்கெடணுமா? ஊஹூம்...வேணவே வேணாம்.
நாலைஞ்சு குட்டிகளை(!) மைக்ரோவேவில் ஒன்னரை நிமிஷம் 100 பவரில் வச்சு எடுங்க. நல்லாவே இருக்கு.
அதான் பச்சைக்காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக்கணுமுன்னு டாக்குட்டர்களும், ஹெல்த் ஃபுட் இண்டெக்ஸ்ம் சொல்வதைக் கேக்கலையா?
ஆங்... சொல்ல மறந்துட்டேனே... பருப்பு உசிலியாச் செஞ்சாலும் சூப்பரா இருக்கு.
ஆமாம்.... பெல்ஜியத்தில் இருக்கும் ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கும் இந்த ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட்டுக்கும் என்ன உறவு இருக்கலாம்?
அங்கேதான் பெல்ஜியத்தில் முதலில் பயிரிட்டாங்களாம், சமீபத்தில் ஒரு 800 வருசம் முன்னே:-)
60 comments:
சமீபத்தில் 800 வருடங்கள் வரை.. படிச்சிட்டேன்.
பயணங்கள் எப்படி இருந்தது?
வாங்க குமார்.
பயணம் ரொம்ப நல்லா இருந்தது. இப்பத்தான் போட்டோக்கள் எல்லாம் லோட் பண்ணிக்கிட்டு இருக்கேன். எடுத்த அறுநூத்துப்பதினாலில் உருப்படியா ஒரு அம்பது தேறுமான்னு பார்க்கணும்:-))))
குட்டீஸை அடிக்கடி பாக்கிறதுதான். அவங்களை என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தேன். நன்றி துளசிம்மா :)
இந்த காயெல்லாம் எங்களுக்கு எங்க..
சரி பார்க்க நல்லாருக்கு.. என்ன நீங்க பாட்டு க்கு நாங்க மகிழ்ச்சியா இருந்தோம்ன்னு சொல்லிட்டீங்க.. அழுத மூக்கும் முகமும் கூட சில சமயம் பளபளன்னு இருக்குமே..
மேடம் திரும்பி இன்னைக்குதான் ஜாயின் பண்ணீங்களா, வாங்க வாங்க, வாழ்த்துக்கள்
வாங்க ரீச்சர். இந்த பொடியன்களை வெச்சு பேக்ட் ஸ்ப்ரௌட்ஸ் அப்படின்னு ஒரு மேட்டர் செய்வேன். அது அப்புறம்.
போன காரியம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?
புதுசா ஒரு பதிவு போட்டு இருக்கேன். வந்து பார்த்து மார்க் போடுங்க! :)
ரைட்டேய்!
குட்டீஸ் எப்பவாவது கண்ணிலே படும் முழுசா சாம்பார்ல போடுறது உண்டு. இதை செய்து பார்க்கிறேன். வழக்கம் போல படங்களைப் பார்த்ததுமே யம்மீன்னு இருக்கு:))!
எல்லோரும் மிஸ் பண்ணிட்டோம், முக்கியமா மீனாட்சி பாட்டி உங்களது இட்லி கொத்சுவை :)))! பயணம் நல்லாயிருந்ததில் சந்தோஷம். நல்ல நல்ல படங்களுடன் பதிவுகளுக்காக வெயிட்டிங்.
இலவசக்கொத்தனார் said...
//புதுசா ஒரு பதிவு போட்டு இருக்கேன். வந்து பார்த்து மார்க் போடுங்க! :)//
அப்படியே என்னதும்.. ரிமார்க்ஸ் தந்துட்டீங்க ஆனாலும் மார்க்குக்காக வெயிட்டிங்.
சின்னச் சின்ன முட்டைக்கோசா இது.அத்தனை அச்சடிச்சா மாதிரி இருக்கு:)
நீங்களும் சமீபத்திலா")
இங்க கிடைக்கிறதோ. தெரியலை.சிகாகோவில பெண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும். செய்து கொடுக்கிறேன்.
துளசி மேடம் இஸ் பேக் :-))
பயணக்கட்டுரை வரும்னு எதிர்பாத்தா, இன்னும் சமையல் குறிப்பே முடியலையா!!!!
கறிவேப்பிலை ஒரு இணுக்கு- டீச்சர்,
கொஞ்சம் விவரியுங்கள். (புளி ஒரு கம்மரகட்டு சைஸ் போல)
அப்பறம் இந்தி தசாவதாரம் எப்படி இருந்துது
//வேகும்போது கூடவே ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டா 'போயே போச்'. இது சமையல் குறிப்பு://
நன்றி ஹை. :))
பிஜில கதைய சொல்லுங்க முதல்ல. கல்யாணத்துல டிபன், காப்பி எல்லாம் உண்டா? தசாவதாரம் பாத்தீங்களா? :p
//புதுசா ஒரு பதிவு போட்டு இருக்கேன். வந்து பார்த்து மார்க் போடுங்க//
@koths, போஸ்டர் ஒட்டிடாங்கய்யா எங ஊர்காரங்க.
ஹிஹி, ரீச்சர், நானும் நிறைய பதிவு போட்டு வெச்ருக்கேன். வெட்டியா இருந்தா படிங்க. :))
இன்னிக்கு கூட ஒரு பதிவு போட போறேன், பஷ்ட்டு கமண்டு போடுங்க பாப்போம். :p
நல்லாத்தான் இருக்கு.. நான் ட்ரை பண்ணிப்பாக்கறேன். :)
எல்லாரும் ஒட்டும் போது நானும் ஒட்டிக்கறேன் விளம்பரம்.. நானும் இரண்டு பதிவு போட்டிருக்கேனாக்கும்..
welcome back!! :)) உங்கள் வரவு நல்வரவாகுக டீச்சர்!
மணல்,அது கூழாங்கற்களின் குழந்தை! அப்படின்னு ஒரு கவிதை வரும் தசாவதாரத்துல. அது போல இந்த குட்டி கோசு,அழகு மட்டுமல்ல ரொம்ப டேஸ்டும் கூட.
உலகம் சுற்றும் வாலிபன் போல நீங்க உலகம் சுற்றும் துளசி-ன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்! உங்க புண்ணியத்துல நாங்களும் எல்லா எடமும் பாக்குறோம்.(ஓசியிலேயே எல்லா எடமுமா, உனக்கு வெக்கமாயில்லே அப்டிங்கறா என் பொண்ணு :-))
என்றும் அன்புடன் தமாம் பாலா
www.bala-win-paarvai.blogspot.com
www.best-regards-bala.blogspot.com
என்னோட favorite vegetable :-)
சீக்கிரமே இந்த recipes யும் ட்ரை பண்ணிடறேன் :-)
உங்களை கொஞ்ச நாளா காணோமே, என்ன ஆச்சு மேடம்?
முட்டை கோஸ் படங்கள் அழகா இருக்கு :)
ambi said...
////புதுசா ஒரு பதிவு போட்டு இருக்கேன். வந்து பார்த்து மார்க் போடுங்க//
@koths, போஸ்டர் ஒட்டிடாங்கய்யா எங ஊர்காரங்க.////
எங ஊர்கார"ங்க".. என்னையும் சேர்த்துத்தானே அம்பி:)))?
முதலில் இதை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரிட்டிஷர், கிருஸ்துமஸ் டின்னரில் நான் சைவம் என்பதற்காக அவரது வீட்டில் எனக்கு செய்த 5 கோர்ஸ் டின்னரில் இதுவும் ஒரு டிஷ்.
நன்கு வேகவைத்து உப்புமிளகு தூவி...உண்ண ரம்யமாக இருந்தது. :)
அன்பினை உணர்ந்த அந்த நேரத்தை நினைவுட்டியமைக்கு நன்றி. :))
வீட்டில் அடிக்கடி இப்படி சமைப்போம். பகிர்ந்தமைக்கு நன்றிகள்
வாங்க கவிநயா.
குட்டிகளைச் சும்மாப் பார்க்காதீங்கப்பா.
ஒரு வழி பண்ணாத்தான் ஆச்சு:-)))
வாங்க கயலு.
நமக்கெதுக்கு அழுதகண்ணும் சிந்திய மூக்கும்?
சிரிச்சுக்கிட்டே இருந்துறலாம்ப்பா:-)))
வாங்க வெட்டி ஆஃபீசர்.
ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணியாச்சு. ஆனா பிக்கப் ரொம்ப ஸ்லோவா இருக்கு:-)))
வாங்க கொத்ஸ்.
வகுப்பிலே எல்லாரும் கொயட்டா இருந்தாங்களா?
பேக்டுன்னு சொல்லாதீங்க. 34 டிகிரி செல்ஷியஸில் நல்லாவே பேக்டு ஆகிட்டோம்:-)
உங்க ரெஸிபியைக் கொஞ்சம் எடுத்துவிடுங்க.
பதிவுகள் எல்லாம் கொட்டிக்கிடக்கு. படிச்சுப்பார்க்க நேரம் செல்லுமுன்னு நினைக்கேன்...
அதென்னாப்பா ஒரு பத்தே நாளுலே எழுதிக் குமிச்சுருக்காங்க நம்ம மக்கள்ஸ்!
வாங்க நாமக்கல்லாரே.
அதென்ன எப்பவும் டபுள் விசில்? :-))))
வாங்க ராமலக்ஷ்மி.
இன்னும் சாம்பாரில் போட்டுப் பார்க்கலை. செஞ்சுறலாம்:-)))
அதென்ன மீனாட்சிப் பாட்டியின் இட்லி கொத்சு????
வாங்க வல்லி.
சிங்காரச் சென்னையிலேயே கிடைக்குதே. இதோட குழந்தை போல இக்கினியூண்டா இருக்குப்பா.
'ஜஸ்ட் பிக்குடு' என்ற கடையில் வாடிப்போய்க் கிடந்ததைப் பார்த்துருக்கேன்:-)
வாங்க கிரி.
எஸ் ஐ ஏம் பேக்(டு).
ஜீரோ டு 34 டு மைனஸ் 2:-)
வாங்க சின்ன அம்மிணி.
ஒரு ஸ்ப்ரிக் ன்னு சொல்றதில்லையா, அதுதான் ஒரு இணுக்கு.
இங்கே நமக்குக் கிடைப்பது இணுக்கு இணுக்காவேதானே பையில் போட்டு வருது:-)
தசாவதாரம்...... நோ ச்சான்ஸ்(-:
வாங்க அம்பி.
காப்பி? அதுவே ஒரு சோகம்.....
நாக்கு செத்து வந்தேன்:-)
ஃபிஜி கதையைத் தொடங்கிறலாம் விரைவில்:-)
வாங்க பொற்கொடி.
(சமைச்சுட்டு) தின்னு பார்த்துட்டுத் தீர்ப்பைச் சொல்லுங்க.
வாங்க தமாம் பாலா.
கோபால் மட்டும் பதிவரா இருந்தால் இன்னும்கூட நிறைய இடங்களைப் பார்த்திருக்கலாம்:-)
உலகம் சுற்றும்னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது. நான் உலகை இடம் வந்தது பற்றியும் எழுதவேணும்தான். நேரம் கிடைக்க மாட்டேங்குது:-)
வாங்க ஹெய்டி தேவதையே.
முதல்முறையா வந்துருக்கீங்க போல!
நல்லா இருக்கீங்களா?
செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.
பெருசுக்கு இந்த சிறுசு எவ்வளவோ பெட்டர் இல்லீங்களா? :-)))
வாங்க கயல்விழி ஜூனியர்.
என்ன காணோமுன்னு சொல்றீங்க? சொல்லிட்டுத்தானே போனேன்.
இங்கே பக்கத்துலே இருக்கும் ஃபிஜித்தீவு(களு)க்கு ஒரு விஸிட்:-)
வாங்க மதுரையம்பதி.
நமக்காகன்னு ஒருத்தர் செஞ்சு கொடுக்கும் கவனிப்பு இருக்கு பாருங்க, அந்த அன்புக்கு விலையேது?
வாங்க தூயா.
வறுத்த மூங் தால் ஒன்னு வாங்கிட்டுப் பார்த்தால் ஒரே உப்பு.
என்ன செய்யலாமுன்னு யோசிச்சு(??) அதையே ஊறவச்சு வடிகட்டி பொரியலில் போட்டுட்டேன். எல்லாம் நலமே:-)))
உப்புள்ள பண்டமுன்னு குப்பையில் வீச முடியாதில்லையா? ;-))))
விளம்பர நோட்டீஸ் ஒட்டுன எல்லாருக்கும்,
தயாரா இருங்க. இன்வாய்ஸ் அனுப்பறேன்:-)
ஹப்பா!!ஸ்கூல் தொறந்தாச்சா?
பிள்ளைங்கல்லாம் எப்போ எப்போன்னு
தவிச்சுப் போயிடாங்கல்ல.
இந்த சுட்டிகோஸ் எனக்கு முதல் அறிமுகம் பள்ளியில் எக்ஸ்கர்ஷன்
கொடக்கானல் போனப்போ ஹோட்டலில் பொரியல் மாதிரி சுடச்சுட தட்டில் தட்டினான். அன்றே விழுந்தவள் நானே..அதன் ருசியில்!!
அது முதல் எங்கே பாத்தாலும் வாங்கி
விடுவேன். 'ஜஸ்ட் பிக்குடு' காலமெல்லாம் போயாச்சு. இப்போ கோவை பழமுதிர்சோலையில் கிடக்கிறது. கொடையில் இதன் பேர் கேட்டப்போ 'களக்கோஸ்' என்றார்கள்.
ஒத்தைஒத்தையாய் கோஸ் மாதிரி முளைக்கும் என்று நினைத்திருந்தேன்.
முளைத்த விதத்தைப் படத்தில் பார்க்கையில் அழகாயிருக்கு துள்சி!
இதை ஸ்டஃப் செய்வேன்.குருமா, பிரியாணியில் முழுசாகப் போட்டால்
சூப்பராயிருக்கும்.
//ஒரு பத்தே நாளுலே எழுதிக் குமிச்சுருக்காங்க நம்ம மக்கள்ஸ்!//
கொட்டிக் கிடக்கும் பதிவுகளை எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கையிலெ என் திண்ணை பதிவில் மீனாட்சிப் பாட்டியின் பின்னூட்டமும் அதற்கு என் மறுமொழியும் சொல்லும் //இட்லி கொத்சு??//க்கான பதிலை..:))! மெதுவா.. பார்க்கலாம் ஒண்ணும் அவசரமில்லை..:)!
குட்டீஸை முழுசா பிரியாணி, குருமாவிலும் போடலாமா நானானி? செய்து பார்க்கிறேன்.
டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))),
யு ர் பேக்(டு)....வெல்கமு..:))
கள்ளக்கோஸ், Brussels sprout, என்று அழைக்கப்படும் இதன் குறிப்பு இங்கே...http://en.wikipedia.org/wiki/Brussels_sprouts
பொரியல் எனக்கு என்னமோ ருசிக்கறது இல்ல.நம்ம முட்டைகோஸ் இன்னும் பெட்டர்.
சாலட், நூடுல்ஸ் இதில் பச்சையாய்ப் போட்டால் கரன்ச்சியாய் இருக்குமாம்.நமக்கு நல்ல விஷயங்களும் ருசிக்கறது இல்ல.நல்லா மசாலா பொட்டு பொறிக்கணும் :P :P :)
வணக்கம் மேடம்,
சே,....எப்பவும் போல இன்னிக்கும் லேட்டு நானு கிளாஸ்க்கு..ஹிஸ்டரி/ஜியோகிரபி கிளாஸ்(பிஜி தீவுங்க) இன்னும் ஆரம்பிக்கலைல..அப்ப ஒகே. வெயிட்டிங் மேம்....
//முதல்முறையா வந்துருக்கீங்க போல!//
ஆமாங்க...பதிவுலகத்துக்குக் கொஞ்சம் புதுசு :-)
//நல்லா இருக்கீங்களா?//
ரொம்ப நல்லா இருக்கேங்க...நன்றி :-)
//செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.//
கண்டிப்பா :-) நான் எப்பவும் சும்மா உப்பு போட்டு வேக வெச்சு சாப்பிடுவேன்...இல்லன்னா ஃப்ரைடு ரைஸ் மாதிரி இதை வெச்சு ஏதோ பண்ணுவேன் :P
பெருசுக்கு இந்த சிறுசு எவ்வளவோ பெட்டர் இல்லீங்களா? :-)))
ஆமாங்க....வேகமா வெந்திடுது...ரொம்ப healthy-யும் கூட :-) இங்கே போய் பாருங்க :-)
http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=10
துளசீ
பல நாள் விடுமுறைக்குப் பின் படங்களுடன் கூடிய பயணப்பதிவினை
எதிர்பார்த்தால் - குட்டிக்கோசூடன் படங்கள் - சமையல் குறிப்புகள் - இணுக்குன்னா எவ்வளவு -
அருமை அருமை
நல்வாழ்த்துகள் துளசி
A good indian way of cooking B.S.
The photograph was too good. Never guessed that it will be on a stem..
My friends in US used to say " your food is camaflouged in spices"..
But we indians love it..'உப்பும் காரமும் உறைக்க உறைக்க'
//வாங்க வெட்டி ஆஃபீசர்//
ஹை மேடம் என்னை நீங்க ஞாபகம் வெச்சிருக்கீங்களா, ஏன்னா என் ப்ளாக் பேரோட எழுதினதை பார்த்ததும் சந்தோஷமாகிடுச்சி
//ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணியாச்சு. ஆனா பிக்கப் ரொம்ப ஸ்லோவா இருக்கு//
அதை நானும் கண்டுகிட்டேன் மேடம். எப்படித் தெரியுங்களா, நெறயப் பேரு ஒதுக்கற ப்ரஸ்ஸல் ஸ்ப்ரௌட்ஸ் பத்தி ஒரு கருணையுள்ளத்தோட எழுதிருக்கீங்கப் பாருங்க, அதை வெச்சித்தான். என் மாமியார், என் வீட்டுக்காரர, இதை சாப்பிட வெக்கறத்துக்காக ஒரு எமோஷனல் ப்ளாக்மெயிலிங் ட்ராமாவயே நடத்துவாங்க:):):)
:-)கலக்கல்:-)
நாங்க இதை, வெங்காயமும், கொண்டக்கடலையும் சேர்த்து செய்வோம்.
இங்கே, அமெரிக்கர்கள் அதைப்பார்த்து வயிறு எரிவார்கள்!
வாங்க நானானி.
மெய்யாலுமா பிள்ளைங்க தவிச்சுட்டாங்க? பார்த்தா அப்படித் தெரியலையே:-))))
இன்னும் குருமாவில் போட்டுப் பார்க்கலை. செஞ்சுறலாம்:-)))
ஆHஆ.... இதுதான் க(ள்)ளக் கோஸ். பெயர்ப் பொருத்தம் சூப்பர்!
ராமலக்ஷ்மி,
உங்க வீட்டுத் திண்ணையிலே கூட்டமான கூட்டம் அம்முதேப்பா.:-)))
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படங்கள்தான் அள்ளிக்கிட்டுப்போகுது.
வாங்க புதுவண்டு.
பிடிக்கலையா? நெசமாவா சொல்றீங்க?
இப்பெல்லாம் காரமே ஆகறதில்லை. அதனாலே மசாலா பதிவுகளில் மட்டும்தான்:-)))
வாங்க விஜய்.
இங்கே என்ன செய்ய்றீங்க? வகுப்பு ஆரம்பிச்சு முதலாம் பாகம்
போட்டுருக்கு. பரிட்சைக்கு வரும் தொடர் இது:-)
உங்களுக்கான கேள்வி.
பா நகர் எந்த விளையாட்டில் புகழ் பெற்றது?
ஹெய்டி தேவதையே,
புது முகங்கள் நிறைஞ்ச தமிழ்மணம் நல்லாவே இருக்கு.
இப்படிச் சும்மா இருந்தா எப்படி? நாலு வரி எழுதி
உங்க கச்சேரியை ஆரம்பியுங்க:-))))
வாங்க சீனா.
உங்களுக்கும் இணுக்கு தெரியலையா? போச்சுரா.
தங்ஸ்க்கு தெரியும்தானே? கருவேப்பிலைக் கிளையின் பக்கவாட்டில் மெல்லிய குச்சியில் ரெண்டு பக்கமும் இருக்கும் இலைகளையாவது கவனிச்சீங்களா? அந்தக் குச்சிதான் இணுக்கு:-))))
வாங்க வெற்றி மகள்.
எல்லாத்துலேயும் மணம்குணம் சேர்த்து எந்தக் காய்கறிகளின் தனிச்சுவையையும் மறைக்கறதுலே நாம்தான் கில்லாடிகளாச்சே:-))))
என்னங்க வெட்டி ஆஃபீஸர்.
நிறையக் காய்கறிகளை ஒதுக்கும் என் மகள் இதை மட்டும் விரும்பிச் சாப்புடுவாள். அதனால் இது இப்ப நம்ம ஃபேவரிட் வெஜி:-))))
வாங்க ஜீவா.
வெங்காயம் & கொண்டைக்கடலையா? காம்பினேஷன் சூப்பரா இருக்கும் போல!!!
செஞ்சுறலாம்:-)))
மொளகாயைப் பார்த்தாலே பலருக்கு வயிறு எரிஞ்சுருமே:-))))
டீச்சர்,
பா (MBA) வந்து டீச்சர்,...ம்ம்..ம்.. ஒரே நிமிஷம் டீச்சர்..... வந்து ....வந்து....(பிளீஸ்...நெக்ஸ்ட் சொல்லிடாதீங்க டீச்சர்....)..ம்.. ம்.... ஆங்....கால்பந்து விளையாட்டு வீரர்கள்(தலை சிறந்த) இருக்குற ஊரு...அப்போ அது கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்றது...ரைட்டுங்களா டீச்சர்?
டீச்சர்,
பா (ம்ப) வந்து டீச்சர்,...ம்ம்..ம்.. ஒரே நிமிஷம் டீச்சர்..... வந்து ....வந்து....(பிளீஸ்...நெக்ஸ்ட் சொல்லிடாதீங்க டீச்சர்....)..ம்.. ம்.... ஆங்....கால்பந்து விளையாட்டு வீரர்கள்(தலை சிறந்த) இருக்குற ஊரு...அப்போ அது கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்றது...ரைட்டுங்களா டீச்சர்?
விஜய்,
ஆர்வக்கோளாறா?
உணர்ச்சிவசப்பட்டு இங்கே சமையலறையில் வந்து ரெண்டுமுறை பின்னூட்டி இருக்கீங்க!!!
சரியான விடைக்கான 2 மார்க் உங்களுக்குப் போட்டாச்சு:-)))
Post a Comment