Thursday, July 24, 2008

இடது காலை எடுத்து வச்சு வா வா..... (ஃபிஜிப் பயணம் பகுதி 4)

நீள நீள நடை பாதைகளுடன் செடியும் கொடியுமா வளைஞ்சு நெளிஞ்சு, குடிசை போல மேற் கூரையுடன் அங்கங்கே பெர்ண் மரச்சிற்பங்களுடன் ஸ்பூக்கியா இருக்கு ஃபர்ஸ்ட் லேண்டிங்.சுமார் 3500 வருசங்களுக்கு முன்பு ஒரு சிறு படகில் மேலினீசிய( Melanesian) இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒரு பவளப்பாறையில் கரைதட்டி நின்ன இடம் இது(வாம்). கோபமாப் படகில் இருந்து இடது காலை வச்சு இறங்கியவர்தான் இந்தத் தீவின் முதல் மனிதர்.
('வலது காலை எடுத்து வச்சு வா வா'ன்னு யாரும் பாடலையோ?)

இந்த இடத்தைச் சரியாக் கண்டுபிடிச்சு(???)பத்து வருசத்துக்கு முன்னாலே ஃபர்ஸ்ட் லேண்டிங் என்ற பெயரில் ரிஸார்ட் கட்டி, இப்ப வியாபாரம் கொழிக்குது. பெயரை நியாயப்படுத்தணுமுன்னு ஒரு மனுசனின் இடது பாதம் போல செயற்கையா ஒரு தீவு உண்டாக்கி ( இருக்கும் தீவுகள் காணாதுன்னு இதுவேறயா?) அலங்கரிச்சு அதுக்குப்போக ஒரு பாலம் போட்டு வச்சுருக்கு. இதுகூட இப்ப வந்ததுதான்.
இந்த இடத்துக்கு வூடா பாய்ண்ட்ன்னு பெயர். பெரிய பெரிய ராட்சத அளவில் டேங்க் கட்டி, வெளியே இருந்து வரும் எண்ணெய்க் கப்பல்களில் இருந்து பெட்ரோல் & டீஸல்களை ஸ்டோர் செஞ்சுக்கும் இடம். இங்கே சுத்திகரிப்புக்கு ஏற்பாடு இல்லாததால் ரெடி டு யூஸ் என்ற சுத்திகரிச்ச எண்ணெய்கள். வூடா பாயிண்டில்(Vuda point) அஞ்சாறு ராணுவ வீரர்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா நடக்கறாங்க. நாட்டுக்கே எண்ணெய் இருக்கும் இடமாச்சே...யாராவது எதாவது செஞ்சுட்டா?
இந்தப் பயணத்தில் கவனிச்சதுலே முதலில் மனசில் இருப்பது போலீஸ் செக் பாய்ண்ட்ஸ். ரெண்டு மூணு மைலுக்கு ஒன்னுன்னு எக்கசக்கமா இருக்கு. முன்னே இப்படியெல்லாம் இல்லவே இல்லை. ஊருக்கு ஒன்னு இருக்கும். நாட்டில் இப்ப வன்முறைகள் அதிகமாகிக்கிட்டு இருக்குபோல.
எல்லா இடத்திலும் காவல்துறையில் வேலையில் இருப்பவர்கள் ஃபிஜியன்கள் மட்டுமே. கடைத்தெருவிலும் (எல்லா ஊரிலும்) கடையின் முன்பக்கம் இருக்கும் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் கம்பி வலை அடிச்சுப் பாதுகாப்புக்கான க்ரில்ஸ் போட்டு வச்சுருக்கு. ஷோ கேஸில் என்ன இருக்குன்னுக்கூடத் தெரியலை.வீடுகளுக்கும் செக்யூரிட்டி, அலாரம் சர்வீஸ் கம்பெனிகள் பாதுகாப்பு. நாங்க தங்கி இருந்த வீடு புத்தம் புதுசு. கட்டி ஒரு மாசம்கூட ஆகலை. இன்னும் சாமான்கள் எல்லாம் எடுத்துக்கூட வைக்காமல் பொட்டிகளிலேயே கிடக்கு. அதுக்குள்ளே கல்யாணம் வந்துட்டதால் உறவினர்களை எல்லா இடத்திலும் போட்டுவச்சுட்டாங்க.


மொபைல் ஃபோனில் இணைச்சு வச்சுருக்காங்களாம் செக்யூரிட்டி சம்பந்தமுள்ளவைகளை. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கம் எல்லாம். அந்த வீட்டுக்குழந்தை ( ஒன்னரை வயசுப் பையன்) எப்பவும் ரிமோட் வச்சுக்கிட்டு விளையாட்டா கேட்டைத் திறக்கறதும் மூடறதுமா இருக்கான். இதுலே அவனோட அப்பாவுக்குப் பெருமை கலந்த அங்கலாய்ப்பு. 'ரிமோட்டை ஹாக் செய்வது ஆம்புளைங்க தொழிலாச்சே. வேற எப்படி இருப்பான்?' ன்னு சொன்னதும் கோபாலுக்குச் சிரிப்புத் தாங்கலை. கோபால் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை 'எல்லா' ரிமோட்டையும் வாரி மடியில் வச்சுக்கிட்டுத்தான் சோஃபாவில் உட்காருவார்:-)))) டிவி ரிமோட்டுன்னு இல்லை. எதா இருந்தாலும் தன் கையில் வச்சுக்கணும். பார்த்துக்கிட்டு இருக்கேன், எங்கியாவது சில டம்மி ரிமோட்ஸ் கிடைச்சா வாங்கிவந்து இந்தக் கூட்டத்தில் வச்சுவிடணும்.


வெள்ளை மணற்பரப்பில் இருக்கைகள், சன் பாத் எடுக்கும் சாய்வு நாற்காலிகள் எல்லாம் அங்கங்கே இருக்கு. கடலில் டைடு குறைவா இருக்கும்போது இந்தப் பவளப்பாறைகள் வரை நடந்து போய்ப் பார்க்கலாம். அங்கங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் நீல நிற மீன்களும், நீல நிற நட்சத்திர மீன்களும் உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டு இருக்குதுங்க.
படம்...... ரிஸார்ட்டில் தங்குவதற்கு புரேன்னு சொல்லும் குடில்கள் கட்டி விட்டுருக்காங்க. புல் கூரையோடு அமர்க்களமா இருக்கு. வார வாடகை. ஆனால் ஸ்பெஷலில் அஞ்சு நாள் கட்டணத்துக்கு ஏழு நாள் தங்கிக்கலாம்.
ட்ராப்பிக்கல் மரங்களும் பூச்செடிகளுமா ஜிலுஜிலுன்னு வெய்யிலே தெரியாமல் இருக்கு.
இங்கேயே ரெஸிடன்ஷியல் ப்ராப்பர்ட்டி விக்கறாங்களாம். வேணுமான்னு கேட்டு விளம்பரம் வச்சுருக்காங்க. ரிட்டயர் ஆன வெள்ளைக்காரர்களுக்கு ஏற்ற இடம். நமக்குச் சரிப்படாது:-)))) மகள் & கோவைக் கூப்பிட்டுக்கிட்டு நா(ன்)டி டவுனுக்குக் கிளம்பினோம். 25/30 நிமிச ட்ரைவ்.


மகளுக்கும் நண்பருக்கும் கல்யாணத்துக்குப் போட்டுக்க இந்திய வகை ஆடைகள் வேணுமாம். அவுங்களைக் கூட்டிக்கிட்டு நா(ன்)டி டவுனுக்குப் போனோம். நாலைஞ்சு இடத்தில் பார்த்துட்டும் ஒன்னும் சரிவரலை. நேத்துப் பார்த்த நெருங்கிய தோழியின் கடையில் வாங்கி அவுங்களுக்கு நஷ்டம் வைக்கக்கூடாதுன்னு தீர்மானிச்சிருந்தேன். கடைசியில் அலுத்துப்போய் ஒரு கடையில் விசாரிச்சப்ப, எதிர்கடையில் இருக்கும் பாருங்கன்னு கை காமிச்சாங்க. அது நம்ம தோழியின் கடை:-) கடையின் பெயர் ரூபம்.


மகளைப் பார்த்துத் தோழிக்கு ஆனந்தம். முந்தி அங்கிருந்தப்ப வாராவாரம் ஞாயிறு அவுங்க வீட்டிலேதான். அப்போ மகள் மலையாளம்கூடக் கொஞ்சம் பேசுவாள். நான் கறாராச் சொன்னேன்....காசு வாங்கிக்கிட்டாத்தான் துணி எடுப்பாள்ன்னு:-)பிடிச்சமாதிரி கிடைச்சது ரெண்டு பேருக்கும். இளசுகளை மத்த ஷாப்பிங் செஞ்சுச்சுத்திப் பார்க்க அனுப்பிட்டு நாங்கள் பழங்கதையில் மூழ்கினோம். தோழியின் கணவர் இங்கே வாத்தியார் வேலைக்கு வந்தவர், 35 வருசங்களுக்கு முன்னே. பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சு உயர்நிலைப்பள்ளி லெவலுக்கு வந்தவுடன், இந்தியாவில் விளம்பரம் கொடுத்துப் பட்டதாரி ஆசிரியர்கள் வர ஆரம்பிச்சு இருந்த காலக்கட்டம். ஒப்பந்த முறையில் 3 வருசம் வந்துட்டு அப்புறம் வேணுமுன்னா ஒவ்வொரு மூணு வருசமா ஒர்க்கிங் விஸா வாங்கிக்கலாம். நாங்க இங்கே 6 வருசம் இருந்தது இந்தக் கணக்குதான்:-) என்ன ஒன்னு மறுபாதிக்கு ஒர்க்கிங் விஸா கிடையாது. சிட்டிஸன்ஷிப் கிடைச்சால் (9 வருசத்துக்குப்பிறகு) ரெண்டுபேரும் வேலைக்குப் போகலாம். வியாபாரம் தொடங்கலாம்.....தோழி ஒரு கடையை ஆரம்பிச்சு நடத்துனது இப்படித்தான். கால் நூற்றாண்டு ஆகிருச்சு. இந்தியாவில் மட்டுமே இருந்து ரெடிமேட் உடைகள் வரவழைச்சு விக்கறாங்க. ஒரே மகள். கல்யாணம் முடிச்சு இப்பக் கானடாவில் இருக்காள்.என் மகளைத் தூக்கிவச்சுக் கொஞ்சும் அன்பான அக்கா:-)

தோழிக்கு ஊரோடு போயிறலாமுன்னு சிலவருஷமா எண்ணம். ஊரில் ஒரு வீடு கட்டி முடிச்சு, அதை வாடகைக்கு விட்டுட்டு வந்து நாலு மாசமாச்சாம். திரும்பிப்போனால் வசிக்க ஒரு இடம் வேணுமே..... அடுத்தவருசக் கடைசியில் போகும்விதமா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பிசினஸை விக்கணும். முழுக்க முழுக்க குஜராத்திகள் நடத்தும் சாம்ராஜ்யத்தில் 25 வருசம் தாக்குப்பிடிச்ச தோழிக்கு உண்மையில் ஒரு சபாஷ் போட்டே ஆகணும். வருசாவருசம் வெள்ளம் வரும் நாடாக இருக்குல்லையா அதனால் வெள்ளத்துக்கான காப்பீடு கிடையாது. ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் வெள்ளக் காப்பீடு தரும். அதுக்குப் பிரிமியம் ரொம்ப அதிகம். எல்லோராலும் கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.என்னதான் கவனிச்சுக் கடையில் துணிகளை அடுக்கி வச்சாலும் புயல் எச்சரிக்கை வானொலியில் வந்தால் வயித்துக் கலக்கம்தான். இடுப்புவரை நிற்கும் தண்ணீரில் மெதுவா நடந்து வந்து கடையைத் திறந்து(??) ஒதுக்க முடிஞ்சதை ஒதுக்குவாங்களாம். நல்லவேளையா வீடு கொஞ்சம் பக்கத்தில் (அடுத்த தெருவில்) இருப்பதால் சமாளிக்க முடியுது.இதுக்காகவே பலர் அந்தக் காலத்திலேயே கடைகளின் மாடியிலே வீடு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மழை ஆரம்பிச்சவுடன், அப்பப்போய்ப் பார்த்து சாமான்களை ஒவ்வொரு ஷெல்ஃபாக மேலே ஏத்திக்கிட்டே இருப்பாங்களாம்.இவ்வளவுதூரம் வந்தமே...மகளுக்கும் நண்பருக்கும் கோயிலைக் காட்டிட்டுப் போகலாமுன்னு கிளம்பினோம். மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.அவள் ஒரு Atheist. நண்பருக்கு? சின்னப்பையனா இருந்தப்ப எப்பவாவது அப்பா அம்மாவோடு சர்ச்சுக்குப் போவாராம். மத்தபடி அவரோட கடவுள் நம்பிக்கையைப் பத்தி நான் ஒன்னும் கேட்டுக்கலை.


கோவிலில் படியேறும் சமயம், கோயில் அலுவலில் இருக்கும் ஒருவர், மகளிடம் 'உள்ளே போக அனுமதி இல்லை'ன்னு சொன்னார். சரியான உடை இல்லையாம்.( பின்னே? ஹாலிடேவாசியா சின்ன ஷார்ட்ஸ் போட்டுருந்தாள். அந்தந்த இடங்களுக்கான மரியாதை தரணுமா இல்லையா?நமக்குத்தான் துப்பட்டா இருக்கே.... அதை இடுப்பில் சுலு (ஃபிஜியன் உடை. சராங், லுங்கி மாதிரிக் கட்டுவது) போல இடுப்பில் கட்டிக்கோன்னேன். வேணாமாம். 'நான் வெளியே இருக்கும் இருக்கையில் உக்கார்ந்துக்கறேன். நீங்களே போங்க'ன்னுட்டாள்.ஒவ்வொரு சந்நிதியாக் காமிச்சு சுருக்கமா இது எலிஃபெண்ட் காட், இது அவரோட அம்மா, இது அப்பா, இது மாமின்னு சொல்லி மூலவரை மட்டும் யங்கஸ்ட் சன் ஆஃப் த ஃபேமிலின்னு சொன்னேன்:-) எல்லாமே ஒரு ஃபேமிலி அஃபேர் ன்னு நினைச்சுக்கிட்டாரோ என்னவோ? நிமிஷத்துலே புரியும் புராணமா நம்மது?
நண்பருக்கு இளநீர், கரும்பு எல்லாம் ருசி பார்க்கணுமாம். நம்ம மகள் நம்மூரில், சிங்கையில்ன்னு இதையெல்லாம் ருசிச்சதைச் சொல்லி ஆசையைக் கிளப்பி விட்டுருக்காள்போல. மார்கெட்டில் இருக்கான்னு போய்ப் பார்த்தோம். பலாப்பழம் மாதிரி கண்ணுலே ஆப்ட்டது. ஓடுனேன். நம்ம அதிருஷ்டம் பாருங்க. சமைக்கும் பலாப்பிஞ்சுகளாம். இன்னும் பழம் சீசன் வரலையாம். தேங்காய்கள் மட்டும் வழக்கம்போல ஏழுஎட்டு வச்சுக் கூறுகட்டி இருந்துச்சு. ரெண்டு டாலர். விலைவாசி ஏறுதுதான். நியாயம்தானே? டாரோ கிழங்குகள் நாலைஞ்சு வச்சுக் கூறு கட்டி விக்கிறாங்க. இதையெல்லாம் விற்பவர்கள் நேட்டிவ் ஃபிஜியன்கள்தான்.
இளநீர் எங்கேயும் இல்லை.


ஆமாம். இவ்வளோத் தென்னைமரங்கள் இருக்கு. வெய்யிலும் பிச்சு வாங்குது. இளநீர் வியாபாரம் நடந்தா எல்லோருக்கும் எவ்வளோ நல்லது. ஏன் யாருமே இதைப்பத்தி யோசிக்கலை. தாய்லாந்து இளநீர் எப்படி சிங்கையில் சக்கைப்போடு போடுது பார்த்தீங்கதானே? எங்கியாவது ஃபிஜியன் கோரோ ( குடியிருப்பு கிராமம்)வில் கேட்டுப் பார்க்கணும்.ரோட்டோரமா ரெண்டு பலகையைப்போட்டு இப்படி கோரோ அருகில்,அப்படியே போய்க்கடலில் பிடிச்சாந்து மீன், நண்டு எல்லாம் வித்துக்கிட்டு இருப்பாங்க. நண்டுகளைக் கைகால் நீட்டவிடாமத் தென்ன ஓலையில் கட்டி வச்சுருப்பாங்க. மக்கள் வண்டியை நிறுத்தி பேரம் பேசி வாங்குவாங்க. யாரும் வாங்கலைன்னா? அன்னிக்கு அவுங்க அடுப்புலே வேகும், ராச்சாப்பாடுக்கு.இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலேத் திங்க ஒரு கரும்பு கிடைக்கறதில்லை. விளையும் கரும்புகள் எல்லாம் ஒப்பந்தப்படி ஆலைக்குத்தான் போகணும். மார்கெட்டில் விற்பனை செய்யத் தடா. நாங்கள் அங்கிருந்தப்பவும் பொங்கல் பண்டிகைக்கு கரும்பெல்லாம் பூஜையில் வைப்பதில்லை. வீட்டு எதிரில் இருக்கும் கரும்புத்தோட்டத்தைப் பார்த்துக்கிட்டே தீபாராதனை செய்வதுதான்.அவுங்களை ஃபர்ஸ்ட் லேண்டிங்கில் விட்டுட்டு நாங்க கலியாண வீட்டுக்குப் போனோம்.பதிவின் நீளம் கருதி இனிமேல் வரும் ஒவ்வொரு பகுதியும் சுற்றுலா & கல்யாண வீடுன்னு பிரிச்சுப் போடப்போறேன்:-)
அடுத்தடுத்த நாட்களில் வெளிவரலாம்!


32 comments:

said...

வலது கை மெளசால் க்ளிக்கி உள்ளே வந்தாச்சு, பரவாயில்லையா துளசி டீச்சர்?

மீண்டும் ரசித்து படித்தேன், ரொம்ப நன்றி.

Me the first??

said...

//
இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலேத் திங்க ஒரு கரும்பு கிடைக்கறதில்லை. விளையும் கரும்புகள் எல்லாம் ஒப்பந்தப்படி ஆலைக்குத்தான் போகணும். மார்கெட்டில் விற்பனை செய்யத் தடா. நாங்கள் அங்கிருந்தப்பவும் பொங்கல் பண்டிகைக்கு கரும்பெல்லாம் பூஜையில் வைப்பதில்லை. வீட்டு எதிரில் இருக்கும் கரும்புத்தோட்டத்தைப் பார்த்துக்கிட்டே தீபாராதனை செய்வதுதான்.

//
:)
நம்ம ஊரிலும் , முன்னெல்லாம், பொங்கல் நாள் அன்று, தோட்டத்து காய்கறி நிறைய படையல் தட்டில் இருக்கும், இப்போது, reliance fresh காய்கறிகள்தான்...
அழகான மொழிநடை... வாழ்த்துக்கள்...

said...

வாங்க க.ஜூ.

வகுப்புக்கு ஆர்வமா முதலில் வந்ததுக்கு
நன்றி. அதுவும் இது ஒரு வகையான சரித்திர வகுப்பு வேற!

நான் படிச்ச அந்தக் காலத்தில் 'சரித்திரமுன்னாவே போர் & போர்' என்ற எண்ணம் எப்படி உண்டாச்சுன்னே தெரியலை.

மௌசை எப்படிக் கிளிக்கினாலும் சரி. எங்க கோகி வந்து பிடிக்காமல் இருக்கணும். அம்புட்டுதான்:-)

மியாவ்.....

said...

வாங்க நட்டி.

புதுசா இருக்கீங்க? இல்லே முன்பே வந்து போயிருக்கீங்களா? ( டீச்சருக்கு வயசாகிக்கிட்டு இருக்கு. அதான் ஒரு ஞாபக மறதி)

வாழ்த்துகளுக்கு நன்றி.

அடிக்கடி வந்து போகணும்.

said...

சரியான முடிவுதான் ரீச்சர். என்னதான் பூகோள வரலாறு வகுப்புன்னாலும் அதில் கல்யாண பாலிடிக்ஸ் கலக்குறது சரியில்லைதானே!!! :))

said...

அவரு இடது காலைத்தான் எடுத்து வெச்சு வந்தாருன்னு எப்படித் தெரியும்? இல்லை இவங்க அந்த மாதிரி தீவைக் கட்டினதுனால அப்படி ஒரு கப்சாவா?

said...

இடது பக்க மெளஸ் பட்டன் வேலை செய்யாததால் வலது பக்கத்தை இடது பக்கமாக மாற்றி...
கரும்பு, இளநீர் இருந்தும் கிடைக்கலையா... இவ்வளவு அழகான தீவுல...

said...

ரிமோட் மேட்டர்.. எங்களை ஏன் இப்படி வறுக்கிறீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

என்ன ட்ரஸ் எடுத்தீங்க இந்தியன் ட்ரஸ்ன்னா.. எதுன்னு சொல்லலையே..

(நானேதான் முன்பின்னா இருக்கு பேரு அவ்வளவுதான்) :)

Anonymous said...

\\இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலேத் திங்க ஒரு கரும்பு கிடைக்கறதில்லை\\ என்ன கொடுமை இது, இந்தியாவில வயல்ல இறங்கி வேலை செய்யறவங்களுக்கு அரிசி கிடைக்காத மாதிரி

said...

மூனு நாள் நான் லீவு.

ஆமா! என் புள்ளைய பாக்க கிளம்பரேன். அங்க வெச்சு இணையம் தொறந்தா யோசிக்காம அப்பா மேல உச்சா அடி!னு அவன் அம்மா வேற க்ரீன் சிக்னல் குடுத்து இருக்காங்க. :)

வந்து மீதி படிச்சுக்கரேன்.

said...

//என்னதான் பூகோள வரலாறு வகுப்புன்னாலும் அதில் கல்யாண பாலிடிக்ஸ் கலக்குறது சரியில்லைதானே!!! //

:)))

ஆனா, ரீச்சர் குடும்ப பாலிடிக்ஸ் பண்றாங்க, அத கவனிச்சீங்களா கொத்தண்ணா? :p

said...

நல்லா இருக்கு.

said...

ஃபிஜி பற்றி எத்தனை எத்தனை விஷயங்கள்! கண்ணுக்கு கிட்டும் கரும்பு கைக்கும் வாய்க்கும் எட்டாதா?
பாவம்தான்!

//எங்கியாவது சில டம்மி ரிமோட்ஸ் கிடைச்சா வாங்கிவந்து இந்தக் கூட்டத்தில் வச்சுவிடணும்.//

பாவம்ங்க Mr. கோபாலும், பாத்துட்டுப் போட்டுமே! நான் அப்படித்தான் விட்டிருவேன்:))!

said...

வணக்கம் டீச்சர்காரு!

'படகு தரை தட்டியவுடன் left with no optionனு symbolicஆ இடதுகாலை எடுத்து வச்சிருப்பாங்க போல.. :)))

இவ்வளவு விலாவாரியா எழுத ரொம்பவும் பொறுமை உங்களுக்கு.. போட்டோஸ் நல்லா வந்திருக்கு.. ரொம்ப ரசிச்சு படிச்சேன் :))

அதுவும் கோபால் சார் ரிமோட் சமாச்சாரம் படிச்சு.. சிரிப்பு தாங்க முடியல..

ஆதி காலத்துல 'செங்கோல்' வச்சிருந்த ஞாபகத்துலதான் ஆம்பிளைங்க இப்படி பண்றாங்கன்னு நினைக்கிறேன்..(என்னையும் சேர்த்து தான் :)))

உங்க துளசிதளத்துக்கு என்னோட 'புதினா தளத்துல' நிரந்தர சுட்டி கொடுத்திட்டேன், உங்க அனுமதி வாங்காமலேயே!

said...

டீச்சர்,

இந்த பதிவுல கொஞ்சம் அதிக விசயங்கள் இருக்கு. இன்னோரு முறை படிச்சிக்கிறேன். அப்புறமா கேள்வி கேளுங்க...பிளீஸ்.....

இதுல கொத்ஸ்சும், அம்பியும் வேற கல்யாண பாலிடிக்ஸ்.... குடும்ப பாலிடிக்ஸ்.... இன்னும் குழப்பிட்டாங்க...


//ஆமா! என் புள்ளைய பாக்க கிளம்பரேன். அங்க வெச்சு இணையம் தொறந்தா யோசிக்காம அப்பா மேல உச்சா அடி!னு அவன் அம்மா வேற க்ரீன் சிக்னல் குடுத்து இருக்காங்க. :)//

பாத்து அம்பி,உங்க மேல அடிச்சா கூட பரவாயில்ல. ஆனா 'டிரெய்னிங் அண்டு க்ரீன் சிக்னல்' உங்க லாப் டாப் மேல அடிக்க சொல்லியாம். ஜாக்கிரதை....:P

said...

// கோபால் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை 'எல்லா' ரிமோட்டையும் வாரி மடியில் வச்சுக்கிட்டுத்தான் சோஃபாவில் உட்காருவார்:-)))) டிவி ரிமோட்டுன்னு இல்லை. எதா இருந்தாலும் தன் கையில் வச்சுக்கணும். பார்த்துக்கிட்டு இருக்கேன், எங்கியாவது சில டம்மி ரிமோட்ஸ் கிடைச்சா வாங்கிவந்து இந்தக் கூட்டத்தில் வச்சுவிடணும்.//

Mr. கோபால் ப்ளாக் படிப்பாரா துளசி டீச்சர்?

said...

வாங்க கொத்ஸ்.

மும்பைக்குப்போனதும் 'ஒரே பாலிடிக்ஸ்' வந்துருச்சுபோல!!!!

இந்தக் கல்யாணத்துலேயோ இல்லை குடும்பத்துலேயோ பாலிட்டிக்ஸ் எங்கப்பா இருக்கு?

ஒருவேளை.... ' கல்யாணமே' பாலிடிக்ஸ்தானோ?

said...

கொத்ஸ்,

அவர் இடது காலைத்தான் வச்சுருக்கணும். ஏன்னா இடும்பர்களுக்கு வேற வழியாமே!!!!

said...

வாங்க தமிழ் பிரியன்.

வறுக்கறோமா?

எல்லாம் 'டைம்பாஸ்'தான்:-)

பூனாவில் பஸ் நிறுத்தங்களில் 'வறுத்த' கடலை விற்கும் பையன்கள் இப்படித்தான் கூவி விக்கறாங்க.

'டைம் பாஸ்...டைம் பாஸ்'

:-))))

said...

வாங்க கயலு.

எல்லாம் சால்வார் கமீஸ், சுடிதார்தான்.

ஷாரூக் போட்டுக்கறமாதிரி ஒரு வலை துப்பட்டா:-))))

என்னவோப்பா....சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு அப்பப்பப் பெயர் மாத்தி வச்சுக்கறிங்க.

இந்த வகையில் ஒரே பதிவர் நீங்கதான், இன்னொரு முத்துலெட்சுமி வராத வரை:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

கொடுமைதான். ஆனா இது கொடுமைன்னு யாருமே அதாவது நம்மைத்தவிர உணரலையே.....

பொங்கலுக்கும் கரும்புக்கும் உள்ள சம்பந்தம் ஃபிஜியைப் பொறுத்தவரை போயே போச்(-:

said...

வாங்க அம்பி.

இன்னும் புள்ளைங்களுக்கு நாப்கின் போட்டுவிடும் பழக்கம் இந்தியாவில் வரலையா?

தேவுடா....தேவுடா........

சரி. சூதானமா நடந்துக்கிட்டுத் திரும்பி வாங்க:-)

said...

வாங்க சாமான்யன் சிவா.

உங்ககிட்டே நல்லா இருக்குன்னு ஒரு பின்னூட்டம் வாங்கறதுகூட ஒரு சாமான்யமான விசயம் இல்லை, இல்லெ?

said...

வாங்க ராம லக்ஷ்மி.

நம்ம வீட்டில் டிவி பார்க்கும் ஒரே ஜீவன் கோபால்தாங்க.

நான் எப்பவாவது ஒரு சில விசயத்தோட நிப்பாட்டிக்குவேன். நல்லா இருக்கோ இல்லையோ அதுபாட்டுக்கு ஓடட்டுமுன்னு விடறது அவர்தான்.

ரிட்டயர் ஆனபிறகு, 'சன் டிவி' போட்டுக் கொடுக்கறதாச் சொல்லி வச்சுருக்கேன். எப்படியாவது 'பிஸி'யா இருக்க வச்சுக்கணுமுல்லே?:-))))

said...

வாங்க தமாம் பாலா.

அதென்ன செங்கோல்? அப்ப நாங்க வச்சுக்கிட்டு இருந்த க்ரீடம்?

புதினா தளம் என்ன.....கொத்துமல்லின்னாலும் பிரச்சனை இல்லை:-)))

said...

வாங்க விஜய்.

வகுப்புக்குண்டான கடமையை முடிச்சுட்டு, நிதானமா உக்காந்து படிங்க.

பிரச்சனையே இல்லை:-)))

said...

வாங்க க.ஜூ.

ஆரம்பத்துலே படிச்சது இல்லை. அப்புரம் ஒரு பதிவர் மாநாட்டுக்குப் போனப்ப, அங்கே எல்லாரும் இவரை,'நீங்க பதிவைப் படிக்கறது உண்டா?'ன்னு கேட்டுத் துளைச்சதும் முழிச்சுக்கிட்டார்.
'என்னமோ இருக்கு அங்கே...ன்னு'

அப்ப இருந்து ரெகுலராப் படிக்கிறார், முக்கியமா பின்னூட்டங்களை:-))))

நேத்து திடீர்னு லிவிங் ரூமை விட்டுப்போகும்போது,டிவி ரிமோட்டை என் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.

இதுக்கு என்ன பொருள்?:-)))))

said...

துளசி மேடம்!ஃபிஜியின் அரசியல்ப் பிளவுகள் தீர்ந்துவிட்டதா?

said...

//நேத்து திடீர்னு லிவிங் ரூமை விட்டுப்போகும்போது,டிவி ரிமோட்டை என் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.
/

பரவாயில்லையே? உங்களுக்கு வேண்டியதை எல்லாம் ப்ளாகில் இருந்தே இண்டைரக்டா வாங்கிக்கலாம் போல :) :)

(இந்த டிப்ஸை எதிர்காலத்துக்காக நினைவு வச்சிருக்கனும்)

கலக்கறீங்க டீச்சர்!!!

said...

வாங்க ராஜ நடராஜன்.

அதெப்டிங்க? தீர்க்க வுட்டுருவொமா?

இன்னும் (மக்களைக்)குழப்பிக் கும்மியடிச்சுன்னு எவ்வளோ இருக்கே(-:

said...

க.ஜூ,

இங்கே பாருங்க

எப்படி வாங்கலாமுன்ற ஐடியா இருக்கு:-)